2.கலை மற்றும் பண்பாடு: இலக்கியம், இசை, திரைப்படம், நாடகம், கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியங்கள் மற்றும் நாட்டுப்புற கலைகள்

இலக்கிய வினாக்கள்

  1. தொல்காப்பியம் குறிப்பு வரைக.

தொல்காப்பியம்

  1. தமிழின் தொல்லிலக்கண நூல்
  2. தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளாதிகாரம் என 3 அதிகாரங்கள் உள்ளன.
  3. இது ஐவகை இலக்கணங்களைக் குறிப்பிடுகிறது.
  4. தொல்காப்பியம் குறிப்பிடும் செய்யுள் உறுப்புகள் – 34
  5. இதனை இயற்றியவர் – தொல்காப்பியர்
  6. எழுத்ததிகாரம்

இதில் எழுத்துக்களின் ஒலி (ம) வரி வடிவங்களின் தோற்றம், வகை, அளவு, எழுத்துக்கள் சொல்லாக மாறுதல், சொற்கள், புணர்தல் போன்றவை விளக்கப்படுகின்றன.

  1. சொல்லதிகாரம்
  2. இதில் சொற்களின் வகை, உறுப்புகள், சொற்கள் இணைந்து தொடராக மாறுதல் போன்றவை விளக்கப்படுகின்றன.
  3. இவை பெரும்பாலும் நேர்ப்பொருளைத் தரக்கூடிய பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் உரியன.

iii. பொருளதிகாரம்

  1. இதில் நேர்ப்பொருள் தரும் சொற்றொடர் பற்றிப் பேசாமல், புனைவாக உருவாக்கப்படும். சொற்றொடர்களின் மொழி (ம) அதன் பொருளும் பேசப்படுகிறது.
  2. தொல்காப்பியர் காலத்தில் புனைவாக உருவாக்கப்படும் மொழி, பாக ஆகவும், பாடல் ஆகவும், பாட்டு ஆகவும் அறியப்பட்டன.
  3. செய்யுளியல்

செய்யுளியலில் அடிகளின் அளவு, அடிவரையறை, உண்டாக்கப்படும் ஒலியின் அளவு போன்றவற்றை விரிவாகப் பேசுகின்றது.

  1. பாவகைகள்

புறவடிவத்தில் உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் பாக்கள் வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா என வகைப்படுத்தப்படுகிறது.

  1. அகத்திணை (ம) புறத்திணைகள்
  2. தன் மனதிற்குள் தோன்றும் அகநிலைப்பட்ட புணர்தல், இருத்தல், இரங்கல், ஊடல், பிரிதல், ஒரு தலைக்காமம், பொருந்தாக்காமம் ஆகிய உணர்வுகளை உரிப்பொருளாக கொண்டவை அகத்திணைகள்
  3. இதற்கு மாறாக புறவாழ்க்கை குறித்து எழுதப்படுவன புறக்கவிதைகள் என தொல்காப்பியர் வரையறுத்துள்ளார்.

vii. நூலின் சிறப்புகள்

  1. தமிழ் மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கணம்
  2. இதில் 27 இயல்கள் உள்ளன.
  3. இந்நூலில் பல அறிவியல் கருத்துக்கள் இடம்பெற்று உள்ளன.

viii. பிறப்பியல்

எழுத்துக்கள் பிறக்கும் இடங்களை உடற்கூற்றியல் அடிப்படையில் விளக்குகிறது.

  1. தொல்காப்பியம் வழி உயிர்வகைப்பாட்டியலை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

உயிர்வகைப்பாட்டியல்

  1. ஒரறிவு நிலை
  2. அறியும் ஆற்றல் – உற்றறிதல் (தொடுதல் உணர்வு)
  3. எடுத்துக்காட்டு: புல், மரம்
  4. ஈரறிவு நிலை
  5. அறியும் ஆற்றல் – உற்றறிதல் சுவைத்தல்
  6. எடுத்துக்காட்டு – சிப்பி, நத்தை
  7. மூவறிவு நிலை
  8. அறியும் ஆற்றல் – உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல்
  9. எடுத்துக்காட்டு – கரையான் ஃ எறும்பு
  10. நான்கறிவு நிலை
  11. அறியும் ஆற்றல் : உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல்
  12. எடுத்துக்காட்டு: நண்டு, தும்பி
  13. ஐந்தறிவு நிலை
  14. அறியும் ஆற்றல் : உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல்
  15. எடுத்துக்காட்டு: பறவை, விலங்கு
  16. ஆறறிவு நிலை
  17. அறியும் ஆற்றல் : உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல்
  18. எடுத்துக்காட்டு: மனிதன்

 

  1. பட்டினப்பாலையால் அறியப்படும் வணிகச் செய்திகள் யாவை?
  2. சோழன் கரிகாற் பெருவளத்தான்
  3. கடியலூர் உருத் தீரங்கண்ணனார்

சங்ககால வணிகம்:

  1. சங்கத்தமிழ்க் கவிதைகள் பழந்தமிழர் தம் வணிகச் சிறப்பைப் பறைசாற்றி நிற்கின்றன.
  2. பழந்தமிழர் வணிகத்தை உள்நாட்டு (ம) அயல்நாட்டு வணிகம் என வகைப்படுத்தினர்.
  3. பத்துப்பாட்டில் அகம் வகையைச் சார்ந்தது.

வணிக முறைகள்:

  1. உள்நாட்டு வணிகம் பெரும்பாலும் நிலம் சார்ந்த பொருள்களையும் தொழில்களையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது.
  2. அயல்நாட்டு வணிகம் இயற்கைப் பொருள்கள், கைவினைப் பொருட்கள் (ம) பருத்தி, பட்டாலான ஆடைகளை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்றது.
  3. பண்ட மாற்றும் காசுகளைப் பயன்படுத்துதலும் வணிகத்தின் அடிப்படையாக விளங்கின.
  4. அக்காலத்தில் அங்காடிகள் நாளங்காடி, அல்லங்காடி என வகைப்படுத்தப்பட்டு இருந்தன.

பட்டினப்பாலை பாடல்

            நெடு நுகத்துப் பகல்போல

            நடுவு நின்ற நல் நெஞ்சினோர்

            வடு அஞ்சி வாய்மொழிந்து

            தமவும் பிறவும் ஒப்ப நாடி

            கொள்வதூஉம் மிகை கொளாது கொடுப்பதூஉம் குறைதொடாது

            பல் பண்டம் பகர்ந்து வீசும்

            தொல் கொண்டி துவன்று இருக்கை

பட்டினப்பாலையால் அறியப்படும் செய்திகள்:

  1. பழந்தமிழ் வணிகர்கள் நெறிபிறழாது, துலாக்போல் நடுவுநிலை நின்று வணிகம் செய்தனர் என்பதை பட்டினப்பாலை வழியே கடியனூர் உருத்திரங்கண்ணனார் உணர்த்துகிறாார்.
  2. நீண்ட நுகத்தடியில் வைத்த பகலானி போல, நடுவுநிலை யென்னும் குணம் நிலை பெற்றதல்ல நெஞ்சினராய் வணிகர்கள் இருந்தனர்.
  3. தம் குடிக்குப் பழிச்சொல் வருமென அஞ்சி, பொய்மை தவிர்த்து வாய்மையுடையோராய் இருந்தனர்.
  4. தம்முடையவற்றையும் பிறருடையவற்றையும் ஒன்றாக எண்ணினர்.
  5. தாம் கொள்வனவற்றை மிகையாக கொள்ளாமல், கொடுப்பவனவற்றைக் குறைவாக கொடுக்காமல் பல பண்டங்களையும் விலை சொல்லி கொடுத்தனர்.
  6. பழந்தொழிலால் வரும் உணவினைக்கொள்ளும், நெருங்கின, குடியிருப்புகள் கொண்ட பட்டினமாக விளங்கியது காவிரிப் பூம்பட்டிணம்.

சிறப்பு:

  1. சோழநாடு தரைவழி வணிகத்தாலும் கடல்வழி வணிகத்தாலும் வளம் பெற்று இருந்தது.
  2. இதனை “முட்டாச் சிறப்பின் பட்டினம்’என்ற சொற்றொடர் குறிப்பிட்டுச் சொல்கிறது.

 

  1. சங்க இலக்கியங்கள் பற்றி எழுதுக.

சங்ககால இலக்கியங்கள் – கி.மு. 300 – கி.பி 300

  1. பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்ககால இலக்கியங்கள் எனப்படுகின்றன.
  2. இவை தமிழ் மக்களின் அக (ம) புறவாழ்வியல் கூறுகளை அறிய உதவுகின்றன.
  3. சங்கப் பாடல்களின் எண்ணிக்கை 2381 இதில் அகத்திணைப் பாடல்கள் – 1862 புறத்திணைப்பாடல்கள் – 519
  4. சங்கப் புலவர்களின் எண்ணிக்கை – 473
  5. பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை – 49
  6. வணிகர், மருத்துவர், அரசர், கணியர் போன்ற சமூகத்தின் பல்வேறு அங்கத்தினரும் நல்லிசை புலவராய் விளங்கினர்.

 

சங்க இலக்கியம்

 

             

எட்டுத்தொகை                                                          பத்துப்பாட்டு

           

 

அகம்              புறம்                அகப்புறம்                அகம்               புறம்

  1. நற்றிணை 1. புறநானூறு 1.பரிபாடல்            1.குறிஞ்சிப்பாட்டு  1.திருமுருகாற்றுப்
  2. குறுந்தொகை 2. பதிற்றுப்பத்து 2.முல்லைப்பாட்டு   2.பொருநாராற்று
  3. ஐங்குநூறு                      3.பட்னப்பாலை     3.சிறுபாணாற்றுப்
  4. கலித்தொகை 4.நெடுநல்வாடை          4.பெரும்பாணாற்றுப்
  5. அகநானூறு 5.மலைபடுகடாம்

6.மதுரைக்காஞ்சி

  1. சங்கம் மருவியகால இலக்கியங்கள் பற்றி எழுதுக. கி.பி 300 – 600

சங்கம் மருவிய கால இலக்கியங்கள்

  1. நீதிநூல்கள்
  2. திருக்குறள் – திருவள்ளுவர்
  3. நாலடியார் – சமணமுனிவர்

iii. நான்;மணிக்கடிகை                    – விளம்பி நாகனார்

  1. இன்னா நாற்பது – கபிலர்
  2. இனியவை நாற்பது – பூதஞ்சேதனார்
  3. திரிகடுகம் – நல்லாதனார்

vii. ஆசாரக்கோவை             – பெருவாயின் முள்ளியார்

viii. பழமொழி நானூறு                  – மூன்றுரையரையனார்

  1. ஏலாதி – கணிதமேதாவியார்
  2. முதுமொழிக்காஞ்சி – கூடலூர் கிழார்
  3. அகத்திணை நூல்கள்
  4. ஐந்திணை ஐம்பது – மாறன்பொறையனார்
  5. ஐந்திணை எழுபது – மூவாதியார்

iii. திணைமொழி ஐம்பது                      – கணிதமோதாவியார்

  1. கைந்நிலை – புல்லங்காடனார்
  2. கார் நாற்பது – கண்ணங்கூத்தனார்
  3. புறத்திணை நூல்கள்
  4. களவழி நாற்பது – பொய்கையார்
  5. காப்பியங்கள்
  6. சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்
  7. மணிமேகலை – சீத்தலைச்சாத்தனார்

iii. முத்தொள்ளாயிரம் – அறியப்படவில்லை

  1. காப்பியங்கள் – சீவகசிந்தாமணி, வளையாபதி, முண்டலகேசி
  2. சோழர்கள் கால இலக்கியங்கள் யாவை?

சோழர்கள் கால இலக்கியங்கள்

  1. ஒளவையார்  –          ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை
  2. சேக்கிழார் –           பெரியபுராணம்
  3. கம்பர் –           கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபரந்தாதி, சரஸ்வதி

 அந்தாதி, இலக்குமி அந்தாதி, சிலை எழுபது

  1. புகழேந்தி புலவர் – நளவெண்பா
  2. ஒட்டக்கூத்தர் – மூவருலா, பிள்ளைத்தமிழ்
  3. ஜெயங்கொண்டார் – கலிங்கத்துப்பரணி
  4. கச்சியப்ப சிவாச்சாரியார் – கந்தபுராணம்
  5. நம்பியாண்டார் நம்பி – சைவ திருமுறைகளைத் தொகுத்தவர்
  6. சைவ சமய சாத்திரங்கள் – 14 நூல்கள்
  7. மெய்கண்டார் – சிவஞான போதம்
  8. வாகீச முனிவர் – ஞானாமிர்தம்
  9. தேவநாயனார் – திருவுந்தியார்
  10. அருள்நந்தி சிவாச்சாரியார் – சிவ ஞான சித்தியள்
  11. உமாபதி சிவாச்சாரியார் – 8 நூல்கள்
  12. சிற்றிலக்கியங்கள் பற்றி குறிப்பெழுதுக.

சிற்றிலக்கியங்கள்

  1. பாட்டுடைத் தலைவனின் வாழ்வில் சிறுகூறினை மட்டும் எடுத்தியம்புவது
  2. அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப் பொருள்களுள் ஒன்று மட்டும் அமையப்பட்டது.
  3. சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படுகின்றன.
  4. அவற்றுள் அந்தாதி, கலப்பகம், பரணி, கோவை, சதகம், பிள்ளைத்தமிழ், பள்ளு, குரவஞ்சி, உலா, தூது ஆகியன பெரும்பாலும் வழக்கில் உள்ளன.
  5. சிற்றிலக்கியங்களின் இலக்கணம் (ம) எண்ணிக்கையை பாட்டியல் நூல்கள் கூறுகின்றன.

சிலவகை சிற்றிலக்கியங்கள்

  1. அந்தாதி

ஒரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அடுத்த பாடலின் (அ) அடுத்த அடியின் தொடக்கமாகக் கொண்டு பாடப்படுவது அந்தாதி.

  1. கலம்பகம்
    1. அம்மானை, கார், ஊசல், கைக்கிளை, புயவகுப்பு முதலான 18 உறுப்புகள் அமையப் பாடப்படுவது
    2. அம்மானை என்பது மகளிர் விளையாடும் விளையாட்டு
    3. பாட்டுடைத் தலைவனின் புகழை, ஒரு பெண் புகழ்ந்து பாட, மற்றொரு பெண் அது தொடர்பான வினா கேட்டு, மூன்றாம் பெண் ஒரு கருத்தைக் கூறி அதை முடிப்பது அம்மானை.
    4. பரணி
  2. போரில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிபெறும் வீரனின் மேல் பாடப்படுவது பரணி
  3. போரில் தோற்ற அரசனது நாட்டின் பெயரால் இந்நூல் வழங்கப்பெறும்
  4. கலிங்கத்துப்பரணி
  5. கோவை
  6. அகப்பொருளுக்குரிய துறைகள் பலவற்றை 400 கட்டளைக் கலித்துறையால் சங்கிலித்தொடர் போலப் பாடப்பட்டது.
  7. கடவுள் / அரசர் / படைத்தலைவர் / வள்ளலை பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்படுவது
  8. சதகம்

தமிழ இலக்கியத்தில் சொல்லப்படும் அகம் (அ) புறப்பொருளை அடிப்படையாகக் கொண்டு நூறு பாடல்களால் பாடப்படுவது

  1. பிள்ளைத்தமிழ்

கடவுளரையோ அரசரையோ பிறரையோ குழந்தையாகக் கருதி. அவர்தம் குழந்தைப் பருவத்தைப் பத்துப்பருவங்களாகப் பகுத்துப் பருவத்திற்கு பத்து ஆசிரிய விருத்தங்களாகப் பாடுவது

மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் – குமரகுருபரர்

  1. பள்ளு

உழவுத் தொழில் செய்யும் மக்களின் வாழ்க்கையை பாடும் இலக்கியம் முக்கூடற்பள்ளு

 

  1. இரட்டை காப்பியங்கள் பற்றி எழுதியம்புக.

இரட்டை காப்பியங்கள்

  1. இளங்கோவும் சாத்தனாரும் சமகாலத்தவர்கள்
  2. கண்ணகியின் கதையை இளங்கோவடிகள் சீத்தலை சாத்தனரிடமிருந்து கேட்டார். பின் அவரின் வேண்டுகோளுக்கு இணங்க இயற்றினார்.
  3. இரண்டு காப்பியங்களுமே அணிகளின் பெயர்களைக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது.
  4. சிலப்பதிகாரம் கோவலன், கண்ணகி, மாதவி என மூவரையும் மையமாகக் கொண்டு படைக்கப்பட்டது. மாதவி – கோவலன் மகள் மணிமேகலை மணிமேகலையை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டது.
  5. இரண்டு காப்பியங்களுமே சாதாரணக் குடிமக்களை காப்பியங்களில் தலைமக்களாகக் கொண்டு அமைக்கப்பட்டவை.
  6. மணிமேகலை காப்பியங்களிலும் இடம்பெறுகிறது.
  7. சிலம்பு – கோவலனின் முன்னோர் கடலில் துன்புற காப்பாற்றியது.
  8. மணிமேகலை – மணிமேகலையை உதயகுமாரனிடம் இருந்து காப்பாற்றி மணிபல்லவத் தீவுக்கு காப்பாற்றியது
  9. இரு காப்பியங்களிலும் 30 கதைகள் உள்ளன.
  10. முப்பிறவி நம்பிக்கை கொண்டவையாகத் திகழ்கின்றன.
  11. தனிக்கடவுள் வாழ்த்தும் இடம்பெறவில்லை
  12. அகவலோசையுடன் கூடிய ஆசிரியப்பா – இருநூல்களிலும் இடம் பெற்றுள்ளது.
  13. ஒரே குடும்பத்தை பற்றிய கதைகள்
  14. கண்ணகியைப் பத்தினி கடவுளாக வழிபடும் நிலை மணிமேகலையை அறச்செல்வியாக உயர்த்தும் நிலை.
  15. விழாவில் தொடங்கிய இருநூல்களும், முடியும் போது அறிவுரைப் பகுதியோடு முடிகின்றன.
  16. இரண்டிலும் சொல்லாட்சிகள், சில அடிகள் அப்படியே வருகின்றன.
  17. பாயிரம் கூறுவது இரண்டு ஆசிரியர்களும் ஒருவர் கதையை மற்றொருவர் கேட்டதாக கூறுகிறது.

வேறுபட்டவை காரணங்கள்:

  1. சிலம்பும், மணிமேகலையும் ஒரே சமயத்து நூல்கள் அல்ல. சிலம்பு – சமண காப்பியம், மணிமேகலை – பௌத்த காப்பியம்
  2. சிலம்பில் சமயக் காழ்புணர்ச்சி இல்லை அனைத்து கடவுளர்களையும் சிறப்பிக்கிறது.

மணிமேகலை புத்தமதத்தை மட்டும் போற்றி, பிறதங்களைக் குறைகூறுகின்றது.

  1. சிலம்பு – புகார் நகரை செல்வச் செழிப்பு மிக்கதாய் காட்டும்

மணிமேகலை – செல்வச் செழிப்பை குறைத்துக்காட்டும்

  1. சிலம்பு – இல்லறக் காப்பியம்

மணிமேகலை – துறவறக்காப்பியம்

  1. இளங்கோ – அரசமரபு

சாத்தனார் – வணிகமரபு

  1. சிலம்பு – தனித்தமிழ் சொற்கள் அதிகம்

மணிமேகலை – வடமொழிச் சொற்கள் அதிகம்

  1. சிலம்பு – கதாபாத்திரங்கள் தமிழ் பெயர்கள்

மணிமேகலை – பிறமொழிப் பெயர்கள்

  1. பதிற்றுப்பத்து பாடலால் அறியப்படும் செய்திகள் யாவை?

சேர மன்னர்களின் வரலாறு கூறும் பதிற்றுப்பத்து

  1. எட்டுத்தொகையில் அமைந்த புறத்திணைநூல்
  2. சேர மன்னர்கள் 10 பேரின் சிறப்புகளை எடுத்தியம்பும்
  3. முதல் (ம) இறுதி 10 பாடல்கள் கிடைக்கவில்லை
  4. 10 புலவர்களால் பாடப்பட்டுள்ளது.

சிறப்பு:

  1. பாடல்கள் பாடாண்திணையில் அமைந்துள்ளது.
  2. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் துறை, வண்ணம், தூக்கு, பாடலின் பெயர் இடம் பெற்றிருக்கும்.
  3. பாடலின் சிறந்த சொற்றொடர் பாடலுக்குத் தலைப்பாகும்
  4. பதிகம் எனும் அமைப்பு முறையைச் சார்ந்தது.
  5. இதில் பாடியவர் பெயர், புலவர்கள் பெற்ற பரிசில், அரசரின் ஆட்சிகால அளவு முதலிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.

நூலின் முதன்மை நோக்கம்

சேர மன்னர்களின் வரலாறு, சிறப்பு, போர், சமூக – பொருளாதார நிலைகளை அறிய முடிகிறது.

நூலின் மூலம் அறியப்படும் செய்திகள்

  1. திருமணத்தின் போது, அருந்ததி விண்மீனை வணங்கும் பழக்கம்
  2. கடற் கொள்ளையரை இமயவரம்பன் வென்ற செய்தி
  3. பகைநாட்டு பெண்களின் கூந்தலை அறிந்து அவமதிக்கும் செய்தி
  4. வஞ்சிநகர் சிறப்பு

பதிப்பதித்தல்

1904 ஊ.வே.சா. அவர்களால் பதிப்பிக்கப்பட்டது.

  1. பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்கள் பற்றி எழுதுக.

ஒரு மறை – திருக்குறள் 38  + 70 + 25 ஸ்ரீ 133 அதிகாரங்கள்

  1. மணிமுடியாக இருக்கும் திருக்குறள் உலகம் போற்றும் பொதுமறை
  2. இது அறம், பொருள், இன்பம், எனும் முப்பொருளை உடையது.
  3. விவிலியத்திற:கு அடுத்தபடி அதிகப்படியாக உலகின் பெரும்பான்மையான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது.
  4. இந்நூலை இயற்றிய திருவள்ளுவரின் முழு வரலாறு கிடைக்கவில்லை
  5. திருவள்ளுவர் ஆண்டு – கிமு. 31

இரு நானூறு – நாலடியார் + பழமொழி நானூறு

நாலடியார்:

  1. திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணத்தக்கது நாலடியார்
  2. நாலடி, நாலடிநானூறு, வேளாண் வேதம் – வேறுபெயர்கள்
  3. இயற்றியவர் – சமண முனிவர்கள்
  4. பாடல்களின் எண்ணிக்கை – 400
  5. தொகுத்தவர் – பதுமனார்
  6. திருக்குறளைப் பேலவே அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என 3 பிரிவுகள் உண்டு.
  7. ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாளும் ரெண்டும் சொல்லுக்குறுதி.
  8. ஒவ்வொரு பாடலும் 4 அடிகளை உடையது.

பழமொழி நானூறு

  1. ஒவ்வொரு பாடலில் இறுதியிலும் ஒரு பழமொழி அமையப் பாடப்பட்டிருப்பதால் இந்நூல் இப்பெயர் பெற்றது.
  2. இயற்றியவர் – மூன்றுறையறையனார்
  3. பாடல்களின் எண்ணிக்கை – 400
  4. இவர் மூன்றுறை என்ற நாட்டின் மன்னர் அரையன் என்பதனால் விளங்குகிறது.
  5. இந்நூல் பண்டை தமிழ் மன்னர்களின் வரலாற்றுக் குறிப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

மும்மருந்து (திரிகடுகம் சிலபஞ்சமூலம் ஏலாதி)

திரிகடுகம்

  1. சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் கலந்த மருந்து உடல் நோயைத் தீர்க்கும்
  2. அதைப்பேல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் உள்ள மூன்று கருத்துகள் உள்ளத்து நோயைத் தீாப்பதால் இந்நூல் திரிகடுகம் என பெயர் பெற்றது
  3. ஆசிரியர் – நல்லாதனார்
  4. பாடல்களின் எண்ணிக்கை – 100

சிறுபஞ்ச மூலம்

  1. கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்தின் வேர்கள் கலந்த மருந்து உடலை வலுப்படுத்தும்.
  2. இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் அமைந்து ஐந்து கருத்துக்கள் வாழ்வுக்கு வலிமை சேர்ப்பதால் இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது.
  3. ஆசிரியர் – காரியாசான்
  4. பாடல்களின் எண்ணிக்கை – 102

ஏலாதி:

  1. ஏலம், இலவங்கப்பட்டை, நாகசேகரம், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகிய ஆறும் கலந்த மருந்து உடலுக்கு வலுசேர்க்கும்.
  2. இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் அமைந்துள்ள 6 கருத்துக்கள் உள்ளத்திற்கு வலிமை சேர்ப்பதால் இந்நூல் ஏலாதி எனப் பெயர் பெற்றது.
  3. ஆசிரியர் – கணிதமேதாவியார்
  4. பாடல்களின் எண்ணிக்கை – 80

நானாற்பது : (இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது)

இன்னாநாற்பது

  1. இன்னது துன்பது தரும் என்று கூறும் 40 வெண்பாக்களால் ஆன நூல் இன்னா நாற்பது
  2. ஆசிரியர் – கபிலர்

இனியவை நாற்பது

  1. வாழ்விற்கு இன்பம் பயப்பன இவை இவை என இனியவை நாற்பது பட்டியலிடுகிறது.
  2. இன்னது செய்யாதே என்பதை விட இதைச் செய் என நெறிப்படுத்தும் பாங்கு இந்நூலின் சிறப்பு
  3. ஆசிரியர் – பூதஞ்சேதனார்

கார்நாற்பது

  1. அரசன் பொருட்டுப் போர்க்கடமை ஆற்றத்தன் காதலியைப் பிரிந்து சென்று தலைவன் தான் குறித்த கார்காலம் வந்தும் திரும்பவில்லை
  2. பிரிவாற்றாமல் வருந்திய தலைவிக்கு, தோழி ஆறுதல் கூறுவது போல நாடகப்பாங்கில் அமைந்தது.
  3. ஆசிரியர் – கண்ணங்கூத்தனார்.

களவழி நாற்பது

  1. சோழன் செப்ணானுடன் கழுமலம் என்ற இடத்தில் நடந்த போரில் தம் நண்பர் சேரன் கணைக்காலிருந்த போரை தோல்வியுற்றான்.
  2. சிறையிலிருந்து மீட்க இந்நூலைப் பாடினார் என்பது வரலாறு
  3. ஆசிரியர் – பொய்கையர்

மணிமொழிக்கோவை – நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை

நான்மணிக்கடிகை:

  1. நான்கு மணிகள் பதிக்கப்பெற்ற கடிகை என்னும் அணிகலன் போல, ஒவ்வொரு செய்யுளிலும் நான்கு அரிய கருத்துக்களைக் கொண்டுள்ளதால் இந்நூல் இப்பெயர் பெற்றது.
  2. பாடல்களின் எண்ணிக்கை – 104
  3. ஆசிரியர் – விளம்பி நாகனார்

 

முதுமொழிக் காஞ்சி:

  1. பல மணிகளைக் கோவையாகக் கொண்டு அமைவது மகளிர் அணியும் காஞ்சி என்னும் அணிகலன்
  2. எதுபோல பலமுதுமொழிகளைக் கோவையாக் கொண்ட நூல்
  3. பாடல்களின் எண்ணிக்கை – 100
  4. ஆசிரியர் – கூடலூர்கிழார்

ஆசாரக்கோவை

  1. ஆசாரமாகிய ஒழுக்க விதிகளைக் கோவையாகக் கொண்டநூல்
  2. பாடல்களின் எண்ணிக்கை – 100
  3. ஆசிரியர் – பெருவாயின் முள்ளியார்

 

  1. பிற்கால நீதிநுல்களைப் பற்றி விவரி

பிற்கால நீதிநூல்கள்

  1. பதினெண்கீழ்கணக்கு நூல்களுக்குப்பின் தோன்றிய அறத்தையும் பேசின.
  2. முற்கால நீதிநூல்கள் கூறும் அறக்கருத்துக்களின் தொகுப்பாகப் பிற்கால நீதி நூல்கள் அமைந்துள்ளன.
  3. பிற்கால அறநூல்கள் பெரும்பாலும் சுருங்கச்சொல்லி விளங்கவைப்பவை.
  4. அவ்வகையில் ஓரடிப் பாக்கள் என்னும் வகையில் அமைந்த அறிவிலக்கியங்கள் பல தோன்றின.
  5. சிறுவர்களுக்கு நீதிகளைப் பயிற்றுவிக்க இவை பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.

வ.எண்

ஆசிரியர்

நூல்பெயர்

1

ஓளவையார்

ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி

2

பாரதியார்    

புதிய ஆத்திசூடி

3

குமரகுருபரர்

நீதிநெறி விளக்கம்

4

சிவப்பிரகாசர்         

நன்னெறி

5

அதிவீரராம பாண்டியர்

நறுந்தொகை

6

முனைப்பாடியார்  

அறநெறிச்சாரம்

7

கபிலர்           

கபிலரகவல்

8

வேதகிரியார்

நீதி சிந்தாமணி

9

வேதநாயகர்

பெண்மதிமாலை, நீதிநூல், நீதிபேதம்

10

உலக நாதர்  

உலக நீதி

11

ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை          

அருங்கலச் செப்பு, முதுமொழி வெண்பா, விவேக சிந்தாமணி

 

 

  1. ஐம்பெருங்காப்பியங்கள் பற்றி எழுதுக.
  2. சிலப்பதிகாரம்
    1. தமிழில் தோன்றிய முதல் காப்பியம்
    2. இக்காப்பியம் நெஞ்சை அள்ளும் சுவை உடையது.
  • சிலம்பால் உருவான வரலாற்றை பதிவு செய்கிறது.
  1. வேறு பெயர் – உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
  2. இயற்றியவர் – இளங்கோவடிகள்
  3. இவர் சேரன் செங்குட்டுவனின் தம்பி
  • இது புகார், மதுரை, வஞ்சி காண்டம்
  • 30 காதைகளை உடையது
  1. கோவலன், கண்ணகி, மாதவி – கதைமாந்தர்
  2. மூன்று அரிய உண்மைகளை உணர்த்துகிறது.
  3. மணிமேகலை
  1. இது பௌத்த சமயக் காப்பியம்
  2. கோவலன், மாதவியின் மகள் – மணிமேகலை
  • ஆசிரியர் – சீத்தலைச் சாத்தனார்.
  1. காதைகள் – 30
  2. சிலப்பதிகாரம் + மணிமேகலை ஸ்ரீ இரட்டைகாப்பியங்கள்
  3. மணிபல்லவத்தீவு சென்று மந்திரம், அமுதசுரப்பி பெறுகிறாள்.
  • மணிமேகலை மீது விருப்பம் – உதயகுமாரன்
  • காயசண்டிகையின் கணவன் உதய குமாரனை கொல்கிறான்.
  1. பரத்தை, மது, சிறையொழிப்பு
  2. இது ஒரு சமுதாய சீர்திருத்த காப்பியம்
  3. சீவகசிந்தாமணி
  4. தமிழில் விருத்தப்பாவில் தோன்றிய முதல் காப்பியம்
  5. வடமொழியில் எழுந்த கந்திய சிந்தாமணியின் தழுவல்

iii. ஆசிரியர் – திருத்தக்கத் தேவர்

  1. இலம்பகங்களின் எண்ணிக்கை – 30
  2. அறம், பொருள், இன்பம், வீடு என உறுதிப்படுத்துகிறது.

காப்பியச் சுருக்கம்

  1. ஏமாங்கதநாடு – அரசன் சச்சந்தன்
  2. மனைவி – விசையை
  3. அமைச்சன் – கட்டியங்காரன் ஆட்சி கைப்பற்றல்
  4. மயில்பொறி மூலம் தப்பி, இராசமாபுரம் இடுசுட்டில் குழந்தை பிறக்கிறது.
  5. சீவகனின் வரலாற்றை கூறும் நூல்
  6. கந்துக்கடன் – வணிகன் சீவகனை வளர்க்கிறான்.
  7. ஆசிரியர் – அச்சணந்தி
  8. தன் ஆற்றலால் கட்டியங்காரனை வீழ்த்துகிறான்
  9. இறுதியில் துறவறம் பூண்டு முக்தி அடைகிறான்.
  10. மணநுல் ( 8 பெண்களை மணத்தல்)

காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை

  1. குண்டலகேசி (நாதகுத்தனார்) – பௌத்த காப்பியம்
  2. அழிந்து போன தமிழ் காப்பியங்களில் ஒன்று குண்டலகேசி
  3. குண்டலம் மகளிர் காதில் அணியும் அணி கேசி என்றால் அழகான கூந்தலை உடையவள் என்று பொருள்.
  4. சமண சமயத்தை எதிர்த்து எழுந்த நூல்
  5. தன்னைக் கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டு பௌத்த துறவியாகி அச்சமயத்தின் பெருமையைப் பரப்பிய குண்டலகேசி என்ற வணிகர் குலப்பெண்ணின் கதை.
  6. இராசகிருகம் ஆண்ட அரசன் – அமைச்சனின் மகன் பத்திரை
  7. திருட்டுக் குற்றத்திற்காக தண்டனை பெற்ற ஒருவனை விரும்பி மணக்கிறாள்.
  8. மலையிலே உள்ள தெய்வத்தை வழிபடலாம் என கூறுதல்
  9. வளையாபதி
  10. இந்நூல் முழுமையும் இன்று கிடைக்கவில்லை.
  11. ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
  12. இந்நூல் கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, இளமை நிலையாமை குறித்து பேசுகிறது.
  13. நவகோடி நாராயணன் – வைர வணிகன்
  14. தன்குலத்தில் ஒரு பெண்ணையும், வேறுகுலத்தில் ஒரு பெண்ணையும் மணக்கிறான்.
  15. வேறு குலப் பெண் காளியிடம் வேண்டுகிறாள்
  16. ஆண் குழந்தை புகார்நகர் வணிகர் அவையில் தன் தந்தை நாராயணனே என நிறுவுகிறான்.
  17. ஐஞ்சிறு காப்பியங்கள் பற்றி குறிப்பெழுதுக.

ஐஞ்சிறு காப்பியங்கள்

  1. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப்பொருள்களுள் ஒன்றோ (அ) சிலவோ குறைந்து வருவது
  2. இவை அனைத்தும் சமணக்காப்பியங்கள்
  3. இவை அனைத்தும் விருத்தப்பாவைச் சார்ந்தது
  4. இதற்கு இலக்கணம் கூறும் நூல் – தண்டியலங்காரம்
  5. உதயணகுமார காவியம்
  6. இதில் 6 காண்டங்கள் உள்ளன.
  7. இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும்
  • பிறபகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது.
  1. இந்நூல் பெருங்கதை என்னும் காப்பியத்திலிருந்து வேறுபட்டது.
  2. நாககுமார காவியம்
  3. இதில் 5 சருக்கங்கள் உள்ளன.
  4. இளமைக் காலத்தில் இன்பம் துய்ப்பதிலேயே தனது காலத்தைக் கழித்த நாககுமாரன், தனது இறுதிகாலத்தில் வாழ்வின் நிலையாமையை உணர்ந்து துறவு மேற்கொள்கிறார்.
  5. யசோதர காவியம்
  6. சூளாமணி
  7. நீலகேசி
  8. நிலகேசி, குண்டலகேசிக்கு மறுப்பு நூலாக இயற்றப்பட்டது.
  9. தமிழில் தோன்றிய முதல் தருக்க நூல்
  10. வேறுபெயர் – நீலகேசித் திரட்டு
  11. இதில் 10 சருக்கங்கள் உள்ளன.
  12. பாஞ்சால நாட்டில் நடக்கும் உயிர்க்கொலையை, முனிச்சந்திரர் என்ற சமண முனிவர் தம்தவ வலிமையால் தடுத்தார்.
  13. அவருடைய தவத்தை பழையனூர் நீலி தடுக்க முற்பட்டு தோற்றார்.
  14. பின் மணந்து, சமண சமயத்தின் கோட்பாடான கொல்லாமையை உலகெங்கும் பரப்புகிறான்.
  15. பிற்காலகாப்பியங்கள் பற்றி எழுதுக.

பிற்காலகாப்பியங்கள்

i . பெருங்கதை

  1. வட இந்தியப் பகுதிகளைக் களமாகக் கொண்டு, தமிழ்ச் சாயலோடு படைக்கப்பெற்ற முதல் காப்பியம்.
  2. ஆசிரியர் – கொங்கு வேளிர்
  3. உதயணன் காவியத் தலைவன்
  4. சமணக் காப்பியம், ஆறு காண்டங்களை உடையது.
  5. இவனது தாய் கருவுற்ற போது, கபம் பறவை அரண்மனையிலிருந்து தூக்கி சென்று விபுலம் என்ற இடத்தில் விடுகிறது.
  6. பிறந்து, வீரதீரசெயல், அரசனாதல், துறவு பூனுதல் வரையிலான கதை
  7. பாவகை – ஆசிரியப்பா
  8. கம்பராமாயணம்
  1. இயற்றியவர் – கம்பர்
  2. வடமொழியில் வால்மீகி இயற்றிய இராமாயணத்தைத் தழுவி எழுதப்பட்டது.
  3. கம்பர் தமக்கே உரிய நடையில் கருப்பொருள் சிதையாமல் இயற்றியள்ளார்.
  4. இது பெருங்காப்பியத்திற்கு உரிய இலக்கணங்களை பெற்றுள்ளது.
  5. காண்டங்கள் – 6, படலங்கள் – 118
  6. தமிழுக்குக் கதி – கம்பராமாயணம் + திருக்குறள்

 

 

காண்டங்கள்

  1. பால காண்டம் – அயோத்தி அரசன் தசரதனின் 4 பிள்ளைகள் பிறத்தல், இராமன் வில்லை வளைத்து சீதையை மணம் முடித்தல்.
  2. அயோத்திய காண்டம்

கையேயி கேட்ட இரண்டு வாரங்களால் இராமன் காட்டை அடைதல்

  1. ஆரணிய காண்டம் – இராவணன் சீதையைக் கவர்ந்து செல்லுதல்
  2. கிட்கிந்தா காண்டம் – இராமன் வாலியைக் கொன்று, சுக்ரீவன், அனுமன் நட்பைப் பெறுதல்
  3. சுந்தர காண்டம் – இராமனைப் பிரிந்த சீதையின் நிலை, அனுமனின் ஆற்றல்
  4. யுத்த காண்டம் – இராவணனை அழித்து சீதையை மீட்பது

iii. பெரிய புராணம்

  1. வேறுபெயர் – திருத்தொண்டர் புராணம்
  2. இது பெருங்காப்பியங்களுக்குரிய இலக்கணங்களைப் பெற்றுள்ளது.
  3. இது திருத்தொண்டத்தொகை (ம) திருத்தொண்டர் திருவந்தாதி ஆகிய நூல்களை முதல் நூலாகக் கொண்டு இயற்றப்பட்டது.
  4. இது 63 அடியார் பெருமக்களை மையமாகக் கொண்டு திகழ்கிறது.
  5. காண்டங்கள் – 2, சருக்கங்கள் – 13
  6. இயற்றியவர் – சேக்கிழார்
  7. இது சைவத்திருமுறைகளில் 12ம் திருமுறையாகும்
  8. பல இனம் (ம) தொழில் பிரிவுகளை சார்ந்த சிவனடியர்களைப் பற்றிய நூல்
  9. இதனை தேசிய இலக்கியம் என்று சான்றோர்கள் பாராட்டுவர்.
  10. காப்பியத் தலைவர் – சுந்தரர்
  11. 20 நூற்றாண்டுக் கவிஞர்கள் பற்றி எழுதுக.

இருபதாம் நூற்றாண்டுக் காப்பியங்கள்

பழங்கால மரபைப் பின்பற்றி படைக்கப்பட்டவை

  1. பாரதியார் – பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு
  2. பாரதிதாசன் – பாண்டியன் பரிசு, புரட்சிக்கவி வீரத்தாய்
  3. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை – மருமக்கள் வழி மான்மியம்
  4. கண்ணதாசன் – ஆட்டனத்தி ஆதிமந்தி, இயேசு காவியம், மாங்கனி
  5. முடியரசன் – பூங்கொடி, வீரகாவியம்
  6. கவியோகி சுத்தானந்த பாரதி – பாரதசக்தி மகாகாவியம்
  7. சாலை இளந்திரையன் – சிலம்பின் சிறுநகை
  8. புலவர் குழந்தை – இராவண காவியம்

புதுக்கவிதை வடிவில் காப்பியங்கள்

யாப்பு வடிவத்தை உடைத்து வளர்த்தெடுக்கப்பட்ட புதுக்கவிதைகளிலும் காப்பியங்கள் படைக்கப்பட்டுள்ளன.

  1. வைரமுத்து – கவிராஜன் கதை (பாரதியின் வாழ்க்கை வரலாறு)
  2. கவிஞர் வாலி – அவதார புருக்ஷன் (இராமயணம்)

                                       – பாண்டவர் பூமி (மகாபாரதம்)

  1. எட்டுத்தொகை நூல்கள் பற்றி குறிப்பெழுதுக.

எட்டுத்தொகை நூல்கள்

  1. புறநானூறு
  2. புறநானூறு = புறம் + நான்கு + நூறு
  3. இது புறப்பொருள் தொடர்பான நானூறு பாடல்கள் அடங்கிய தொகை நூலாகும்
  • பண்டைய தமிழர்களின் வரலாறு, பண்பாடு, கொடைத்திறன், வீரம் போன்றவற்றை அறிய உதவும் நூலாகும்.
  1. கடவுள் வாழ்த்துப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்
  2. அகநானூறு
  3. அகநானூறு = அகம் + நான்கு + நூறு
  4. அகப்பொருள் சம்மந்தமான நானூறு பாடல்களைக் கொண்ட நூல்
  5. பெருந்தேவனார் – கடவுள் வாழ்த்துப் பாடியவர்
  6. நெடுந்தொகை – வேறுபெயர்
  7. நற்றிணை
  8. எட்டுத்தொகை நூல்களுள் முதலில் வருவது
  9. பல்வேறு காலங்களில் பல்வேறு புலவர்களால் பாடப்பட்ட தொகுப்புநூல்
  • ஒரறிவு உயிர்களைக் கூட விரும்பும் உயிரிய பண்பு,, விருந்தோம்பல், அறவழியில் பொருளீட்டல் முதலான தமிழர்தம் உயிரியப் பண்புகளை எடுத்தியம்பும் நூல்
  1. பாடல் அடிகள் : 9 – 12
  2. குறுந்தொகை
  3. அகற்பாவால் அமைந்த நூல்
  4. பாடல் அடிகள் : 4 – 8
  • மொத்த பாடல்கள் : 401
  1. தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன.
  2. ஐங்குறுநூறு
  3. ஐங்குறுநூறு ஸ்ரீ ஐந்து + குறுமை + நூறு
  4. பாடல் அடிகள் : 3 – 6
  5. ஐவகைத் திணைகள் குறித்த குறுகிய நூறுநூறு பாட்டுகளாகத் தொகுக்கப்பட்ட நூல்
  6. கலித்தொகை
  7. இது கலிப்பாக்களால் ஆனது
  8. இது நாடகப் பாங்கில் அமைந்துள்ளது, இசையோடு பாடுவதற்கேற்றது.
  9. மொத்த பாடல்கள் : 150
  10. “கற்றறிந்தோர் ஏத்தும் கலி” என சிறப்பிக்கப்படுகிறது.
  11. பரிபாடல்
  12. நால்வகைப் பாக்களும் பலவகையான அடிகளுக்கும் பரிந்து இடம் கொடுக்கும் தன்மை
  13. தமிழின் முதல் இசைப்பாடல்நூல்
  14. பதிற்றுப்பத்து
  15. பத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப்படை நூல்கள் பற்றி குறிப்பெழுதுக.
  16. திருமுருகாற்றுப்படை
  17. பத்துப்பாட்டில் தனியே கடவுள் வாழ்த்து இல்லை
  18. திருமுருகாற்றுப்படையே கடவுள் வாழ்த்துப் போல முதலாவதாக உள்ளது.
  19. இதனை இயற்றியவர் நக்கீரர்
  20. அடிகள் : 317
  21. 11ம் திருமுறையாக சைவர்கள் இதனையும் சேர்த்துள்ளனர்.
  22. வீடு, பேறு அடைய முருகனிடத்தில் ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது.
  23. பொருநாராற்றுப்படை
  24. கரிகால் பெருவளத்தானிடம் பரிசில் பெற்ற ஒருவர் பரிசில் பெற விரும்பும் பிறிதொருவனை ஆற்றுப்படுத்துவதாக அமைத்துள்ளது.
  25. ஆசிரியர் – முடத்தாமக் கண்ணியார்
  26. அடிகள் – 248
  27. கரிகாற் பெருவளத்தானின் வெற்றி, கொடை, ஆட்சி, சோழ நாட்டுவளம் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  28. சிறுபாணாற்றுப்படை
  29. ஒய்மாநாட்டு நல்லியக்கோடனிடம் பரிசுபெற ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது.
  30. இயற்றியவர் – நல்லூர் நத்தத்தனார்
  31. அடிகள் – 269
  32. விறலியின் அழகு, வஞ்சி, மதுரை, வள்ளல்களின் செயல்கள் குறிப்பிடப்பட்டுள்து.
  33. பெரும்பாணாற்றுப்படை
  34. தொண்டைமான் இளந்திரையனிடன் பரிசு பெற பேரியாழ்பாணனை ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது.
  35. இயற்றியவர் – கடியனூர் உருத்திரங்கண்ணனார்
  36. அடிகள் – 500
  37. பேரியாழ், உப்பு, வணிகர் இயல்பு, எயினர், பட்டினம், காஞ்சி, இளந்திரையோன் வீரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
  38. மலைபடுகடாம்
  39. இயற்றியவர் – இரணிய முட்டத்துப் பெருங்குன்னூர் பெருங்கொளசிகனார்
  40. இதில் கூத்தன் ஒருவன் மற்றொரு கூத்தனை நன்னன் பாடப்பட்டோர் என்ற மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது.
  41. அடிகள் – 583
  42. வேறு பெயர் – கூத்தராற்றுப்படை
  43. மலைக்கு யானையை உவமித்து, அதன் கண் பிறந்த ஓசையைக் கடாம் என சிறப்பித்ததால் இப்பெயர் பெற்றது.
  44. பத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப்படை அல்லாத நூல்கள் பற்றி எழுதுக.
  45. குறிஞ்சிப்பாட்டு
  46. குறிஞ்சித்திணை பற்றி கூறுகிறது
  47. இயற்றியவர் – கபிலர்
  48. ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்காகப் பாடியது
  49. அடிகள் – 261
  50. இதில் 99 பூக்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
  51. தலைமகன் தலைவி, யானை, தோழி, அறத்தோடு நிற்றல், கற்புநெறி ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளது.
  52. முல்லைப்பாட்டு
  53. முல்லைத்திணை (ம) வஞ்சி பற்றி கூறுகிறது.
  54. இயற்றியவர் – நம்பூதனார்
  55. பத்துப்பாட்டில் அளவில் சிறியது அடிகள் – 103
  56. இந்நூல் ஆசிரியப்பாவால் ஆனது
  57. காதலில் சிறப்பைக் கூறும்
  58. கார்கால வருகை, விரிச்சி கேட்டல், பாசறையில் அரசனின் செயல்கள், அரசனைப் பிரிந்த அரசியின் துயரநிலை குறிப்பிடப்பட்டுள்ளது.
  59. மதுரைக் காஞ்சி
  60. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மீது பாடியது
  61. பாடியவர் – மாங்குடி மருதனார்
  62. பத்துப்பாட்டில் அளவில் பெரியது
  63. அடிகள் – 782
  64. மதுரையின் சிறப்பு, பாண்டியன் நெடுஞ்செழியனின் படையெடுப்பு, தலையாலங்கானப் போர், வள்ளன்மை குறிப்பிடப்பட்டுள்ளது.
  65. நெடுநல்வாடை
  66. இயற்றியவர் – நக்கீரர்
  67. அடிகள் – 188
  68. தலைமகனைப் பிரிந்து வருந்தும் தலைமகளுக்கு வாடைகாற்று, ஒருபொழுது ஓர் ஊழி போலத் தோன்றும் இதனால் வாடையாக அமைந்தது.
  69. ஆனால் பாசறையில் தங்கியிருக்கும் வேந்தனுக்கு வினைமுடிக்க, நல்ல வாடையாக அமைந்தது.
  70. பட்டினப்பாலை
  71. சோழன் கரிகாற் பெருவளத்தானை பாடியது
  72. பாடியவர் – கடியலூர் உழுத்திரங்கண்ணனார்
  73. அடிகள் – 301
  74. சோழநாட்டின் தரைவழி (ம) கடல்வழி வணிகச் செய்திகள் இடம் பெற்றுள்ளன.

 

  1. பன்னிரு திருமுறைகளை தொகுத்து எழுதுக.

திருமுறை

நூல்கள்

ஆசிரியர்கள்

1, 2, 3ம் திருமறை

தேவாரம்

திருஞான சம்பந்தர்

4,5, 6 ம் திருமுறை

தேவாரம்

திருநாவுக்கரசர்

7ம் திருமுறை

தேவாரம்

சுந்தரர்

8ம் திருமுறை

திருவாசகம்
திருக்கோவையார்

மாணிக்கவாசகர்

9ம் திருமுறை

திருவிசைப்பா

திருப்பல்லாண்டு

திருமாளிகைத்தேவர் உள்ளிட்ட 9 பேர்

10 ம் திருமுறை

திருமந்திரம்

திருமூலம்

11ம் திருமுறை

40 நூல்களின் தொகுப்பு

காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட 12 பேர்

12ம் திருமுறை

பெரிய புராணம்

சேக்கிழார்

பன்னிரு ஆழ்வார்களைப் பற்றி குறிப்பெழுதுக.

வ.எண்

ஆழ்வார்கள்

நூல்கள்

1

பொய்கையாழ்வார்

முதல் திருவந்தாதி

2

பூதத்தாழ்வார்          

இரண்டாம் திருவந்தாதி

3

பேயாழ்வார்

மூன்றாம் திருவந்தாதி

4

திருமழிசையாழ்வார்        

நான்காம் திருவந்தாதி திருச்சத்த விருத்தம்

5

நம்மாழ்வார்

திருவிருத்தம்

திருவாசிரியம்

பெரிய திருவந்தாதி

6

குலசேகராழ்வார்   

 

திருவாய் மொழி

பெருமாள் திருமொழி

7

தொண்டரடிப் பொடியாழ்வார்

 

திருமலை

திருப்பள்ளி எழுச்சி

8

பெரியாழ்வார்        

 

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

9

திருப்பாணாழ்வார்

திருப்பதிகம்

10

ஆண்டாள்    

நாச்சியார்  திருமொழி திருப்பாவை

11

திருமங்கையாழ்வார்         

பெரிய திருமொழி திருக்குறுந்தாண்டகம்

திருநெடுந்தாண்டகம்

திருவெழு கூற்றுருக்கை

சிறிய திருமடல்

பெரிய திருமடல்

12

மதுரகவியாழ்வார் 

திருப்பதிகம்

 

நடனம் மற்றும் நாட்டுப்புற கலைகள்

  1. சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய ஆடல் வகைகளை விளக்குக.

நின்றாடல்

  1. அல்லியம்

கண்ணன் யானையின் தந்தத்தை ஒடித்தைக் காட்டும் ஆடல்

  1. கொடுகொட்டி

சிவபெருமான் முப்புரத்தை எரித்தபோது, வெற்றியில் கைகொட்டி ஆடிய ஆடல்

  1. குடைக்கூத்து

முருகன் அவுணரை வென்றபோது ஆடிய ஆடல்

  1. குடக்கூத்து

கண்ணன் தன் பேரனான அநிருத்தனை அசரரிடமிருந்து மீட்பதற்காகப் குடத்தை வைத்துக்கொண்டு ஆடிய ஆடல்.

  1. பாண்டரங்கம்

சிவபெருமான் முப்புரத்தை எரித்தபின், நான்முகன் காணும்படி ஆடிய ஆடல்

  1. மல்லியம்

கண்ணன் வாணன் என்னும் அசுரருடன் போர் செய்ததைக் காட்டும் கூத்து

 

வீழ்ந்தாடல்

  1. துடி

சூரபதுமனை வென்ற பிறகு கடலினை மேடையாகக் கொண்டு முருகன் ஆடியதைக் கூறும் கூத்து

  1. கடையம் (உழத்திக் கூத்து)

இந்திரன் மனைவி அயிராணி வழ்த்தி உருவத்தோடு ஆடியது.

3.பேடு

காமன் தன் மகனான அநிருத்தனை சிறை மீட்பதற்காக வாணனுடைய சோ எனும் நகரத்தில் பேடிடிருவம் கொண்டு ஆடியது.

  1. மரக்கால் (கொற்றவை)

கொற்றவை தன்னை எதிர்த்து பாம்பு, தேளாக வந்த அசுரரைக் கொல்வதற்காக ஆடிய ஆடல்

  1. பாவை (திருமகள்)

அசுரரை வெல்ல திருமகள் ஆடிய ஆடல்

 

  1. நடன நூல்கள் (or) கூத்து நூல்கள் பற்றி எழுதுக.

நடன நூல்கள்

11 வகையான ஆடல் (ம) உறுப்பு, பாடல்கள் யாப்பருங்கலம் நூலின் உரையில் கூறப்பட்டுள்ளன.

  1. பரதம் 2. அகத்தியம்
  2. முறுவல் 4. சயத்தம்
  3. குணநூல் 6. செயிற்றியம்
  4. இசை நுணுக்கம் 8. இந்திர காளியம்
  5. பஞ்ச மரபு 10. பரத சேனாபதியம்
  6. மதிவாணர் நாடகத் தமிழ் நூல் 12. கூத்து நூல்
  7. விளக்கத்தார் கூத்து 14. மத்தி விலாசப் பிரகசனம் முதலாம் மகேந்திரவர்மன்
  8. நாட்டுப்புற நிகழ்த்துக்கலை குறித்து எழுதுக.

நிகழ்கலை

  1. சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாக் கூறுகளாகத் திகழ்கின்றன.
  2. இவை மக்களுக்கு மகிழ்ச்சியெனும் கனி கொடுத்துக் கவலையைப் போக்குகின்றன.

வகைகள்:

  1. கரகாட்டம்
  2. கரகம் என்னும் பித்தளைச் செம்பையோ, சிறிய குடத்தையோ தலையில் வைத்து தாளத்திற்கு ஏற்ப ஆடுவது
  3. செம்பின் அடிப்பாகத்தை உட்புறம் தட்டி, ஆடுபவரின் தலையில் படியும்படி செய்வர்.
  4. செம்பில் மணல் (அ) பச்சரிசி நிரப்பப்படும்.
  5. கரகக் கூட்டின் நடுவில், கிளி பொம்மை பொருத்திய மூங்கில் குச்சி சொருகப்பட்டிருக்கும்.
  6. ஆண் – பெண் ஆடுவர் இத்தனை பேர் என வரையறை இல்லை.
  7. சான்றுகள் – புறநானூறு, சிலப்பதிகாரம் – குடக்கூத்து
  8. மயிலாட்டம்
  9. மயில் வடிவுள்ள கூட்டுக்குள் ஒருவர் தன் உருவத்தை மறைத்து, நையாண்டி மேளத்திற்கு ஏற்ப ஆடுதல்
  10. நையாண்டி மேளம் இசைக்க, காலில் கட்டப்பட்டுள்ள சலங்கை ஒலிக்க மயிலின் அசைவுகளை ஆடிக்காட்டுவர்.
  11. இது கரகாட்டத்தின் துணை ஆட்டமாகும்.
  12. ஊர்ந்து, மிதந்து, சுற்றி, இரகை விரித்து ஆடுதல்

iii. காவடியாட்டம்

  1. கா – பாரந்தாவரும் கோல்
  2. இருமுனைகளிலும் சமஎடைகளைக் கட்டிய தண்டினைத் தோளில் சுமந்து ஆடுவது
  3. இரு முனைகளிலும் சிற்ப வேலைப்பாடு உள்ள பலகையைப் பொருத்தி, மூங்கில் குச்சிகளால் அரைவட்டமாக இணைக்கின்றனர்.
  4. அரைவட்ட பகுதி பட்டுத் துணியால் அழகுப் படுத்தப்படுகிறது.
  5. மயிலிறகை இருபுறமும், பொருத்தி, மணிகளால் அழகுப்படுத்துவர்.
  6. இலங்கை, மலேசியா உட்பட புலம்பெயர் தமிழர் பகுதிகளிலும் நடைபெறுகிறது.
  7. ஒயிலாட்டம்
  8. ஒரே நிறத்துணியை முண்டாத போலக் கட்டியும், காலில் சலங்கை அணிந்தும் கையில் வைத்துள்ள சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஒயிலாக ஆடுவது
  9. உணர்ச்சிக்கு ஏற்ற பாட்டின் சத்தமும், சத்தத்திற்கு ஏற்ப ஆட்டத்தின் இசையும் மாறி மாறி ஈர்க்கும்.
  10. இதில் தோலால் கட்டப்பட்ட குடம், தவில், சிங்கி, போலக் தப்பு இசைக்கப்படும்.
  11. தேவராட்டம்
  12. இது வானத்துத் தேவர்கள் ஆடிய ஆட்டம் என பொருள்
  13. இது ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டம்
  14. இசைக்கப் பெறும் கருவி உறுமி
  15. வேட்டிக் கட்டியும், தலை (ம) இடையில் சிறுதுணி கட்டியும், காலில் சலங்கை அணிந்தும் ஆடப்படும்.
  16. இதில் 8 – 13 கலைஞர்கள் பங்கு பெறுவர்.

 

  1. சேவையாட்டம்

ஆட்டக்கலைஞர்கள் சேவைப்பலகை, சேமக்கலம், ஜால்ரா ஆகிய இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டே ஆடுகின்றனர்.

vii. பொய்க்கால் குதிரையாட்டம்:

  1. மரத்தாலான பொய்க்காலில் நின்று, குதிரைவடிவுள்ள கூட்டை உடம்பில் சுமந்து ஆடும் ஆட்டம்
  2. அரசன், அரசி வேடமிட்டு ஆடப்படுகிறது.
  3. காலில் சலங்கை, தலையில் கிரீடம் அணிந்து ஆடுகின்றனர்.
  4. இதில் நையாண்டி மேளம், நாதஸ்வரம், இசைக்கப் பெறும்
  5. குதிரை மேல் ஏறி பயணம் செய்வது போன்று ஆடுவர்.

viii. தப்பு ஆட்டம்

  1. தப்பு என்ற தோற்கருவியை இசைத்துக் கொண்டே ஆடுவர்
  2. தப்பு வட்ட வடிவில் அமைந்தது
  3. கோவில்திருவிழா, திருமணம், இறப்பு, விளம்பரம் போன்றவற்றில் ஆடப்படுகிறது.
  4. தப், தப் என்ற ஒலியை ஏற்படுத்தும்
  5. சான்று – தொல்காப்பிய கருப்பொருளில் பறை இடம் பெற்றுள்ளது.
  6. புலி ஆட்டம்
  7. பாட்டு (ம) வசனம் இல்லை
  8. புலி வேடமிடுவோர் உடம் பெங்கும் புலியைப் போன்று கறுப்பு, மஞ்சளுமான வண்ணக்கோடுகளையிட்டு, துணியாலான வாலை இடுப்பில் கட்டுவர்
  9. புலியைப்போல நடந்து, பதுங்கி, பாய்ந்து, எம்பிக்குதித்து நாக்கால் வருடி, பற்களைத்திறந்தும் உருமியும் ஆடுவர்
  10. தெருக்கத்து
  11. இது நிகழ்த்தப்பட்ட இடத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது.
  12. இது வேளாண்மை செய்வோரின் கலையாக இருந்தது.
  13. அருச்சுனன் தபசு என்பது மழைவேண்டி நிகழத்தப்படுவதாக இருக்கிறது.
  14. இது பின்னாளில் நாடகமாக வளர்ச்சி அடைந்தது.

xi தோற்பாவைக்கூத்து (பொம்மலாட்டம்)

  1. தோலால் செய்த வெட்டு வரைபடங்களை, விளக்கின் ஒளி ஊடுருவும் திரைச்சீலையில் பொருத்தி, கதைக்கேற்ப மேல் கீழ், பக்கவாட்டில் அசைத்து, உரையாடி பாடுவர்.
  2. இது தோலால் ஆன பாவையைக் கொண்டு நிகழத்தும் கலை
  3. சான்றுகள் – திருக்குறள், திருவாசகம்
  4. பொம்மலாட்டம் எனவும் அழைக்கப்படுகிறது.

 

  1. பழந்தமிர் வீரவிளையாட்டுகளில் ஏறுதழுவுதலின் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.

ஏறுதழுவுதல்

  1. வேறுபெயர் – மஞ்சு விரட்டு
  2. முல்லைக் கலியில் ஏறுதழுவுதல் பற்றிய குறிப்புகள் உள்ளன.
  3. காளையின் கொட்டேறி திமிலைப் பிடித்து அடக்குவது – சங்ககால முறை
  4. கொம்பைப் பிடித்து முறுக்கி அடக்குவது, உண்டு.
  5. நாணய முடிச்சு கொம்பில் கட்டப்பட்டதால், சல்லிக்கட்டு எனப்பட்டது.
  6. முக்கிய பகுதிகள் – வாடி வாசல், திட்டிவாசல்
  7. வேலி மஞ்சுவிரட்டு, வாடிவாசல் மஞ்சு விரட்டு, வடம் மஞ்சு விரட்டு என வகைகள் உண்டு.
  8. இது சிறுதெய்வ வழிபாட்டுடன் தொடர்புடையது.
  9. அம்மை, வைசூரி போன்ற நோய்களிலிருந்து விடுபடவும் மழையின்மை நீங்கவும் நடைபெறும்.
  10. பொதுவாக பொங்கல் நாளன்று நடத்தப்படுகிறது.
  11. இதற்காக காளையை கன்றுப் பருவத்திலிந்தே, சிறு துண்டினைக் காட்டிப் பாய்ச்சலுக்கு பழக்குவர்.
  12. இது உர்ரி கட்டுதல் எனப்படுகிறது.
  13. கால், கழுத்து பகுதிகளில் சலங்கைகள் கட்டப்படும்
  14. நெற்றியில் காசுமாலை, சொம்பில் சிறுவளையம் திம்லி வண்ணப் பொட்டும் இடப்படும்.
  15. தமிழர்களின் வீரவிளையாட்டுகளைப் பற்றி விவரி?
  16. சிலம்பாட்டம்
  17. கம்புகளை அடித்து ஒலி யெழுப்பும் விளையாட்டு சிலம்பு
  18. நேர்த்தியாகக் கம்புகளைக் சுழற்றினால்தான் எதிரிகளை வீழ்த்த முடியும்
  19. போர் முனைகளுக்கு உரிய சில விதிமுறைகளும் இதில் உள்ளன.
  20. நோக்கம் – உடற்பயிற்சி தற்காப்பு, போராட்டம்
  21. நடசாரி என்ற ஒலைப்பட்டயத்தில் சிலம்பாட்டத்தின் தோற்றம் கூறப்பட்டுள்ளத.
  22. உடலிலுள்ள வர்ம நாடிகளை நோக்கி அடிக்கும் முறை தட்டுவர்மச் சுவடாகும்.
  23. ஒருவர் இடம் பார்த்து அடிப்பதும் அவ்வடியை இன்னொருவர் தடுப்பதும் அடிச்சுப்பிரிவு.
  24. ஒருவர் கைகொண்டு அடுத்தவரைப் பூட்டிப் பிடிப்பதும். அப்பூட்டிலிருந்து பிடிபட்டவர் தம்மை விடுவிப்பதும் பூட்டுப்பிரிவு.
  25. குமரி மாவட்டத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
  26. சடுகுடு
  27. பசுவைக் கவர்ந்து வருவதும். கவர்ந்து வந்த பசுக்களை மீட்டு வருவதுமான வெட்சி கரந்தையின் தொடர்ச்சி
  28. பாண்டிய நாடு – குட்டி, சோழ நாடு – பளிச்சப்பிளான், பலீன்சடுகுடு, தென்சோழ நாடு – சடுகுடு எனப்படுகிறது.
  29. மூச்சுப் பிடித்துக் கொண்டு பாடிச் சென்று மீள்வதும், பாடிவருபவரைப் பலரும் சூழ்ந்து பிடிப்பதும் இவ்விளையாட்டின் திறமாகும்.
  30. மூச்சுப் பிடிப்பதைப் பாட்டம் என்பர்.
  31. பிடிப்பவரை விலக்காமலே பிடிபட்டவரின் எண்ணிக்கையை மட்டும் ஆட்ட இறுதியில் கணக்கிடும் முறை சஞ்சீவி என்பர்.
  32. பிடிபட்டவரை கடைசி வரை சேர்க்காமல் ஆட்டத்தை முடித்தல் ஆடாது ஒழியும் ஆட்டம் என்பர்.
  33. இவ்விளையாட்டில் பின்கோடு, பக்கக்கோடு, நடுகோடு பயன்படுத்தப்படுகிறது.
  34. இளவட்டக்கல்
  35. பண்டைய மனிதன் குகைகளில் வாழ்ந்தபோது, கல்லைத் தூக்குதல், நகர்த்துதல், பழக்கத்தின் வெளிப்பாடாகும்.
  36. இவ்விளையாட்டு தான் விரும்பிய பெண்ணை மணப்பதற்காக ஆடப்பட்டிருக்கிறது.
  37. தற்காலத்தில் வீரத்தை வெளிப்படுத்தும் விளையாட்டாக மாறி இருக்கிறது.
  38. திரு விழாக்களின் போது, ஊர் பொது இடத்தில் இது நடத்தப்படும்.
  39. இளவட்டக் கல்லைத் தலைக்குமேல் தூக்கிப் பிடித்துப் பின் கீழே போட வேண்டும்.
  40. கிராமத்துப் பெரியவர்கள் நடுவர்கள்
  41. மணமகனாக வருபவர்க்கு மற்றவற்றை விட உடல் திறன் இன்றியமையததாக கருதப்பட்டது.
  42. உரிமரம் ஏறுதல்
  43. கைக்கு அடங்காத பருத்திற்கும் உதியமரத்தை இதில் பயன்படுத்துவர்.
  44. பட்டை உரிக்கப்பட்ட மரம் வழு வழுப்பாக இருக்கும்.
  45. அம்மரத்தில் விளக்கெண்ணெய் தடவப்படும்.
  46. மரத்தின் உச்சியில் பரிசுப்பொருள் கட்டுவர்
  47. மரத்தில் ஏறி உச்சியில் இருக்கும் பொருளை கைப்பற்றுபவர், வெற்றிபெற்றவராவர்.
  48. செங்குத்துப் பாறை (ம) வழுக்கு பாறைகள் மீது ஏறுதல் மலைவாழ் மக்களுக்கு எளிது.
  49. இது திருவிழாக்களின் போது, உடல்திறனை வெளிப்படுத்தும் விளையாட்டாக மாறியது.
  50. ஏறுதழுவுதல்
  51. வேறுபெயர் – மஞ்சு விரட்டு
  52. முல்லைக் கலியில் ஏறுதழுவுதல் பற்றிய குறிப்புகள் உள்ளன.
  53. காளையின் கொட்டேறி திமிலைப் பிடித்து அடக்குவது – சங்ககால முறை
  54. கொம்பைப் பிடித்து முறுக்கி அடக்குவது, உண்டு.
  55. நாணய முடிச்சு கொம்பில் கட்டப்பட்டதால், சல்லிக்கட்டு எனப்பட்டது.
  56. முக்கிய பகுதிகள் – வாடி வாசல், திட்டிவாசல்
  57. வேலி மஞ்சுவிரட்டு, வாடிவாசல் மஞ்சு விரட்டு, வடம் மஞ்சு விரட்டு என வகைகள் உண்டு.
  58. இது சிறுதெய்வ வழிபாட்டுடன் தொடர்புடையது.
  59. அம்மை, வைசூரி போன்ற நோய்களிலிருந்து விடுபடவும் மழையின்மை நீங்கவும் நடைபெறும்.
  60. பொதுவாக பொங்கல் நாளன்று நடத்தப்படுகிறது.
  61. இதற்காக காளையை கன்றுப் பருவத்திலிந்தே, சிறு துண்டினைக் காட்டிப் பாய்ச்சலுக்கு பழக்குவர்.
  62. இது உர்ரி கட்டுதல் எனப்படுகிறது.
  63. கால், கழுத்து பகுதிகளில் சலங்கைகள் கட்டப்படும்

நெற்றியில் காசுமாலை, சொம்பில் சிறுவளையம் திம்லி வண்ணப் பொட்டும் இடப்படும்.

 

  1. தமிழரின் கூத்துக் கலையை விவரி.

தமிழரின் நடனக்கலை

விழாக்களின் போது கூத்தர்கள் மக்களைத் தம் ஆடல் பாடல்களால் மகிழ்வித்தனர். மக்களும் மன்னர்களும் கூத்தர்களைப் பேணினர்.

சங்ககாலத்தில் கூத்துக்கலை

  1. வள்ளிக்கூத்து
  2. நாட்டுக்கு வளமும் வெற்றியும் கொணர்ந்த வள்ளியின் பெருமைகளைப் பாடி ஆடுவது
  3. தொல்காப்பியர் இதனை ‘வாடா வள்ளி’ என்பர்.
  4. குரவைக்கூத்து
  5. மகளிரால் இது ஆடப்படும்
  6. 7 – 9 பேர் வட்டமாக கைகோர்த்து ஆடுவது
  7. குன்றக்குறவை குறிஞ்சி நிலத்தில் வாழும் மகளிர் முருகனுக்காக ஆடுவது
  8. ஆய்ச்சியர் குரவை முல்லை நிலத்தில் வாழும் மகளிர் திருமாலுக்காக ஆடுவது

3.வெறியாட்டு

முருகனை வேண்டிச் செய்யும் சடங்கு

  1. துணங்கை கூத்து

விழாவின் போது தெருக்களில் துணங்கை ஆடினர். இதற்கு ஏற்ப முடிவு ஒலித்தது.

நடனநூல்கள்

  1. பரதம் 2. அகத்தியம்
  2. முருவல் 4 சயந்தம்
  3. குணநூல் 6. இசைநுணுக்கம்
  4. செயிற்றியம் 8. இந்திரகாளியம்
  5. பஞ்சமரபு 10. பரத சேனாபதியம்
  6. மதிவாணர் நாடகத்தமிழ்

ஆடல் வகைகள்:

சிலப்பதிகாரத்தில் மாதவி பவகை ஆடல்களை ஆடியதாக கூறப்படுகிறது.

நின்றாடல் வகை                             வீழ்ந்தாடல் வகை

  1. அல்லியம் 1. துடி
  2. கொடுகொட்டி 2. கடையம்
  3. குடைக்கூத்து 3. பேடு
  4. குடக்கூத்து 4. மரக்கால்
  5. பாண்டரங்கம் 5. பாலை
  6. மல்லியம்

சிலம்பும்கூத்தும்

  1. கூத்துக்கு 64 கலைகள் பற்றிய அறிவு தேவைப்பட்டது.
  2. வேத்தியல், பொதுவியல் என வகைப்படுத்தப்பட்டன.
  3. 7 ஆண்டுகள் நடனப்பயிற்சி அளிக்கப்பட்டது.
  4. தலைக்கோல் பட்டம் அளிக்கப்பட்டது.

பல்லவர் காலம்

  1. முதலாம் மகேந்திரவர்மன் மத்தவிலாசம் பிரகசனம் என்ற நூலில் சிவபெருமானின் தாண்டவங்களை பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
  2. ராஜசிம்மன் கட்டிய காஞ்சி கைலாசநாதர் கோயிலில் சிவபெருமான் ஆடியதாக கூறப்படும் நடன வகைகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.
  3. காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோயிலில் கூத்தன், கூத்தியர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
  4. சுந்தரர், நடன மாதரான பரவை நாச்சியரை மணந்தார்.
  5. காஞ்சிபுரம் முக்தீச்சுரர் கோயிலில் 42 நடன மாதர் இருந்ததாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

சோழர் காலம்

  1. கோயில் கருவறைகளின் அடிப்பகுதியில் கூட நடன வகைகள் செதுக்கப்பட்டு இருந்தன.
  2. இதற்கு சான்று கங்கை கொண்ட சோழபுரம்
  3. தஞ்சாவூர் பெரிய கோயில் கருவறையின் புறச்சுவரில் நடன மாதரின் ஒவியங்கள் வரையப்பட்டுள்ளன.
  4. ராஜராஜன் ஆடல் திகழ்ந்த பதியிலார் என்ற நடனத்தில் சிறந்த பெண்களை தேர்வு செய்தார்.
  5. இவர்களுக்கு ஒரு வேலி நிலம் அளிக்கப்பட்டதை தஞ்சைக் கல்வெட்டில் காணலாம்.
  6. 9 வகை மெய்ப்பாடுகள் காணப்பட்டன.

பிற்காலம்

  1. நாயக்கர் காலத்தில் வடமொழி நடன நூல்கள் மொழி பெயர்த்து எழுதப்பட்டன.
  2. இசைப்பாட்டிற்கு ஏற்ப அபிநயம் காட்டிப் பாவகம் தோன்ற ஆடப்படுவது பரத நாட்டினம்
  3. இதற்குக் கைக்குறியீடுகள் அவசியம்
  4. ஒருகை, இருகை முத்திரை என இருவகைப்படுகிறது.
  5. தேவதாசிகள் என்போர் கோயில்களில் அமர்த்தப்பட்டனர்.

முடிவுரை

இவ்வாறு காலந்தோறும் தமிழகத்தில் நடனக்கலை தழைத்து வந்துள்ளது.

இசை

  1. இசை நூல்கள் பற்றி குறிப்பெழுதுக.

இசைநூல்கள்

  1. இறையனார்க் களவியல் உரை

முதுநாரை, முதுகுருகு ஆதிய நூல்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

  1. இறையனார் களவியல் உரையின் உரைப்பாயிரம்

சிற்றிசை, பேரிசை ஆகிய நூல்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

  1. அடியார்க்கு நல்லார்

பெருநாரை, வருங்குருகு, பஞ்சபாரதீயம் முதலான நூல்களைப் பற்றி குறிப்பிடுகிறது.

  1. சயந்தன் என்னும் பாண்டிய மன்னன்

இசை நுணுக்கம் என்ற நூலை இயற்றியுள்ளார்.

  1. யாப்பருங்கலக்காரிகை உரைப்பாயிரம்

இதில் குலோத்துங்கன் இசைநூல் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

  1. அறிவனார்

இவர் பஞ்சமரபு என்ற நூலை இயற்றியுள்ளார். இதற்கான உரையை ப. சுந்தரசேனார் வெளியிட்டுள்ளார்.

  1. பரிபாடல்
  2. தமிழரின் இசைக்கலையை விவரி.

முன்னுரை

இசைக்கருவிகள்

  1. தோற் கருவிகள் – விலங்குகளின் தோலால் செய்யப்படும் கருவிகள் (எ.கா) முழவு, முரசு
  2. நரம்புக்கருவிகள் – நரம்பு (அ) தந்திகளை உடையவை (எ.கா) யாழ், வீணை
  3. துளைக்கருவிகள் – காற்றை பயன்படுத்தி இசைக்கப்படுபவை (எ.கா) குழல், சங்கு.
  4. கஞ்சகக் கருவிகள் ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுபவை (எ.கா) சாலரா, சேகண்டி.

ஏழிசைகள்

  1. குரல் 2. துத்தம்
  2. கைக்கிளை 4. உழை

5.இளி                                                6.விளரி

  1. தாரம்

யாழ்வகைள்

  1. பேரியாழ் -21 நரம்புகள்
  2. மகரயாழ் -19 நரம்புகள்
  3. சகோடயாழ் -14 நரம்புகள்
  4. செங்கோட்டியாழ் – 7 நரம்புகள்

இசை நூல்கள்

  1. இறையனார்க் களவியல் உரை – முதநாரை, முதுகுருகு, சிற்றிசை, பேரிசை
  2. அடியார்க்கு நல்லார் பெருநாரை, பெருங்குருகு, பஞ்சபாரதீயம்
  3. சயந்தன் – இசை நுணுக்கம்
  4. குலோத்துங்கன் இசை நூல் – யாப்பெருங்கலக்காரிகை
  5. அறிவனார் – பஞ்சமரபு
  6. பரிபாடல்

இனக்கலைஞர்கள்

  1. பாணர் – ஆண் இசைக்கலைஞர்
  2. பாடினி – பெண் இசைக்கலைஞர்
  3. சிலப்பதிகார இந்திர விழவூரெடுத்த காதை இசைக்கருவிகள் வசிப்போரை வகைப்படுத்தி உள்ளது.
  4. சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை ஆகியன யாழ்ப்பணர் பற்றிய குறிப்புகளை தருகிறது.

 

சங்க இலக்கியமும் இசையும் (ஏழிசை, யாழ்வகை, இசைக் கருவிகள்)

  1. சங்க காலத்தில் நிலத்தை அடிப்பைடயாகக் கொண்டு இசைக்குப் பெயர்கள் சொல்லப்பட்டன.
  2. குறிஞ்சிப்பண், சாதாரி, மருதப்பன், செவ்வழிப்பன், பஞ்சுரப்பன் என இசைக்கப்பட்டன.
  3. திணைப்பயிரை உண்ண வந்த காட்டுயானை, குறிஞ்சிப் பண்ணை கேட்டு மெய்மறந்து நின்றதாக அகநானூறு கூறுகிறது.
  4. போரில் புண்பட்ட வீரரைப் பேய்களிடமிருந்து காப்பாற்ற காஞ்சிப்பண் பாடப்பட்டதாகப் புறநானூறு கூறுகிறது.
  5. யாழ் முலம் முலம் மருதப்பண்பாடி பொழுது வழ்ந்ததாக மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.

சிலம்பு இசையும்

  1. இசை ஆசிரியன், தண்ணுமை ஆசிரியன், வேய்ங்குழல் ஊதுவோன் என பலரும் மாதவி நாடக அரங்கில் ஆடலுக்குத் துணை நின்றனர்.
  2. முதல்நடை, வாரம், கூடை, திரள் என இசை வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
  3. அரங்கேற்றுக்காதை, ஆய்ச்சியர் குரவை, கானல்வரி முதலியவற்றில் இசைக்குறிப்புகள் உள்ளன.
  4. யாழ் அமைப்பு (ம) இசையின் அமைப்பு கூறப்பட்டுள்ளது.

 

  1. இசைக்கலையின் வளர்ச்சியில் பக்தி இயக்கத்தின் பங்களிப்பை ஆராய்க.

பக்தி இயக்கமும் இசையும்

  1. மாணிக்கவாசகர் தேவாரங்களைப் பண்சுமந்த பாடல் என்றார்.
  2. திருஞானசம்பந்தர் காணமல்போன எருமைமாட்டை, வேய்ங்குழல் ஊதி மீட்டதாக பாடுகிறார்.
  3. சுந்தரர் சிவனின் அருளை எண்ணி தம்மானை அறியாத என்னும் பதிகத்தைப் பாடியுள்ளார்.
  4. சேக்கிழார் சிவபெருமானைப் பற்றி கொல்லிப்பண்ணில் பதிகம் பாடியுள்ளார்.
  5. முதலாம் மகேந்திரவர்மனால் பொறிக்கப்பட்ட குடுமியான் மலை கல்வெட்டில் ‘சங்கீரணம்’ இசைபற்றிய குறிப்பு உள்ளது.

பல்லவர் காலத்தில் இசை

  1. முதலாம் மகேந்திரன், இராஜசிம்மன் இசை அறிஞராக விளங்கினர்.
  2. ஆழ்வார் (ம) நாயன்மார்கள் தமிழ் இசையை பரப்பினர்

சோழர் காலத்தில் இசை

  1. இசைக்கலைஞர்களுக்க பட்டமளித்தனர்
  2. தஞ்சைக் கோயிலில் மட்டும் 48 ஓதுவார்கள் இருந்துள்ளனர்.
  3. கம்பராமாயணம், பெரிய புராணத்திலும் இசைபற்றிய செய்திகள் உள்ளன.

 

பிற்காலத்தில் இசை

  1. தெலுங்கு இசை நுழைந்தது.
  2. தமிழறிஞர் சிலர் இசைநயம் வாய்ந்த நூல்களை இயற்றினர்
  3. திருக்குற்றாலக் குறவஞ்சி, முக்கூடற்பள்ளு, திருப்புகழ் குறிப்பிடத்தக்கவை.
  4. நாயக்கர் காலத்தில் கீர்த்தனை இடம்பெற்றது.
  5. தமிழிசைச் சங்கம் 1940ல் துவங்கப்பட்டது.

முடிவுரை:

இந்த நூற்றாண்டில் தமிழ்ப் பெரியார் சிலரின் முயற்சியால் தமிழிசை மீண்டும் வாழ்வு பெற்றது.

 

  1. தமிழர் இசைக்கருவிகள் பற்றி எழுதுக.

இசைக்கருவிகள்

  1. இசையின் இனிமைக்குத் துணை செய்பவை
  2. இசைக்கருவிகளை இசைத்துப்பாடல்பாடுவோர் – பாணர்

இசைக்கருவிகளின் வகைகள்

  1. தோல்கருவிகள்

விலங்குகளின் தோலால் மூடப்பட்டுச் செய்யப்படும் கருவி (எ.கா) உடுக்கை, குடமுழா, திமிலை, பறை, மத்தளம், முரசு, முழவு

 

  1. நரம்புக்கருவிகள்

நரம்பு (அ) தந்திகளை உடையவை

(எ.கா) யாழ், வீணை

 

  1. காற்றுக்கருவிகள்

காற்றை பயன்படுத்தி இசைக்கப்படுபவை (எ.கா) குழல், கொம்பு, சங்கு

 

  1. கஞ்சகக் கருவிகள்

ஒன்றோடொன்று மோதி இசைக்கப்படுபவை (எ.கா) சாலரா, சேகண்டி

 

  1. தோல்கருவிகள்

உடுக்கை

  1. இடை சுருங்கிய ஒரு கைப்பறை
  2. இதன் உடல் பித்தளையால் ஆனது
  3. வாய்ப்பகுதி ஆட்டுத்தோலால் ஆனது
  4. இருவாய்களையும் இணைக்கும் கயிறுகள் இடையில் கோக்கப்பட்டிருக்கும்
  5. வலதுவாயின் மீது தான் அடிப்பர்.
  6. இறைவழிபாடு, குறி சொல்லும் போது இசைக்கப் பெறும்

குடமுழா

  1. 5 முகங்களை உடைய முரசு வகையைச் சார்ந்தது
  2. ஒரு பெரிய குடத்தின் 5 வட்டவடிவ வாய்களுடன் அமைந்திருக்கும்
  3. நடுவில் உள்ளவாய் பெரியது
  4. ஒவ்வொன்றும் தோலால் மூடப்பட்டிருக்கும்
  5. பஞ்ச மகாசபதம் எனப்படுகிறது.

திமிலை

  1. பலாமரத்தினால் செய்யப்பட்டது.
  2. விலங்குத் தோலினால் கட்டப்பட்டுள்ளது.
  3. மணற்கடிகார வடிவில் அமைந்திருக்கும்

பறை

  1. விலங்குத் தோலால் இழுத்துக் கட்டப்பட்ட கருவி
  2. பழங்காலத்தில் செய்திகளை தெரிவிக்க பயன்பட்டது.
  3. தற்போது தப்பு எனப்படுகிறது.
  4. ஆகோட்பறை – பகைவர்களின் ஆநிரையைக் கவரும்போது

மத்தளம்

  1. இதன் நடுப்பகுதி பருத்தும், கடைப்பகுதி சிறுத்தும் காணப்படும்.
  2. மரத்தால் செய்யப்பட்டிருக்கம் இதன் வாய்ப்பகுதி வளையத்தில் தோல் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும்
  3. இது இருகைகளாலும் இசைக்கப்படுகிறது.
  4. இது முதற்கருவி எனப்படுகிறது.

முரசு

  1. தமிழர்கள் போர்த் துணையாகக் கொண்ட கருவி
  2. வகைகள் : படை, கொடை, மணமுரசு

முழவு

  1. ஒரே முகத்தை உடையது
  2. ஒரு பெரிய குடத்தின் வாயில் தோலை இழுத்துக்கட்டப்பட்ட கருவி
  3. இத்தோலில் ஒருவகைபசை மண்ணைத் தடவி முழக்குவர்.

 

  1. நரம்புக் கருவிகள்

யாழ்

  1. வேட்டுவர் இறுகக் கட்டிய தங்கள் வில்நாணில் உருவாக்கினர்.
  2. வில்லைப் போன்ற வளைவு, நரம்புகளால் ஆனது
  3. விரலால் வருடக்கூடிய கருவி
  4. நரம்புகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அமையும்
  5. பேரியாழ் -21 நரம்புகள், மகரயாழ் – 14 நரம்புகள் உடையது
  6. யாழின் வடிவமே பிற்காலத்தில் வீணையாக மாறியது

 

வீணை

  1. யாழ் போன்ற அமைப்புடையது
  2. 7 நரம்புகளை உடையது
  3. இடக்கை விரல்களால் நரம்புகளை அமுக்கியும் தேய்த்தும், வலக்கை சுண்டுவிரலால் கம்பிகளால் மீட்டியும் இசை எழுப்புவர்.
  4. இசையை அதன் குடம், தண்டு பாகங்கள் பெருக்கி அனுப்புகின்றன.

 

III. காற்றுக்கருவிகள்

குழல்

  1. வகைகள் : வேய்ங்குழல், புல்லாங்குழல்
  2. குழல் 7 சுரங்களை உண்டாக்குவதற்குரிய 7 துளைகளை உடையதாக இருக்கும்.
  3. இது சுமார் 20 விரல் நீளம் உடையது
  4. பயன்படும் மரங்கள்: மூங்கில், சந்தனம், செங்காலி, கருங்காலி

 

கொம்பு:

  1. இறந்த மாடுகளின் கொம்புகளை பயன்படுத்தி ஒலி எழுப்பினர்.
  2. இக்காலத்தில் பித்தளை (அ) வெண்கலத்தால் செய்யப்படுகின்றன.
  3. வேடர் இதனை வேட்டையின் போது ஊதுவர்
  4. கழனி மேடுகளில் காவல் புரிபவர்கள் விலங்குகள், கள்வரை விரட்ட
  5. காவல்காரரை விழித்திருக்கச் செய்யவும் கொம்பினை ஊதுவர்.

 

சங்கு

  1. இது ஒரு இயற்கைக் கருவி
  2. கடலில் இருந்து எடுக்கப்படும்
  3. வலம்புரிச்சங்கு – வலமாகச் சுழிந்து இருக்கும்
  4. கோயில் திருவிழா (ம) சமயபச்சடங்குகளின் போது இசைக்கப்படும்.

 

  1. IV. கஞ்சகக் கருவிகள்

சாலரா

  1. இது பித்தளை (அ) வெண்கலத்தால் செய்யப்பட்டு இருக்கும்
  2. உட்புறம் குவிந்து இருக்கும்
  3. இதனை ஒன்றோடு ஒன்று பொருத்தியும், விளிம்பின் மீது தட்டியும் தேவைக்கேற்ப இசைப்பர்
  4. வேறு பெயர் : பாண்டில்
  5. கோயில் வழிபாட்டின் போதும், இன்னிசை அரங்குகளின் மீதும் இசைக்கப்படும்

 

சேகண்டி

  1. வட்ட வடிவமான மணி வகையைச் சேர்ந்தது
  2. இதனை குச்சி (அ) இரும்புத் துண்டால் அடித்து ஒலி எழுப்புவர்
  3. இது தேவைக்கேற்பப் பல அளவுகளில் உருவாக்கப்படும்
  4. இது கோவில் வழிபாடு (ம) இறுதி ஊர்வலத்தின் போது உருவாக்கப்படும்

 

ஒவியங்கள்

  1. தஞ்சாவூர் ஒவியங்கள் இன்றளவும் போற்றப்படுவதற்கான காரணங்களை விளக்குக.

தஞ்சாவூர் ஓவியங்கள்

  1. இவை சோழர் காலத்தில் தோன்றியவை.
  2. மராட்டிய மன்னன் சரபோஜியின் காலத்தில் தஞ்சாவூரில் வளர்ச்சி பெற்றது.
  3. இவை தமிழகத்தின் புவிசார் குறியீடுகளில் ஒன்று.

அமைப்பு

  1. இவ்வகை ஓவியங்கள் பெரிய மரச்சட்டத்தின் நடுவே அமைந்து இருக்கும்
  2. இச்சட்டமும் ஒவியத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படும்.
  3. இதில் உருவங்கள் உருண்டையாகவும் பருமனான அமைப்புடனும் காணப்படும்.
  4. இதன் உருவ அமைப்புகளில் பெண்தன்மை மிகுந்த நளினத்துடன் காணப்படும்.

நிறங்கள்

  1. நீலம், பச்சை, மஞ்சள், வெள்ளை நிறத்தில் மைய ஒவியம் இருக்கும்.
  2. கரும்பச்சை, சிவப்பு, அடர்நீல நிறத்தில் பின்புலம் இருக்கும்.

கோடுகள்

  1. அடர்த்தியான கோடுகள் ஓவியத்தைத் தெளிவாகக் காட்டும் விதமாக அமைந்திருக்கும்.
  2. இவ்வுருவக் கோடுகள் வண்ணங்களுக்கான எல்லையாகவும் அமையும்.

 

  1. சித்தன்னவாசல் குகை ஓவியங்களைப் பற்றி குறிப்பெழுதுக.

சித்தன்ன வாசல் குகை ஓவியங்கள்

  1. தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  2. இவை கி.பி. 7 (ம) 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர் காலத்து ஓவியங்கள்
  3. இவை மூலிகைகளால் ஆன வண்ணங்களைக் கொண்டவை.
  4. சித்தன்ன வாசலின் ஏழடிப் பட்டம் பகுதியின் மேல்கூரைப் பகுதிகளிலும் ஓவியங்கள் காணப்படுகின்றன.
  5. இவை அஜந்தா ஒவியங்களுடன் சில ஒப்புமைகளை பெற்றுள்ளன.

 

கண்டுபிடிப்பு

  1. 1919ல் கோபிநாத்ராவ், துப்ராய் கண்டறிந்தனர்.
  2. முதலில் மகேந்திரவர்மன் காலத்தவை எனப்பட்டன.
  3. பின் மதுரை ஆசிரியர் இளம் கௌதமன் என்பவரால் வரைவிக்கப்பட்டதை அறியமுடிந்தது.
  4. ஸ்ரீவல்லபன் என்பார் இதனை புதுப்பித்தார்.

தாமரைக் குளம்

  1. இக்குகையின் நடுமண்டபத்தின் மேல் விதானத்தில் இது அமைந்துள்ளது.
  2. இத்தாடகத்தின் நீர்ப்பரப்பினைப் பசிய இலைகள் மறைத்துள்ளன.

3.அல்லி மலர்ந்துள்ளது. அன்னப்பறவை, அழகிய யானைகள் காணப்படுகின்றன.

  1. வெண்மீன்கள் நீந்தி விளையாடுகின்றன.
  2. கையிலே தாமரையைத் தாங்கிய கந்தர்வர்கள் இடம் பெறுகின்றன.

 

ஆடல் அணங்குகள்

  1. அர்த்த மண்டபத் தூண்களில் இரண்டு எழிலரசிகள் வரவேற்பது போல் உள்ளது.
  2. இவர்கள் பல்வேறு அணிகளை அணிந்துள்ளனர்.
  3. இது அமராவதி கலைப்பாணியை ஒத்துள்ளது.

 

அரசனும் அரசியும்

  1. வலப்புறத் தூணின் உட்பகுதியில் இவை அமைந்துள்ளன.
  2. இவை மகேந்திரப் பல்லவனும் அவன் மனைவியும் என கருதப்படுகிறது.
  3. அரசன் தலையில் மணிமாலையும், அரசியின் கூந்தலின் மேல் மருடமும் உள்ளது.
  4. இவர்களின் முகங்களில் அரச குடும்பத்தார்க்கு உரிய பெருமிதம் தெரிகிறது.

 

  1. தமிழரின் ஓவியக் கலையை விவரி.

முன்னுரை

‘ஒவ்வு’ என்ற வினைச்சொல்லில் இருந்து தோன்றியதே ஒவியம். (தமிழர்கள் எழுத்தால் உணர்த்தப்பட இயலாத இடைவெளிகளை ஓவியத்தால் நிரப்பினர்)

  1. சங்ககாலத்தில் ஓவியம்
  2. தமக்கு மகிழ்வளித்த வேட்டைக் காட்சிகளையும் பிறவற்றையும் ஓவியங்களாக் குகைகளில் தீட்டியுள்ளனர்.
  3. பச்சிலைச்சாறு, செம்மண், விலங்குகளின் கொழுப்பு கொண்டு அவ்வோவியங்களுக்கு வண்ணம் தீட்டினர்.
  4. ஒவியத்தை வட்டிகைச் செய்தி என இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
  5. சுவர் ஓவியங்கள் அதிகம் காணப்பட்டன.

 

 

  1. புனையா ஓவியம்
  2. வளைந்த கோடு, கோணக்கோடு, நேர்க்கோடு கொண்டு வரைந்த ஒவியங்களாகும்.
  3. (எ.கா) மடலேறுதலின் போது பனை ஓலையில் வரைந்த வரிவடிவ ஓவியம்
  4. குறிப்புகள் நெடுநல்வாடையில் காணப்படுகின்றன.

 

iii. புனைந்த ஒவியம்

புனையா ஓவியத்தில் பலவித வண்ணங்களைப் புனைந்து அமைக்கும் ஓவியம் குழு ஓவியமாகும்.

  1. முக்கியத்தகவல்கள்
  2. வட்டிகை – வண்ணங்களை குழைத்து வைக்கும் பலகை
  3. பிரதிமை – மக்கள் கூட்டத்தைக் காட்டும் ஒவியங்கள்
  4. பழமை – தெய்வ வடிவங்களைக் காட்ம் ஒவியங்கள்
  5. நடுகல்லின் மீது வீரனின் உருவம் வரையப்பட்டு செதுக்கப்பட்டது.
  6. மன்னர்கள் ஒவிய மாடப் பகுதியை அமைத்திருந்தனர்.
  7. நெடுஞ்செழியன் அரண்மனையில் சித்திர மாடம் இருந்தது.
  8. சங்க காலத்திற்குப்பின் (பல்லவர் காலம்)
  9. பல்லவர் காலத்தில் கலைகள் தழைத்து ஒங்கின.
  10. பனைமலை, காஞ்சிபுரம். திருமலை புரம் இடங்களில் பல்லவர்களது ஓவியங்கள் காணப்பட்டன.
  11. பனைமலை ஓவியம்
  12. இது அத்தியந்த காமனாகிய இராஜசிம்மன் கட்டியது கோயில்
  13. இங்குள்ள பார்வதியின் ஒவியம் சிறப்பான தாகும்.

vii. பாறை ஓவியங்கள்

  1. சுதையைச் சுவர்களின் மீது பூசி ஒவியங்கள் வரைந்தனர்.
  2. மமேந்திரவர்மன் பல குகைக் கோயில்களை அமைத்து, அதன் மீது ஒவியங்கள் வரைவித்தான்.
  3. சித்திரக்காரப் புலி எனப்பட்டார்.

viii. சித்தின்ன வாசல் குகை ஓவியங்கள்

  1. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது
  2. இவை கி.பி. 7 (ம) 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர் காலத்து ஓவியங்கள்
  3. இவை மூலிகைகளால் ஆன வண்ணங்களைக் கொண்டவை
  4. சித்தன்ன வாசலின் ஏழடிப்பட்டம் பகுதியின் மேல்உரைப் பகுதியிலும் ஓவியங்கள் காணப்படுகின்றன.

 

  1. சேரர் கால ஓவியங்கள்
  2. இது பல்லவ, பாண்டியக் கலைப்பாணியை ஒத்தது.
  3. திருநந்திக் கரை குகைக் கோயிலிலுள்ள மாபுருஷரின் ஒவியம் சிறப்பு வாய்ந்தது.
  4. சுவர் ஓவியங்கள் (பாண்டியர்கள்)
  5. கோப்பெருந்தேவியின் பள்ளியறைச் சுவர் ஓவியங்கள் இலக்கியங்களில் காணப்படுகிறது.
  6. பாண்டியன் சித்திர மாடத்துஞ்சிய நன்மாறன் எனப்பட்டான்.
  7. திருப்பரங்குன்ற கோயில் மண்டபத்தில் “ஏழு தொழில் அம்பலம்” என்ற பெயரில் ஒவியச்சாலை இருந்ததை பரிபாடல் மூலம் அறியலாம்.
  8. துகிலோவியம்
  9. துணிகளில் ஒவியம் வரையப்பட்டன.
  10. இளங்கோவடிகள் ஓவியம் வரையப்பட்ட துணியை ஓவிய எழினி என்றார்.

xii. சோழர் கால ஒவியங்கள்

தஞ்சாவூர் ஓவியங்கள்

  1. இவை சோழர் காலத்தில் தோற்றம் பெற்றன.
  2. தமிழகத்தின் புவிசார் குறியீட்டை பெற்றது.
  3. பெரிய மரச்சட்டத்தின் நடுவில் அழகிய உருவங்கள் வரையப்பட்டன.

xiii. விஜய நகரத்தார் காலம்

காஞ்சி, காளத்தி, குடந்தை, திருவரங்கம், திருப்பதி, திருவண்ணாமலை, ஆரூர், ஒமனூர் இடங்களில் இக்காலத்து ஒவியங்களை காணலாம்.

முடிவுரை:

தற்காலத்தில் எண்ணெய், வண்ணக்கோல், செயற்கை வண்ணம், நீர்வண்ணம், மை, பூச்சு, மெழுகு என பலவகைகளில ஒவியங்கள் கிடைக்கின்றன.

 

சிற்பக் கலை

  1. பல்லவர் காலச்சிறபத்திற்கும் சோழர்காலச் சிறபத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

வ.எண்

பல்லவர் காலம்

சோழர் காலம்

1

இது கோயில் சிற்பக் கலையின்

தொடக்க காலம்

இது பல்லவர் சிற்பங்களின் காலச் வளர்ச்சியுற்ற நிலை ஆகும்.

2

மகேந்திரவர்மன் காலத்தில் துவாரபாலகர்கள் உருவங்கள் புடைப்புச்சிறப்பாக அமைக்கப்பட்டன.

உயர்ந்த புடைப்புச்சிற்பம் (ம) முழு உருவச்சிற்பம் அமைக்கப்பட்டன.

3

ஒற்றைக்கல் ரதங்கள் தனித்துவமானவை

உயரமான மகுடங்கள், மெல்லிய நெடிய வலமைப்பு சிறப்பம்சமாகும்

4

கருவறை சிற்பங்கள் மரம் (அ) சுதையால் ஆனவை

சிற்பங்கள் அணிகலன்கள் (ம) அலங்காரங்கள் மிகுந்து காணப்பட்டன.

5

மாமல்லபுரச் சிற்பம் சிறப்பு வாய்ந்தது.

தஞ்சாவூர் நந்திச்சிலை சிறப்பு வாய்ந்தது.

6

குடைவரைக்கோயில் (ம) ஒற்றைக்கல் ரதங்கள் மிகுதி

பெரும்பாலும் கட்டுமானக் கோயில்களே கட்டப்பட்டன.

7

செங்கல்லாலும் கோயில்கள் கட்டப்பட்டன.

கற்றளிகள் மட்டுமே உண்டு

8

கோயிலில் லிங்கம், சோமாஸ்கந்தர் சுதைச் சிற்பங்கள் உண்டு.

லிங்கம் மட்டுமே இடம் பெறும்

9

துவாரபாலகர்கள் இரண்டு கைகளுடன் நேராக நிற்பர்

நான்கு கைகளுடன் தலையைச் சாய்த்து நிற்பர்

10

மதிலை ஒட்டி சிறுகோயில்கள் இருக்கும்

அத்தகைய சிறுகோயில்கள் இல்லை

11

விமானம் அதிக உயரம் இருக்காது

உயரம் 216 அடிவரை செல்லும்

12

தூண்கள் சிங்க முகத்துடன் இருக்கும்

பூமுனைப்புத்தலைப்பு இருக்கும்

13

மகா மண்டபங்கள் கிடையாது

நூற்றுக்கால் மண்டபங்கள் உண்டு

14

தேவிக்குத் தனிக்கோயில் இல்லை

அம்மனுக்குத் தனிச்சன்னதி உண்டு

15

கோபுரங்கள் கட்டத் தொடங்குதல்

கோபுரங்கள் நன்கு வளர்ச்சி அடைதல்

 

  1. யவன (ம) இந்தியச் சிற்பங்களை ஒப்பிடுக.

வ.எண்

யவன சிற்பம்

இந்தியச் சிற்பம்

1

கிரேக்க நாட்டைச் சார்ந்த கலை

இந்திய நாட்டைச் சார்ந்த கலை

2

உள்ளதை உள்ளபடி காட்டும் உருவங்கள் 

அதிகளவில் கற்பனை உருவங்கள்

3

சிறிய உருவம் 

பெரிய உருவம் 34 அடிகள், 68 அடிகள்

4

இயற்கையோடு இணைந்த உடல் அமைப்பு

இயற்கையோடு இணைந்த உடல் அமைப்பு இல்லை

5

தெய்வசிலைகள் மனித இயல்போடு காணப்பட்டன.

2, 4, 8, 16 கைகளுடன் காணப்பட்டன. 4 – அறம், பொருள், இன்பம், வீடு, 8 – இறைவன் எட்டு திசைகளில் நிறைந்தவன்

6

சிற்பத்தின் பொருள் அழகை மட்டும் காட்டுவது

உணர்வுகளோடு தத்துவக் கருத்துக்களை காட்டுவது

7

மனித அழகை பொருத்தி தெய்வ சிலைகள் வடிவமைக்கப்பட்டது.

அழகுணர்வோடு நின்றது

8

உள்ளதை உள்ளபடி காட்டின

தத்துவ உணர்வுகளை காட்டின

  1. செப்புத் திருமேனிகள் பற்றி குறிப்புத்தருக.

செப்புத் திருமேனிகள்

  1. சோழர் காலமே செப்புத்திருமேனிகளின் பொற்காலம்
  2. உலோகச் சிற்பங்கள் இருந்ததற்கான செய்தியை மதுரைக்காஞ்சி, குறுந்தொகை, பட்டினப்பாலை மூலம் அறியலாம்.
  3. விஜயாலயன், பராந்தகன், செப்பியன் மாதவி முதலாம் ராஜராஜன் முக்கிய பங்களித்தனர்.
  4. நடராஜர் சிலை சிறப்பு வாய்ந்தது.
  5. சோழர்கள் செப்புத்திருமேனிகளை கோயில்களுக்கு நன்கொடையாக தந்துள்ளனர்.

திருமேனிகள் செய்யும் முறை

  1. இவை பஞ்சலோகத் திருமேனிகள் எனப்படுகின்றன.
  2. இவை 5 உலோகக் கலவையால் செய்யப்பட்டவை
  3. இவை இருமுறைகளில் செய்யப்படுகின்றன.

தேன் மொழிக்கு முறை

  1. முதலில் உருவம் மெழுகினால் செய்யப்படும்
  2. அதன் மீது புற்றுமண் பூசி உலரவைப்பர்
  3. அதன் தலை, இடை, கால்பகுதிகளில் துளை இருக்கும்.
  4. உலர்ந்த படிவத்தை தீயினால் சுட, மெழுகு இருந்த பகுதி அச்சாக மாறும்.
  5. இதில் செம்பு, பித்தளை, வெள்ளி, தங்கம், வெண்கலம் கலந்து உருக்கி நிரப்பி, பின் குளிர வைப்பர்.
  6. வார்ப்பினை வெளியே எடுத்து, சிற்றுளி கொண்டு நுட்ப வேலைகளைச் செய்வர்.

பொள்ளல் உருவமுறை:

  1. முதலில் மண்ணைப் பிடித்து, அதன் மேல் மெழுகால் உருவத்தை அமைப்பர்.
  2. அதன் மேல் மீண்டும் மண் பூசப்படும்
  3. இதனை தீயிலிட உள்ளே, வெளியே உள்ள மண் மட்டும் எஞ்சும்
  4. இவ்வச்சில் உலோகத்தை உருக்கி ஊற்ற, பொள்ளல் உருவம் கிடைக்கும்.

 

  1. தமிழரின் சிற்பக்கலையை விவரி. (or) தமிழ் நாட்டுச் சிற்பங்கள் கலைநயம்மிக்கனவாகவும் வரலாற்றுப் பதிவுகளாகவும் இருப்பதை நிறுவுக.

தமிழரின் சிற்பங்கலை

முன்னுரை

  1. புடைப்புசிற்பம் – கல், மரம், சவர், பலகை போன்றவற்றில் புடைப்பாக உருவத்தின் முன்புறம் மட்டும் தெரியும்படி அமைக்கப்படும் சிற்பம்
  2. தனிச்சிற்பம் ஓர் உருவத்தின் முன்புறமும் பின்புறமும் முழுவடிவமாக வடித்தல்
  3. பிரதிமைகள் – தனிப்பட்ட ஒருவரின் உருவ அமைப்பை உள்ளது, உள்ளவாறே வடிப்பது

 

பல்லவர் காலம்

  1. மகேந்திரவர்மன் காலக்கோயில்களில் துவார பாலகர்கள் புடைப்புச்சிற்பங்களாக உள்ளன.
  2. கருவறையில் உள்ள சிற்பங்கள் மரம் (அ) சுதையால் ஆனவை.
  3. கற்சிற்பங்களை தொடங்கி வைத்தனர்.
  4. பாறைக்குடைவரைக் கோயில்கள், ஒற்றைக்கல் ஒற்றைக்கல் ரதங்கள், கட்டுமானக் கோயில்கள் என அனைத்திலும் சிற்பங்கள் காணப்படுகின்றன.
  5. மாமல்லபுரத்தில் பகீரதன் தவம் சிற்பத்தொகுதி சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
  6. காஞ்சி கைலாசநாதர் (ம) வைகுந்தப் பெருமாள் கோயில்களில் சிற்பங்கள் காணப்படுகின்றன.

 

பாண்டியர் காலச்சிற்பங்கள்

  1. குகைக்கோவில்களில் சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.
  2. இதனை திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம் முதலிய கோவில்களில் காணலாம்.
  3. கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்கள் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சோழர்காலச் சிற்பங்கள்

  1. கற்சிற்பங்கள் சோழர் காலத்தில் வளர்ச்சி பெற்றன.
  2. முதலாம் ராஜராஜனின் தஞ்சை பெரியக்கோயில் முதலாம் ராஜேந்திரனின் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் சிறப்பு வாய்ந்தது.
  3. இரண்டாம் ராஜராஜனின் தாராசுரம் ஜராதீஸ்வரர் கோயில், மூன்றாம் குலோத்துங்களின் வீரேசுரம் கோயில் சோழர் காலச் சிற்பக்கலையின் கருவூலமாகும்.
  4. தஞ்சைப் பெரிய கோயிலில் 14 உயரமுள்ள வாயிற் காவலர் உருவங்களும், இந்தியாவின் இரண்டாவது பெரிய நந்தி சிற்பமாகும்.
  5. கங்கை கொண்ட சோழபுரம் – ஒரே கல்லால் ஆன நவக்கிரகம், சிங்கமுகக் கிணறு.
  6. நார்த்தாமலை – நடனிமுத்திரை சிற்பங்கள்
  7. கொடும்பாளூரில் இரண்டாம் பராந்தகனால் அமைக்கப்பட்ட மூவர் கோவில் சிற்பங்கள்
  8. திருவரங்கக் கோவில் சிற்பங்களின் முகபாவனைகள் சிறப்பு வாய்ந்தவை. 9. சோழர்காலம் செப்புத்திருமேனிகளின் பொற்காலமாகும்.

 

விஜயநகர காலச்சிற்பங்கள்

  1. கோவில்களில் மிக உயர்ந்த சிற்பங்கள் அமைக்கப்பட்டன.
  2. அதில் ஏராளமான சிற்பங்கள் இடம் பெற்றன.
  3. தெலுங்கு, கன்னடச் சிற்பக்கலையின் தாக்கம் காணப்பட்டது.
  4. ஆடை, அணிகலன்கள் அணிந்த நிலையில் சிற்பங்கள் அமைக்கப்பட்டன.
  5. கோவில் மண்டபங்களில் சிற்பத்தூண்கள் அமைக்கப்பட்டன.
  6. குதிரையின் உருவங்கள் சிற்பங்களில் இடம் பெற்றன.
  7. இசைத் தூண்களும் அமைக்கப்பட்டன.

 

நாயக்கர் காலச்சிற்பங்கள்

  1. ஆயிரம் கால மண்டபங்கள் பல இடங்களில் அமைக்கப்பட்டன.
  2. இதில் அழகிய சிற்பங்களைச் செதுக்கினர்.
  3. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மண்டபத் தூண்களில் கண்ணப்பர், குறவன் – குறத்தி, அரிச்சந்திரன் சந்திரமதி சிற்பங்கள் அழகானவை.
  4. பேரூர் சிவன் கோயில் சிற்பங்களில் விழியோட்டம், புருவநெளிவு, நக அமைப்பு கலை நயத்துடன் காணப்படும்.
  5. இராமேஸ்வரம், திருநெல்வேலி நெல்லையப்பர், கிருஷ்ணாபுரம் பெருமாள் கோயில் சிற்பங்கள் கலைநயம் மிக்கவை.

முடிவுரை:

சிற்பங்கள் தெய்வங்களாகப் போற்றி வணங்க (ம) ஏனைய உருவங்களை கண்டு களிப்பதற்கும் மட்டுமல்ல, இவை வரலாற்றுப் பதிவுகளாகும்.

 

  1. மாமல்லபுரத்தின் சிறப்புகளை எழுதுக.

மாமல்லபுரம் காலம் 700 – 728

  1. இரண்டாம் நரசிம்மன் காலத்தவை
  2. ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபங்களும் கட்டப்பட்டுள்ளன.
  3. இது தமிழ் – திராவிட கோவில் கட்ட கலைக்கு எடுத்துக் காட்டாகும்
  4. 1984ல் யுனஸ்கோ அங்கீகாரம் பெற்றது
  5. இக்கோயில் மூன்று கருவறைகளை உடையது

பஞ்சபண்டவர் ரதம்

  1. திரௌபதி, தர்மராஜா, பீமன், அர்ச்சுனன், நகுலன் – சகாதேவன் ரதங்கள்
  2. 5 ரதங்களும் ஐந்து வகையான கோவில்கட்டட கலை பாணியை உயர்த்துகின்றன.

சிறப்பம்சம்

குடைவரை, கட்டுமானம், ஒற்றைக்கல் கோயில்கள் புடைப்புச் சிற்பங்கள் என 4 வகைகளும் காணப்படும் ஒரே இடம் மாமல்லபுரம்

மாமல்லபுரத்தின் முக்கிய இடங்கள்

  1. அர்ச்சுனன் தபசு 2. கடற்கரைக்கோயில்
  2. மஞ்சபாண்டவர் ரதம் 4. ஒற்றைக்கல் யானை
  3. குகைக்கோயில் 6. புலிக்குகை
  4. திருக்கடல்மல்லை 8. கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து
  5. கலங்கரை விளக்கம்

பகீரதன் தவம்

  1. கங்கை பூமிக்கு வர மகீரதன் சிவபெருமானை நோக்கித் தவம் இருக்கும் காட்சியும்
  2. அந்த தவத்தின் பயனாகக் கங்கை பூமிக்கு வரும் நிகழ்வையும் பாறைப் பகுதியில் வடிவமைத்து உள்ளனர்.

கோவர்த்தன மலை மண்டபம்

  1. மண்டபத்தின் அருகில் 96 அடி அகலமும், 43 அடி உயரமும் கொண்ட பாறை உள்ளது.
  2. இப்பாறையின் இடையில் இயற்கையாகவே கீழ் நோக்கிய பள்ளம் காணப்படுகிறது.

முக்கிய பகுதிகள்

  1. மகிஷாசுர மர்த்தினி, மும்மூர்த்தி, வராகர்மண்டபம் பிரபலமான மண்டபங்களாகும்.
  2. திறந்த வெளிக் கலையரங்கம் உள்ளது.
  3. பெரும்பாறையின் சுவற்றில் பேன் பார்க்கும் குரங்கு, பெரிய வடிவிலான யானைகள், தவமிருக்கும் பூனை ஆகிய நுண்ணியச் சிற்பங்கள் அழகானவை.
  4. கடற்கரைக்கோயில் பாறையில் செதுக்கப்பட்ட 5 அடுக்குகளைக் கொண்டது.

 

 

 

 

 

கட்டிட கலை

  1. சோழர்காலக் கோவில் – விஜய நகரக் கட்டிட கலைக்கும் உள்ள வேறுபாடுகளை ஒப்பிட்டு ஆய்க.

வ.எண்

சோழர்கால கட்டிடகலை

விஜயநகர கட்டிடகலை

1

விஜயாலய சோழன் முதல் மூன்றாம் ராஜராஜன் வரை

சோழர் கட்டடக்கலையின் தொடர்ச்சி

 

2

கருங்கற்கோயில்கள் கட்டினர்

கருங்கற்கோயில்கள் கட்டவில்லை

 

3

பல புதிய கோயில்கள் கட்டினர்

கோயில்கள் பழுது, விரிவு, சிறுகோயில்கள் கட்டுதல்

4

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கங்கை கொண்ட சோழபுரம் சிறப்பு வாய்ந்தவை

திருமலை நாயக்கர் மஹால் சிறப்பு வாய்ந்தவை

5

செப்புத் திருமேனிகளின் பொற்காலமாகும்.

செப்புத் திருமேனிகள் செய்யவில்லை

6

அழகிய வேலைப்பாடுடன் கோயில்கள் அமைப்பு

நுட்பமான அலங்கார வேலைப்பாடுகள் அமைப்பு

7

விமானங்கள் பெரியவை

விமானங்கள் சிறியவை

8

புதிய கோயில்கள் பிரம்மபுரிசுவரர் கோயில் எலும்பூர் கடம்பவனேசுவரர் கோயில்

புதுப்பித்தவை ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோயில், ஸ்ரீரங்கம் நடராஜர் கோயில்

9

கோயில் மண்டபங்கள், அர்த்த மண்டபம், கருவறை

ஆயிரங்கால மண்டபங்கள் கட்டப்பட்டன. (எ.கா) மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

10

கோபுரங்கள் கட்டப்பட்டன

கோபுரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தனர். (எ.கா) திருவண்ணாமலை

11

நுழைவாயில்கள் கட்டப்பட்டன.

நான்கு புறமும் நுழையக்கூடிய அளவில் நுழைவு வாயில்

 

  1. திரு.மயிலை சீனி, வெங்கடசாமி குறிப்பிடும் 7 வகை கோயில்கள் யாவை?
  2. ஆலிக்கோயில்
  3. இது ஆனைக்கோயில் என்பதன் மரூஉ
  4. யானையின் முதுகுபோல் இதன் கூரை உள்ளது
  5. திருக்கச்சூர், திருவெற்றியூர், வட திருமுல்லைவாயில், திருவேற்காடு இடங்களிலுள்ள கோயில்கள் இவ்வகையைச் சார்ந்தவை.

 

 

  1. இளக்கோயில்
  2. பழைய கோயில்களைப் புதுப்பிக்கும்போது அதனருகே அமைக்கப்பட்ட கோயில்
  3. இறைவனை இதில் எழுந்திருளச் செய்வர்
  4. வேறுபெயர் – பாலாலயம்
  5. கடம்பூர், மாமல்லையிலுள்ள திரௌபதி இரதமும் இவ்வகையைச் சார்ந்தவை
  6. கரக்கோயில்
  7. வட்டமான விமானம் உடையது
  8. இது விஜயம் என்னும் வகையைச் சார்ந்தது
  9. காட்டுமன்னர் கோயிலுக்கு அண்மையில் உள்ள மேலைக்கடம்பூர் கோயில் இவ்வகையைச் சார்ந்தவை.
  10. ஞாழற்கோயில்
  11. ஞாழல் மரத்தினால் அமைந்த கோயில்
  12. இது கோயில் வகைகளில் ஒன்று
  13. திருப்பாதிரிப் புலியூர்த் திருக்கடை இவ்வகையைச் சார்ந்தவை
  14. கொகுடிக்கோயில்
  15. கொகுடி என்னும் மரத்தால் அமைந்த நூல்
  16. இதன் அமைப்பினைத் திட்டமாகக் கூற இயலவில்லை
  17. கருப்பறியலில் உள்ள கோயில் இவ்வகையைச் சார்ந்தவை
  18. மணிக்கோயில்
  19. இதன் அமைப்பு தெளிவாகத் தெரியவில்லை
  20. இது 6 (அ) 8 பட்டை விமான அமைப்பு உடையதாக இருக்கலாம்
  21. இது ஸ்கந்த வகையினதாக இருக்கலாம்
  22. பெருங்கோயில்
  23. இது மாடகக்கோயில எனப்படுகிறது.
  24. இவை செய்குன்றுகளின் மேல் அமைக்கப்பட்டவை
  25. இவை யானைகள் ஏறாவண்ணம் உயரமாகக் கட்டப்பட்டவை
  26. நன்னிலம், குடவாயில், வைகல் கோயில்கள் இவ்வகையைச் சார்ந்தவை
  27. தமிழரின் கட்டடக்கலை வளர்ச்சியை விவரிக்க.

கட்டக்கலை

  1. முன்னுரை

சங்ககாலம் தொட்டே முறையாகக் கட்டடங்களை அழகுற அமைப்பதற்கான மனைநூல்கள் இருந்தன. இதனை நூலோர் சிறப்பின் முகில் தோய் மாடம் என இளங்கோவடிகள் கூறுகிறார்.

 

 

  1. சங்ககாலக் கட்டடக்லை
  2. பழங்காலத்தில் கோயில்கள் மரத்தினால் கட்டப்பட்டன. (எ.கா). சிதம்பரம் நடராசர் கோயில்
  3. கி.பி. 6ம் நூற்றாண்டிற்கு முற்பட்டவை அனைத்தும் செங்கற்களால் கட்டப்பட்டன.

குடைவரைக் கோயில்கள்

  1. பெரிய பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டவை.
  2. இவை கருவறை, முன்மண்டபம், தூண்கள் என அமைப்பைக் கொண்டிருந்தன.
  3. விழுப்புரத்திலுள்ள மண்டகப்பட்டு முதல் குடைவரைக் கோயில் மகேந்திரவர்மன் காலத்தவை.
  4. முற்காலப் பாண்டியர்களை பிள்ளையார் பட்டியில் குடைவரைக் கோயில் அமைந்தனர்.

 

கோயில்களில் திராவிடக் கட்டிடக்கலைப் பாணி என்றால் என்ன? அதன் சிறப்பியல்கள் யாவை?

1.சுற்றுச்சுவர், 2. விமானம், 3.கோபுரம், 4. துவாரபாலகர் சிலை, 5. துணை கோயில்கள், 6. பல்லவ, பாண்டிய சோழ, விஜயநகரம் , 7. நீர்நிலைகள் ஏற்படுத்துதல், 8.கர்ப்பகிரகம் அமைத்தல், 9. மண்டபம் அமைத்தல், 10. சிகரங்களில் சிற்ப வேலைப்பாடுகள்

கற்றளிகள்

  1. கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிச் சுண்ணம் சேர்க்காமல் கட்டப்படும் கட்டடங்களுக்குக் கற்றளிகள் என்று பெயர்.
  2. இது 7ம் நூற்றாண்டில் நரசிம்மவர்மன் காலத்தில் துவங்கப்பட்டது.
  3. மாமல்லபுரம், காஞ்சிபுரம், பனைமலை ஊர்களில் உள்ள கோயில்கள் இவ்வகையைச் சார்ந்தது.

திராவிடக் கட்டடக்கலை

  1. நகரம் – சிகரத்தின் அமைப்பானது 4 பக்கங்களைக் கொண்டு சதுரமாக அமைந்திருக்கும் இது வட இந்தியக் கட்டடக்கலையாகும்.
  2. வேசரம் – சிகரம் வட்ட வடிவமாக இருப்பின் அந்த விமானம் வேசரமாகும். இவை பௌத்த சமயக் கட்டக்கலையாகும்.
  3. திராவிடம் – சிகரமானது 8 பட்டை அமைப்புடன் கூடிய விமானம் இது தென்னிந்தியக் கோயில்கள்

விமானம்:

  1. இது 6 உறுப்புகளை உடையது
  2. அதிட்டானம், பித்தி, பிரஸ்தரம், கண்டம், சிகரம், ஸ்தூபி ஆகியன.

கோபுரம்

  1. சுற்றுப்புறச் சுவரின் ஊடறுத்துச் செல்லும் நுழைவு வாயிலின் மேல் கட்டப்பட்டது.
  2. கோபுரத்தின் உச்சியில் கலசங்கள் இருக்கும்
  3. ராஜசிம்மன் காலத்தில் கட்டப்பட்ட காஞ்சி கைலாசநாதர் கோயிலில் தான் முதன் முதலாகச் சிறுகோபுரம் அமைக்கப்பட்டது.

 

  1. பல்லவர் காலக் கட்டக்கலை (கி.பி. 600 – 850)
  2. பெரிய பாறையைக் குடைந்து குடைவரைக் கோயில்களை கட்டினர்.
  3. இவை கருவறை, முகமண்டபம், தூண்கள் என்ற அமைப்பை பெற்று இருந்தன. 
  4. விழுப்புரத்திலுள்ள மண்டகப்பட்டு முதல் குடைவரைக் கோயில் இது மகேந்திரவர்மன் காலத்தவை.
  5. பாறைகளை மேலிருந்து படிப்படியாகக் கீழே செதுக்கி கோயில்கள் அமைக்கப்பட்டன.
  6. மாமல்லபுரத்தின் மகிசாசுர மர்த்தினி கோயில் வகை
  7. சாளுவன் குப்பத்தில் உள்ள குகைக் கோயில் – புலிக்குகை எனப்படுகிறது.
  8. மண்டகப்பட்டு, பல்லாவரம், மாமண்டூர், வல்லம், மகேந்திரவாடி, சீயமங்களம், தளவானூர், திருச்சி பகுதிகளில் காணப்படுகின்றன.
  9. ஒற்றைக்கல் ரதங்கள் மாமல்லனால் உருவானது
  10. காஞ்சி கைலாசநாதர் கோயில் – ராஜசிம்மனால் உருவாக்கப்பட்ட கட்டுமான கோயிலாகும்.
  11. காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோயில் – நந்திவர்மன் கலைபாணியைச் சார்ந்தது.

பாண்டியர் காலக் கட்டிடக்கலை (கி.பி 600 – 850)

  1. பல்லவர்கள் தமிழகத்தின் வடபகுதியை ஆட்சி செய்தபோது, தென்பகுதியை பாண்டியர்கள் ஆட்சி புரிந்து வந்தனர்.
  2. செழியன் சேந்தன் காலம் முதல் வீரபாண்டியன் காலம் வரை பலர் கட்டிக்கலைக்கு பங்காற்றினர்.
  3. குடைவரைக் கோயில்கள் – பிள்ளையார்பட்டி, மலையடிக்குறிச்சி, ஆனைமலை திருப்பரங்குன்றம், குன்றக்குடி, திருமயம், குடுமியான்மலை, சித்தன்னவாசல், மகிபாலன்பட்டி, பிரான்மலை, அழகிய பாண்டியபுரம், மூவரை வென்றான்.
  4. ஒற்றைக்கல் கோயில்கள்
  5. (எ.கா): கழுகுமலை வெட்டுவான் கோயில்
  6. இது மலையின் மேலிருந்து கீழ் நோக்கி குடைந்து அமைக்கப்பட்டுள்ளது.

iii. இது தென்னகத்து எல்லோரா எனப்படுகிறது.

  1. கட்டடக்கலை கோயில்கள்

(எ.கா): திருப்பத்தூர் திருக்கற்றளிநாதர் கோயில்

 

சோழர்கால கட்டிடக்கலை (கி.பி 1100 – கி.பி 1350)

  1. பிற்காலச் சோழர்கள் காலம் பொற்காலமாகும்.
  2. விஜயாலயசோழன் – நார்த்தாமலைக்கோயில் (புதுக்கோட்டை மாவட்டம்)
  3. ஆதித்த சோழன் – காவிரி ஆற்றின் இருபக்கங்களிலும் கற்கோவில்கள்
  4. பராந்தக சோழன் – எலும்பூர் கடம்பவனேசுவரர் கோயில் பிரம்மபுரீசுவரர் கோயில்
  5. இராஜராஜசோழன் – தஞ்சைப் பெரியகோயில் (தென்னகத்தின் மேரு)
  6. ராஜேந்திர சோழன் – கங்கைகொண்டசோழபுரம்
  7. தாராசுரம் – இரண்டாம் ராஜராஜன்
  8. திரிபுவனம் கோயில் – மூன்றாம் குலோத்துங்க சோழன் (கம்பகேசுவரர்) – 126 அடி உயரம்
  9. சிறப்பு – கற்கோயில்கள், கட்டடக்கலைபாணி, உயரமான விமானம்
  10. செப்புத்திருமேனிகள் கோயில்களில் இடம் பெற்றன.

விஜயநகர கால கட்டிடக்கலை 1350 – 1600

  1. கட்டிடக்கலையில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டன.
  2. நுட்பமான அலங்கார வேலைப்பாடுகள் சிறப்பானது
  3. இக்காலத்து கோயில்களில் விமானங்கள் சிறியதாகவும் கோபுரங்கள் உயரமாகவும் அமைக்கப்பட்டன.
  4. கோபுரங்கள் – திருவண்ணாமலை, மதுரை, இராமேஸ்வரம்

நாயக்கர்கால கட்டிடக்கலை

  1. இவை விஜயநகரக் காலக் கட்டிடக்கலையை பின்பற்றியே எழுந்தது.
  2. நூறுகால் (ம) ஆயிரம்கால் மண்டபங்கள் எழுப்பப்பட்டன.
  3. கோபுரம் அமைத்தல், பிரகாரம், தெப்பக் குளங்கள் அமைக்கப்பட்டன.
  4. திருமலை நாயக்கர் மகால் சிறப்பு வாய்ந்தது.
  5. இராமநாதசாமி கோயில் ஆயிரங்கால் மண்டபம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், புதுமண்டபம், திருச்சி மலை மீதுள்ள மீதுள்ள தாயுமானவர் கோயில் சிறப்பானவையாகும்.

முடிவுரை

தமிழர் கட்டிடக்கலையின் நெடிய வரலாறு தமிழர் தம் மழைமையையும் வளமையையும் உலகிற்குப் பறைசாற்றுகின்றன.

 

  1. தட்சிண மேரு பற்றி குறிப்பு வரைக.

தட்சிணமேரு

  1. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் இவ்வாறு அமைக்கப்படுகிறது.
  2. இது தென்னகத்தின் மேரு எனப்படுகிறது
  3. இதனை கட்டியவர் முதலாம் ராஜராஜன்
  4. இது சோழர்கால கட்டுமானக் கோயிலாகும்

சிறப்புகள்

  1. கருங்கற்கலால் கட்டப்பட்டவை
  2. விமானம் 216 அடி உயரம் உடையது
  3. விமானம் 13 அடுக்குகளை கொண்டது
  4. முதல்வாசல் – கேரளாந்தகன் திருவாசலாகும்
  5. இரண்டாம் வாசல் – ராஜராஜன் திருவாசலாகும்
  6. உச்சியில் எண் கோண வடிவிலான சிகரம் உள்ளது.
  7. இது 80 டன் எடை உடையது.
  8. 1987 ல் யுனஸ்கோ இதனை உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.
  9. இக்கோயிலின் புத்தர் சிற்பம் (ம) சமணர் உருவங்கள் உள்ளன.
  10. இக்கோவில் 1003 ல் துவங்கி 1010 ல் கட்டி முடிக்கப்பட்டது.
  11. மதில் சுவரின் உட்பக்கத்தில் மூலைக்கு ஒன்றாக 4 சிறு கோயில்கள் உள்ளன.
  12. சதுரமான இதன் கருவறையின் பக்கம் 45 அடி நீளம் உடையது.

நந்தி சிலை

  1. இக்கோயிலின் நந்தி சிற்பம் இந்தியாவில் உள்ள நந்திச்சிற்பங்களில் 2வது பெரிய சிற்பமாகும்.
  2. இதன் உயரம் – 12 அடி
  3. நீளம் x அகலம் 19.5 அடி × 8.25 அடி
  4. கோயிலுக்கு முன் நந்தி படுத்த நிலையில் உள்ளது.

 

  1. திருமலை நாயக்கர் மஹால் பற்றி எழுதுக.
  2. 1636 ல் கட்டப்பட்டது
  3. இது இத்தாலிய (ம) ராஜ்புத்பாணியில் அமைந்துள்ளது.
  4. இது மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தென் கிழக்கில் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
  5. திராவிட – ராஜஸ்தானி கலவை
  6. கட்டியவர் – திருமலை நாயக்கர்
  7. வடிவமைத்தவர் – இத்தாலியகட்டிட கலைஞர்

தூண்கள்

  1. உயரம் – 82 அடி
  2. அகலம் 19 அடி
  3. குவிமாடம் – 60 – 70 அடி உயரம்

பயன்படுத்திய பொருட்கள்

  1. செங்கல்
  2. சுண்ணாம்பு
  3. வெள்ளைக்கரு – முட்டை

ஒலி — ஒளி நிகழ்ச்சிகள்

  1. சிலப்பதிகார கதை

 

  1. ராமேஸ்வரம் கோயில் பற்றி விளக்குக.
  2. இராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதிகள்
  3. ராமநாதசுவாமி இங்குள்ளது
  4. உலகிலேயே மிகவும் நீளமான பிரகாரங்கள் உள்ளன.
  5. இக்கோவில் 3 பிரகார சுற்றுகளை உடையது
  6. கோவிலின் வெளிப்பிரகாரம் 7 மீ உயரம்
  7. வெளிப்பிரகாரத்தின் கிழக்கு – மேற்குப் பிரகாரங்கள் 120 மீ நீளம்
  8. வடக்கு – தெற்கு பிரகாரங்கள் 195 மீ நீளம்
  9. வெளிப்பிரகாரத்தை 120 க்கும் மேற்பட்ட தூண்கள் தாங்கி நிற்கின்றன.
  10. இத்தூண்களில் பெரும்பாலானவை அலங்கார வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளன.
  11. மூன்று பிரகாரங்களில் உட்புற பிரகாரம் மிகவும் பழமையானது

 

  1. ஆலயத்தை எவ்வாறு மனித உடம்புடன் ஒப்பிடுவாய்?

விமானம்

  1. கோயில்களின் கருவறையின் மீது அமைக்கப்படும் பிரமிடு போன்ற கட்டடக்கலை
  2. இது பொதுவாக ஷடங்க விமானம் எனப்படுகிறது.
  3. இது 6 உறுப்புகளைக் குறிக்கும்.
  4. அவை மனித உடலின் உறுப்புகளுடன் ஒப்புமையுடையவையாகும். 
  5. விமானத்தின் மீது கலசம் இடம்பெறும்
  6. சோழர் காலத்தில் விமானங்கள் மிக உயரமாக அமைக்கப்பட்டன.

ஆலயம் – மனித உடலமைப்பு ஒப்பீடு

  1. அதிட்டானம் – பாதம்
  2. பித்தி – கால்
  3. பிரஸ்தம் – தோள்
  4. கண்டம் – கழுத்து
  5. சிகரம் – தலை
  6. ஸ்தூபி – மகுடம்

நாடகக்கலை

  1. தமிழகத்தில் நாடகக்கலையின் தோற்றம் (ம) வளர்ச்சியை விவரி?

முன்னுரை:

நாடகம் = நாடு + அகம் நாட்டை அகத்தில் கொண்டது

நாட்டின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதால் நாடகம் எனப் பெயர் பெற்றது.

 

நாடகக்கலையின் தோற்றம்

  1. பிறா செய்வதனைப் போல தாமும் செய்ய வேண்டும் என்னும் மனித வளர்ச்சி நாடகமாக வளர்ந்தது.
  2. மரப்பாவைக் கூத்து பொம்மலாட்டமாக வளர்ந்தது
  3. தோல்பாவைக்கூத்து, நிழற்பாவைக்கூத்து ஆகியன பாவைக்கூத்தின் வளர்ச்சி நிலைகளாகும்.
  4. பின் உயிருள்ள மனிதர்களே வேடம் அணியச் செய்து ஆடிப்படி நடிக்க ஆரம்பித்தனர்.

 

காலந்தோறும் நாடகக்கலை

1.7ம் நூற்றாண்டு

மகேந்திர வர்மன் மத்தவிலாசம் என்னும் நாடக நூலை எழுதியுள்ளான்.

2.11ம் நூற்றாண்டு

  1. இராசராசன் ஆட்சிக் காலத்தில் இராசராசேச்சு வர நாடகம் நடைபெற்றதை கல்வெட்டு குறிப்பிடுகிறது.
  2. தஞ்சாவூரை ஆண்டபோது கோவிலில் நாடகங்கள் மராத்தியர்களால் நடத்தப்பட்டன.
  3. நாயக்கர் காலத்தில் குறவஞ்சி நாடகங்கள் தோன்றின.
  4. 17ம் நூற்றாண்டு
  5. நொண்டி நாடகங்கள் தோன்றின.
  6. செல்வக்குடியில் பிறந்த ஒருவன் ஒழுக்கம் கெட்டு, நோயும் வறுமையும் உற்று இறுதியில் திருந்துவதாக அமைந்தன.
  7. 18ம் நூற்றாண்டு
  8. இக்காலத்திய நாடகங்கள் மகாபாரதம், இராமாயணம் போன்ற காவியங்களின் கதைக்கூறுகளிலிருந்து படைக்கப்பட்டன.
  9. அருணாச்சலக் கவிராயரின் – இராம நாடகம் கோபால கிருட்டிண பாரதியின் நந்தனார் சரித்திரம் கட்டியங்காரன் உடையோடு முழுவதும் பாடல்களாக அமைந்தன.
  10. ஊர்களில் தெருக்கூத்து நடைபெற்றது. 
  11. பின் நாடகங்களில் உரையாடல்கள் இடம்பெற்றன.
  12. விடிய விடிய நடைபெற்ற நாடகம் 3 மணி நேரத்திற்குள் நடத்தி முடிக்கப்பட்டன.

5.19ம் நூற்றாண்டு

  1. சமுதாய சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் இடம் பெற்றன.
  2. காசிவிசுவநாதரின் – டம்பாச்சாரி பேராசிரியர் சுந்தரனார் – மனோன்மணியம் முக்கியமானவையாகும்.
  3. தமிழ்நாட்டில் முதலில் நடத்தப்பட்ட தேசிய சமூக நாடகம் கதரின் வெற்றியாகும்.
  4. நாடக மேடைகளில் தேசியப்பாடல்கள் முழங்கின.
  5. 20ம் நூற்றாண்டு
  6. பெருந்தொண்டு ஆற்றியவர் சங்கரதாஸ் சுவாமிகள் தமிழ்நாடகத் தலைமையாசிரியர் எனப்பட்ட இவர் நாற்பத்துக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார்.
  7. தமிழ் நாடகத் தந்தை பம்மல் சந்பந்தனார் 96 க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார்.
  8. சேக்சுபியரின் ஆங்கில நாடகங்களை மொழி பெயர்த்துள்ளார்.
  9. மனோகரன் நாடகம் புகழ்பெற்றது.

 

முடிவுரை:

நாடகச் சாலையொத்த நற்காலசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்ந்து” என்ற கவி மணியின் கூற்றிற்கேற்ப நாடகங்கள் அமைதல் நலம்

 

  1. நவீன நாடகத்தின் தோற்றம் (ம) வளர்ச்சியை விவரி.

முன்னுரை

ஐரோப்பிய, பார்சிய, மராத்திய அரங்கியலை உள்வாங்கிய நாடக நிகழ்வுகள் 19ம் நூற்றாண்டின் இறுதியில் நிகழந்தன. அதன்பின் நாடகக் கலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.

 

 

  1. நவீன நாடகத்தின் தோற்றம்
  2. சங்கரதாஸ் சுவாமிகள் தமிழ் நாடகத்தலைமையாசிரியர் எனப்பட்டார். கூத்திற்குப் புது வடிவம் தந்ததுடன் மேலைநாட்டு உத்திகளையும் இணைத்தார்.
  3. இவர் தமிழ் நாடகங்களில் பாடல்களின் கருத்துக்களைப் பொதுமக்கள் புரிந்துகொள்ளும் வகையில் உரைநடையில் இடம்பெறச் செய்தார்.
  4. பம்மல் சம்பந்தனார் தமிழ் நாடகத் தந்தை எனப்படுகிறார். மேடைகளில் பல புதுமைகளை கையாண்டார்.
  5. பரிதிமாற் கலைஞரின் நாடகவியல் என்னும் நூல் நாடகக்கலைக்கு இலக்கணம் வகுத்தது.
  6. நவீன நாடகத்தின் வளர்ச்சி
  7. ஆங்கிலேயரை வெளியேற்றும் நோக்கோடு பரப்புரை நாடகங்கள் இடம்பெற்றன.
  8. திராவிட இயக்க நாடகங்களும் சபா நாடகங்களும் வளர்ச்சி பெற்றன.
  9. தமிழில் சீர்த்திருத்த நாடகங்கள் சுயமரியாதை இயக்கத்தின் விளைவாய் உருவானது.
  10. விடுதலைக்குப்பின் மக்களின் நடப்பு வாழ்க்கையை நாடகங்கள் சித்தரித்தன.
  11. நாடக அமைப்புகள்
  12. அகில இந்திய அளவில் ‘பாரதீய நாட்டியகஸ்’ என்ற நாடக அமைப்பு உருவானது
  13. நிகழ்கலைகளின் வளர்ச்சிக்காக ‘மத்திய சங்கீத நாடக அகாதெமி’ உருவாக்கப்பட்டது.
  14. நாடகத்துறைக்கு பயிற்சியளிக்க தேசிய நாடகப் பள்ளி உருவாக்கப்பட்டது.
  15. நவீன நாடகங்களின் தொடக்கம்
  16. எளிய அரங்கமைப்பு காணப்பட்டது.
  17. அங்கம், களம் இவற்றிற்கு முதன்மைத் தராமல் கருத்துக்களை முதன்மைபடுத்தியது
  18. சமூகச்சிக்கல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்த்தது
  19. பார்வையாளர் (ம) நடிகர்கள் இடையிலான கருத்துப் பரிமாற்றத்தை முதன்மைபடுத்தியது
  20. தமிழ் நாடக்கலையின் மறுமலர்ச்சிக்காலம்
  21. நவீன நாடக ஆசிரியர்கள் வாசகர்களுக்கு என்று எழுதாமல், பார்வையாளர்களுக்காக எழுதினார்.
  22. கொல்லிப்பாவை, வைகை, விழிகள், யாத்ரா போன்ற சிறுபத்திரிக்கைகள் குறிப்பிடத்தக்கவை.
  23. கூத்துப்பட்டறை, நிஜநாடக இயக்கம், பரீக்ஷா, வீதி போன்ற நவீன நாடகக் குழுக்கள் துவங்கப்பட்டன.
  24. பல்கலைக்கழகங்களின் பங்கு
  25. 1990 களில் தஞ்சை, புதுவை, மதுரை முதலான பல்கைலைக்கழகங்களில் நாடகத்துறைகள் துவங்கப்பட்டன.
  26. முதுகலைப் பாடத்திட்டத்தில் நாடகம் ஒரு பாடமாகச் சேர்க்கப்பட்டது.
  27. இதன் விளைவாகப் பலநவீன நாடகக் குழுக்கள் தோன்றின.

 

  1. நவீன நாடகத்திற்கான திட்டங்கள்
  2. சங்கீத நாடக அகாதெமி இளம் நாடக இயக்குநர்களையும் நாடக குழுக்களையும் ஊக்குவிக்க நிதி வழங்கியது.
  3. இதனால் பிறமொழி நாடகங்களை ஒப்பிடவும், போட்டிபோடவும் வாய்ப்பு உருவானது
  4. தேவராட்டம், தப்பாட்டம் என நிகழ்த்துக்கலைகளை தன்னுள் கொண்ட நாடகங்கள் தோன்றின.
  5. தழுவல் நாடகங்கள்
  6. ராமசாமி – துர்க்கிர அவலம்
  7. இராமானுஜம் – கறுப்புத் தெய்வத்தைத் தேடி போன்றவை தழுவல் நாடகங்களுக்கு முன்னோடி ஆகும்.
  8. மொழியாக்கம் செய்யப்பட்ட நாடகங்கள் அதிகமாக அரங்கேறின.
  9. ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கச்செயல்பாடுகள்
  10. பெண்கள், தாழ்த்தப்பட்டோர், திருநங்கைகள், சிறுவர் போன்றோர் பல்வேறு முறைகளில் ஒடுக்கப்படுவதால் அவர்களின் வாழ்வியல் பிரச்சனைகளை முன்னிறுத்தும் நாடகங்கள் உருவாயின.
  11. மங்கை, ஜீவா, பிரசன்னா ராமசாமி ஆகியோர் குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றியுள்ளனர்.
  12. குணசேகரனின் தலித் ஆடுகள் முதல் தலித் நாடகமாகும்.

முடிவுரை:

இவ்வாறு நாடகக்கலை வளர்ச்சி அடைந்து மக்களின் அன்றாட வாழ்வியலை எடுத்தியம்பும் கலையாக விளங்குகிறது.

 

  1. முதன்மையான நவீன நாடகக் குழுக்கள் பற்றி எழுதுக.
  2. கூத்துப்பட்டறை
  3. 1977 ல் சென்னையில் துவங்கப்பட்டது.
  4. இதனை உருவாக்கியவர் ந. முத்துசாமி
  5. நோக்கம் -தொன்மையான தெருக்கூத்து கலையை நவீனமயமாக்குதல் 
  6. இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம், யுனஸ்கோ, ஃபோர்ட் அறக்கட்டளை, ஜெர்மனியின் மேக்ஸ் முல்லர் பவன் போன்றவற்றின் ஆதரவில் இதன் அரசங்கச் செயல்பாடுகள் அமைந்தது.
  7. இங்கு நடிப்பிற்கு மட்டும் பயிற்சி அளிக்கப்படுவது இல்லை
  8. யோகா, நடனம், சிலம்பம் தேவராட்டம், களரி, தியானம் போன்றவற்றிற்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
  9. 40க்கும் மேற்பட்ட நாடகங்களை அரங்கேற்றி உள்ளது.
  10. முக்கியமானவை – நாற்காலிக்காரர், இங்கிலாந்து போன்றவை
  11. நிஜநாடக இயக்கம்
  12. 1978 ல் மதுரையில் துவங்கப்பட்டது.
  13. இதனைத் துவக்கியவர் மு. இராமசுவாமி
  14. இது ‘தெம்மாங்கு’ அமைப்புடன் தன்னை இணைத்துக் கொண்டது.
  15. 30 க்கும் மேற்பட்ட நாடகங்களை அரங்கேற்றியுள்ளது.
  16. முக்கியமானவை – துர்க்கிர அவலம், சாப விமேதசானம் போன்றவை
  17. பரிக்ஷா
  18. 1978 ல் சென்னையில் துவங்கப்பட்டது.
  19. இதனை துவக்கியவர் ஞாநி
  20. நவீன நாடகங்களில் சோதனை முயற்சிகளை மேற்கொண்டது
  21. முக்கியமானவை – நாற்காலிக்காரர், போர்வை போர்த்திய உடல்கள், பல்லக்குத்தூக்கிகள் போன்றவை
  22. சென்னைக் கலைக்குழு
  23. இதனை துவக்கியவர் பிரளயன்
  24. இது எழுத்தறிவு (ம) அறிவியல் பிரச்சார நாடகங்களை நடத்த துவங்கப்பட்டது.
  25. கிராமியத்தன்மையும் சமூக விமர்சனம் கொண்ட நாடகங்களை நடத்திவருகிறது.
  26. முக்கிய விதி நாடகங்கள் – வள்ளியின் வழக்கு கொள்ளிவை
  27. பல்கலையரங்கம்
  28. பல்கலைக்கழக மாணவர்களிடையே அரங்க ஆர்வத்தில் ஈடுபாட்டை உருவாக்க துவங்கப்பட்டது.
  29. இளைய பத்மநாபனிடம் பயிற்சி பெற்ற நடிகர்களைக் கொண்டு நாடகங்களை அரங்கேற்றியது.
  30. முக்கியமானவை ஏகலைவன், ஒரு பயணத்தின் கதை
  31. கூட்டுக்குரல்
  32. 1990ல் பாண்டிச்சேரியில் துவங்கப்பட்டது.
  33. துவக்கியவர் – அ. ராமசாமி
  34. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நாடகங்களை நடத்தி உள்ளது.
  35. தலித்திய உள்ளடக்க நாடகங்களான தண்ணீர், வார்த்தை மிருகம் குறிப்பிடத்தக்கவை
  36. மௌனக்குரல்
  37. இக்குழுவை நடத்தியவர் அ. மங்கை
  38. இது பெண்களின் பல்வேறு பிரச்சனைகளைப் பேசும் நாடகங்களில் கவனம் செலுத்தியது.
  39. சேலம், தர்மபுரி மாவட்டங்களில் பெண்சிசுக் கொலையை கொலையை எதிர்க்கும் விதமாக ‘பச்சமண்ணு’ என்ற விதி நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.
  40. சங்கீத நாடக அகாதெமி
  41. 1952 ல் புதுடெல்லியின் துவக்கம்
  42. இந்திய அரசால் நிகழ்த்துக்கலைகளுக்காக நிறுவப்பட்ட அமைப்பு
  43. இந்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பாட்டு வந்து
  44. தற்போது இந்திய பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. 
  45. நோக்கம் – இசை, நடனம், நாடகத்தை ஊக்குவித்தல்
  46. இவை தயாரித்த நாடகங்கள் அந்தந்த மாநிலத்தின் பாரம்பரியம் (ம) இராண இதிகாசக் கூறுகளைக் குறிப்பிடுகின்றன.
  47. 1958 ல் உருவான பாரதிய நாட்டிய சங்கம் இதனுடன் இணைக்கப்பட்டது.
  48. பின் 1959 ல் தேசிய நாடகப் பள்ளி என மாற்றம்
  49. இத இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இனம், மொழி பேசும் மக்கள் நாடகக்கல்வியைப் பயில வழிவகுத்தது.
  50. தமிழ்நாடு இயலிசை நாடக மன்றம்
  51. மத்திய சங்கீத நாடக அகாதெமியின் நோக்கங்கள் மாநில அளவில் நிறைவேற்றுகிறது.
  52. நலிந்த கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்குகிறது
  53. கலைமாமணி விருது வழங்குகிறது.
  54. மானியங்களை வழங்கி வருகிறது.

 

  1. “நாட்டார் அரங்கக் கலைகள்” பற்றி விவரித்து எழுதுக.

முன்னுரை

இக்கலைகளை நிகழ்த்துபவர்கள் கற்பனைத்திறன் மிகுந்த உழைக்கும் கலைஞர்கள், இக்கலைகள் மனிதர்களின் வாழக்கைச்சூழல், தெய்வவழிபாடு, இவற்றின் கூட்டு வெளிப்பாடாகும்.

வகைகள்

  1. சடங்குசார் கலைகள்
  2. சடங்குகள் குடும்பவெளியிலும் சமூக வெளியிலும் இடம்பெறும்
  3. நாட்டார் வழிபாடுகளில் குறிப்பிட்ட தெய்வத்தைப் பற்றிய வரலாற்றுக்கதைகளின் பகுதியாக சடங்குகள் இடம் பெறுகின்றன.
  4. சாமியாட்டம், தேவராட்டம், கணியன் ஆட்டத்தில் சடங்குக் கூறுகள் அதிகம் 
  5. கொடை, தீமிதி விழா, முளைப்பாரி, மயான கொள்ளை என தமிழகத்தின் கோவில் திருவிழாக்களில் சடங்கியல நாடகங்கள் இடம்பெறும்.

பொன்னர் சங்கர் கதைப்பாடல்

  1. இடைக்காலத்தில் வாழ்ந்த பொன்னர் சங்கர் என்ற சகோதரர்களின் வரலாற்றினைக் கதைப் பாடலாக நிகழ்த்துதல்
  2. திருச்சி, சேலம், கோயம்புத்தூர் பகுதிகளில் சிறப்பாக நடைபெறும்
  3. இக்கதைப்பாடல் அண்ணமார் சாமி கோயில், பெரிய காண்டியம்மன், மாரியம்மன் கோயில்களின் முன்பு நிகழ்த்தப்படும்.
  4. இது தை முதல் ஆடி மாதம் வரையில் ஊர்தோறும் நடைபெறும்.
  5. பாடல்சார் கலைகள்
  6. நிகழ்த்துக்கலைகளுள் பாடலுக்கு முக்கியத்துவம் அளித்து அரங்கேற்றப்படும்.
  7. இவை பாடலுக்கேற்ற நடன அசைவுகளைக் கொண்டவை
  8. இலாவணி, உடுக்கைப்பாட்டு, பகல்வேடம், இராஜாராணி ஆட்டம் போன்றவை இவ்வகையைச் சார்ந்தவை.

 

உடுக்கைப்பாட்டு

  1. இதில் உடுக்கை என்னும் இசைக்கருவி பயன்படும்.
  2. ஒரு கதையைப்பாடி பின்னணியாக உடுக்கடிக்கும் முறையாகும்.
  3. இதில் ஒருவர் உடுக்கை அடிக்க, ஒரு பெண் (அ) பெண் வேடமிட்ட ஆண் கதைப் பாடலைப் பாடி ஆடுவர்.
  4. இது கோவில், சமுதாயம் (ம) பொழுதுபோக்கு சார்ந்த கலையாக உள்ளது.
  5. கோவை, ஈரோடு, பழனி பகுதிகளில் பரவலாக இடம்பெறும்
  6. நல்லதங்கள், மதுரை வீரன், காத்தவராயன் கதை போன்றவை குறிப்பிடத்தக்கவை.
  7. கருவிசார் கலைகள்
  8. இதில் பல்வேறு கருவிகள் இசைக்கப்பெறும்.
  9. இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டே பாடுவது, ஆடுவதாகும்.
  10. கரகாட்டம், களரி, சிலம்பாட்டம், பறையாட்டம், காவடியாட்டம் என பல கருவிசார் கலைகள் உள்ளன.

கரகாட்டம்

  1. தலையில் கரகம் வைத்து ஆடுவதால் இப்பெயர் பெற்றது.
  2. இதனை சங்க இலக்கியங்கள் குடக்கூத்து என குறிப்பிடுகின்றன. 
  3. தெய்வ வழிபாட்டுடன் தொடர்புடையது.

தெருக்கூத்து பற்றி குறிப்புத் தருக

தெருக்கூத்து

  1. இவை முறையான அரங்குகளில் நடத்தப்படாமல், தெருக்கள், முற்றங்கள், வயல்வெளிகள் போன்ற இடங்களில் நிகழ்த்தப்படுகின்றன.
  2. தெருக்கூத்தானது சடங்கு, பாடல் (ம) கருவிசார் கலையாக உள்ளது.
  3. இதில் தொன்மம், நாட்டார் கதை, சீர்திருத்தக் கதை, விழிப்புணர்வுக்கதை இடம்பெறும்.

களமும் முறையும்

  1. கிராமப்புறங்களில் உள்ள கோவில்களில் மூன்று பக்கமும் மக்கள் சூழ்ந்த திறந்தவெளி பரப்பில் நிகழ்த்தப்பெறும்.
  2. இது நடைபெறும் இடம் களரி எனப்படும்.
  3. திடலில் இருகழிகளை நட்டு அவற்றில் விளக்குகளைக் கட்டுவர்.
  4. கழிகளுக்கு இடையில் உள்ள இடமே கூத்து நடைபெறும் களரியாகும். 
  5. முன்பு திரை தொங்கவிடப்பட்டிருக்கும்
  6. ஆண்கள் பெண்களது வேடமிட்டு நடிப்பர்
  7. இரவு 10 மணிக்கு துவங்கி மறுநாள் காலை வரை நிகழ்த்தப்படும்

கருவிகள்

  1. முகவீணை, ஆர்மோனியம், மத்தளம், தாளம் இடம்பெறும்
  2. கலைஞர்கள் புஜக்கீர்த்திகள், கீரிடங்கள், கால்சலங்கைகளை பயன்படுத்துவர்

 

தமிழ்நாட்டில் தெருக்கூத்து

  1. திண்டிவனம் காஞ்சிபுரம், செய்யாறு, வேலூர்
  2. கடலூர், தர்மபுரி, சேலம் முதலான பகுதிகளில் நடைபெறும்

நிகழ்த்தப்படும் கதைகள்

  1. இராமாயணம், மகாபாரதம்
  2. மாரியம்மன்கதை, நல்லதங்காள் கதை, கண்ணகிகதை

முடிவுரை:

இத்தகு நாட்டார் நிகழ்த்துக் கலைகளைப் பற்றி அறிந்து கொள்வதன் மூலம், நமது பண்பாட்டு மரபை அறியலாம்.

 

  1. தமிழ் நாடக வளர்ச்சி தமிழரிடையே ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்து எழுதுக. 

தமிழ் நாடக வளர்ச்சி மக்களிடையே ஏற்படுத்திய மாற்றங்கள்

  1. மேல்நாட்டு நாடகங்களைக் கற்கும் வாய்ப்பினால் தமிழரின் நாடகம் நன்கு வளர்ந்தது.
  2. சேக்ஸ்பியரின் நாடகப்பாணி தமிழரைப் பாதித்தது பேராசிரியர் சுந்தரனார் அவ்வகையில் தமது நாடகத்தை அமைத்தார்.
  3. பம்மல் சம்பந்தனார் தமிழ் நாடக நடிகர்களுக்குக் ‘கலைஞர்கள்’ என்ற தகுதியைத் தேடி தந்தார்.
  4. நிதியமைச்சர் R.K. சண்முகம் அவர்களையே நாடக நடிகராக்கிய பெருமை பம்மலாருக்கு உண்டு.
  5. சங்கரதாஸ் சாமிகள் சேக்ஸ்பியரின் நாடகங்களைத் தமிழில் தந்தார். இவரது நாடகங்களில் சங்கப்பாம்கள் இடம்பெறும்.
  6. வாணிவிலாசம், ரசிகரஞ்ஜனி, தஞ்சை சுதர்சனம் குமாரகானசபை முதலியவை தமிழ் மக்களின் ஒய்வு நேரங்களை நாடகங்களுக்கு உரியதாக்கின.
  7. என்.எஸ்.கே. நாடகக்குழு நாம் இருவர், பைத்தியக்காரன் போன்ற சீர்திருத்த நாடகங்களைத் தந்தது.

சமூகவியற்சிந்தனைக் களம் கண்டவை

  1. நாரண துரைக்கண்ணன் – உயிரோவியம்
  2. டாக்டர் மு.வ. – டாக்டர் அல்லி
  3. அரு. ராமநாதன் – இராஜராஜ சோழன்
  4. அண்ணாவின் பல நாடகங்கள்
  5. கலைஞர் – – தூக்குமேடை, மந்திர குமாரி

தற்காலத்தில் மாற்றங்கள்

  1. சில சான்றோர்கள் உரைநடையிலும் செய்யுளிலும் பல நாடகங்களைப் படைத்துள்ளனர்.
  2. செய்யுள் நாடகங்கள்

புலவர் பழனி – அனிச்ச அடி

பாவலர் பால சுந்தரனார் – புலவர் உள்ளம், புரவலர் உள்ளம், வேள் எவ்வி

  1. திருஎஸ்வி சேகர், சோ. இராமசாமியின் நாடகக் குழு தமிழ் நாடகக் கலையை எள்ளல், நகைச்சுவை, சமூகம் போன்ற களங்களில் கொண்டு சேர்த்துள்ளன.

 

  1. சிலப்பதிகாரத்தில் நாட்டி அரங்கின் அமைப்பை விளக்குக.

தலைக்கோல்

  1. 7 சாண் நீளமுள்ளது.
  2. மூங்கிலால் ஆனது
  3. கணுக்கள் கோலும் மணிகள் பதிக்கப்பட்டது.
  4. இடையிடையே பொன்கட்டு இடப்பட்டது.
  5. இந்திரவிழாவின் போது இதற்கு பூசை நடைபெறும்

நாட்டிய மேடை அமைப்பு

  1. சிற்ப நூலாசிரியர் வகுத்த முறைப்படி ஏற்ற இடத்தைத் தேர்வு செய்வர் 
  2. கண்ணுக்குக்கண் ஒரு சாண் இடைவெளியுள்ள மூங்கிற் கழி பயன்பாடு
  3. இதன் மூலம் உத்தமன் கைப்பெருவிரல் 24 கொண்ட அளவு நறுக்கி கோலாக 

பயன்பாடு

  1. நீளம் – 8 கோல்

அகலம் – 7 கோல்

உயரம் – 1 கோல் உடைய மேடை அமைப்பு

  1. உத்தரப் பலகையிலிருந்து அரங்கின் பலகை 4 கோல் இருக்கும்
  2. அரங்கிற்கு 2 வாயில்கள்
  3. மேல் நிலத்தில் வருணப் புதங்கள் இருந்தன.
  4. தூணின் நிழல் அரங்கின் மீதும் அவையின் மீதும் சாயாதவாறு விளக்கு அமைக்கப்பட்டது.
  5. 3 வகை திரைச்சீலைகள் அமைக்கப்பட்டன.
  6. அவை – ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி

 

  1. நாடகவியல் ஆளுமைகள் பற்றி விவரித்து எழுதுக.

நாடகவியல் ஆளுமைகள்

  1. சங்கரதாஸ் சுவாமிகள்
  2. இவர் தமிழ் நாடகத் தலைமையாசிரியர்,
  3. சிறுவர்களைக் கொண்ட ‘பாலர் குழுவை’ உருவாக்கினார்.
  4. இசையை முதன்மைப்படுத்திக் கூத்து மரபுகளை உள்வாங்கி நாடகங்களைப் படைத்தார்.
  5. தெருக்கூத்து நாடகங்களின் அமைப்பைக் குறைத்து, கற்பனை (ம) சந்தநயம்மிக்க பாடல்களை படைத்தார்.
  6. வரையறுத்த நாடகப் பிரதிகளை உருவாக்கினார்.
  7. பழந்தமிழ் இலக்கிய வரிகளையும் உரையாடலில் பயன்படுத்தினர்.

 

பம்மல் சம்பந்தனாரனரின் நாடகப் பணிகள் குறித்து விளக்குக. 

  1. பம்மல் சம்பந்தனார்
  2. இவர் தமிழ் நாடகத் தந்தை
  3. தமிழ் நாடகத்தை மேனாட்டு நாடகங்களுக்கு நிகராக மாற்றியவர்.
  4. மக்களின் வாழ்க்கையை ஒட்டிய கதைகளைக் கொண்ட, இயல்பான பேச்சு மொழியில் சமூக நாடகங்களை நடத்தினார்.
  5. இவர் உரையாடல்களை முதன்மைப்படுத்தினார்.
  6. அரிச்சந்திரன் கதையை சந்திரஹரி என்ற பொய் மட்டுமே பேசுகிற கதையாக மாற்றினார்.
  7. எதிர்க்கதை நாடக அமைப்பை தோற்றுவித்தார்.
  8. மொழிபெயர்ப்பு நாடகங்களை படைத்துள்ளார்
  9. இரவு முழுவதும் நடைபெற்ற நாடகங்களை 3 – 4 மணி நேரத்திற்குள் முடிக்கும் வகையில் மாற்றினார்.
  10. சுகுணா விலாச சபையை உருவாக்கினார்.
  11. 94 நாடகங்களை எழுதியுள்ளார்.
  12. ‘இந்திய நாடக மேடை’ என்ற இதழை வெளியிட்டுள்ளார்.
  13. பாலாமணி அம்மையார்
  14. முழுவதும் பெண்களே பங்கேற்ற நாடக்குழு
  15. இக்குழுவில் 70 பெண்கள் இருந்தனர்.
  16. நாடக அரசி என சிறப்பிக்கப்பட்டார்.
  17. நாடகங்கள் சமுதாய சீர்த்திருத்தங்களை அடிப்படையாக கொண்டு இருந்தன.
  18. நாடக மேடையில் பெட்ரோமாக்ஸ் விளக்குகளை முதலில் பயன்படுத்தியவர்.
  19. இவரது நாடகத்தை பார்க்க வரும் ரசிகர்களுக்காக வந்த தொடர்வண்டி பாலாமணி ஸ்பெஷல் எனப்பட்டது.
  20. ஆர்.எஸ். மனோகர்
  21. நாடகக் காவலர் எனப்படுகிறார்.
  22. கல்லூரி நாடகத்தில் மனோகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். 
  23. பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
  24. ‘நேஷனல் தியேட்டர்ஸ்’ நாடக நிறுவனத்தை துவங்கினார்.
  25. இன்பநாள், உலகம் சிரிக்கிறது போன்ற சமூக நாடகங்களை இயற்றியுள்ளார்.
  26. இவரின் இலங்கேஸ்வரன் நாடகம் வியக்கத்தக்கது.
  27. ஒவ்வொரு நாடகத்துக்கும் 30 நாட்கள் ஒத்திகை பார்ப்பார்.

 

  1. கூத்தில் கட்டியக்காரனின் பன்முக பங்களிப்பை விவரி.

தெருக்கூத்து

  1. கூத்து துவங்குவதற்கு அரைமணி நேரத்திற்கு முன் மிருதங்கம், ஜால்ரா உள்ளிட்ட இசைக்கருவிள் ஒரு மணிநேரம் ஒலிக்கும்.
  2. இது ஊராரை அழைப்பதற்கு உதவியாக இருக்கும்.
  3. இதனை களரிகட்டுதல் என்பர்.
  4. அதன் பின் பார்வையாளர்கள் முன் தோன்றுகின்ற முதல் கதைமாந்தன் கட்டியக்காரனாவான்.

கட்டியக்காரனின் பங்களிப்பு

  1. கூத்துக்களில் தன்னை அறிமுகப்படுத்துவதுடன் அவையோரை ஆயத்தம் செய்தல்
  2. கதைமாந்தர்களை அறிமுகப்படுத்துதல்
  3. கதையை விளக்குதல்
  4. கதைமாந்தர்களிடையே தொடர்பை ஏற்படுத்துதல்
  5. கூத்தின் ஒழுங்கமைப்பையும் காட்சி நிகழ்வுகளையும் எடுத்துக் கூறுதல்
  6. முக்கியத்துவம் வாய்ந்த கதைமாந்தர்களுடன் உரையாடுதல்
  7. விமர்சனம் செய்தல்
  8. பார்வையாளர்களுடன் ஊடாடுதல்
  9. கூத்தில் இவனது நடிப்பும் பாடலும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும்.

பல்வேறு வேடங்கள்

  1. தெருக்கூத்தல் கோமாளி, காவலன், மந்திரி, தோழி, குறிசொல்பவன் என பலவகையில் துணைமாந்தர் வேடமேற்று இயங்குவான்.
  2. கட்டியக்காரன் இப்படி, இவ்வாறு, இந்த நேரங்களில் வரவேண்டும் என முறையான வரையறை இல்லை.
  3. கூத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை செயல்படுவான்.

கட்டியக்காரனின் உடை:

  1. முழுக்கால் சட்டை
  2. பல வண்ணங்கள் கொண்ட மேல்சட்டை
  3. கோமாளித் தொப்பி
  4. பாத்திரத்திற்கு ஏற்ற உடை
  5. பெண் வேடம் ஏற்பதுண்டு.

முக்கியத்துவம்

  1. கூத்தில் மிகச் சுதந்திரமாக இயங்கும் கதை மாந்தன்
  2. பார்வையாளர்கள் இரவு முழுவதும் உறங்காமல் இருக்க கலகலப்பை ஏற்படுத்துபவன்.
  3. நிகழ்கால நடப்புகளை சொல்லி கூத்தைக் கொண்டு செல்பவன்.
  4. கூத்தின் அனைத்துக் கூறுகளையும் அறிந்தவன்.

திரைப்படக்கலை

  1. சினிமா என்ற ‘திரைக்கலை’ தமிழர் வாழ்வில் செய்த மாற்றங்கள் யாவை? 

தமிழர் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள்

1891 ல் எடிசன் கண்டுபிடித்த திரைப்படக்கலை ஊமைப்படமாய், பேசும்படமாய், கருப்பு – வெள்ளையாய், கலர்ப்படமாக வளர்ந்து மெல்ல மெல்லத் தமிழரின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்தது.

 

மாற்றங்கள்:

  1. மக்களின் மிகப்பெரிய பொழுது போக்குக் கருவியாக மாறியது.
  2. இதன் மூலம் பல தகவல்கள் மக்களைப் போய்ச் சேர்ந்தன.
  3. இதனால் பல பண்பியல் மாற்றங்கள் ஏற்பட்டன.
  4. அரசியல், சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் கருத்துக்கள் மக்களை எளிதில் சென்றடைந்தது.
  5. மக்கள் பகுத்தறிவு பார்வை பெற்றனர்.
  6. திரைப்படக்கலை ஒரு செல்லுலாய்டு மாயை என அறியாமல், அதனை உண்மை என சிலர் நம்பி தங்கள் வாழ்வை நாசமாக்கிக் கொண்டனர்.
  7. சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட இளைஞர்கள் கூட்டம் ஒன்று சென்னையை நோக்கி ஓட்டம் எடுத்தது.
  8. மக்களிடையே ஆடம்பர மோகம் ஏற்பட்டது.
  9. நடையுடை, பாவனை, சிகையலங்காரம் என இளைஞர்களும் யுவதிகளும் மாறினர்.
  10. நடிகர் நடிகைகளின் உடையலங்காரம் அப்படியே தமிழரிடம் கைமாறியது. 11.வேஷத்திற்காகக் கலைஞர்கள் செய்பவை யெல்லாம் யெல்லாம் தமிழரின் அன்றாட நடைமுறையானது.
  11. பல இளைஞர்கள் திரைக்கலைஞர்கள் போலக், கதாநாயகர், நாயகி போல வாழ விரும்பினர்
  12. திரைப்படம் காட்டும் வன்முறையற்ற காட்சி சண்டை அமைப்புகளால் வன்முறைக் கலாச்சாரம் வளர்ந்தது.
  13. வள்ளுவன், இளங்கோ, கம்பன், பாரதி, பாரதிதாசன் என இலக்குகளை நோக்கிய படைப்பாளிகளின் இலக்கியங்கள் சமூக முன்னேற்றம் பேசின. 
  14. திரைப்படப் பாடல்கள், வசனங்கள் என புனைந்தவர்கள் காலத்திற்கேற்பத் தடங்களை மாற்றிக்கொண்டு திரையிசைப் பாடல்கள் எழுதத் தொடங்கினர்.
  15. எளிமைக்கும் இசைக்கும் முதன்மைபெற்ற திரைப்படப் பாடல்கள் என்ற தனிவகை உருவானது
  16. தமிழ் இசையுடன் மேனாட்டு இசை கலந்தது.
  17. தனித்தமிழிசையாகவும் இன்றி, கர்நாடக இசையாகவும் இன்றித் திரையிசை என்ற தனிவகை உருவானது.
  18. நடிகர் சங்கங்கள் தோன்றி இளையவர்களை ஆளுமை செய்தன.
  19. சில சங்கங்கள் அரசியல் கட்சிகளுடன் தொடர்பில் இருந்தன.
  20. புகைப்பிடித்தல், குடித்தல் போன்றவை பெரிய குற்றங்கள் அல்ல என்ற எண்ணத்தை மக்களிடம் உருவாக்கியது.
  21. அதீத இரட்டை அர்த்தவசனங்கள் இடம் பெற்றுத் தமிழ்ப்படக்கலை இன்னொரு விதமான சீரழிவுக்கு வழிவகுத்தது.
  22. தமிழ்த் திரைப்பட வரலாறு பற்றி நீவிர் அறிவன யாவை?

முன்னுரை

19ம் நூற்றாண்டில் தோன்றிய வலிமையான காட்சி ஊடகம் திரைப்படம் சென்னை – கோடம்பாக்கம் திரை உலகில் ‘கோலிவுட்’ எனப்படுகிறது.

  1. தொடக்கம்
  2. 1895 – லூமியர் சகோதரர்களால் சலனப்படம் கண்டுபிடிக்கப்பட்டது.
  3. 1896-மும்பையில் முதல் சலனப்படம் திரையிடப்பட்டது.
  4. 1897-ல் சென்னையில் எட்டுவர்டு முதல் சலனப்படத்தை திரையிட்டார்.
  5. திரையரங்கு
  6. 1900-தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு எலக்ட்ரிக் தியேட்டர் இது சென்னை அண்ணாசாலையில் உள்ளது.
  7. 1905-சுவாமிக்கண்ணு என்பவர் திருச்சியில் முதல் டூரிங் டாக்கீஸ் அமைத்தார்.
  8. 1914-வெங்கையா என்பவர் கெயிட்டி திரையரங்கை கட்டினார்.

iii. மௌனப்படம்

  1. இந்தியாவின் முதல் மௌனப்படம் ஏசுவின் வாழ்க்கை
  2. தாதாசாகிப் பால்கே ‘ராஜா ஹரிச்சந்திரா’ என்ற மௌனப் படத்தை தயாரித்து வெளியிட்டார்.
  3. நடராஜர் என்பவர் கீசகவதம் என்ற மௌனப் படத்தை சென்னையில் தயாரித்தார்.
  4. சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட மௌனப் படங்கள் தயாரிக்கப்பட்டன. 
  5. ஆங்கில அரசு 1918 ல் இந்திய திரைப்படத் தணிக்கைத் துறையை உருவாக்கியது.
  6. பேசும் படங்கள்
  7. இந்தியாவின் முதல் பேசும் படம் – ஆலம்ஆரா
  8. தமிழில் குறத்திபாட்டும் டான்சும் என்ற படம் வெளியானது 
  9. முழு நீளத் தமிழில் பேசும் படமாக காளிதாஸ் வெளியானது 
  10. 1934ல் சென்னையில் முதல்ஒலிப்பதிவுக்கூடம் நிறுவப்பட்டது.

v.ஸ்டுடியோ

  1. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்
  2. கோவை சென்ட்ரல் நெப்டியூன்
  3. சென்னை விஜயா, வாகினி, ஏவிஎம் ஸ்டூடியோ
  4. திரைப்பட வரிசை
  5. தொடக்க நிலையில் புராண, இதிகாச, புனைவுகள் இடம்பெற்றன.
  6. நாளடைவில் சமூகவியல் கதைகள் நிலைபெற்றன.
  7. சீனிவாச கல்யாணம், மிஸ்கமலா, திருநீல கண்டர் பல படங்கள் என வெளிவந்தன.
  8. பெரும் பொருட் செலவில் சந்திரலேகா வெளியானது.

vii. கலைஞர்கள்

  1. நடிகர் திலகர், மக்கள் திலகர், வீரப்பா
  2. ஜெமினி கணேசன், TR மகாலிங்கம்
  3. MR ராதா, வி.எஸ். ராகவன்

viii. புதிய தொழில் நுட்பம்

இன்றைய அளவில் தமிழத் திரைப்படக்கலை சர்வதேச அளவில் இசை, படத்தொகுப்பு, காட்சி படப்பிடிப்பு, பாடல் என அனைத்திலும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது.

  1. ஒரு திரைப்படம் தலைத்தன்மை வாய்ந்தது என எவ்வாறு கருதப்படுகிறது?
  2. புராணக் கதைகள்
  3. துவக்க காலத்தில் புராணக்கதைகள், அடிப்படையாகக் கொண்ட படங்கள் எடுக்கப்பட்டன.
  4. 1935 முதல் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை மையமாகக் கொண்ட படங்கள் வெளிவந்தன.
  5. தேசியக் கருத்துக்கள், காந்திய சமூக சீர்த்திருத்தங்கள் இடம் பெற்றன.

 

  1. பாடலுக்கு முதன்மை
  2. பாட்டும் இசையும் தொடக்க காலத் திரைப்படங்களின் முதன்மை கூறுகள்
  3. ஒரே படத்தில் 50, 60 பாடல்கள் இடம் பெற்றன.

iii. விடுதலை உணர்வு

  1. இராஜாஜி முதல்வராக இருந்த காலத்தில் தணிக்கை முறை விலக்கி வைக்கப்பட்டது.
  2. தியாக பூமி, மாத்ருபூமி, விமோசனம் போன்ற நாட்டுப்பற்றைப் போற்றும் தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்தன.
  3. வசனத்திற்கு முக்கியத்துவம்
  4. எல்லிஸ் ஆர். டங்கள் தமிழ்ப் படங்களில் ஆறு (அ) எட்டுப் பாடல்கள் மட்டுமே இடம் பெறுமாறு செய்தார்.
  5. பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிலையை உருவாக்கினர். 
  6. அண்ணா, கலைஞர், சேரன் பாக்யராஜ் குறிப்பிடத்தக்கோர்.
  7. பகுத்தறிவுக் கருத்துக்கள்
  8. அண்ணாவின் வேலைக்காரி படம் சிறப்பானது
  9. கலைஞரின் பராசக்தி
  10. சீர்த்திருத்த கருத்துக்கள் உள்ளடக்கிய திராவிட இயக்கத் திரைப்படங்கள் பல வெளிவந்தன.
  11. நடிகர்கள்
  12. பி.யு. சின்னப்பா, எம்.கே. தியாகராஜ பாகவதர்
  13. சிவாஜி கணேசன், பானுமதி, சாவித்ரி
  14. நடிகர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

vii. இயக்குநர்கள்

  1. பிம்சிங் – பாவமன்னிப்பு
  2. நாகராஜன் – சரஸ்வதி சபதம்
  3. கோபால கிருஷ்ணன் – கற்பகம்

 

viii. எதார்த்த பாணி

  1. சென்னை அடையாறில் திரைப்படக்கல்லூரி துங்கப்பட்டது.
  2. இதன் மூலம் எதார்த்த பாணியில் பல படங்கள் வெளிவந்தன.
  3. காதல் சிக்கல்கள்

எண்பதுகளின் துவக்கத்தில் பெண்களின் மன இயல்பு, காதலால் ஏற்படும் சிக்கல்கள் போன்றவை திரைப்படங்களின் கருப்பொருளாயின.

 

  1. இன்றைய காட்சி ஊடகங்களில் திமிழ்த்திரைப்படங்கள் பெறும் இடம் குறித்து எழுதுக.

இன்றைய தமிழ்த் திரைப்படங்கள்

  1. படப்பிடிப்பு (ம) படத்தொகுப்பில் தொழில்நுட்ப வளர்ச்சியை காணமுடிகிறது.
  2. முழுவதும் எண்ணிமத் தொழில்நுட்பமாக்கப்பட்ட தமிழ்த் திரைப்படத்தில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  3. புதிய இயக்குநர்களின் வருகை புது நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
  4. தேசிய அளவில் தமிழ்த் திரைப்படங்கள் கவனிக்கப்படுவதுடன் விருதுகளையும் பெற்று வருகிறது.
  5. சில படங்களே உலகளவில் பேசப்படுகின்றன.
  6. பெரியார், வெயில், காக்கா முட்டை, மனுசங்கடா, விசாரணை போன்றவை குறிப்பிடத்தக்கவை.
  7. கலைத்தன்மை வாய்ந்த திரைப்படங்கள் அவ்வப்போது வந்தாலும். வணிக ரீதியிலான படங்களே அதிகம் தயாரிக்கப்படுகின்றன.

 

  1. திரைப்படத் தயாரிப்பில் கலை நுட்பங்கள் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை நிறுவுக.

முன்னுரை

இரண்டரை மணி நேரத்தில் நாம் பார்த்துவிடக்கூடிய ஒரு திரைப்படத்தை எடுப்பதற்குத் திரைப்படக் குழுவினர் மேற்கொள்ளும் முயற்சிகள் அளப்பரியவை.

கதை:

  1. இது திரைப்படத்தின் உயிர்நாடி
  2. கதை உணர்வு பூர்வமாக நம் மனநிலையில் ஒரு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும்.

முடிச்சு

  1. திரைக்கதையின் உயிர்மூச்சு முடிச்சு
  2. இது கதையினை விறுவிறுப்பாக நகர்த்த உதவும்

ஒருவரிக் கதை

  1. திரைக்கதையை காட்சிகளாக பிரிக்க வேண்டும்.
  2. காட்சிகளுக்கு வாசனங்களை உட்படுத்துதல்
  3. கதையின் சுருக்கமாக ஒரு பத்தி அளவில் சொல்லப்படும்.

காட்சித்துணிப்பு

  1. காட்சியைப் படமாக்கும் போது, பலகாட்சித் துணிப்புகளாக எடுத்துப்பின் ஒரே காட்சியாக இணைத்தல்
  2. காட்சித் துணிப்பு என்பது திரைப்படத்தின் மிகச்சிறிய கூறு

சட்டகம்

  1. திரையில் காட்டப்படும் தனியான பிம்பம் ஒரு சட்டகம்
  2. ஒவ்வொரு நிகழ்வையும் தனித்தனி காட்சித் துணிப்பாக எடுத்து ஒரே காட்சியாக தயாரிபர்.
  3. அண்மைக்காட்சி – மனிதன் (அ) பொருளை வைத்து அண்மையில் எடுக்கப்படும் துணிப்பு
  4. இடைநிலைக்காட்சி – இடுப்பு வரை எடுக்கப்படும் காட்சி
  5. சேய்மை காட்சி – நகரம் (அ நிலைப்பகுதியை காட்ட உதவும்
  6. முழுக்காட்சி – முகத்திலிருந்து பாதம் வரை எடுத்தல்

படப்பிடிப்பு கருவிக் கோணம்

  1. எந்தக் கோணத்தில் படமாக்க கருவியை வைக்கிறோமோ என்பதாகும்.
  2. உண்மையில் படப்பிடிப்புக் கருவியை நகர்த்தாமல் படம் பிடிப்பதுதான் சரியான படப்பிடிப்பு

நகர்த்த உதவும் கருவி

  1. தோளில் சுமக்கலாம்
  2. உருளைகள் பொருத்தப்பட்ட முக்காலி
  3. நகர்த்தி
  4. தூக்கிச் சுழற்றி
  5. வாகனங்கள்

எடுப்பு

காட்சித்துண்டு நாம் எதிர்பார்த்தது போல, சரியாக அமையும் வரை எடுப்பு நிகழும்

ஒருங்கமைத்தல்

சட்டகத்தில் உள்ள நடிகர்கள் (ம பொருட்கள் அனைத்தையும் ஓர் அழகியல் முறையில் அமைத்தல்

  1. ஒளி – ஒரு காட்சியை படம்பிடிக்க அவசியம்
  2. ஒளிப்பதிவு – திரைப்படத்தின் முக்கியக்கூறு
  3. ஒலி – பதிவு செய்தல்
  4. ஒலிப்பதிவு – உரையாடல், பாடல், பின்னணி, சிறப்பு ஒலிகள்
  5. மௌனம் – சில இடங்களில் பயன்பாடு
  6. உணர்வு – சிரிப்பு, அழுகை
  7. திரைமொழி – முகபாவணை
  8. உடல்மொழி – உடல் அசைவு

 

 

 

Scroll to Top