20.மாநில பொதுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் பங்கு

மாநில அரசுப்பணியாளர் தேர்வாணையம்

மத்தியில் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் இருப்பதுபோல் ஒரு மாநிலத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையமும் இயங்குகிறது. ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைய வழிவகுத்த அரசமைப்பு உறுப்புகளே (315 முதல் 323 வரை) இதற்கும் வழி வகுக்கிறது. அமைப்பு, உறுப்பினர்கள் நியமனம், நீக்கம், அதிகாரம், பணிகள் மற்றும் சுதந்திரத்தன்மை அனைத்தும் அரசமைப்பு மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்களுக்கும் வழங்குகிறது.

அமைப்பு

ஒரு மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆளுநரால் நியமிக்கப்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். ஆணையத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை அந்தந்த அரசுகளே நிர்ணயம் செய்துகொள்ள அரசமைப்பு அனுமதிக்கிறது. ஆனால், அது ஆளுநரின் அதிகாரத்துக்கு உட்பட்டது. மேலும், ஆணைய உறுப்பினர்களில் பாதி பேர் மத்திய மாநில அரசுகளின் நிர்வாகத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்றநிபந்தனைதவிரஉறுப்பினர்கள் தகுதி குறித்து அரசமைப்பு எதுவும் கூறவில்லை. மேலும் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பணி நிலைகள் குறித்து ஆளுநரே வரையறை செய்துகொள்ள அனுமதி வழங்குகிறது.

மாநிலஅரசுப்பணியாளர்தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் அல்லது 62 வயது இதில் எது முந்தியதோ அது ஆகும். ஆனால் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இந்த வயது வரப்பு 65 ஆகும். அதேநேரம் ஆளுநருக்கு முறைப்படி பதவி விலகல் கடிதம் அளிப்பதன் மூலம் பதவி விலக முடியும்.

கீழ்க்காணும் இரண்டு சூழ்நிலைகளில் தேர்வாணைய உறுப்பினர்களில் ஒருவரை தற்காலிக உறுப்பினராக ஆளுநர் நியமனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்:

  1. தலைவர் பதவி காலியாக இருக்கும் போது
  2. ஏற்கனவே தலைவர் பதவியில் இருப்பவரால் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் அலுவல்களை நிறைவு செய்ய இயலாத சூழ்நிலை உருவாகும்போது.

புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை அல்லது ஏற்கனவே பதவியில் இருக்கும் தலைவர் தனது அலுவல்களை மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகும் வரை தற்காலிக தலைவர் தலைவர் அலுவல்களை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்.

நீக்கம்

மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையதின் தலைவர், உறுப்பினர்கள் ஆளுநரால் நியமிக்கப்பட்ட போதும் குடியரசுத்தலைவரால் மட்டுமே ஒருவரை நீக்க முடியும் (ஆளுநரால் அல்ல). ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர், உறுப்பினர்களை நீக்கும் முறையிலேயே மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையதின் தலைவர், உறுப்பினர்களையும் குடியரசுத்தலைவர் நீக்கலாம். அவை வருமாறு:

  1. நொடித்துப்போதல் அல்லது கடனில் மோசடி
  2. தனது அலுவலகப் பணிகளுக்கு வெளியே ஊதியம் பெறும் ஊழியராகப் பணியாற்றும் போது
  3. உடல் நலம் குறைவு காரணமாக ஒருவரால்

அலுவலகப் பணிகளை மேற்கொள்ள இயலவில்லை என குடியரசுத்தலைவர் கருதும்போது.

இவைதவிர முறைகேடு குற்றத்தின் கீழும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் அல்லது உறுப்பினர்களை குடியரசுத்தலைவர் நீக்க முடியும். இருந்தபோதும் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கருத்துரை கேட்டும் குடியரசுத்தலைவர் செயல்படலாம். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் நீக்கத்துக்கான காரணத்தை உறுதி செய்தால் அதனடிப்படையிலும் குடிரசுத்தலைவர் நீக்கம் செய்வார். அரசமைப்பு வழங்கியுள்ள உறுப்புகளின் படி உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் வழங்கும் ஆலோசனை குடியரசுத்தலைவரின் முடிவைக் கட்டுப்படுத்தும். இருந்தபோதும், உச்ச நீதிமன்ற விசாரணை நடைபெறும் காலத்தில் மாநில ஆளுநர் குடிரசுத்தலைவரின் நீக்கத்தை நிறுத்தி வைத்து பணி இடை நீக்கம் மட்டும் செய்யலாம்.

மேலும், இப்பொறுத்தப்பாட்டில் அரசமைப்பு ‘தவறான நடத்தை’ எனும் சொல்லாடலைப் பயன்படுத்துகிறது. ஒரு மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் அல்லது ஏதேனும் உறுப்பினர்கள் தவறான நடத்தையில் ஈடுபடும் குற்றத்தில் ஈடுபடுவார்களானால் என கூறுகிறது. அவர் அ) மத்திய அல்லது மாநில அரசின் ஏதேனும் குறிப்பிட்ட ஒப்பந்தம், உடன்படிக்கையில் ஆர்வம் காட்டுபவரானால், ஆ) இத்தகைய ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கையில் பங்கேற்பதன் மூலம் உறுப்பினர் வருவாய் அல்லாமல் கூடுதல் வருவாய் அல்லது இதர உறுப்பினர்களுடன் இணைந்து ஆதாயம் கிடைக்கும் என்று கூறுகிறது.

சுதந்திரத் தன்மை

ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் போன்றே மாநில அரசுப் பணியாளர். தேர்வாணையங்களும் சுதந்திரமாகச் செயல்படுவதை உறுதி செய்யவும் பாகுபாடான செயல்பாடுகளில் இருந்து பாதுகாக்கவும் அரசமைப்பு உறுப்புகளில்வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:

  1. அரசமைப்பில் கூறப்பட்டுள்ள முறைகளில் அல்லது வழிகளில் நடந்துகொண்டால் மட்டுமே மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் அல்லது உறுப்பினர்களை குடியரசுத்தலைவர் நீக்க முடியும். இதனால் அவர்கள் பதவிக்காலம் உறுதிப்படுத்தப்படுகிறது.
  2. மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பணி நிலைகள் ஆளுநரால் முடிவு செய்யப்படுகின்றன எனினும் பதவி நியமனத்துக்குப் பின்னர் அவரது சாதகமற்ற நிலைமைக்கு ஏற்பமாறுதல் செய்ய இயலாது.
  3. மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஊதியம், சலுகைகள், ஓய்வூதியம் என அனைத்தும் அரசின் தொகுப்பு நிதியில் இருந்து வழங்கப்பட வேண்டும். இதனால் சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட வேண்டியதில்லை.
  4. ஒரு மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் (நீக்கப்படும்போது) ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அல்லது ஏதேனும் ஒரு மாநிலத்தின் தேர்வாணையத்தின் தலைவர் அல்லது உறுப்பினராக நியமனம் பெரும் தகுதியுடையவராகிறார். ஆனால், அரசின் வேறு பதவிகளுக்கு நியமிக்கப்பட முடியாது.
  5. மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வாணையத்தில் ஒரு முறை பதவி வகித்தபின்னர் மீண்டும் அதே பதவியில் மறு நியமனம்செய்யப்பட முடியாது. அதாவது இரண்டாவது முறை அப்பதவியில் நியமிக்கப்பட முடியாது.

பணிகள்

மத்திய அரசுப் பணியிடங்கள் தொடர்பில் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மேற்கொள்ளும் பணிகள் போன்றே மாநில அரசுப் பணியிடங்கள் தொடர்பில் அனைத்து பணிகளையும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் வழங்குகிறது. அவை பின்வருமாறு:

  1. மாநில அரசுப் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்துவது
  2. பணியாளர் மேலாண்மை தொடர்பாக கீழ்க்காணும் ஆலோசனைகள் வழங்குகிறது
  3. குடிமைப் பதவிகள், குடிமைப் பணிகள் தொடர்பான அனைத்து பணிகளுக்கான நியமன முறைகள்.
  4. குடிமைப் பணிகள் மற்றும் பதவிகளுக்கான நியமனங்கள், பதவி உயர்வுகள், இதர துறைகளுக்கு பணியிட மாறுதல்கள் போன்றவற்றில் கோட்பாடுகள் கடுமையாகப் பின்பற்றப்படுதல்
  5. குடிமைப் பணிகள் / பதவிகளுக்குப் பொறுத்தமான நபர்கள் நியமனம். மாறுதலிலும் இதே நிலை. அயல்நாட்டுப் பணிகள் மாறுதல்களிலும் பொறுத்தமான நபர்கள். பதவி உயர்வுக்கான பரிந்துரைகளை தொடர்புடைய துறைகள் தேர்வாணையத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும்.
  6. ஒரு மாநில அரசில் பணியாற்றும் பணியாளர்களின் பணியினைப் பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள்
  7. எச்சரிக்கை விடுத்தல்
  8. ஊதிய உயர்வு பிடித்தம்
  9. பதவி உயர்வு நிறுத்தம்
  10. இழப்பை ஈடு செய்தல்
  11. கீழ்நிலைப் பணிக்கு இறக்குதல்
  12. கட்டாய ஓய்வு
  13. பணியில் இருந்து விலக்குதல்
  14. பணியில் இருந்து நீக்குதல்
  15. ஒரு குடிமை ஊழியர் தமது கடமைகளில் இருந்து தவறியதற்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள அந்த ஊழியர் மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளுக்கான செலவுகள்
  16. பணியின் போது ஏற்படும் காயங்கள் காரணமாக ஓய்வூதியம் வழங்கக் கோரும் எவ்விதமான கோரிக்கைகள்; அல்லது தொடர்பில் கோரப்படும் ஏதேனும் தொகை.
  17. பணியாளர் மேலாண்மை தொடர்பான இதர அனைத்து விவகாரங்கள்

இந்த விவகாரங்களில் ஒரு மாநில அரசு தமது மாநில பணியாளர் தேர்வாணையத்துடன் கலந்தாலோசிக்கவில்லை எனில் பாதிக்கப்பட்ட அரசு பணியாளருக்கு நீதிமன்றமும் தீர்வு வழங்க இயலாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதாவது, தேர்வாணையத்துடன் கலந்தாலோசிப்பது அல்லது தேர்வாணைய ஆலோசனை இல்லாமல் செயல்படுவது ஆகிய தருணங்களில் மாநில அரசின் நடவடிக்கைகளை நீதிமன்றங்களால் ரத்து செய்ய இயலாது என்பது இதன் பொருளாகும். இதனால், மேற்கூறியவை வழிகாட்டுதல்களாகக் கொள்ளப்பட வேண்டுமேயொழிய சட்டப்பூர்வக் கடமையாகக் கொள்ளப்படக் கூடாது. அதாவது மேலே குறிப்பிட்ட விவகாரங்களில் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் ஆலோசிக்க வேண்டும் என்பது வழிகாட்டு நெறிகள்தாம்; சட்டப்பூர்வ கடமைகள் அல்ல. இதேபோல, மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்துள்ளது என்பதாலேயே அந்த நபருக்கு பணி வழங்குவது உரிமை என்று கோர முடியாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருந்தபோதும் அரசு நியாயமாகவும் பாகுபாடற்றும் நடந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசுப் பணிகள் தொடர்பாக மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு ஒதுக்கப்படும் கூடுதல் பொறுப்புகளை மாநிலச் சட்டமன்றங்கள் முடிவு செய்கின்றன. மாநிலச் சட்டமன்றங்கள் மூலம் உள்ளாட்சி பணியாளர் நியமனம், பெருநிறுவன அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்வது தொடர்பான கூடுதல் பொறுப்புகளையும் ஒரு மாநில அரசு தமது தேர்வாணையத்துக்கு அளிக்க முடியும். மாநிலச் சட்டமன்றத்தில் சட்டம் இயற்றுவதன் மூலம் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகார வரம்புகள் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

தமது செயல்பாடுகள் குறித்த ஆண்டறிக்கையை ஆண்டுதோறும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் மாநில ஆளுநரிடம் அளிக்கிறது. இந்த அறிக்கையைப் பரிசீலித்து தேர்வாணையத்தின் ஆலோசனைகள் ஏன் ஏற்கப்படவில்லை என்பதற்கான காரண-காரிய விளக்கங்களுடன் கூடிய தமது விளக்கத்துடன் மாநிலச் சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் ஆளுநர் முன் வைப்பார்.

வரம்புகள்

மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நிர்வாக வரம்புக்கு வெளியிலும் சில விவகாரங்கள் நிறுத்தப்படுகின்றன. அதாவது இவ் விவகாரங்களில் மாநில அரசு தமது தேர்வாணையத்தின் ஆலோசனைகளைப் பெற வேண்டியதில்லை. அவை வருமாறு

  1. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு பதவிகள் நியமனங்கள் இட ஒதுக்கீடு செய்யப்படும்போது
  2. பதவிகள், நியமனங்கள் ஒதுக்கீட்டில் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் கோரிக்கைகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் போது.

மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய வரம்புக்குள் வராத பதவிகள், பணியிடங்கள், இதர விவகாரங்களை ஆளுநர் நீக்குகிறார். மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் கலந்தாலோசிக்கத் தேவையில்லை எனக் கருதும் அரசு பணியிடங்கள், பதவிகள் தொடர்பாக ஆளுநரே ஒழுங்குமுறைகளை உருவாக்கிக்கொள்ள அரசமைப்பு அனுமதிக்கிறது. ஆனால், குறைந்தது 14 நாட்களுக்கு முன் மாநிலச் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு அவையின் ஒப்புதல் பெற்றே அறிவிக்கப்பட வேண்டும். இதில் சட்டமன்றம் எந்த திருத்தமும் மேற்கொள்ளலாம்; அல்லது நிராகரிக்கலாம். அதாவது, இறுதி முடிவை சட்டமன்றமே மேற்கொள்ளும்.

பங்களிப்பு

ஒரு மாநில அரசுப் பணியிடங்கள் தகுதி அடிப்படையில் நிரப்பப்படுவதைக் கண்காணிக்கும் அமைப்பாக மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைய வேண்டும் என அரசமைப்பு கருதியது. அரசு பணியிடங்களுக்கான நியமனம், மற்றும் பதவி உயர்வு, ஒழுங்குநடவடிக்கை விவகாரங்களில் ஆலோசனை கோரும்போது ஆலோசனை வழங்குவது ஆகியன தேர்வாணையத்தின் பணிகளாகக் கருதப்பட்டன. பணியிடங்களை வகைமைப்படுத்துதல், ஊதிய விகிதம், பணி நிலைகளை வகுத்தல், பதவி நிலை மேலாண்மை பயிற்சி போன்றவை தேர்வாணையத்தின் பொறுப்பல்ல. இந்த விவகாரங்களை மாநில அரசின் பொது நிர்வாகத் துறை அல்லது பணியாளர் (தனி) துறை மேலாண்மை செய்கிறது. எனவே, மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது மையப்படுத்தப்பட்ட நியமன முகமை மட்டுமே. மாநிலத்தின் பணியாளர்கள் மேலாண்மை என்பது மாநில அரசின் பணியாளர் (தனி) துறை அல்லது பொது நிர்வாகத் துறையின் பணிகள் ஆகும்.

மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையப் பணிகள் வரம்புக்கு உட்பட்டவை மட்டுமல்லாமல் அவை அளிக்கும் ஆலோசனைகளும் அரசைக் கட்டுப்படுத்தாது. ஆணைய ஆலோசனைகளை ஏற்பதும் நிராகரிப்பதும் திருத்துவதும் அரசின் முடிவு ஆகும். ஆனால், இவ்வாறு நிராகரிப்பது அல்லது திருத்துவதும் ஏன் என்பதற்கு அரசு சட்டமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என்பது ஆணைய ஆலோசனைகளுக்கு உள்ள ஒர் பாதுகாப்பு அம்சம் ஆகும். மேலும் ஒரு சட்டம் இயற்றுவதன் மூலமும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆலோசனை செயல்பாடுகளுக்கான விதிகளை உருவாக்க முடியும்.

1964இல் மாநில கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்ட பின்னர் ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பங்களிப்பு பாதிப்புக்குள்ளானது. ஏனெனில் ஒரு குடிமைப் பணியாளருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதில் இரண்டு அமைப்புகளும் ஆலோசிக்கப்படுகின்றன. அப்போது இரண்டு அமைப்புகளும் முரண்பாடான முடிவை மேற்கொள்ளும்போது பிரச்சனை எழுகிறது. இருந்தபோதும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைம் ஒரு சுயாட்சியான அமைப்பு என்பதால் அதன் முடிவுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

இறுதியாக, நீதித்துறையில், மாவட்ட நீதிபதிகள் அல்லாத பிற நீதித்துறை பணியிடங்களுக்கான நியமன விதிமுறைகளை வகுக்க மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆலோசிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மாநில உயர் நீதிமன்றமும் ஆலோசிக்கப்பட்டது.

ஆசிரியர் தேர்வு வாரியம்

அறிமுகம்

ஆசிரியர் தேர்வு வாரியம் 1987-ஆம் தோற்றுவிக்கப்பட்டது. அரசுப் ஆண்டு பள்ளிகளுக்கான ஆசிரியர்களைத் தெரிவு செய்வது, கல்லூரிக் கல்வி இயக்ககம், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மற்றும் சட்டக் கல்வி கீழ்வரும் உதவிப் பேராசிரியர் இயக்ககத்தின் பணியிடங்களைத் தெரிவு செய்வது ஆகிய பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் தோற்றுவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை 1, 64,455 ஆசிரியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வினை (TNTET) நடத்தும் முகவாண்மையாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்படுகிறது.

நோக்கம்

பல்வேறு துறைகளின் தேவைகளுக்கேற்ப தகுதியான ஆசிரியர்களைத் தெரிவு செய்வதே ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முதன்மையான நோக்கமாகும். ஆசிரியர் தேர்வு வாரியமானது, வெளிப்படைத் தன்மையுடன் தமிழ்நாடு மின் ஆளுமை முகவாண்மையின் (TNeGA) நவீன தொழில்நுட்ப உதவி மற்றும் வழிகாட்டுதலுடன் அனைத்துத் தேர்வுகளை நடத்துகிறது.

தெரிவுமுறையும் நவீனமயமாக்கலும்

எந்தவொரு தெரிவு முறையும் முழு மந்தத்தன்மைக்கு உறுதி அளிப்பதாக இருத்தல் வேண்டும். எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் மிகக் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றிவருகிறது. பணித்தெரிவிற்கான வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியத்தினை உறுதி செய்யும் பொருட்டு, தெரிவு நடைமுறைகளில் தொழில்நுட்பம் மற்றும் கணினி பயன்பாடுகளை பல்வேறு நிலைகளில் பயன்படுத்துகிறது. ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் அனைத்துப்பகுதிகளும் CCTV உதவியுடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுகள் தொடர்பாக பணிநாடுநர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து பதிலளிப்பதற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய தகவல் மையம் செயல்பட்டு வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கணினிவழியாக நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளும் CCTV மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் மாவட்டங்களில் நடைபெறும் அனைத்துத் தேர்வுகளும் CCTV மூலம் கண்காணிக்கப்படுகின்றன. மாவட்ட அளவில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளும் தலைமையிடத்திலிருந்து நேரடியாக காணொலி (Live Stream) மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

தெரிவுப்பணியி வெளிப்படைத் தன்மை

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளுக்கும் தேர்வு நடந்து முடிந்த பின்னர்,

  1. வினாக்களுக்குரிய விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படுகிறது, தேர்வர்களிடமிருந்து விடைகள் சார்ந்து பெறப்படும் அனைத்துக் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு, இணையதளம் வாயிலாக பதிலளிக்கப்படுகிறது.
  2. அனைத்து தேர்வர்களுக்கும் அவர்கள் அளித்த பதில் (Response sheet) மற்றும் கேள்வியின் (Copies of Questions) நகல் இணையதளம் வாயிலாக பகிரப்படுகிறது.
  3. அனைத்துத் தெரிவு நடைமுறைகளும் தகவல்களும் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.

சாதனைகள்

2021-22 ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி, போட்டி எழுத்துத் தேர்வினைத் தொடர்ந்து தெரிவு நடைமுறைகளைப் பின்பற்றி 96 தகுதியான பணிநாடுநர்கள் தெரிவு செய்யப்பட்டு தெரிவர் பட்டியல் சார்ந்த துறைக்கு வழங்கப்பட்டது. மேலும், ஆசிரியர் தேர்வு வாரியம் 60 கணினிப் பயிற்றுநர் நிலை-1 காலிப்பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த பணிநாடுநர்களைத் தெரிவு செய்து தெரிவர் பட்டியலை சார்ந்த துறைகளுக்கு வழங்கியுள்ளது.

அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணித் தெரிவிற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பின்வருமாறு வெளியிடப்பட்டது.

08.12.2021 முதல் 12.12.2021 வரை கணினி வழியாக தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

12.02.2022 முதல் 20.02.2022 வரை கணினி வழியாக முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்/ உடற்கல்வி இயக்குநர் நிலை -1 / கணினிப் பயிற்றுநர் நிலை – 1 தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது.

வருடாந்திரத் திட்டம் 2022

2022 ஆம் ஆண்டுப் பணித்தெரிவிற்கான உத்தேசக் கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) நடத்துவதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டு அதற்கான தேர்வு விரைவில் நடத்தப்படவுள்ளது.

இதேபோல் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், SCERT விரிவுரையாளர்கள், அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் மற்றும் அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் ஆகிய நியமனங்களுக்கான தெரிவுப் பணிகள் இவ்வாண்டில் மேற்கொள்ளப்படும்.

ஆசிரியர் தேர்வு வாரியம் -மறுசீரமைப்பு நடவடிக்கைகள்

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பணிகளை விரைவுபடுத்தும் பொருட்டு மறுசீரமைப்பதற்கான வழி வகைகளை சமர்ப்பித்திட அரசால் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. வல்லுநர் குழுவின் பரிந்துரைகள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன.

நிதி ஒதுக்கீடு

2022-23 ஆம் ஆண்டிற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ரூ.4.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்(MRB)

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் 2012-ஆம் ஆண்டு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையில் பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை விரைவாகவும், உரிய நேரத்திலும் நேரடிப் பணி நியமனம் மூலம் நிரப்பிடுவதைக் குறிக்கோளாகக் கொண்டு துவக்கப்பட்டது. நேரடி நியமனங்களை விரைவாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் செய்வது மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் முக்கிய குறிக்கோளாகும். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், நாளேடுகளில் விளம்பரம் செய்து, இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்களைப் பெற்று, நியாயமான முறையில் தேர்வு செய்கிறது. தகுதியான பணியாளர்களை தேர்ந்தெடுப்பதை பெருமுயற்சியாகக் கொண்டு, உதவி மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவம் சார்ந்த பதவிகளுக்கான நேரடி பணி நியமனத்தினை, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், அப்பதவிகளுக்கேற்ப எழுத்துத் தேர்வு நடத்தியும், தகுதி மதிப்பெண்கள் அடிப்படையிலும் மற்றும் நடைமுறையில் உள்ள விதிகளின் படி இனசுழற்சி மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

சிறப்பு மருத்துவர்கள் தேர்வுக்கான சிறப்பு முறை:      

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், பொதுமக்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் பொருட்டு சிறப்பு தகுதி பெற்ற உதவி மருத்துவர்களை, நடைமுறையில் உள்ள இன சுழற்சி மற்றும் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி, பல்வேறு அரசு மருத்துவ நிலையங்களில் பணியாற்ற உடனடி தேர்வு முறையில் (Walk-in-selection) தேர்வு நடைபெறும்.

தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு அரசு மருத்துவ நிலையங்களிலும் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் மிகுந்த வெளிப்படைத்தன்மையோடு விரைந்து நிரப்பி பொதுமக்களுக்கு சேவை புரிவதை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இவ்வாரியத்தின் தேர்வு முறை வெளிப்படை தன்மை உள்ளதாகவும் இணையளதளத்தின் வாயிலாக விண்ணப்பங்களை பெற்று, தேர்வு நடைபெற்று விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்களை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. மேலும் ஊரக பகுதியை சேர்ந்த விண்ணப்பதாரர்களும் தங்களின் விண்ணப்பங்களின் நிலையையும், தேர்வு நடைமுறை விவரங்களையும் அறிந்து கொள்ளும் விதமாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் அனைத்து பணியிடங்களுக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களை 100% நியமனம் செய்யும் பொருட்டு, அனைத்து போட்டி தேர்வு மற்றும் இதர தேர்வு முறைக்கு தமிழ் மொழி தகுதித் தேர்வினை அரசு ஆணை (நிலை) எண்.133, மணித வள மேலாண்மை (எம்) துறை, நாள் 01.12.2021-ன் படி நடைமுறைத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) என்பது காவல்துறை, சிறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி ஆகிய சீருடை அணிந்த துறைகளின் கீழ்நிலைப் பணிகளுக்குத் தகுந்த ஆட்களைத் தேர்வு செய்து பணியமர்த்துவதற்காக உருவாக்கப்பட்டது.

இந்த வாரியம் பின்வரும் பதவிகளுக்கு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்கிறது:-

  • காவல் துணை ஆய்வாளர்கள் (தாலுகா, ஏஆர், டிஎஸ்பி)
  • காவல் துணை ஆய்வாளர்கள் (தொழில்நுட்பம்)
  • காவல் துணை ஆய்வாளர்கள் (கைரேகை)
  • தரம் II போலீஸ் கான்ஸ்டபிள்கள்
  • தரம் II சிறை வார்டர்கள் மற்றும்
  • தீயணைப்பு வீரர்கள்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், தகுதியின் அடிப்படையில், அரசு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற முறையில் ஆட்சேர்ப்பை நடத்தி வருவதை இந்த அரசு உறுதி செய்கிறது. உடல் பரிசோதனைகளின் போது டிஜிட்டல் கேஜெட்களைப் பயன்படுத்துவதன் மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கப்படுகிறது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) தமிழ்நாடு அரசாங்கத்தால் நவம்பர் 1991 இல் உருவாக்கப்பட்டது வீடியோ G.O. Ms. No. 1806, Home (Ser.F) Department, தேதி 29.11.1991 சீருடைப் பணிகளுக்கான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக. காவல்துறை, சிறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் போன்றவை.

அமைப்பு

TNUSRB ஆனது காவல்துறை இயக்குநர் ஜெனரல் தரத்தில் ஒரு தலைவர், கூடுதல் காவல்துறை இயக்குநர் பதவியில் ஒரு உறுப்பினர், இன்ஸ்பெக்டர் ஜெனரல் அந்தஸ்தில் ஒரு உறுப்பினர் செயலாளர், ஒரு காவல் கண்காணிப்பாளர், ஒரு சட்ட ஆலோசகர், ஒரு மூத்த நிர்வாக அதிகாரி ஆகியோரைக் கொண்டுள்ளது. அதிகாரி, ஒரு துணைக் கண்காணிப்பாளர், ஒரு தனி உதவியாளர் மற்றும் 20 அலுவலக ஊழியர்கள்.

செயல்பாடுகள் மற்றும் கடமைகள்

காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மற்றும் சிறைத் துறை ஆகியவற்றுக்குப் பணியாளர்களை நியமிக்கும் பொறுப்பு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது:-

துணை ஆய்வாளர்கள்:

(i) சப் இன்ஸ்பெக்டர் (AR, TALUK, TSP) (ஆண்கள் மற்றும் பெண்கள்)

(ii) சப் இன்ஸ்பெக்டர் (தொழில்நுட்பம்) (ஆண்கள் மற்றும் பெண்கள்)

(iii) சப் இன்ஸ்பெக்டர் (கைரேகை) (ஆண்கள் மற்றும் பெண்கள்)

போலீஸ் கான்ஸ்டபிள்:

(i) தரம் II போலீஸ் கான்ஸ்டபிள்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்)

(ii) கிரேடு II தீயணைப்பு வீரர்கள் (ஆண்கள் மட்டும்)

(iii) தரம் II சிறைக் காவலர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்)

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம்

வனவர் (பாரஸ்டர்), வன காப்பாளர் (பாரஸ்ட் கார்டு), வனக்காவலர் (பாரஸ்ட் வாட்சர்) போன்ற வனத்துறை ஊழியர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் (TNFUSRC) என்ற அமைப்பு தமிழக அரசின் சுற்றுச்சூழல் (ம) வனத்துறையின் ஓர் அரசாணை மூலம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

நோக்கம்

வனப் பணிக்கு ஊழியர்களை தேர்வு செய்வது

அமைவிடம்

சைதாப்பேட்டை, சென்னை -600 015. தமிழ்நாடு

வனத்துறைப் பணியாளர்

வனத்துறைப் பணியாளர் (Forest range officer) என்பவர் மாநில அரசாங்கத்தில் ஒரு மாநில வன சேவையின் அதிகாரியாவார். சில மாநிலங்களில், இவர்கள் “வன வரம்பு அதிகாரி” என்றும், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், தலைமை வனப்பாதுகாவலர், வனப்பாதுகாவலர், உதவி வனப்பாதுகாவலர், மாவட்ட வன அதிகாரி, வனச்சரக அதிகாரி அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பரிந்துரைக்கப்பட்ட காக்கி சீருடையை அணிவார்கள். அதில் 3 மூன்று (ஐந்து புள்ளிகள்) நட்சத்திரங்கள் தோளில் கோடுகள் இல்லாமல் இருக்கும். பணியாளர்கள், வனவர், ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர், வனக் காவலர் எனவும் அறியப்படுகின்றனர்.

தேர்வு முறைகள்

உயர் பணியில் நியமிக்கப்படும் அதிகாரிகள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாகவும் நேரடியாக இந்திய வனப்பணியீலும் மாநில வனப்பணியில் உதவி வனப்பாதுகாவலர்கள், வனச்சரகர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவும் தேர்வுசெய்யப்படுகிறார்கள். பணிஅயாளர்களான வனவர் வன காப்பாளர் வனக்காவலர் ஆகியோர் இதுவரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு பட்டியல் பெறப்பட்டு அதில் இடம் பெற்றவர்களுக்கு தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு நடத்தப்பட்டு தேர்வுசெய்யப்பட்டு வந்தனர். தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (காவல்துறை தீயணைப்புத் துறையினர் போல்) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வனவர் பணிக்கு இளங்கலை அறிவியியல் அல்லது இளங்களை பொறீயியல் பட்டமும் வன காப்பாளர் பதவிக்கு பனிரண்டாம் வகுப்பும் கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பு 30 இருக்கவேண்டும். வனவர் பணிக்கு எழுத்துத் தேர்வுஉடல் தகுதித் திறன் நேர்முகத் தேர்வு ஆகியவையும் வன காப்பாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் உடல் தகுதித் திறன் தேர்வு லமும் தேர்வு செய்யப்படுகிறது.

பொறுப்புகள்

வனத்தைப் பாதுகாத்தல், வனத்தின் சுற்றுச்சூழலைக் கண்காணித்தல், விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான மோதல்களை நெறிப்படுத்துதல் வனவருடைய பணிகளாகும் இந்த வேலையில் சேருவதற்கு உடல் தகுதியும் படிப்புத் தகுதியும் இருக்க வேண்டும். உடல்தகுதியாக 160 செமீ உயரம் இருக்கவேண்டும். இவர்கள் தகுதித் தேர்வு மற்றும் எழுத்துத்தேர்வில் அதிக மதி்ப்பெண் எடுக்க வேண்டும். இவர்கள் 5 மணி நேரத்தில் 25 கிமீ கடக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட வனச்சரக அழுவலர்கள் வனக் கல்விக் கூடத்தில் வனவியல் கல்வி கற்பிக்கப்படுகிறது .பயிற்சிகாலம் 18 மாதங்கள் இதில் வனம் மற்றும் வேளாண்மை சம்பதப்பட்ட 35 பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. பயிற்சிக்காலங்களில் சம்பளம் வழங்கப்படு

Scroll to Top