5.சமகாலத் தமிழர்களின் சமூக மற்றும் பண்பாடு வாழ்வியல் : சாதி, மதம், பெண்கள், அரசியல், கல்வி, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் ஏனைய நாடுகளுடனான உறவு.

கொங்குநாட்டு வணிகம் பற்றி எழுதுக.

கொங்கு மண்டலப் பகுதிகளில் இன்றைய வணிகம் பற்றி எழுதுக.

சேர நாடு

  1. தலைநகர் – வஞ்சி
  2. கொடி – வில்கொடி
  3. பூ – பனம்
  4. துறைமுகம் – தொண்டி, முசிறி, காந்தளூர்
  5. வேறுபெயர் – கரூர்

 

பழங்கால வணிகம்

  1. சேரநாடு கடல் வணிகத்தில் சிறப்புற்று இருந்தது
  2. காரணம் : சேரநாட்டின் இயற்கை அமைப்பு
  3. சேரர்கள் வலிமைமிகுந்த கப்பல் படையை கொண்டிருந்தனர்.
  4. செங்குட்டுவன் கடற்போர் வெற்றி
  5. கடம்பரர் என்ற கடற்கெள்ளையர்களை அடக்கினர்
  6. சிறந்த துறைமுகம் – முசிறி

 

ஏற்றுமதி பொருட்கள்

  1. மிளகு, முத்து
  2. யானைத்தந்தங்கள்
  3. பட்டு, மணி

 

இறக்குமதி பொருட்கள்

  1. பொன்
  2. மென்மைமிக்க புடவைகள்
  3. சித்திர வேலைப்பாடு அமைந்த ஆடைகள்
  4. பவளம், செம்பு, கோதுமை

 

கொங்கு மண்டலப் பகுதிகளில் இன்றைய வணிகம்

  1. நீலகிரி
  2. கோயம்புத்தூர்
  3. திண்டுக்கல்
  4. ஈரோடு
  5. திருப்பூர்
  6. நாமக்கல்
  7. சேலம்
  8. கரூர்

 

  1. நீலகிரி
    1. கிழக்கு (ம) மேற்குத் தொடர்ச்சி மலை சந்திக்கும் இடம்
    2. காபி, தேயிலை, உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோஸ், தைலரமரம்
  • தேயிலை, எண்ணெய் தொழிற்சாலைகள் உள்ளன.

 

  1. கோயம்புத்தூர்
  2. நெல், வாழை, கரும்பு, காய்கறி, பூக்கள்
  3. பஞ்சாலை, நூற்பாலை, மின்சாரப் பொருள்கள், எந்திரங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன.

 

  1. திண்டுக்கல்
  1. தமிழ்நாட்டின் ஹாலந்து
  2. நெல், சோளம், திணை, வாழை, காய்கறிகள்
  • அரிசி, தோல், பூட்டுத் தொழிற்சாலைகள்
  1. சின்னாளபட்டிச் சுங்குடிச் சேலைகள்

 

  1. ஈரோடு
  2. நெல், நிலக்கடலை, மஞ்சள், கரும்பு, பருத்தி, எள்
  3. மஞ்சள் சந்தை
  • துணி நூற்பாலைகள், எண்ணெய், சர்க்கரை ஆலைகள்

 

  1. திருப்பூர்
  2. பின்னலாடை நகரம்
  3. நெல், கரும்பு, பருத்தி, வாழை
  • நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா – உள்ளது
  1. காங்கேயம் காளைகள்

 

  1. நாமக்கல்
    1. பச்சை, கொல்லி, சேர்வராயன் மலை
    2. நெல், கரும்பு, சோளம், நிலக்கடலை, பருத்தி
  • முட்டை கோழி வளர்ப்பு
  1. சிமெண்ட், காகித, கைத்தறி நெசவாலைகள்

 

  1. சேலம்
  1. மாங்கனி நகரம்
  2. ஏழைகளின் ஊட்டி – ஏற்காடு
  • நெல், பருப்பு, பருத்தி, கரும்பு, மாம்பழம், காபி, பாக்கு
  1. வனஸ்பதி, A1, சந்தன எண்ணெய்

 

  1. கரூர்
  2. தமிழகத்தின் முதன்மை உள்நாட்டு வாணிக மையம்
  3. வஞ்சி மாநகரம்
  • நெல், சோளம், கேழ்வரகு, கம்பு, கரும்பு
  1. கல்குவாரி தொழிற்சாலைகள், கைத்தறி, தோல் பதனிடுதல்

 

  1. தமிழரின் கப்பற்கலை பற்றி எழுதுக.

முன்னுரை

தொல்காப்பியம் கடற்பயணத்தை “முந்நீர் வழக்கம்” என்று குறிப்பிடுவதிலிருந்து, தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழர்கள் கடற்பயணம் செய்துள்ளனர் என்பதை அறியலாம்.

 

திருக்குறள் குறிப்பிடுவது

“கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாயும் ஓடா நிலத்து”

என்னும் திருக்குறள் திருவள்ளுவர் காலத்திலேயே பெரிய கப்பல்கள் இருந்தன என்பதற்குச் சான்றாகும்.

 

இலக்கியச் சான்றுகள்

  1. பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் பொருள்கள் ஏற்றுமதி – இறக்குமதி செய்யப்பட்டதை பட்டினப்பாலை மூலம் அறியலாம்.
  2. சேந்தன் திவாகரம் எனும் நிகண்டில் பலவகையான கப்பலின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

நீர்நிலைகளில் பயணம்

  1. தமிழர்கள் தோணி, ஓடம், படகு, புணை, மிதவை, தெப்பம் போன்றவற்றை சிறிய நீர்நிலைகளைக் கடக்க பயன்படுத்தினர்.
  2. கலம், வங்கம், நாவாய் முதலியன கடல் பயணத்தில் பயன்பட்டன.

 

கப்பல் கட்டும்கலை

  1. கப்பல் கட்டும் கலைஞர்களை கம்மியர் எனப்பட்டனர்
  2. நீர்மட்ட வைப்பிற்கு இலுப்பை, புன்னை, நாவல்மரம் பயன்பட்டது.
  3. பக்கங்களுக்குத் தேக்கு, வெண்தேக்கை பயன்படுத்தினர்
  4. வெட்டுவாய் – மரத்தின் வெட்டப்பட்ட பகுதி
  5. கண்ணடை – இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள்
  6. நீள, அகல, உயரத்தை கணக்கிட தச்சுமுழம் என்ற நீட்டலளவை பயன்பட்டது.
  7. பெரிய படகின் முன் பக்கத்தை யானை, குதிரை, அன்னம் முதலியவற்றின் தலையைப் போன்று வடிவமைத்தனர்.
  8. மரம் (ம) பலகையை இணைக்க தேங்காய் நார், பஞ்சு பயன்பட்டது.
  9. மரத்தினாலான ஆணியையே பயன்படுத்தினர்
  10. சுண்ணாம்பு (ம) சணலை கலந்து அரைத்து அதில் எண்ணெய் கலந்து கப்பலின் அடிப்பகுதியில் பூசினர்.
  11. இத்தாலி நாட்டைச் சார்ந்த மார்க்கோபோலோ இதனை வியந்து பாராட்டியுள்ளார்.
  12. காற்றின் உதவியால் செல்லும் பாய்மரக் கப்பல்களையும் வடிவமைத்தனர்.

 

கப்பலின் உறுப்புகள்

  1. எரா – கப்பலின் அடிமரம்
  2. பருமல் – குறுக்கு மரம்
  3. சுக்கான் – கப்பலை செலுத்த (ம) உரியதிசையில் திருப்ப பயன்பட்ட கருவி
  4. நங்கூரம் – கப்பலை ஓரிடத்தில் நிலையாக நிறுத்த
  5. சமுக்கு – காந்த ஊசி பொருத்தப்பட்ட திசைகாட்டும் கருவி
  6. மாலுமி – கப்பலைச் செலுத்துபவர்

 

கப்பலைச் செலுத்தும் முறை

  1. காற்றின் திசை அறிந்து கப்பல்களை செலுத்தினர்
  2. இதனை புறப்பாடல் மூலம் வெண்ணிக்குயத்தியின் தெரிவிக்கிறார்.
  3. திசைகாட்டும் கருவியை பயன்படுத்தினர்
  4. விண்மீன்களின் நிலையை வைத்தும் திசையை அறிந்தனர்.
  5. மாலுமிகள் சிறந்த வானியல் அறிவை பெற்று இருந்தனர்.
  6. கோள்களின் நிலையை வைத்துப் புயல், மழை, கடல்நீர் பொங்கும் காலத்தையும் அறிந்து கப்பல்களை செலுத்தினர்.
  7. கடலில் செல்லும் கப்பல்களுக்குத் துறைமுகம் இருக்கும் இடத்தைக் காட்ட கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது.

முடிவுரை:

இத்தகைய சீர்மிகு கப்பல் கலையில் தமிழர்கள் சிறந்து விளங்கினர் என்பது பெருமை அளிக்கும் செய்தியாகும்.

 

  1. தமிழகத்தின் பழங்காலத்துறைமுகங்கள் பற்றியும் அங்கு நடைபெற்ற வாணிகம் பற்றியும் விளக்குக.

முன்னுரை:

திரைகடலோடியும் திரவியம் தேடு எனும் ஔவையின் மொழியின், யாதும் உருரே யாவரும் கேளிர் எனும் கணியன் பூங்குன்றனாரின் மொழியும் தமிழர்களின் உலகளாவிய பன்னாட்டுத் தொடர்புக்கு சான்றாகும்.

 

தமிழரின் கடற்பயணம்

  1. தொல்காப்பியம் கடற்பயணத்தை “முந்நீர் வழக்கம்” என குறிப்பிடுகிறது.
  2. தமிழர்கள் மேற்கே கிரீசு, ரோம், எகிப்து முதல் கிழக்கே சீனா வரையிலும் கடல் வழி வணிகத் தொடர்பு கொண்டு இருந்தனர்.
  3. எகிப்து, பாலஸ்தீனம், மெசபடோமியா, பாபிலோனியா, சீனாவில் தமிழரின் பொருள்கள் விற்கப்பட்டன.
  4. ஏலம், இலவங்கம், இஞ்சி, மிளகு, நல்ல விலைக்கு விற்கப்பட்டன.
  5. முத்து, பவளம், ஆரம், வெண்சங்கு, வெண்துகில் ஏற்றுமதி ஆகின.
  6. பழந்தமிழர் கிரேக்கரையும் உரோமனியரையும் யவனர் என அழைத்தனர்.

 

கப்பல்

  1. தமிழகத்தில் பல்வகையான கப்பல்கள் கட்டப்பட்டன.
  2. ஒவ்வொரு கப்பலும் மதில் சூழ்ந்த கோட்டைபோலத் தோன்றும்
  3. நான்கு பக்கமும் நீர் நிரம்பிய கழனிகள்
  4. அதன் நடுவில் தனியாக மதிலோடு கூடிய மருதநில அரசனது கோட்டை என புறநானூறு குறிப்பிடுகிறது.

 

கடலும் மரக்கலங்களும்

  1. ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம் என்பவை கடலை குறிக்கும் தமிழ்ச் சொற்கள்
  2. கப்பல், கலம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புணை, தோணி, கப்பம், மிதவை, ஓடம்
  3. ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு வகையான கலத்தைக் குறித்தன.

 

துறைமுகங்கள்

முசிறி

  1. சேர மன்னர்களுக்கான துறைமுகம்
  2. சுள்ளி என்னும் ஆற்றில் யவனர்களின் மரக்கலங்கள் ஆற்றுத்துறைகள் கலங்கும் படி வந்து நின்றன.
  3. அக்கலங்களுக்கு உரிய யவனர்கள், பொன்னைச் சுமந்து வந்து அதற்கு ஈடாக மிளகை ஏற்றிச் சென்றனர்.

 

கொற்கை

  1. பாண்டிய நாட்டுத் துறைமுகம்
  2. இங்கு முத்துக் குளித்தல் சிறப்பாக நடைபெற்றது. இதனை வெனிசு நாட்டவர் மார்க்கோபோலோ குறித்துள்ளார்.
  3. “விளைந்து முதிர்ந்த விழுமுத்து” என மதுரைக் காஞ்சி குறிப்பிடுகிறது.

 

பூம்புகார்

  1. சோழர்களின் துறைமுகம்
  2. இங்கு சுங்கச்சாலை (ம) கலங்கரை விளக்கம் இருந்தன.
  3. இங்கு ஏற்றுமதி – இறக்குமதி பொருட்கள் முன்றிலில் மலைபோலக் குவிந்து கிடந்தன.
  4. சந்தனம், முத்து, பவளம் ஏற்றுமதி செய்யப்பட்டன.
  5. குதிரை, கருமிளகு, தங்கம் இறக்குமதி செய்யப்பட்டன.
  6. கப்பல் கட்டும் தளம் (ம) கப்பல் செப்பனிடும் தளம் இருந்தது.

 

தொண்டி

  1. சேரநாட்டுத் துறைமுகம்
  2. தத்தம், பட்டு, மிளகு ஏற்றுமதியாயின.
  3. தங்கம், வெள்ளிக்காசுகள், பழம், மது, இறக்குமதி
  4. பெரிப்ளூஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

வசவ சமுத்திரம்

  1. இது மாமல்லைக்கு அருகில் இருந்தது.
  2. உரோமனியருடன் நெருங்கிய தொடர்பு இருந்தது

 

 

ஏற்றுமதி (ம) இறக்குமதி

  1. வாணிகக் குறிப்புகள் பட்டினப்பாலை (ம) மதுரைக் காஞ்சியில் காணப்படுகின்றன.
  2. ஏற்றுமதி ரத்தினம், முத்து, வைரம், மிளகு, தேக்கு, சந்தனம், வெண்துகில், அரிசி, ஏலக்காய், இஞ்சி
  3. சீனப்பட்டும் சர்க்கரையும் இறக்குமதி

 

முடிவுரை:

“மேலைக்கடல் முழுவதும் கப்பல் விடுவோம்” என்ற பாரதியின் கனவு இன்று நனவாகி உள்ளது.

 

  1. சங்ககால மக்களின் வணிக, பொருளாதார நிலையை விளக்குக

முன்னுரை

திணைக் கோட்பாடு விளக்குவது போலவே சங்ககால பொருளாதாரம் பல வகைப்பட்டதாக இருந்தது

பொருளாதாரம்

  1. வேளாண்மை உற்பத்தி
    1. நெல், கரும்பு, சிறுதானியங்கள் பயிரிடப்பட்டன.
    2. ஆறு, ஏரி, குளம் என பாசன வசதிகள் இருந்தன.
  • செந்நெல், வெண்நெல், ஐவனநெல் என பலவகை இருந்தன.
  1. ஆதிச்சநல்லூர், பொருந்தல் ஆகழாய்வில் தாழிகளுடன் நெல் கிடைத்துள்ளது.

 

  1. கால்நடை வளர்ப்பு

பசு, எருமை, காளை உள்ளிட்ட மாடுகள், வெள்ளாடு செம்மறி ஆடுகளை வளர்த்தல் மூலம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பெருக்கினர்.

  1. சங்ககால கைவினை (ம) தொழிற்கூடங்கள்
  2. மட்கலன்கள் செய்தல்
  3. இரும்பு உருக்குத் தொழில்
  • கல்லில் செய்த அணிகலன்கள்
  1. தங்க ஆபரணங்கள்
  2. கண்ணாடி மணிகள்
  3. முத்துக்குளித்தலும் சங்குவளையல்களும்
  • துணி நெசவு

 

  • நூல் நூற்கும் கதிர்களும் துண்டுத் துணிகளும் கொடுமணலில் கிடைத்துள்ளன.
  • கலிங்கம் (ம) பிறவசைத் துணிகள் குறித்த குறிப்புகள் இலக்கியங்களில் காணப்படுகின்றன.
  • பெரிப்ளஸ் நூலில் தமிழகத்தில் துணிகள் நெய்யப்பட்ட தகவல்கள் கிடைக்கின்றன.

வணிகர்கள் (மக்கள்)

  1. யவணர்கள் – கிரேக்க, ரோமாபுரி நாடுகளிலிருந்து வந்த வணிகர்கள்
  2. உமணர்கள் – உப்பு வணிகர்கள் ஆவர். இதனை பற்றி குறிப்புகள் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படையில் உள்ளது.
  3. தமிழ் – பிராமிகல்வெட்டிகளில் வணிகர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
  4. வம்பலர் கூட்டம் – வெளி நாட்டவர் மலைபடு, கடல்படு பொருள்களை வாங்கி விற்றனர்.
  5. அங்காடிகள்
  6. மதுரையில் கடைத்தெருக்கள் இருந்தன.
  7. நாளங்காடி – பகலில் செயல்பட்டது
  8. அல்லங்காடி – இரவில் செயல்பட்டது
  9. துறைமுகங்கள்

காவிரி பூம்பட்டினம், கொற்கை, முசிறி, தொண்டி, வசவ சமுத்திரம் போன்றவை.

  1. போக்குவரத்து முறைகள்
  2. மாட்டுவண்டிகளும் விலங்குகளும் பயன்பட்டன.
  3. கடற்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
  4. கலம், பரி, ஓடம், தோணி, தெப்பம், நாவாய் பயன்படுத்தப்பட்டன.
  5. பண்டமாற்று முறையும் நணயங்களும்
  6. அரிசியைக் கொடுத்து மீனைப் பெற்றனர்.
  7. உப்பு விலை மதிப்புடையதாகக் கருதப்பட்டது.
  8. சேர, சோழ, பாண்டிய அரசர்களின் நணங்கள் பெருமளவு கிடைத்துள்ளன.

5.வருவாய்

  1. வரி – 1/6 பகுதி செலுத்தினர்.
  2. சுங்கவரி வணி சாத்துகள் செலுத்தினர்
  3. திறை என்பது சிற்றரசர்கள் செலுத்திய வரி
  4. படையெடுப்பில் கைப்பற்றிய செல்வம்
  5. நில அளவு எடை
  6. வேலி, மா, செய் போன்றவை
  7. முகத்தல் அளவை : தூணி, தேக்கு
  8. நிறுத்தல் அளவை : தொடி, கஃசு, கழஞ்சு

 

  1. தமிழகமும் வெளிநாட்டுத் தொடர்புகளும்
  2. கிரேக்க, ரோமானிய, மேற்கு ஆசிய மக்களுடன் வணிகத் தொடர்பில் ஈடுபட்டனர்.
  3. தமிழ்நாட்டிலிருந்து செங்கடல் கரைக்கு வணிகம் நடைபெற்றுள்ளது.
  4. குதிரை – பாரசீகத்திலிருந்து இறக்குமதி – ஏற்றுமதி செய்யப்பட்டன.
  5. பல்வேறு பொருட்கள் இறக்குமதி

முடிவுரை:

சங்ககால மக்களின் பொருளாதார நிலை சிறப்புடன் காணப்பட்டது.

 

  1. பண்டைய தமிழரின் அயல்நாட்டுத் தொடர்புகள் பற்றி விவரி.

முன்னுரை

“திரைகடலோடியம் திரவியம் தேடு’ என்ற ஔவையின் மொழியும், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற என்ற கணியன் பூங்குன்றனாரின் மொழியும் தமிழரின் உலகளாவிய தொடர்புக்குச் சான்றாகும்.

தமிழரின் கடற்பயணம்

  1. தொல்காப்பியம் கடற்பயணத்தை “முந்நீ வழக்கம்’ எனக் குறிப்பிடுகிறது.
  2. மேற்கே கரீஸ், ரோம், எகிப்து முதல் கிழக்கே சீனா வரையிலும் கடல்வழி வணிகத் தொடர்பு கொண்டு இருந்தனர்.
  3. எகிப்து, பாலஸ்தீனம், மெசபடோமியா, பாபிலேனியா, சீனாவில் தமிழரின் பொருள்கள் விற்கப்பட்டன.

அயல்நாட்டுத் தொடர்புகள்

  1. தமிழகமும் பாபிலோனியாவும்
  2. பாபிலோனியாவில் நிப்பூரில் முரஷீ என்பவரும் அவர் மக்களும் காசு வணிகம் நடத்தி வந்தனர்.
  3. அங்கு கணக்குப் பதியப்பட்ட களி மண்ணேட்டில் தமிழக வணிகருடனான பற்று வரவுகள் குறிக்கப்பட்டுள்ளன.
  4. தமிழகமும் எகிப்தும்
  5. இரு நாடுகளுக்கும் இடையிலான வாணிகத் தொடர்பு மிகப் பழமையானது.
  6. இதனை எரித்திரியக் கடலின் பெரிப்ளூஸ் நூலின் மூலம் அறியலாம்.
  7. மஸ்லின் துணி, ஏலம். இலவங்கம், போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
  8. தமிழகமும் செங்கடல் கரை பகுதியும்
  9. செங்கடல் கடற்கரையில் உள்ள பெர்னிகே துறைமுகத்தில் 7 கிலோ மிளகு இருந்த பானை (ம) தமிழ் – பிராமி எழுத்துக்கள் பொறித்த பானை ஓடு கிடைத்து உள்ளது.
  10. அங்குள்ள குசேர் அல் காதிம் என்ற துறைமுகத்தில் தமிழ் – பிராமி எழுத்துக்கள் உடைய மூன்று சுடுமண் பாண்டத்துண்டுகள் கிடைத்துள்ளன.

 

  1. தமிழகமும் மடகாஸ்கரும்

பண்டைய நாளில் தென்னிந்தியா (ம) மடகாஸ்கர் இடையே நெருங்கிய வாணிகத் தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.

 

  1. தமிழகமும் கிரேக்கமும்
  2. கி.பி. 5ம் நூற்றாண்டு முதல் கிரேக்கர்கள் தமிழகத்து வணிகத்தொடர்பு கொண்டு இருந்தை, தமிழ்ச் சொற்கள் கிரேக்க மொழியில் இடம் பெற்றிருப்பதன் மூலம் அறியலாம்.

தமிழ்ச் சொல்

கிரேக்கச் சொல்

அரிசி

கருவா

இஞ்சி வேர்

பிப்பாலி

அரிஸா

கார்ப்பியன்

சின்நிபோரஸ்

பெர்ப்பெரி

 

  1. வியன்னா பாப்பிரஸ் – கிரேக்க ஆவணத்தில் முசிறி
  2. தமிழகம் ரோமாபுரியும் பற்றிய குறிப்பு உள்ளது.

எழுதியவர்

நூல்கள்

ஸ்டிராபோ

பிளினி

தாலமி

பூகோளநூல்

உயிரியல் நூல்

பூகோள நூல்

 

  1. இம்மூன்றும் தமிழக – ரோமானியத் தொடர்புக்குச் சான்றாக உள்ளன.
  2. பியூங்கேரியன் அட்டவணை – ரோமானியப் பேரரசின் சாலைகள் குறித்த நிலப்படம் இதில் முசிறிதுறைமுகம் பற்றிய குறிப்புகள் உள்ளன.
  3.  

சேர நாட்டுத் துறைமுகங்கள்

ரோமனியக் குறிப்புகள்

தொண்டி

முசிறி

பொற்காடு

குமரி

திண்டிஸ்

முஸிரிஸ்

பகரி

கொமாரி

vii. தமிழகமும் ஐரேப்பிய நாடுகளும்

  1. ஐரேப்பிய நாடுகளுக்குப் பலவகையான நறுமணப் பொருட்கள் ஏற்றுமதியாகின.
  2. புலி, சிறுத்தை, யானை, குரங்கு, மயில், கிளி, வேட்டை நாய்கள் என ஏற்றுமதி ஆகின.
  3. மஸ்லின் துணி, ஏலக்காய், இலவங்கம் ஏற்றுமதி
  4. ஹிப்பாகிரேட்டஸ் – மிளகை இந்திய மருந்து என குறிப்பிட்டுள்ளார்.

 

viii. தமிழகமும் கீழை நடுகளும்

  1. சீனா, மலேசியா, ஜாவா, வடபோர்னியார நாடுகளுடன் கடல் வாணிகம் நடந்தது
  2. தமிழகப் பொருட்கள் சீனாவில் நல்ல விலைக்கு விற்கப்பட்டது.
  3. சீனாவிலிருந்து பட்டாடை, சர்க்கரை இறக்குமதி
  4. சீனம் என்ற சொல்லுடன் இணைந்து பல தமிழ்ச் சொற்கள் உள்ளன. (எ.கா) சீனக்களி மண், சீனக்கண்ணாடி

 

  1. தமிழகமும் பிலிப்பைன் தீவுகளும்
  2. அண்மையில் நடைபெற்ற அகழாய்வில் இரும்புக்கால புதைப்பொருட்கள் பிலிப்பைன் தீவில் கிடைத்தன.
  3. இக்கருவிகள் தமிழர் பயன்படுத்திய கருவிகளை ஒத்துள்ளது.

 

  1. தமிழகமும் கிழக்காசிய நாடுகளும்

சீனம், மலேசியா சாவகம் முதலிய நாடுகளிலிருந்து தமிழகம் கொள்முதல் செய்து. அவற்றை மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.

முடிவுரை:

தமிழகத்தில் உள்நாட்டு வாணிகம் சிறப்புற்ற கணரத்தினலே, அயல் நாட்டுத் தொடர்புகள் ஏற்பட வழிவகுத்தது.

 

  1. சங்ககால கல்வி நிலை பற்றி விவரி.

முன்னுரை:

கல்வி கற்பதற்காகப் பிரிதல் ஓதற்பிரிவு என தொல்காப்பியம் கூறுகிறது. கல்வி நிலை சிறப்புற்று இருந்தது. கல்வியின் முக்கியத்துவத்தை மக்கள் அறிந்திருந்தனா.

 

பள்ளிகள்:

  1. அரசு பள்ளிகள் இல்லை, திண்ணை பள்ளிகள்
  2. மரத்தடியும் அம்பலமும் பள்ளிகளாக மாற்றம்
  3. கல்வி வீடுபேறு அடையும் கருவியாக கருதப்பட்டது

கல்வி முறை

  1. எண்ணும் எழுத்தும் கற்பிக்கப்பட்டன.
  2. மேல் இலக்கம் – ஆம்பல், வெள்ளல்
  3. கீழ் இலக்கம் – அம்மி, கானி
  4. அளவுகள் – நாழிகை, தூணி
  5. ஔவை, காக்கை பாடினியார், வெள்ளி வீதியார் போன்ற பெண்பாற் புலவர்கள் இருந்தனர்.
  6. வானியல், இசை, ஒவியம், நாடகம் போன்றவை கற்பிக்கப்பட்டன.
  7. ஏடு – பனையேலை, எழுத்தாணி
  8. நான்மணிக்கடிகை – இளமைப் பருவத்தில் கல்லமை குற்றம்
  9. திரிகடுகம் – கல்லதவர்க்கு பொருள் அறியாமை
  10. ஆசராக் கோவை – மணாக்கான் நடக்க வேண்டிய முறை
  11. பழமொழி நானூறு – கற்றலில் கேட்டலே நன்றி

 

இலக்கியங்கள் கூறுவன

  1. தொல்காப்பியம் – ஏட்டுக்கல்வி என்பது வாயினால் வகுத்த பக்கம்

தொழில் கல்வி என்பது கையினால் வகுத்த பக்கம்

  1. திருவள்ளூர் – கல்வி, கேள்வி, கல்லாமை முதலிய அதிகாரங்கள் எழுதினார்.
  2. ஒளவையார் – “பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார்.
  3. இனியவை நாற்பது, நான்மணிக்கடிகை, நாலடியார், திரிகடுகம்

 

கல்வியின் சிறப்பு

  1. சாதிவேறுபாடுகளை களையும் கருவியாக கல்வி கருதப்பட்டது.
  2. கற்றவனை தாய் பிறினும் விரும்புவள் – புறம்

அறிவுடையேர் வழி அரசும் செல்லும் – புறம்

  1. வேற்றுமை தெரிந்த நாற்பனுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்றபின், மேற்பாலும் அவன் பின்னே செல்லும் – ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

 

வளர்ச்சி

  1. வடமொழிக் கல்வி தமிழில் காப்பியங்களும் அணிநூல்களும் வளர வாய்ப்பளித்தது.
  2. சமணர்கள் தமிழை வளர்த்தனர்.
  3. நாயக்க மன்னர்கள் கிறிஸ்தவ பாதிரியார்கள் மூலம் பள்ளிகள் திறந்து, கல்வியை வளர்த்தனர்.
  4. ஆங்கிலேயர் காலத்தில்தான் முறையான பள்ளிகள்

முடிவுரை:

இன்று தமிழ்நாடு கல்வியில் உயர்ந்த நிலையை அடைந்துள்ளது.

 

தமிழகக் கல்வி வரலாறு

 (OR)

  1. பௌத்தக்கல்வி, சமணக்கல்வி, மரபுவிழிக்கல்வி முறைகளால் தமிழகக் கல்வி முறையில் ஏற்பட்ட பல்வேறு மாறுதல்களை விவரிக்க.

முன்னுரை:

கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில் காலந்தோறும் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப கற்றலும் கற்பித்தலும் பல்வேறு பரிமாணங்களைப் பெற்று வளர்ந்துள்ளன.

 

  1. தமிழ் இலக்கியங்களில் கல்வி
  2. தொல்காப்பியம் – கல்வி கற்பதற்காகப் பிரிந்து செல்வதை ஓதற்பிரிவு என்கிறது.
  3. எண்வகை மெய்ப்பாடு கல்வியின் பொருட்டு ஒருவருக்கு பெருமிதம் தோன்றும்
  4. சங்ககாலத்தில் தமிழ் ஆட்சி, பயிற்று, இலக்கிய மொழியாக விளங்கியுள்ளது.

நூல்

கல்வி கற்பிக்கும் இடத்தின் பெயர்

பெரிய திருமொழி

திவாகர நிகண்டு

சீவக சிந்தாமணி

பள்ளி

ஓதும்பள்ளி

கல்லூரி

  1. சமண, பௌத்தப் பள்ளிகள்
  2. கல்வி, அளித்தல் சமண சமயத்தின் தலையாய அறமாகும்.
  3. திகம்பர துறவிகள் தங்களின் மலைக்குகையில் கல்வி கற்பித்தனர்.
  4. அவர்களின் படுக்கைகளின் மீது மாணவர்கள் அமர்ந்து கல்வி கற்றதனால் கல்விக்கூடம். பள்ளிக்கூடம் என அழைக்கப்பட்டது.
  5. சமணப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தங்களது ஆசிரியர்களுக்கு படுக்கைகள் எழுத்ததை கழுகுமலையில் உள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
  6. வந்தவாசி அருகிலுள்ள வேடலில் இருந்த சமணப் பள்ளியில் பெண் சமண ஆசிரியர் 500 மாணவர்களுக்கு கல்வி கற்பித்தார்.
  7. சமணப் பள்ளிகளில் பெண்களும் ஆசிரியர்களாக இருந்துள்ளனர்.
  8. பெண்கள் மட்டும் பயில பெண் பள்ளிகள் இருந்துள்ளன.
  9. பட்டிமண்டபம் என்பது சமயத்துறையிலிருந்து தோன்றியது.
  10. காஞ்சிபுரத்திற்கு வருகை தந்த யுவான்சுவாங் பௌத்த பல்கலைக்கழத்தில் உரையாற்றியுள்ளார்.

 

III. மரபுவழிக் கல்வி முறைகள்

குருகுலக் கல்விமுறை

  1. மாணவர்கள் ஆசிரியருடன் அணுகி, அவருடன் தங்கி (பல ஆண்டுகள்), தேவைப்படும் பணியைச் செய்து கல்வி கற்றனர்.
  2. அடிப்படை – செய்து கற்றல், வாழ்ந்து கற்றல், எளிமையாக வாழ்தல்

 

திண்ணைப் பள்ளிக்கல்வி முறை

  1. 19ம நூற்றாண்டின் இடைப்பகுதியில் கிராமங்கள் தோறும் திண்ணைப் பள்ளிகள் தோன்றின.
  2. இப்பள்ளிகள் ஒரே மாதிரியான வரன்முறையுடன் செயல்படவில்லை.
  3. ஆங்கிலேயர்கள் திண்ணைப் பள்ளிகள், பாட சாலைகள், மத்தாபுகள், மதராசாக்களை நாட்டுக்கல்வி என்று அழைத்தனர்.
  4. இங்கு பாடத்திட்டம், பள்ளி நேரம். பயிற்றுவிக்கும் முறை ஆசிரியரின் விருப்பப்படி அமைந்தது.
  5. இவைகள் பொது மக்களின் கல்வித் தேவையை பூர்த்தி செய்தன.
  6. அக்கால ஐரோப்பிய நாடுகளின் கல்வித்தரத்தை காட்டிலும் சிறப்பாகவே இருந்தது.

 

உயர்கல்வி முறை

  1. தனி நிலையில் புலவர்களிடத்துக் கற்கும் முறை
  2. திருவாடுதுறை ஆதீன மடத்தின் தலைப்புலவர் மகாவித்துவன் மீனாட்சி சுந்தரம்
  3. இவரிடம் தமிழ்தாத்தா உ.வே. சாமிநாதர் பாடம் பயின்றது இம்முறையிலாகும்.

 

  1. தமிழகத்தில் ஐரோப்பியர்களின் கல்விப்பணி

டச்சுக்காரர்கள்

  1. 1453 – ஜான் கூட்டன்பர்க் வடிவமைத்த அச்சு இயந்திரம் கல்வி வளர்ச்சி பெற காரணமானது.
  2. 1706 – டச்சுக்காரர்களின் சமய பரப்புச் சங்கம் தமிழகத்தில் கல்விப் பணியில் ஈடுபட்டது.
  3. தரங்கம் பாடியில் முதல் அச்சுக்கூடம் நிறுவப்பட்டது.
  4. இந்தியாவில் முதலில் அச்சேறிய மொழி – தமிழ்
  5. டச்சுக்காரர்கள் ஆசிரியப் பள்ளிகளை அமைத்தனர்.

ஆங்கிலேயர்கள்

  1. 1813 – பட்டயச் சட்டப்படி இந்தியர்களின் கல்விக்காக ஆண்டிற்கு 1 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
  2. 1826 – சென்னை ஆளுநர் தாமஸ் மன்ரோ பொதுக்கல்வி வாரியத்தை துவங்கினார்.
  3. 1835 – சென்னை மருத்துவக் கல்லூரி
  4. 1854 – பொதுக்கல்வி இயக்குநர்
  5. 1835 – மெக்காலே கல்விக்குழு
  6. 1854 – சார்லஸ் உட் அறிக்கை, இதனை அடிப்படையாக வைத்து தற்கால கல்வி (ம) தேர்வு முறை உருவானது இது மகாசாசனம் ஆகும்
  7. 1859 – கிண்டி பொறியியல் கல்லூரி
  8. 1882 – ஹண்டர்கல்விக்குழு பரிந்துரை சீருடை, தாய்மொழிவழிக்கல்வி, தனியார் பள்ளிகள் அனுமதி
  9. 1910 – தமிழ்நாடு இடைநிலைக்கல்வி வாரியம்
  10. 1911 – பள்ளி பள்ளி இறுதி வகுப்பில் மாநில அளவிலான பொதுத்தேர்வு முறை நடைமுறை

 

முடிவுரை:

19ம் நூற்றாண்டில் நம் நாட்டின் எழுத்தறிவு விகிதம் 15% தற்போது தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதம்ட 80.33% ஆக முன்னேறியுள்ளது.

 

சரத்து 45

  1. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு
  2. 14 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் இலவச கட்டயக்கல்வி

 

  1. மணலில் எழுதுவது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க. (OR)

பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

முன்னுரை

1.மன்றங்கள்

  1. ஊர்தோறும் பொதுவான இடத்தில் ஒரு பெரிய மரத்தின் அடியில் மேடை அமைக்கப்பட்டு இருக்கும்
  2. இது மன்றம், அம்பலம் எனப்பட்டது.
  3. பின் இது திண்ணைப் பள்ளிக்கூடமாக மாறியது.
  4. பள்ளிகள்
  5. மரத்தடியில் இருந்த பள்ளிக்கூடங்கள் நாளடைவில் சிறு குடிசைகளாக மாறின.
  6. பள்ளிக்கூடம் எனும் பெயர் சமண மதத்தின் கொடையாகும்.
  7. வித்தியாரம்பம்
  8. முதன் முதலில் 5 வயதில் வித்தியாரம்பம் நடைபெற்றது.
  9. தாய், தந்தையர் பிள்ளைகளை ஆசிரியர்களிடம் அடைக்கலமாகத் தந்தனர்.
  10. ஏட்டின் மீது மஞ்சள் பூசி வாசிக்க ஆரம்பிப்பர்.
  11. நெடுங்கணக்கைச் சொல்லித்தர மாணவர்கள் அதனைப் பின்பற்றி சொல்லுவர்.
  12. மையாடல்
  13. சுவட்டிலுள்ள எழுத்துக்கள் தெரியமை பூசுவர்.
  14. மைகூட்டுவதற்கான பொருட்கள் – வசம்பு, மஞ்சள் மணத்தக்காளி இலைச்சாறு போன்றவை
  15. தமிழ்விடு தூது மூலம் இச்செய்தியினை அறியலாம்.
  16. பிள்ளைகள் முதலில் மணலில் எழுதிப் பழகுவர்
  17. ஆசிரியர் முதலில் தரையில் எழுத, அதன் மீது மாணவர்கள் எழுதுவர்.
  18. கையெழுத்து
  19. எழுத்துக்கள் ஒன்றோடொன்று படாமல் வரிகோணமல் பழைய காலத்தில் எழுதி வந்தனர்.
  20. புள்ளி, கால், கொம்பு, விலங்கு முதலிய வரியெழுத்தின் உறுப்புகளில் பெரிய மாறுபாடுகள் ஏற்படவில்லை
  21. மனனைப் பயிற்சி
  22. அடிப்படை நூல்கள் பிள்ளைகளுக்கு மனனமாக இருக்கும்.
  23. நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம் நீதிநூல்கள், பாடமாக இருக்கும்.
  24. கணிதம், ஆத்திச்சூடி, வானவியல் என பல பாடப்பகுதிகள் இருக்கும்
  25. சுவடிகள்
  26. இளம்பிள்ளைகளுக்கு உபாத்தியாயர் ஓலையை வாரி ஒழுங்காக நறுக்கித் துளையிட்டு கயிறு கோத்து தருவார்.
  27. ஒருதுளை, இரு துளை என முறைகள் உண்டு.
  28. பனையோடு, சீதாள பத்திரத்தில் எழுதுவர்.
  29. மேல் சட்டமாகப் பனைமட்டையின் காம்புபயன்படும்
  30. மரச்சட்டம், செப்புத்தகடும் பயன்பட்டது.
  31. இதன் மீது வர்ண மையினால் சித்திரங்கள் எழுதுவதுண்டு.
  32. எழுத்தாணிகள்
  33. மடக்கு, வாரெழுத்தாணி குண்டெழுத்தாணி என பலவகைகள் இருந்தன.
  34. ஒரு பக்கம் வாருவதற்குக் கத்தியும் மறுபக்கம் எழுதுவதற்கு எழுத்தாணியும் இருந்தது
  35. ஒரு பக்கத்தில் மிக நுண்ணிய எழுத்துக்களாக 20 – 30 வரிகள் இருந்தன.
  36. முற்காலத்தில் கொடிய தண்டனைகள் இல்லை
  37. அன்பினால் வழிநடத்தினர்
  38. வாதம்புரிதல்
  39. நம்நாட்டுப் பள்ளிக்கூடங்களில் வதம் புரிதல் இருந்தது
  40. மிகச்சிறந்த நூற்பயிற்சி உடையவர்கள் அரசவைகளில் இடம்பெற்று இருந்ததை மதுரைக் காஞ்சி வழி அறியலாம்.
  41. சாந்துணையும் கற்றல்
  42. பல நூல்களையம் பள்ளியில் பயின்றதோடு நில்லாமல் வாழ்நாள் முழுவதும் படித்தனர்.
  43. “என் ஒருவன் சாந்துணையும் கல்லாத வாறு” என்றார் வள்ளுவர்.
  44. தொல்காப்பியம் ஓதற்பிரிவு பற்றி குறிப்பிடுகிறது.

முடிவுரை

தமிழ்நாட்டில் பாலர்களுக்குரிய பள்ளிக் கூடங்கள் முதல் பழுத்த கிழவர்கள் இருந்து கற்கும் பள்ளிக்கூடங்கள் வரை பல பாடசாலைகள் இருந்து வந்தன.

 

4.19ம் நூற்றாண்டின் கல்வி நிலை குறித்து விளக்குக.

கல்விநிலை

முன்னுரை

ஆங்கிலேயர் ஆட்சியினால் இந்திய நாட்டுக்கு ஏற்பட்ட மாபெரும் நன்மைகள் இரண்டு ஒன்று இந்திய ஒரு நாடாக அமைந்தது. மற்றொன்று இந்திய மக்கள் ஆங்கிலம் பயில வாய்ப்பு ஏற்பட்டது.

கல்விநிலை

  1. பொதுமக்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகக் காணப்பட்டது.
  2. கிராமங்களில் திண்ணைப் பள்ளிக் கூடங்கள் மட்டுமே நடைபெற்று வந்தன.
  3. மாணவர்கள் அமாவாசையன்று விடுமுறை பெற்றனர்.
  4. சனிக்கிழமைகளில் மாணவர்கள் ஒரு முட்டை, நல்லெண்ணெய், காய்கறிகளை ஆசிரியருக்குக் கொடுப்பர்.
  5. புரட்டாசி மாதம் தசராவின் 9ம் நாள் நவமியன்று ஆசிரியர்கள் தம்மாணவர்கள் கற்றவித்தை, பாடும் பாட்டு, ஆடும் ஆட்டம் ஆகியவற்றை வீடுதோறும் குடிகளுக்குக் காட்டி சன்மானம் பெறுவர்
  6. திண்ணைப்பள்ளி பயிற்சியும் இரண்டு ஆண்டுக்கு மேல் நீடிக்க வில்லை.
  7. மாணவர் செய்யும் பிழைகளுக்கு ஆசிரியர்கள் மிகவும் கொடுமையான தண்டனைகளைக் கொடுத்தனர்.
  8. தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்த சிலரே மேற்கொண்டு தமிழ் நூல்களை பயில முனைந்தனர்.
  9. ஓலைகளில் எழுதியிருந்தவற்றை மட்டுமே படித்து வந்தனர்.
  10. ஓலைகளின் மேல் எழுத்தாணியால் எழுதி வந்தனர்.
  11. முதன் முதலில் சிறுவர்கள் பள்ளி செல்வதை ‘சுவடி தூக்குதல்’ என்பர்.

ஆங்கிலேயரின் முயற்சிகள்

  1. ஆங்கில அரசு நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக ஒரு திட்டம் வகுத்தது. இது ஆங்கில கல்வித்திட்டம் எனப்பட்டது.
  2. இதன் மூலம் மாவட்டங்களில் எல்லாம் தாய்மொழிப் பயிற்சிப் பள்ளிகள் திறக்கப்பட்டன.
  3. பள்ளிகளில் கீழ் வகுப்புகளில் தமிழும், மேல் வகுப்புகளில் ஆங்கிலமும் பயிற்சி மொழியாக்கப்பட்டன.
  4. அரசாங்க உயர்நிலைப் பள்ளியானது மாநிலக் கல்லூரியாக உயர்த்தப்பட்டது.
  5. ஆங்கிலம், விஞ்ஞானம், வரலாறு, பொருளாதாரம், உளவியல், ஒழுக்கவியல், துறைகளில் பேராசிரியர்கள் அமர்த்தப்பட்டனர்.
  6. தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகள் அமைப்பதில் கிறித்துவ பாதிரிகளே மிகுந்த ஆர்வம் காட்டினர்.
  7. அவர்களுக்கு சென்னை அரசாங்கமும் பொருளுதவி வழங்கிற்று.
  8. பெண்களுக்கான தனிக்கல்விக் கூடங்களை நிறுவியவர்களும் இவர்களே.
  9. சென்னை அரசாங்கம் 1866ல் பெண்கள் பள்ளியைத் தொடங்கிற்று.

அரசின் முற்சிகள்

ஆங்கில கல்வியின் நன்மைகள்

  1. இந்திய எல்லைக்குள் இருந்தவர்கள் ஆங்கில மொழிப் பயிற்சியின் மூலம் வெளிவுலகை எட்டிப் பார்த்தனர்.
  2. பிரெஞ்சுப் புரட்சியாளர்கள் எழுப்பிய சுதந்திரம். சமத்துவம், சகோதரத்துவம் என்ற குரலால் இந்தியரும் விடுதலை வேட்கையை அடைந்தனர்.

முடிவுரை

எதையும் அப்படியே நம்பாமல் சிந்தித்து ஆராயும் பகுத்தறிவு மக்களிடையே வளர்ந்தது.

 

  1. தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்குப்பின் கல்வியின் நிலையை பற்றி எழுதுக.

சதந்திரத்திற்குப் பிறகு கல்வியின் நிலை

  1. கல்வியில் ஆண்களைவிட பெண்களின் தேர்ச்சி விகிதம் அதிகம்.
  2. 1929 ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது. (சர் அண்ணாமலையர்)
  3. லயோலா, மாகாண, கும்பகோணம், திருச்சி தூய ஜோசப் கல்லூரி என உயர்கல்வி கல்லூரிகள் துவக்கம்
  4. பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்தன.
  5. ஐஐடி, ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரிகள் துவங்கப்பட்டது.
  6. காமராஜர் தமது 9 ஆண்டுகால ஆட்சியில் 26,000 க்கும் மேற்பட்ட தொடக்க (ம) உயர்நிலைப் பள்ளிகளை தமிழ்நாடு முழுவதும் திறந்தார்.
  7. பள்ளிகளில் மதிய உணவுத்திட்டம் சத்துணவு திட்டமாக மாறியது.
  8. கல்லூரிநிலை வரை இலவச கல்வி, படிப்பிற்கான உதவித்தொகை, பொருட்கள் வழங்கப்படுகின்றன.
  9. மருத்துவபடிப்பு, பொறியியல் போன்ற உயர்கல்வி பெற இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
  10. வெளிநாடுகளில் உள்ள மருத்துவபடிப்பு நம் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது.
  11. சுதந்திரத்திற்குப் பிறகு நமது கல்வி உயர் கல்வி மட்டத்தில் உயர்த்தப்பட்டுள்ளது.
  12. தொலை தூர கல்வி (ம) திறந்த பல்கலைக்கழகத்தில் பயின்று அதிக எண்ணிக்கையில் பட்டதாரிகள் உருவாகின்றனர்.

 

POLITICS

1.19ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் அரசியல் நிலை குறித்து எழுதுக.

  1. அரசியல் நிலை
  2. 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆங்கிலேயரின் ஆட்சி இமயம் முதல் குமரி வரையிலும், சட்லெஜ் முதல் பிரம்மபுத்திரா வரை விரிவடைந்து இருந்தது.
  3. தஞ்சை மராத்திய மன்னர் சரபோஜியுடன் வெல்லெலிஸ் செய்த உடன்படிக்கையின்படி, தான் தான் வாழ்ந்த வாழ்ந்த கோட்டையைத் தவிர அனைத்து பகுதிகளையம் ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தார்.
  4. பெண்டிங் பிரபு 1803 – 1807 வரை சென்னையில் கவர்னராக இருந்தார்.
  5. பிரிட்டிஷ் சேனாதிபதியின் சில ஆணைகளை எதிர்த்து வேலூரில் ஒரு கிளர்ச்சி எழுந்தது.
  6. வேலூர்கலகம் – 1806
  7. திப்புவின் மகன்கள் வேலூர்க்கோட்டையில் சிறை வைக்கப்பட்டு இருந்தனர்.
  8. ஜான் கிரடாக் சிப்பாய்கள் தம்தாடி, மீசையை களைய வேண்டும் மதச்சின்னங்கள் இடக்கூடாது.
  9. ஐரோப்பிய வகை தொப்பி உருவாக்கம்
  10. இந்த புதிய இராணுவ ஒழுங்குமுறைகளை ஏற்க மறுத்தனர்.
  11. இது ஒரு பெருங்கிளர்ச்சியாகியது.
  12. சிப்பாய்கள் கிளர்ந்தெழுந்து, விளைவாய் 300 சிப்பாய்கள் கொல்லப்பட்டனர்.
  13. வேலூர் கிளர்ச்சியில் மக்கள் கலந்து கொள்ளவில்லை.
  14. கிலலெஸ்பி இப்புரட்சியை அடக்கினார்.
  15. பின் ஜார்ஜ் பார்லோ பதவியேற்றார்.

 

III. இரயத்து வாரி முறை

  1. சென்னை மாநகரம் நன்கு வளர்ச்சி பெற்று இருந்தது.
  2. தமிழகத்தில் இடந்தோறும் வரிகளும், வரிவிதிப்பு முறைகளும் மாறுபட்டிருந்தது.
  3. மூவேந்தர் காலத்தில் வழங்கிய வரிகள் பல கைவிடப்பட்டன.
  4. பல வரிகளின் பெயர் மாற்றப்பட்டு புதிய விரிகளாக விதிக்கப்பட்டன.
  5. தாம் உழுது பயிரிட்டு வந்த நிலங்களின் மேல் சொத்துரிமை பெற்றிருந்தனர்.
  6. இந்நிலத்தில் பயிரிட, குத்தகைவிட, விற்க உரிமை இருந்தது.
  7. இதற்கு அரசாங்கத்திற்கு தாமே நேரில் வரிகட்டினர்.
  8. இந்தக் குடி உரிமைக்கு இரயத்துவாரி முறை என்று பெயர்.

 

  1. ஒரே அரசியல் ஒரே நீதி
  2. சென்னை மாகாணம் 25 மாவட்டங்களாப் பிரிக்கப்பட்டது.
  3. இங்கு மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகள் பேசும் மக்கள் பலர் வாழ்ந்தனர்.
  4. இந்திய சிவில் நடைமுறைச் சட்டம் – 1859
  5. இந்தியக் குற்றவியல் சட்டம் – 1860 இயற்றப்பட்டன.
  6. இச்சட்டங்கள் நாட்டின் ஒருமைப்பாடு (ம) தேசிய உணர்ச்சிக்கு வழிவகுத்தன.
  7. இங்கிலாந்து நாடாளுமன்ற சட்டப்படி 1861ல் சென்னையில் உயர்நீதிமன்றம் நிறுவப்பட்டது.

 

 

 

  1. இந்தியாவின் நிலை
  2. இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு ஏற்றுமதியான சரக்குகளின் மதிப்பைவிட, அங்கிருந்து இந்தியாவிற்கு இறக்குமதியான சரக்குகளின் மதிப்பு குறைவாக இருந்தது.
  3. இங்கிலாந்தானது இந்தியாவிற்கு என்றுமே கடன்பட்டிருக்க வேண்டியுள்ளது என ஆங்கிலேயர் குறைக் கூறினர்.
  4. அரசாங்கத்தின் மேல்நிலையில் இருந்த அனைவரும் ஆங்கிலேயராக இருந்தனர்.
  5. பிறகு ‘இந்திய சிவில் சர்வீஸ்” என்ற உயர்பணித் துறையில் இந்தியருக்கும் இடம் கிடைத்தது.

 

  1. முதல் இருப்புப் பாதை
  2. முதன் முதலில் 1856 ல் சென்னை – வாலாஜா பேட்டை இரயில் பாதை திறக்கப்பட்டது.
  3. 1871 ல் அரக்கோணம் – ராய்ச்சூர்
  4. 1873 ல் ஜோலர்பேட்டை – மேட்டுப்பாளையம்
  5. 1877ல் சென்னை – அரக்கோணம் இரயில் பாதை அமைக்கப்பட்டது.

 

VII. பறையர்களுக்கு விடிவு

  1. ஆங்கிலேயர் வரவுக்குப் பின் பறையர் என ஒதுக்கப்பட்ட குலத்திற்கு விடிவு பிறந்தது.
  2. அவர்களுள் சிலர் கிறிஸ்தவர்களாக மதம் மாறி சமூகத்தில் மேல்நிலை எய்தினர்.
  3. இவரின் பெண்கள் தாதிகளாகவும், குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாதிகளாகவும், வீட்டு வேலைகள் செய்தும் பொருளாதாரத்தில் உயர்வு பெற்றனர்.
  4. ஆங்கிலேயர் இந்திய பெண்களுடன் கொண்ட கலப்பால் ஆங்கிலோ இந்தியர் என்ற ஒரு புதிய குலம் உண்டானது.

 

WOMEN

1.19ம் நூற்றாண்டில் பெண்களின் நிலை குறித்து எழுதுக.

19ம் நூற்றாண்டில் பெண்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள்

  1. கல்வி (ம) உயர்மட்டக் கல்வியில் அனைத்து பெண்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
  2. முடிவெடுக்கும் வகையில் சுயஉதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டது.
  3. குடிமைப்பணி, காவல்பணி, வனப்பனி, வெளிநாட்டு தொடர்பான உயர் பதவிகள் வழங்கப்பட்டன.
  4. குழந்தை திருமணம், திருமண பதிவு, விவாகரத்து பற்றிய தெளிவு துவங்கப்பட்டன.
  5. நாளிதழ்கள், வார இதழ்கள், பெண்களுக்கான மாத இதழ்கள் துவங்கப்பட்டன.
  6. பெண்கள் தனது தனது வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க அவர்களின் விருப்பம் கேட்கப்படுகிறது.
  7. அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு.
  8. அதிக எண்ணிக்கையிலான கல்வியாளர்களாக பெண்கள் உள்ளனர்.
  9. பெண்கள் தனியார், பொது, அரசாங்கத்தின் பல்வேறு துறைகளில் ஒளிர்கின்றனர்.
  10. அவ்வை இல்லம் போன்ற அரசுசாரா நிறுவனங்கள், ஆதரவற்ற பெண்களின் நிலையை உயர்த்த துவங்கி உள்ளன.
  11. சில பெண்கள் தற்போதைய ஊடகங்களால் தவறான வழியில் நடத்த திட்டமிடப்படுகிறார்கள்.

 

பொருளாதார நிலையிலுள்ள மாற்றங்கள்

  1. பாலின சமத்துவம் காரணமாக பெண்களின் வேலைவாய்ப்பு வலுவடைந்து வருகிறது.
  2. பெண்களின் நிதிநிலைமை சீரடைந்து வருகிறது.
  3. குடும்பத்தில் வடதட்சணை, ஆண் ஆதிக்கம் பலவீனம் அடைந்து வருகிறது.
  4. குடும்ப விசயங்களில் முடிவெடுக்க பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
  5. பெண்கள் பொறியாளர், மருத்துவர், ஆலோசகர் என பலவழிகளில் பணியாற்றுகின்றனர்.
  6. சுய உதவிக்குழுக்கள் பெண்களின் பொருளாதார நிலையை முன்னேற்றி உள்ளது.
  7. வங்கிக்கணக்கு, ஏடிஎம் பயன்பாடு அதிகரித்துள்ளது.
  8. மத்திய, மாநில அரசுகள் பெண்களுக்கு சலுகைகளை வழங்குகிறது.
  9. சமுதாயத்தில் பெண்களின் நிலை உயர்ந்துள்ளது.
  10. குழந்தை திருமணம், தேவதாசிமுறை, வரதட்சணை ஒழிந்துள்ளது.

 

பெண்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்த தமிழறிஞர்களின் பங்களிப்பு

  1. கிறிஸ்தவ மிஷனரி – பெண் கல்வி
  2. டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி – அவ்வை இல்லம் (ம) மகப்பேறு, குழந்தை மருத்துவமனை
  3. மாயூரம் – வேதநாயகம் பிள்ளை –  பெண்மதி மாலை நூல் – பெண்களுக்கான உரிமை
  4. பாரதி (ம) பாரதிதாசன் – விதவை மறுமணம் ஆதரவு
  5. டாக்டர் தருமாம்பாள், மூவலூர் இராமாமிர்தம், அஞ்சலை அம்மாள், அம்புஜத்தம்மாள், அசலாம்பிகை அம்மையார்.
  6. பெரியார் – கல்வி, அரசியல், சொத்துரிமை, வேலைவாய்ப்பு
  7. சங்ககாலத்தில் பெண்களின் நிலைகுறித்து விளக்குக.

சங்ககாலத்தில் பெண்களின் நிலை

  1. கல்வி

பெண்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினர் நச்செள்ளையார், நப்பகலையார், முடத்தாமக்கண்ணியர் பொன்முடியார், ஔவையார் போன்றோர்.

 

  1. இல்வாழ்க்கை

“தான் பிறந்த வீட்டில் உண்ட தேன் கலந்த பாலினும், தன் தலைவனுடன் சென்று பாலை நிலத்தில் மான் உண்ட எஞ்சிய நீர் பருகுதல் இன்பம்” என்றனர்.

 

  1. கற்பொழுக்கம்

கணவன் பிரிந்து சென்ற போது, மகளிர் தம்மை அழகுபடுத்திக் கொள்ளமாட்டார்கள்.

 

4.விருந்தோம்பல்

“அல்லல் ஆயினும் விருந்துவக்கும் முல்லை சான்ற கற்பின்” என நற்றிணை விவரிக்கிறது.

 

  1. வீரத்தாய்

ஒக்கூர் மாசாத்தியார் பற்றி புறநானூற்றில் குறிப்பிடுவது

“போரிலே தன் மகன் முதுகிலே புண்பட்டிருந்தால் அவனுக்குப் பாலூட்டிய தன் மார்பை அறுத்து எறிவேன்” எனக்கூறுவதாக உள்ளது.

 

மூதின் முல்லைத்துறை – புறநானூறு குறிப்பு

தன் மகன் எங்கே எனக்கேட்ட அயல்வீட்டுப் பெண்ணிடம் “என் மகள் யாண்டுளன் என அறியேன் அவனை ஈன்ற வயறு இதுதான். இது புலியிருந்த குகை அவன் போர்க்களத்தில் தோன்றுவான்” எனக் கூறுவதாக உள்ளது.

 

  1. உடன்கட்டை ஏறுதல்

அக்காலத்தில் காணப்பட்டது. பூதப் பாண்டியன் மனைவி கோப்பெண்டு தீயில் விழுந்த செய்தி பற்றிய குறிப்பு உள்ளது.

 

  1. மகளிரின் பொழுதுபோக்கு

பூ புனல், பந்து விளையாட்டு, கழங்கு போன்றவை

 

  1. கூந்தல் ஒப்பனை

கூந்தலை ஐந்து வகையாக அமைத்தனர். நீராடிய பின் அகிற்புகை, சந்தனப்புகை ஊட்டுவர்.

 

  1. ஆடை அணிவகை

முத்து, பவளம், சங்கு என அணிவகைகள் இருந்தன. நூற்சோலை, பட்டுசோலை, என ஆடை உடுத்தினர்.

 

  1. பொதுமகளிர் வாழ்வு

செல்வம் மிக்க நகரில் பரத்தையர் இருந்தனர். சிலர் ஒருவருக்கு மட்டுமே உடைமை காதல் பரத்தையர் எனக் கருதப்பட்டனர்.

 

  1. காலந்தோறும் மகளிர் நிலைகளைக் குறிப்பிடுக.

காலந்தோறும் மகளிர் நிலைகள்

  1. சங்ககாலத்தில் உயர்நிலையில் இருந்தது.
  2. சங்கம் மருவிய காலத்திலிருந்து தாழ்நிலை அடையத் துவங்கியது.
  3. இருபதாம் நூற்றாண்டில் உயர்நிலையை அடையத் துவங்கியது.

 

தொல்காப்பியர் காலத்தில் மகளிர்

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற குணங்களை அணிகலன்களாக கொண்டவர்.

 

சங்ககாலத்தில் மகளிர்நிலை

  1. கல்வியிற் சிறந்த பெண்பால் புலவர்கள் இருந்தனர்
  2. இல்வாழ்க்கை, கற்பொழுக்கம், விருந்தோம்பல் வீரம் என்ற உயரிய நிலையை பெற்று இருந்தனர்
  3. உடன்கட்டை ஏறுதல், பரத்தையர் பிரிவுகள் காணப்பட்டன.

 

சங்கம் மருவிய காலத்தில் மகளிர்நிலை 

  1. சமணம் பெண்ணை இழித்து பேசியது
  2. பெண்ணுக்கு வீடு பேறில்லை என்றது.
  3. சைவம், வைணவம் பெண்ணை போற்றியது.
  4. திலகவதியார், ஆண்டாள், புனிதவதியார் போன்றோர் இருந்தனர்.

 

பல்லவர் காலத்தில் மகளிர் நிலை

  1. கோயில்களில் பெண்கள் பணிபுரிந்தனர் – கணிகையர் எனப்பட்டனர்.
  2. பலதாரமணம் வழக்கத்தில் இருந்தது
  3. உயர்குடி பெண்கள் உடன்கட்டை ஏறினர்.
  4. கொடுமைப்படுத்தப்பட்டனர்.
  5. தேவதாசி முறை காணப்பட்டது.

 

சோழர் காலத்தில் மகளிர்நிலை

  1. பெண்கல்வி சிறப்புறவில்லை.
  2. ஒளவையார் தவிர பெண்பாற் புலவர்கள் இல்லை
  3. குழந்தை மணம், உடன்கட்டை ஏறுதல், கைம்மைக் கொடுமை காணப்பட்டது.
  4. நடுத்தர குடும்பத்து பெண்கள் மட்டும் ஓரளவு உரிமை பெற்றனர்.

 

விஜய நகரகாலத்தில் மகளிர்நிலை

  1. கோயிலில் பணிபுரிந்த பெண்கள் பரத்தைகளாக மாறினர்.
  2. பெண்கள் ஆடவரின் போகப் பொருளாக மாற்றப்பட்டனர்.
  3. வரதட்சணை கொடுமை நிலவியது.
  4. 17 – 18 ம் நூற்றாண்டிலும் இதே நிலையே நீடித்தது.

 

ஆங்கிலேயர் காலத்தில் மகளிர் நிலை

  1. கிறிஸ்தவச் சமய பெரியோர்கள் ஆர்வம் காட்டினர்.
  2. பெண்களுக்கான பள்ளிகள் துவங்கப்பட்டன.
  3. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களால் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது.
  4. பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டது.
  5. 1829 ல் சதி ஒழிப்பு சட்டம் கொண்ட வரப்பட்டது.
  6. 1856 ல் விதவை மறுமணச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
  7. சாரதா சட்டம் மூலம் பெண்களின் திருமண வயது உயர்ந்தது.
  8. பெண் சிசு கொலை தடை செய்யப்பட்டது.

 

தற்போதைய நிலை

  1. அரசியலில் பெண்கள் பங்கேற்க 1921ல் அனுமதி
  2. வாக்குரிமை பெண்களுக்கு வழங்கப்பட்டது.
  3. தேவதாசி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டது.
  4. திருவிக – பெண்ணின் பெருமை என்னும் நூலை எழுதினார்.
  5. பாரதியார் – மாதர் தம்மை இழிவு படுத்தும் மடமையை கொளுத்துவோம் என்றார்.
  6. பாரதிதாசன் – குழந்தை மணம் எதிர்ப்பு, விதவை திருமணம் ஆதரவு
  7. வள்ளலார் பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபாட்டார்.
  8. பெண்களின் சமூக, பொருளாதார நிலை உயர்ந்துள்ளது.

 

 

  1. சோழர்கால தேவரடியார்களின் நிலை பற்றி எழுதுக.

தேவரடியார்கள்

  1. இசையிலும் கூத்திலும் வல்லுநரான பெண்கள் பலர் கோயில் பணிகளில் ஈடுபட்டு இருந்தனர்.
  2. கல்வெட்டுகளில் இவர்கள் தேவரடியார்கள் என்று பொறிக்கப்பட்டுள்ளனர்.

பணிகள்:

  1. கோயிலில் திருவலகிடுதல்
  2. மலர் தொடுத்தல்
  3. திருமொழுக்கிடுதல்
  4. தேவாரம், திருவாசகம் ஓதுதல்
  5. நடனம் ஆடுதல்
  6. கல்வி (ம) கலையில் சிறந்து விளங்கினர்

முக்கியச் சிறப்புகள்

  1. ஏறக்குறைய எல்லாக் கோயில்களிலும் தேவரடியார்கள் இருந்தனர்.
  2. அவர்கள் பிழைப்புக்கு மானியங்கள் வழங்கப்பட்டன.
  3. தேவரடியார்களுள் சிலர் திருமணம் செய்து கொண்டு, இல்லற வாழ்வு நடத்தினர்.
  4. தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருத்தொண்டு புரிய இராசராசன் 400 தேவரடியார்களை அமர்த்தியதாக கல்வெட்டு குறிப்பிடுகிறது.
  5. அவர்கள் அனைவருக்கும் தனித்தனி வீடுகள் வரிசையாக அமைத்துக் கொடுத்தான்.
  6. சில கோயில்களில் திருவிழாக்காலங்களில் தேவரடியார்கள் நடிப்பதுண்டு.
  7. இன்ன பதிகங்களை இன்னவர்கள் இன்ன முறையில் பாடவேண்டுமென்று வற்புறுத்தத் தேவரடியார்களுக்கு உரிமை இருந்தது.

தேவரடியார்களின் நற்சிறப்புகள்

  1. இவர்கள் பாடிய பாடல்களில் அகமார்க்கம் என்பது ஒரு வகை
  2. இதனைப் பாடுவதற்கு மிகுந்த பயிற்சியும் இசைப் புலமையும் தேவை.
  3. சங்க காலத்தில் விறலியரும் பாணரும் வளர்த்து வந்த இசை (ம) கூத்தை தேவரடியார்கள் தொடர்ந்து வளர்த்து வந்தனர்.
  4. இவர்கள் மக்கள் சமூகத்தில் பெருமதிப்பை பெற்று இருந்தனர்.
  5. இவர்களுள் பலர் திரண்ட செல்வம் (ம) செல்வாக்கை பெற்று இருந்தனர்.
  6. கோயில்களுக்கும் கலைவளர்ச்சிக்கும் தேவரடியார்கள் நன்கொடைகள் வழங்கியுள்ளனர்.
  7. கோயில்களில் திருவெம்பாவை பாட, தேவரடியார்கள் அமர்த்தப்பட்டு இருந்தனர்.

 

பிற்காலத்தில் நிலை

  1. தேவரடியார்கள் கோயிலுக்கு விற்கப்பட்டுள்ளனர்.
  2. மேலும் பாதங்களில் குலக்குறியீடு இடுவது வழக்கம் என செய்திகள் தெரிவிக்கின்றனர்.
  3. சிலர் பரத்தைகளாக மாற்றப்பட்டு உள்ளனர்.
  4. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களால் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது.

 

  1. சோழர்கால பெண்களின் நிலை குறித்து விளக்குக.

பெண்களின் நிலை

  1. பெண்கள் எவ்விதமான கட்டுப்பாடுமின்றிச் சுதந்திரமாக வாழ்ந்து வந்தனர்.
  2. கற்பு ஒழுக்கம் பெண்களுக்கு அணிகலனாகக் கருதப்பட்டது.
  3. பெண்கள் சொத்துரிமை பெற்றிருந்தனர்.
  4. மன்னரும், செல்வரும் பல மனைவியரை மணந்தனர்.
  5. பெண்கள் உடன்கட்டை ஏறவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
  6. ஆனால் அரசியர் சிலர் தம் கணவருடன் உடன்கட்டை ஏறியதை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
  7. பெண்கள் மாடிகளின் மேல்நின்று தெருவில் சென்ற விழாக்கோலங்களைக் காண்பார்கள்.
  8. அரசர்களுடைய அலுவல்களில் பட்டத்தரசியரும் இடம் பெற்று இருந்தனர்.
  9. அரசியர்கள் தனிப்பட்ட முறையில் கோயில்கள் எழுப்புவதும். திருப்பணி செய்வதும் உண்டு.

செம்பியன் மாதேவியார்

  1. இவர் உத்தம சோழனின் அன்னை
  2. இவர் கண்டராதித்தன் மனைவி
  3. இவர் திருநல்லத்தில் உள்ள திருக்கோயிலைத் தம் கணவர் பெயரால் கண்டராதித்தம் என கற்றளியாகப் புதுப்பித்தார்.
  4. பார்பனப் பெண்கள் கோயில்களுக்குத் தானங்கள் வழங்கியுள்ளனர்.
  5. முதலாம் இராசராசனின் உடன்பிறந்தாளாகிய குந்தவை சிவன். திருமால், சமணக் கோயில்களை எழுப்பியுள்ளார்.

தேவரடியார்கள்

தேவரடியார்களும் அரண்மனை அரசில் பணிபுரிந்த பெண்டிரும் அறக்கட்டளைகள் நிறுவி வந்துள்ளனர்.

 

  1. இந்திய விடுதலைப்போரில் தமிழகப் பெண்களின் பங்களிப்பைப் பற்றி எழுதுக.
  2. வேலுநாச்சியார்
  3. சிவகங்கை இராணி
  4. மருது சகோதரர்களுடன் ஆங்கிலேயரை எதிர்த்து போராடியவர்.
  5. கடலூர் அஞ்சலையம்மாள்
  6. இவரை தென்னாட்டின் ஜான்சிராணி என காந்தியடிகள் அழைத்தார்.
  7. 1921 – காந்தியடிகள் காந்தியடிகள் துவங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு பெற்றார்.
  8. பங்கேற்ற போராட்டங்கள்
  • நீலன் சிலை அகற்றும் போராட்டம் (மகள் – அம்மாககண்ணு)
  • உப்புக்காய்ச்சும் போராட்டம்
  • தனியாள் போராட்டம்
  • வெள்ளையனே வெளியேறு இயக்கம்
  1. தன் சொத்துக்களை விற்று, விடுதலைப் போராட்டத்திற்கு செலவு செய்தார்.
  2. அம்மாகண்ணுவிற்கு லீலாவதி எனப் பெயரிட்டார்.
  3. கடலூரில் காந்தியை சந்திக்க இவருக்கு அரசு தடைவித்ததால், பர்தா வேடமணிந்து குதிரை வண்டியில் காந்தியை சந்தித்தார்.

 

iii. அம்புஜத்தம்மாள்

  1. காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று அழைக்கப்பட்டார்.
  2. எழுதிய நூல் – நான் கண்ட பாலபாரதம்
  3. அன்னை கஸ்தூரி பாயின் எளிமையான தோற்றத்தினால் ஈர்க்கப்பட்டு, எளிமையாக வாழ்ந்தார்.
  4. வை.மு. கோதைநாயகி, ருக்குமணி லட்சுமிபதியுடன் நட்புக் கொண்டு பெண்ணடிமைக்கு எதிராக குரல் கொடுத்தார்.
  5. பாரதியின் பாடல்களை பாடி விடுதலை உணர்வை ஊட்டினார்.
  6. அந்நியத் துணிகள் விற்கும் கடையின் முன் மறியல் செய்து சிறை சென்றார்.
  7. சிறையிலிருக்கும் போது, தான் கற்ற மொழிகளை பிறருக்கு கற்றுக் கொடுத்தார்.
  8. சீனிவாச காந்தி நிலையம் என்ற தொண்டு நிறுவனத்தை அமைத்தார்.

 

தமிழ்நாட்டு சமுக மேம்பாட்டு இயக்கங்களில் பெண் தலைவர்களின் பங்கு 

  1. முத்துலட்சுமி ரெட்டி
  2. மூவலூர் ராமாமிர்தம்

3.தர்மாம்பாள் -தஞ்சாவூர்

 

  1. மூவலூர் இராமமிர்தம் அம்மையார்
  2. கதராடையை ஊர் ஊராகக் கொண்டு சென்று விற்றார்.
  3. கதர் அணிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும் எனதன் வீட்டு வாசலில் எழுதி வைத்தார்.
  4. தீண்டாமை, தேவதாசி முறை, குழந்தை திருமணம் கைமை நோன்பு முதலியவற்றை எதிர்த்தார்.
  5. 1938-இந்தி எதிர்ப்புத் தணிப்புப் போராட்டத்தில் பங்கு பெற்றார். இதில் 42 நாள் 577 மைல் தூரம் நடைபயணம் மேற்கொண்டார்.
  6. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரே பெண்மணி
  7. தேவதாசி முறையை ஒழிக்க பல தலைவர்களுடன் இணைந்து போராடினார்.
  8. தாசியின் மோசவலை – நாடகம்

 

  1. தில்லையாடி வள்ளியம்மை
  2. தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் வாழ்வுரிமையை மீட்க நடத்தப்பட்ட காந்தியடிகள் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டவர்.
  3. 1913ல் வால்கஸ்ரஸ்ட் இடத்தில் நடைபெற்ற அறப்போரில் இவர் கைது செய்யப்பட்டு 3 மாத் சிறைத்தண்டனை பெற்றார்.
  4. சிறையில் உடல்நலம் குன்றியதால் விடுதலை செய்யப்பட்டார்.
  5. சிறைத் தண்டனைக்காக நீவருந்துகிறாயா? என காந்தியடிகள் வினவினார்.
  6. அதற்கு வள்ளியம்மை இல்லையில்லை மீண்டும் சிறை செல்லத்தயார். இந்தியர்களுக்காக எத்தகைய இன்னல்களையும் ஏற்பேன், என இன்னுயிரையம் தருவேன் என்றார்.

 

  1. தமிழக மகளிரின் சிறப்புகள் பற்றி எழுதுக.

தமழக மகளிரின் சிறப்புகள்

  1. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
  2. இந்தியாவில் மருத்துவம் பயின்ற முதல் பெண்
  3. தேவதாசி முறை ஒழிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.
  4. சட்ட 1929 மேலவைக்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் பெண்மணி
  5. 1949 – புற்றுநோய் மருத்துவமனை நிறுவினார்.
  6. 1930 – பூனாவில் அனைத்திந்திய பெண்கள் மாநாட்டை நடத்தினார்.
  7. சென்னையில் அவ்வை இல்லம் நடத்தினார்.
  8. இந்தி மொழி எதிர்ப்பு, தமிழாசிரியர்களின் ஊதிய உயர்வுக்குப் போராடினார்.
  9. இந்தியப் பெண்கள் கழகம் – 1917 (அடையாறு)
  10. அனைத்திந்திய பெண்கள் சங்கம்
  11. இந்தியக் குந்தைகள் பாதுகாப்பு இல்லம் 1926

 

  1. இராணிமங்கம்மாள்
  2. மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரின் மனைவி
  3. மகன் முத்து வீரப்பன் பதவிக்கு வரும் வரை ஆட்சி செய்தார்.
  4. மகன் இறக்கவே, பேரன் விசயரங்கச் சொக்கநாதன் அரியணை ஏறும் வரை ஆட்சி செய்தார்.

 

நடத்தியப் போர்கள்

  1. திருவிதாங்கூர்ப் போர் – மதுரை நாயக்கர் அரசுக்கு திறை செறுத்த தவிறிய திருவிதாங்கூர் இரவிவர்மாவை நரசப்பன் தலைமையில் படைதோற்கடித்து, பொருள், பொன், பீரங்கியை கைப்பற்றியது.
  2. தஞ்சைப்போர் தஞ்சை ஆண்ட மாரத்திய மன்னர் ஷாஜி மதுரை நாயக்கரின் சில பகுதிகளை கைப்பற்றினார். இதனை மீட்டு, பெரும் பொருள்களைப் பெற்றார்.
  3. மைசூர்ப்போர் – காவிரியின் குறிக்கே அணைகட்டி மைசூர் அரசர் கிக்கதேவராயன் மீது படையெடுத்தார். பெருமழையால் அணை உடைந்து போர் முடிவுற்றது.

 

இராணி மங்கம்மாளின் அறப்பணிகள்

  1. மதுரையில் பெரிய அன்னச் சத்திரத்தைக் கட்டினார்.
  2. பல புதிய சாலைகளை அமைத்தார்.
  3. கன்னியாகுமரி – மதுரை இடையே நெடுஞ்சாலை அமைத்தார்.
  4. குதிரைகள், பசுக்கள், காளைகள் நீர் அருந்த சாலையோர தண்ணீர் தொட்டிகள் அவர் காலத்தில் திறக்கப்பட்டன.
  5. கொள்ளிடத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது, அவர்களுக்கு உணவு, உடை, உறையுள் வழங்கினார்.
  6. வெள்ளத்தில் அழிந்த சிற்றூர்களை சீரமைத்தார்.
  7. மதுரையிலுள்ள மத்தியச் சந்தை, மதுரைக் கல்லூரி உயர்நிலைப் பள்ளிக்கட்டடம், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரின் பழைய அலுவலகம் இவரால் கட்டப்பட்டவை.

 

iii.நீலாம்பிகை அம்மையார்.

  1. இவர் மறைமலையடிகளின் மகள்
  2. இவர் தனித் தமிழ் பற்ற உடையவர்
  3. நூல்கள் – தனித்தமிழ் கட்டுரை, வடசொல் – தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகளின் வரலாறு, பட்டினத்தார் பாராட்டிய மூவர்

 

  1. இராஜேஸ்வரி அம்மையார்
  2. தமிழ், இலக்கியம், அறிவியல் துறைகளில் சிறந்து விளங்கினார்.
  3. திருமந்திரம், தொல்காப்பியம், கைவல்யம் போன்ற நூல்களிலுள்ள அறிவியல் உண்மைகள் குறித்து சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.
  4. சூரியன், பரமாணுப் புராணம் போன்ற நூல்கள் எழுதியுள்ளார்.

 

  1. எம்எஸ் சுப்புலெட்சுமி
  2. இவர் இசைக்கலைஞர்
  3. இவர் நடித்த மீரா படத்தின் மூலம் பாராட்டுகள் குவிந்தன.
  4. தில்லியில் காந்தியடிகளின் முன்னிலையில் ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடலைப் பாடி பாராட்டைப் பெற்றுள்ளார்.
  5. பாரத ரத்னா விருதைப் பெற்றுள்ளார்.

 

vi.பால சரஸ்வதி

  1. இவர் பாரத நாட்டியக் கலைஞர்
  2. பொது வெளியில் நடனம் ஆடுவது தண்டனைக்குரிய குற்றம் என்ற சட்டம் இருந்த காலத்தில் தம் நடன வாழ்வை தொடங்கினார்.
  3. நாட்டியம் ஆடுவது கீழ்மையானது என்ற எண்ணத்தை மாற்றினார்.
  4. பண்டிட் ரவி சங்கர் வட இந்தியாவின் பல இடங்களில் நடனமாடும் வாய்ப்பை பெற்றுத் தந்தார்.
  5. நம் தேசிய கீதமான ‘ஜனகணமன’ பாடலுக்கு நாட்டியம் ஆடியுள்ளார்.
  6. பல வெளிநாடுகளில் பரத நாட்டியத்தின் பெருமையை உலகறியச் செய்தவர்.

 

vii. ராஜம் கிருஷ்ணன்

  1. பெண் எழுதாளர்கள் சமூகப் பிரச்சனைகளையும் எழுதுவர் என்ற நிலையை உண்டாக்கியவர்.
  2. ‘பாஞ்சலி சபதம் பாடிய பாரதி” புகழ் பெற்றது
  3. உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கையை “கரிப்பு மணிகள்” என்ற புதினமாக எழுதினார்.
  4. குறிஞ்சித்தேன் – நீலகிரி படுகர் இன மக்களின் வாழ்க்கை
  5. அலைவாய்க்கரையில் – கடலோர மீனவர் வாழ்வின் சிக்கல்கள்
  6. சேற்றில் மனிதர்கள், வேருக்கு நீர்
  7. கூட்டுக் குஞ்சுகள், மண்ணகத்துப் பூந்துளிகள் என்ற புதினங்களையும் எழுதியுள்ளார்.

 

viii. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

  1. இவர் சமூக அவலங்களைக் களைவதற்கான போராளி
  2. இவர் மதுரையின் முதல் பட்டதாரி
  3. காந்தியடிகள் (ம) வினோபாபாவே உடன் இணைந்து பணியாற்றியவர்
  4. பூதான இயக்கத்தில் பங்குபெற்றவர்
  5. ஒத்துழையாமை, சட்டமறுப்பு, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு பெற்றவர்.

 

  1. சின்னப்பிள்ளை
  2. பெண்களின் வாழ்க்கை மேம்பட உழைத்தவர்
  3. பெண்களுக்கான ஒரு குழுவை துவக்கினார்.
  4. பெண்களுக்கு வேலைவாய்ப்பு (ம) வருமானம் தரக்கூடிய விவசாயத்தொழிலை அக்குழு மூலம ஊக்குவித்தார்.
  5. குழுவின் பெயர் – களஞ்சியம்
  6. பெண் ஆற்றல் விருது, ஔவை விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.

 

  1. சாதனை புரிந்த திருநங்கைகளை பற்றி குறிப்பெழுதுக.

சாதனை புரிந்த திருநங்கைகள்

  1. நர்த்தஜி நடராஜ்
  2. தன்னுடைய நடனத் திறமையால் அமெரிக்கா, இலண்டன், கனடா உள்ளிட்ட உலக நாடுகளில் பரதத்தை உயிரோட்டமாக மாற்றி வருகிறார்.
  3. தஞ்சாவூர் கிட்டப்பாவிடம் பரதம் பயின்றவர்.
  4. திருவாசகம், தேவாரம், திருக்குறளை மையமாகக் கொண்டு பரத நிகழ்ச்சிகளை இவர் நடத்துகிறார்.
  5. திருநங்கை என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர்
  6. திருநங்கைகளுள் முதன் முதலில் கடவுச்சீட்டு, தேசிய விருது, மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றவர்.
  7. கலைமாமணி விருது, சங்கீத நாடக அகாதெமி, பத்மஸ்ரீ விருதினைப் பெற்றுள்ளார்.

 

  1. பிரித்திகாயாஷினி
  2. சேலத்தைச் சேர்ந்தவர்
  3. 2011ல் கணினிப் கணினிப் பாடப்பிரிவில் இளநிலைப் பட்ட வகுப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி
  4. சென்னையில் காவல் துறையின் சட்டம் – ஒழுங்குப் பிரிவில் பணியாற்றுகிறார்.

 

iii. ஜோமிதா மோண்டல் மாஹி

  1. மேற்கு வங்கத்தைச் சார்ந்தவர்.
  2. இவர் திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காகப் பணியாற்றி வருகிறார்.
  3. வடக்கு தினாஜ்பூர் மாவட்டம் – இஸ்லாம்பூரில் லோக் அதாலத் நீதிபதியாக பணியில் உள்ளார்.

 

  1. தாரிகா
  2. தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினப் பிரிவில் பள்ளிப் படிப்பை முடித்த முதலாமவர்.
  3. திருவள்ளூர் மாவட்ட அம்பதூர் காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 2017ல் மேல்நிலைப் பொதுத்தேர்வில் வெற்றி பெற்றார்.
  4. தற்போது அரசு சித்த மருத்துவக் கல்லூாயில் பயின்று வருகிறார்.

 

Caste and Religion

  1. பத்தொன்பதாம் நூற்றாண்டின் குலப்பூசல்கள் குறித்து விளக்குக.

குலப்பூசல்கள்

  1. மக்களிடையே நூற்றுக்கணக்கான குலங்கள் பெருகி இருந்தன.
  2. அவர்கள் வாழ்ந்த இடத்திற்கு ஏற்ப பல மொழிகளை பேசினர்.
  3. திருநெல்வேலியில் வாழ்ந்த முஸ்லீம்கள் தமிழை பேசினர். அவர்களுள் பெரும்பாலருக்கு உருது பேச தெரியும். ஆனால் எழுதவும் படிக்கவும் தெரியாது.
  4. திருநெல்வேலி தென்பகுதி (ம) நாஞ்சி நாட்டில் வாழும் பிராமணர்கள் தமிழும் மலையாளமும் பேசுகின்றனர்.
  5. இன்ன குலத்தினர் இன்ன சமயத்தைத்தான் பின்பற்றி வருகின்றனர் என்று வரையிட முடியாது.
  6. செட்டிகளிடையே சைவர், வைணவர் என இரு பிரிவுகள் உண்டு. இவ்விரு பிரிவினருக்கிடையே பந்தி உணவும், பெண் கொடுத்தலும் எடுத்தலும் நடைபெற்று வருகின்றன.
  7. பிராமணர்களுள் வைணவர்களுள் தம்மை அய்யங்கார்கள் என்று கூறிக்கொள்வர். நாமம் தீட்டி கொள்வார்கள்.
  8. கோயில் அர்ச்சகர்த் தொழிலுக்கு உரிமையுடையவர்கள் ஆதிசைவ அந்தணர்கள் (அ) குருக்கள் ஆவார்கள் ஏனைய பிரிவினர் இவர்களுடன் உணவுக்கலப்பும் இரத்தக் கலப்பும் கொள்வதில்லை.
  9. “தில்லைப் பெண் எல்லைத் தாண்டாது” என்னும் பழமொழிக்கிணங்க இவ்வூர் மக்கள் தமக்கு இடையிலான பிரச்சனைகளை தாமே பேசிக்கொள்வர்.
  10. இவர்கள் நீதிமன்றத்தையும் நாடிச் செல்ல மாட்டார்கள் இவர்கள் தில்லை நடராஜனை வழிபடுபவர்கள் ஆயினும் தில்லை கோவிந்த ராசனுக்கும் வழிபாடும் அர்ச்சனையும் செய்வர்.

 

  1. வலக்கை இடக்கை பூசல்கள் குறித்து எழுதுக.

வலக்கை இடக்கை பூசல்கள்

சங்க காலத்திற்கு பின், சோழர்கால ஆட்சியின் போது குல வேறுபாடுகளில் கொடுமையான விளைவுகளுக்குக் காரணமாக இது இருந்தது.

 

 

வலக்கை பிரிவினர்

  1. மன்னனின் வலப்பக்கம் நிற்பவர்கள்
  2. அரசின் சலுகைகளை பெற்ற வந்தனர்.
  3. படைப்பிரிவில் இருந்தனர்.

 

இடக்கை பிரிவினர்

  1. மன்னனின் இடப்புறம் அனுமதி பெற்று நின்றவர்கள்
  2. வணிகர்கள், தொழிலாளர்கள் ஆவர்.
  3. தாழ் பிரிவினராக கருதப்பட்டனர்
  4. 98 ஜாதிப்பிரிவினர் இருந்தனர்.

 

பாதிப்புகள்

  1. இடங்கையினர் அளவுக்கு மீறிய வரித்தொல்லையால் பாதிப்பு அடைந்தனர்.
  2. ஓரிடத்தில் தமக்கு விதிக்கப்பட்ட கால்நடை வரிகளை கட்ட மறுத்தனர்.
  3. அரசுக்கு செலுத்த வேண்டிய வரிவிகிதங்களைத் தாமே கூடி முடிவு செய்தனர்.

 

முதலாம் குலோத்துங்கன்

  1. இவன் இடங்கை பிரிவினரின் சுங்கவரியை நீக்கினான்.
  2. அதிராசேந்திரன் கொலைக்கு காரணம் – இடங்கைக் கலகமாகும்.

 

வலக்கை – இடக்கை பிரிவினரின் போராட்டங்கள்

  1. இரு பிரிவினரும் கூடி பிராமணர்களை எதிர்த்துள்ளனர்.
  2. அரசுக்கும் கோயிலுக்கும் செலுத்த வேண்டிய வரிவிகிதங்களை நிலத்தின் தரத்திற்கு ஏற்ப வரையறுத்தனர்
  3. இச்செய்தி கூறும் கல்வெட்டில் தந்திரிமர் செட்டி வாணியர், பறையர் என பல குலப்பெயர்கள் காணப்படுகின்றன.
  4. அரசாங்க அதிகாரிகள், நிலவுடையாளர், பிராமணருக்கு எதிராக மோசடி போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
  5. அரசியல் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

 

மோசடி செய்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள்

  1. குடியிருப்பு வசதிகள் செய்து தரக்கூடாது
  2. கணக்கெழுதக் கூடாது
  3. பிற உதவிகளைச் செய்யக் கூடாது
  4. இதனை மீறுபவர்களைக் கண்ட இடத்தில் குத்திவிட ஒப்பந்தம் செய்தனர்.

 

 

  1. சங்ககாலம் முதல் சாதி வளர்ச்சி நிலைகளை விவரி.
  2. சங்ககாலம்
  3. தொழில் (ம) நில அடிப்படை
  4. அரசும் அந்தணர், வணிகர், வேளாளர்
  5. பிராமணர் உயர்நிலை

 

  1. சங்கம் மருவிய காலம்
  2. சாதிமுறை படிப்படியே வளர்ந்தது
  3. பல குலப்பிரிவுகளும் கோத்திரப்பிரிவுகளும் வளர்ந்தது.
  4. கி.பி 500 – 900 சாதி வேற்றுமை வளர்ந்தது.

 

சேரர் காலத்தில்

  1. தீண்டாமைக் கொள்கை நம்பூதிரிகளால் வளர்க்கப்ட்டது.
  2. மேலினத்தவர் – தாழ்ந்தவர் இடையே வேறுபாடுகள் அதிகரித்தன.

 

சோழர் காலம்

  1. கி.பி. 9 – 13 ம் நூற்றாண்டு வரை பார்ப்பனர்கள் வளர்ச்சி
  2. வேலி நிலங்கள் பிரம்மதேயங்களாக மாற்றம்
  3. 98 குலங்கள் இருந்ததை அச்சுதராயரின் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

 

சூத்திரர் பிரிவு

தமிழர் அனைவரையுமே சூத்திரர் என்ற இழிகுலத்தினராகக் கருதிக் கோயில் (ம) மடங்களில் இருந்து ஒதுக்கினர்.

 

வலக்கை – இடக்கை பூசல்கள்

  1. அரசின் சலுகைகளை பெற்ற படைப்பிரிவினர் வலக்கை
  2. மன்னரின் இடப்புறம் இருந்த தாழ்பிரிவினர் – இடங்கை
  3. இடங்கை பிரிவினருக்கு அதிகவரி

 

விஜயநகர காலம்

  1. பறையரின் நிலை மிகவும் தாழ்ந்து இருந்தது
  2. அவர்களுக்கென தனிச்சேரிகள் அமைத்தன.

 

வடகலை – தென்கலை

வைணவப் பிரிவுகள் தோன்றின

 

 

 

19ம் நூற்றாண்டு

ஒதுக்கப்பட்ட சாதியினருக்கு சில உரிமைகள் கிடைத்தன. இது ஆங்கிலேய ஆட்சியின் விளைவு

 

இருபதாம் நூற்றாண்டு

பறையர் நீக்கம், ஹரிஜனங்கள், வைக்கம் போராட்டம், கிறிஸ்தவமத மாற்றம், சுயமரியாதை இயக்கம் போன்றவை.

 

  1. பல்வேறான சாதியொழிப்பு முயற்சிகளை விவரி
  2. தமிழகத்தில் சாதிப்பரிவு தொழிற் அடிப்படை
  3. பல்லவர், சோழர், நாயக்கர் வருணாசிரமத்தைப் போற்றினர்.
  4. ஒவ்வொரு சாதியிலும் உட்பிரிவுகள் தோன்றின.
  5. சாதிப்பூசல்களும் தோன்றின.

 

  1. ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்
  2. வேற்றுமை தெரிந்த நாற்பானுள்ளும் கீழ்ப்பாலொருக்கு கற்பின், மேற்பால் ஒருவனும் அவன் கண்படுமே”
  3. அரசர், அந்தணர், வணிகர் மேலோர்
  4. வேளாளர் – கீழோர்
  5. கல்வியறிவு இவ்வேறுபட்டவர்களிடையே இணக்கம் ஏற்படுத்த வல்லது

 

  1. திருவள்ளுவர்
  2. மனிதர்க்குப் பெருமை என்பது பிறவியினால் இல்லை
  3. அறிவு மற்றும் ஒழுக்கத்தால் என்றார்.
  4. மேற்குடிப் பிறந்த கல்லாதவரைவிடக் கீழ்க்குடிப் பிறந்த கற்றோர் பெருமை பெறுவரர்.
  5. ஒழுக்கம் இல்லாதவன் மேற்குடியில் பிறந்தாலும் இழிந்தவரே

 

III. நாலடியார்

  1. கல்வியறிவினால் கீழ்க்குடிப் பிறந்தோர் உயர்வடைய முடியும் என்றும்
  2. உயர்சாதியினர் அவர்களின் பிறவி பற்றி இழிவாக என்றும் கூறுகிறார்.
  3. விளைநிலத்து நெல்லினும் களர்நிலத்து உப்பு மேலாக கருதப்படுவதுபோல, கடைநிலத்து பிறர் கல்வி கற்றவன் தலைநிலத்து வைக்கப்படுவான்

 

  1. சிலம்பும் மணிமேகலையும்
  2. ஒழுக்கமே உயர்வுக்கு வழி
  3. பரத்தையர் குடிப்பிறந்தவரின் குழந்தை மாதவி மணிமேகலை உயர்நிலை எட்டியுள்ளனர்.
  4. பல்லவர் காலம்

நல்லொழுக்கமாவது இறையன்பே

  1. சித்தர்கள்

நாயக்கர் காலத்தைச் சார்ந்த இவர்கள் கண்மூடபழக்க வழக்கங்களையும் சடங்குகளையும் சாடுகின்றனர்.

 

VII. கபிலர் வைதிகர்களைப் பார்த்து

  1. உலகில் எங்குமில்லாத சாதி நாவலந்தீவில் மட்டும் இருப்பதேன்?
  2. கதிரவனும் திங்களும் எம்மைத் தாழ்ந்தோர் என புறக்கணிப்பதுண்டோ?

VIII. ஆங்கில அரசு

காந்தி – ஹரிஜன இயக்கம்

  1. பாரதியார்

தந்தைபெரியர்

பாரதிதாசன்

அண்ணா – சமூக சீர்திருத்தம் முதன்மைபனி

 

Social and Cultural life of conten Porary Tamils

  1. தமிழ்மொழி இலக்கிய வளர்ச்சிக்கு அயல்நாட்டவர் ஆற்றிய பணிகளை குறிப்பிடுக.
  2. கால்டுவெல் – அயர்லாந்து
    1. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூல் தமிழ் – திராவிட மொழி வரலாற்றை எடுத்துரைத்தது.
    2. திருநெல்வேலி சரித்திரம் – ஆங்கில நூல்
  • “திராவிட மொழிகள் தனியினம்” அவற்றிற்கு தாய் தமிழே என்றார்.

 

  1. வீரமாமுனிவர் – இத்தாலி
  1. சுப்ரதீபக் கவிராயரிடம் தமிழ் பயின்றார்.
  2. பரமார்த்த குருகதை – உரைநடையின் தந்தை
  3. தொன்னூல் விளக்கம் – குட்டித்தொல்காப்பியம்
  4. கொடுத்தமிழ், செந்தமிழ் இலக்கணம் தந்தார்
  5. தேம்பாவணி எழுதியுள்ளார்
  6. சதுரகராதி வெளியிட்டுள்ளார்
  7. இயற்பெயர் – கான்ஸ்டான்டியஸ் ஜோசப் பெஸ்கி
  8. எழுத்துச் சீர்த்திருத்தம்
  9. எல்லீஸ் துரை
  10. தமிழ்ச் சுவடிகளை சேகரித்து, பாதுகாத்தார்.
  11. வீரமாமுனிவரின் நூலுக்கு மறுமதிப்பிட்டார்.
  • திருவள்ளுவர் உருவம் பொறித்த தங்ககாசு வெளியீடு

 

  1. ஜி.யு.போப் – இங்கிலாந்து
  2. திருவாசகம் – ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு
  3. புறநானூறு, மணிமேகலை மொழி பெயர்ப்பு
  • தம் கல்லறையில் தாம் ஒரு தமிழ் மாணவன் என குறிப்பிடக் கோரினார்.
  1. இராபர்ட் – டி – நொபிலி – இத்தாலி
  2. ஞானோபதேசம், ஞானதீபிகை உள்ளிட்ட 18 நூல்கள் எழுதியுள்ளார்.
  3. உரைநடை இலக்கிய நூலுக்கு வித்திட்டவர்

 

  1. ஹிராஸ் பாரதியார் – இங்கிலாந்து

சிந்து வெளி நாகரிகத்தை திராவிட நாகரிகம் என எடுத்துரைத்தார்.

 

  1. ஜார்ஜ் எல் ஹார்ட் – அமெரிக்கா
  2. தமிழ் எழுத்துக்களை கணினி வழி படுத்தினார்.
  3. தமிழ் செம்மொழி கட்டுரை வெளியிட்டார்.

 

  1. அஸ்கோபார்போலோ – செக்நாடு

தமிழ்மொழிக்கும் சிந்துவெளி நாகரிகத்திற்கும் உள்ள தொடர்பை விளக்கினார்.

 

  1. சீகன் பால்கு – ஜெர்மனி
  2. தமிழ் நூல்களை ஜெர்மன் மொழியிலும். ஜெர்மனி நூல்களை தமிழிலும் மொழி பெயர்த்துள்ளார்.
  3. விவிலியத்தின் புதிய ஏற்பாடு தமிழில் மொழிபெயர்த்தார்.

 

  1. தமிழ்நாட்டிற்குள் ஐரோப்பியரின் வரவு குறித்து விளக்கமான விடையளிக்க.
  2. தமிழகத்தில் போர்த்துக்கீசிரியர் வருகை
  3. வாஸ்கோடகாமா 1498ல் கள்ளிக்கோட்டையை அடைந்தார்
  4. தஞ்சை செவ்வப்ப நாயக்கரிடமிருந்து நாகப்பட்டினத்தில் வியாபார உரிமை பெற்றனர்.
  5. 1533ல் நாகப்பட்டினம், தூத்துக்குடி துறைமுக நகரங்களை கைப்பற்றியது.
  6. சந்தோம் போர்த்துக்கீசியர் வசமானது
  7. போர்த்துக்கீசியரைத் தமிழர்கள் பறங்கிகள் என இழித்துக் கூறினர்.
  8. அவர்கள் மாட்டு இறைச்சி உண்பதையும் மது பானம் குடித்ததையும் தமிழர்கள் வெறுத்தனர்.

 

  1. தமிழகத்தில் டச்சுக்காரர் வருகை
    1. 1602 ல் பழவேற்காடு டச்சுக்காரர்கள் வசமானது.
    2. ஜெல்டிரியா எனும் பாதுகாப்புக் கோட்டையை கட்டினார்.
    3. 1605ல் மசூலிப்பட்டினத்தில் குடியேற்றங்களை அமைத்தனர்.
    4. 161060 நாகப்பட்டினம், நகர்கோவில், பரங்கிப்பேட்டை முதலியன காலனியாதிக்க பகுதிகளாயின.
    5. பழவேற்காட்டிலிருந்து அடிமைகள் ஏற்றுமதியாகினர்.
    6. பாதிரியார் ஆபிரகாம் ரோசர் புலிக்காட்டில் தங்கித் தன் பணிகளைச் செய்து வந்தார்.

 

III. தமிழகத்தில் ஆங்கிலேயர் வருகை

  1. 1600, டிசம்பர் 31ல் கிழக்கிந்திய கம்பெனிக்கு விக்டோரிய ராணி அனுமதி
  2. 1639 ல் பிரான்சிஸ் டே என்பவர் சந்திரகிரி ஆளுநரிடமிருந்து சென்னையை பெற்றார்.
  3. 1640 ல் சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது
  4. கடலூரில் புனித டேவிட் கோட்டையை கட்டினர்.
  5. முதலாம் கர்நாடகப் போருக்குபின் சென்னை மீண்டும் ஆங்கிலேயர் வசமானது.
  6. மைசூர்போருக்கு பின் திப்புவின் மக்கள் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.
  7. ஸ்ரீரங்கப்பட்டினம் சூறையாடப்பட்டது
  8. போருக்கான இழப்புக்கு சென்னை அரசாங்கம் பொறுப்பேற்றது.

 

  1. பிரெஞ்சுக்காரர்கள் வருகை
    1. 1674 ல் பிஜப்பூர் மன்னரிடமிருந்து புதுச்சேரியை பெற்றனர்.
    2. 1725 ல் தஞ்சாவூரை ஆண்ட மராத்திய மன்னரிடமிருந்து மாஹியை பெற்றனர்.
    3. 1739ல் காரைக்கால் பகுதியை கைப்பற்றினர்.

 

  1. தமிழகத்தில் டேனியர் வருகை
  1. 1706 ல் சீகன் பால்கு தரங்கம்பாடி வந்தடைந்தார்.
  2. தரங்கம்பாடியில் டேனியர் கோட்டை அமைத்தனர்.
  3. சீகன் பால்கு அச்சுக்கூடம் நிறுவினார்
  4. விவிலியத்தின் புதிய ஏற்பாடு தமிழில் மொழி பெயர்த்தனர்.
  5. இவர்களது நோக்கம் சமயப் பிரச்சாரம்
  6. தேவாலயக் கட்டடம் (ம) இறையியல் பயிற்சி பள்ளிகளை நிறுவினர்

 

 

 

 

மராத்தியர்களின் சமூக பண்பாட்டு வரலாறு

  1. தமிழகத்திற்கு மராட்டியர்கள் செய்த நன்மைகளை ஆராய்க.

தமிழகத்தில் மாராட்டிர்கள்

  1. கிபி. 1676 ல் தஞ்சை நாயக்கரிடமிருந்து மராட்டியர் வசம் சென்றது.
  2. 128 ஆண்டுகள் அரசாண்டனர்
  3. புதுக்கோட்டை, மன்னார்குடி, கும்பகோணம் பகுதிகளை ஆட்சி செய்தனர்.

 

மராட்டியர் செய்த நன்மைகள்

  1. நாட்டு நலத்திட்டங்கள்
    1. குளங்களை வெட்டினர்
    2. பள்ளிகள், சத்திரங்களை நிறுவனர்.
  • கோயில்களுக்கு நிலங்கள் அளித்தனர்
  1. கட்டிடம், சிற்பம், இசை, ஓவியக்கலைகளை வளர்த்தனர்.

 

  1. இலக்கியப் பணிகள்
  1. சரபோஜி மன்னர் ஏட்டுச் சுவடிகளை ஆங்கிலம் (ம) வடமொழியில் திரட்டினார்.
  2. கணிதம், ஜோதிடம், வானநூல் என பலதுறை நூல்கள் சேகரித்தனர்.
  • மருத்துவ நூல்கள் செய்யுள் வடிவில் மாற்றப்பட்டன.

 

  1. சரஸ்வதி மகால்
  2. இரண்டாம் சரபோஜி மன்னர் உருவாக்கினார்.
  3. பல ஆயிரக்கணக்கில் வடமொழி நூல்கள், அச்சிடப்பட்ட நூல்களும் திரட்டி வைக்கப்பட்டன.
  • மிகச்சிறந்த கல்வி (ம) ஆய்வு மையம்
  1. 2200 ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படுகின்றன.

 

  1. மருத்துவ வளர்ச்சி
  2. தஞ்சையில் மேனாட்டு மருந்தகம் அமைப்பு
  3. இந்திய மருந்தகம் அமைப்பு

 

  1. மடங்கள் (ம) சத்திரங்கள்
  2. சரபோஜி மன்னர், மனைவி முத்தம்மாள் பெயரில் சத்திரம் அமைத்தார்.
  3. பல்வேறு சைவ மடங்களுக்கு உதவினர்.
  • சத்திரத்தில் வேதம் அறிந்தவர், ஆசிரியர்கள், மருத்துவர்கள் இருந்தனர்.

 

  1. கலைப்பணிகள்
  2. சரஸ்வதி மகாலில் வண்ண ஓவியங்கள் அமைக்கப்பட்டது.
  3. பட்டு நெசவை போற்றினர்
  • சிவக்கொழுத்து தேசிகர், வெங்கடாசலம் பிள்ளை போன்ற பல தமிழறிஞர்கள் இருந்தனர்.
  1. பிரதாபசிங் இசைநூல் இயற்றியுள்ளார்.
  2. அச்சகம் நிறுவியள்ளனர்.
  3. கலைக்கூடத்தில் அரிய காசுகளை சேமித்தன.

 

  1. சிற்பக்கலை
  2. பிரதாப்சிங் மனைவி, அம்மணி அம்மாவின் வெண்கல விக்ரகம் கிடைத்துள்ளது.
  3. தஞ்சை கோவிலில் வெள்ளி தகட்டால் மூடப்பட்ட எருது வாகனம் காணப்படுகிறது.

 

  1. தமிழ்நாட்டின் பாளையக்காரர் முறை பற்றி எழுதுக.

பாளையக்காரர் முறை

  1. விஜயநகர பேரரசின் கீழ் மதுரையை நாயக்க மன்னர் விசுவநாதர் ஆட்சி புரிந்தார்.
  2. தமிழ்நாட்டில் ஏற்பட்ட குழப்பத்தை நீக்கி, ஆட்சி புரிய பாளையங்கள் உருவாக்கம்.
  3. 1535ல் 72 பாளையங்கள் உருவாகியது.
  4. 1530 ல் வாரங்கல் – காகதீய அரசு பின்பற்றல்

 

வரிபகிர்வு

  1. மதுரை நாயக்கர்கள் – 1/3 பங்கு
  2. படைவீரர்கள் – 1/3 பங்கு
  3. பாளையக்காரர்களின் செலவு – 1/3 பங்கு

பணிகள்

  1. நாயக்க மன்னருக்குப் படைகொடுத்து உதவினர்.
  2. வரிவசூல் செய்து மன்னருக்குத் தருதல்
  3. தம் எல்லைக்குட்பட்ட பகுதியில் நீதி வழங்குதல்
  4. போர்காலங்களைத் தவிர்த்து, பிறகாலங்களில் நிலச்சாகுபடி செய்தனர்.

 

  1. நிலப்பிரிவுகள் (ம) காவல் பிரிவுகள்
    1. கரிசல் நிலம்
    2. பொட்டல் நிலம்
  • செவ்வல் நிலம்
  1. வெப்பல் நிலம்

 

  1. அரசு, நாடு, திசை, ஸ்தலக் காவலர்கள்

பாளையக்காரரின் இராணுவம்

  1. அமரம் சேவகர் – சேவைக்க கூலியாக நிலம்
  2. கட்டுப்புடி சேவகர் – சேவைக்கு கூலியாக நிலம்
  3. கூலிச் சேவகர் – சேவைக்கு கூலியாக பணம் பெற்றனர்.

 

போர்முறை

  1. கொரில்லா போர் முறை பின்பற்றல்
  2. போர்க்காலங்களில் மந்திரம் போடுதல்
  3. கள்ளர்கள் வலைத்தடி என்ற ஆயுதம்
  4. களிமண் (அ) செங்கல்லை ஆன கோட்டை இது பீரங்கித் தாக்குதலுக்கு பயனற்றது.

நன்மைகள்

  1. நாயக்கர்களின் நிலையான ஆட்சி உருவானது
  2. வெளிநாட்டினர் படையெடுப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டது.
  3. தெலுங்கு – தமிழ்நாட்டு மன்னர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டனர்.
  4. பாளையக்காரர் கிளர்ச்சி மூலம் ஆங்கிலேயரை எதிர்த்தனர்.

 

குறைபாடுகள்

  1. அதிக வரியால் மக்கள் அவதியுற்றனர்.
  2. ஊழல் காணப்பட்டது.
  3. நிலங்கள் முறையாக அளக்கப்படவில்லை
  4. கடும் தண்டனைகள் வழங்கப்பட்டது.
  5. நிலத்தின் மதிப்பை குறைத்து மதிப்பிட்டனர்.

 

 

  1. ஆங்கிலேயர் ஆட்சியால் தமிழகத்துறையில் ஏற்பட்ட வளர்ச்சியை விளக்குக.
  2. அரசியல் விளைவுகள்

பல்வேறு பகுதிகளாக சிதறி கிடந்த பகுதிகள் இந்தியா என்ற ஒரே குடையின் கீழ் வந்தது.

சென்னை மாகாணம் உருவாக்கம் (1801)ல்

 

  1. பொருளாதாரத்துறை நிலை விவரி?
  1. தபால், தந்தி தகவல் தொடர்பு – 1854 ல் டல்ஹௌசி அறிமுகம்
  2. ரயில்பாதை – 1853ல் டல்ஹௌசி அறிமுகம்.
  • நிலவரி ஒழுங்குமுறைப் படுத்தப்பட்டது.
  1. சென்னை, தூத்துக்குடி துறைமுகங்கள் உருவாக்கம்
  2. மேட்டூர் பாபநாசம் அணைகள் கட்டப்பட்டன.
  3. காவல் துறை
  4. இந்திய குற்றவியல் சட்டம் – 1860
  5. இந்திய காவல் சட்டம் – 1860
  • உள்நாட்டு பாதுகாப்பு தனிகாவல் பிரிவு
  1. சட்டத்தின் முன் அனைவரும் சமம்

 

  1. நிர்வாகத் துறை
    1. 1772 ல் வாரன் ஹேஸ்டிங் கலெக்டர் பதவியை உருவாக்கினார்.
    2. மாவட்டம், தாலுகா, நகராட்சி பிரிவுகள் உருவாக்கம்

 

  1. நீதித்துறை
  1. நிர்வாகத்துறையிலிருந:து நீதித்துறை பிரிப்பு
  2. 1861 ல் சென்னையில் உயர்நீதிமன்றம் உருவாக்கம்
  • சிவில் (ம) கிரிமினல் நீதிமன்றங்கள் உருவாக்கம்

 

10.தொல்பொருள் ஆய்வுத்துறை 

பழம்பொருட்களை பாதுகாக்க தனித்துறை

 

  1. பத்திரிக்கைத் துறை
  2. 1711 – சென்னையில் அச்சுக்கூடம்
  3. மெட்ராஸ் கெசட் செய்தித்தாள் வெளியீடு
  • 1878 சுதேசமித்திரன், மெட்ராஸ் மெயில்

 

  1. சமூகத்துறை
  2. சதி ஒழித்தல் -1829
  3. விதவை மறுமணச்சட்டம் – 1856
  • குழந்தை திருமண தடை சட்டம் – 1892
  1. சாரதா சட்டம் 1928

 

  1. இலக்கியம் (ம) மொழித்துறை
    1. ஷேக்ஸ்பியர் நாடகத்தை தழுவி பல தமிழர் நாடகங்கள்
    2. கால்டுவெல் – திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
  • ஜி.யு. போப் – திருவாசகம், திருக்குறள் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு
  1. வீரமாமுனிவர் – தேம்பாவணி, சதுரகராதி போன்றவை

 

  1. பண்பாட்டுக் கூறுகள்
  1. ஆண் – பெண் சமத்துவம்
  2. ஆங்கில ஆண்டுமுறை பரவியது
  • நாட்டு மூலிகைகள் மறைந்தன.
  1. மது, வெண்சுருட்டு பயன்பாடு
  2. பாண்டு வாத்தியம், வயலின் பரவல்
  3. மிளகாய், அன்னாசி, பீட்ரூட் தமிழர் உணவாயின.
  • கிறிஸ்தவ மதமாற்றம், பள்ளிகள் துவக்கம்

 

  1. கல்வித்துறை
    1. பட்டயச் சட்டம் – 1813 : ரூ 1லட்சம் நிதி ஒதுக்கீடு
    2. மெக்காலோ திட்டம் – 1835 : ஆங்கில கல்வி முறை பரவியது
  • தாமசின் முயற்சி 1853 : பிராந்திய மொழி கல்வி
  1. உடஸ் கொள்கை 1854 : இந்திய கல்வியின் மகாசாசனம்
  2. ஹண்டர்கல்வி குழு 1882 : ஆரம்ப (ம) இடைநிலைக்கல்வி
  3. இந்திய பல்கலைக் கழகச்சட்டம் முறை – 1904
  • சாட்லர் பல்கலைக்கழக குழு – 1917
  • ஹார்டாக்குழு – 1929 – தொழிற்கல்வி
  1. வர்தா கல்வி – 1937
  2. சர்ஜண்ட் திட்டம் – 1944

 

கல்லூரி (ம) பல்கலைக்கழகங்கள்

  1. சென்னை. பம்பாய், கல்கத்தா -1857ல் உருவாக்கம்
  2. பொறியியல் கல்லூரி – 1834
  3. சென்னை மருத்துவக் கல்லூரி – 1835
  4. கிறிஸ்தவக் கல்லூரி – 1837
  5. பச்சையப்பன் கல்லூரி – 1841
  6. ஓவியக் கல்லூரி – 1850
  7. பெண்களுக்கான பள்ளிகள் – 1866

 

  1. தமிழ்நாட்டில் முக்கியமானவை
  2. 1826 – சர்தாமஸ் மன்றோ பொதுக்கல்வி வாரியம் அதைதார்
  3. 1854 – பொதுக்கல்வி இயக்குநர்
  4. 1859 – கிண்டி பொறியியல் கல்லூரி
  5. 1910 – தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம்
  6. 1911 – பொதுத்தேர்வு அறிமுகம்

 

  1. பாளையக்காரர்களின் கிளர்ச்சியை பற்றி எழுதுக.

பாளையக்காரர் கிளர்ச்சி

  1. பூலித்தேவன்
  2. வீரபாண்டிய கட்டபொம்மன்
  3. ஊமைத்துரை
  4. வேலு நாச்சியார்
  5. தீரன் சின்னமலை
  6. மருது பாண்டியர்கள்

 

பூலித் தேவர் : 1755 – 1767

  1. மேற்கு – தெற்கட்டும் செவல் பகுதி
  2. கம்பெனியின் நாடு பிடிக்கும் கொள்கை – எதிர்த்த முதல் பாளையம்
  3. 1755 – மாழஸ்கான் + கர்னல் ஹெரான் திருநெல்வேலி
  4. மதுரை கைப்பற்றல், திரும்மல், பணிநீக்கம்
  5. கூட்டமைப்பு ஏற்படுத்துதல் (பாளையக்காரர்)
  6. ஹதர் அலி, பிரெஞ்சு உதவி நாடுதல்
  7. களக்காடு போர் – நவாப் 600 பிரிட்டிஷ் 1000 மாபூஸ்கன்
  8. திருவிதாங்கூர் 2000 + பூலித்தேவர் வெற்றி
  9. 1756 – 63 பூலத்தேவர் எதிர்ப்பு
  10. யூசுப்கான் 1761 ல் நெற்கட்டு செவல் கைப்பற்றல்
  11. யூசுப்கான் 1764 ல் தூக்கு
  12. 1764 பூலித்தேவர் கைப்பற்றல்
  13. 1767 கேப்டன் கேம்பல்பெல் கைப்பற்றல்
  14. உண்டி வீரன்

 

வீரபாண்டிய கட்டபொம்மன்

  1. கிழக்கு – பாஞ்சாலங்குறிச்சி
  2. நாவப் – 1/6 பங்கு
  3. 1792 கர்நாடக உடன்படிக்கை கம்பெனிக்கு வரி
  4. ராமநாதபுர ஆட்சியர் – ஜான் காலிக்சன்
  5. 1798 ல் கப்பம் கட்ட கடிதம்
  6. நிலுவை – 3310 பகோடா
  7. சிவ சுப்பிரமணியம் கைது
  8. ஊமைத்துரை உதவி கப்பல், லெப்டினன்ட் கிளார்க் கொலை
  9. மதராஸ்குழு வில்லியம் ப்ரௌன், லுரம், காசாமேஜர்
  10. எட்வர்ட் கிளைவ் – கட்டபொம்மன் சந்திப்பு
  11. 3 மணி நேரம் காத்திருப்பு, S.R. லூஷிங்டன் மாற்றம்
  12. பாளையக்காரர் கூட்டமைப்பு, திருச்சி அறிக்கை
  13. கட்டபொம்மன் – சிவகிரி பாளையம் மீது தாக்குதல்
  14. கம்பெனி – பாஞ்சாலங்குறிச்சி
  15. நிலுவை – 1080 பகோடா
  16. வெல்லெஸ்லி ஆணை
  17. 1799- மேஜர் பாண்டேன் + திருவிதாங்கூர் படை செப்டம்பர் 5 தாக்குதல்
  18. கோட்டை செய்திகள் துண்டிப்பு
  19. புதுக்கோட்டை – களப்பூர்காடு, விஜயரகுநாதன் தொண்
  20. 1799 அக்டேபர் 17 கயத்தாறு தூக்கு
  21. சிவசுப்ரமணியன் – நாகலாபுரம் தூக்கு
  22. கோட்டை ரகசியம் – ராமலிங்கர்
  23. சிவசுப்பிரமணியம் – நாகலாபுரம் தூக்கு
  24. கோட்டை ரகசியம் – ராமலிங்கர்

 

வேலு நாச்சியாரி 1730 – 1796

  1. தந்தை – புதுக்கோட்டை செல்லமுத்து சேதுபதி
  2. கணவர் – சிவகங்கை முத்து விடுகநாதர்
  3. மகள் – வெள்ளச்சி நாச்சியார்
  4. காளையார் கோயில் போர் – 1772

ஆற்காடு நவாப் பிரிட்டிஷ் படைகள்

கர்னல் பார்னஜோர் – கொலை (வடுகநாதர்)

தப்பித்து, கோபால நாயக்கர் அடைக்கலம் 8 ஆண்டு

  1. திறன்கள்

உருது, ஆங்கிலம:. பிரெஞ்சு குதிரை, சிலம்பு, வளரி, வில்வித்தை

  1. கடிதம் – தாண்டவராயனார்

ஹைதர்அலி – 5000 குதிரைகள் + காலாட்படை

திண்டுக்கல் படைத்தலைவர் – சையது

  1. குயிலி

1780 – தற்கொலை

வெடிமருந்து கிடங்கு – நுண்ணிறவு படைப்பிரிவு

  1. உடையாார் – நச்சியார் பற்றி கூற மறுத்தல்
  2. சிவகங்கை கைப்பற்றல் – 1780

கோபால நாயக்கர் ஹைதர் அலி

சின்ன மருது – ஆலோசகர்

பெரிய மருது – படைத்தளபதி

  1. தென்னிந்தியாவின் ஜான்சி ராணி
  2. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்த முதல் பெண் அரசி

 

மருது சகோதரர்கள்

  1. ஊமைத்துரை, செவத்தையா – கமுதி அடைதல்
  2. தலைநகர் – சிறுவயதுக்கு அழைத்துச் செல்லல்
  3. பாஞ்சாலங்குறிச்சி கோட்டை புனரமைப்பு – மருது உதவி
  4. காலின் மெக்காலே கைப்பற்றல்
  5. தப்பியவர்களை ஒப்படைக்க மறுப்பு
  6. கர்னல் அக்னியூ, இன்ஸ் – சிவகங்கை படையெடுப்பு

 

கூட்டிணைவு

சிவகங்கை – மருது, திண்டக்கல் – நாயக்கர், மலபார் – கேரளவர்மா, மைசூர் – கிருஷ்ணப்ப நாயக்கர் துண்டாஜிவாக்

 

விருப்பாட்சி சம்பவம் 1800 ஏப்ரல்

  1. தலைமை – கோபால நாயக்கர்
  2. ஒன்று கூடி சதி, ஒரே சமயத்தில் தாக்குதல்
  3. கொரில்லாப் போர் முறை, கோயம்புத்தூர் கைப்பற்றல்

 

திருச்சி பிரகடனம் – 1801 ஜீன்

  1. மருது – சுதந்திரப் பிரகடனம்
  2. ஆங்கிலேயருக்கு எதிராக இந்தியர்களை ஒன்று சேர்க்கும் முதல் அழைப்பு
  3. திருச்சி கோட்டை சுவர், ஸ்ரீரங்கம் கோயில் சுவர்
  4. சின்னமருது – 20000 வீரர்திட்டல்

 

ஆங்கிலேயர் சிவகங்கையை இணைத்தல் 

  1. 1801 தஞ்சாவூர், திருச்சி
  2. பின் சிவகங்கை இணைப்பு
  3. மருது – திருப்பத்தூர் கோட்டை தூக்கு
  4. ஊமைத்துரை செவளத்தையா – பாஞ்சாலங்குறிச்சி தலை துண்டிப்பு
  5. கர்நாடக உடன்படிக்கை – தமிழ்நாட்டின் மீது நேரடி கட்டுப்பாடு

 

தீரன் சின்னமலை : 1756 – 1805

  1. ஈரோடு – சென்னிமலை, தீர்த்தகிரி, கொங்கு பாளையம்
  2. கொங்கு – சேலம். கரூர், திண்டுக்கல், கோவை
  3. மைசூர் சுல்தான் கட்டுப்பாடு – முகமது அலியிடம் வரி பணம் பிடுவல்
  4. 3, 4 வது முைசூர் போரில் வசம்
  5. சிவ – சென்னி மலை – சின்னமலை
  6. பிரெஞ்சு ராணுவம் நவீன போர்முறை திப்பு சுல்தான் ஆதரவு, சிலம்பு, வில்வித்தை, குதிரை யேற்றம்
  7. ஒடாநிலை கோட்டை ஆங்கியேரை எதிர்க்க
  8. உதவி பெறுதல் – மராத்தியர், மருது சகோதரர்கள்
  9. ஆங்கில அரசு தடுத்தல், கோயம்புத்தூர் தீரன் தாக்குதல்
  10. 1801 – காவிரி, 1802 – ஒடாநிலை, 1804 – அரச்சலூர் தப்பித்தல்
  11. சமையல் காரன் – நல்லப்பன் காட்டித்தருதல்
  12. 1805 – சங்ககிரி கோட்டை தூக்கு, கடைசி

 

  1. இருபதாம் நூற்றாண்டில் தமிழின் நிலை குறித்து ஆராய்ந்து எழுதுக.

முன்னுரை

இந்நூற்றாண்டில் நூல்கள் உரைநடை (ம) செய்யுள் வடிவில் இயற்றப்பட்டுள்ளன. பிறமொழி இலக்கியங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுவருகின்றன. விஞ்ஞான இலக்கியங்களும் தமிழில் வேகமாக வளர்ந்து வருகின்றது.

  1. தமிழ் இலக்கியங்கள்
  1. பேராசிரியர் சுந்தரம்பிள்ளை மனோன்மணியம் என்ற கவிதை நாடகம் இயற்றினார். இது பல அரங்கங்களில் நடிக்கப்பட்டு, திரைப்படமாகவும் வந்துள்ளது.
  2. தமிழை வளர்ப்பதில் மறைமலையடிகள், திருவிக பங்கேற்றனர். வடமொழி இல்லா தமிழைக் கண்டனர். எழுத்து (ம) பேச்சு வழக்கிலுள்ள தேவையற்ற சொற்களை நீக்கி தமிழ் சொற்களை அமைத்தனர்.
  3. காந்தியின் அறப்போராட்டத்தில் பங்கேற்ற வ.ஊ.சி. கப்பலோட்டிய தமிழர் என அழைக்கப்பட்டார்.
  4. பாரதியார் கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் எழுதி உள்ளார்.
  5. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்கள் பாடல்களில் எளிமை, இனிமை காந்திய மணம் கமழும் அவனும் அவளும், மலைக்கள்ளன் முக்கிய நாவல்களாகும்.
  6. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, ஆசியஜோதி, உமாகய்யாம் பாடல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.
  7. பாரதிதாசன் புரட்சிகவிஞராவார். இவர் குடும்பவீடு, இருண்ட விளக்கு இயற்றியுள்ளார். பல காதற்பாடல்கள் பாடியுள்ளார்.
  8. தனித்தமிழை வளர்க்க தேவநேயப்பாவணார் ஆர்வம் காட்டியுள்ளார். இவர் கட்டுரை, உரைநூல், ஆராய்ச்சி நூல், மொழியியல் நூல் என தமிழ்ப்பணி செய்துள்ளார்.

 

  1. முக்கியத் துறைகளில் தமிழ்
    1. தமிழ் தட்டச்சுப் பொறிகளும், தமிழ் சுருக்கெழுத்து நூல்களும் வெளிவந்துள்ளன.
    2. நீதி மன்றங்களில் தீர்ப்புகளை தமிழில் வழங்கும் நடைமுறை வந்துள்ளது.
    3. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என அரசின் குறிக்கோள் நிறைவேறும் காலமாக உள்ளது.

 

III. நாவல்கள்

  1. பல நாவல்கள் வெளிந்தன. வடுவூர் துரைசாமி ஜயங்கார், கோதை நாயகி அம்மாளும் குறிப்பிடத்தக்கவர்கள்
  2. ரா. கிருஷ்ணமூர்த்தி என்பவர் கல்கி என்னும் புனைப்பெயரில் பல சிறுகதைகள் வெளியிட்டார்.
  3. விருத்தாச்சலம் என்பவர் புதுமைப்பித்தன் என்னும் புனைப்பெயரில் பல சிறுகதைகள் வெளியிட்டார்.
  4. முக்கிய நாவலாசிரியர் – மு.வ. ஆவார். இவரது இலக்கியங்கள் சமூக சீர்த்திருத்த நோக்கம் கொண்டது.

 

  1. நாடகம்
  1. நாடக அரங்குகள் அழகாக வடிவமைக்கப்பட்டன. கண்ணை கவரும் ஆடை, அணிகலன்கள் பயன்படுத்தப்பட்டன.
  2. புராணக் கதைகள் பல நாடகங்களாக நடிக்கப்பட்டன.
  3. நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள்
  4. பம்மல் சம்பந்த முதலியார் பல நாடகங்களை தமிழில் எழுதியுள்ளார்.

 

  1. நாட்டியம்
  2. ஆரம்பத்தில் தேவரடியார்களால் இசைக்கலையும் கூத்துக் கலையும் வளர்ந்தது.
  3. பின் தமிழ்நாட்டிற்கே உரித்தான பரதம் உயர்நிலை அடைந்தது
  4. பின் திரைப்படக்கலை வளர்ச்சி அடைந்தது.

 

  1. பிறதுறைகள்
  2. இசையானது கச்சேரி (ம) வானொலியில் இடம் பெற்றது.
  3. தமிழில் சுதேசமித்ரன், தினமணி போன்ற செய்தித்தாள்கள் வெளிவந்தன.
  4. செந்தமிழ், செந்தமிழ் செல்வி போன்ற பல இதழ்களில் தமிழ் கட்டுரைகள் இடம் பெற்றன.
  5. ஆனந்த விகடன் தமிழுக்கு நகைச்சுவையை பயிற்றுவித்தது.
  6. ஆனந்த விகடன், கல்கி பல வரலாற்று நாவல்களை வெளியிட்டது.

 

VII தமிழ் எழுத்துக்கள்

  1. பிராமி, கிரந்த, வட்ட எழுத்து போன்றவை பயன்பாட்டில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  2. தமிழ் எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு சாசனங்கள் 7ம் நூற்றாண்டில் இருந்து தான் கிடைக்கின்றன.
  3. 11ம் நூற்றாண்டு எழுத்துக்களின் வரிவடிவம் தொண்டை, கொங்கு, சோழ மண்டலங்களில் கிடைத்துள்ளது.
  4. விசாகப்பட்டினம், பூரி போன்ற இடங்களில் தமிழ் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  5. வீரமாமுனிவர், பெரியார் தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தங்கள் செய்தனர்.

முடிவுரை:

தமிழ்நாடு மட்டுமின்றி அயல்நாடுகளிலும் தமிழ் பலத்துறை குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

 

  1. இருபதாம் நூற்றாண்டில் வளம் காணும் தமிழகம் குறித்து கட்டுரை வரைக.

முன்னுரை:

இந்தியா சுந்திரம் பெற்ற பின்பு 1980 வரையில் தமிழ்நாட்டில் 7 பொதுத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.

 

தமிழகத்தின் முதல்வர்கள்

ராஜாஜி கால ஆட்சி 1952 – 54

  1. சேலத்தில் மதுவிலக்கினைக் கொண்டுவந்தார்.
  2. விற்பனை வரி விதித்தார்.
  3. கடன் நிவாரணச் சட்டம் இயற்றி, உழவர்களுக்கு நிவாரணம் அளித்தார்.
  4. அயல்நாட்டு மதுவகைக்கு விற்பனை வரி விதித்தார்.

 

காமராஜர் கால ஆட்சி : 1954- 63

  1. இவர் காலத்தில் வேளாண்மை கல்வி, தொழில், மீள்வளம் ஆகியவற்றில் தமிழகம் தலைசிறந்து விளங்கிது.
  2. கட்டாயக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது.
  3. ஏழைப் பள்ளிச்சிறார்களுக்கு மதிய உணவு, சீருடை, பாடநூல்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

 

அண்ணாகால ஆட்சி 1967 – 69

  1. இவர் தமிழ் (ம) ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்.
  2. திராவிடப் பண்பாட்டை உயர்த்தவும், தமிழர் வாழ்வு மறுமலர்ச்சி பெறவும் பாடுபட்டார்.
  3. கலப்பு மணத் தம்பதியரை சிறப்பித்து தங்கப்பதக்கம் வழங்கினார்.
  4. 1968 டில் 2வது உலகத்தமிழர் மாநாட்டை சென்னையில் நடத்தினார்.

 

கலைஞர் கால ஆட்சி 1969 – 76

  1. சமூக பொருளாதார மாற்றங்களை புகுத்தினார்.
  2. பயிர்த்தொழிலுக்கும் பாசனத்திற்கும் பல தொண்டுகள் புகுத்தினார்.
  3. தொழு நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சையளித்தல்
  4. பார்வையற்றோர்க்கு கண்ணொளி வழங்குதல்
  5. உடல் ஊனமுற்றோர்க்கு மறுவாழ்வு அளித்தல்
  6. கைம் பெண்களுக்கு தையற்பொறி வழங்குதல்
  7. ரிக்ஷா வண்டியை ஒழித்தார்.

 

எம்.ஜி.ஆர். கால ஆட்சி 1977 1987

  1. சமத்துவ சமுதாயம் காண பாடுபட்டார்
  2. வேலையில்லாத திண்டாட்டத்தை ஒழித்தார்.
  3. மதுரையில் உலகத் தமிழ்சங்கம் அமைத்து, 5வது உலகத்தமிழ் மாநாடு – 1981 ல் நடத்தினார்.
  4. தஞ்சையில தமிழ்ப் பல்கலைக்கழகம் துவங்க ஏற்பாடு செய்தார்.

 

பொருளாதார வளர்ச்சி

  1. இங்கிலாந்தில் நீராவி இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது.
  2. குடிசைத் தொழிலாக இருந்த நூற்பும் நெசவும் தொழிற்சாலைகளுக்கு மாறின.
  3. இந்திய நாட்டுச் சந்தையில் இத்துணிகள் பல நுண்ணிய தரங்களிலும், குறைந்த விலையிலும் கிடைத்தன.

 

உழவுத்தொழில்

  1. இங்கிலாந்து (ம) ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் பருத்தி, நிலக்கடலை, புகையிலை போன்ற வணிகப் பொருட்கள் தேவையாகின.
  2. அவற்றின் உற்பத்திக்கு உழவர்கள் அதிக ஊக்கம் காட்டினர்.
  3. நெல், கம்பு, கேழ்வரகு போன்ற தானிய உற்பத்தியில் ஊக்கம் குறைந்தது.

 

காடுகள் அழிப்பு

  1. பிரிட்டிஷ் கப்பல்கள் கட்ட, இரயில் பாதைகள் அமைக்க மரங்கள் வெட்டப்பட்டு ஏற்றுமதியாகின.
  2. தேக்கு, கருங்காலி, நூங்கு மரங்கள் வெட்டப்பட்டன.
  3. பல்லாயிரம் சதுர கி.மீ காடுகள் அழிக்கப்பட்டன.
  4. அற்றிற்கு ஈடாக புதிய காடுகள் உருவாக்கப்படவில்லை

 

இரும்பு எஃகு ஆலைகள்

  1. 1830 ல் தென்னார்காடு பறங்கிப் பேட்டையில் எஃகாலை ஒன்று தொடங்கப்பட்டது.
  2. சேலம் மாவட்டம் கஞ்சமலைப் பகுதியில் எஃகு ஆலை அமைக்கப்பட்டது.

 

 

முக்கிய திட்டங்கள்

  1. மேட்டூர் அணை திட்ட துவக்கம்
  2. பல்லாயிர கணக்கான நிலங்கள் பாசன வசதி பெற்றன.
  3. வறண்ட நிலங்களும் நெல் வயல்களாக மாறின.
  4. கிராமம் முழுவதும் கிணறுகளில் நீர் இறைக்கும் பம்புகள் பயன்படுத்தப்பட்டன.

 

  1. இந்தியா விடுதலை அடைவதற்கு காரணமான 20 ம் நூற்றாண்டின் நிகழ்வுகளை தொகுத்து எழுதுக.

முன்னுரை

இந்தியா சுதந்திரம் அடைவதற்காக பல்வேறு அறப்போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டன.

 

மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி

  1. தென்னாப்பிரிக்காவில் இன அடிமைக்கு எதிராக போரடினார்.
  2. காங்கிரஸின் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
  3. மாண்டேகு செம்ஸ்போர்டு திட்டம் வெளியிட்ட இரட்டையாட்சி முறையை எதிர்த்தார்.

 

ஒத்துழையாமை இயக்கம்

  1. 1920 ல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் ஒப்புதல்
  2. இவ்வியக்கத்திற்கு தமிழகத்தில் பெருவெற்றி கிடைத்தது.
  3. பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
  4. வழக்கறிஞர் நீதிமன்றங்களிலிருந்து விலகினர்
  5. ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
  6. சௌரி – சௌரா சம்பவத்தால் போராட்டம் கைவிடப்பட்டது.
  7. ஜாலியன் வாலாபாக் படுகொலை – 1919 ஐ எதிர்த்தனர்.

 

சாதிப் பிரச்சனைகள்

  1. தமிழ்நாட்டில் பிராமணர், சூத்திரர் என்ற இருபிரிவுகள் காணப்பட்டன.
  2. பறையர்கள் தாழ்ந்த நிலையில் ஒடுக்கப்பட்டனர்.
  3. கிராமப் பள்ளிகளில் பறையரின் குழந்தைகள் சேர்க்கப்படுவதில்லை.
  4. சேரிகளில் போதிய வாழ்க்கை வசதி அமைத்துத்தரப்படவில்லை.
  5. உயர்நிலைப் பள்ளிகளில் வடமொழிப்பயிற்சிக்குக் பிராமணர் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
  6. ஏனைய குலத்தினர் தத்தம் குலத்தொழிலை செய்தனர்.
  7. காங்கிரஸ் கட்சியினர் ‘சுயராஜ்ஜிய பேரினக வேண்டும் என முழங்கினர்.

 

தீண்டாமை ஒழிப்பு

  1. திராவிடத் தலைவரின் அரிய முயற்சியின் விளைவாக பறையர் என்பது ஆதிதிராவிடர் என மாற்றம்
  2. காந்தியடிகள் தீண்டத்தகாத வகுப்பினர்களுக்கு ஹரிசனங்கள் என பெயரிட்டார்.
  3. வைக்கம் போராட்டம் 1924 ல் பெரியாரால் நடத்தப்பட்டது.
  4. பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறினார்
  5. சுயமரியாதை இயக்கத்தை துவக்கினார்.

 

உப்பு சத்தியாகிரகம்

  1. 1930 ல் காந்தியடிகளால் துவக்கம்
  2. தமிழ்நாட்டில் இவ்வியக்கம் சிறப்பாக நடைபெற்றது.
  3. “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” என்ற நாமக்கல் கவிஞரின் பாடல்கள் பாடப்பட்டன.
  4. தலைமை – ராஜாஜி
  5. திருச்சி – வேதாரண்யம் நடைபாதை, தடை மீறி உப்புக் காயச்சினர்.

 

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

  1. காந்தியடிகளால் 1942, ஆகஸ்ட் 9ல் துவக்கம்
  2. இரண்டாம் உலகப்போர் 1945 ல் முடிவுக்கு வந்தது
  3. ஆங்கிலேயரின் யூனியன் ஜாக்கொடி இறக்கப்பட்டு, 1947, ஆகஸ்ட் 15ல் இந்தியாவின் மூவர்ணக்கொடி பறக்கவிடப்பட்டது.

 

தமிழ்நாடு

  1. தமிழ்நாட்டின் தலைநகர் – சென்னை
  2. இந்தியாவின் 4வது பெரிய நகரம்
  3. 1958 முதல் தமிழே தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக இருந்து வருகின்றன.

 

10.19ம் நூற்றாண்டின் தமிழ்நாட்டின் சமூக நிலை குறித்து ஆராய்க.

  1. பழக்க வழக்கங்கள்
  2. வட இந்தியாவில் மக்களிடையே காணப்பட்ட சிசுக்கொலையும், உடன்கட்டை ஏறுதலும் தமிழகத்தில் இல்லை.
  3. தமிழர்கள் புதுமையை புறக்கணிக்காதவர்கள்
  4. பல சமயங்கள் தமிழ்நாட்டில் இணைந்து வளர்ந்து வந்துள்ளன.
  5. அரசாளவும், சமயப் பணி புரியவும். வாணிகம் செய்யவும், கைத்தொழில்கள் புரியவும் தமிழகம் நுழைந்த அயல்நாட்டு மக்களும் கற்றறிந்தனர்.
  6. அதனால் எவ்வித பூசல்களும் தமிழகத்தில் காணப்படவில்லை.

 

  1. சமயம்
  2. கிறிஸ்தவ பாதிரிகள் இந்து சமயத்தையும் இந்துக் கடவுளையும் இழித்துப் பேசினர்
  3. சைவ – வைணவ எதிர்வாதங்கள் பலவும் நடைபெற்றன.
  4. இவையாவும் ஆங்கிலம் பயின்றவர்களுக்கு விளையாட்டாக இருந்தது.
  5. சென்னையில் முதல் அச்சுக்கூடம் கிறிஸ்தவப் பாதிரிகளால் அமைக்கப்பட்டது.
  6. விவிலிய வேதநூல் புதிய ஏற்பாட்டின் தமிழ் பதிப்பு வெளியானது
  7. 1880ல் சுதேசமித்திரன் தமிழ்நாளேடு தொடங்கப்பட்டது.
  8. மடங்கள் பல நிறுவப்பட்டு இந்து சமயத்தால், சமயப் பணிகள் நடைபெற்றன.

 

III. வள்ளலார்

  1. 1865 ல் சமரச சுத்த சன்மார்க்கக் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.
  2. இவர் தென்னார்க்காடு மாவட்டத்தில் வடலூர் எனுமிடத்தில் ஞானசபை ஒன்றை நிறுவினர்.
  3. பசிநோய் குறைக்க ஏழைகளுக்காக வடலூரில் தருமச்சாலையை 1867 ல் நிறுவினார்.
  4. “வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று கூறினார்.

 

  1. தமிழ் இலக்கியங்கள்
  2. தமிழ் புலவர்கள் பலர் தோன்றி தமிழை வளர்த்தனர்.
  3. உரைநடையில் புது வடிவங்கள் தோன்றின.
  4. வள்ளலார், ஆறுமுக நாவலார், தியாகராயச் செட்டியார் ஆகியோர் உரைநடையை தொடங்கி வைத்தனர்.
  5. பழங்கால உரைநடை நீண்ட சொற்களாய் இருந்தது.
  6. உரைநடை பத்திகளாக எழுதப்பட்டது.
  7. ஒரு தொடருக்கும் மற்றொரு தொடருக்கும் இடைவெளி முற்றுப்புள்ளி, காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, மேற்கோள் பழக்கத்திற்கு வந்தன.
  8. செய்யுள் நடையில் தல புராணங்கள் தோன்றின.

 

  1. முக்கிய படைப்புகள்
  2. வேதநாயகம் பிள்ளை – பிரதாப முதலியார் சரித்திரம்
  3. இராசம் ஐயர் – கமலாம்பாள் சரித்திரம்
  4. சூரிய நாராயண சாஸ்திரி – மதிவாணன்
  5. மாதவ்யா – பத்மாவதி சரித்திரம்
  6. கிருஷ்ணப்பிள்ளை – இரட்சணிய யாத்திரிகம்

 

  1. மொழி ஆராய்ச்சி
  2. கால்டுவெல் – திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
  3. ஜியுபோப் – திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு
  4. தம் கல்லறையில் தாம் ஒரு தமிழ் மாணவன் என எழுதச் சொன்னார்.

 

VII. பஞ்சநிலை

  1. 1876 – 78 ல் பஞ்சம் தோன்றியது
  2. உணவு, உப்பு, இன்றி மக்கள் வெறுங்காட்டுக் கீரைகளை உண்டனர்.
  3. சிலர் களிமண் உண்டைகளை தின்று இறந்தனர்.
  4. அரசு பஞ்ச நிவாரண பணிகளில் ஈடுபட்டது.
  5. கஞ்சி தொட்டிகள் திறக்கப்பட்டன.
  6. குடிமக்கள் குடிபெயர்ந்து அயல்நாட்டிற்கு சென்றனர்.
  7. வரி செலுத்த இயலா மக்கள் இன்னல்களுக்கு ஆளாயினர்.
  8. 1871 ல் சென்னையில் தான் முதன் முதலில் மக்கள்தொகை கணக்கெடுப்பு துவங்கப்பட்டது.

 

VIII. அயல்நாடு சென்ற இந்தியர்கள்

  1. பஞ்சம் (ம) ஏழ்மையால் துயருற்ற தமிழர்கள் பலர் தென்னாப்பிரிக்கா, இலங்கைக்கு சென்றனர்.
  2. தேயிலை, காபி, இரப்பர் தோட்டம், சுரங்கங்களில் கூலிக்குச் சேர்ந்தனர்.
  3. இவர்கள் ஏமாற்றப்பட்டு இழிவாகவும் அடிமைகளாகவும் நடத்தப்பட்டனர்.

 

  1. மதுரை நாயக்கர்கள் குறித்து விளக்க வரைக.

முன்னுரை

விஜயநகரப் பேரரசானது தலைக்கோட்டை போரில் வீழ்ச்சியுற்ற சிதறியது. முதலாம் திருமலைராயன் நகரத்துக்குப் புத்துயிரூட்ட முயன்று, முயன்று, வெற்றி கிடைக்கவில்லை, பின் நாயக்கர்கள் வந்தனர்.

 

பிரெஞ்சு ஆங்கிலேயர் புகுதல்

  1. இந்தியாவின் கீழைக் கடற்கரையில் டச்சு, ஆங்கிலேயர் வணிக நிறுவனங்களைத் தொடங்கினார்.
  2. டச்சுக்காரர்கள் நைசாம் பட்டினம், மசூலிப்பட்டினம், தொழிற்சாலைகள் ஏற்படுத்தினர்.
  3. அவர்கள் தமிழகத்தில் ஏலக்காய், இலவங்கம் போன்ற நறுமணப் பண்டங்களை கொள்முதல் செய்தனர்.
  4. செஞ்சி நாயக்கரிடம் உரிமம் பெற்றனர். பெற்றனர். புலிக்காட்டில் தொழிற்சாலை அமைத்தனர்.
  5. டேனிஷ்காரர்கள் தரங்கம்பாடியில் தொழிற்சாலையை எழுப்பினர்.
  6. மராட்டிய வீரன் சிவாஜி சத்திரபதியாக முடிசூட்டிக் கொண்டான்.

 

  1. மதுரைத் திருமலை நாயக்கன்
  2. திருமலை நாயக்கன் பல இடங்களில் போர் தொடுத்து, வெற்றி பெற்றான்.
  3. போர்த்துக்கீசியருடன் நட்புறவு கொண்டனர். டச்சுக்காரர்களை வெறுத்தான்.
  4. கிறித்துவ பாதிரியார்களிடம் மிகுந்த பிரிவு கொண்டான்.
  5. கோவில் திருப்பணிகளிலும், அரண்மனைகள் கட்டுவதிலும் ஈடுபாடு கொண்டான்.
  6. நீலகண்ட தீட்திதரைப் பாதுகாத்து வந்தான்.
  7. பல வடமொழி நூல்கள் இயற்றப்பட்டன.

 

  1. முதலாம் சொக்கநாதன்
  2. 16ம் ஆண்டில் அரசு கட்டில் ஏறினான்
  3. தலைநகராக திருச்சியை மாற்றினான்.
  4. முஸ்லீம் (ம) மராட்டியர்கள் திருச்சி மீது படையெடுத்தனர்.
  5. இருப்பினும் தன் ஆட்சியை மீட்டுக் கொண்டான்.

 

III. தஞ்சாவூர் நாயக்கர்கள்

  1. தஞ்சை ரகுநாத நாயக்கன் மாபெரும் வீரன்
  2. வடமொழியில் பலநூல்களை இயற்றியுள்ளான்.
  3. வடமொழிப் புலவர்கள் பலர் அவையில் இருந்தனர்.
  4. தரங்கப்பாடியில் டேனிஷ் குடியேற்றம் அமைக்க வசதி செய்து தந்தான்.

 

  1. மராட்டியர்கள்
  2. மராட்டியர்கள் நாட்டில் குழப்பத்தை உண்டாக்கினர்.
  3. சௌத் முதலான வரிகளை விதித்தனர்.
  4. தமிழகத்திற்கும் தமிழுக்கும் மாட்டியர்கள் கலைப்பணி செய்ய தவறிவிட்டனர்.
  5. சரபோஜி மன்னர் மட்டும் அரியணை ஏறாமல் இருந்திருந்தால் தமிழகம் மராட்டிய படையெடுப்பு (ம) பல இன்னல்களை சந்தித்து இருக்கும்.

 

  1. இராணி மங்கம்மாள்
  2. மதுரையை ஆண்ட இராணிமங்கம்மாள் கிறிஸ்தவர்களிடம் அன்பு காட்டினார்.
  3. இஸ்லாமியக் குடிமக்களையும் போற்றினார்.
  4. மசூதிகட்ட, இந்து சமயத் தொண்டுகள் செய்ய அக்கறை காட்டினார்.
  5. மங்கம்மாள் நல்ல சாலைகள் அமைத்தாள்.
  6. சத்திரங்கள் கட்டினார். சாலையோரக் கிணறுகள் வெட்டினாள்.
  7. தண்ணீர்ப் பந்தல் ஏற்படுத்தினாள்
  8. உழவுத்தொழில் செய்ய, பல பாசன வசதிகளை செய்து கொடுத்தனர்.
  9. 18 ஆண்டுகள் ஆட்சி நடத்தி வந்தார்.

 

12.தமிழகத்தில் 12 – 18ஆம் நூற்றாண்டு வரையிலான சமூகநிலை குறித்து கட்டுரையாக்குக.

  1. பிராமணர்கள்
  2. பிராமணர்கள் மன்னரிடமும். குறுநில மன்னரிடமும் தொண்டர்களாகவும், வரும்பொருள் உணர்ந்தவர்களாகவும் நடந்து கொண்டனர்.
  3. சோழர்களைப் போலவே, விஜயநகர அரசும் நாயக்கர்களும் பிராமணருக்கு ஆதரவு தந்தனர்.

 

 

  1. முஸ்லீம்களின் வருகை
  2. கி.பி.13ம் நூற்றாண்டில் ஏற்பட்டது.
  3. மாலிக்காபூர் படையெடுப்பிற்கு முன்னரே, தமிழகம் நுழைந்து, பாண்டிய மன்னர்களிடம் படைத்தொழிலில் ஈடுபட்டனர்.
  4. அரேபியர்கள், யூதர்கள், சீனர்கள், பல ஐரோப்பிய நாட்டினர் தமிழகம் வந்து பல தொழில்களில் ஈடுபட்டனர்.

 

III. தொழிற் அடிப்படையில் பிரிவுகள்

  1. பொருளாதாரத்தின் அடிப்படையில் பல குலங்கள் பெருகின.
  2. வாணியர்கள் எள், இறுபபைப் கொட்டை, தேங்காய், ஆமணக்கு ஆகியற்றிலிருந்து எண்ணெய் எடுத்தனர்.
  3. குயவர்கள், வண்ணார்கள் தத்தம் குலத்தொழில்கள் செய்து வந்தனர்.
  4. செட்டிகள், முஸ்லீம்கள் வாணிகத் தொழில் செய்து வந்தனர்.
  5. அனைத்து தொழில்களுக்கும் உழவே முதன்மை
  6. கைக்கோளர் படை எனத் தனிப்படைகள் இருந்தன.
  7. குதிரைச் செட்டிகள், குதிரை வணிகத்தில் ஈடுபட்டனர்.
  8. விஜயநகர ஆட்சியில் பறையர்களின் நிலை தாழ்ந்திருந்தது.

 

  1. பழக்க வழக்கங்கள்
  2. கிராம தேவதைகளின் கோவில்களில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் இருந்தது.
  3. ‘கூலிக்கு மாரடிக்கும் வழக்கம் இருந்தது.
  4. குற்ற விசாரணையின் போது, பழுக்கக் காய்ச்சிய இரும்புத் கம்பியை கையில் பிடிக்கும் முறையை பின்பற்றினர்.

 

  1. இலக்கியங்கள்
  2. அக்கால இலக்கியங்கள் மணி பிரவாள நடையில் எழுதப்பட்டது.
  3. ஜோதிடம், கணிதம், மருத்துவம் சார்ந்த நூல்கள் இயற்றப்பட்டன.
  4. இரட்டைப் புலவர்கள் வாழ்ந்தனர்.
  5. அருணகிரிநாதர் -திருப்புகழ்
  6. பவனந்தி முனிவர் – நன்னூல்
  7. நச்சினார்க்கினியர், காளமேகம், கயாதரர், ஔவையார் இக்காலத்தில் காணப்பட்டனர்.

 

  1. சித்தர் பாடல்கள்
  2. முக்கியமானோர் பதினெண்மர்
  3. இதில் முதலிடம் பெறுபவர்கள் – அகத்தியர், திருமூலர்
  4. இவர்கள் சித்தி பெற்றவர்கள் என குறுத்தொகை கூறுகிறது.
  5. குமரகுருபரர் – மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், நீதிநெறி விளக்கம், கந்தர் கலி வெண்பா எழுதியுள்ளார்.

 

VII. சமயம்

  1. திருவிளையாடற் புராணம் – பரஞ்சோதி முனிவர்
  2. தொண்டை மண்டல சதகம் இயற்றிய புலவரும் இக்காலத்தைச் சார்ந்தவர்.
  3. உமறுப்புலவர் – சிறாப்புராணம் (நபிகளின் வரலாறு கூறும் நூல்)
  4. திரிகூடராசப்ப கவிராயர் – திருக்குற்றாலக் குறவஞ்சி
  5. முக்கூடற்பள்ளு
  6. வீரமாமுனிவர் – சதுரகராதி, தேம்பாவணி

 

  1. சுதந்திரத்திற்குப் பின் தமிழ்நாட்டில் ஐந்தாண்டு திட்டங்கள் பற்றி விரித்துரைக்க.
  2. உழவுத்தொழில்
  3. உழவு (ம) கனரகத் தொழில்கள் வளர்ச்சியுற்றன.
  4. தமிழ்நாட்டில் உழவுத்தொழில் பலமுனைகளிலும் வளர்ச்சியுற்றது.
  5. வறண்ட நிலங்கள் யாவும் நன்செய் நிலங்களாக மாறின.
  6. உணவு உற்பத்தியும் பெருகின.
  7. இரசாயன உர உற்பத்தியாலைகள் பெருகி, உழவுக்கான உரத்தை வழங்கின.

 

 

II.நெசவாலைகள் (ம) உற்பத்தி திட்டங்கள்

  1. கோவை, மதுரையில் நடைபெறும் நூற்பாலை (ம) நெசவாலைகள் மக்களுக்குத் தேவையான துணி அனைத்தையும் உற்பத்தி செய்து வருகின்றன.
  2. சுதந்திரத்திற்குப் முன் மறைந்து போன, கைத்தறிகள் பெருகின.
  3. நெய்வேலி பழுப்பு நிலக்கரி திட்டம் மூலம் மின்சாரம், செயற்கை உரம் உற்பத்தியாகின.
  4. பீங்கான் பாத்திரம் (ம) மின்தடை சாதனங்கள் செய்யப்படுகின்றன.

 

III. தொழிற்பேட்டைகள்

  1. தமிழ்நாடு முழுவதும் பெருகியது
  2. தொழில் நுட்ப பள்ளிகளும் துவங்கப்பட்டன.

 

IV.நிலவுரிமை சீர்த்திருத்தம்

  1. நிலவுரிமை சட்டம் இயற்றப்பட்டது.
  2. குடிமக்கள் யாவரும் 15 ஏக்கர்களுக்கு மேல் நிலவுரிமை கொண்டாட முடியாது.
  3. குடிமைகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.
  4. வானொலி, செய்தித்தாள், திரைப்படங்கள் எல்லா இங்களிலும் கிடைத்தன.

 

  1. கல்வி நிலை
  2. கலை, மருத்துவ, பொறியியல் கல்லூரிகள் பள்ளிகளின் எண்ணிக்கை பெருகியது.
  3. வேளாண்மை பல்கலைக்கழகம் கோயம்புத்தூரில் வந்தது.
  4. அண்ணா தொழில் நுட்ப கழகம் – சென்னை

பாரதியார் பல்கலைக் கழகம் – கோவை

பாரதிதாசன் பல்கலைக்கழகம் – திருச்சி

 

  1. சமூக நிலை
  2. திருமணக்கலப்புகள் அதிகமாக நிகழவில்லை.
  3. கலப்பு மணங்கள் சில இடங்களில் காணப்பட்டன.

 

முடிவுரை:

இவ்வாறு சுதந்திரத்திற்குப் பின் தமழ் மக்கள் அனைவரும் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனற கணியன் பூங்குன்றனாரின் கருத்திற்கேற்ப ஒருமை புணர்வுடன் வாழ்கின்றனர்.

 

 

  1. தலித் இயக்கங்களின் தோற்றம் (ம) வளர்ச்சி பற்றி எழுதுக.

தலித் இயக்கங்கள்

  1. தலித்கள் வாழ்க்கையில் சமூக – பொருளாதார நிலையில் தங்கள் உரிமைகளை இழந்தனர்.
  2. அவர்கள் புறக்கணிப்பட்டனர் – நாயக்கர் காலத்திலும் இது தொடர்ந்து தலித்துகள் உயர் சமூகங்களால் அடங்கி ஒடுக்கப்பட்டனர்.
  3. 1882 ல் அயோத்திதாச பண்டிதர் திராவிடர் கழகத்தை தொடங்கினார். பின் அது தலித்துகளின் தென்னிந்திய நல உரிமைச் சங்கமாக மாறியது.
  4. தலித்துக்களின் நலன்காக்க உருவான சங்கங்கள்
  5. ஆதிதிராவிட மகாஜன சபை – 1892
  6. தலித்துகளின் கூட்டமைப்பு
  7. சமூக நீதி சங்கம்
  8. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தெரு நாடகங்கள், தெருக்கூத்து தலித் மக்களால் நிகழ்த்தப்பட்டன.
  9. தலித்துகளின் உரிமை உணர்வுகளை தூண்டும் பத்திரிக்கைகள்
  10. ஆன்றோர்மித்திரன்
  11. பூலோகா வியாசன்

iii. ஆதி திராவிட மித்திரன்

  1. அம்பேத்கரும் பெரியாரும் வேலைவாய்ப்பில் தலித்துக்கு இட ஒதுக்கீடு பெற முயற்சித்தனர்.
  2. சுதந்திரத்திற்குப் பின் சங்கமும் பேரவையும் அரசியல் கட்சிகளாக மாற்றப்பட்டன.
  3. இந்தியாவின் முதல் ஆதி குடிமக்களாக தலித் மக்கள் கருதப்படுகிறார்கள்

 

தலித் இயக்கம்

  1. தொன்மைத் தமிழர்கள் நிலவழி, தொழில்வழி பிரிந்திருந்தனர்.
  2. ஆரியர்கள் வருகைக்குப் பின் தமிழ்நாட்டில் வருணமுறை சாதி அமைப்பு வேரூன்றியது.
  3. பல்லவ, சோழ, நாயக்க மன்னர்கள் சாதிகள் வேரூன்ற காரணமாயிருந்தனர்.
  4. பாண்டியர்களும் சாதிகள் வளர காரணமாயினர்.

 

சாதியொழிப்பு முயற்சிகள்

  1. ஆங்கிலக் கம்பெனியின் பங்கு
  2. சமயப் பரப்பாளர்களின் பங்கு
  3. வைகுந்த சுவாமிகளின் பங்கு
  4. வள்ளலாரின் பங்கு
  5. பஞ்சமர் நிலம் – 1890
  6. தமிழ்நாட்டின் சுதந்திரத்திற்குப்பின் தொழில்துறை புரட்சி பற்றி விவரி.

தமிழ்நாட்டின் தொழில்துறை புரட்சி

  1. நெசவு (ம) ஜவுளித்தொழிலகங்கள் கோவை, ஈரோடு, கரூர், சேலம், திருப்பூர் மாவட்டங்களில் பரவலாகக் காணப்படுகின்றன.
  2. கூட்டுறவு நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.
  3. பொதுத் துறைகள்
  4. NLC – நெய்வேலி
  5. BHL – திருச்சி
  6. HUF – ஆவடி
  7. ICF – பெரம்பூர்
  8. HBF-600L9

கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் நிலையம்

மணலி, நரிமணம் – சுத்திகரிப்பு நிலையம்

  1. 600119, தாம்பரம், ஸ்ரீபெரும்பத்தூர், அம்பத்தூர், பாடி, பெருந்துரை எஸ்டேட்டுகள் வேலைவாய்ப்பை வழங்கின.
  2. TVS தொழிற்சாலை அம்பத்தூர், பாடி, மதுரை, ஓசூர், புதுக்கோட்டை
  3. சென்னை – நம்பிக்கை நகரம்

ஆசியாவின் டெட்ராய்டு

வாகன உற்பத்தி

  1. TCS, CTS, இன்போசிஸ், அனெக்சர் என பன்னாட்டு IT நிறுவனங்கள் சென்னையில் உள்ளன.

 

தமிழ்நாட்டில் தொழில்கள்

  1. டெல்டா பகுதிகள் – விவசாயம்
  2. மஞ்சள், கரும்பு – ஈரோடு
  3. கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர் – ஜவுளி வர்த்தகம்
  4. நீலகரி – மலைகளின் ராணி, சுற்றுலா காபி, டீ, உருளை, தக்காளி, கேரட்
  5. கோவை – தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கிரைண்டர், மோட்டார் பம்ப்செட்
  6. திருப்பூர் – குட்டி ஜப்பான்
  7. நாமக்கல் – முட்டை
  8. திண்டுக்கல் – மலர் சாகுபடி, பூட்டு தென்னிந்தியாவின் ஹாலந்து
  9. சேலம் – இரும்பு, ஜவ்வரிசி ஏழைகளின் ஊட்டி

 

Scroll to Top