1.தமிழ் சமூகம் அதன் பண்பாடு மற்றும் பாரம்பரியம்

 பண்பாடு (ம) நாகரிகம் விளக்குக.

நாகரிகம்

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயக்கண்டும்

நாகரிகம் வேண்டு பவர்.

பண்பாடு:

  1. டி.கே. சிதம்பரனார் கூற்று

உழவன் பயிர்செழிக்க நிலத்தைப் பண்படுத்துதல் போல, மனித வாழ்வு செழிக்க உயர்த்த எண்ணங்களால் மனதைச் செம்மைப்படுத்த வேண்டும்.

  1. தொல் காப்பியம்
  2. உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றோ”
  3. உயர்ந்தோர் – பண்பாடு உடையவர்கள்
  4. திருவள்ளூர் :
  5. “பண்புடையார்ப் பண்டுண்டு உலகம்”
  6. மனிதனை மேம்படுத்துகின்ற அன்பு, ஈகை, புகழ், மனிதநேயம் போன்ற பண்புகளை மக்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  7. கலித்தொகை
  8. “பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்”
  9. பண்புடையவர்களால் மட்டுமே இவ்வுலகம் இயங்குகிறது.
  10. பண்பாடு – பண்பாடு எனும் சொல்லிலிருந்து உருவாக்கம் பொருள் -சீர்படுத்துதல், செம்மைப்படுத்துதல்
  11. பண்பாடு நாகரிகம் வேறுபடுத்துக.

வ.எண்

பண்பாடு

நாகரிகம்

1

மாந்தனது அகவுணர்வு வளர்ச்சி (ம) சீர்மை

மாந்தனது புறத்தோற்ற வளர்ச்சி (ம) செம்மை

2

அறிவு (ம) உள்ளுணர்வால் உள்ளத்தைப் பண்படுத்துதல்

புறத்தோற்றப் பொலிவுகளை வளர்த்தல்

3

எடுத்துக்காட்டு: அண்புடையவன்

ஈகை உடையவன்

அருளுடையவன்

நாட்டியம் கலைக்கூடங்கள் ஓவியம்

4

நாகரிக வளர்ச்சிக்கு பண்பாடு துணைபுரியும்

பண்பாடு வளர்ச்சிக்கு நாகரிகம் துணை புரியும்

5

ஒரு குழுவின் வாழ்க்கை முறை பிரதிபலிப்பு

பரந்துபட்ட ஒரு சமுதாயத்தின் மேம்பட்ட வாழ்க்கை முறை

6

வளர்ச்சியை அளவிட முடியாது

வளர்ச்சியை அளவிட முடியும்

7

மாற்றம் மிகவும் மெதுவாக நடைபெறும்

விரைந்து மாறக் கூடியது

8

பண்பாடு சில நேரங்களில் தேக்கமடையும்

நூகரிகம் தேக்கம் அடையாது

 

  1. முச்சங்கங்கள் பற்றி விவரிக்க.

முச்சங்கங்கள்:

  1. பாண்டிய மன்னர்கள் தமிழை வளர்ப்பதற்காகப் புலவர் பலரையும் ஒன்றிணைத்து தமிழ்ச்சங்கங்களை நிறுவினர்.
  2. இவை கால அடிப்படையில் 3 வகைப்படுகிறது.
  3. பாண்டியரைப் போலவே சேர,சோழ, சிற்றரசர்களும் ஆதரவு தந்தனர்.
  4. ஆதாரங்கள்: நக்கீரரின் – இறையனார் களவியல் உரை, சங்க இலக்கியங்கள்
  5. சங்க இலக்கியத்தில் சங்கம் என்ற சொல் எங்கும் இடம்பெறவில்லை

வ.எண்

முதற்சங்கம்

இடைச்சங்கம்

கடைச்சங்கம்

1

இடம்:

தென்மதுரை

கபடாபுரம்  

தற்போதைய மதுரை

2

ஆற்றங்கரை:

பஃறுளியாறு

காவிரி           

ஐவகை

3

இலக்கண நூல்கள்

அகத்தியம்

அகத்தியம் தொல்காப்பியம்

அகத்தியம்

தொல்காப்பியம்

4

ஆதரித்தவர்கள்

காய்ச்சின வழுதி முதல் கடுங்கோன் வரை    

வேண்டர் செழியன் முதல் முடத்திருமாறன் வரை

முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி வரை

5

நூல்கள்

பரிபாடல் முதுநாரை முதுகுருகு

கலித்தொகை மாபுராணம்

பூதபுராணம்

நற்றிணை

குறுந்தொகை

புறநானூறு

6

நிலவிய ஆண்டு 4440 ஆண்டுகள்

3700 ஆண்டுகள்

1850 ஆண்டுகள்

7

பண்டிய மன்னர்கள்

89 பேர்

59 பேர்

49 பேர்

8

சங்க உறுப்பினர்கள்

549 பேர்

59 பேர்

49 பேர்

  1. பண்டையத் தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்பினை இலக்கியச் சான்றுகளின் வழி விளக்குக.

இலக்கியச் சான்றுகள்

  1. தொல்காப்பியம்

பொருளதிகாரம் பழந்தமிழரின் அ, புறவாழ்க்கை முறைகளைப் பற்றிக் கூறுகிறது.

  1. சங்க இலக்கியங்கள்
  2. அக வாழ்க்கையை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை என அன்பின் ஐந்திணையாகப் பகுத்துள்ளன.
  3. முதற்பொருள் – நிலம் (ம) பொழுது

கருப்பொருள் – தெய்வம், வழிபாட்டு முறைகள், வாழ்க்கை முறைகள், விளையும் பொருள்கள்

  • “யாதும் ஊரே யாவரும் கேளிர்”

– கணியன் பூங்குன்றனார் கூறியுள்ளார்.

  1. பதிற்றுப்பத்து

சேர மன்னர்களின் வணிகமுறை, ஆட்சிச்சிறப்பு, போர்த்திறம், கொடைத்திறம் முதலானவற்றைப் பற்றி விரிவாக விளக்குகிறது.

  1. பத்துப்பாட்டு – ஆற்றுப்படை நூல்கள்

இதில் உள்ள 5 ஆற்றுப்படை நூல்கள், தம்மைப் போன்று வறுமையில் வாடும் பிறரும் வளம் பெற்று வாழ்வதற்கான வழிமுறைகளைக் கூறுகின்ற பெருமனம் படைத்தவர்களாகப் புலவர்கள் திகழ்ந்துள்ளதைக் கூறுகிறது.

  1. பத்துப்பாட்டில் – ஆற்றுப்படை அல்லாத நூல்கள்
  2. குறிஞ்சிப்பாட்டு – நிலவளம் பற்றி பேசுகிறது.
  3. முல்லைப்பாட்டு – காதலின் சிறப்பைக் கூறுகிறது
  • மதுரைக்காஞ்சி – பாண்டியன் நெடுஞ்செழியனின் சிறப்பைக் கூறுகிறது. இதில் நிலையாமை குறித்த கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.
  1. நெடுநல்வடை – கார்கால நிகழ்ச்சிகளை படம் பிடித்துக் காட்டுகிறது.
  2. பட்டினப்பாலை – “முட்டாச் சிறப்பின் பட்டினம்” என்ற சொற்றொடர் சோழநாட்டின் தரை (ம) கடல்வழி வணிக வளத்தை குறிப்பிடுகிறது.
  3. சிலப்பதிகாரம்
  4. தமிழர் ஆட்சிமுறை
  5. ஆடல், பாடல், கலைவளம்
  • புகார், மதுரை, வஞ்சி ஆகிய தலைநகரங்களின் சிறப்பு
  1. வணிகச்சிறப்பு
  2. சமய நம்பிக்கை (ம) வழிபாட்டு முறைகள்
  3. தனிமனித ஒழுக்கம் (ம) நீதி வழங்கும் முறைமை
  4. மணிமேகலை
  5. சமய அறக் கருத்துக்கள் (ம) வாழ்வியல் நெறிகளை எடுத்துதரைக்கிறது.
  6. குற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்வதன் மூலம்
  7. குற்றங்களை தடுக்க முடியும்
  8. பசியைப் போக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது.

 

  1. தமிழகப் பண்பாட்டினை அறிய வெளிநாட்டவரின் குறிப்புகள் எங்ஙனம் உதவுகின்றன என்பதை விளக்குக.

வெளிநாட்டினரின் குறிப்புகள்

தமிழகத்தில் வணிகம் செய்ய வந்த வெளிநாட்டவரான யவனர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், புனிதப்பயணம் மேற்கொண்டவர்கள் போன்றவர்களின் குறிப்புகளில், தமிழகம் பிறநாடுகளுடன் கொண்டிருந்த தொடர்பினை அறிய முடிகிறது.

  1. எரித்திரியக் கடலின் பெரிபுளூஸ்

இந்நூலில், கிரேக்க மக்கள் நாகரிக சமூகத்தில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பே, எகிப்தும் பண்டைய இந்தியாவும் நெடுங்காலமாக வணிகத் தொடர்பு கொண்டிருந்தன எனக் கூறப்பட்டுள்ளது.

  1. முக்கிய நூல்கள்
  2. ஸ்டிராபோ எழுதிய பூகோளநூல்
  3. பிளினி எழுதிய உயிரியல் நூல்
  • தாலமி எழுதிய பூகோளநூல் ஆகியவை பண்டைய தமிழகத்தின் கடல் வணிகம் பற்றிக் குறிப்பிடுகிறது.
  1. சேரநாட்டுத் துறைமுகங்கள் அனைத்தும் கண்ணனூருக்கும் கொச்சிக்கும் இடையில் அமைந்திருந்தன.
  2. அரேபியாவிலிருந்தும், கிரேக்கத்திலிருந்தும் வணிகப் பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த எண்ணற்ற நாவாய்கள் முசிறியில் கிடந்தன.
  3. கிரேக்க மொழியில் தமிழ் சொற்கள்

கி.மு. 5 ம் நூற்றாண்டு முதல் கிரேக்கர்கள் தமிழகத்துடன் வணிகத் தொடர்பு கொண்டு இருந்ததை, தமிழ் சொற்கள் கிரேக்க மொழியில் இடம்ட பெற்றிருப்பது மூலம் அறியலாம்.

  1. சாலமன் மன்னனுக்கு அளிக்கப்பெற்ற பொருட்கள்
  2. துகிம் – மயில்தோகை
  3. ஆல்மக் – அகில் மரங்கள்

சாலமன் மன்னனுக்கு அளிக்கப்பெற்ற பொருட்கள் அனைத்தும் தமிழ்ப் பெயர்களின் சிதைவுகளே.

 

  1. ஏற்றுமதிப் பொருட்கள்
  2. ஐரோப்பிய நாடுகளுக்குப் பலவகையான நறுமணப் பொருட்கள் ஏற்றுமதியாயின.
  3. புலி, சிறுத்தை, யானை, குரங்கு, மயில், கிளி, வேட்டை நாய்கள் என ஏற்றுமதி ஆகின.
  • மஸ்லின்துணி, ஏலக்காய், இலவங்கம் ஏற்றுமதி

 

  1. ரோமர்களின் குறிப்புகள்

சேர நாட்டு  துறைமுகங்கள்

ரோமர்களின் குறிப்புகள்

தொண்டி

திண்டிஸ்

முசிறி

முஸிரிஸ்

  1. வெளிநாட்டவரின் துறைமுக குறிப்புகள்

கீழைக்கடற்கரைத் துறைமுகங்கள்

நூல்குறிப்புகள்

கொற்கை

கொல்சாய்

நாகப்பட்டினம்

நுிகாமா

  1. ஹிப்பாகிரேட்டஸின் குறிப்பு
  2. 5 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க மருத்துவர்
  3. இவர் ‘மிளகை’ இந்திய மருந்து என்றே குறிப்பிட்டுள்ளார்.
  4. தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடி கல்வெட்டுகளும் பட்டயங்களும் என்பதை நிறுவுக.

கல்வெட்டுகள்

  1. பண்டைய தமிழகத்தின் கோயில்களில் உள்ள கற்சுவர்கள், கோயில் மண்டபத்துக் கற்தூண்கள் போன்வற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை எழுத்திருக்களாகப் பொறிந்தனர்.
  2. பெரும்பாலும் மன்னர்களின் ஆணைகள், அவர்களின் சாதனைகள் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன.

கல்வெட்டுகள் மூலம் அறியப்படும் செய்திகள்

  1. திருப்பரங்குன்றம், நாகமலை, ஆனைமலை, கீழக்குயில்குடி கல்வெட்டுகள்

சங்ககால செய்திகளை குறிப்பிடுகின்றன.

  1. பல்லவர்கால கல்வெட்டுகள்
  1. இக்கால கல்வெட்டுகள் குகைகள், இரதங்கள், கோயில்கள், கற்பாறைகள், தூண்கள் ஆகியவற்றில் காணப்படுகின்றன.
  2. மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, திருச்சி, பல்லாவரம், மாமல்லபுரம், தளவானூர் கல்வெட்டுகள் முக்கியமானவை.
  • காஞ்சி கோயில் கல்வெட்டுகள் மூலம், பல்லவர்கால வரலாற்றை அறிய முடிகிறது.
  1. பராந்தக சோழனின் உத்திரமேரூர் கல்வெட்டுகள்
  2. சோழர்களின் கிராம ஆட்சிமுறையைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
  3. இக்கல்வெட்டில் கிராம உறுப்பினர்களின் தகுதிகள் தேர்ந்தெடுக்கப்படும் முறை குறிப்பிடப்பட்டுள்ளன.
  4. தஞ்சை, திருவொற்றியூர், மேலப்பழுவூர், சிதம்பரம், திருவாரூர், மதுரை, கன்னியாகுமரி கல்வெட்டுகள்

மக்களின் பண்பாடு, அரசியல், வாழ்க்கைமுறை, நீதி, சமூக உறவு, பொருளாதார நிலையை எடுத்துரைக்கின்றன.

  1. பிறகல்வெட்டுகள்:
  2. தமிழ் – பிராமி கல்வெட்டுகள் – சமணத்துறவிகளின் இருப்பிடம்
  3. பூலாங்குறிச்சி – களப்பிரர்கள் பற்றிய குறிப்பு
  4. புகளூர் கல்வெட்டு – சேரல் இரும்பொறை பற்றிய குறிப்புகள்
  5. ஜம்பை கல்வெட்டு – அதியமான் ஃ காணப்படுகின்றன.
  6. தமிழ் – பிராமிகல்வெட்டுகள்

மாங்குளம், புகலூர், கம்பை, அரச்சனூர், மதுரை, முத்துப்பட்டி, கொங்கர் புளியங்குளம்

பட்டயங்கள்:

  1. பொன், செம்பு ஆகிய உலோகத்தடுக்களின் மீது எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருந்தன.
  2. இவை காலத்தையும் ஆட்சி முறையையும் அறிய உதவுகின்றன.
  3. இதில் அரசனின் பெயர், அவனது காலம், பட்டயம் அளிக்கப்படும் நோக்கம் முதலியன இருந்தன.
  4. இவை பிராகிருதம், வடமொழி (ம) தமிழினும் காணப்படுகின்றன.

உரம் – பல்லவர்கள்

காசக்குடி  பல்லவ சிம்ம விக்ஷ்ணு (சேர, சோழ, பாண்டிய களப்பிரர் மீதான வெற்றி)

பாண்டியர் காலப் பட்டங்கள்

  1. வேள்விக்குடி பட்டயம் – முதுகுடுமிப் பெருவழுதி பற்றிய செய்திகள்
  2. சின்னமனூர்ச் செப்பேடுகள் – தலையானங்கானத்து

சோழர்காலப் பட்டயங்கள்:

  1. திருவாலங்காட்டுச் செப்பேடுகள் – முதலாம் ராஜேந்திரன்
  2. கரந்தைச் செப்பேடுகள் – முதலாம் ராஜேந்திரன்

 

 

  1. தமிழர்களின் விருந்தோம்பல் பண்பினை விளக்குக.

தமிழர்களின் விருந்தோம்பல் பண்பு

            விருந்தே தானும் புதுவது புனைந்த

            யாப்பின் மேற்றே’ – தொல்காப்பியம்

  1. தொல்காப்பியம் – பொருளாதிகாரம்
  2. இதில் விருந்து என்பது புதியது எனப்படுகிறது.
  3. வீடு தேடிவருமட் அனைவரையும் உபசரித்தார்
  4. திருக்குறள்

விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா

மருந்து எனினும் வேண்டற்பாற் றன்று

பசியென வந்தவர்களை வரவேற்று, இன்முகத்தோடு

உணவளித்த பெருமை, நம் தமிழர்களையே சாரும்

  1. இளங்கோவடிகள்

“தொல்லோர் சிறப்பின்” என கூறுவதிலிருந்து தமிழரின் தொன்மையான பழக்கம் விருந்தோம்பல் என்பதை அறியலாம்.

  1. சங்க இலக்கியங்கள்
    1. விருந்தோம்பும் பண்பு கணவன் – மனைவியின் தலையாய கடமை
    2. உணவின்றிப் பயணம் மேற்கொண்டு வருபவர்களுக்கு வழியினுள்ள வீடுகளில் உணவளிப்பர்.
    3. நற்றிணை

“அல்லல் ஆயினும் விருந்துவரின் உவக்கும்

   முல்லை சான்ற கற்பின்”

இரவில் வாயில் கதவை அடைக்கும்முன் விருந்தினர் யாரேனும் உள்ளனரா என பார்ப்பர்

  1. ஒளவையார் பாடல குறிப்பிடுவது

ஒரு நாள் சென்றாலும், பல நாள் சென்றாலும் முதல்நாள் போன்றே இன்முகத்துடன் விருந்தோம்புவர்.

  1. மடைநூல்
  1. பழந்தமிழ் இலக்கியத்தில் உணவு சமைக்கும் முறைகளை குறிப்பிடுகிறது.
  2. உணவு பற்றி செய்திகள் சிறுபாணாற்றுப்படை, பெருங்கதை, மணிமேகலையில் இடம் பெற்றுள்ளன.
  3. பிறசெய்திகள்
  4. இரவில் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு நெய் கலந்த இறைச்சியைச் சமைத்து கொடுப்பது வழக்கம்
  5. பசி என்று வந்தவர்களை வெளியே நிற்க வைத்துவிட்டு தாம் மட்டும் உணவு உண்ண மாட்டார்கள்
  • விருந்தினர் மனம் மகிழும் படி விண்மீன்கள் போன்ற ஒளிவீசும் கிண்ணங்களில் பலவகையான உணவுகளை படைப்பர்
  1. வீட்டிற்கு வந்தவர்களுக்கு உணவளித்த பிறகே தாம் உண்டனர்.
  2. உணவை மூங்கில் குழாயில் இட்டு மாட்டின் கழுத்தில் கட்டுவர்.
  3. சங்ககால வரலாற்றை அறிந்துகொள்ள, புகளூர்க் கல்வெட்டு எவ்வகையில் துணைபுரிகிறது – விளக்குக.

ஐராவிதம் மகாதேவன்

  1. இவர் இந்திய ஆட்சிப் பணியாளர்
  2. தொல்லியல் (ம) எழுத்தியலில் இருந்த ஆர்வத்தால் விருப்ப ஒய்வு பெற்றார்.
  3. கல்வெட்டு ஆய்வில் 30 ஆண்டுகள் ஈடுபட்டார்.
  4. சிந்துவெளி எழுத்துருவை ஆய்ந்து திராவிட எழுத்து என்றார்.
  5. பதிற்றுப் பத்தில் இடம்பெற்ற சேர அரசர்களின் பெயர்கள் புகளூர் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளதை கண்டுபிடித்தார்.

புகளூர் கல்வெட்டு:

  1. கரூரை அடுத்த புகளூரில் உள்ளது
  2. ஆறு நாட்டான் குன்றின் மீது சேரல் இரும்பொறை மன்னர்கள் பற்றி பொறிக்கப்பட்டுள்ளது.
  3. இது தமிழ் – பிராமிக் கல்வெட்டு என முதலில் கருதப்பட்டது.
  4. இது சங்ககாலத் தமிழ் மன்னர்களை பற்றிய புறச்சான்றாக உள்ளது.
  5. இந்திய அரசின் தொல்பொருள் துறையினர் வெளியிட்ட, தென்னிந்தியக் கல்வெட்டுகளைப் பற்றிய அறிக்கையில் (1927-28) முதன் முதலில் புகளூர் கல்வெட்டு பற்றிய செய்திகள் கிடைக்கின்றன.
  6. கல்வெட்டில் நான்கு வரிகள் இடம் பெற்றிருந்தன.
  7. அதில் ஆகன் என்ற சொல் காணப்படுகிறது.
  8. பெரும்பாலும் தமிழ்ப் பிராமி கல்வெட்டுகள் சுருக்கமாக ஒரே வரியில் 3 (அ) 4 சொற்களுடன் பொறிக்கப்பட்டு இருக்கும்
  9. இக்கல்வெட்டில் பதிற்றுப்பத்தின் 7வது, 8வது, 9வது, பாட்டுடைத் தலைவர்கள் பற்றிய குறிப்பு உள்ளது.
  10. இக்கல்வெட்டுகளில் தமிழுக்கே உரிய எழுத்துக்களான ழ, ள, ற, ன இடம் பெற்றுள்ளன.
  11. இவை பின் பிராகிருத மொழியில் எழுதப்பட்டவை அல்ல தமிழில் எழுதப்பட்டதை அறிய முடிந்தது.
  12. இவை கி.பி. 2ம் நூற்றாண்டைச் சார்ந்தவை

கல்வெட்டு வாசகம்

“…. அம்மன்னன் யாற்றூர் செங்காயபன் உறைய்

கோ ஆதன் சொல்லிரும் பொறை மகன்

பெருங் கடுங்கோன் மகன் (இ) ளங்

கடுங்கோ (இளங்கோ ஆக அறுத்த கல்”

கல்வெட்டிலிருந்து அறியப்படுவன

  1. யாற்றூர் என்னும் இடத்தைச் சேர்ந்த சமணத் துறவியான செங்காயபன் வசிக்கும் இடம் இது
  2. சங்க நூல்களில் மட்டுமே இதுவரை காணப்பட்ட பண்டைய தமிழ் மன்னர்களின் பெயர்கள், முதன்முதலில் கல்வெட்டில் இடம்பெற்றிருந்தது.
  3. பெருங்கடுங்கோன், இளங்கடுங்கோன், இளங்கோ போன்ற பெயர்கள் இடம்பெற்றன.
  4. இது கருவூரிலிருந்து ஆட்சி செய்த, சேரல் இரும்பொறை பொறித்தது.
  5. தமிழர்கிளன் தோற்றம் பற்றி கருது கோள்கள்
  6. குமரி கண்டத்தில் வாழந்தவர்கள்
  7. தென் இந்தியாவின் பழங்குடிகள்
  8. ஆதியில் ஆப்பிரிக்காவில் இருந்து, அரேபிய கடல் வழியாகத் தென்னிந்தியா வந்தோரின் வழித்தோன்றல்கள்
  9. மத்திய ஆசியா, வட இந்தியா நிலப்பரப்புகளில் இருந்து காலப்போக்கில் தென்னிந்தியா வந்தவர்கள்

  தமிழரின் தோற்றம் பற்றிய கொள்கைகள்

  1. குமரிகண்ட கொள்கை
  2. சிலப்பதிகாரம்

‘பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக்காடும் கொடுங்கடல் கொள்ள’

என்று லெமூரியாக் கண்ம் குறித்து கூறுகிறது.

  1. இறையனார் களவியல் வரை

முச்சங்கங்கள் பற்றிய செய்திகளைத் தருகிறது இதில் முதல் 2 சங்கங்கள் கடற்கோளால் அழிந்தது.

தென்னிந்திய இரும்புகால கொள்கை

எமன்டால்ப் என்பவர் கூற்று

  1. திராவிடர்கள் – பழைய மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து குடியேற்றம் (ம) இரும்பை அறிமுகம் செய்தனர்.
  2. ஆரியர்கள் – புதிய தரைக்கடல் பகுதியிலிருந்து குடியேறியவர்கள்

 

 

பாலகிருக்ஷ்ணன்

‘ஊர் பேர் ஆய்வுகள்’ நூலில் மேற்கிந்திய நாடுகளில் தொண்டி, முசிறி போன்ற ஊர்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கால்டுவெல்:

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலில், பலுசிஸ்தானில் உள்ள பிராகு மொழியின் எண்கள் தமிழ் எண்களை ஒத்துள்ளது.

  1. தமிழர்களின் பரவல் பற்றி விவரி.
  2. உலகின் 154 நாடுகளில் தமிழர்கள் இனம் உள்ளது.
  3. அந்நாடுகளில் 7 முதல் 10 லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
  4. இருபது நாடுகளில் இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர் வாழ்கின்றனர்.
  5. கிரேக்கம், ரோம், எகிப்து, பாலஸ்தீனம் போன்ற பண்டைய நாகரிக நாடுகளுடன் வணிகத்தில் தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர்.
  6. மேற்கு ஆசிய நாடுகளுக்க மிளகு, இஞ்சி, எலக்காய் ஏற்றுமதி செய்யப்பட்டன.
  7. சுமேரியர்களுடன் கிமு 4 நூற்றாண்டிற்கும் முன்பே வர்த்தக உறவு இருந்துள்ளது.
  8. அரிக்கமேடு அகழாய்வு ரோம் உடனான வர்த்தகத்தை உறுதிப்படுத்துகிறது
  9. தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேக்கு மரத்தால் பரசீக வளைகுடாவில கப்பல்கள் செய்யப்பட்டன.
  10. கி.மு. ஏழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து பொருட்கள் சீனாவில் விற்கப்பட்டன.
  11. பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி, பெரும்பாணாற்றுப்படை நூல்கள் அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குதிரை வணிகத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
  12. உலகளாவிய தமிழர்களைப் பற்றி விரிவாக எழுதுக (ழச) உலகளாவிய தமிழரின் மொழி (ம) பண்பாட்டு நிலையை விவரி.

தமிழினப் பரவல்

  1. ஏறத்தாழ உலகின் 154 நாடுகளில் தமிழினம் பரவியுள்ளது.
  2. இதில் 7 முதல் 70 லட்சம் வரை தமிழர்கள் வசிக்கின்றனர்.
  3. அவற்றுள் 20 நாடுகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்

தமிழர்கள் புலம்பெயரக் காரணங்கள்:

  1. வணிகம் (ம) வேலைவாய்ப்பு:

“திரை கடலோடியும் திரவியம் தேடு” – ஒளவையார் கூற்று

  1. ஆங்கிலேயர் (ம) பிரெஞ்சுக் காரர்கள் தமிழர் சிலரை அடிமைக் கூலிகளாக்கி, தம் ஆளுமைக்கு உட்பட்ட நாடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.
  2. பஞ்சம் (ம) அன்னிய படையெடுப்பு

பண்பாட்டு நிலை

  1. தமிழர் சிங்கப்பூர், மலேசியா, பினாங்குத் தீவு ஆகிய நாடுகளில் கோவில்கள் கட்டி ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடத்தி வருகின்றனர்.
  2. ரீயூனியன் தீவில் வாழும் பெரும்பான்மையானோர் தமிழர்கள் இவர்கள் பிரஞ்சுக்காரர்களால் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலிருந:து ஒப்பந்தக் கூலிகளாக குடியமர்த்தப்பட்டனர்.
  3. ரீயூனியன் தீவில் காவடி எடுத்தல், தேரிழுத்தல் இன்றும் நடைபெறுகிறது

மொழிநிலை:

  1. இலங்கைத் தமிழரில் 95மூ பேர் தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழிலேயே கல்வி பயில்கின்றனர்.
  2. தமிழ் ஆட்சி முறை சிங்கப்பூர், மொரிசியசு, மலேசியா, பிஜித்தீவுகள், தென் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் நாடுகளில் தமிழ் ஒரு பாடமாக கற்பிக்கப்படுகிறது.
  3. 24 மணி நேரமும் ஊடகங்களில் தமிழைக் கேட்கவும். காணவும் தமிழர்கள் அந்தந்த நாட்டு அரசுகளிடம் அனுமதி பெற்றுள்னர்.

தமிழுக்கு பங்காற்றிய பேராசிரியர்கள்

  1. அமெரிக்க நாட்டுப் பேராசிரியர்கள் வி.எஸ். ராஜன்
  2. எல்.ஹார்ட்
  3. கௌசல்யா ஹார்ட்
  4. லிண்ட் ஹோம்
  5. இந்திரா, நார்மன், ஹால்சிப்மேன்
  6. குளோத்தி, ஜேம்ஸ் பிராங்கா
  7. ஏ.கே. ராமானுஜம்

தமிழ் ஆட்சி மொழி

  1. இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது.
  2. இந்நாடுகளில் இசை, நாட்டியம். நாடகம் முதலியவற்றை தமிழில் கற்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆட்சிநிலை

  1. தமிழர் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் உள்ளாட்சி தேர்தல்களில் பங்குபெற்று ஆட்சிப் பொறுப்பு வகிக்கின்றனர்.
  2. நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் பதவியையும் பெற்றுள்ளனர்.
  3. சிங்கப்பூர், மொரிசியசு நாடுகளில் குடியரசுத் தலைவர்களாக தமிழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

 

 

தாயகத்துடன் உறவுநிலை

  1. தாயகத்திலுள்ள வளங்களைத் தாம் வாழும் இடங்களுக்குக் கொண்டு செல்கிறார்கள்.
  2. உணவுப் பொருள்கள், உடைகள், திருவிழாபொருட்கள் இசைக்கருவிகள், தமிழ் நூல்கள், இதழ்கள் முதலிய பண்பாட்டுக்குத் தேவையானதை தயாகத்திலிருந்து தருவித்துக் கொள்கின்றனர்.
  3. பண்பாடு (ம) கலை நிகழ்ச்சிகளுக்குத் தயாகத்திலிருந்து கலைஞர்களை வருவித்து மகிழ்கின்றனர்.
  4. பண்பாட்டு ஊடாட்டம் (ம) வெளிநாடுகளில் தமிழ்ப் பண்பாடு பரவியுள்ளதை சான்றுடன் நிறுவுக.

வெளிநாடுகளில் தமிழ்ப் பாண்பாடு:

  1. “திரைகடலோடியும் திரவியம் தேடு” – ஒளவையார் கூற்று
  2. தமிழர்கள் பல நாடுகளோடு வணிகத் தொடர்பு கொண்டனர்.
  3. பிறநாடுகளில் தமிழரும், தமிழகத்தில் பிறரும் குடியேறினர்.
  4. சமயம், சிற்பம், ஓவியம் என பண்பாடு பரவியது
  5. தமிழ் இலக்கியங்களில் கன்னடச்செல்வாக்கு

கன்னடப் புலவர் ராஜவாங்கர் என்பவரது நூல் அரிச்சந்திர புராணத்தின் மூலமாகும்.

  1. தெலுங்கு மொழியில் தமிழ்ச்செல்வாக்கு

நன்னய்யாபட்டர் தமிழிலுள்ள எதுகை, மோனைத் தொடைகளை தெலுங்கில் புகுத்தினார்.

பண்பாட்டு ஊடாட்டம்

  1. சிங்கப்பூர்
    1. முருக வழிபாட்டு முறை
    2. தமிழ் ஆட்சி முறை
    3. அங்கோவர்ட்
  2. திராவிட கோயில் பாணி அமைப்பு
  3. திருமால் கோயில் தமிழ்மரபு படி உள்ளது
  4. இலங்கை
  5. பத்தினி வழிபாடு – மகாவம்சம் குறிப்பிடுகிறது.
  6. தமிழ்ப்பெயர் கொண்ட ஊர்கள் – திரிகோணமலே
  • தமிழ் இலக்கியம் யாழ்பாணம் – பாணர் மரபு
  1. மலேசியா
  2. திருமணம், இலை போன்ற பல சொற்கள் மலேயா மொழியில் உள்ளது.
  3. கோலன், இலையன் என்ற மக்கள் முறை
  • தமிழ் கலாச்சார விழாக்கள்
  1. மலேயா – தமிழ்ப் பெயர்
  2. ஜாவாத்தீவு
  3. த்ரிபவே – திரியம்பவே என பாவை பாடல்பாடும் விழா
  4. மீனன்காப்பு – பாண்டியனால் ஆளப்பட்ட பகுதி சான்று, மணிமேகலை
  5. சுமத்ராதீவு

சும்பிரிங்கு என்னும் பழங்குடியினரிடையே சோழிய, பாண்டிய, மெலியான, பெலவி (பல்லவ) தெகங் (தெக்காணம்) எனும் பெயர்கள் பழக்கம்

  1. தாய்லாந்து

லோ-ஜின்-ஜா எனும் மலைத்திருவிழாவிற்கு பாவை நோன்பு அடிப்படை

  1. கம்போடியா
    1. பல்லவர்களைப் போல இந்நாட்டு மன்னர் சூரியவர்மன், ஜெயவர்மன் என அழைப்பர்
    2. குதிரை – மா, கப்பல் – கப்பால் என குறிப்பு
    3. சம்பாத்தீவு
  2. இத்தீவின் முதல் அரசமரபைத் தோற்றுவித்தவர் தென்னிந்தியரே
  3. திருவிழாக்களில் சந்தனம் பயன்பாடு
  • கல்வெட்டுகள் தென்னகத்து சாயல்
  1. பர்ம
  2. பாகன் எனுமிடத்தில் திருமால் கோயில்
  3. காஞ்சியிலிருந்த மகாயான பௌத்தம் இங்கே பரவியிற்று
  • கோயில்களும் சிலைகளும் தமிழ்முறையில் அமைந்துள்ளன.
  1. ரீயூனியன் தீவு
  2. காவடி எடுத்தல்
  3. தேர் இழுத்தல் இன்றும் நடைபெறுகிறது.
  4. அயல் நாடுகளில் தமிழின் வளர்ச்சி நிலையை விவரி.
  5. தமிழ்மொழி வழக்கிலுள்ள நாடுகள்

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பிஜி, மொரிக்ஷியஸ், அமெரிக்கா, கனடா, தென்னாப்பிரிக்கா, துபாய், அரபுநாடுகள் என 35 நாடுகளில் வழக்கில் உள்ளது.

  1. பணத்தாள் (ம) நாணயம்

மலேசியா (ம) சிங்கப்பூரில் தமிழில அச்சிடப்பட்டு வெளிவருகிறது.

  1. இணையவழித்தமிழ்
  2. சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.
  3. இணைய இதழ்கள் – சிங்கை இணையம், நம்குடும்பம்
  • சிங்கப்பூரில் தமிழ் ஆட்சிமொழியாக உள்ளது

 

  1. ஆராய்ச்சிகள்

இலங்கை, மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற பலநாடுகளில் தமிழ் இலக்கியம், இலக்கணம் மொழியமைப்பு, எழுத்தின் வரிவடிவம் பற்றிய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

  1. அயல்நாடுகளில் திழ் வளர்ச்சிக்கு காரணமானோர்
    1. இந்திரா பார்த்த சாரதி
    2. இளந்திரையன்
  • சுப்பு ரெட்டியார்
  1. இலங்கை நாடு
  1. புலவர்கள் – மருதன் இளநாகனார், நன்னாகனர்
  2. இதழ்கள் – ஈழகேசரி, வீரகேசரி, தினகரன்
  • இலங்கைத் தமிழ் வனொலி
  1. மலேசியா நாடு
  2. படைப்பாளர்கள் – பரதிதாசன், முரசு நெடுமாறன்
  3. பத்திரிக்கைகள் – தமிழ்நேசன், தமிழ்சுடர், தமிழ் முரசு
  • கோலாலம்பூரில் கவிதைக்களம், கவிதைப்பண்ணை ஆகிய அமைப்புகள் உள்ளன.
  1. சிங்கப்பூர்
  2. பழனிவேறுவின் கவிதைமலர்கள் நூல்
  3. மேற்கே உதிக்கும் சூரியன், வாழப்பிறந்தவன் என 40 புதினங்கள்
  • இணைய இதழ்கள், இல்லப்பக்கங்கள் தமிழில் உள்ளன.
  1. அறிவியல் (ம) நிர்வாகத் துறையில் உள்ள தமிழர்களைப் பற்றி எழுதுக.
  2. திரு. சந்திரசேகர்
  3. டாடா குழும நிறுவனங்களின் தலைவர்
  4. ரத்தன டாடா சந்திரசேகரின் ஆதரவுடன், நிர்வாகத்தின் செயல்திறனுக்காக தலைமைப் பொறுப்பு பதவியில் தொடர்கிறார்.
  5. திருமதி. இந்திரா நூயி
  6. இவர் சென்னையைச் சேர்ந்தவர்
  7. பல ஆண்டுகளாக பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.
  8. திரு. சுந்தர் பிச்சை
  9. இவர் மதுரையைச் சேர்ந்தவர்
  10. உலகின் முதன்மை தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார்.
  • மென்பொருள் பொறியாளர்களில் சிறந்தவர்
  1. அமெரிக்க பாராளுமன்றம் இவரை அந்நாட்டின் இளைஞர்களுக்கு முன்மாதிரி என்று பாராட்டியது.
  2. மயில்சாமி அண்ணாதுரை
  3. இவர் கோவை மாவட்டத்தைச் சார்ந்தவர்.
  4. “இளையகலாம்” என அழைக்கப்படுகிறார்
  • சந்திராயன் ஐ திட்டத்தின் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர்
  1. சந்திராயன் ஐஐ திட்டத்திலும் பணியாற்றியவர்
  2. எழுதிய நூல் – கையருகே நிலா
  3. 1982 ல் இஸ்ரேவில் சேர்ந்தார்
  • சர்.சி.வி. ராமன் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்
  • இது வரை 5 முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார்
  1. அருணன் சுப்பையா
  2. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்
  3. இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்றவர்
  • 1984ல் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியில் சேர்ந்தார்.
  1. 2013ல் மங்கள் யான செயற்கைக்கோளை உருவாக்கிய இந்தியாவின் செவ்வாய் சுற்றுக்கலன் திட்டத்தின் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர்
  2. திருமதி வளர்மதி
  3. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்
  4. இவர் 1984 முதல் இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார்.
  • 2012ல் உள்நாட்டிலேயே உருவான முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குநர்
  1. இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட இயக்குநராகப் பணியாற்றிய இரண்டாவது பெண் அறிவியல் அறிஞர்
  2. 2015ல் முதன் முதலில் அப்துல்கலாம் விருதைப் பெற்றவர்.
  3. அப்துல்கலாம்
  4. ராமேஸ்வரத்தை சார்ந்தவர்
  5. இந்தியாவின் 11வது குடியரசுத்தலைவர்
  • இந்திய ஏவுகணை நாயகன் எனப்படுகிறார்.
  1. DRDO, ISRO வில் விண்வெளிப் பொறியாளராகப் பணியாற்றி உள்ளார்.
  2. பாரத ரத்னா விருதைப் பெற்றுள்ளார்.
  3. கைலாசவடிவு சிவன்
  4. நாகர்கோவில் பகுதியைச் சார்ந்தவர்
  5. இஸ்ரோவின் 9வது தலைவர், இப்பதவியைப் பெறும் முதல் தமிழர்
  • 2015ல் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருந்து, ISRO வின் தலைவரானார்.
  1. சிவதானுப்பிள்ளை

ISRO

எந்திரவியல் துறை – டெல்லி

தற்போது – ISRO வில் பணி

  1. தமிழகத்தின் இயற்கை அமைப்புகள் (ழச) பழங்காலத் தமிழகத்தின் நிலவியல் கூறுகள் பற்றி விவரி.

நிலவியல் கூறுகள்

  1. தொல்காப்பியம் கூற்று

‘வடவேங்கடம் தென்குமரி ஆலிடைத் தமிழ் கூற்று நல்லுலகத்து”’ என்பதிலிருந்து பழங்காலத்தமிழகம் வடக்கே வேங்கடம் முதல் தெற்கே குமரி வரை பரவி இருந்ததை அறியலாம்.

  1. மொழியின் அடிப்படை:

தமிழ் கூறும் நல்லுலகம் என்பதிலிருந்து தமிழ்நாடு என வழங்கலாயிற்று.

  1. பண்டைய தமிழகம் மலை, காடு, சமவெளி, கடல் ஒட்டிய நிலப்பகுதியாக பரந்து விரிந்து காணப்பட்;டது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனப்பட்டன.
  2. குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்த நிலம் பாலை எனப்பட்டது.
  3. அரசியல் பிரிவுகள்

சேர, சோழ, பாண்டிய, கொங்கு நாடு.

  1. மேற்கு தொடர்ச்சி மலைகளும் கிழக்கு தொடர்ச்சி மலைகளும் இரு கடற்கரை ஓரங்களிலும் அமைத்து நீலகிரி மாவட்டத்தில் ஒன்றிணைகின்றன.
  2. மேற்கு (ம) கிழக்கு தொடர்ச்சி மலைபகுதிக்கு அருகில் சமவெளிகள் உள்ளன. நீலகிரிக்குத் தெற்கிலும் பல குன்றுகளை அடுத்தும் சமவெளிகள் உள்ளன.
  3. இச்சமவெளியில் வாழ்ந்த மக்கள் தனித்தனியே வாழ்ந்துள்ளனர். குறுநில மன்னர்களின் அரசுகளும் தனித்தனியாக இயங்கிவந்தன.
  4. இவ்வாறு பிரிந்து வாழ இயற்கை அமைப்பை காரணமானது
  5. நிலத்தின் தன்மைக்கேற்ப மக்களின் வாழ்க்கை (ம) ஒழுக்கம் அமைந்தது
Scroll to Top