10.நாட்டின் வளர்ச்சியில் வன்முறையின் தாக்கம்
வகுப்புவாத மற்றும் வகுப்வாதம் இந்தியாவில் வகுப்புவாதத்திற்கான காரணங்கள்:
வகுப்புவாதம்:
இனவாதம் என்பது ஒரு சமூகம் (ம) மதத்தைச் சார்ந்த மக்கள், மற்றொரு சமூகத்தைச் சார்ந்த மக்களின் மீது பகைமை உணர்வைக் கொண்டுள்ளதைக் குறிக்கிறது.
இந்தியாவில் வகுப்புவாதத்திற்கான காரணங்கள்:
- காலிஸ்தான், நாகா போன்ற பகுதிகளின் தனி மாநில கோரிக்கைகள்
- புதிய மாநிலத்திற்கான தீவிர கோரிக்கைகள் (ம) போராட்டங்கள் (எ.கா): தெலுங்கானா
- யூனியன் பிரதேசங்கள் மாநிலங்களாக மாற்றப்படக்கோரி போராட்டங்கள் (எ.கா): மணிப்பூர், திரிப்பூர்
- உள்நாட்டு எல்லைப் பிரச்சனைகள் (ம) நதிநீர் பங்கீட்டு பிரச்சனைகள் (எ.கா) சண்டிகர், காவிரி நதிநீர் பிரச்சனை
- சில மதவாத அமைப்புகள் “பிராந்தியவாதத்தை” ஊக்குவிப்பது மட்டுமில்லாமல் அதன் கொள்கைகளும் வன்முறையைத் தூண்டும் வண்ணம் இருக்கும்
- மண்ணின் மைந்தர்கள் கோட்பாடு – கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகள். அந்த பிராந்திய மக்களுக்கே வழங்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கின்றது. (எ.கா): அசாம் அசாமியருக்கே
வகுப்புவாத வளர்ச்சிக்கான காரணங்கள்:
- காலனி ஆதிக்கத்தின் கொடை
- பிரிட்டிக்ஷ் அரசு வகுப்பு வாதத்தை ஊக்குவித்தது
- முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கியது
- விடுதலைப் போராட்டத்தலைவர்களின் பங்கு
- சமய சீர்திருத்த வாதிகளில் ஒருசாரார் கடந்தகால இந்து சமயத்தைப் புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
- திலகர் காலனி ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்ட கணபதி, (ம) சிவாஜி சதுர்தி விழாவை பயன்படுத்தினார்.
- பிரிவினையும் வகுப்புவாதமும்
இந்திய – பாகிஸ்தான் பிரிவினை
- இந்து சமயப் பற்றுவாதம்
- வகுப்பு வாத அமைப்புகள்
- எதிர்ப்பும் ஏமாற்றமும்
- வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் ஏமாற்றமடைந்தனர்.
- வகுப்புவாதிகள் மன உணர்வைத்துண்டி விட்டனர்.
- வறுமை (ம) வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகளை புறந்தள்ளிவிட்டு வகுப்பு வாதத்தில் ஈடுபட்டனர்.
- அரசியல் நடவடிக்கைகள்: அரசியல் இனவாதிகளால் மக்களின் வாயிலாக ஊக்குவிக்கப்படுகிறது.
- வாக்கு வங்கிகள்
சமய அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு, அமைச்சர் பதவி, அரசாங்க பொறுப்புகள் வழங்கப்படுதல்
- சிறுபான்மையினரின் பிரச்சனைகள்
வாய்ப்பும் சலுகையும் முறையாக வழங்கப்படாமல் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர்.
இந்திய சமுதாயத்தின் மீது வகுப்புவாதத்தின் தாக்கம் (விளைவுகள்):
- பெரும்பான்மையாக கொலை செய்யப்படுபவர்கள் ஒன்றுமறியா ஏழைகள்
- அவர்கள் வீடுகள், உடைமைகள், வாழ்க்கை வாழ்வாதாரம் முற்றிலுமாக சிதைக்கப்படுகிறது.
- இது அனைத்து பிராந்தியங்களிலும் “மனிதஉரிமை மீறலுக்கு “வழி கோறுகிறது.
- சில நேரங்களில் குழந்தைகளின் பெற்றோர்கள் இறந்து விடுவதால், அக்குழந்தைகள் பராமரிக்க ஆதரவில்லாத நிலையில், இறுதியாக வாழ்நாள் முழுவதும் அனாதையாக வாழ வேண்டிய அவல நிலைக்கு ஆளாகின்றனர்.
- பிராமணம் (ம) அகதிகள் பிரச்சனைகள் இனக்கலவரங்கள் தூண்டப்பட்ட மற்றொரு பரிமாணங்களாக உள்ளன.
- இனவாதமானது “அரசியலமைப்பு கோட்பாடுகள்” மதச்சார்பின்மை, மதசகிப்ப்புத்தன்மை ஆகியவற்றிற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
- நாட்டின் ஒற்றுமை (ம) ஒருமைப்பாட்டிற்கு ஊறுவிளைவிக்கும் வகையில்உள்ளது.
- இது மக்களை பல்வேறு இனக்குழுக்களாக பிரிக்கவும் வெறுப்புணர்வை தூண்டுவதிலும் முக்கிய பங்காற்றுகிறது.
- சமூக முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாகவும், சமுதாயத்தின் பின்னடைவுக்கு காரணமாகவும் உள்ளது.
வகுப்புவாதத்தின் பரிமாணங்கள்:
- அரசியல் வகுப்புவாதம்
அரசியல் சந்தர்ப்பவாதத்திற்காகவும், தேர்தல் வாக்குகள் பெறுவதற்காகவும், ஒருவருடைய தவறுகளையெல்லாம் சுட்டிக்காட்டுவதுபோல் சுட்டிக்காட்டிவிட்டு, அதே நேரத்தில் மக்களின் மனதை வேறுவகையில் திசைதிருப்பி கலவரங்களை தூண்டுவது.
- ஒருங்கிணைந்த வகுப்புவாதம்
- சிறிய மதக்குழுக்கள் / பிரிவுகள் பெரிய மதக்குழுக்கள் / பிரிவுகளுடன் ஒருங்கிணைவது
- இத்தகைய வகுப்புவாதமானது தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் இந்துக்களே என்றும், சமண, சிக்கிய (ம) புத்த சமயங்களை சார்ந்த அனைவரும் இந்துக்கள் என்றும். அவர்கள் அனைவரும் இந்து திருமணச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்று கோருகின்றது.
- நல்வாழ்வு வகுப்புவாதம்
- ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர், தங்களது சமூகத்தினரின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதோடு, சுகாதாரம் (ம) கல்விக்கான உதவிகளை செய்வதாகும்.
- (எ.கா) பார்சி சமூகத்தின் அவர்களது சமூகத்தினரின் மேம்பாட்டிற்காக பாடுபடுவது
- ஒதுங்கும் வகுப்புவாதம்
- சிறிய மதப்பிரிவினர் அரசியலை விட்டு விலகியிருப்து
- (எ.கா). பகாய் சமூகத்தினர் அரசியல் செயல்பாடுகளில் தங்களது சமூக உறுப்பினர்கள் பங்கெடுத்துக் கொள்வதை பகாய் சமூகம் அனுமதிக்கவில்லை.
- பழிவாங்கும் வகுப்புவாதம்
பிற மதத்தைச் சார்ந்தவர்களுக்கு கேடு விளைவிப்பதோடு, வேதனைப்படுத்தி, காயப்படுத்துவதாகும்.
- பிரிவினை வகுப்புவாதம்
- ஒரு மத (அ) கலாச்சார குழு தங்களது குறிப்பிட்ட கலாச்சாரத்தை நிலைநிறுத்திக் கொல்வதற்காகவும், நாட்டிற்குள்ளேயே தனி ராஜ்யம் வேண்டும் என்பதற்காகவும் போராட்டம் மேற்கொள்வதை பிரிவினை வகுப்பு வாதம்
- (எ.கா) அசாமில் போடோக்கள்
- தனிநாடு கோரும் வகுப்புவாதம்
- குறிப்பிட்ட மதத்தினர் தங்களுக்கென்று அரசியல் அங்கீகாரம் கிடைக்க வேண்மென்று தனிநாடு கோருவது
- (எ.கா) சீக்கிய மதத்தைச் சார்ந்தவர்கள் மிகவும் எண்ணிக்கையில் குறைவான தீவிரவாதிகள் காலிஸ்தான் என்ற தனிநாடு கோருவது.
இந்தியாவில் இனவாதத்தின் பரிணாம வளர்ச்சி:
பரிணாம வளர்ச்சி:
முதல்நிலை:
- இங்கு மக்கள் “ஓரேமதம்” என்ற கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டு இருந்தனர்.
- அம்மதமானது எல்லோர்க்கும் பொதுவான ‘மதச்சார்பற்ற’ கொள்கைகளைக் கொண்டிருந்தது.
- இதுவே மதம் சார்ந்த சமூக பொருளாதார எண்ணங்கள் கொண்ட சமுதாயம் உருவாக அடிப்படையாக இருந்தது.
இரண்டாம் நிலை:
- பல்வேறு மதங்களின் களஞ்சியமான இந்தியாவில் வேறுபட்ட “இனவாத கருத்தில் கொள்கைகள்” ஊற்றெடுக்க தொடங்கியது.
- ஒரு மதத்தினரின் சமுதாய, பொருளாதார, கலாச்சார அரசியல் நோக்கங்கள் மற்றொரு மதத்தினரிடம் இருந்து முற்றிலும் வேறுபாடு இருந்தது.
- எனவே இந்நிலை சுதந்திரமான மதவாத இனவாதம் என்று அழைக்கப்பட்டது.
மூன்றாம் நிலை:
- இந்த நிலையில் இனவாதமானது பல்வேறு சமுதாயங்களின் விருப்பங்கள் ஒன்றுக்கொன்று தகாதவைகளாகவும், பகைமை உணர்வு (ம) விரோதத்தை வளர்க்கக்கூடியதாகவும் பரஸ்பர உணர்வுகள் அற்றதாகவும் மாறியது.
- மேலும் இனவாதிகள் பல்வேறு சமுதாயங்களானது பொதுவான மதச்சார்பற்ற கருத்துக்களைக் கொண்டிருக்க முடியாது என்ற கருத்தை ஆணித்தரமாக வலியுறுத்த தொடங்கினர்.
- தீவிர மதவாதம் என்பது பயம் (ம) வெறுப்புணர்வை அடிப்படையாகக் கொண்டது.
- மேலும் மதம், செயல்பாடு, நடத்தையில் வன்முறைகளைப் புகுத்தி அரசியல் எதிர்பாளர்களுடன் மொழிப்போரில் ஈடுபடுத்துவது ஆகும்.
- இனவாதமானது 3 நிலையிலும் ஒன்றுக்கொன்று மாறுபட்டதாக அமைந்துள்ளதோடு மட்டுமல்லாமல், தொடர்ச்சியாக ஒன்றின் மீது ஒன்று செயலாற்றுகின்றது. இதுவே நவீன அரசியலின் வளர்ச்சிக்கு ஊன்று கோலாக இருந்தது.
விளைவுகள்:
- இது காலனி ஆதிக்கம் சார்ந்த இந்தியப் பொருளாதாரத்திற்கு விளைபொருளாக அமைந்தது.
- ஆங்கிலேயர் ஆட்சி இனவாதக் கொள்கையின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியது.
- மதவன்முறை என்பது மதவாத குழுக்களிடையே குற்றச் செயல்களைத் தூண்டி அவர்களால் உண்டாகும் வன்முறை செயல்கள் ஆகும்.
- மேலும் வன்முறைக் குழுக்கள், தங்கள் குழுவினரிடையே ஒற்றுமையைப் பேணுவதோடு மட்டுமல்லாமல், பலியாட்டுகளையும் குழுவின் உறுப்பினர்களுக்காகவே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர்.
இந்தியாவின் பெரும் மத / இனக்கலவரங்கள்:
- கல்கத்தா கலவரம் – 1946
- இந்திய வரலாற்றில் கல்கத்தா கலவரம் “நேரடி நடவடிக்கை நாள்” என்ற கருப்பு நாளாக அமைந்தது.
- வங்காள மாகாணத்தில் இந்து – முஸ்லீம் மக்களிடையேயான வன்மத்தால் இக்கலவரம் உண்டானது.
- சீக்கிய கலவரம் – 1984
- 1984 ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று சீக்கியப் படுகொலை நிகழ்ந்தது.
- இந்திராகாந்தியின் படுகொலையை அடுத்து, டெல்லியின் யமுனா நதிக்கரையருகே நிகழ்ந்த கலவரத்தால் 800 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
- காக்ஷ்மீர் கரலவரம் – 1986
- 1986 முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக உள்ள காக்ஷ்மீரில் இந்துக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரம் ஆகும்.
- அம்மாநிலத்தின் ‘ஆனந்த நாக்” பகுதியில் இந்துக்கள் பெருமளவில் தாக்கப்பட்டனர்.
- வாரணாசிக் கலவரம் – 1989
- இந்தியாவின் புனித நகரமாகக் கருதப்படும் வாரணாசியில் 1989 முதல் 1992 வரை தொடர்ச்சியாக மூன்று கலவரங்கள் நடைபெற்றன.
- 1989 ல் இந்து – முஸ்லீம் வன்மத்தால் முதல் கலவரம் நிகழ்;ந்தது.
- 2007 ல் சிறிய கலவரம் ஒன்றும் நிகழ்ந்தது.
- பகல்பூர் கலவரம் – 1989
- சில்க்சிட்டி என்றழைக்கப்படும் பகல்பூர் இக்லேவரத்தால் மிகவும் மோசமாகப் பாதிப்படைத்தது.
- இந்தியாவில் சுதந்திரத்திற்கு பின்பு நிகழ்ந்த மிகமோசமான மதக் கலவரம்.
- இந்து – முஸ்லீம் வேற்றுமை காரணமாக 2 மாதம் நீடித்த இக்கலவரத்தினால் 1000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்தனர்.
- பம்பாய் கலவரம் – 1992
- 1992 டிசம்பர் (ம) 1993 களில் நிகழ்;ந்த கலவரம் பாபர்மசூதி இடிப்பின் காரணமாக நிகழ்ந்த இனக்கலவரத்தால் 1000க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர்.
- மேலும் 1993 ல் மும்பையில் நடந்த குண்டு வெடிப்பிற்கும் இதுவே காரணமாகும்.
- குஜராத் கலவரம் – 2002
- 2002 ம் ஆண்டு தொடர்ச்சியான இந்து – முஸ்லீம் கலவரம் நிகழ்ந்தது.
- முஸ்லீம் கலவரக் கும்பலால் முன்கூட்டியே திட்டமிட்டு சபர்மதி விரைவு ரயில் எரிக்கப்பட்டது.
- கோத்ரா ரயில் எரிப்பு (ம) அகமதாபாத்தின் நரோடா பாட்டியா சம்பவம் ஆகியவை உச்சநிலைக்கு சென்றது.
- டெகாஸ்கா கலவரம் – 2010
மேற்கு வங்காளத்தின் டெகாஸ்கா பகுதியில் முஸ்லீம் மதவாதக் கும்பலால், இது மக்கள் (ம) இந்துக்களின் புனித இடங்களான கோவில்கள் (ம) கடைகள் பெருமளவில் எரிக்கப்பட்டன.
- அசாம் கலவரம் – 2012
- இந்தியாவின் போடா இனத்தவர்க்கும், வங்காள தேசத்தில் இருந்து புலம் பெயர்ந்த முஸ்லீம் மக்களுக்கும் இடையே இனக் கலவரம் மூண்டது.
- 80 பேர்க்கு மேல் இறப்பு (ம) பல ஆயிரம் மக்கள் வீடுகளை இழந்தனர்.
- முசாபர்நகர் கலவரம் – 2012
- உத்திரப்பிரதேசத்தில் உள்ள முசாபர் நகரில் 2013ல் நிகழ்ந்த இந்து – முஸ்லீம் கலவரத்தால் 48 பேர் இறந்தனர்.
- 93 பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளிவந்தன.
இந்தியாவில் வகுப்பு வாத கலவரங்களின் இயல்புகளும் தீர்வுகளும்:
வகுப்புவாத கலவரங்களின் இயல்புகள்:
- மதத்தின் பெயரால் ஏற்படும் வகுப்புக் கலவரங்களை விட அரசியல் தூண்டுதலினால் ஏற்படும் வகுப்புக் கலவரங்களே அதிகமாக உள்ளது.
- சில அரசியல்வாதிகள் சில உளளூர் தலைவர்கள், சாதி மனப்பான்மை உடையோர் ஆகியோராலேயே வகுப்புக் கலவரங்கள் தூண்டிவிடப்படுகின்றன.
- தங்களது அரசியல் செல்வாக்கை பலப்படுத்திக் கொள்வதற்காகவும், பொது மக்களிடையே ஒரு சிறந்த பெயரை வாங்கிக் கொள்வதற்காகவும், தங்களது கௌரவத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் வகுப்பு வாதத்தை பயன்படுத்துகின்றனர்.
- வகுப்புக் கலவரங்கள் தீவிரமடைவதற்கு பொருளாதார சிக்கல்களும் முக்கிய பங்கை ஆற்றுகின்றன.
- வகுப்புக் கலவரங்கள் தென்னிந்தியா, கிழக்குப் பகுதிகளில் நடைபெறுவதைவிட வட இந்தியாவிலேயே மிகவும் அதிகமாக நிகழ்கிறது.
- பெரும்பாலும் வகுப்புக் கலவரங்கள் மத திருவிழாக்களின் பேதே நடைபெறுகிறது.
- வகுப்புக் கலவரங்களின் போது, பயங்கர ஆயுதங்கள் உச்சகட்டத்தில் பயன்படுத்தப்படும்.
- குறிப்பாக ஒரு நகரத்தில் 2(அ) 3 முறை மிகவும் தீவிரமாக வகுப்புக் கலவரங்கள் நடத்திருந்ததென்றால், மீண்டும் அந்த இடத்தில் கலவரங்கள் நடக்காது.
தீர்வுகள்:
- நமது பண்பாடு, நாகரிகம், இந்தியாவின் பன்முகத்தன்மை, சமயச்சார்பற்ற அரசு போன்ற நவீன மதிப்பீடுகளை வகுப்புவாதம் அழிக்கிறது என்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.
- வகுப்பு வாதக் காரணங்களுக்காக மதத்தைப் பயன்படுத்துவது (ம) உண்மையான மதக்கருத்துக்கள் இரண்டிற்கும் இடையிலான வேறுபாடுகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
- வகுப்புவாதத்திற்கு எதிரான போர் என்பது, உண்மையான போர்க்களத்தில் நிற்பது போன்றது என்பதை நாம் உணர வேண்டும்.
- வகுப்பு வாதிகள் தங்களது நடைமுறைத் தந்திரங்களை மாற்றி வருகின்றனர். இதனைப் பரிசீலித்து அதற்கேற்ப எதிர்வினைகளை வகுக்க வேண்டும்.
- தீபாவளி, ஹோலி,ஈத், ஓணம், கிறிஸ்துமஸ் போன்ற திருவிழாக்களை பொது விழாக்களாக நாம் முன்னிறுத்த வேண்டும்.
- அனைத்து சமய தலைவர்களையும் கூட்டி ஒரு அமைதிக்குழுவை உருவாக்குதல்
- வகுப்புவாத கலவரத்தை ஒடுக்க அரசு இயந்திரங்களை நவீனமய மாக்குதல்
- வகுப்புவாத கலவரங்களின் போது, காட்சி (ம) அச்சு ஊடகங்களின் பொறுப்பற்ற போக்கினை அரசு நெறிப்படுத்துதல்
- வகுப்புவாத உணர்வுகளை தூண்டும் வகையில் செயல்படும் அரசியல் கட்சிகளை தடைசெய்தல்
- வகுப்புவாத கலவரங்களில் பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கிடவும், கலவரங்களில் ஈடுபடுவோர் மீது வண்டி எடுக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தல்
- கல்வி பாடத்திட்டத்தில் சமய சார்பற்ற கருத்துக்களுக்கு முன்னுரிமை தந்து வகுப்புவாத உணர்வினை தூண்டும் பாடங்களை நீக்குதல்
- மனிதநேயம் போற்றும் அமைப்புகளுக்கு அரசு ஊக்கமளித்தல்
- அச்சமும் பீதியும், பாதுகாப்பற்ற உணர்வும் நீக்கப்பட வேண்டும். இதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறுபாண்மை மக்களுக்குச் செய்துவர வேண்டும்.
வகுப்புவாத வன்முறை கொள்கைகள்:
வகுப்புவாதம்:
ஒரு மதத்தினர் பிறமதத்தினர் மீது காட்டும் காழ்ப்புணர்ச்சி
- சமூக பிணைப்பு கோட்பாடு
- ஏமாற்றம், மன அழுத்தம், வன்முறை
- எதிர்பார்ப்பு புறக்கணிக்கப்படுவதாக எண்ணுவர்
- வகுப்புவாத வெறுப்பு எற்படும்
- கூட்டு விரோத மனப்பான்மை உண்டாகும்.
- குழுவில் உள்ள சிலரே போராட்டம் வெற்றிபெற வன்முறை அவசியம் என கருதுகின்றனர்.
- வன்முறையில் ஈடுபடும் துணைக்குழுவின் நடவடிக்கை அந்த மொத்த குழுவையும் பிரதிபலிப்பதகாது.
- சமூக பொருளாதார கோட்பாடு
- பொருளாதார சுரண்டல் வன்முறைக்கு காரணமாகிறது.
- வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதாக எண்ணுவர்.
- இது வன்முறைக்கு வித்திடும்
- சமூக தடை கோட்பாடு
- சமூகத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்துகிறது.
- தீங்கு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை உண்டுபண்ணுகிறது.
- சமூக அடக்குமுறைகள் (ம) உயர்குடிமக்களின் அதிகாரம் ஆகியவற்றால் பாதிக்கப்படுவர்.
- இது ஒருங்கிணைந்த வகுப்புவாதத்திற்கு வித்திடும்.
- அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை எதிர்க்க நேரிடும்.
- சமூக விதிகள் (ம) சமூக அமைப்புகளின் மீது வெறுப்பு, பாரபட்சத்தை ஏற்படுத்தும்.
- வன்முறையை அழைப்பவர்கள், தாங்கள் பாதுகாப்பு இல்லாமல் பதட்டமாக உணர்வதால், அவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர்.
- கொத்து முனைவர்க்க கோட்பாடு
- குறிப்பிட்ட பிரச்சனை மீது மக்களின் நாட்டம் அதிகம்
- முனைவாக்கம் – கலவரத்திற்கு முன் ஒரு குழு (அ) சித்தாந்தத்தின் மீது ஏற்படும் முனைவு.
- கொத்து – கலவரத்திற்குப் பின் இரண்டாக பிரிந்த பிரிவினர் வாழும் இடம்
- தனிநபர் (ம) குழுக்களை உணர்வு ரீதியாக (அ) உடல் ரீதியாக ஒன்றுதிரட்டும் தீவிர ஈடுபாடாகும்.
- கொத்தாக வாழும் சமூக இயக்கவியல், கலவரம் உருவாகும் சூழ்நிலைக்கு உகந்ததாக விளங்குகிறது.
- ஏனெனில் உளப்பகுப்பாய்வு மோசமாகி எரிச்சலை ஏற்படுத்தும்
- ஒரு நபர் தன்னை ஒத்தமுனைப்பைக் கொண்ட மக்களிடையே தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள ஒரு தூண்டுகோலாக விளங்குகிறது.
இந்தியாவில் வகுப்புவாதம்:
இந்திய சமுதாயம் பன்முக இனமத அமைப்புடையது.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி,
- இந்துக்கள் – 80.50மூ
- முஸ்லீம்கள் – 13.40மூ
- கிறிஸ்தவர்கள் – 2.30மூ
- சீக்கியர்கள் – 1.90மூ
- புத்தர்கள் – 0.80மூ
- சமணர்கள் – 0.40மூ
- இந்து – முஸ்லீம் வகுப்புவாதம்
- ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தொடங்கியது.
- 1936-முஸ்லீம் லீக் தேர்தல்களில் குறைந்த அளவே வென்றது.
- ஜின்னா – இஸ்லாம் அபாயத்தில் இருப்பதாக அறிவித்தார்.
- இந்து மகாசபை, ஆர்எஸ்எஸ் போன்ற இந்து சமுதாய குழுக்கள் தோன்றின.
- பிரிவினைவாத கலாச்சாரம் இலட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
- சுதந்திரத்திற்குபின் உத்திரப்பிரதேசம், பீகார் வங்காளம் மாநிலங்களில் மதக்கலவரங்கள் நடைபெற்றுள்ளன.
- 1993 – பாம்பே கலவரம்
- 2002 – கோத்ரா கலவரம்
- 1992 ஏற்பட்ட ராமஜெனன் பூமி – பாபர் மசூதி பிரச்சனை
இந்து – முஸ்லீம் விரோதத்திற்கான காரணங்கள்:
- இஸ்லாமிய படையெடுப்பு, இந்து மக்கள் கோயில் செல்வங்கள் கொள்கையிட்டது.
- இந்து கோயில் மீது (அ) அருகே மசூதிகள் எழுப்பியது.
- பிரித்தாளல் எளிது என்பதை உணர்ந்த, ஆங்கில ஏகாதிபத்திய அரசு இஸ்லாமிய பிரிவினைவாதத்திற்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்தது.
- இந்திய – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர், சில இஸ்லாமியர் பாகிஸ்தான் அணி கிரிக்கெட்டில் இந்தியாவை வெல்லும் போது பாகிஸ்தானிய கொடியை ஏந்துவது
- இந்திய சுதந்திர நாளை கறுப்பு தினமாக சில இஸ்லாமியர் அமைப்பு அனுக்ஷ்டிப்பது.
- இஸ்லாமிய அரசியல் கட்சிகள் ஒரு தனித்த தீவிரத் தன்மையை காட்டி, இந்தியாவில் இடம்பெற முயல்கின்றன.
- மேற்கு ஆசியா (ம) பாகிஸ்தானில இஸ்லாமிய தீவிரவாதம் மேலோங்கி வருவதால், இங்குள்ள இஸ்லாமிய தலைவர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.
- எனவே அவர்கள் இந்தியாவிலுள்ள அனைத்து இஸ்லாமியர்களையும் ஒருங்கிணைத்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் இறங்குவதில்லை.
- அரசு இஸ்லமியர்களை புறக்கணித்துள்ளதாக உணர்கின்றனர். எனவே சுயநலமுடைய சிலதலைவர்கள் வகுப்பு வாதத்திற்கு வித்திடுகின்றனர்.
- இந்து சீக்கிய வகுப்புவாதம்
- இந்து மதத்திற்கு எதரான சீர்திருத்த இயக்கம்
- சீக்கிய மதகுருமார்களின் ஆதிக்கத்திற்கு எதிராக அகாலிதளம் உருவானது.
- 1973 – அனந்தபூர் சாகிப் தீர்மானம் நிறைவேற்றம்
- பிந்த்ரன் வாலே தனிமாநிலம் கோரினார்.
- 1984- நீலநட்சத்திர நடவடிக்கை
- அமிர்தசரஸ் பெற்கோயிலில் இருந்த தீவிரவாதிகள் கைது
- இந்திராகாந்தி கொல்லப்பட்டார்.
- 1984, நவம்பர் 1ல் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
- 1986 – பொற்கோவிலில் இருந்து தீவிரவாதிகளை வெளியேற்றுவதற்கான பிளாக் தண்டர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- 1993 முதல் இரு மதத்தினரிடையே குறிப்பிடத்தக்க அளவில் உறவு முறையில் மாற்றம் வந்துள்ளது.
- இன வன்முறைகள்:
- அசாமில் போடோலேண்ட் பிரச்சனை
- அசாமில் உல்ஃபா இயக்கம்
- இலங்கை தமிழர்கள் பிரச்சனை போன்றவை
வகுப்புவாத கலவரங்களுக்கான காரணிகள்:
- சமூக காரணிகள்
- சமுதாய மரபுகள், வேறுபாடு
- சாதி, உயர்வகுப்பு உணர்வு
- மதம் சார்ந்த அடுக்கமைப்பு
- மத காரணிகள்
- மத கட்டுப்பாடு தளர்வு
- மதச்சார்பற்ற நெறிமுறை
- மத கண்ணோட்ட குறுகிய தீவிர பற்று நெறிகள்
- அரசியல் ஆதாயத்திற்கு மதத்தை பயன்படுத்துதல்
- மதத்தலைவர்களின் தீவிரவாத கொள்கைகள்
- அரசியல் காரணங்கள்
- மதம் சார்ந்த அரசியல்
- மத அடிப்படையில் தேர்தல்களில் வாக்குகள் சேகரித்தல்
- பொருளியல் காரணங்கள்
- பொருளாதாரச் சுரண்டல்
- சிறுபான்மை மத சமுதாயத்தினரை வேறுபடுத்துதல்
- சட்ட காரணங்கள்
- பொது சிவில் சட்டம்
- சல சமுதாயத்தினருக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள தனிப்பிரிவும் சலுகைகளும்
- மனநிலை காரணங்கள்
- சமுதாய விருப்பு வெறுப்புகள்
- ஒரேவித பழையவழி தடமாறுபாடா சிந்தனைகள்
- நம்பிக்கை இன்மை
- பிறமதத்தினரின் துயர்கண்டும் அக்கரையற்றதன்மை
- நிர்வாக காரணங்கள்
- நல்ல பயிற்சி (ம) தயாரிப்பு நிலையில்லா காவலர்
- காவலர் (ம) பிற அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இன்மை
- வரலாற்று காரணங்கள்
- அந்நிய படையெடுப்பு
- மத நிறுவனங்கள் தாக்கப்படுதல்
- மதமாற்ற முயற்சிகள்
- ஏகாதிபத்ய காலனி ஆட்சிக்காரர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி
- பிராந்திய காரணங்கள்
- பிராந்திய சமுதாய விரோத சக்திகள்
- நிலத் தகராறு
- கோக்ஷமிடுதல், மத ஊர்வலங்கள்
- சர்வதேச காரணங்கள்
- அந்நிய நாடுகள் வழங்கும் பயிற்சி நிதியுதவி
- பிறநாடுகள் திட்டமிட்டு இனமதவாத அமைப்புகளை ஆதரித்து இந்திய ஒற்றுமையை குலைத்து பலவீனப்படுத்தும் முயற்சிகள்
தேசிய ஒருமைப்பாடு இயக்கம்:
உறுப்பினர் – கேபினட், CM, SC / ST
- துவக்கம்: 1962
தலைவர் – பிரதமர்
- நோக்கம்: இன உணர்ச்சி (ம) மண்டலங்கள் குறித்த பிரச்சனைகளை கவனித்தல்
- 1962 ல் 2 குழுக்களை அமைத்தது
- ஆனால் இம்முயற்சி தொடரவில்லை. ஏனெனில் சீனபடையெடுப்பின் விளைவாக தேச ஒற்றுமை உருவானது.
- தேசிய ஒருமைப்பாடு குழு – 196
- 1968ல் துவங்கப்பட்ட போது, 3 குழுக்கள் நிறுவப்பட்டது.
- குழுக்கள் – இன உணவு பிரச்சனைகள், மண்டலப் பிரச்சனைகள், கல்வி பிரச்சனைகள் கவனிப்பதற்கான குழு
- இக்குழுக்கள் அனைத்துமே வழிமுறைகளை உருவாக்குதல், சட்டமியற்றுதல், நிர்வாக செயல்பாடுகளுக்கான அறிவுரை வழங்குதல்
- இவை 1970 ல் செயலிழந்தன.
- தேசிய ஒருமைப்பாடு குழு – 1986
- இக்குழு பஞ்சாப் மீது கவனம் செலுத்தியது.
- சிறுபான்மை மக்களின் நலன்களை பாதுகாப்பதற்காக (ம) தேசிய ஒருங்கிணைப்பை, சமூக ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்க 5 நபர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
- தேசிய ஒருமைப்பாடுகுழு – 1990
- பஞ்சாப், காக்ஷ்மீர், அயோத்தியா பிரச்சனைகளை கையாள்வதற்காக அமையப்பெற்றது.
- 1993ல் தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவின் கூட்டம் நடைபெற்றது.
தற்போதைய நிலை:
- 2008 ல் பிரதமர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
- 2011ல் உள்நாட்டு பாதுகாப்பு குறித்து கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
- 2019 லும் கூட்டம் நடைபெற்றுள்ளது. (16 கூட்டங்கள்)
அமைப்பு:
- தலைமை – பிரதமர்
- துணை தலைமை – உள்துறை அமைச்சர்
- உறுப்பினர் – அனைத்து மாநில முதலமைச்சர்
வகுப்புவாத கலவர பிரச்சனைகளை சமாளிப்பதில் காவல் துறையின் பங்கு:
- வகுப்புவாத கலவரங்களுக்கு காரணமானவர்களை கைது செய்தல்
- கலவரக்காரர்களை கலைந்து போகச் செய்தல்
- பொதுச்சொத்துக்கள் சேதம் அடையாமல் பாதுகாத்தல்
- புரளிகள் பரவமால் தடுத்தல்
- பொது ஆணையை நிலைநாட்டுதல்
இடர்பாடுகள்:
- அதிகார வர்க்கத்தினர், அரசியல் வாதிகள், நீதித்துறை, மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே காவல்துறை சிறப்பாக செயல்பட முடியும்.
- அரசியல் வாதிகள் சுயநலத்துடன் இருப்பதும்
- அதிகார வர்க்கத்தினர் சடங்குகளை பின்பற்றுபவர்களாக இருப்பதும்
- நீதித்துறை அதிகாரிகள் மரபுவழி பழக்க வழக்கங்களை பின்பற்றுவதும்
- மக்கள் காவல்துறையினரின் மீது நம்பிக்கையின்றி இருப்பதும்.
- காவல்துறையினர் பல்வேறு வற்புறுத்துதலுக்கு உள்ளாவதும் முக்கிய இடங்களாகும்.
நடவடிக்கைகள்:
- வகுப்புக் கலவரங்கள் அடிக்கடி நடைபெறும் மாநிலம் (ம) மாவட்டங்களை காவல்துறையினர் கண்காணித்தல்.
- வகுப்புக் கலவரம் தோன்றுவதற்கான அறிகுறிகள் தெரிந்த உடனேயே, சமாளிப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றுதல்
- பிரிவினை வாதத்தை தூண்டுவோரை கண்காணித்தல்
- பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள், மக்கள் கூடும் இடங்கள், மறைவிடங்களை கண்காணித்தல்
- புரளிகள் பரவாமல் தடுத்தல்
- புரளிகள் பிற மாநிலம் (ம) மாவட்டங்களில் பரவாமல் தடுத்தல் (ம) கண்காணித்தல்
தீவிரவாதம்
தீவிரவாதம்:
தீவிரவாதம் என்பது தனிமனிதனாலோ (அ) ஒரு சட்டத்தினராலோ, ஒரு தனி மனிதனுக்கோ (அ) ஒரு கூட்டத்தினருக்கோ ஏற்படும் பிரச்சனைகள் மூலம் பொது மக்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதாகும்.
தன்மைகள்:
- அரசு (அ) சமுதாயத்திற்கு எதிரானது
- அரசியல் காரணங்களை கொண்டது
- சட்ட விரோதமானது
- மக்களின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி அவர்களை தங்களுக்கு அடிபணியச் செய்வதை நோக்கமாக கொண்டது.
- மக்களின் இயலாமை உணர்வுடன் இணைந்திருக்கின்றது.
- நியாயமான சிந்தனையை தடை செய்கின்றது.
- சண்டை (ம) போராட்டத்திற்கு வழிவகுக்கின்றது.
- தாக்கப்பட வேண்டிய நபர்களின் தேர்வு பாரபட்சமற்ற முறையில் நடைபெறுகின்றது.
நோக்கங்கள்:
- தங்களின் தீயநோக்கங்களுக்காக அரசை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல்
- வன்முறையில் ஈடுபட்டு தங்களின் கோரிக்கைகளை அடைதல்
- தீவிரவாத தேவைகளை நிறைவேற்ற அரசை நிர்பந்தித்தல்
- உள்நாட்டு நிலைத்தன்மை (ம) பொருளாதார வளர்;ச்சியைத் தடுத்தல்
- தீவிரவாதத்திற்கு இளைஞர்களை ஊக்குவிப்பதன் மூலம், தீவிரவாதத்தை வளர்த்தல்
- மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி, அரசின் பாதுகாப்புப் படைமீது நம்பிக்கை இழக்கச் செய்தல்
- எைை. தீவிரவாத குழுக்கள், பின்பற்றுபவர்கள் அவர்களிடையே நம்பிக்கையுணர்வு வளர்த்தல் போன்ற செயல்களில் ஈடுபடுதல்.
தொலைததொடர்பு புரட்சி (ம) நவீன நகர்ப்புற நாகரிகம் மூலம் தீவிரவாதிகள் பெரிய அளவிலான அரசியல் தளத்தில் சுதந்திரமாக செயல்பட முயற்சித்தனர்.
தீவிரவாதம் தோன்றக் காரணங்கள்:
- தீவிரவாதம் ஒரு நாளில் தோன்றுவதில்லை, அது தொடர்ச்சியான பல்வேறு அழுத்தங்களால் தோன்றுகிறது.
- பொறுப்பற்ற, திறனற்ற அரசு நிர்வாக அமைப்பு
- ஊழல் மலிந்த அரசுத் துறைகள்
- பாதுகாப்புப் படையின் திறமையின்மை
- பழமையான தீவிரவாத எண்ணங்கள்
- உலகளாவிய தகவல் தொடர்பு முறையின் மூலம் தீவிரவாத தகவல்கள் எளிதில் பரிமாற்றம்
- சமுதாய ஒடுக்கு நடைமுறை
- வேலைவாய்ப்பில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரின் ஆதங்கம்
- வறுமை, பசி. வறட்சி போன்றவைகளில் அரசின் மற்ற செயல்பாடு
- எளிதில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் கிடைத்தல்
- அந்நிய நாடுகளிலிருந்து தீவிரவாதக் குழுக்களுக்கு பணப்பரிமாற்றம். ஊக்குவிப்புச் செயல்பாடுகள்
- திறமையற்ற உளவுத்துறை
- நீதித்துறையில் உள்ள குறைபாடுகள்
- ஏற்றத் தாழ்வுகள்
- சாதி, மத, இனம் மீது கொண்டுள்ள அதீதபற்று.
- இளைஞர்களிடையே காணப்படும் அறியாமை, கல்வியறிவின்மை
- கடத்தல் மூலம் பெறும் வருமானத்தை தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்தல்
- பழமையான சட்டங்கள்
- சர்வாதிகளுக்கு எதிரான குடிமக்களின் கிளர்ச்சி
- பயங்கரவாதத்திற்கு கிடைக்கும் பரவலான விளம்பரங்கள்
- மதத்தின் அடிப்படையில் பங்கரவாதிகளுடன் இணைந்த நிலை
தீவிரவாதத்தால் ஏற்படும் விளைவுகள்:
- அரசின் நிர்வாக செயல்பாடுகள் (ம) பாதுகாப்புப்படை மீது நம்பிக்கை இழத்தல்
- நிலைத்தன்மை இன்மை, பொது அமைதி சீர்குலைவு.
- பொதுச் சொத்துக்கள் பாதிப்படைதல்
- மனித உயிரிழப்பு
- பொருளாதார ஸ்திரத் தன்மை இழத்தல்
- சமூக வளர்ச்சியின்மை
- சுற்றுலா, தொழில், விவசாய வளர்ச்சிகள் பாதித்தல்
- பொதுமக்களின் இடம் பெயர்தல் அதிகரித்தல்
- அச்சத்தால் தொழில் துவங்கி நடத்துவது குறைதல்
- அரசியல் அமைதி இன்மை
தீவிரவாத்திற்கு எதிரான நடவடிக்கைகள்:
- தீவிரவாதம் பல்வேறு அமைப்புகள் சார்ந்த, பல்வேறு நடவடிக்கைகளுடன் தொடர்புடையது.
- எனவே இது சார்ந்த ஒழிப்பு நடவடிக்கைகள் அனைத்தும், அனைவரது நலன் சார்ந்த ஒரு செயலாக அமைதல் வேண்டும்.
- குறுகிய கால நடவடிக்கைகள்
- தண்டனைகள், கடுமையான நடவடிக்கைகள் மூலம் தீவிரவாதிகளை மனமாற்றம் அடையச் செய்தல்
- உளவுப் படையில் புதிய தொழில் நுட்பங்களையும், தகவல் தொடர்பு சாதனங்களையும் பயன்படுத்துதல்
- சட்டங்களில் காணப்படும் குறைகளை நீக்கி, தீவிரவாதத்தை ஒடுக்க புதிய சட்டநெறிமுறைகளை உருவாக்குதல்.
- தீவிரவாதம் குறித்த தகவல் அளிப்போருக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துதல்
- தீவிரவாதத்திற்கு எதிரான சிறப்புப் படைப்பிரிவினரை உருவாக்கி, முறையான பயிற்சி அளித்தல்
- கிராம பாதுகாப்பு குழுக்களை உருவாக்கி, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
- நீண்டகால நடவடிக்கைகள்
- சந்;தேகத்திற்குரிய இளைஞர் குழுக்கள், அமைப்புகளை முறையாக கண்காணித்தல், ஆராய்தல்.
- நாட்டுப்பற்றை வளர்க்க கூடிய செயல்பாடுகளில் அரசு ஈடுபடுதல்.
- தவறாக வழிநடத்தப்படும் இளைஞர்களுக்கு முறையான வேலைவாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருதல்.
- அரசின் மேன்களை விளக்கி, தீவிரவாத எண்ணங்களை ஒழித்தல்
- இளம்தொழில் முனைவோரை ஊக்குவித்து தொழில் பெருக்க நடவடிக்கைகளை கையாளுதல்.
- ஏற்றத்தாழ்வுகளை களைத்து வறட்சி, வறுமை நிலையை ஒழித்தல்
- போதிய கல்வியறிவு வழங்குவதன் மூலம் அறியாமையை அகற்றுதல்
- பொருளாதார வளர்ச்சியை பெருக்குவதன் மூலம். அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்
ஐ.நா. சபையின் நடவடிக்கைகள்
- 1997 – தீவிரவாத அணுகுண்டு தாக்குதல்களை ஒடுக்குதல்
- 1999 – தீவிரவாத மேம்பாட்டிற்கான நிதியுதவிகளை தடுத்தல்
- 2005 – ஐ.நா.வின் பொது அவையில், நியூயார்க் அணு ஆயத தீவிரவாதத்தை ஒடுக்குதல் தீர்மானம் நிறைவேற்றம்.
- 14வது சர்வதேச தீவிரவாத தடுப்பு நடவடிக்கைக்கான மாநாட்டில், உலகளாவிய எதிர்தீவிரவாத போர்த்திறம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவில் தீவிரவாத இயக்கங்கள்:
- பஞ்சாப் – காலிஸ்தான் தீவிரவாதம்
- தனிநாடு கோரிக்கை அடிப்படையிலான சீக்கிய தீவிரவாதம்
- 1984 – 85 ல் தீவிரவாதம் அதிகமாகி, படுகொலைகள் நிகழ்;ந்தன.
- வழிபாட்டுத்தலங்கள் ஆயுதக்கிடங்குகளாக மாற்றப்பட்டன.
- 1985ல் அகாலிதள தலைவர் சட்டங்களை வெளியிடுவதன் மூலம் அரசின் அதிகாரத்தை குறைத்தல்
- தங்களது சொந்த சட்டங்களை வெளியிடுவதன் மூலம் அரசின் அதிகாரத்தை குறைத்தல்
- தங்களை சீக்கியர்களின் பாதுகாவலர்களாக சித்தரித்தல்
- பஞ்சாபில் உள்ள இந்துக்களை பிறமாநிலங்களுக்கு இடம்பெயர வற்புறுத்தல்
- கொலை, கொள்ளை, அச்சம் உருவாக்குதல்
- தற்போது பெருமளவு கட்டுப்படுத்தப்படுகிறது.
- காக்ஷ்மீர் – பிரிவினைவாத தீவிரவாதம்
- காக்ஷ்மீரில் பிரிவினை, வேற்றுமை, வளர்ச்சியின்மை, மதச்சார்ந்த (ம) பாகிஸ்தான் தீவிரவாத செயல்பாடுகள் நடைபெறுகின்றன.
- காக்ஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது.
- காக்ஷ்மீரில் உள்நாட்டு பதற்றத்தை உண்டாக்குதல்
- ஜிகாத் வழி போராட்டத்தை உண்டாக்குதல்
- இராணுவம் (ம) அரசியல், பொருளாதார நடவடிக்கைகளை அரசு கையாள்கிறது.
- இந்திய – பாகிஸ்தான் போர்
- நக்சலைட்டுகள்
- 1967 – மேற்கு வங்காளத்தைச் சார்ந்த காணுசன்யால், சாரு மஜீம்தார் ஆகியோரால் நில உரிமையாளர்களை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்டது.
- மாவோயிஸ்ட் பொதுவுடைமை சேர்ந்தவர்களால் பலவாறு மாறியது.
- சாரு மஜீமதாரர் – நிர்மூலமாக்கும் திட்டம் மூலம் இந்தியாவில் பரவியது.
- நக்சல்களின் பரவல் – சத்தீஸ்கர், ஒரிசா, ஜார்கண்ட், W.B.V.P. மகாராக்ஷ்டிரா.
நோக்கங்கள்:
- அரசை கைப்பற்றுதல்
- நக்சல்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அதன் ஆக்கிரமிப்புகளை பெருக்குதல்
- கொரில்லா குழுக்கள் மூலம் சுதந்திரமான அமைப்பை ஏற்படுத்துதல்
- நில உரிமையாளர்களிடமிருந்து நிலங்களை அபகரித்து நிலமில்லாதோருக்கு வழங்குதல்.
- காவல்துறை, பொதுமக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி தங்களது வலிமையை அதிகரித்தல்
காரணங்கள்:
- நில உடைமையாளர்களால் உள்ளூர் வரிகள் நசுக்கப்பட்டமை
- அரசின் திட்டங்கள் முறையாக மக்களை சென்று அடையாதது
- ஏற்றத்தாழ்வு சமுதாயம்
- அதிகார (ம) செல்வக் குறைவு
- வறுமை, வேலைவாய்ப்பு குறைவு
- நில பகிர்வு முறைகளில் முறைகேடு
- பொறுப்பற்ற அரசு நடவடிக்கைகள்
- சிறுகுழுக்களின் தோற்றம்
- மோசமான குடியுரிமை அமைப்பு
- பற்றாக்குறையான காவல்துறைப்படை
- ஊழல் மலிந்த அரசு நிர்வாகம்
- உல்ஃபா தீவிரவாதம் – அசாம்
- 1980 முதல் அசாமில் தீவிரவாதம் உருவாகியுள்ளது.
- அன்னியர்களை வெளியேற்றுமாறும், அவர்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குமாறும் அசாமியர்கள் கோரினர்.
- 1983 தேர்தல் வன்முறையில் 5000 பேர் உயிரிழப்பு
- தனிமாநில வன்முறை உருவாக்கம்
- கொலை, கொள்ளை, கடத்தல் நடவடிக்கைகள்
- 1991ல் ஆப்ரேக்ஷன் பஜரங் நடவடிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது
நடவடிக்கைகள்:
- நீல நட்சத்திர நடவடிக்கை – 1984 பஞ்சாப்
- ஆப்ரேக்ஷன் பிளாக்தண்டர் – அசாம் 1986
- ஆப்ரேக்ஷன் பஜ்ரங் – அசாம் 1991
- தேசிய பாதுகாப்புச் சட்டம் – 1980 (NSA)
- இச்சட்டம் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டது.
- நோக்கம் – பாதுகாப்பு அளித்தல் (ம) சிலவழக்குகள் தொடர்புடைய வன்முறைகளிலிருந்து பாதுகாத்தல்
- மத்திய / மாநில அரசு சந்தேகத்திற்குரிய தனிநபரை கைதுசெய்து காவலில் வைக்கமுடியும்.
- வெளிநாட்டிலிருந்து பாதகமான ஆயத தடுப்பு (ம) சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரம்
- தீவிரவாத (ம) பலவந்த செயல்கள் தடுப்புச்சட்டம் – 1985 (TADA)
நோக்கம்
- தீவிரவாதம் (ம) தீவிரவாதிகளை கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்டது.
- 1995 ல் நீக்கப்பட்டது
சிறப்புகள்
- சிறப்பு நீதி மன்றம் அமைப்பு
- பிணையில் வெளிவரதடை
- ஒரு வருடம் வரை புலனாய்வு மேற்கொள்ள அனுமதி
- அனைத்து விசாரணைக்கும் ஒளிப்படுத்துதல்
- காவல்துறை சாட்சியங்களை ஏற்றுக்கொள்ளுதல்
- சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருக்க தடை
- தனிநபர்கள் விசாரணையின்றி காவலில் வைப்பது
- குற்றம் சாட்டப்படும் தனிநபர்களின் உரிமைகளை தடை செய்தல்
குறைபாடுகள்
- சிறுபான்மையினருக்கு எதிராக பயன்படுத்துதல்
- பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்துதல்
- சிறு குற்றங்களுக்கு கூட கடுமையான தண்டனைகள்
- சில வகையான ஆயுதங்களுக்கு கூட 5 வருட தண்டனை
- ஒரு திறனற்ற சட்டம், யாருக்கும் தண்டனைகள் இதன் மூலம் பெறப்படவில்லை.
பயங்கரவாத தடுப்புச்சட்டம் – 2001 (PGA)
- இது 2004 ல் நீக்கப்பட்டது.
- தீவிரவாத்திற்கு எதிரான தீர்மானம் – 1973
- ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் இத்தீர்மானத்தில் இந்தியா கையெழுத்திட்டது.
அமைப்புகள்
- அயல்நாட்டு பரிவர்த்தனை பாதுகாப்பு (ம) கள்ளக் கடத்தல் தடுப்பு – 1974
- போதைப்பொருள் (ம) சட்டத்திற்கு புறம்பான பொருள்கள் தடுப்பு – 1988
- தேசிய விசாரணை அமைப்பு – 2008 (NIA)
- இது தீவிரவாதம் தொடர்பான வழங்குகளை ஆராய ஏற்படுத்தப்பட்டது. காரணம் : மும்பை தாக்குதல்
- பிற புலனாய்வ அமைப்புகளின் தோல்வி
- தலைமையிடம் – புதுடெல்லி (மாநிலங்கள்)
செயல்பாடுகள்:
- NIA ஆனது ஐ.நா. அமைப்பு, புலனாய்வு குழுக்கள், சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுகிறது.
- இது சுதந்திரமான, தீவிரவாதத்திற்கு எதிரான அமைப்பு
- மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே வழங்குகளை விசாரிக்கும் அதிகாரம்
- NIA அதிகாரிகளுக்கு வழங்குகளை விசாரணை மேற்கொள்ள அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளது.
தீவிரவாதத்தை எதிர்கொள்ளும் முறைகள்:
- இஸ்ரேல் முறை
- தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தைக்கு இடம் இல்லை.
- தீவிரவாதிகளின் மீது திடீர் தாக்குதல்
- மிக கடுமையான பாதுகாப்பு அணுகுமுறை
- பாலஸ்தீன தீவிரவாதிகள் மீது கடுமையான தாக்குதலை கையாளுதல்
- இம்முறை எதிர் – திவிரவாதமுறை எனப்படுகிறது.
- அமெரிக்கா முறை
- உலக பொருளாதாரத்தில் முக்கிய இடம்பெறும் ஏளுயு தீவிரவாதத்தினால் அதிகம் பாதிக்கப்படுகிறது.
- தீவிரவாதத்திற்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை கொண்டுள்ளது.
- தீவிரமாக ஆதரவு நாடுகளுக்கு எதிராக வர்த்தக தடை, ஏற்றுமதி தடை.
- தீவிரவாத நாடுகளின் மீது அணுகுண்டு தாக்குதல்
- இம்முறையில் தீவிரவாதத்தை அடியோடு அழிக்கும் போக்கை கடைபிடிக்கிறது.
- தீவிரவாத நாடுகளின் மீது போர் தொடுத்தல்
- இந்திய அணுகுமுறை
- 1960 க்கு பிறகு தீவரவாதத்தால் இந்தியா பெரிதும் பாதிக்கப்பட்டுள்து.
- JK மாநிலத்தில் பிரிவினை வகுப்பவாத கலவரங்கள் மேலோங்கி உள்ளன.
- 1984 பஞ்சாப்பில் நீலநட்சத்திர நடவடிக்கை, 1986 அசாமில் பிளாக்தண்டர் நடவடிக்கை போன்ற தீவிரவாத எதிர் நடவடிக்கைகள் தோல்வியில் முடிவடைந்தன.
- எதிர்தீவிரவாத நடவடிக்கை காவல்துறை (ம) ராணுவத்தால் மேற்கொள்ளப்படுகிறது.
- முறைகள்: சோதனைக் சாவடி அமைத்தல்
- முக்கிய இடங்கள் (ம) நபர்களுக்கு பலத்த பாதுகாப்பு
- சாத்வீகமாக நடவடிக்கைகளுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறது.
- தீவிரவாதிகளின் கோாரிக்கைகளுக்கு சில சந்தர்ப்பங்களில் அரசு அடிபணிந்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஏற்படும் கிளர்ச்சி / கலவரம்:
வடகிழக்கு மாநிலங்களில் கலவரம்:
இந்திய அரசாங்கத்திற்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாக உள்ளூர்வாசிகள் (அ) குழுக்கள் ஏற்படுத்தும் அபாயகரமான நிகழ்வே கலவரம் எனப்படுகிறது.
அசாம்:
- 1980 களில் ஆரம்பமானது
- அசாமில் உள்ள வெளிநாட்டவர்களது பெயரை அம்மாநிலத்தில் உள்ள தேர்தல் வரைவிலிருந்து நீக்குதல்
- அவர்களை மாநிலத்தை விட்டு வெளியேற்றுதல்
- உல்பா அமைப்பு உருவாக்கம்
- அனைத்து போடோ மாணவர் சங்கம் தனிமாநில கோரிக்கையை உருவாக்கியது.
- 1994 ல் ஆரம்பிக்கப்பட்ட போடோலேண்ட் பிரச்சனை இன்றும் தீர்க்கப்படவில்லை.
மீசோரம்:
- 1966 களிலிருந்து கிளர்ச்சி துவக்கம்
- மிசோரம் (ம) மிசோரமில்லாத பழங்குடியினருக்கு இடையிலான தகராறுகள் ஏற்பட்டுள்ளது.
மணிப்பூர்:
- 1976 ல் துவக்கம்
- 1978ல் மக்கள் விடுதலைப்படை உருவாக்கம்
- மைத்ரி (ம) குகி மலைவாழ் மக்கள் புரட்சி
நாகலாந்து:
- 1951 ல் கிளர்ச்சி
- பிரச்சனை – அடையாள சின்னம்
- அசாம் மலைப்பகுதியில் பெருநாகலாந்து அமைத்தல்
- தேசிய விடுதலை மையம் இதில் தீவிரவாதம் காட்டுகிறது.
திரிபுரா:
- திரிபுராவிலிருந்து வங்காளத்திற்கு இடம்பெயர்தலை தடுத்தல்
- திரிபுரா தேசிய இயக்கம் திரிபுரா புலிகள் படை இதில் பங்கேற்கிறது.
மேகாலயா:
மலைவாழ் (ம) மலைவாழ் அல்லாத மக்களிடையே பிரச்சனைகள் இடம் பெறுகின்றன.
அருணாச்சலப்பிரதேசம்:
அவ்வப்போது சீனாவின் தாக்குதல் (அ) அத்துமீறலால் இப்பகுதி எல்லைகள் பாதிக்கப்படுகிறது.
தீவிரவாதத்தின் சமூகவியல்:
- பெரும்பாலும் தீவிரவாதம் மக்களையும், சமூகங்களையும் பிளவுபடுத்தும் ஒரு கருவியாக செயல்படுகிறது.
- இருப்பினும் சில நேரங்களில் ஒரு பொதுவான நோக்கத்திற்காக மக்களை ஒன்றிணைக்கும் ஒரு ஒருங்கிணைப்பு கருவியாக செயல்படுகிறது.
- தீவிரவாதம் என்பது ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஆனால் அது சமூக முறைகளை பாதிப்பது இல்லை.
- அது சமூக மாற்றத்தினை துரிதப்படுத்துவதற்கான ஒரு கருவியும் அல்ல.
- இன்றுவரை எந்தவொரு தீவிரவாத இயக்கமும் அதன் இலட்சியங்களை அடைவதில் வெற்றி பெறவில்லை.
- எனவே வரலாற்று நிகழ்வுகள் தீவிரவாதிகளால் வடிவமைக்கப்படுவதில்லை.
பாதிப்பும் நடவடிக்கையும்:
- ஒரு ஆண்டில் பீகாரில் தீவிரவாதத்தால் கொல்லப்படும் (அ) கடத்தப்படும் நபர்களின் எண்ணிக்கையானது பஞ்சாப் (அ) காக்ஷ்மீரில் கொல்லப்படும் (ம) கடத்தப்படும் நபர்களின் எண்ணிக்கையைவிட அதிகம்.
- தீவிரவாத செயல்பாட்டால் அரசியல் (ம) சமூக அமைப்புகளின் இயல்பான நிர்வாக நடவடிக்கைகளில் தற்காலிகமாக சிறிய தடை ஏற்படும்.
- தீவிரவாத கொலைகளால் சமுதாயத்தின் அரசியல் நடைமுறையினை பெரிய அளவில் பாதித்து விட இயலாது.
- தீவிரவாதத்தால் கொல்லப்படும் நபர்களின் எண்ணிக்கையைவிட, அவர்களின் முக்கியத்துவமே பாதிப்பிற்கு காரணமாகும்.
- (எ.கா) ராஜீவ்காந்தி படுகொலை
- எனவே தீவிரவாத செயல்பாடுகளை முழுவதும் வெற்றிகரமானவை (அ) தோல்விகரமானவை எனக் கூற இயலாது.
- தீவிரவாதிகளால் அரசின் அதிகாரத்தை பலவீனப்படுத்த முடியுமே தவிர, சமூக அமைப்பினை அழித்துவிட இயலாது.
- தீவிரவாதத்தால் சமூகத்தினை முழுவதும் பிளவுபடுத்த இயலாது.
இந்தியாவில் தேவையான நடவடிக்கைகள்:
- இளைஞர்கள் ஏமாற்றம் (ம) தோல்விகளால் தவறான வழியில் செல்வதை தடுக்க வேண்டும்.
- அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
- தீவிரவாதிகள் ஒழிக்கப்பட்டு ஜனநாயகம் செயல்படுவதற்கு தேவையான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்.
இந்தியாவில் நடைபெற்ற தீவிரவாததாக்குதல்:
- மும்பை குண்டு வெடிப்பு – 1993
- கோவை குண்டு வெடிப்பு – 1998
- பாராளுமன்றத் தாக்குதல் – 2001
- மும்பை இரயில நிலைய தாக்குதல் – 2008
- அகமதாபாத் அக்க்ஷர்தாம் கோயில் தாக்குதல் – 2002
- டெல்லி தொடர் குண்டு வெடிப்பு – 2005
- ஜெய்ப்பூர் வெடிகுண்டு தாக்குதல் – 2008
- அசாம் குண்டு வெடிப்பு – 2008
- காக்ஷ்மீர் சட்டப் பேரவை தாக்குதல் – 2001