9.பெண்களுக்கு எதிரான சமூக அநீதி

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்:

பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது, “ஒரு பெண்ணிடமிருந்து அவர் தன் சுயவிருப்பமாகத் தர விருப்பமில்லாத ஒன்றினை அவருக்கு உடல் (அ) உள்ள ரீதியாக துன்பங்கள் கொடுத்து அடைவது” ஆகும்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழான குற்றங்கள்:

  1. கற்பழிப்பு
  2. கடத்தல்
  3. வரதட்சணைக் கொலை
  4. துன்புறுத்தல்
  5. பெண்களுக்கு தொல்லை கொடுத்தல்
  6. பெண்களை கேலி செய்தல்
  7. 21 வயது வரையிலான பெண்களை இறக்குமதி செய்தல்

சிறப்பு சட்டங்களின் கீழான குற்றங்கள்:

  1. உடன்கட்டை ஏறும் முறையினை நிறைவேற்றுதல்
  2. வரதட்சணை
  3. சட்ட விரோதமாக பெண்களை கடத்துதல்
  4. பெண்களை அநாகரிகமாக சித்தரித்தல்
  5. குழந்தை திருமணங்கள்
  6. பல திருமணம் செய்தல்

வன்முறைகளின் வகைப்பாடு:

  1. குற்றவியல் சார்ந்தவை

கடத்துதல், கற்பழித்தல், கொலை புரிதல்

  1. குடும்ப வன்முறைகள்

வரதட்சணைச்சாவு, மனைவியை அடித்தல், பாலியல் துன்புறுத்தல், விதவை (ம) வயதான பெண்களையும் கொடுமைப்படுத்துதல்

  1. சமூகக் கொடுமைகள்

மனைவியையும் மருமகளையும் பெண் சிசுவை கருகலைக்கச் செய்தல் பெண்களை சீண்டுதல், பெண்களுக்கு சொத்தில் பாகம் தர மறுத்தல், மேலும் சீதனம் கொண்டு வரச்சொல்லி மருமகளைக் கொடுமைப்படுத்துதல்

வன்முறைகளின் தன்மை:

கற்பழிப்பு:

பாதிக்கப்படுவோர்:

  1. கற்பழிப்பு சம்பவங்களால் (6 – 30 வயதுக்குள்ளான பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
  2. இதில் பாதிக்கப்படுவோர் ஏழைப்பெண்கள் மட்டுமல்ல.
  3. அலுவலகங்களில் வேலைசெய்யும் நடுத்தர பிரிவு பெண்களும்
  4. உடல் ஊனமுற்றோர்கள் பாதிப்பு

ஆய்வு உண்மைகள்:

  1. இச்சம்பவங்களில் இக்கொடுமைக்கு ஆளானவரும் குற்றவாளியும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் (50% சம்பவங்கள்)
  2. 1/10 பங்கு சம்பவங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளாலேயே ஏற்படுகின்றன.
  3. பெரும்பாலும் ஆசைவார்த்தை (அ) மிரட்டி நிறைவேறுகிறது.
  4. ¾ பங்கு சம்பவங்கள் குற்றம் இழைப்பவரின் வீடுகளில் நடைபெறுகிறது.

ஆள் கடத்தல்:

  1. ஆள்கடத்தல் என்பது உரிய வயது வராத ஒருவரை அவரது சட்டபூர்வமான பாதுகாவலரின் சம்மதமின்றி கடத்திச் செல்லுதல் ஆகும்.
  2. ஆசைவார்த்தைகள் கூறியோ, ஏமாற்றியோ, வன்முறையின் துணை கொண்டோ ஒரு பெண்ணை வன்புணர்ச்சிக்கு இட்டுச் செல்வது
  3. அல்லது அவருக்கு விருப்பமில்லாத திருமணத்திற்கு கட்டாயப்படுத்துதல்

ஆய்வு உண்மைகள்:

  1. திருமணமாகாத பெண்களே அதிகம் பாதிப்பு
  2. பெரும்பாலும் கடத்தியவர், கடத்தலுக்கு ஆளானவர் இருவரும் ஒருவரையொருவர் முன்பே அறிந்தவர்கள்
  3. ஆரம்ப அறிமுகம் இருவரில் யாரேனும் ஒருவர் வீட்டில் நிகழ்ந்துள்ளது.
  4. ஆள்கடத்தலுக்கான முக்கிய காரணம் – பாலுறவு (அ) திருமணம்
  5. 1/10 பங்கு சம்பவத்திற்கு காரணம் – பொருளாதார நோக்கம்
  6. 80% சம்பவங்களில் பாலியல் ரீதியான தாக்குதல் நிகழ்கிறது.
  7. பிரகாரணங்கள் – போதுமான கட்டுப்பாடின்றி வளரும் பிள்ளைகள் குடும்பத்தில் கணவன், மனைவி உறவில் தடை.

கொலை:

ஆய்வு உண்மைகள் – பெண் கொலைகள்

  1. பெரும்பான்மையான சம்பவங்களில் கொலைசெய்தவர்களும், இறந்தவர்களும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள்.
  2. கொலை புரிந்தவரில் 80மூ பேர் இளம் வயதினர் (25 – 40) வயது
  3. கொலையால் இறந்துபோன பெண்களில் 50% பேருக்காவது குழந்தைகள் இருந்தனர்.
  4. 2/3 பங்கு சம்பவங்கள் முன்கூட்டியே திட்டமிடப்படாமல் திடீரென உணர்ச்சி பெருக்கால ஏற்பட்டவை.
  5. கொலையாளிகள் பலரும் சமுதாயத்தின் கீழ்தட்டு மக்களாயும், குறைந்த வருமானமுள்ளவராகவும் இருந்தனர்.
  6. 80% கொலைகள் பிறர் துணையின்றியே செய்யப்பட்டவை.
  7. கொல் நிகழ காரணங்கள் – குடும்பத்தில் ஏற்படும் சிறிய சச்சரவுகள், தகாத உறவுகள் போன்றவை.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த தகவல்களை பெறும் முறைகள்:

  1. மத்திய அரசின் உள்துறை அமைச்சகம்
  2. போலீஸ் புலனாய்வு அமைப்பு
  3. சமூகப் பாதுகாப்புக்கான தேசியக்கழகம்

புகார் பிரிவுகள்:

  1. சித்திரவதை செய்தல்
  2. அவமானப் படுத்துதல்
  3. பெண்களைச் சீண்டுதல்
  4. கடத்திச் செல்லுதல்
  5. கற்பழித்தல்
  6. வரதட்சணைச் சாவுகள்

 

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றி புகார்கள் அதிகரித்துள்ளதற்கான காரணங்கள்:

  1. பெண்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு
  2. புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்கள் மீதான நம்பிக்கை
  3. மகளிர் நீதிமன்றங்கள்
  4. குடும்ப நீதிமன்றங்கள்
  5. பெண்களுக்கு எதிராகப் பணியாற்றும் அரசு சாரா நிறுவனங்கள்

வரதட்சனைச் சாவுகள்:

வரதட்சனை:

  1. வரதட்சனை ஒரு சமூக பிரச்சனையாகும்.
  2. வரதட்சனை என்பது “ஒரு மணமகள் தன் திருமணத்தின் போது மணமகன் வீட்டிற்கு அவளின் பெற்றோர் (ம) பாதுகாவலின் கட்டாயத்தின் பேரில் தன் தந்தையின் வீட்டிலிருந்து கொண்டு வரும் அசையும் (ம) அசையா சொத்துக்களாகும்.
  3. முன்காலத்தில் சம்பிரதாயமாக இருந்தது
  4. இது கட்டாயமாக்கப்பட்டபின் பல சமூகக் கொடுமைகள் ஏற்பட்டன.

வரதட்சனையால் ஏற்பட்ட சமூகக்கொடுமைகள்:

  1. பெண் சிசுக்கொலை
  2. தற்கொலை
  3. தீக்குளிப்பு
  4. இளம் வயது திருமணம்
  5. முதிர்கன்னிகள்
  6. பெண்கள் கல்விகற்காமை
  7. விவாகரத்து
  8. முறையற்ற உறவு
  9. மன உளைச்சல்
  10. உடல் சார்ந்த கொடுமைகள்
  11. அடிமைத்தனமாக நடத்தப்படுதல்
  12. குடும்ப வன்முறை

வரதட்சனைக்கான காரணங்கள்:

  1. ஆணாதிக்க சமூகம்
  2. மகள்கள் சுமையாகவும், மகன்கள் சொத்தாகவும் கருதும் நிலை
  3. பெண்களின் பொருளாதார இயலாமை
  4. வரதட்சணை பெறுவதை கௌரவமாக கருதுபவர்
  5. பழமைவாத சமூக – பண்பாடு
  6. தற்காலத்தில் பெண்களின் பெற்றோர் மாப்பிள்ளையை தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
  7. சுலபமான செல்வத்திற்கான பேராசை

அரசின் நடவடிக்கைகள்:

  1. வரதட்சனை தடைச்சட்டம் – 1961
  2. குடும்ப வன்முறை தடைச்சட்டம் – 2005
  3. இந்திய தண்டணைச்சட்டம் 304 B பிரிவு திருமணம் ஆகி 7 வருடங்களுக்குள் ஒரு பெண் இறப்பின் கணவன் (ம) அவரது உறவினர் தண்டனைக்கு உள்ளாவர்.
  4. இந்திய தண்டனைச் சட்டம்; 498A
  5. உச்சநீதிமன்ற தீர்ப்பு 2009 – வரதட்சனையை தடை செய்கிறது.

ஆய்வு முடிவுகள்:

  1. பெரும்பாலான வரதட்சனைக் கொடுமைகள் கணவர் வீட்டிலேயே நடைபெறுகின்றன.
  2. நடுத்தர குடும்பப் பெண்களே அதிகளவு பாதிப்பு
  3. 70% பாதிக்கப்பட்ட பெண்கள் 21 – 24 வயது உடையோர்
  4. பெண்னின் கல்வியறிவின் அளவிற்கும் வரதட்சனை சாவுக்கும் தொடர்புகள் ஏதுமில்லை.
  5. குடும்பத்தின் சூழ்நிலை இதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

மனைவியைத் துன்புறுத்ததல் ஆய்வு உண்மைகள்:

  1. 25 வயதிற்குட்பட்ட பெண்களே அதிகம் துன்புறுகிறார்கள்.
  2. குறைந்த வருமானம் உள்ள குடும்ப பெண்கள் அதிகம் பாதிப்பு
  3. கற்காத பெண்களே அதிகம் பாதிப்பு
  4. காரணங்கள் – பாலுறவுக்குறைகள், மன எழுச்சிக் கோளாறுகள், கணவனின் தாழ்வு மனப்பான்மை, குடிப்பழக்கம், பெறாமை
  5. கணவன் சிறுவயதில் வன்முறைக்கு உள்ளாகி இருப்பதும் முக்கியகாரணமாகும்.
  6. நிதானமான நிலையில் இருக்கும் போதும், மனைவிகளை அடிக்கின்றனர்.

அமிலதாக்குதல்:

குடும்ப வன்முறைகள் – தடுப்பு முறைகள்:

  1. பெண்கள் ஆணையத்தை அதிகாரப்படுத்துதல்
  2. விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
  3. குடும்ப வன்முறை தடைச்சட்டம் – 2005
  4. குடும்பநல நீதி மன்றங்கள்
  5. பயிற்சி அளித்தல்
  6. பெண்களுக்கு அதிகாரமளித்தல்
  7. சிறப்பு நீதிமன்றங்களை நிறுவுதல்
  8. CCTV கேமராக்களை பொருத்துதல்
  9. காவல் நிலையங்களில் பெண் காவலர் எண்ணிக்கையை அதிகரித்தல்
  10. இந்திய குற்ற தண்டனைச் சட்டம் 304, 498

ஆவணப் படுகொலைகள்:

ஒரு இளம் தம்பதியினர் திருமணம் செய்ய விரும்பும் (அ) விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் வன்முறை (ம) துன்புறுத்தல் சம்பவங்கள்

தடுப்பு முறைகள்:

  1. கௌரவக் கொலை என்பதை ‘”தனிப்பட்ட விருப்பங்களுக்கு எதிரான ஆணாதிக்க குற்றங்கள்” என மாற்றவும்.
  2. கௌரவக் குற்றங்களுக்கு எதிராக இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட சட்டம் இல்லை.
  3. வலுவான ஒரு சட்டம் இயற்றுதல்
  4. சரத்து 21 ஐ கௌரவக்கொலை மீறுவதாக உள்ளது. எனவே ஐீஊ கிருமினல் சட்டத்தில் மாற்றம் தேவை
  5. மக்களின் மனநிலை மற வேண்டும்
  6. காப் பஞ்சாயத்தை தடை செய்தல்
  7. கௌரவகுற்றம் தீர்ப்பு வழங்கும் பஞ்சாயத்துக்களை அடையாளம் காண வேண்டும்.
  8. மக்களிடையே சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
  9. கலப்புத்திருமண உதவித்திட்டத்தை அமல்படுத்துதல்
  10. தாழ்த்தப்பட்ட மக்களின் சிறந்த சமூக – பொருளாதார வளர்ச்சி
  11. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை
  12. ஊடக விழிப்புணர்வு
  13. NGO ஈடுபடுத்துதல்
  14. பெண்களுக்கு சட்டப்பூர்வ அதிகாரமளித்தல்
  15. இந்திய தண்டனைச் சட்டம் (பிரிவு 299 – 304)

சக்தி வாகினி வழக்கு – நீதிமன்ற வழிகாட்டுதல்கள்:

  1. விரைவான நீதிமன்றங்கள் அமைத்தல்
  2. 6 மாதங்களுக்குள் தீர்வு
  3. காப் பஞ்சாயத்திற்கு எதிராக FIR பதிவு
  4. தம்பதிகளுக்கு பாதுகாப்பு அளித்தல்

 

விதவைகளுக்கு எதிரான வன்முறைகள்:

வன்முறைகள்:

  1. உடல் ரீதியான வன்முறைகள்
  2. உணர்வு ரீதியான புறக்கணிப்பு
  3. வார்த்தைகளால் துன்புறுத்தல்
  4. பாலியல் ரீதியான துன்புறுத்தல்
  5. சட்டப்பூர்வமாக கிடைக்க வேண்டிய சொத்துக்கள் மறுக்கப்படுதல்
  6. அவர்களது குழந்தைகள் துன்புறுத்தப்படுதல்

இயல்புகள்:

  1. விதவைகளைப் பற்றிய சமுதாயத்தின் எதிர்மறையான பார்வை அவர்களுக்கு தாழ்வு எண்ணத்தை தருகிறது.
  2. நடுத்தர வயதை சார்ந்த விதவைகளை விட, இளம் விதவைகளே மிகவும் அதிகமாக துன்புறுத்தப்படுகின்றனர் (ம) சுரண்டப்படுகின்றனர்.
  3. பொதுவாக விதவைப் பெண்களுக்கு அவர்களது கணவர்களின் வர்த்தகம், கணக்குகள், சான்றிதழ்கள், காப்பீடுகள், கடன் பத்திரங்கள் ஆகியவை பற்றி மிகச் சிறிதளவு மட்டுமே தெரியும்
  4. இதனால் கணவரது சொத்து, ஆயள் காப்பீட்டு பலன்கள் பற்றி தெரியாமல் ஏமாறுகின்றனர்.
  5. விதவைகள் மீதான வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும், அவர்களது கணவர்களின் குடும்பங்களை சேர்ந்த உறுப்பினர்களாகவே உள்ளனர்.
  6. அதிகாரம், சொத்து, பாலியல் உறவு ஆகிய மூன்றும் விதவைகளின் மீதான வன்முறைகளுக்கு மிக முக்கிய நோக்கங்களாக உள்ளன.
  7. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த விதவைகளின் மீதான வன்முறைகளுக்கு சொத்தும், கீழ்வர்க்கத்தை சேர்ந்த விதவைகள் மீதான வன்முறைகளுக்கு பாலியல் உறவும் காரணமாகின்றன.
  8. விதவைகள் தங்கள் மீதான துன்புறுத்தல்களை எதிர்க்கும் திறனின்றி இருக்கின்றனர்.
  9. விதவைகள் மீதான வன்முறைக்கும், அவர்களின் வயது, கல்வி, வர்க்கத்திற்கும் இடையே முக்கிய தொடர்புகள் காணப்படுகின்றன.

பெண்களுக்கு இன்னல் விளைவிப்போரின் வகைகள்:

  1. மனச்சோர்வு, தாழ்வு எண்ணம், தன்னைப்பற்றிய குறைவாக எண்ணுபவர்
  2. உளவியல் ரீதியாக ஆளுமைக்குறைபாடு உடையவர்கள்
  3. வசதியும் திறமையும் இல்லாத, சமூகத்துடன் ஒத்துப்போகாதவர்கள்
  4. உடைமை எண்ணம், ஆதிக்கப்போருக்கு, சந்தேக மனப்பான்மை உடையவர்
  5. குடும்பச் சூழ்நிலையால் மனச்சோர்வுக்கு ஆளானவர்
  6. தனது சிறுவயதில் வன்முறைகளுக்கு ஆளானவர்
  7. அடிக்கடி மது அருந்தும் பழக்கம் உள்ளவர்

பெண்களே தமக்கு எதிரான குற்றங்களுக்கு காரணம்:

  1. வன்முறையாளரின் வன்முறை நடத்தை தீவிரம் அடை, வன்முறையால் பாதிக்கப்படும் பெண்ணும் ஏதேனும் ஒரு வகையில் காரணமாக இருக்கின்றனர்.
  2. சில வன்முறையாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அவர்களில் மிகச்சிலர் மட்டுமே தங்களது குற்றங்களுக்காக வருத்தப்படுகின்றனர்.
  3. பெரும்பாலானோர் எவ்விதமான குற்ற உணர்ச்சியும் இன்றி இருக்கின்றனர்

கணவர் மனைவி மீது வன்முறை உபயோகிக்க கூறப்படும் காரணங்கள்:

  1. தன் கணவனைப்பற்றி மனைவி புறங்கூறுவது
  2. கணவனுக்கு வேண்டாதவர்களுடன் பேசுவது
  3. கணவனின் சகோதர – சகோதரிகள், பெற்றோர் பற்றி குறைவாகப் பேசுவது
  4. குடும்பத்தில் தேவையற்ற சச்சரவுகளை உருவாக்குவது
  5. தேவையற்ற விக்ஷயங்களில் தலையிடுவது

பிற சம்பவங்கள்:

  1. கொலையில் முடிந்த பலவழக்குகளில் பலியானவர்களே சச்சரவில் ஈடுபட்டு கொலை செய்ய தூண்டியாக கூறியுள்ளார்.
  2. பலகடத்தல் சம்பவங்களில், கடத்தலுக்கு ஆளானவர் முதலில் ஒடிப்போக ஒத்துக்கொண்டு, போலிசார் தேடிப் பிடித்ததும் வலுக்கட்டாயப்படுத்தியதாக கூறியுள்ளனர்.
  3. பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் போதையே முக்கிய காரணமாக கூற முடியவில்லை.
  4. பெண்களின் மீதான வெறுப்பு (ம) விரோத உணர்ச்சிகளை வளர்த்துக் கொண்ட நபர்களால் வன்முறை ஏற்படுத்துகிறது.
  5. பெண்களை அவமானப்படுத்தும் ஒரே நோக்கத்திற்காக வன்முறை வழிகளை கையாளுகின்றனர்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்:

  1. சதிபழக்கம்:
  2. கணவன் இறந்தவுடன், மனைவியை அவனுடைய சிதையில் தள்ளுதல்
  3. 1829-சதிச்சட்டம்
  4. 1987 – சதி (தடை) சட்டம்
  5. வரதட்சணைக் கொடுமைகள்
  6. குழந்தை திருமணம்

இந்தியச் சட்டப்படி, பெண் 18 வயதிற்கும் கீழும், ஆண் 21 வயதிற்குள்ளும் செய்து கொள்ளும் திருமணங்கள்

காரணங்கள்:

  1. படிப்பறிவற்ற பெற்றோர்
  2. வறுமை
  3. வரதட்சணை
  4. பாதுகாப்பில்லாத சமூகம்
  5. மக்கள்தொகைப் பெருக்கம்
  6. சட்டத்தில் உள்ள குறைபாடுகள்

குழந்தை திருமணங்களால் ஏற்படும் விளைவுகள்:

  1. பிரசவகால இறப்பு வீதம் அதிகரித்தல்
  2. குறை ஊட்டச்சத்து குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்தல்
  3. வறுமை அதிகரித்தல்
  4. குடும்ப வன்முறை தோன்றல்
  5. பெண்களின் மனநிலை பாதிப்பு

எதிரான சட்டங்கள்:

  1. சாரதா சட்டம் – 1929
  2. குழந்தைத் திருமண தடைச்சட்டம் – 2006
  3. குழந்தை திருமண தடுப்பு அதிகாரிகள்
  4. திருமண உதவித்திட்டம்

கடமைகள்:

  1. கடுமையான சட்டவிதிகளை பின்பற்றல்
  2. விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
  3. குழந்தைத் திருமண புள்ளி விவரங்களை கையாளுதல்
  4. கிராமங்களில் குழந்தை திருமணகேடான விளைவுகளை எடுத்துரைத்தல்
  5. அரசின் பிறதிட்டங்களை எடுத்துரைத்தல்

பெண்சிசு கொலை:

பிறந்த பெண் குழந்தைகளை கொல்லுவது

 

காரணங்கள்:

  1. வறுமை
  2. வறட்சி
  3. இளவயது திருமணம்
  4. ஆண் குழந்தை மோகம்
  5. பழப்பறிவின்மை
  6. அறிவின்மை
  7. திருமணமாகாத பெண்ணின் கருச்சிதைவு
  8. வரதட்சணை

விளைவுகள்:

  1. பாலின வேறுபாடு
  2. பாலின விகிதம் குறைவு
  3. பெண் கல்வியறிவு குறைதல்
  4. பொருளாதாரப் பின்னடைவு
  5. ஆண்சார்ந்த சமூகம் தோன்றுதல்

 

திட்டங்கள்:

  1. தொட்டில் குழந்தைத் திட்டம் – 1992
  2. பெண்குழந்தை பாதுகாப்புத்திட்டம் – 1992
  3. பெண் குழந்தைகளைக்காப்போம் பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் திட்டம் – 2015

பண திருமணம் செய்வோர்:

  1. ஒன்றிற்கு மேற்பட்ட பெண்ணை ஒரே நேரத்தில் ஒருவர் திருமணம் செய்துகொள்ளுதல்
  2. இந்து திருமணச்சட்டம் 1955ன் படி ஒருவருக்கு ஒரே மனைவி மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

பாலியல் தொல்லை:

வேலையிடம் பொது இடங்களில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தரும் நடவடிக்கை

நீதிமன்றம் உத்தரவுப்படி,

  1. உடல் ரீதியான துன்புறுத்தல்
  2. பாலியல் புரிய அழைத்தல் / வற்புறுத்தல்
  3. பாலியல் சார்ந்த நூல்கள், திரைப்படங்களை பார்க்க வலியுறுத்தல்
  4. உடல் ரீதியான பாலியல் வற்புறுத்தல்

சட்ட நடவடிக்கைகள்:

  1. சரத்து 14, 15, 21, 19(1) (g)
  2. பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தல் (தடுத்தல், விலக்கு, திர்வு) சட்டம் – 2013

இந்தியாவில் பணி செய்யும் பெண்களின் பிரச்சனைகளை:

பிரச்சனைகள்:

பணியிடங்களில் பாலினப் பாகுபாடு முறைசார்துறை:

  1. பதவி உயர்வில் பாகுபாடு
  2. வேலையில் அமர்த்துவதில் பாகுபாடு
  3. சில துறைகள் ஆண்களுக்காகவே ஒதுக்கப்பட்டிருக்கின்றன. (எ.கா) மண்ணியல், எந்திரப்பொறியியல்

முறைசாரா துறை:

  1. சம வேலைக்கு சமஊதியம் அளிக்கப்படுவதில்லை.
  2. மகப்பேறு பலன்கள் கிடைப்பதில்லை.
  3. அதிக உடல் உழைப்பை தரவேண்டியுள்ளது.
  4. உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
  5. கிராமப் பகுதிகளில் வேலை செய்யும் பெண்களுக்கு சமூகப்பாதுகாப்பு இன்மை

பாலியல் தொந்தரவு:

  1. பணி செய்யும் பெண்களின் முக்கிய பிரச்சனை
  2. பணியிடங்களில் பாலியல் தொந்தரவு (எ.கா) செவிலியர்கள், மூன்றாம்நிலை தொழில்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.
  3. மேல்நிலை அலுவலர்கள் பெண்களிடம் பாலியல் ரீதியான சலுகைகளை வேண்டுவது, பெண்களை துன்பமான சூழ்நிலையில் தள்ளுகிறது
  4. பொது இடங்களில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுதல் (ம) பின்தொடர்தல்

போக்குவரத்து:

  1. பொது போக்குவரத்து பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை
  2. பெண்களின் உடைமை, நகைகள் திருடப்படுகிறது.
  3. சில சமயங்களில் கொலையும் நடைபெறுகிறது
  4. பொது இடங்களில் பெண் கிண்டல் சாதாரணமாகக் காணப்படுகிறது.

குடும்பங்கள்:

  1. பெண்கள் வீட்டு வேலையையும், குழந்தைகளையுமு; அலுவலக வேலையையும் ஒருங்கே பார்க்கும் போது சிரமத்திற்கு உள்ளாகின்றன.
  2. வேலைபளு கூடும்போது, பெண்ணின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது.

நிதி சுதந்திரம் இல்லாமை:

  1. பெண் ஊதியம் ஈட்டுபவளாக இருந்த போதிலும், பணத் தேவைகளுக்கு கணவனையே சார்ந்திருக்கும் நிலை பெரும்பாலான குடும்பங்களில் உள்ளது.
  2. இதற்கு காரணம் – ஆணாதிக்க மனப்பான்மை

மணக்கொடை:

  1. பணிக்கு செல்லும் பெண்களுக்கு கூட இன்றைய சமுதாயத்தில் மணக்கொடை பெரும் சவாலாக உள்ளது
  2. உயர் நடுத்தர வகுப்பினர் இடையே வரதட்சணை இன்னமும் ஒரு பிரச்சனையாக உள்ளது

மனித உரிமைகள்:

  1. மனித உரிமைகள் என்பது ஒரு மனிதனுக்கு இயற்கையாகவே கிடைக்கப் பெற வேண்டிய உரிமைகள் ஆகும்.
  2. ஒவ்வொரு மனிதனின் அனைத்து முன்னேற்ற நடவடிக்கைகளுக்கும் அடிப்படை ஆதாரமாக திகழக்கூடியது.
  3. இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஐ.நா. மனித உரிமைகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சமூக ரீதியிலான சவால்கள்:

இந்தியாவில் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சனைகள்:

  1. ஒப்பந்த தொழிலாளர் குழந்தை தொழிலாளர்
  2. தீண்டாமை
  3. பெண் சிசுக்கொலை
  4. குடும்ப வன்முறை
  5. பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள்
  6. குழந்தைத் திருமணம்
  7. பெண்களுக்கு எதிரான சுரண்டல்
  8. ஆதிதிராவிடர் (ம) பழங்குடியின மக்களின் மீதான தாக்குதல்கள்

பொருளாதார ரீதியான சவால்கள்:

  1. வறுமை
  2. வேலையின்மை
  3. போதை மருந்திற்கு அடிமையாதல்
  4. நுகர்வோர் உரிமை மறுக்கப்படுதல்

மதரீதியிலான சவால்கள்:

  1. இனவாதம் / மதவாதம்
  2. சாதி வன்முறைகள்
  3. கௌரவக் கொலைகள்
  4. வகுப்புவாதம்

அரசியல் ரீதியிலான சவால்கள்:

  1. சிறைச்சாலைகளில் அத்துமீறி நிகழும் வன்முறைகள்
  2. போலி என்கவுண்டர்கள்
  3. அரசியல் ரீதியிலான வன்முறைகள்

மனித உரிமைகள் மீதான உலகளாவிய தீர்மானம்:

  1. ஒரு தனிமனிதனின் வாழ்க்கை, சுதந்திரம், சமத்துவம், கௌரவம் தொடர்பான உரிமைகளே, மனித உரிமைகள்
  2. ஐ.நா. சபை அக்டோபர் 24, 1945 ல் துவங்கப்பட்டது.
  3. இது மனித உரிமைகள் தொடர்பான சாசனத்தை 1948, டிசம்பர் 10ல் ஏற்றுக்கொண்டது.
  4. தலைமையிடம் – நியூயார்க் (VSA)

சர்வதேச பிரகடனத்தின் 30 கருத்துரைகள்:

தனிமனித உரிமைகள்: சரத்து 3 – 11

  1. சரத்து 3 – வாழ்க்கைச் சுதந்திரம் (ம) ஒரு தனிமனிதனின் பாதுகாப்பு தொடர்பான உரிமைகள்
  2. சரத்து 4 – அடிமைவியாபாரம் (ம) அடிமைத்தனத்தை ஒழித்தல்
  3. சரத்து 5 – தனிமனிதன் எவரையும் துன்புறுத்தக்கூடாது
  4. சரத்து 6 – அங்கீகாரத்திற்கான உரிமை
  5. சரத்து 7 – சட்டத்தின் முன் அனைவரும் சமம்
  6. சரத்து 8 – அடிப்படை உரிமை மிறப்படுவதிலிருந்து தீர்வு
  7. சரத்து 9 – யாரையும் நீதிக்குப் புறம்பான முறையில் கைது செய்யக்கூடாது.
  8. சரத்து 11 – யூகத்தின் அடிப்படையில் நிராதிக்குதண்டனை வழங்கக் கூடாது.

 

சிவில் (ம) அரசியல் உரிமைகள்: சரத்து 12 – 17

  1. சரத்த 12 – சட்டத்தை பாதுகாத்தல்
  2. சரத்து 13 – இயக்கங்களுக்கான சுதந்திரம்
  3. சரத்து 14 – புகலிடம் தேர்விற்கான உரிமை
  4. சரத்து 15 – ஒரு நாட்டின் குடிமகனாக இருப்பதற்கான உரிமை
  5. சரத்து 16 – அனைவருக்கும் திருமணத்தில் சமத்துவத்தை பேணும் உரிமை
  6. சரத்து 17 – சொந்தமாக சொத்து வைத்திருப்பதற்கான உரிமை

அரசியல், ஆன்மீக, பொது சுதந்திரம்: சரத்து 18 – 21

  1. சரத்து 18 – சுதந்திரமாகவும், சுயமாகவும். மனசாட்சிப்படியும் சிந்திக்கும் உரிமை
  2. சரத்து 19 – தங்கள் எண்ணம், கருத்து, உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமை
  3. சரத்து 20 – சங்கம் (ம) கழகங்களை ஏற்படுத்தும் உரிமை
  4. சரத்து 21 – அரசாங்கத்தின் ஓர் அங்கமாக இருப்பதற்கான உரிமை

சமூக, பொருளாதார, கலாச்சார உரிமைகள் : சரத்து 22 – 27

  1. சரத்து 22 – அரசாங்கத்தின் மூலம் சமூகப்பாதுகாப்பினை பெறும் உரிமை
  2. சரத்து 23 – வேலை செய்வதற்கான உரிமை
  3. சரத்து 24 – ஓய்வு பெறுவதற்கான உரிமை
  4. சரத்து 25 – வாழ்வாதாரத்தைப் பெறுவதற்கான உரிமை
  5. சரத்து 26 – கல்வி பெறுவதற்கான உரிமை
  6. சரத்து 27 – சுதந்திரமாகப் பங்கெடுத்தலுக்கான உரிமை

ஒரு தனிமனிதனின் சமூக கடமைகள் : சரத்து 28 – 30

  1. சரத்து 28 – சர்வதேச (ம) சமூக ஆணைகளுக்கு உரிமையளித்தல்
  2. சரத்து 29 – ஒரு இனத்தின் கடமை
  3. சரத்து 30 – சாசனத்தில் அறிவுறுத்தப்பட்ட “சுதந்திரத்திற்கான” உரிமையைப் பாதுகாத்தல்

தேசிய மனித உரிமை விதிகள்:

அரசியலமைப்பு விதிகள்

  1. சமத்துவ விதி : 14 – 18
  2. சுதந்திர விதி : 19 – 22
  3. சுரண்டலுக்கு எதிரான விதி : 23 – 24
  4. சமய உரிமை : 25 – 28
  5. கலாச்சார (ம) பண்பாட்டுரிமை : 29 – 30
  6. அரசியலமைப்பிற்கு உட்பட்டு : 32

தீர்வு காணும் உரிமை:

சட்டமுறையிலான விதிகள்:

  1. மத்திய, மாநில அரசாங்கங்களால் இயற்றப்படும் சட்டங்கள்
  2. SC / ST மக்களின் சிவில் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டம்
  3. தேசிய மனித உரிமைகள் சட்டம்

இந்திய அரசால் இயற்றப்பட்ட சட்டங்கள்:

  1. சதி ஒழிப்புச் சட்டம் – 1829
  2. குழந்தைத் திருமண ஒழிப்பச்சட்டம் – 1929, 2006
  3. இந்து வாரிசுரிமைச்சட்டம் – 1956
  4. சுய ஊதியச் சட்டம் – 1976
  5. SC / ST அநீதிகளில் இருந்து பாதுகாக்கும் சட்டம் – 1989
  6. தேசிய மனித உரிமைகள் சட்டம் – 1993
  7. தகவலறியும் உரிமைச்சட்டம் – 2005
  8. NGNREG Act – 2005
  9. சிவில் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டம் – 1955
  10. பெண்கள், குழந்தைகளை சட்டத்திற்கு புறம்பான முறையில் கடத்துதலைத் தடுக்கும் சட்டம் – 1956
  11. பேறுகால சலுகை சட்டம் – 1961
  12. குழந்தை தொழிலாளர் ஒழிப்புச்சட்டம் – 1976
  13. தேசிய பெண்கள் ஆணையச்சட்டம் – 1990
  14. தேசிய சிறுபான்மையினர் ஆணையச்சட்டம் – 1992
  15. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையச்சட்டம் – 1993
  16. மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பு, சம உரிமைக்கான சட்டம் – 1995

அம்னெஜ்டி இண்டர்நேக்ஷ்னல்:

  1. மனித உரிமையை பாதுகாத்தல் (ம) மனித உரிமை மீறலைத் தடுப்பது இதன் பங்காகும்.
  2. மனித உரிமை மீறலினால் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு போதிய நிவாரணம் வழங்குவது

ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையம் (UNCHR):

  1. ஐ.நா.வின் ஓர் உறுப்பு அமைப்புகளுள் ஒன்றாகும்.
  2. 1946 ஆண்டு இயற்றப்பட்டது.
  3. இது 2006ல் ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில் ஆக மாற்றம் செய்யப்பட்டது.
  4. தலைமையகம் – ஜெனீவா (சுவிட்சர்லாந்து)

UNCHR யின் பணிகள்:

  1. சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு மனித உரிமைகள் பாதுகாப்பு, மேம்பாடு ஆகியவற்றிற்கு உத்தரவாதம் அளிக்கின்றது.
  2. மனித உரிமைகளுக்காக சர்வதேச ஒத்துழைப்பினைக் கொண்டு வருதல்
  3. மனித உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளில் சர்வதேச, தேசிய அளவில் முக்கியத்துவம் அளித்தல்
  4. மனித உரிமைகள் தொடர்பான நிகழ்வுகளை சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கும் அமைப்பாகும்.
  5. மனித உரிமைகளை நடைமுறைப்படுத்தலில் சர்வதேச அளவில் உறுதியுடன் செயல்பட ஊக்குவிக்கின்றது.
  6. மனித உரிமைகளை மேம்படுத்த புதிய விதிகளை உருவாக்குவதில் துணை புரிகின்றது.
  7. மனித உரிமைகள் தொடர்பான அமைப்புகள், உடன்படிக்கைகளுக்கு ஆதரவளித்தல்
  8. மனித உரிமைமீறல்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்க முனைகின்றது.
  9. மனித உரிமைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.
  10. மனித உரிமைகள் தொடர்பான துறை ரீதியான கள செயல்பாடுகள், நிகழ்வுகளில் ஆர்வமுடன் பங்கேற்றல்
  11. மனித உரிமைகள் தொடர்பான கல்வி, தகவல் ஆலோசனை. தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல்
  12. தேசிய அளவில் மனித உரிமை கட்டமைப்புகளை நிறுவுவதில் முக்கியப் பங்காற்றுகின்றன.

மனித உரிமைகளுக்கான நீதிமன்றங்கள் (மாவட்ட):

  1. தேசிய மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 1993ன் கீழ் ஒவ்வொரு மவாட்டத்திலும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கென ஒரு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
  2. மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான அடிமட்ட அளவிலான சிறந்த அமைப்பாக ஒருங்கிணைப்புடன் செயல்படுகின்றது.

அமைப்பு:

இந்நீதிமன்றத்தில் 7 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியவர் (அ) அரசு வழக்கறிஞர் நியமிக்கப்படுகிறார்.

பணிகள்:

  1. மனித உரிமை மீறல் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகள் ரீதியிலான நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு வேகமாக தீர்வு காண உருவாக்கப்பட்டது.
  2. இதன் மூலம் சமூகத்தின் அடிமட்ட அளவில் இருந்து மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  3. மனித உரிமை மீறல்களில் உடனடியாக மீள்நடவடிக்கை எடுக்க முனைகின்றது.
  4. மனித உரிமைகளுக்கான தற்காப்பு நிகழ்வுகளை மேற்கொள்கின்றது.
  5. தேசிய அளவில் மனித உரிமைக்கான கட்டமைப்புகளை உருவாக்குவதில் துணை புரிகின்றது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம்:

  1. மனித உரிமைகள் சட்டம், 1993ன் படி ஏற்படுத்தப்பட்டது.
  2. தலைமையிடம் – புதுடெல்லி
  3. தலைவர் – ஒய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி
  4. பதவிக்காலம் – 5 ஆண்டுகள் / 70 வயது
  5. உறுப்பினர்கள்
  6. உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி – 1
  7. உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி – 1
  8. மனித உரிமைகள் சார்ந்த அனுபவம்மிக்கவர் – 2
  9. நியமனம் செய்பவர் – குடியரசுத்தலைவர்

மாநில மனித உரிமைகள் ஆணையம்:

  1. தமிழ்நாட்டில் 1997 ல் மாநில மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்டது.
  2. தலைவர் – ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
  3. உறுப்பினர்கள்
  4. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி – 1
  5. ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி – 1
  6. மனித உரிமைகள் சார்ந்த செயல் அனுபவம் மிக்கவர்கள் – 2 பேர்
  7. நியமனம் – ஆளுநர்
  8. தேர்வுக்குழு – மாநில முதலமைச்சர், உள்துறை அமைச்சர், சட்டமன்ற தலைவர், சட்டமன்ற எதிர்காட்சித்தலைவர்
  9. தலைமையிடம் – சென்னை
  10. பதவிக்காலம் – 70 வயது / 5 ஆண்டுகள்

பணிகள்:

  1. மனித உரிமைகளைப் பாதுகாத்தல்
  2. மனித உரிமைகள் சார்ந்த ஆய்வுகள் நடத்துதல்
  3. மனித உரிமைகள் சார்ந்த கல்வியறிவு புகட்டுதல்
  4. ஊடகம் (ம) கருத்தரங்கு மூலம் மனித உரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
  5. மனித உரிமைகள் மீறப்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் மனு செய்தாலோ (அ) ஆணையம் தானகவோ முன்வந்து விசாரணை செய்யும்.
  6. மனித உரிமைகளுக்கு எதிராக கொண்டு வரப்படும் சட்டத்தினை ஆய்வு செய்கிறது.
  7. ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினரின் குறைகளை களைகிறது.
  8. பெண்கள் (ம) குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்கிறது.
  9. மக்களின் வாழ்வியல் சுதந்திரத்தைப் பாதுகாக்கிறது.
  10. சிறைச்சாலை பார்வையிடல்

அதிகாரங்கள்:

  1. சிவில் நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரம்
  2. அரசிற்கு ஆண்டுதோறும் அறிக்கை அனுப்புதல்
  3. இவ்வறிக்கை பாராளுமன்றம் / சட்டமன்றத்திடம் முன்வைக்கப்படுகிறது.
  4. இது அரசியலமைப்பு வழிகாட்டு நெறிமுறைகளின் படி செயல்படுகிறது.
  5. தேவைப்படும் அதிகாரிகளை விசாரிக்கும்
  6. தேவையானோருக்கு சம்மன் அனுப்பும்

தமிழ்நாட்டில் NGO க்களின் பங்கு:

  1. சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான 4 இல்லங்களை NGO நடத்துகிறது. இதற்கு அரசு மானியம் வழங்குகிறது. தற்போது 135 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
  2. இக்கட்டான சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணியத்துடனும் பாதுகாப்புடனுமட் வாழ ‘ஸ்வதார் கிரஹ்’ எனப்படும் குறுகிய கால தங்கும் இல்லங்கள் 35 NGO க்களால் நடத்துகின்றன
  3. குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005 ன் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சேவை அளிப்பவர்களாக செயல்படுகிறார்கள்.
  4. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் 21 முதியோர் இல்லங்களுக்கு அரசு நிதி உதவி அளிக்கிறது.
  5. முதியோர் (ம) ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஓருங்கிணைந்த சிறப்பு இல்ல வளாகங்கள் NGO செயல்படுத்துகிறது.
  6. மத்திய அரசு உதவி பெறும் மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த திட்டங்கள் NGO வால் நடத்தப்படுகிறது.
  7. எைை. சர்வதேச முதியோர் தினவிழா அக் 1-ன் போது, முதியோர் நலனுக்காக சேவைபுரிந்து NGO க்கள் சிறப்பிக்கப்படுகிறார்கள்
  8. NGO க்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெண்கள் (ம) குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு உதவுகின்றன
  9. தமிழ்நாடு அரசு NGO க்களுக்கு மானியமாக 10 லட்சம் நிதி ஒதுக்கீடு.
  10. 6 ரூபாய் ஆலோசனை மையங்கள் NGO வால் நடத்தப்படுகிறது.
  11. பெண்களுக்காக சிறந்த சேவை புரிந்த நிறுவனம் (ம) சமூக சேவைகளுக்கு விருதினை அரசு தருகிறது.
  12. ஜன் அந்தோலன் திட்டத்தில் NGO க்கள் பங்கு பெறுகின்றன.
  13. தேசிய குழந்தைகள் காப்பகத்திட்டத்தின் கீழ் 598 காப்பகங்கள் NGO க்களால் நடத்தப்பட்டு வருகின்றன.
  14. உக்வாலா திட்டத்தில் பங்குபெறுகின்றன.

ஆதாரமையம்:

  1. 2001 ல் துவக்கம்
  2. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் ஆதரவுடன் செயல்படுகிறது.
  3. இது தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் 1975 ன் கீழ் பதியப்பட்டுள்ளது.

மண்டல் அறிக்கை:

  1. 1979 ல் அமைப்பு
  2. சரத்து 340 ன் படி அமைப்பு
  3. அறிக்கை 1980
  4. 3742 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்தது.
  5. 1990 வி.பி.சிங் அரசு பரிந்துரையை ஏற்றது.
  6. சமூக அடையாளங்கள் – 4, பொருளாதார அடையாளங்கள் – 4, கல்வி அடையாளங்கள் – 3 என 11 அடையாளங்கள் பயன்படுத்தப்பட்டன.

மண்டல் அறிக்கைக்கு சாதகமான வாதங்கள்:

  1. சமுதாயத்தில் பல ஆண்டுகளாக அதிருப்தியில் வாழ்ந்த பிரிவினரின் தேவையை நிறைவேற்றியது.
  2. சமுதாயத்தில் நசுக்கப்படும் மக்களுக்கு சமத்துவமும் நம்பிக்கையும். அளிக்க வேண்டியது சமூக கடமை.
  3. இது இடஒதுக்கீடு மத்திய அரசு பணிக்கு மட்டுமே உரியது. இதனால் பெரும்பாலான மக்கள் பாதிப்பதில்லை.
  4. இப்பரிந்துரைகள் ஜாதியினை அடிப்படையாகக் கொண்டவை அல்ல.
  5. பலவீனமான பிரிவினருக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியை திருத்த வேண்டியது அவசியம்
  6. பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் சமவாய்ப்பு வழங்குவது அவசியம்

மண்டல் அறிக்கைக்கு எதிரான வாதங்கள்:

  1. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை அடையாளம் காண பின்பற்றப்பட்ட முறை தவறானது.
  2. பழைய புள்ளி விவரங்களை பயன்படுத்தி கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  3. OBC வகுப்பை அடையாளம்ட காண பின்பற்றப்பட்ட விவரங்கள் தவறானவை.
  4. மாதிரி தேர்வு, விவரம் சேமிப்பில் குறைபாடு
  5. ஜாதி (ம) வகுப்பு போன்ற வார்த்தைகளின் பயன்பாட்டில் உள்ள குழப்பங்கள்
  6. இது அறிவியல் பூர்வமான முறையல்ல.
  7. 27% இடஒதுக்கீட்டை ஒவ்வொரு ழுடீஊ பிரிவிற்கும் இடையே எவ்வாறு பகிர்வது என கூறவில்லை.

உச்சநீதிமன்ற தீர்ப்பு – 1992:

  1. இடஒதுக்கீடு 50% மேல் மிகக்கூடாது
  2. பதவி உயர்வில் இடஒதுக்கீடு கூடாது
  3. பணிக்கு குறைந்த பட்சதரம்
  4. பட்டியல் அவ்வப்போது ஆய்வு
  5. பலன் உண்மையான மக்களுக்கு கிடைத்தல்

இட ஒதுக்கீடு சாதக – பாதக அம்சங்கள்:

பாதக அம்சங்கள்:

  1. ஜாதிப்பாகுபாடு முறைக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு உள்ளது.
  2. தகுதி (ம) திறமை புறக்கணிக்கப்படுகின்றன.
  3. நாட்டின் சமூக – பொருளாதார கட்டமையை மாற்றியடைத்துள்ளது.
  4. சில மாநிலங்களில் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டத்தால் வன்முறை அதிகரித்துள்ளது.
  5. இட ஒதுக்கீடு பயன்கள் அதிகம் கிடைக்கக்கூடிய இடங்களுக்கு இடப்பெயர்வு அதிகரித்துள்ளது.
  6. முன்னேறிய வகுப்புகளை சேர்ந்த மக்களின் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

சாதக அம்சங்கள்:

  1. சமூக நீதிக்கு இடஒதுக்கீடு அவசியம்
  2. சமூக நல்லிணக்கம்
  3. அதிகாரமளித்தல்
  4. அரசியலமைப்பு கோட்பாடுகளை உறுதி செய்தல்
  5. வேலை வாய்ப்பு அளித்தல்
  6. தீண்டாமை ஒழிப்பு
  7. நியாயமான பிரதிநிதித்துவம்
  8. நேர்மறையான பாகுபாடு
  9. வரலாற்றுத் தவறுகளுக்குத் தீர்வு

தேவையான மாற்றங்கள்:

  1. இடஒதுக்கீட்டின் பயன்கள் உண்மையான பிற்படுத்தப்பட்ட மக்களை மட்டும் சென்றடைய வேண்டும்.
  2. SC / ST / OBC மக்களை சுயநலம்மிக்க தலைவர்களிடம் இருந்து காத்தல்
  3. இடஒதுக்கீட்டில் 50% தாண்ட எந்த மாநிலத்திற்கும் அனுமதிக்க கூடாது – S.C தீர்ப்பு (மண்டல் வழக்கு)
  4. பதவி உயர்வில் இடஒதுக்கீடு அனுமதிக்கப்படக்கூடாது.
  5. எந்த நிலை / பணிக்கும் குறைந்த பட்ச தரம் நிர்ணயித்தல் அவசியம்
  6. பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் பட்டியல் அவ்வப்போது மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்.

சமூக நீதி (ம) அதிகாரமளித்தல் தொடர்புடைய சரத்துகள்:

  1. முகப்புரை
  2. அடிப்படை உரிமைகள் – 15, 16, 17, 18, 21, 21A, 23, 24
  3. DPSP – 37, 38, 39A, 41, 46
  4. SC/ ST, OBC ஆணையம் – 33B, 338A, 338B
  5. 546 வது அட்டவணை
  6. இட ஒதுக்கீடு – 243, 334, 335

 

Scroll to Top