7.பெண்களுக்கு அதிகாரமளித்தல்

பெண்களுக்கான அரசியலமைப்பு சரத்துகள்:

அரசியலமைப்பு கட்டமைப்புகள்:

  1. சரத்து 14 – சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
  2. சரத்து 15 – பாலின வேற்றுமை அகற்றுதல்.
  3. சரத்து 15(3) – குழந்தை (ம) பெண்கள் நலன் சார்ந்த சட்டமியற்றுதல்.
  4. சரத்து 16(2), – வேலைவாய்ப்பு, பணிநியமனங்களில் சமவாய்ப்பு, வேறுபாடின்மை.
  5. சரத்து 23 – அடிமைத் தனத்திற்கு எதிரான உரிமை (ம) மனிதக் கடத்தலை தடுக்கிறது.
  6. சரத்து 39(d) – சமவேலைக்கு சம ஊதியம் வழங்குதல்.
  7. சரத்து 39(e) – ஆண், பெண் வேறுபாடில்லாத உடல்நலன் சார்ந்த பணிச்சூழல்.
  8. சரத்து 42 – பிரசவ கால விடுப்பு வழங்குதல்.
  9. சரத்து 46 – பின்தங்கிய வகுப்பினர் மேம்பட சிறப்பு நடைமுறைகளை செயல்படுத்துதல்.
  10. சரத்து 51A (e) – மனித குலத்தில் அமைதி (ம) பன்னாட்டு அமைதியை மேம்படுத்தி சகோரத்துவத்துடன் வாழ வழிவகை செய்தல்.
  11. சரத்து 243 D – ஊராட்சி அமைப்புகளில் 1/3 பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்குதல்.
  12. சரத்து 243 T – நகராட்சி அமைப்புகளில் 1/3 பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்குதல்.
  13. சரத்து 325 – ஆண், பெண் வேறுபாடின்றி வாக்களிக்க வழிவகை செய்தல்

முகப்புரை:

பெண்களுக்கான சட்டப்பூர்வப் பாதுகாப்பு:

  1. திருமணமான பெண்கள் உடைமைகள் சட்டம் – 1874
  2. தொழிலாளர் பங்களிப்புச்சட்டம் – 1923
  3. இந்திய வாரிசுரிமைச் சட்டம் – 1925
  4. வரதட்சணை தடுப்புச் சட்டம் – 1961
  5. பெண்களை தவறாக சித்தரித்தல் (தடைச்) சட்டம் – 1986
  6. சதி ஒழிப்புச்சட்டம் – 1987
  7. தேசிய பெண்கள் ஆணையச் சட்டம் – 1990
  8. இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956, திருத்தம் – 2005
  9. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் – 1986
  10. ஒழுக்கக்கேடு தடுப்புச்சட்டம் – 1956
  11. குடும்ப திருமண தடுப்புச்சட்டம் – 2005
  12. குழந்தை திருமண தடைச்சட்டம் – 2006

பெண்களின் உரிமைகள்:

  1. ஐக்கிய நாடுகளால் உருவாக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகள்
  2. பெண் உரிமைகளில் வன்முறை, அடிமைத்தனம் பாகுபாடுகளிலிருந்து விடுபட்டு வாழ்வதற்கான உரிமை.
  3. கல்வி கற்க உரிமை.
  4. சொத்துக்களை வைத்திருக்க உரிமை.
  5. வாக்களிக்கும் உரிமை.
  6. சம ஊதியம் பெறுவதற்கான உரிமை.
  7. வாழும் உரிமை.
  8. சுதந்திரமான சுயமரியாதையாக வாழ்தல்.
  9. தன் விருப்பங்களை தேர்ந்தெடுத்து, தானே முடிவுசெய்தல்.
  10. சமவாய்ப்பு உரிமை.
  11. சமுதாய, மத, பொதுநடவடிக்கைளில் சம உரிமை.
  12. வேலைவாய்ப்பு பெறும் உரிமை.
  13. தன் கருத்துக்களை எடுத்துரைக்கும் உரிமை.
  14. பாதுகாப்பான பணிசூழல் பெறும் உரிமை.
  15. சமூக, பொருளாதார, அரசியலில் சம உரிமை.

பெண்களுக்கு அதிகாரமளித்தல்:

பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது (அவர்களின் சொநத நலன் (ம) சமுதாய நலன் சார்ந்த கருத்தாக்கத்தில் தாங்களே முடிவெடுக்கும் ஒரு சூழ்நிலையை உருவாக்குதல்.

பெண்களுக்கு அதிகாரமளித்தலின் முக்கியத்துவம்:

1.குறைவேலை (ம) வேலைவாய்ப்பின்மை

  • உலக மக்கள் தொகையில் 50% பெண்கள்
  • ஆனால் உலகளவில் பெண்கள் பெரும்பாலானோர் வேலையற்றவர்கள் இதனால் உலகப் பொருளாதார பாதிப்படைகிறது.

2.சமபோட்டித்திறன்

  • ஆண்களும் பெண்களும் சம அறிவுடையவர்கள்
  • தற்போதைய சூழலில் ஆண்களை விட பெண்களே மிதமிஞ்சிய சமுதாய பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

3.திறமையானவர்கள்

பெண்கள் ஆணிற்குச் சமமான திறமை உடையோர் ஆதலில் தற்கால சமுதாயத்தில் உயர்கல்வி, மருத்துவம், அறிவியல் சார்ந்த துறைகளில் மேம்பாட்டு வருகின்றனர்.

4.ஒட்டுமொத்த சமூக வளர்ச்சி

பெண்களின் முன்னேற்றம் அவர்களது குடும்ப சூழ்நிலையை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், சமுதாய நலனை பெருக்குவதிலும் பங்காற்றுகிறது.

5.பொருளாதார நலன்

அவர்களை சுதந்திரமாகவும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட வைப்பதோடு சமுதாய, பொருளாதார நலனை அதிகரிக்கிறது.

 

6.குடும்ப வன்முறைகளிலிருந்து மீளுதல்

பெண்களுக்கு அதிகாரமளித்தல், அவர்களை குடும்ப வன்முறையிலிந்து மீளும் சூழ்நிலைக்கு வித்திடுகிறது. கல்வியறிவுற்ற பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாகின்றனர்.

7.ஊழலற்ற நிர்வாகம்

மகளிர் கல்வியறிவு பெறும் போது, அவர்களது விழிப்புணர்வு நிலையில் ஊழல், சுரண்டல் முதலியவை குறைந்து காணப்படுகிறது.

8.வறுமையற்ற சமுதாயம்

குடும்ப சூழ்நிலையில் ஆணின் வருமானம் போதுமானதாக இல்லாத போது, பெண்ணின் வருமானம் வறுமையைப் போக்க உதவுகிறது.

தேசிய வளர்ச்சி:

  • தேசிய வளர்ச்சியில் பெண் தொழில் முனைவோர்களின் பங்கு அளப்பரியது
  • தங்களது தனித்திறன் மூலம் மருத்துவம், சமூக சேவை, பொறயியல் என அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து, தேசிய வளர்ச்சியை மேம்படுதுகின்றனர்.

மாற்று இல்லாத மகளிர்துறைகள்:

சில துறைகளில் மகளிர் மட்டுமே சாதிக்கக்கூடிய வரையறைகள் உண்டு. அவை மகளிரின் தனித்திறன் சார்ந்த வளர்ச்சியாகும்.

சமுதாயத்தில் பெண்களின் நிலை:

  1. பாலின வேற்றுமை குறியீடு மதிப்பு : 0.563 (2014)
  2. பாலின வேற்றுமை குறியீடு தரம் : 127 (2014)
  3. தாய்மார்கள் இறப்பு விகிதம் : 174 / 1 லட்சம் (2015)
  4. பாராளுமன்றத்தில் பெண்கள் : 12.2% (2014)
  5. 25 வயதிற்கு மேற்பட்ட இடைநிலை கல்வி : 27% (2014)

பயின்ற மகளிர்

  1. பணிச்சூழலில் மகளிர் : 29% (2013)
  2. உலகளாவிய பாலின வேற்றுமை குறியீடு மதிப்பு : 0.664 (2015)
  3. உலகளாவிய பாலின வேற்றுமை குறியீடு தரம் : 108 (2015)

சமூகத்தில் பெண்ள் வசிக்கும் பல்வேறு பதவிகளை.

  1. பாதுகாவலர்கள்
  2. உழவர்கள்
  3. கல்வியாளர்கள்
  4. தொழிலதிபர்கள்
  5. பெண்கள், குறிப்பாக தாய்மார்கள் குடும்பத்தில் முடிவெடுப்பதில் மிகப்பெரிய பாத்திரமாக விளங்குகின்றனர்.
  6. பொருளாதார மேம்பாட்டில் பெண்களின் பங்கு அவசியம்
  7. நீடித்த நிலையான வளர்ச்சிக்கு அவசியம்
  8. குழந்தைகள் (ம) வயதானவர்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
  9. நல்ல சமுதாயத்தை உருவாக்குகின்றனர்.

பெண்களுக்கு அதிகாரமளித்தல்:

  • நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 50மூ பெண்கள்
  • பெண்களுக்கு அரசியல், சமூக, பொருளாதார நிலையில் அதிகாரமளித்தல் அவசியம்.

பெண்களுக்கு அதிகாரமளித்தலும் வறுமை ஒழிப்பும்:

1.வறுமை ஒழிப்பு

நாட்டில் அவர்களின் நிலையை மேம்படுத்துவது வறுமை ஒழிப்பிற்கு உதவும்

2.உணவு (ம) சுகாதார செலவு

தங்களது வருமானத்தை உணவு (ம) சுகாதாரச் செலவுகக்காக பயன்படுத்துகின்றனர்.  ஆண்கள் வருமானத்தில் பெருமளவை தனிப்பட்ட தேவைக்காக செலவிடுகின்றனர்.

3.உடல் நலம் மேம்பாடு

பெண்களின் உடல் நலம் மேம்பாடு குடும்பத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், பிறந்த குழந்தைகளுக்கும் கணிசமாக உதவுகிறது. இதன் மூலம் வீட்டுச் செலவுகள் குறையும்.

4.கல்வியறிவுற்ற பெண்கள்

தங்கள் குழந்தைகளின் கல்வியில், அதிகளவிலான பங்களிப்பை செய்கின்றனர்.

5.பொருளாதார மேம்பாடு

  • வேளாண்மையில் ஈடுபடும் பெண்களுக்கு ஆண்களைப் போலவே கடன் உதவி அளித்தால் விவசாய உற்பத்தி 4மூ வரை உயரும்.
  • ஆண், பெண் இடையிலான ஊதிய ஏற்றத்தாழ்வு வறுமையில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

6.திறன்மேம்பாடு

  • சிறுவன விளைபொருள், வீட்டு அடிப்படையிலான தொழில்களில் பெருமளவிலான பெண்கள் பங்கேற்கின்றனர்.
  • இவர்களின் திறன்களை மேம்படுத்துவது, அவர்களின் கணவர்களின் மீதான பொருளாதார சார்பு நிலையை குறைக்கும்.

7.அரசியல் மேம்பாடு

அடிமட்டத்தில் முடிவெடுப்பதில் பெண்களின் சரியான பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது, அரசாங்க வறுமை ஒழிப்பு திட்டங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

அரசின் திட்டங்கள்:

குடும்ப வன்முறை என்றால் என்ன? காரணங்கள், விளைவுகள், தடுப்பு முறை சட்டங்கள் என்னென்ன?

குடும்ப வன்முறை:

ஒரு நெருங்கிய குடும்ப உறுப்பினர் / உறவினர் மீது அதிகாரத்தை பிரயோகிப்பது (அ) கட்டுப்பாட்டை செலுத்துவது, திட்டுவது, அடிப்பது (உடல், உளவியல், பாலியல் ரீதியான தாக்குதல்).

இந்தியப் பெண்கள் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்:

  1. அரசியல் நிலை

1951 – 24 பேர், 2011 – 66 பேர் (only 12%)

  1. பாலின விகிதம் 2001 – 2011 – 940 / 1000

தமிழ்நாடு – 995 / 1000

  1. கல்விநிலை1951 – 2011 – 65.46%
  2. பொருளாதார நிலை தொழில் முனைவோர் சிக்கல்கள்
  3. குழந்தை பாலினவிகிதம் 914 / 1000
  4. தாய்மார் இறப்பு விகிதம்

IFR = 2.22

MMR = 100 / லட்சம் (இலக்கு)

IMR = 23 / 100

  1. பணிக்கு செல்வோர் நிலை அதிகரிப்பு சிக்கல்கள்
  2. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு சட்டங்கள்
  3. சமூக நிலை முன்னேற்றம்
  4. குடும்பநிலை முக்கிய முடிவு
  5. திருமணநிலை கணவன் தேர்வு செய்யும் உரிமை
  6. பாலின சமத்துவமின்மை குறியீடு 140 / 156 – 2021 ன் படி

தேசிய மகளிர் ஆணையம்:

  • பாராளுமன்றத்தால் இயற்றப்பட் ஒரு சட்டத்தன் மூலம் கொண்டு வரப்பட்டது.
  • 1992 – தோற்றம்
  • நோக்கம்: பெண்களுக்கான பிரச்சனைகள், குற்றங்கள் தடுத்தல் குறித்து அரசிற்கு ஆலோசனை வழங்குதல்
  • தற்போதைய தலைவர் : திருமதி லலிதா குமார மங்கலம்

அமைப்பு:

  • தலைவர் – 1
  • உறுப்பினர்கள் – 5 (பல்வேறு துறைகளில் திறமை வாய்ந்தர்கள்)
  • செயலர் – 1 (மத்திய அரசால் நியமனம்)
  • தலைமையிடம் – புது டெல்லி

செயல்பாடுகள்:

  • ஆணையத்தின் செயல்பாடுகள், தேசிய பெண்கள் ஆணையச் சட்டம் 1990, பிரிவு, 10ன்படி வரையறுக்கப்படுகிறது.
  • அரசியலமைப்பு (ம) பிறசட்டங்களில் உள்ள பெண்களுக்கு ஆதரவான அனைத்து பாதுகாப்புகளையும் ஆய்வு செய்தல்
  • மத்திய அரசிடம் வருடத்திற்கு 1 முறை ஆய்வறிக்கை சமர்ப்பித்தல்
  • பெண்களின் பாதுகாப்பிற்குத் தேவையான பரிந்துரைகளை மத்திய (ம) மாநில அரசிற்கு வழங்குதல்
  • அரசிலமைப்பின் சரத்து, பரிந்துரைகள் மீதான வழக்குகளை விசாரித்தல்
  • பெண்களின் உரிமைகளை பாதிக்கும் நடவடிக்கைகளிலிருந்து அவர்களின் உரிமைகளை மீட்டல்
  • பெண்களின் முன்னேற்ற நிலைகளை கணக்கிடுதல்
  • பெண்களின் சமூக – பொருளாதார மேம்பாட்டினை அளவிடுதல்

பெண்களுக்கு அதிகாரமளித்தலின் திட்டங்கள் அரசின் திட்டங்கள்:

  1. பெண்கள் (ம) சிறுமிகளுக்கான தங்கும் விடுதி அமைப்பு – 1969

குடும்ப பிரச்சனைகளினாலோ, ஆபத்து சூழ்நிலையினாலோ பாதிக்கப்பட்ட பெண்கள் (ம) சிறுமிகளின் தற்கால வாழ்வாதாரத்திற்காக அவர்களுக்கான தங்கும் விடுதி ஏற்படுத்துதல்.

  1. கிராமப்புற பெண்கள் (ம) குழந்தைகள் மேம்பாட்டுத்திட்டம் – 1982
  • கிராமப்புற பெண்களின் சமூக – பொருளாதார நிலையை உயர்த்துதல்.
  • அவர்களின் சுயசார்பு நிதித் தேவைகளை பூர்த்தி செய்தல்.
  1. பெண்களுக்கான பயிற்சி (ம) வேலைவாய்ப்புத்திட்டங்களுக்கு ஆதரவு – 1986

பெண்களை சிறு குழுக்களாக ஒன்றிணைத்து அவர்களுக்கு தேவையான பயிற்சி, கடனுதவி (ம) அவர்களது திறமைகளை வளரச் செய்தல்.

  1. ராக்ஷ்ட்ரிய மகிளா கோக்ஷ் – 1993

பெண்களுக்கு தேவையான கடனுதவி (ம) சிறப்பு சலுகைகளை வழங்குவதன் மூலம், சமூக பொருளாதார திட்டங்களில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துதல்.

  1. ஸ்வயம் சிதா – 2001

சுயவேலை வாய்ப்பு (ம) சுய உதவிக்குழு ஏற்படுத்துதல் மூலம் வலிமையான அடித்தளம் அமைத்தல்.

  1. சுவதார் – 1995

பெண்களை சுயமாக சிந்தித்தல், செயல்படுதல் (ம) தன் வாழ்வினை தீர்மானித்தல் போன்ற செயல்பாடுகளை ஊக்குவித்தல்.

  1. பெண்களுக்கான பயிற்சி (ம) வேலைவாய்ப்புத்திட்டங்களுக்கு ஆதரவு: 2003 – 04

பெண்களின் தனித்திறமைகளை மேம்படுத்தி அதன் மூலம் அவர்களது சுயசார்பு கொள்கை (ம) வருமான பெருக்கு நடவடிக்கைகளை ஏற்படுத்துதல்.

  1. உஜ்வாலா – 2007

இது தடுப்பு, மீட்பு, புணர் வாழ்வு, மறுவாழ்வு, மறுகுடியமர்த்தல் ஆகிய 5 அம்சங்களை கொண்ட திட்டம்.

  1. நிர்பயா – 2016

உடல் நலம் சார்ந்த திட்டங்கள்:

  1. கிம்க்ஷாரி சக்தி யோஜனா – 2000
  2. இந்திரா காந்தி மாட்ரிட்வ சஹ்ய யோஜனா – 2000
  • கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு மானியம் சலுகைகள் வழங்கும் திட்டம்.
  • ரூ 4000, 3 தவணைகளாக வழங்கப்படுகிறது.
  1. இளம் வயது பெண்களின் முன்னேற்றதிட்டம் – 2010

11 முதல் 18 வயதிற்குட்பட்ட பெண்களின் உடல் நிலை, கலைத்திறன் (ம) பல்ேறு நிலைகளை மேம்படச் செய்தல்

ஜனனி சுரக்க்ஷா யோஜனா – 2005

தாய்மார்களின் இறப்பு விகிதத்தை குறைத்தல்

கல்வி சார்ந்த திட்டங்கள்:

  1. மகிளா சமக்யா திட்டம் – 1989
  2. பாலிக்கா சம்ரிதியோஜனா – 1997
  3. SSA – 2001, RMSA – 2010
  4. கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா – 2004
  • SC/ST பிற்படுத்தப்பட்ட / சிறுபான்மையின சமுதாய பெண்களுக்காக, உயர்தொடக்கப்பள்ளி நிலையில் உண்டு, உறைவிட பள்ளிகளை அமைத்தல்.
  • பெண்களின் கல்விவிகிதம் 30% கீழ் உள்ள ஊரக (ம) நகர்ப்புறப் பகுதிகளில் அமல்படுத்தப்படுகிறது.
  1. தனலக்க்ஷமி திட்டம் – 2008

பெண்குழந்தைகளைப் படிக்க (ம) குழந்தைத் திருமணங்களை தடுத்தல்.

  1. சக்சார் பாரத் – 2009

பெண்களுக்கு முக்கிய பங்களித்து, 15 (அ) அதற்கு அதிகமான வயதுடைய அனைத்து நபர்களையும், தேசிய எழுத்தறிவு இயக்கத்தின் கீழ் கொண்டு வருதல்.

  1. பேட்டி பச்சோல் – பேட்டிபதோவ் – 2015

குழந்தைகளுக்கு கற்பிப்போம், குழந்தை தொழிலாளர்கள் மீட்பு.

பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கான பரிந்துரைகள்:

1.பொருளாதார அளவில்

  • வாழ்வாதார அடிப்படை கல்வியினை பெண்களுக்கு வழங்குதல்.
  • பெண் தொழில் முனைவோருக்கு வரிச்சலுகை, கடன் வசதி ஏற்படுத்திதருதல்
  • சம வேலைக்கு சம ஊதியம் அளித்தல் – 39%.
  • வெற்றியடைந்த பெண் தொழில் முனைவோர்களின் வாழ்க்கையை பிரபலப்படுத்துவதன் மூலம் ஊக்கமளித்தல்.
  • நிதர்சனத்தில் பெண்களுக்கான சொத்துரிமையை நிலைநாட்டல் – Art 300A.
  • பொருளாதார விழிப்புணர்வு முகாம்களை பெண்களிடையே ஏற்படுத்துதல்.
  • சிறப்பு சலுகை (ம) மானியம் வழங்குதல்.

2.அரசியல் அளவில் – (Art – 325)

  • பாராளுமன்றத்தில் 33% இட ஒதுக்கீட்டினை உடனடியாக அமல்படுத்துதல் – மகளிர் இட ஒதுக்கீடு மசோதா.
  • அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழச்செய்தல்.
  • பத்திரிக்கை, தொலைக்காட்சி, அரசு சாரா அமைப்பினர் பெண்களின் அரசியல் நிலை மேம்பட பாடுபடுதல்.
  • அரசியல் விழிப்புணர்வை பெண்களிடையே ஏற்படுத்துதல்.
  • பெண்கள் முழுமையாக வாக்கு செலுத்துவதற்கு ஒத்துழைப்பு அளித்தல் – Art 325.

3.சமுதாய அளவில்

  • ஒரே மாதிரியான சிவில் முறையை நாடு முழுவதும் கொண்டு வருதல் – Art 44
  • சமய, சட்ட சடங்குகளை களைதல்
  • குடும்ப வன்முறைகளை தவிர்த்தல்
  • பெண்களை தாழ்த்தும் நெறிமுறைகளை மாற்றி அமைத்தல்
  • ஆண் மேலாதிக்க சமூகத்தை மாற்றுதல்
  • பெண்களுக்கு இழைக்கப்படம் அநீதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா – 2010:

  • இது 118 வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா
  • நோக்கம் : இம்மசோதா நாடாளுமன்றம் (ம) சட்டமன்றத்தில் 33% இட ஒதுக்கீட்டினை பெண்களுக்கு வழங்குதல்
  • மூன்று தொடர்ச்சியான பொதுத்தேர்தலுக்கு ஒருமுறை இட ஒதுக்கீடு.
  • இராஜய சபையில் மார்ச் 9, 2010ல் மசோதா தாக்கல்

1951 M.P 24 பேர்

2019 M.P – 19% (66 பேர்)

  • பிப்ரவரி, 2014ல் மக்களவையில் இதற்கு ஆதரவாக வாக்குகள் பதிவாகவில்லை.
  • மக்களவையில் அனுமதிக்கப்பட்டபின், பாதிக்கும் மேற்பட்ட இந்திய மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு, ஜனாதிபதியால் சட்டமாக இயற்றப்படும்.

மசோதாவின் முக்கியத்துவம்:

  • முற்காலத்திலிருந்தே பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
  • பாராளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கை 10% க்கு கீழ் உள்ளது.
  • பெண்களுக்கு அதிகாரமளித்தலின் முக்கிய நிலையாக மசோதா கருதப்படுகிறது.
  • பெண்களுக்கு பெண்களே பிரதிநிதித்துவம் என்ற நிலை உருவாதல்.
  • பெண்கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவோர் உருவாக வழிகோலுதல்

பெண்களுக்கு அதிகாரமளித்தல்:

  • இந்திய அரசியலமைப்பின் முகப்புரை, அடிப்படை உரிமை (ம) கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகளில் பாலின சமத்துவம் தெளிவாக எடுத்துரைக்கப்படுகிறது.
  • ஜனநாயக கொள்கை, சட்டங்கள், முன்னேற்றத் திட்டங்கள் செயல்பாடுகள் என அனைத்திலும் பெண்களின் முன்னேற்றமே முக்கியத்துவம் பெறுகிறது.
  • ஐந்தாவது ஐந்தாண்டு திட்டத்திலும், ‘பெண்களின் நலம் என்ற நிலை மாறி பெண்களின் முன்னேற்றம்” என்ற நிலை வளர்ந்து வருகிறது.

காரணங்கள் (SC / ST சிறுபான்மை/பின்தங்கிய வகுப்பினர்):

  • பல பிரிவுகளில் உள்ள பெண்களின் நிலை இன்றளவும் மோசமாகவே உள்ளது.
  • அவர்களது கல்வி, உடல்நலம் போன்றவை பிறபகுதிகளை காட்டிலும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.
  • எனவே, அத்தகைய ஏழை எளியோரின் பெண்களின் நலம் சார்ந்த அதிகாரமளித்தல் அவசியம்

தேசிய கொள்கையின் நோக்கங்கள்:

  • பெண்களின் முன்னேற்றம், வளர்ச்சிக்கு அதிகாரமளித்தல்
  • அனைத்துத் துறை சார்ந்தவர்களையும் ஒருங்கிணைத்து நோக்கங்களை அடைதல்
  • பெண்களின் திறமைகளை கண்டறிந்து, அவர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குதல்
  • ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் வாய்ப்பளித்தல்
  • முடிவெடுத்தலில் பங்கு பெறும் உரிமை
  • கல்வி, வேலைவாய்ப்பு, உடல்நலம், மருத்துவம், அறிவியல் போன்ற அனைத்து துறைகளிலும் சமமான வாய்ப்பு அளித்திடல்
  • ஆண்களுக்கு நிகரான சமஊதியம் பெற்றிட வழிவகை செய்தல்
  • பெண்களுக்கு ஆதரவான சட்டதிட்டங்களை வலிமையடையச் செய்தல்
  • பாலின வேறுபாடுகளை களைதல்
  • பெண்கள் சார்ந்த சமுதாயத்தினை கட்டமைத்தல்

பெண்கள் (ம) குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்:

  • இது ஒரு தனி அமைச்சகமாக 2006 ல் நடைமுறைக்கு வந்தது.
  • தலைவர் – திருமதி. மேனகா காந்தி

செயல்பாடுகள்:

  • பெண்கள் (ம) குழந்தைகளுக்கு முழுமையான மேம்பாட்டை வலியுறுத்துகிறது.
  • இது குறிப்பிட்ட குழுவிற்கு திட்டங்கள், கொள்கைகள், நடைமுறைகளை இயற்ற, திருத்த அதிகாரம் படைத்தது.
  • பெண்கள் (ம) குழந்தைகள் மேம்பாட்டிற்காகப் பாடுபடும் அரசு (ம) அரசு சாரா நிறுவனங்களுக்கு வழிகாட்டி அவற்றை ஒருங்கிணைக்கிறது.

தன்னாட்சி நிறுவனங்கள்:

  • தேசிய பொது கூட்டுறவு (ம) குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம்
  • தேசிய பெண்கள் ஆணையம் – 1992
  • தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்
  • மத்திய தத்தெடுப்பு வள முகவாண்மை
  • மத்திய சமூகநல வாரியம் – 1953
  • ராக்ஷ்டிரிய மகிளா கோக்ஷ்

ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்தல்:

  1. முதல் ஐந்தாண்டுத்திட்டம்: 1951 – 56

பெண்களின் நலனுக்காக மத்திய சமூக நல அமைப்பு 1953ல் அமைக்கப்பட்டது.

  1. இரண்டாவது ஐந்தாண்டுத்திட்டம்: 1956 – 61

மகிளா மண்டல் எனப்படும் பெண்களுக்கான அமைப்பு உருவாக்கப்பட்டது.

  1. மூன்றாவது, நான்காவது (ம) ஐந்தாண்டுத்திட்டங்கள்: 1961 – 74

பெண்கல்வி, குழந்தைகள் நலன், குழந்தைகளுக்கான உணவூட்டம், ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

  1. ஐந்தாவது ஐந்தாண்டுத்திட்டம் 1974 – 78

பெண்களின் நலன் என்ற நிலையிலிருந்து, பெண்களின் முன்னேற்றம் என்ற கருத்து உருவாக்கப்பட்டது.

  1. ஆறாவது ஐந்தாண்டுத்திட்டம்: 1980 – 85

பெண்களின் உடல்நலம், கல்வி, வேலைவாய்ப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

  1. ஏழாவது ஐந்தாண்டுத்திட்டம்: 1985 – 90

தேசிய வளர்ச்சியில் பெண்களை ஈடுபடுத்த முயற்சி எடுக்கப்பட்டது.

  1. எட்டாவது ஐந்தாண்டுத்திட்டம்: 1992 – 97

பெண்களின் முன்னேற்றம் என்ற நிலையிலிருந்து பெண்கள் அதிகாரம் என்ற வகையில், முதல் திட்ட காலத்தில் ரூ 4 கோடியாக இருந்த நிதியானது ரூ 2000 கோடியாக உயர்த்தப்பட்டது.

  1. ஒன்பதாவது ஐந்தாண்டுத்திட்டம்: 1997 – 2002

அரசின் அனைத்து திட்டங்களிலும் 30% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

  1. பத்தாவது ஐந்தாண்டுத்திட்டம்: 2002 – 2007

பெண்களுக்கு அதிகாரம், அளிக்கும் பொருட்டு, கொள்கைகள், திட்டங்கள் வகுக்கப்பட்டன.

  1. பதினோராவது ஐந்தாண்டுத்திட்டம்: 2007 – 2012

பெண்களுக்கெதிரான வன்கொடுமை தடுத்தல் பொருளதார அதிகாரம், அரசியல் பங்கேற்பு, உடல் நலம் முதலியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டன.

பாலின சமத்துவமின்மை குறியீடு:

  • பாலின ஏற்றத்தாழ்வுகளை அளவிட, ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் 20 வது ஆண்டு விழா மதிப்பான 2010 மனித வள மேம்பாட்டு அறிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • ஒரு நாட்டில் பாலின சமத்துவமின்மையால் ஏற்படும் இழப்பு, ஒட்டுமொத்தமாக அளவிட பயன்படும் குறியீடு.

வாய்ப்பிற்கான செலவு – அளவுருக்கள்:

  • இனப்பெருக்க சுகாதாரம்
  • அதிகாரமளித்தல்
  • தொழிலாளர் சந்தையில் பங்கெடுத்தல், CGI – குறிகாட்டிகள்
  1. இனப்பெருக்க சுகாதார குறிக்காட்டிகள்

தாய்மார்கள் இறப்பு விகிதம், MMR = 100 / 1 லட்சம்

வளரிளம் கருவுறுதல் விகிதம், TFR = 2.1 / 1000

இதனைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

  1. அதிகாரமளித்தல் குறிகாட்டிகள்
  • ஒவ்வொரு பாலினத்திற்கும் பாராளுமன்றத்தில் உள்ள இடங்களின் பங்குகள்
  • உயர் கல்வியினை அடையும் நிலைகள் 951 – 24 பேர்
  • இதனைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. 2011 – 66
  1. தொழிலாளர் சந்தையில் பங்கெடுப்பை கணக்கிடுதல்

பணியில் பங்கேற்கும் பெண்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதன் மூலம், தொழிலாளர் சந்தை பங்கெடுப்பினை அறியலாம்.

பாலின இடைவெளி குறியீடு:

  • பாலினத்தின் அடிப்படையில் சமத்துவமாக நடத்தப்படாமல் இருப்பதை குறிக்கிறது.
  • இது ஒரு சமூகப் பொருளியல் குறியீடு
  • இந்தியாவில் பாலின சமத்துவமின்மை குறியீடு – 2021 – 140 / 156

பெண்கல்வியின் இணையற்ற முக்கியத்துவங்கள்:

  1. அதிகரித்த கல்வியறிவு:
  • உலகெங்களிலும் கல்வியறிவற்ற இளையோரில் கிட்டதட்ட 63மூ பேர் பெண்கள்
  • எனவே அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும். அப்போது தான் பின்தங்கிய நாடுகளும் முன்னேற்றம் அடையும்
  1. ஆள்கடத்தல்:
  • ஆள்கடத்தலில் அதிகம் பாதிக்கப்படுவது படிப்பறிவு இல்லாத பெண்கள் (ம) ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
  • இளம்பெண்களுக்கு அடிப்படைத்திறன்கள் (ம) அவர்களுக்குத் தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதினால் ஆள்கடத்தல்கள் கணிசமாகக் குறைக்கப்படும் என ஐ.நா.வின் இடைமுகமைத் திட்டம் விளக்குகின்றது.
  1. அரசியல் பிரதிநிதித்துவம்:
  • உலகம் முழுவதும் பெண்கள் வாக்காளர்களாக உள்ளனர். அவர்களது அரசியல் ஈடுபாடு கட்டுப்படுத்தப்படுகிறது.
  • குடிமைக்கல்வி (ம) குடிமைப் பயிற்சி என அனைத்து விதமான மேம்பாடு (ம) முன்னேற்றத்திற்கான தடைகளை உடைக்கின்றது என ஐ.நாவின் பெண்களுக்கான தலைமை (ம) பங்கேற்பு பற்றிய ஆய்வு பரிந்துரைக்கின்றது.
  1. வளரும் குழந்தைகள்:
  • கல்வியறிவு பெற்ற தாய்மார்களின் குழந்தைகள், கல்வியறிவு பெறாத தாய்மார்களின் குழந்தைகளுடன் ஒப்பிடப்படுகிறது.
  • இதில் கல்வியறிவு பெற்றவர்களின் குழந்தைகள் இருமடங்கு அதிகரித்து, 5 வயதுக்கு மேல் வாழ வாய்ப்புள்ளது என ஐ.நா.வின் பெண்களுக்கான கல்வி முனைப்பு நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
  1. காலம் தாழ்த்திய திருமணம்:
  • பின்தங்கிய நாடுகளில் மூன்றில் ஒரு பெண்குழந்தைக்குப் 18 வயதிற்குள் திருமணமாகி விடுகிறது.
  • எந்த நாடுகளில் பெண்குழந்தைகள் 7 (அ) அதற்கும் மேலான வருடங்கள் படிக்கிறார்களோ அவர்களின் திருமணம் 4 ஆண்டுகள் வரை தள்ளிப்போகிறது.
  • இதனை ஐ.நா.வின் மக்கள்தொகை நிதியம் பரிந்துரைத்துள்ளது.
  1. வருமான சாத்தியம்:
  • யுனஸ்கோவின் கூற்றுப்படி, கல்வி ஒரு பெண்ணின் வருமானம் ஈட்டும் திறனை அதிகரிக்கிறது.
  • ஒரு பெண் ஆரம்பக்கல்வி பெற்றாள் கூட அந்த பெண்ணின் வருவாயில் 20மூ வரை அதிகரிக்க உதவுகின்றது.
  1. மொத்த உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துதல்:
  • பெண்கள் (ம) சிறுவர்களுக்கு கல்வ வாய்ப்புகள் வழங்கப்படும் போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியானது உயருகிறது.
  • 10% கூடுதலாக பெண்கள் கல்வி கற்றால், மொத்த உள்நாட்டு உற்பத்தி சராசரியாக 3% அதிகரிக்கின்றது.
  1. வறுமை குறைப்பு:
  • பெண்களுக்கு கல்வியில் உரிமைகள், சமவாய்ப்புகள் வழங்கப்பட்டால் அவர்களும் பொருளாதார செயல்பாடுகளில் பங்கேற்பர்.
  • இதனால் அவர்களின் வருவாய் ஈட்டும் திறன் அதிகரித்து, வறுமை அளவைக் குறைக்க வழிஏற்படும்.
Scroll to Top