6.கல்வியறிவின்மை
கல்வி கற்பதை வலியுறுத்தும் அரசியலமைப்பு விதிகள்:
சரத்துகள்: 15, 21A, 30(1), 45, 51A (K), 51(h)
சரத்து 15
பாலின அடிப்படை பாகுபாடு காட்டக்கூடாது.
சரத்து 21A
6 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கட்டாய (ம) இலவசக் கல்வியை பெற வேண்டும் என்பது அடிப்படை உரிமை (86வது திருத்தம் – 2022)
சரத்து 30 (1)
சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை நிறுவ உரிமை
சரத்து 45
குழந்தைகள் (ம) 6 வயதிற்குட்பட்டோரின் கல்வி (ம) பாதுகாப்பினை உறுதி செய்தல் அரசின் கடமை – 86வது திருத்தம் 2002
சரத்து 51A (k)
6 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்பினை வழங்குவது ஒவ்வொரு இந்தியக் குடிமகனான பெற்றோர் (ம) காப்பாளரின் கடமையாகும். – 86வது திருத்தம் 2002
சரத்து 51A (h)
விஞ்ஞான நோக்கு, மனிதாபிமானம், ஆராய்ந்து சீர்திருத்தம் செய்யும் மனநிலை முதலியவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
42வது திருத்தம் – 1976
கல்வி மாநிலப்பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது.
கல்வி உரிமை பாதிக்கப்பட்டால் சரத்து 32, 226
எழுத்தறிவின்மைக்கான காரணங்கள்:
- பரவலாகியுள்ள 21.9% வறுமை (ம) வேலைவாய்ப்பின்மை
- மிக விரைவான மக்கள் தொகை பெருக்கம் (ம) வளப்பற்றாக்குறை
- கல்விக்கு ஆகும் அதிகபட்ச செலவு
- ஏற்கனவே படித்த மக்களுக்கு வேலையில்லாநிலை
- பள்ளிகளில் (ம) கல்லூரிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவு.
- கல்வி உதவித்தொகை, ஊக்கத்தொகை போன்றவை கிராமப்பகுதிகளை சென்றடைவதில்லை.
- குடும்பத்தில் நிலவும் ஏழ்மைநிலை.
- பெற்றோர்களின் குறைந்த கல்வி.
- அரசின் குறைந்த கல்வி நிதி ஒதுக்கீடு – 6% பட்ஜெட்டில்.
- ஆரம்ப பள்ளிகள் திறம்பட செயல்பாடாமை.
- சமத்துவமின்மை.
- பெண் குழந்தைகளை பழக்க வைப்பதில் ஏற்படும் தடைகள்.
- எழுத்தறிவு பெறும் வயது வந்தவர்கள் தொகையைவிட, மக்கள் தொகை பெருக்கம் மிக அதிகமாக உள்ளது.
- புதிய மாணவர்களைச் சேர்ப்பதிலும், சேர்ந்துள்ள மாணவர்களைத் தொடர்ந்து கல்வி கற்கச் செய்வதிலும் ஆரம்பப் பள்ளிகள் திறம்பட செயல்படாமை.
- அந்நியர் ஆட்சியால் ஆரம்பக் கல்வியைப் பரப்ப போதுமான நடவடிக்கை எடுக்காதது.
- மக்களிடையே விழிப்புணர்வு இன்மை
நாட்டின் வளர்ச்சியில் எழுத்தறிவின்மையின் பொருளாதார தாக்கம்:
- அடிப்படைத் தகவல்களைக் குறைவாக புரிந்துகொள்ளும் (ம) உள்வாங்கும் திறன் உருவாதல்
- இளநிலை பட்டதாரிகள் வேலையின்மை விகிதம் 2 முதல் 4 மடங்கு அதிகமாதல்
- குறைந்த வருமானம்
- குறைவான தரமுள்ள வேலைவாய்ப்புகள்
- வாழ்க்கை முழுவதும் கற்கும் திறன் (ம) தொழில் மேம்பாட்டுத்திறன் குறைதல்
- நிலையற்ற பொருளாதார நிலை
- குடும்பங்களில் உள்ள நபர்களிடையே கல்வியைப் பற்றிய குறைவான மதிப்பீடு உருவாதல்
- குறைவான சுய மதிப்பீடு
- கல்வியறிவானது ஒவ்வொரு தனி மனிதனின் ஆயுதம்
- எழுத்தறிவின்மையால் வேலைபார்க்கும் இடங்களில் ஏதேனும் விபத்துகள் ஏற்பட்டாலும், சரியான மருத்துவ முறைகளை மேற்கொள்வதில்லை.
தற்போதைய கல்வி முறையின் குறைபாடுகள்:
- தற்போதைய கல்விமுறை சமூகத்தின் சமூக பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்வதாக இல்லை.
- கல்விக்கான பட்ஜெட் திட்ட ஒதுக்கீடு மிகக்குறைவு (6% க்கும் கீழ்)
- மாறிவரும் சமூக நிலைகளுக்கு ஏற்ப அறிவைப் பெருக்கும் ஒன்றாக இல்லை.
- உலகில் வளர்ந்து வரும் தொழில் நுட்ப சவால்களை எதிர்கொண்டு, துறைசார்ந்த வேலை வாய்ப்புகளை பெரும் திறனுடையதாக இல்;லை.
- நமது கல்விமுறை மதிப்பீடு சார்ந்ததாக இல்லை. மேலும் இந்திய மயமாக்கம் உள்ளதாக இல்லை.
- இது சிறந்த தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அதிகார வர்க்கத்தினர், தொழிலதிபர்கள் ஆகியோரை உருவாக்கத் தவறிவிட்டது.
- தற்போதைய கல்வி முறை தனிநபர் பயனைக் கருத்தில் கொண்டுள்ளது. இது பொருள்முறை சாரா உயர்ந்த மனிதர்களை உருவாக்கத் தவறிவிட்டது.
- புதிய தலைமுறையினரிடையே தேசிய உணர்வை ஊட்ட தவறிவிட்டது.
- வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது
எழுத்தறிவின்மை ஒழிப்புத்திட்டம்:
- பெருகிவரும் கல்வி நிறுவனங்கள் இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு கல்வியறிவை அளித்துள்ளது.
- பெண்கல்வி விகிதம் அதிகரித்துள்ளது.
- ஆண் – பெண் சமூக இடைவெளி குறைந்துள்ளது.
- கல்வியறிவு விகிதம் அதிகரித்துள்ளது.
- ஆரம்ப கல்வி அதிகரித்துள்ளது.
- இடை நிற்றல் விகிதம் குறைந்துள்ளது.
திட்ட தோல்விக்கான காரணங்கள்:
- பல முயற்சிகளை அரசு எடுத்த போதும், உணவுப் பொருள் பற்றாக்குறை, வேலையின்மை போன்றவற்றால் தோல்வி அடைந்தது.
- வயது வந்தோர் கல்வித்திட்டம், அடிமட்ட நிலையில் உள்ளவர்களின் ஆதரவைப் பெறவில்லை.
- திட்டங்கள் மாநிலத்தை மனதில் வைத்தே முடிவு செய்யப்பட்டன.
- திட்டங்கள் கிராமங்கள், வட்டாரங்கள் அங்குள்ள மக்களின் தேவைகள், பிரச்சனைகளை அடையாளம் கண்டு அதற்கேற்ப தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
- போதிக்கும் முறைக்கு முக்கியத்துவம் தரப்பட்டதே தவிர, தொண்டு நிறுவனங்கள் எழுத்தறிவுடன் செயல்திறனையும் சொல்லித்தர ஊக்கம் தரப்படவில்லை.
பிற காரணங்கள்:
- சமுதாயத்தின் ஈடுபாட்டுக்குறைவு
- அரசு நிர்வாகத்தின் போதுமான ஆதரவுக்குறைவு
- கற்கவருபவர்களுக்கு போதுமான ஆர்வமின்மை
- போதுமான பயிற்சி இன்மை
- கல்வியறிவு பெற்றதன் பின்தொடர் திட்டங்கள் இல்லாதது
- NGO உள்ளாட்சி அமைப்பு, மக்கள், ஆசிரியர்கள், அரசு என ஒருங்கிணைக்கும் திட்டங்கள் வகுக்கப்படவில்லை.
தோல்விக்கான முக்கிய காரணங்கள்:
- கல்வி மையங்களில் போதுமான கல்வி உபகரணங்கள் இல்லை.
- கல்வி மையங்களை கற்போர் தேடிச் செல்ல ஊக்கத்தொகை ஏதும் வழங்கப்படவில்லை.
- கற்பவர்கள் மையங்களுக்கு கற்க வராமல் இருப்பதற்கான காரணங்கள். நேரமின்மை, பொருளாதார வசதியின்மை, குடும்பத்தில் விருப்பமின்மை
- திட்டத்தை அமல்படுத்துபவர்களிடையே அக்கறையின்மை
- கல்வியறிவு பெற்றால் மலிவான கூலியாட்கள் கிடைக்காதென சிலர் மறைமுகமாகத் தடை செய்தனர்.
- திட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு போதிய பயிற்சி இன்மை
- நீக்குபோக்கற்ற சட்டதிட்டங்கள்
- சரியான மதிப்பீட்டு சீராய்வு முறை இல்லை.
- NLM திட்டத்தின் கீழ் கல்வி கற்க நிர்ணயிக்கப்பட்டிருந்த 6 மாத காலம் அதிகம்
- பாடத்திட்டம் கடினமாக இருந்தது
- வயது வந்தோர் கல்வித்திட்டத்தில் தன்னார்வம் என்பது கைவிடப்பட்டு கட்டாயம் என்ற நிலை ஏற்பட வேண்டும்.
எழுத்தறிவின்மை:
- ஒரு மனிதர் ஏதேனும் ஒரு மொழியில் எழுதவோ, படிக்கவோ தெரியாதநிலை எழுத்தறிவின்மை எனப்படும்.
- இந்திய மக்களில் 26% பேர் கல்வியறிவற்றோர்
- மேலும் பெரும்பாலானோர் குறைகல்வியறிவு உடையோர்
- கல்வியறிவின்மையால் சமூக பழக்க வழக்கங்கள் வறுமை, வேலையின்மை போன்ற காரணிகள் அதிகரித்து மக்கள் தொகையை வளர்ச்சி அடையச் செய்கிறது.
எழுத்தறிவின்மையும் மக்கள் தொகைப் பெருக்கம்:
- 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மக்கள்தொகை – 121 கோடி
- இந்தியாவின் எழுத்தறிவு – 74.04%
- தமிழ்நாட்டின் எழுத்தறிவு – 80.33%
- பொதுவாக பெண்கல்வியால் மக்கள்தொகை பெருக்கம் குறையும் என நம்பப்படுகிறது. ஆனால் புள்ளி விவரங்கள் இக்கூற்றினை மெய்ப்பிக்கவில்லை.
- எடுத்துக்காட்டாக: 1981 – 1991 இடையில் ராஜஸ்தானில் பெண்கல்வி அளவு 9.42% உய்ந்தது. ஆனால் மக்கள்தொகை பெருக்க அளவு 0.35% மட்டுமே குறைந்தது.
- மணிப்பூர், மேகாலயா, நாகலாந்து, சிக்கிம், திரிபுரா போன்ற சிறிய மாநிலங்களிலும் இதே போன்றநிலை காணப்படுகிறது.
- ஒட்டுமொத்த எழுத்தறிவு விகிதத்தையும் மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தையும் எடுத்துக் கொண்டால், அவை இரண்டிற்கும் இடையே எவ்விதமான நேரடி தொடர்பும் காணப்டுவதில்லை.
- இதே போன்ற கணக்கெடுத்தலில், கல்வி விகித அதிகரிப்பால் 11 மாநிலங்களில் மக்கள் தொகை பெருக்க விகிதம் குறைந்தது எனவும். 7 மாநிலங்களில் அதிகரித்தது 2 மாநிலங்களில் எழுத்தறிவு அதிகரித்தும் மக்கள்தொகைப் பெருக்கம் கூடவும் இல்லை குறையவும் இல்லை.
- எனவே எழுத்தறிவு நிலை அதிகரித்தால், மக்கள் தொகை வளர்ச்சி தானாக குறைந்துவிடும் எனக் கருதுவது சரியானது அல்ல.
- அதே நேரத்தில் (எழுத்தறிவு நிலையினை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்காமல், முழுமையாக புறக்கணிப்பதும் தவறானது).
- பெண்கள் எழுத்தறிவு பெறுவதால் இளம்சிசு மரணம் குறைகிறது (ம) முதியோர் பாதுகாப்பு அதிகரிக்கிறது.
- எப்படி இருப்பினும் எழுத்தறிவின்மை ஒரு சாபக்கேடு, அதனை எப்படியாவது ஒழித்தே தீர வேண்டும்.
எழுத்தறிவின்மையும் மாணவர்களும் – யக்ஷ்பால் குழு:
- வயது வந்தோர் கல்வித்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மாணவர்களை ஈடுபடுத்தலாம்ட என பேராசிரியர் யக்ஷ்பால் கருத்து தெரிவித்தார்.
- எல்லாப் பல்கலைக்கழகம் (ம) கல்லூரிகளை மூடிவிட்டு (ஒராண்டு காலத்திற்கு மட்டும் எழுத்தறிவு இயக்கத்தில் மாணவர்கள் பணியாற்ற வேண்டும் என்றார்.
- திட்டக்குழுவும் இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கமும் 1991ல் ஆய்வு செய்தது
- பின் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களின் பாடத்திட்டத்தில் எழுத்தறிவு இயக்கத்தை இடம்பெற (ம) கோடைவிடுமுறையில் மாணவர்கள் இப்பணியில் ஈடுபட பரிந்துரைத்தது.
மாணவர்களைப் பயன்படுத்துதல்:
- எழுத்தறிவு இயக்கத்தில் ஏற்பட்டுள்ள தேக்கநிலையைப் போக்க, நமது மாணவர் சக்தியால் முடியும்.
- புள்ளி விவரத்தின் படி, எழுத்தறிவு இல்லாத வயது வந்தவர்களில் 80% பேர், நாட்டில் இந்தி பேசும் பகுதிகளிலேயே வாழ்கின்றனர்.
- P, பீகார், ராஜஸ்தான், M.P, H.P, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்களை கோடை விடுமுறைக் காலத்தில், வயது வந்தோர் கல்விக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- மருத்துவம், பொறியியல் போன்ற கல்விநிலைய அனுமதியின் போது, அவர்களுக்கு முன்னுரிமையம் தரலாம்.
- எழுத்தறிவு பிரச்சாரங்கள் மேற்கொள்வதில் பல்கலைக்கழகங்கள் அண்மை அணுகுமுறையினை பின்பற்ற வேண்டும்.
- இத்திட்டமானது குறிப்பிட்ட காலத்திற்கு உட்பட்டதாகவும், குறைவான செலவு கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
- மாணவர்கள் எழுத்தறிவற்றவர்களுக்கு கல்வி போதிப்பதற்காக, இரண்டு மாத காலத்திற்கு தினம் 2 – 3 மணி நேரம் செலவிட வேண்டும்.
- கல்வி கற்போருக்கான செலவும் மிகக் குறைவாக இருக்க வேண்டும்.
- தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண் அளித்தல், அவர்கள் விரும்பும் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான சிறப்பு சலுகைகள் அளித்தல் மூலம் கல்வியினை பரவச் செய்வதில் மாணவர்களை ஈடுபடுத்தலாம்.
- இந்த மாணவர்கள் தமது அருகாமையில் வசிக்கும் 10 பேர் கொண்ட குழுவினருக்கு கல்வி கற்றுத்தர முடியும்.
- இதனால் பல லட்சக்கணக்கானோர் கல்வியறிவு பெற் இயலும்.
இந்தியாவின் கல்விநிலை:
- 1901 – 5.3% 3% – 16.7 → 74.4%
- 1951 – 1.7%
- 1991 – 52.11%
- 2001 – 65%
- 2011 – 74.04%
தமிழ்நாட்டின் கல்வி நிலை 2011ல் 80.33%
இந்தியாவின் கல்வி மேம்பாட்டு நிலை:
பிரிட்டிக்ஷ் வருகைக்கு முன்:
- கல்வியறிவு விகிதம் – 3.2%
- கிழ்தட்டு மக்களுக்கு கல்வியறிவு மறுக்கப்பட்டது.
- மேல்தட்டு மக்களுக்கு குருகுலக்கல்வி வழங்கப்பட்டது
- பெண்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டது.
பிரிட்டிக்ஷ் ஆட்சியின் போது:
- பட்டயச் சட்டம் – 1813: கல்விக்காக 1 லட்சம் ஒதுக்கப்பட்டது.
- மெக்காலே குழு – 1835: ஆங்கிலம் பயிற்று மொழியாக்கப்பட்டது.
- உடல் கல்வி அறிக்கை – 1854 : இந்திய கல்வியின் மகாசாசனம்
- ஹண்டர்குழு அறிக்கை – 1882
- சர்கண்ட் திட்டம் – 1944
- பல்கலைக்கழகம் – 1904
சுதந்திரத்திற்கு பின்பு:
- தேசிய கல்விக்கொள்கை – 1986 (1968), 2019
- மதிய உணவுத்திட்டம் – 1995
- SSA – 2001
- RMSA – 2010
- RTEACT – 2009
எழுத்தறிவின்மை குறைப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள்:
கொள்கைகள் குழுக்கள் எசீசாட் – 3
அரசின் நடவடிக்கைகள் → ஐந்தாண்டு திட்டங்கள்
1.அடிப்படை உரிமை
பட்ஜெட் – நிதி ஒதுக்கீடு (6%), மதிய உணவு திட்டம்
நமது அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக கல்வி உரிமையை மாற்றியது.
2.கல்வி சார்ந்த சரத்துகள்
சரத்து 21A, 30(1) 45, 51A(k), 51A(h), 15
3.கல்விக் குழுக்கள்
பல்கலைக்கழக மானியக்குழு – 1948 (தாய் மொழிக்கல்வி)
இடைநிலைக் கல்விக்குழு – 1953 (லட்சுமண முதலியார்)
தேசிய கல்விக் குழு – 1968 (10 + 2 + 3 முறை)
4.தேசியக் கல்வி கொள்கை
தேசிய கல்விக் கொள்கை – 1968 (10 + 2 + 3 முறை)
புதிய கல்விக் கொள்கை – 1986 (ஆரம்ப கல்வி கட்டாயம்)
புதிய கல்விக் கொள்கை – 2019
5.கருப்பலகைத் திட்டம் – 1992
பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதி, ஆசிரியர்களின் நியமனம் ஆகியவற்றை மேம்படுத்தியது.
6.குறைந்த பட்சகற்றல் திட்டம் – 1991
பேராசிரியர் டேவ்ஸ் தாவே அவர்கள் அறிமுகப்படுத்திய திட்டம் மூலம் ஆரம்ப கல்வி வளர்ச்சி அடைந்துள்ளது.
7.தேசிய எழுத்தறிவு இயக்கம் – 1988
2007 க்குள் 75% எழுத்தறிவு நிலையை எட்ட 15 – 35 வயதினருக்கு செயலறிவுக் கல்வி வழங்குதல்.
8.மாவட்ட தொடக்கக்கல்வித்திட்டம் – 1994
அனைவருக்கும் தொடக்கக் கல்வியை வலுவூட்டும் விதமாக, சுமார் 15,000 பள்ளிகள் துவக்கப்பட்டன.
9.தேசிய வயது வந்தோர் கல்வித்திட்டம் – 1978
15 – 35 வயதிற்குட்பட்டோருக்கு கல்வி வழங்குதலும் எழுத்தறிவற்ற மக்களின் எழுத்தறிவை மேம்படுத்துதலும் நோக்கமாகும்.
10.ஊரக எழுத்தறிவு செயல்திட்டம் – 1986
நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் (ம) தன்னார்வ தொண்டர்கள் மூலம் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
11.ஜன் சிக்க்ஷன் சன்ஸ்தன்
இது ஒரு முறைசாரா தொழிற்கல்வி வழங்கும் நிறுவமாகும்
12.சுக்சார் பாரத்திட்டம் – 2009
வயதுவந்தோர் கல்வியை மேம்படுத்தும் பொருட்டு, முறையான கல்வி பெறாதவர்களின் எழுத்தறிவை மேம்படுத்துகிறது.
- SSA 2000 – 01
2010 க்குள் 6 – 14 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வியை வழங்குதல்
- RMSR – 2009
இடைநிலைக்கல்வியை 2017 க்குள் அனைவருக்கும் கிடைக்கும் படிச் செய்தல்
15.கல்வி உரிமைச் சட்டம் 2009
6 – 14 வயதுள்ள எல்லாக்குழந்தைகளுக்கும் இலவச (ம) கட்டாயக் கல்வி பெறுவது அடிப்படை உரிமையாக்கப்பட்டு உள்ளது – சரத்து 21A
16.தொடர்கல்வித்திட்டம் – 1995
நவீன கல்வி அறிவு பெற்றவர்களுக்கான, கல்வியறிவிற்கு பிந்தைய திட்டமாகும்.
- கல்விக்கான செயற்கைக் கோள் – 2004
எஜிசாட் – 3, கல்வித்துறைக்காகவே உருவாக்கப்பட்ட முதல் செயற்கைக்கோளாகும்.
18.தேசிய கல்வி ஆராய்ச்சி (ம) பயிற்சி அமைப்பு 1961
பள்ளிக்கல்வி தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்குவது (ம) உதவியாக இருக்கிறது.
- ரசிக் யான்
SSA, RMSR, ஆசிரியர்கள் கல்வி என இணைந்தது
கல்வி சார்குறியீடுகள் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி
இந்தியா தமிழ்நாடு
- எழுத்தறிவு விகிதம் 74.04% 80.33%
- ஆண்கள்
- பெண்கள் 65.46% 73.86%
20.கல்விக்காக தமிழக அரசின் நடவடிக்கைகள்
- மதிய உணவுதிட்டம்
- கல்வி தொலைக்காட்சி
- 16 இலவச பொருட்கள்
- இல்லம் தேடி கல்வித் திட்டம்
தேசிய கல்விக் கொள்கை:
- 1966 – கோத்தாரி கல்விக்குழு அமைக்கப்பட்டது.
- 1966 – அறிக்கை சமர்பிக்கப்பட்டது.
- 1968 – தேசிய கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டது.
- 1986 – புதிய கல்விக்கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது.
- 2019 – தேசிய கல்விக்கொள்கை மசோதா அறிமுகம்
தேசிய கல்விக்கொள்கையின் சிறப்பியல்புகள்:
- 10 +2 +3 கல்விமுறையை நாடு முழுவதும் அறிமுகம் செய்தல்
- தொழிற்கல்வியுடன் கூடிய வயதுவந்தோர் கல்வித்திட்டம்
- கல்வியின் மதிப்பினை பெருகச் செய்தல்
- ஆசிரியர்கள் கடமை, பொறுப்புணர்வை அதிகரித்தல்
- பட்டங்களை பணியிலிருந்து பிரித்தல்
- தேர்வு முறையில் சீர்திருத்தம்
- விளையாட்டு, உடற்கல்விக்கு முக்கியத்துவம்
- பெண்கள், தாழ்த்தப்பட்டோர், SC/ST ஆகியோருக்கு கல்வியில் சமவாய்ப்புகளை ஏற்படுத்தி தருதல்
- சமூக தேவைகளுக்கு ஏற்ப உயர்கல்வியில் மறுவரைவு செய்தல்
- முறையான பாடத்திட்டத்தை உருவாக்குதல்
- அறிவியல் (ம) தொழில்நுட்ப ஆராய்ச்சி
- 14 வயது வரை இலவச கட்டாயக் கல்வி
- முதல் 10 ஆண்டு பள்ளிக்கல்வியில் 5 ஆண்டுகள் ஆரம்ப கல்வியாகவும், 3 ஆண்டுகள் நடுநிலைப்பள்ளி கல்வியாகவும், 2 ஆண்டுகள் உயர் கல்வியாகவும் இருத்தல் வேண்டும்.
- அனைவருக்கும் தொடக்கக்கல்வி
- வயது வந்தோருக்கான கல்வி அறித்தல்
தேசிய கல்விக் கொள்கை மசோதா – 2019:
நோக்கம்:
“இந்தியாவை உலகளாவிய அறிவுசார் வல்லரசாக மாற்றுதல்”
நிறைகள்
- அனைவருக்கும் பள்ளி படிப்பை கிடைக்கச் செய்தல்
- இதன் மூலம் சுமார் 2 கோடி பள்ளி மாணவர்கள் மீண்டும் கல்வி நிறுவனங்களுக்கு வர முடியும்
- 5 + 3 + 3 + 4 கல்வி முறை
- வயது 3 – 8 8 – 11, 11 – 14, 14 – 18
- இதில் அங்கன்வாடி (ம) முன் பள்ளி கல்வி சேர்க்கப்பட்டால் 12 ஆண்டுகள் பள்ளிபடிப்புடன் 3 ஆண்டுகள் சேர்க்கப்படும்
- கல்விக்கான தேசிய பாடத்திட்டம் (ம) கலைத்திட்டத்தை NCERT வடிவமைக்கும்.
- இத்திட்டம் இரு பாலரையும் உள்ளடக்கிய நிதியத்தை அமைக்கும்.
- தேசிய கல்விக்கொள்கை பராக் எனும் திறானயும் முறையைக் கொண்டது.
- ஒவ்வொரு மாநிலம், மாவட்டத்திலும் பகல்நேர உறைவிடப்பள்ளி நிறுவப்படும்.
- IIT, IIM நிகரான கல்வி (ம) ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டது.
- அரசு (ம) தனியார் கல்வி அமைப்புகளுக்கு ஒரே வகையான அங்கீகாரம் 12 இடைநிற்றல் தவிர்ப்பு
கல்வி உரிமைச்சட்டம் – 2009:
கல்வி உரிமைச்சட்டம் – 2009 – 2010 ஏப்ரல் 1 நடைமுறை:
- சட்டவிதி 21A (ம) கல்வி உரிமைச்சட்டமானது 2010, ஏப்ரல் 1 அன்று நடைமுகை;கு வந்தது.
- கல்வி உரிமைச் சட்டத்தின் தலைப்பில் “இலவச (ம) கட்டாய” என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டன.
சட்டத்தின் சிறப்பியல்புகள்:
- 6 – 14 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச (ம) கட்டாயக்கல்வி பெறுவது அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளது.
- தொடக்க கல்வி பெறுவது குடிமக்கள் அனைவருக்கும் அடிப்படை உரிமை அடிப்படை உரிமை
- தனியார் பள்ளிகள் தங்களது வகுப்பறையில் உள்ள மொத்த மாணவர்களில் 25% இடத்தை, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும்.
- இந்த மாணவர்களுக்கான நிதி அரசு அளிக்கும்
- இந்த ஒதுக்கீட்டு முறையின் கீழ் எந்த ஒரு இடமும் நிரப்பப்படாமல் காலியாக விடக்கூடாது.
- இந்த குழந்தைகள் பள்ளியில் சரிசமமாக நடத்தப்பட வேண்டும்.
- 3 வருடத்திற்குள் பள்ளிகள் அனைத்தும் தரநிர்ணயங்களை பூர்த்தி செய்திட வேண்டும்.
- அனைத்து தனியார் பள்ளிகளும் அங்கீகாரம்பெற தவறும் பட்சத்தில், ரூ 1லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
- ஆசிரியர்களுக்கான தகுதிகள், பயிற்சிவிதிமுறைகள் வகுக்கப்படும்.
- நன்கொடைகள் (ம) கட்டாய நன்கொடைகளுக்கு அனுமதி இல்லை.
- பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு மாணவர் / பெற்றோரிடம் நேர்காணல் (அ) தேர்வு நடத்தக் கூடாது.
- இந்த சட்டம் செயல்படுவதனை கண்காணிக்க ஓர் ஆணையம் அமைக்கப்படும்
- பள்ளி மேலாண்மை குழுவில் உள்ள மொத்த உறுப்பினர்களில் 75% பெற்றோர்கள் / பாதுகாவலர்கள் இருக்க வேண்டும்.
- குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இச்சட்டம் செயல்படும் விதத்தினை கட்டாயம் கண்காணிக்க வேண்டும்.
சட்டவிதி:
- 51A (k) ஒவ்வொரு தந்தை (அ) காப்பாளர்கள் தங்களது குழந்தைகளுக்குத் தேவையான அடிப்படை கல்வியை வழங்க அருகிலுள்ள பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.
- கல்வி உரிமை மறுக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட நபர் மனு மூலம், சரத்து 32, சரத்து 226 ன் படி உச்ச / உயர் நீதிமன்றத்தை அணுகலாம்.
சமீபத்திய மாற்றங்கள்:
- ஜனவரி 3, 2019 அன்று கட்டாய கல்வி உரிமை (திருத்தம்) சட்டம் 2009 ஆனது பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது.
- இந்த மசோதா பள்ளிகளில் செயல்பாட்டில் உள்ள கட்டாய தேர்ச்சி கொள்கையினை நீக்க முற்படுகிறது.
சர்வ சிக்க்ஷா அபியான் – 2000 – 2001:
- அனைவருக்கும் ஆரம்ப கல்வியை கிடைக்கச் செய்தல்
- அடிப்படையிலிருந்து சமூக நீதியை ஊக்கப்படுத்தும் வாய்ப்பினை வழங்குகிறது.
- மத்திய, மாநில, உள்ளாட்சி அரசு அமைப்புகளிடையே ஒரு கூட்டுறவை ஏற்படுத்துகிறது.
- பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகங்களின் செயல்பாடு கூறப்பட்டுள்ளது.
நோக்கங்கள்:
- 2010 க்குள் 6 முதல் 14 வய வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் பயனுள்ள ஆரம்பக் கல்வியை வழங்குதல்
- 0 – 14 வயது வரை குழந்தைகளின் நலன் (ம) ஆரம்பக்கல்வியின் முக்கியத்துவத்தை உணர வைப்பது.
- இயற்கை சூழலுடன் இணைந்து குழந்தைகள் தங்களது ஆற்றலை வள்த்துக் கொள்ளுதல்
- மதிப்புக் கல்வியை அளித்தல்
- தீவிரமான சமுதாய பங்களிப்பினை, பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து சமூக, வட்டார, பாலின வேறுபாடின்மையை கட்டமைத்தல்
கொள்கைகள்:
- பள்ளியிலுள்ள அனைத்துக் குழந்தைகள் கல்வி உறுதிமையங்கள் மாற்றுப் பள்ளிகளில் பள்ளிக்குத் திரும்புவோம்” முகாம் 2003 ல் ஆரம்பிக்கப்பட்டது.
- 5 வயது நிரம்பிய அனைத்துக் குழந்தைகளையும் 2007 க்குள் ஆரம்பம் பள்ளியில் சேர்க்க வேண்டும்.
- அனைத்துக் குழந்தைகளும் 2010 க்குள் ஆரம்பக் கல்வியை பூர்த்தி செய்திக்க வேண்டும்.
- ஆரம்பக்கல்வி தரமானதாகவும், வாழ்க்கைக்கான கல்வியாக அமையும் நோக்கத்தில் வலுப்படுத்த கவனம் செலுத்த வேண்டும்.
- அனைத்து சமூக – பாலின வேறுபாடுகள் ஆரம்பநிலையில் 2007 க்குள் களையப்பட்ட வேண்டும்.
ராக்ஷ்ட்ரிய மத்திய சிக்க்ஷா அபியான் – 2009:
- SSA வின் பயனாக பல லட்சம் குழந்தைகள் 8ம் வகுப்பு வரை பயின்றால், இடைநிலைக் கல்விக்கான தேவை அதிகரித்தது.
- மார்ச் 2009 ல் தொடங்கப்பட்டது.
- இடைநிலைக் கல்வியின் தரத்தை உயர்த்துதல் (ம) அனைவருக்கும் கிடைக்கும் படிசெய்தல் நோக்கமாகும்.
- இத்திட்டத்திற்கான மத்திய, மாநில அரசின் செலவுகள் 75:25
- 10 வகுப்பு வரையிலான கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
நோக்கம்:
- குடியிருப்பு பகுதியிலிருந்து 5 கி.மீ தொலைவிற்குள் இடைநிலைக் கல்வி நிலையம் அமைத்தல்
- 7 – 10 கி.மீ தொலைவிற்குள் மேல்நிலைக்கல்வி நிலையம் அமைத்தல்
- இடைநிலைக் கல்வியை 2017 க்குள் கிடைக்கச் செய்தல்
- பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு அதிக முக்கியத்துவம் வழங்குதல்
- நலிவடைந்த பிரிவினர், சமுதாயத்தில் பின்தங்கியோரின் குழந்தைகள் இடைநிலைக் கல்வி பெற வாய்ப்புகளை ஏற்படுத்தி தருதல்
வயது வந்தோருக்கான கல்வித்திட்டங்கள்:
1.அடிப்படை கல்வி – 1947 வரை:
- இரவு நேர பள்ளிகள் விரிவாக்கம்
- இது பாரம்பரிய கல்வி அணுகுமுறை உடையது
- பயிற்சி காலம் – 2 ஆண்டுகள்
- இதன் அடிப்படையில் 1938 – 39 ல் தூதரக பிராந்திய கல்வி பிரச்சாரங்கள் பல தொடர்ந்து நடைபெற்றது.
2.குடிமை கல்வி – 1949 – 66:
- இது வாழ்க்கை சம்பந்தப்பட்ட அணுகுமுறையை உடையது.
- சமூகக் கல்வியின் மீது கவனம் செலுத்துதல்
- இது 1952ல் சமுதாய வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டது.
3.செயல்பாட்டுக் கல்வி 1967 – 77:
- தொழிற்கல்வியை அடிப்படையாகக் கொண்டது.
- கல்வியானது கற்போரின் தொழிலோடு இணைக்கப்பட்டு, அவரின் முன்னேற்றத்துடன் நேரிடை தொடர்பு உடையது.
- இது விவசாயிகளுக்கான கல்வி மீது கவனம் செலுத்தியது.
முன்னேற்றம் சார்ந்த கல்வி 1978 முதல்:
- சமூக மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டது.
- கல்வியானது ஒரு தனிமனிதனின் சுதந்திரமான செயல்பாடு (ம) முழுவளர்ச்சிக்கும் காரணமாகிறது.
- முழு கல்வி இயக்கத்தின் மீது கவனம் செலுத்தப்பட்டது.
தேசிய வயதுவந்தோர்க்கான கல்விதிட்டம் 1978 அக்டோபர் 2:
- 15 – 35 வயது வரை உள்ள கல்வி அறிவற்றவர்களுக்கு கல்வியை பரப்புதல்
- இது மத்திய, மாநில NGO, பல்கலைக்கழக கல்லூரிகள், இளைஞர் அமைப்புகளை இணைந்த ஒரு கூட்;டமைப்பாகும்
- செயல்பாட்டு கல்வி அளித்தல்
- அரசின் சட்டங்கள், கொள்கைகள் பற்றிய விழிப்புணர்வை அளித்தல்
- பெண்கள், SC, ST நலிந்த பிரிவினருக்கான கல்வியின் மீது சிறப்பு கவனம் செலுத்தியது.
கிராமப்புற செயல்பாட்டு கல்வித்திட்டம் – 1986:
- இது தேசிய வயது விந்தோர்க்கான கல்வி திட்டத்தின் துணைத்திட்டம்
- மத்திய அரசு 100% நிதி அளித்தது
- பயிற்சி பெறுபவர்களுக்கு படித்தல் (ம) எழுதுவதற்கான திறமைகளை மேம்படுத்தியது.
- பல்வேறு சமூக பொருளாதார திட்டங்களின் பயன்களை ஒருங்கே வழங்கியது.
கொள்கை முறை:
- ஒவ்வொரு வரும் ஒவ்வொருவரை
- கல்லூரி (ம) பல்கலைக்கழகத்தில் உள்ள தன்னார்வ மாணவர்களை ஈடுபடுத்துவது
- திட்டமானது பயிற்சியாளர்களின் தேவை (ம) மொழியினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.
- 15 – 35 வயதுவரை உள்ளவர்களில் கல்வி அறிவு அற்றவர்களை அடையாளம் காண்பது
- அனைத்து வகையான துறைகள் (ம) நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.
- கல்வி அறிவு பெற்றவர்களுக்கு பிந்தைய நடவடிக்கைகளுக்கு தேவையானவற்றை வழங்குவது
தேசிய கல்வி இயக்கம் – 1988:
2007 க்குள் 75% எழுத்தறிவு நிலையை எட்ட, 15 – 35 வயதினருக்கு செயலறிவுக்கல் வழங்குதல்
முழுக் கல்வியறிவு இயக்கம்
சக்சார் பாரத் – 2009
தேசிய கல்வி எழுத்தறிவு இயக்கம்:
தேசிய கல்வி இயக்கம் – 1988:
- 15 – 35 வயது வரை உள்ள கல்வி அறிவற்றவர்களுக்கு செயல்பாட்டு கல்வியை வழங்குவதற்கான, ஒரு தொழில்நுட்ப இயக்கமாகும்.
- தேசிய கல்வி கொள்கையில், கல்வி அறிவின்மையை நீக்கும் கருவிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.
- 1980 ல் நடைபெற்ற எர்ணா குளம் கல்வி பிரச்சாரம் இந்த இயக்கத்தின் நடைமுறை வழிமுறையை கொடுத்தது.
- இது குடும்ப நலம், நோய் தடுப்பு, தாய் – சேய் நலம், சுற்றுச்சூழல் போன்ற அறிவைத் தந்தது.
நோக்கம்:
- 15 – 35 வயது வரை உள்ள குழுவில் 80 மில்லியன் படிப்பறிவற்றவர்களுக்கு செயல்பாட்டு கல்வியை அளித்தல்
- 1990 க்குள் 30 மில்லியன் மக்களுக்கும், 1995-க்குள் 50 மில்லியன் மக்களுக்கும் கல்வி அளித்தல்
- நீடித்த கல்வி வளர்ச்சி விகிதத்தை 75மூ அடைவது
- முறைசாரா கல்வி திட்டங்கள் செயல்படுத்தப்படாத இடங்களில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி வழங்குதல்
- SC / ST பெண்கள், பின்தங்கிய வகுப்பினருக்கு முக்கியத்துவம் அளித்தல்
- கல்வி அறிவிற்கு பிந்தைய நடவடிக்கைகளில் கவனம் செலுத்துதல்
முழுக்கல்வியறிவு இயக்கம்:
- தேசியக் கல்வியறிவு இயக்கத்தில் கல்வியறிவின்மையை களைவதற்கான ஒரு முக்கிய திட்டம்
- காலவரம்பு 12 – 18 மாதங்கள்
- இது குறிப்பிட்ட இலக்குகள் சார்ந்தது
- மக்கள் பங்கெடுப்புடன் கூடியது
- தன்னார்வ அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படுவது
முக்கிய நடவடிக்கைகள்:
- அனைவரையும் பள்ளிகளில் இணைத்தல் (ம) தக்க வைத்தல்
- நோய் தடுப்பு முறைகள்
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு
- சிறிய குடும்பத்தின் நன்மைகளை எடுத்துரைப்பது
- பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது
மேலாண்மை அமைப்புகள்:
- மாவட்ட / கிராம அளவில் தேர்வு செய்யப்பட்ட குழு
- திட்டம் சார்ந்த துணைக்குழுக்கள்
- மாவட்ட / வட்ட அளவிலான நிர்வாகம்
- இந்த இயக்கம் மாவட்ட ஆட்சியாளர்களை தலைமையாக கொண்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
பெண்கல்விக்கு தேசிய கல்வி இயக்கத்தின் பங்கு:
- பெண்களுக்கு தேவைப்படும் தகவல் சார் அறிவு (ம) அதிகாரம் பெறுவது ஆகியவற்றை தாங்களாகவே நிறைவு செய்து கொள்ளும் சூழலை உருவாக்குவது
- தேசியக் கல்வி இயக்கம் – 1988
- முழுக்கல்வியறிவு இயக்கம்
- கல்வியறிவிற்கு பிந்தைய திட்டங்கள்
- பெண்களுக்கு குழுக்கள் முயற்சிகள் மேல் உள்ள நம்பிக்கையை கற்பித்தல்
- பெண்களுக்கு கல்வியறிவு அளிப்பதே, அவர்களுக்கு எதிரான கொடுமைகளை களைவதற்கான முதல்நிலை என்ற சூழலை உருவாக்குதல்
பெண்கல்வியை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள்:
- சமூக விழிப்புணர்வு
- பள்ளிக் கூடங்களில் சேர்க்கை
- தன்னம்பிக்கை (ம) ஆளுமைதிறன் அதிகாரம் அளித்தல்
- பெண் தொழில் முனைவோர் உருவாக்குதல்
- சிறுசேமிப்பு (ம) கடன் வசதிகளுக்கான வழிவகைகள்
- உடல் நலம் (ம) தூய்மை