5.ஊரக மற்றும் நகர்ப்புற சுகாதாரம்
தேசிய ஊரக சுகாதாரத்திட்டம் – 2005:
- கிராமத்தில் உள்ள போதுமான அளவு அரசின் சலுகைகள் கிடைக்கப் பெறாத மக்களின், சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்ய திட்டம் துவங்கப்பட்டது.
- நாட்டின் பலவீனமான சுகாதார குறியீட்டைப் பெற்ற 18 மாநிலங்களை முன்னிலைப்படுத்தி துவங்கப்பட்டது.
- குடிநீர், சுகாதாரம், கல்வி, உணவூட்டம், பாலின சமநிலை என அனைத்தையும் உறுதி செய்தது.
நோக்கங்கள்:
- IMR = 30 / 1000 என நிலைப்படுத்துதல்
- MMR = 100 / 100000 என கொண்டு வருதல்
- மலேரியா, டெங்கு இவற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல்
- பைலேரியா நோயை 2015 க்குள் ஒழித்தல்
- காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மீட்பு 85மூ ஆக அதிகரித்தல்
- அனைத்து சமூக உடல்நல மையங்களிலும் ஒரே மாதிரியான மருத்துவ தரத்தை தருதல்
- மருத்துவ வசதிகளை பஞ்சாயத்துகள் மூலம் அனைத்து மக்களுக்கும் கிடைக்கச் செய்தல்
- புதிய கருத்துரு இத்திட்டத்தில் கொண்டு வரப்பட்டது.
- இதன்படி கிராமப் பகுதிகளில் உள்ள பெண்களுக்கு உடல்நலம் (ம) தடுப்பு மருந்துகள் குறித்த தகவல்களைப் பரப்புதல் ஆக்ஷாவின் பணியாகும்.
- உடல் நலத்திற்காக செலவு செய்யும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 -3மூ ஆக இருக்க வலியுறுத்தப்பட்டது
திட்ட வெற்றிகள்:
- போலியோ ஒழிப்பு
- ஜப்பானிய என் செபலாட்டிஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசி 9 மில்லியன் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
- குழந்தைகளுக்கு பரவும் டெட்டனஸ் ஒழிப்பு
- 2 மில்லியன் பிரசவங்கள் ஆரம்ப சுகாதார மையங்களிலோ (அ) மருத்துவமனைகளிலோ நடைபெற்றன.
- 1 மில்லியன் ‘கிராம உடல் நலம் (ம) சுகாதாரக் குழுக்கள்’மூலம் பள்ளிகளில் சுகாதாரத் திட்டங்கள் தொடங்கப்பட்டன.
திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்:
- ஏற்கப்பட்ட சமூக சுகாதார செயற்பாட்டாளர்கள் (ஆக்ஷா)
- ரோஜி கல்யாண் சமிதி
- துணை மையங்களுக்கு மானியம்
- ஜனனி சுரக்க்ஷா யோஜனா
- தேசிய நடமாடும் மருத்துவ மையங்கள்
- தேசிய அவசர விபத்து ஊர்தி சேவை
- ஜனனி சிசு சுரக்க்ஷா காரியகிரம்
- ராக்ஷ்ட்ரிய பால்ஸ்வஸ்தயா காரியகிரம்
- தாய் – சேய் நல சுகாதாரப் பிரிவு
- தேசிய இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கல்
தேசிய நகர்ப்புற சுகாதாரத்திட்டம் – 2012:
2012 கேபினட் கூட்டத்தில் தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தை தொடர்வதாகவும், துணைத் திட்டங்கள் தொடங்கவும், 2017 மார்ச் வரை இத்திட்டங்கள் தொடர்வதாகவும் முடிவு எடுக்கப்பட்டது.
திட்டத்தின் கீழான கோரிக்கைகள்:
- ஒவ்வொரு 5000 லிருந்து 60000 மக்கள் தொகையுள்ள பகுதிகளுக்கும் ஒரு நகர்புற ஆரம்ப சுகாதாரமையம் அமைத்தல்
- பெருநகரங்களில் 5 முதல் 6 நகர ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ள பகுதிகளில் ஒரு நகர சமுதாய சுகாதார மையங்கள் அமைத்தல்
- செவிலியர் சேவை மையங்கள் 10000 மக்கள் வசிக்கும் பகுதிகளில் அமைத்தல்
- 200 முதல் 500 வீடுகள் உள்ள பகுதிகளில் ஒரு ஏற்கப்பட்ட சமூக சுகாதார செயற்பாட்டாளர் அமைத்தல்
- இத்திட்டம் நகர்ப்புற ஏழைகளின் ஆரம்ப சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்துகிறது.
- 50000 மக்களுக்கு அதிகம் வசிக்கும் இடங்களில் 779 நகரம் (ம) மாநகரங்களில் தொடங்கப்பட்டு 7 கோடியே 75 லட்சம் மக்களைச் சென்றடையும்.
திட்டத்தின் முடிவுகளாக எதிர்பார்ப்பது:
- குழந்தை இறப்பு விதத்தைக் குறைத்தல்
- தாயின் இறப்பு வீதம் குறைத்தல்
- மகப்பேறு மருத்துவத்தினை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல்
முக்கிய அம்சங்கள்:
- நகரத் திட்டங்களின் தேவைகள் கணக்கெடுப்பின் மூலம் செயல்படுத்தப்படும்.
- நகர உள்ளாட்சி அமைப்புகள் முழுவதும் பங்களிப்பு செய்யும்
- புதுமையாக்கப்பட்ட பொது ஆரம்ப சுகாதாரம் இலக்கு மக்களின் வீட்டருகில் கிடைக்கச் செய்யும்.
- தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தில் துவங்கிய செயல்பாடுகள். நிர்வாக அமைப்புகள், நிறுவனமாக்கப்பட்ட செயல்முறைகள் அனைத்தும் தேசிய நகர்ப்பற திட்டத்தினை வலுப்படுத்தும்.
தூய்மை இந்தியா:
ஸ்வச்பாரத்:
- இந்தியாவில் துவங்கப்பட்ட மிகப்பெரிய தூய்மைக்கான இயக்கம்
- 2014, அக்டோபர் 2ல் இத்திட்டம் துவங்கப்பட்டது.
- தூய்மையை பரப்புவதற்கென நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 100 மணி நேரத்தை, அதாவது வாரத்திற்கு 2 மணி நேரத்தை ஒதுக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். Rs. 12,000 – ஊக்கத்தொகை
- மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினமான, 2019 அக்டோபர் 2ம் தேதிக்குள் தூய்மையான இந்தியா என்ற இலக்கை அடைவதை நோக்கமாகக் கொண்டதே இந்தப் பிரச்சாரம் ஆகும்.
- 3 கோடிக்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டன.
- சுற்றுப்புற சுகாதாரம் பெற்ற பகுதிகள் 42% லிருந்து 60% உயர்ந்துள்ளது.
தூய்மையான கிராமப்புற இந்தியா:
- இந்த இயக்கம் துவங்கியதிலிருந்து இதுவரை 3.6 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு உள்ளே அமைந்த கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
- 3 மாநிலங்களில் பொது இடங்களில் காலைக் கடன்களை கழிக்கும் பழக்கம் முற்றிலும் அகற்றப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
- தனிப்பட்ட கழிப்பறைகளுக்கான ஊக்கத்தொகை ரூ 12,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- அக்டோபர் 2, 2014 முதல் அக்டோபர் 2015 வரையிலான காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட 60 லட்சம் தனிநபர் கழிப்பறைகளுக்கு பதிலாக 80 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
- இது திட்டமிடப்பட்ட இலக்கு 117% நிறைவேற்றப்பட்ட சாதனையாகும்.
- 100 உயரிய தூய்மை இடங்கள் என வரலாற்று (ம) கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உலகத் தரத்துடன் உயரிய தூய்மைபெற உள்ளன.
- கங்கை நதிக்கரைகளில் உள்ள கிராமங்களில் வாழும் மக்கள் பொதுவிடங்களில் காலைக்கடன்களை கழிக்கும் வழக்கத்தை முற்றிலும் அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
தூய்மையான நகர்ப்புற இந்தியா:
- தனிநபர்களுக்கான வீடுகளுக்குள்ளே 31 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
- பொதுப் பயன்பாட்டிற்கான, பொது மக்களுக்கென 1.25 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
- 39,995 நகர்புற வார்டுகள் 100% வீடுதோறும் திடக்கழிவை சேகரிப்புடன் செயல்பட்டு வருகிறது.
- இந்தக்கழிவிலிருந்து உரம் தயாரிப்பு பல டன்களாக அதிகரித்துள்ளது.
- 614 நகரங்கள் பொது இடங்களில் காலைக்கடன் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
- ஆந்திரா குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து நகரங்களும் இந்தப் பழக்கத்திலிந்து விடுபட்டுள்ளன.
தூய்மையான கல்விநிலையம்:
நாடு முழுவதும் உள்ள 11.21 லட்சம் அரசுப் பள்ளிகளில் பயிலும், 13.77 கோடி சிறுவர் – சிறுமியர் இப்போது கழிப்பறை வசதி பெற்றுள்ளனர்.
தூய்மை இந்தியா இயக்கம் – நிதி (Rs. 365 கோடி):
- பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள், செயல்படாத கழிப்பறைகள் இவற்றினை புதுப்பிக்க ரூ 365 கோடி செலவிடப்பட்டுள்ளது.
- தூய்மையான இந்தியாவிற்கான கூடுதல் வரியின் மூலம், திட்டத்திற்கு பங்களிப்பு செய்யப்படுகிறது.
கிராமப்புற குடிநீர் வசதி:
- 2017, பிப்ரவரி நிலவரப்படி முழுமையாக குடிநீர்வசதி பெற்ற குடியிருப்புகள் 73.66% லிருந்து 77.01% ஆக உயர்வு.
- கிராமப்புற மக்களில் 55% பேருக்கு குழாய் மூலமான குடிநீர் வசதி வழங்கப்பட்டுள்ளது.
- ஆர்சனிக்/ஃப்ளோரைட் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள 28,000 குடியிருப்புகளுக்கு 2020 க்குள் தூய்மையான குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கங்கையை வணங்குவோர் திட்டம்:
கங்கையை சுத்தப்படுத்துவதற்கென பிரம்மாண்டமான, கங்கை புத்துயிர்ப்பிற்கென திட்டம் தொடங்கப்பட்டது.
பசுமை இந்தியா:
- சுற்றுச்சூழலுக்கான அனுமதிகள் அனைத்தும். இணையத்தின் மூலமாகவே செய்வதற்கான ஏற்பாடு.
- தேசிய காற்றுத்தர அட்டவணை 2015ல் துவங்கப்பட்டது.
- உஜாலா திட்டம் – அனைவருக்கும் எல்இடி விளக்குகளை குறைந்த விலையில் வழங்குதல்
- இத்திட்டம் மூலம் கரியமில வாயு வெளியேற்றம் குறைகிறது.
இந்தியாவின் சுகாதாரமற்ற சூழ்நிலைக்கான காரணங்கள்:
- நீதிபேதாமை
- கிராமப்புற சுகாதாரம்
- நகர்ப்புற கவனமின்மை
- மக்களின் மனநிலைமை
- சுற்றுச்சூழல் பாதிப்ப பற்றி அரசாணை
- நீர்பற்றாக்குறை
- அரசியல் நிலை
மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் முறை:
- இது சாக்கடைகளை சுத்தம் செய்வது (அ) பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தாமல் கழிவறைகளிலிருந்து கழிவுகளை அகற்றும் செயலாகும்.
- அதாவது சத்தகரிக்கப்படாத மனிதக் கழிவுகளை குழிகளிலிருந்து அற்றுவது
காரணங்கள்:
- நீர்சார் கழிவறைகள் இல்லாதிருத்தல்
- சுகாதாரமற்ற கழிவறைகளின் தொடர்ச்சியான இருப்பு
- கழிவுநீர்த் தொட்டிகளின் மோசமான வடிவமைப்பு
- பல நகரங்கள் முழு நகரத்தையும் உள்ளடக்கும் வகையிலான சாக்கடை இணைப்புகளை கொண்டிருக்கவில்லை.
- மறுவாழ்வு (ம) வேலைவாய்ப்புகள் இல்லாமல் இருப்பது
- மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றுபவர்களே இல்லை என மறுப்பது
- சாதிய அமைப்புகள் தொடர்ச்சியாக நிலவுவது
- இதில் ஈடுபடுபவர்கள் 90மூ பெண்களே
- போதிய விழிப்புணர்வு இல்லாதிருத்தல்
- கல்வியறிவின்மை
- இதற்கு தொழில் நுட்பத்தை பயன்படுத்தவில்லை
- ஒப்பந்தக் காரர்களின் ஆதிக்கம்
- சபாய் கரம்சாரி தேசியக் குழுவின் பலவீனம்
- இறப்புக்கு காரணமானவர்கள் மீத FIR பதிவு செய்யப்படுவது இல்லை.
தீர்வுகள்:
- மலம் அள்ளுபவர்கள் (ம) அவர்களைச் சார்ந்தவர்களை மீட்டெடுத்தல்
- மீட்டெடுக்கப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குதல்
- வெறும் கைகளில் மலம் அள்ளுபவர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம் – 2007
- மனிதக் கழிவுகளை அகற்றுபவர்களை பணியமர்த்துக்கான தடை (ம) மறுவாழ்வுச் சட்;டம் – 2013
- ஸ்வச் பாரத் அபியான் – 2014 ன் கீழ் கழிப்பறைகள்
- தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை ஏற்பாடு செய்தல்
- இத்தொழில் செய்வோரின் சமூக – பொருளாதார நிலையை மேம்படுத்துதல்
- NGO ஆதரவைப் பெறுதல்
- பணியாளர்களுக்கு தடுப்பு மருந்துகளை அளித்தல்
- துப்புரவுப் பணியாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரித்தல்
- மனிதக் கழிவுகளை அகற்றுயவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவிகள் செய்தல்
- உயிரி கழிவறைகள் அமைத்தல்
- சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
- விதிகளை மீறுகின்ற முதலாளிகள் (ம) ஒப்பந்தக்காரர்களை கண்டறிய சிறப்பு சோதனைகளை அரசு செய்தல்
- மறுவாழ்வு அளித்தல்
- NGO ஈடுபடுத்துதல்
- இந்திய தண்டனைச்சட்டம் 304 பிரிவு ஏ