4.வறுமை
வறுமை:
வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய இயலாத அளவிற்கு சமூகத்தில் ஏற்படும் நிகழ்வுகள் வறுமையாகும்.
2011ன் படி 21.9%
வறுமையின் வகைகள்:
- முழுவறுமை (ம) ஒப்பீட்டு வறுமை
- தற்காலிக வறுமை (ம) முற்றிய வறுமை
- முதல் நிலை (ம) இரண்டாம்நிலை வறுமை
- கிராமப்புற (ம) நகர்ப்புற வறுமை
1.முழு வறுமை
- அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் இல்லாமல் வாழும் சூழல்
- இந்தியாவில் வறுமையின் விகிதம்
2.ஒப்பீட்டு வறுமை
- வருமான ஏற்றத்தாழ்வுகளை கணக்கிடுகிறது.
- சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளைக் காட்டுகிறது.
- அதிக வருமானம் ஈட்டக்கூடிய 5% முதல் 10% மக்களோடு, குறைந்த வருமானம் ஈட்டக்கூடிய 5% முதல் 10% மக்களை ஒப்பிட்டு பார்ப்பது
3.தற்காலிக வறுமை
இந்தியா போன்ற நாடுகளில் பருவமழை குறையும்போது, விவசாயம் பொய்த்து, அதனால் உழவர்கள் தற்காலிகமான ஏழ்மைநிலையில் உழல்கிறார்கள்.
4.முற்றியவறுமை
விவசாயம் பொய்த்து, அதே நிலையில் அவர்கள் நீண்ட காலமாக வாழும்போது, அந்நிலை முற்றிய வறுமை எனப்படுகிறது.
5.முதல்நிலை வறுமை
ரவுண்டிரி என்பார் கூற்றுப்படி (ரவுண்டிரி)
குடும்பங்களில் வாழ்க்கை நடத்த மொத்த சம்பாத்தியங்களைக் கொண்டு, குறைந்தபட்ச, அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க முடியாத பற்றாக்குறையான நிலையாகும்.
6.இரண்டாம் நிலை வறுமை
- குடும்பங்களின் சம்பாத்தியம், வாழ்க்கை நடத்த போதுமானதாக இருக்கும்.
- ஆனால் அதன் ஒரு பகுதியானது உபயோகமான (அ) உபயோகமற்ற செலவுகளுக்கான (ம) திறமையற்ற குடும்ப நிர்வாகம் போன்றவைகள் வீணான செலவுகளுள் சிலவாகும்.
7.கிராமப்புற வறுமை
- கிராமங்களில் வாழும் பெரும்பான்மையான ஏழை மக்கள் நிலங்களை சொந்தமாக பெற்றிராமல், விவசாய தினக் கூலிகளாகவே வேலை செய்கிறார்கள்.
- அவர்களது கூலியும் குறைவு, ஆண்டின் சில மாதங்களே அவர்கள் வேலைவாய்ப்பை பெறுகிறார்கள்.
8.நகர்ப்புற வறுமை
- நகர்ப்புறங்களில் வாழும் ஏழை மக்கள் நீண்ட நேரம் உழைத்து, மிகக் குறைவான வருமானத்தையே பெறுகிறார்கள்.
- பெரும்பாலானோர் அங்கீகாரம் பெறாத (ம) ஒழுங்குமுறைப்படி அமையாத துறைகளிலேயே வேலைக்கு அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.
வறுமைக்கோடு
- பொருளாதார அளவுகோலை
- அரசாங்கம் தனிநபர் (அ) வீடுகள் சார்ந்த பொருளாதார குறைகளை சுட்டிக்காட்டவும் அவர்களின் தேவையை பூர்த்தி செய்யவும், பொருளாதாரத்தின் முக்கிய ஆரம்ப கட்டமாக அமைவது வறுமையாகும்.
- வெவ்வேறு அளவுகளை வைத்து உறுதிப்படுத்துகின்றது.
- ஒவ்வொரு மாநிலத்திற்கும் (அ) மாநிலத்திற்குள்ளேயும் வேறுபடும்.
- பத்தாண்டை அடிப்படையாக வைத்து, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களை மத்திய அரசு கணக்கெடுக்கின்றது.
- உலகவங்கியின் கணக்குப்படி, 1.25 டாலருக்கு குறைவான வருமானமுடையவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக கருதப்படுகின்றனர்.
- இந்தியாவில் திட்டக்குழுவால் கணக்கிடப்படுகிறது.
- திட்டக்குழுவின் கணக்கீடு ேளுளுழு வின் அறிக்கையை அடிப்படையாகக்; கொண்டது.
- ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்ணயிக்கப்படுகிறது.
ஐந்தாண்டு திட்டங்களில் வறுமைக் கணக்கீடு:
- முதல் ஐந்தாண்டுத்திட்டம்: 1951 – 56
விவசாய முறையை முன்னேற்ற உணவுப் பற்றாக்குறையைத் தீர்த்தல்
- இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் 1956 – 61
தொழில்மயமாக்குதலை வளர்ச்சி அடையச் செய்தல்
- மூன்றாவது ஐந்தாண்டுத்திட்டம்: 1961 – 66
வேளாண்துறையில் நிலையான வளர்ச்சி, ஆதார துறைகளின் வளர்ச்சி, மனித ஆற்றலை அதிகம் பயன்படுத்துவது, பொருளாதார அதிகாரத்தை பரவலாக்குதல், ஆண்டு தேசிய வருமானத்தை 5% அதிகரிப்பது.
- நான்காவது ஐந்தாண்டுத்திட்டம் 1969 – 74
வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்
விலை மதிப்பைக் குறைத்தல்
5.ஐந்தாவது ஐந்தாண்டுத்திட்டம் 1974 – 79
வறுமையை ஒழித்தல் (கரிபி ஹாட்டாவோ)
6.ஆறாவது ஐந்தாண்டுத்திட்டம்: 1980 – 85
பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள், வேலைவாய்ப்பின்மையை நீக்குதல், வருமான பகிர்வில் காணப்படும் சமத்துவமின்மையை நீக்குதல்
7.ஏழாவது ஐந்தாண்டுத் திட்டம்: 1985 – 90
வறுமையை ஒழித்தல்
உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைதல்
8.எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம்: 1992 – 97
வேலைவாய்ப்பு அளித்தலை அதிகரித்தல்
9.ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம்: 1997 – 2002
அதிக அளவில் திட்டங்களை செயல்படுத்துதல் வளர்ச்சியை அதிகரித்தல்
10.பத்தாவது ஐந்தாண்டுத் திட்டம்: 2002 – 2007
தலா வருமானத்தை இரட்டிப்பாக்குதல்
ஐந்தாண்டு திட்டங்கள் குறித்த மதிப்பீடு:
- நமது அனைத்து திட்டங்களும் வேளாண் உற்பத்தியில் தன்னிறைவு, வேலைவாய்ப்புகளின் உருவாக்கம், தொழில்துறை வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு உள்ளது.
- ஆனால் வறுமை (ம) வேலையின்மை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்துள்ளன.
- இந்தியாவில் வறுமையில் வாடும் ஏழைமக்களின் எண்ணிக்கை 21.9% ஆகும்.
- திட்டங்கள் வறுமையை ஒழிக்கத் தவறிவிட்டதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
- நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையில் உள்ளது.
- கடன்சுமை (ம) ஊழல் அதிகரித்து வருகிறது.
- உலகின் மூன்றாவது மிகப்பெரிய கடனாளி நாடாக இந்தியா உள்ளது.
- வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது.
- இருப்பினும் வேலையில்லாமல் இருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
- பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டும், ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்த இயலவில்லை.
வறுமைக்கான காரணங்கள்:
சமூக காரணங்கள்:
- கல்வியறிவின்மை
- வேலைவாய்ப்பின்மை
- திறன் குறைவு
- மக்கள் தொகை பெருக்கம்
- மதம் (ம) சமூகம் சார்ந்த மேலாண்மை
- தன்னிறைவு அணுகுமுறையில் சமரசம் அடைதல்
- அன்னிய ஆதிக்கம்
- ஜாதி பிரிவுகளால் ஏற்பட்ட சுரண்டல்கள்
- தொழில்நுட்ப அறிவின்மை
- நிலச்சுரண்டல் முறை
- இந்திய – பாகிஸ்தான், இந்திய – சீனப் போர்
பொருளாதாரக் காரணங்கள்:
- பணவீக்கம்
- பொருளாதாரத்தில் குறைந்த உள்ளடக்கிய வளர்ச்சி
- செல்வங்கள் சமமற்ற நிலையில் பங்கீடுதல்
- உற்பத்தித்திறன் குறைவு
- முதன்மைத் துறையில் காலாச்சார முக்கியத்துவம்
- திறமையான பணியாளர்கள் குறைவு
- குறைவான முதலீடு
வறுமையின் சுழற்சி:
குறைவான வருமானம்
↓
குறைவான வாங்கும் திறன்
↓
வரையறுக்கப்பட்ட சந்தையின் அளவு
↓
முதலீட்டை ஈர்ப்பதில் உள்ள குறைபாடு
↓
குறைவான முதலீடு
↓
குறைவான உற்பத்தி
↓
வறுமை
வறுமைக்கு தனிப்பட்ட மனிதனின் காரணம்:
தனிப்பட்ட மனிதர்கள்:
டேவிட் எலீக்ஷ் விளக்கத்தின் படி,
- ஒரு தனிமனிதன் வறுமைக்கு காரணம் அவனுக்குள்ளேயே இருக்கிறது என தனிமனிதத்துவம் குறித்த கோட்பாடு கூறுகின்றது.
- ஒரு மனிதன் வறுமையில் வாடுகிறான் என்றால், அது அவனது சோம்பேறித்தனம், ஆர்வமின்மை, திறனின்மை, முயற்சியின்மை ஆகியவற்றால் விளைந்த அவனது சொந்த தவறே ஆகும்.
- ஒரு மனிதனின் வெற்றிக்கு அவனது தனிப்பட்ட கடின உழைப்பு, திறன், நேர்மை ஆகியவை காரணமாக என்கிறது.
- ஒரு மனிதன் தோல்வி அடைந்தால் தன்னைத்தானே குற்றம் சாட்டிக் கொள்ள வேண்டும் வேறு யாரையும் குறை கூறக்கூடாது.
- ஒரு நல்ல உத்தியோகம், நிலையான வருமானம், குறிப்பிடத்தக்க பொருளுடைமை கொண்டுள்ள நடுத்தர வர்க்கத்தினரே. பொதுவாக ஏழை மக்களின் வறுமைக்கு அவர்களே காரணம் என ஒத்துக் கொள்கின்றனர்.
- நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு நபர், தான் மிகவும் போராடி வெற்றி பெற்றதாகவும், ஏழைகளால் அவ்வாறு முடிவதில்லை.
- இதற்கு காரணம் அவர்களிடம் ஏதோ தவறு உள்ளது என குறிப்பிடுகிறார்.
- ஒரு மனிதன் சோம்பேறித்தனம், திறமையின்மை, வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளாமல் வாழ்ந்தால் அதற்கு அவனே பொறுப்பாவான்.
- இவர்களை முன்னேற்ற எந்த வழியும் இல்லை.
- வறுமையில் வாழ்ந்தாலும். தோல்விகளை சந்தித்தாலும், வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என போராடுபவனே சிறந்த நிலையை எட்டமுடியும்.
வறுமையின் காரணமாக உருவாகும் துணைக்கலாச்சாரம்:
வறுமையின் துணை கலாச்சாரம்:
- வறுமை என்பது பாரம்பரியமாகத் தொடருமானால் அது ஒரு கலாச்சாரமாக மாறி விடுகிறது என்று ஆஸ்கர் லூயிஸ் குறிப்பிடுகிறார்.
- கிரீஸ்பெர்க் குறிப்பிடுவது:
ஒவ்வொரு தலைமுறையிலும் ஏழைகளின் குடும்ப உறுப்பினர்கள் அடுத்தடுத்து முக்கியமான நிலைகளுக்கு முன்னேறி வந்துள்ள போதிலும், அடுத்தடுத்த சந்ததிகள் தங்களது பழக்க வழக்கங்கள், மதிப்புகளில் தங்கள் ஏழ்மையில் இருந்து வந்திருப்பதையும், இதே போன்றே சமூக அழுத்தங்களுக்கு உட்பட்டு வந்திருப்பதையும் உணர்த்தவே செய்கின்றனர்.
- ஏழைகளின் குழந்தைகள் வன்முறை என்ற துணை கலாச்சாரத்தை பெற்று விடுகின்றனர்.
- இதன் வாயிலாக உடல் அளவில் மூர்க்கமான பதில் நடவடிக்கைகள் எதிர்பார்க்கலாம் (அ) இந்தக் குணம் வளரவேண்டும் என்று அனைத்து உறுப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.
- அத்தகைய துணைக்கலாச்சாரத்தில் பிரகியோகிக்கப்படும் வன்முறையானது குற்ற நடவடிக்கையாகக் கருதப்படுவதில்லை.
- அந்தக் குணாதிசயத்தைப் பிரதி பலிப்பவர்கள் தங்களுடைய மூர்க்க குணத்திற்காக குற்ற உணர்ச்சி கொள்வதில்லை.
- அரசியல் வாதிகள் (ம) பொதுமக்களால் இக்கருத்தாக்கம் அடிக்கடி பயன்படுகிறது.
- ஏழ்மையை ஒழிக்க தேவையான நடவடிக்கையை எடுக்காமல் இருக்க (அ) மிகக்குறைவான நடவடிக்கை எடுக்க ஒரு காணத்தை சமுதாயத்திற்கு அளித்துள்ளது.
சமூக அமைப்பு:
- நேர்மையற்ற (ம) தவறான சமூக சூழ்நிலைகள்
- நமது பொருளாதார அமைப்பு
- கல்வி வளர்ச்சி குறைவு
- வேலைவாய்ப்புகள் குறைவு
- குறைந்த ஊதியத்திற்கு அதிக வேலை பார்ப்பது
- நீண்ட நாட்களுக்கு வேலை வாய்ப்;பே இல்லாமல் இருப்பது
- சமூக (ம) பொருளாதார கட்டமைப்புகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவதில்லை.
- மாற்றங்கள் தன்னல சக்திகளால் தடுக்கப்படுதல்
- சமுதாயத்தில் வறுமை நிலையிலான ஒரு பிரிவு இருப்பதால், நடுத்தர வர்க்கத்தினருக்கு சமூக, பொருளாதார, அரசியல் லாபங்கள் கிடைக்கின்றன. – ஹெர்பர்ட் கான்ஸ் கூற்று
- முக்கிய காரணங்கள்:
- சமுதாயத்தில் உள்ள அசுத்தமான வேலைகளை செய்வதற்கான நபர்கள் கிடைத்தல்
- ஒருவரின் உயர்ந்த அந்தஸ்தை பாதுகாத்துக் கொள்ளல்
- ஒருவரை அதிகாரம் மிக்க இடத்தில் இருக்கச் செய்தல் போன்றவற்றிற்கு சமுதாயத்தில் ஒரு பிரிவினருடைய ஏழ்மைநிலை பயனுள்ளதாக உள்ளது.
- தங்களது சுயநலன்களை பாதுகாத்துக் கொள்வதற்காக சமூக கட்டமைப்பு, மதிப்பீடுகள். விதிகள் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படுவதை விரும்பாத தனிநபர்கள் (அ) குழுக்களே வறுமைக்கான காரணமாகும்.
ஊரக வறுமை:
- கிராமங்களில் காணப்படும் வறுமை
- இந்தியாவில் வறுமை என்பது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான வருமானத்தை ஈட்ட முடியாதநிலை
- வறுமைக்கோடு என்பது மக்களின் வருமானம் (அ) நுகர்வு நிலையைப் பொறுத்தது.
- கிராமங்களின் வாழும் மக்கள் நாள் ஒன்றுக்கு 2400 கலோரி அளவு (அ) அதற்கு குறைவாக எடுத்துக் கொள்பவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் ஆவர்.
ஊரக வறுமைக்கான காரணங்கள்:
- நிலங்கள் சரியாக பிரிக்கப்படாமை
- ஊரக நிலப்பகுதிகள் ஒரு சிலரிடமே குவிந்து காணப்படுகிறது.
- பெரும்பான்மை கிராம மக்கள் தங்கள் குடும்ப தேவைகளுக்காக அந்நிலங்களில் கூலிக்கு வேலை செய்கின்றனர்.
- பண்ணை சாராத தொழில்களில் வேலைவாய்ப்பின்மை
- அதிகரிக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பண்ணை சாராத தொழில்கள் வளரவில்லை.
- மிகுதியான தொழிலாளர்கள் ஊரகப் பகுதிகளில் இருப்பதால் குறைவான கூலியையே பெறுகின்றன.
- பொதுத்துறைகளில் முதலீடு இன்மை
மனித வளத்தை மேம்படுத்துவதற்கான முதலீடு நமது நாட்டில் மிகக் குறைவாக இருப்பதால், வறுமைக்கு அடிப்படை காரணமாக உள்ளது.
- பணவீக்கம்
பொருட்களின் விலை அதிகரிப்பதால், ஊரக மக்களின் வாங்கும் சக்தி குறைந்து, ஊரக வறுமைக்கு வழிவகுக்கிறது.
- குறைந்த உற்பத்தித்திறன்
ஊரக தொழிலாளர்கள் (ம) பண்ணைகளின் குறைந்த உற்பத்தித்திறன் வறுமைக்கு காரணமாகிறது.
- வளர்ச்சியின் நன்மைகளில் உள்ள சமனற்றநிலை
- பொருளாதார வளர்ச்சியினால் ஏற்படும் நன்மைகளை நகர்ப்புற அனுபவிப்பதலல், சொத்துக்கள் அவர்களிடமே குவிந்து உள்ளன.
- குறைபாடுள்ள பொருளாதார அமைப்புகள் (ம) கொள்கைகளால், வளர்ச்சியின் நன்மைகள் ஏழை மக்களை சென்று அடையவில்லை.
- ஏழை மக்களின் பங்களிப்பையும் சரியாகக் கணக்கிடப்படவில்லை
7.குறைந்த பொருளாதார வளர்ச்சிவீதம்
- இந்திய பொருளாதார வளர்ச்சி பணக்காரர்களுக்கு சாதகமாகவே உள்ளது.
- நாடு அடைந்த வளர்ச்சி (ம) முன்னேற்றத்தின் நன்மைகள் ஏழை மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.
8.பெரிய தொழிற்சாலைகளுக்கே முக்கியத்துவம்
- இந்தியாவில் பெரிய தொழிற்சாலைகளில் செய்யப்படும் முதலீடு நகர்ப்புறத்தின் நடுத்தர (ம) உயர் வருமான பிரிவினரின் தேவைகளையே பூர்த்தி செய்கிறது.
- இந்த தொழிற்சாலைகள் இயந்திரங்களையே அதிகம் பயன்படுத்துவதால், வேலைவாய்ப்பு உருவாக்கம் குறைவாகவே உள்ளது.
- இதனால் கிராமப்புற மக்கள் வேலைவாய்ப்பினை பெறமுடியாத நிலையிலும், வறுமையிலிருந்து மீள முடியாமலும் உள்ளனர்.
9.சமூக குறைபாடுகள்
சமுதாயத்தில் நிலவும் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் போன்றவை ஆக்கமற்ற உற்பத்தி செலவை அதிகரிக்கிறது.
ஊரக வறுமை ஒழிப்புத்திட்டங்கள்
- 20 அம்சத்திட்டம் – 1975
- ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித்திட்டம் – 1976
- வேலைக்கு உணவுத்திட்டம் – 1977
- ஊரக இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு பயிற்சி – 1979
- தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் – 1980
- ஊரக நிலமற்றோர் வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் – 1983
- இந்திரா அவாஸ் யோஜனா – 1985
- ஜவஹர் வேலை வாய்ப்புத் திட்டம் – 1989
- பாரத்நிர்மான் யோஜனா – 2005
- ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மறுசீரமைப்புத்திட்டம் – 2005
- தேசிய ஊரக நலத்திட்டம் – 2005
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் – 2005
- ராஜீவ் அவாஸ் யோஜனா – 2009
- தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் – 2011
- தேசிய உணவுப்பாதுகாப்புத் திட்டம் – 2013
இந்தியா (ம) தமிழ்நாட்டின் வறுமை ஒழிப்புத் திட்டங்கள்:
தமிழ்நாட்டின் வறுமை ஒழிப்புத்திட்டங்கள்:
- புதுவாழ்வு திட்டம் – 2005
- உலக வங்கியின் உதவியுடன், ஊரக மேம்பாடு (ம) பஞ்சாயத்து துறை இணைந்து வறுமையை ஒழிக்கவும் அதிகாரத்தை மேம்படுத்தவும் தொடங்கிய திட்டம்
- இத்திட்டம் சென்றடைய இலக்காக நிர்ணயிக்கப்பட்டவர்கள் ஏழை மக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒதுக்கப்பட்ட சமூக மக்கள் ஆகும்.
- தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டம் 2012 – 13
- ஊரகப் பகுதிகளின் வருமானத்தை உயர்த்த கொண்டுவரப்பட்டது.
- நாகப்பட்டினம், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 266 பஞ்சாயத்துகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
- மத்திய, மாநில அரசு இணைந்து இத்திட்டத்தை அறிமுகப்படுதியது.
- அரசுகளின் நிதி பங்களிப்பு 60 : 40
- ஊரக மக்களுக்கு அடிப்படை வாழ்வாதார கடட்மைப்புகளை உருவாக்கித்தருதல்
- இத்திட்டத்தின் மூலம் கிராம, வட்டார, மாவட்ட அளவில் சுயஉதவிக்குழுக்கள் துவங்கப்பட்டது.
இந்தியாவின் வறுமை ஒழிப்புத் திட்டங்கள்:
1.20 அம்ச திட்டம் – 1975
- பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல்
- உற்பத்திக்கு ஊக்கம் அளித்தல்
- கிராமப்புற மக்களின் நல்வாழ்விற்கு உதவுதல்
- நகர்ப்புறங்களில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு கடனுதவிகளை வழங்குதல்
- சமூக (ம) பொருளாதார குற்றங்களை கட்டுப்படுத்துதல்
2.ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித்திட்டம் – 1976 (IRDP)
வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் குடும்பங்களை தெரிய செய்து, அவர்களுக்கு வேளாண்மை, தோட்டத்தொழில், கால்நடை, வளர்ப்புத்தொழில், நெசவுத்தொழில், கைவினைத் தொழில் போன்றவற்றில் சுயவேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து மேன்மை அடையச்செய்தல்.
3.அந்தியோதயா திட்டம் – 1977
- வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு உதவ ராஜஸ்தான் அரசால் துவக்கப்பட்டது.
- ஒவ்வொரு கிராமங்களிலும் மிகவும் வறுமையில் உள்ள 5 குடும்பங்களை தேர்வு செய்து அவர்களுக்கு உதவுதல்.
4.ஊரக இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு பயிற்சி – 1979 (TRYSEM)
- இளைஞர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிகளை அளித்து, வேளாண்மை, தொழிற்துறை, சேவைப்பிரிவில் ஈடுபடச்செய்து வேலைவாய்ப்பை பெருக்குதல்.
- வயது 18 – 35
- முன்னுரிமை : SC/ ST, பெண்கள் முன்னாள் படை வீரர்கள்
- தகுதி : 9ம் வகுப்பு தேர்ச்சி
5.தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் – 1980
கிராமப்புறங்களில் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்க கொண்டுவரப்பட்ட திட்டம்
6.ஊரக நிலமற்றோர் வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் – 1983
கிராமப்புறங்களில் நிலமல்லாதோருக்கு வேலைவாய்ப்பளிக்கும் உத்திரவாத திட்டம்
7.ஜவஹர் வேலைவாய்ப்புத் திட்டம் – 1989
மிகவும் வறுமையில் வாடும் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள ஒரு நபர்க்கு அவர்களது வீட்டிற்கு அருகில் ஆண்டிற்கு 50 – 100 நாட்கள் வரை வேலைவாய்ப்பளிக்கும் திட்டம்.
8.முக்கிய திட்டங்கள்
- ஐந்தாண்டு திட்டங்கள்
- வங்கிகள் தேசியமயம்
- சட்டங்கள்
- வறுமை ஒழிக்க அரசு மேற்கொணட முயற்சிகள் யாவை?
கிராமப்புற வறுமைக்கான காரணங்கள்
- விரைவான மக்கள்தொகை வளர்ச்சி
- மூலதன பற்றாக்குறை
- விவசாயத்தைத் தவிர மாற்றுவேலைவாய்ப்பின்மை
- விவசாயத்தின் மீதான மக்கள்தொகை அழுத்தம்
- கல்வியறிவின்மை
- இளவயது திருமணம்
- கூட்டுக் குடும்பம்
- பிராந்திய வேறுபாடுகள்
- முதலீட்டில் அலட்சியம்
- பொதுவிநியோக முறையை முறையாக செயல்படுத்துவதில் உள்ள குறைபாடு
அரசு நடவடிக்கைகள்:
நகர்ப்புற வறுமைக்கான காரணங்கள்:
- கிராமப்பற இளைஞர்கள் நகரத்தை நோக்கி இடம்பெயர்தல்
- தொழில்சார்ந்த கல்வி, தொழிற்பயிற்சி இன்மை
- நகரங்களில் நிர்ணயிக்கப்பட்ட வேலைவாய்ப்புகள்
- அதிவேக மக்கள்தொகை வளர்ச்சி
- வீட்டுவசதி குறைவு
- பொதுமக்களுக்கான திட்டங்களை முறையாக செயல்படுத்தாமை
அரசு நடவடிக்கைகள்:
- தொழிற்கல்விக்கு முக்கியத்துவம்
- நேரு ரோக்கர் யோஜனா – 1989
- நகர்ப்புற ஏழைகளுக்கு சுயவேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் – 1986
- வீடு கட்டுவதற்கு நிதியுதவி
- நகர்ப்புற படித்த இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் – 1983
- தேசிய சமூக உதவித்திட்டம் – 1995
- நகர்ப்புறத்தில் உள்ள ஏழைகளுக்கு அடிப்படை சேவைகளை வழங்குதல்
- பொன்விழா ஆண்டு வேலைவாய்ப்புத்திட்டம் – 1992
- பிரதம மந்திரி வேலைவாய்ப்புத்திட்டம்
- பிரதம மந்திரியின் ஒருங்கிணைந்த நகர்ப்புற வறுமை ஒழிப்புத் திட்டம்
வறுமையை ஒழிப்பதற்கான பயனளிக்கக்கூடிய வழிமுறைகள்:
வழிமுறைகள்:
- வருமான பங்கீடு
- தனியார் முதலீட்டை ஊக்குவித்தல்
- வளங்களையும் திட்ட செலவினையும் குறைத்தல்
- பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல்
- சுதந்திரமான வங்கி அமைப்புகளை உருவாக்குதல்
- அரசாங்க முதலீட்டை மக்களுக்கு விற்று பகிர்ந்தளிக்கும் முறையில் புதிய அமைப்பு முறையை உருவாக்குதல்
- வேலைவாய்ப்பை உருவாக்குதல்
- மக்கள்தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்துதல்
- கருப்பு பணத்தை நீக்குதல்
- அனைவருக்குமான நீதி
- திட்டமிடுதலை பரவலாக்குதல்
- பெண்கள் மேம்பாட்டிற்கான திட்டங்களை உருவாக்குதல்
பிறவழிமுறைகள்:
- தகவல் சேகரித்தல்
- அசையா சொத்துகளின் மீது கவனம்
- போதுமான நிலம் (ம) நீர் வசதியைப் பெறும் உரிமை
- அடிப்படை சுகாதாரம் (ம) கல்வி
- பிராந்திய ஈடுபாடு
- உள்கட்டமைப்பு வழங்குதல்
- கடன் இலக்கு
- பரவலாக்கப்பட்ட உணவுத்திட்டங்கள்
- தொழில்மயமாக்குதல்
- தொழில்துறை முதலீடுகள் அதிகரித்தல்
- தேவையற்ற அரசு செலவினங்களை குறைத்தல்
- மின் உற்பத்தியை அதிகரித்தல் (ம) மின்பகிர்வில் கட்டுப்பாடுகள்
- இளைஞர்களுக்கு கணினி பயிற்சி அளித்தல்
- வளர்ச்சிக் திட்டங்களில் மக்களை பங்கு பெறச் செய்தல்
- பஞ்சாயத்துராஜ் நிறுவனங்களை பலப்படுத்துதல்
- அரசுசாரா நிறுவனங்களை பங்குபெறச் செய்தல்
- தேசிய மயமாக்கல்
வறுமை குறித்த குழுக்கள்:
- 1978 ல் வரையறை – கலோரிகள் 2400 / 2100
இந்தியாவில் ஒரு தனி நபருக்கு, கிராமப் பகுதி எனில் 2400 கலோரிகள் (ம) நகரப் பகுதி எனில் 2100 கலோரிகள் தேவை என்ற அடிப்படையில் வரையறுக்கப்பட்டது.
குழுக்கள்:
- அலேக்குழு – 1977 – கலோரிகள்
- லக்டவாலா குழு – 1989
- டெண்டுல்கர்குழு – 2005 – தனிநபர் செலவீனம்
- சக்சேனா குழு
- ஹசிக் குழு
- ரங்கராஜன் குழு – 2012 கலோரிகள், புரதம், கொழுப்பு + செலவீனம்
2005 க்கு முன்பு வரை – தனிநபர் செலவினம்
- இந்திய அரசின் வறுமை குறித்த கணக்கீடானது உணவு பாதுகாப்பிற்காக கணக்கிடப்பட்டது.
- உயிர் வாழத்தேவையான கலோரிகளை பெறுவதற்காக நுகர்வு செய்யும் தனிநபர் செலவினங்களைச் கொண்டு வறுமையின் அளவு நிர்ணயிக்கப்பட்;டது.
டெண்டுல்கர் குழு – 2005
கலோரியை கணக்கிடாமல் நுகரும் உணவு அளவை வைத்து, கிராம (ம) நகர்ப்புறங்களில் வறுமையின் அளவுகோலை நிர்ணயித்தது.
ஆறாவது ஐந்தாண்டுத்திட்டம் முதல் (NSSO):
- NSSO வால் திரட்டப்பட்ட நுகர்வோர் செலவீனம் குறித்த தகவல்களை அடிப்படை.
- வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை திட்டக்குழுவால் நிர்ணயிக்கப்பட்டது.
ரங்கராஜன் குழு – 2012
- ரங்கராஜன் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு
- அறிக்கை 2014 ல் சமர்பிக்கப்பட்டது.
- வறுமை அளவிடும் முறை குறித்து ஆராய அமைக்கப்பட்டது.
- திட்டக்குழு ஏழை மக்களின் செலவினத் தொகையாக ஒரு நாளைக்கு ரூ 22 என நிர்ணயித்தால், தேசிய அளவில் எதிர்ப்பு எழுந்தது.
- இதனால் ரங்கராஜன் குழு பல்வேறு வயது (ம) பாலினம் சேர்ந்தவர்களிடையே தேவைப்படும் கலோரிகள், புரதம், கொழுப்பு போன்றவற்றின் தேவையை கணித்தது.
- இக்குழு மதிப்பிட்டின்படி, ஏழை மக்களின் எண்ணிக்கை டெண்டுல்கர் குழு நிர்ணயித்ததை விட கிராமங்களில் 19% அதிகமாகவும், நகர்புறங்களில் 49மூ அதிகமாகவும் இருந்தது.
ஏழைகளின் பிரச்சனைகள் (ம) வறுமையின் வலிகள்:
- சமூக பாகுபாடு:
- ஏழைகள் சோம்பேறித்தனம், திறமையற்ற, சமூகத்திற்கு சுமையானவர்கள் என்ற கண்ணோட்டம் உள்ளது.
- ஏழைகள் சமுதாயத்தில் இழிவாக பார்க்கப்படுகின்றனர்.
- மேலும் பாகுபாடாகப் பார்க்கப்படுகின்றனர்.
- வலிமை உள்ளவர்களால் பாதிக்கப்படுகின்றனர்.
- வலிமையான அதிகாரம் செலுத்தும் நபர்களை எதிர்த்தாலோ (அ) அரசியல் சக்திகளை எதிர்த்தாலோ ஏழைமக்கள் நசுக்கப்படுகின்றனர்.
- கடனுக்கு அதிக வட்டி செலுத்துகின்றனர்.
- சமூகத்தில் எந்த ஒரு குற்றம் நிகழ்ந்தாலும், ஏழைகளையே சந்தேகப்படும் நிலை உள்ளது.
- ஏழைகள் நம்பிக்கையானவர்கள் அல்ல என்ற எண்ணம் உள்ளது.
- ஏழைகள் தங்களது கௌரவத்தை இடித்து, தாழ்வு மனப்பான்மையுடன் காணப்படும் சூழ்நிலை உள்ளது.
- காரணம் எழுத்தறிவின்மை (ம) பாரபட்சமாக நடத்தப்படுவதாகும்.
- வீடுவசதி இன்மை:
- நகர்ப்புற மக்கள் தொகைப் பெருக்கத்தினால், வீடுகளின்றி தவிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
- வசிப்பிடமின்மை, அதிக கூட்ட நெரிசல், சேரிப்பகுதிகள், வாடகைச் சட்டங்கள் ஆகியவை நகர்ப்புற பகுதிகளின் தீவிர பிரச்சனைகளாகும்.
- ஒரு குடும்பத்தின் வாழ்விட அலகு (ம) அது அமைந்துள்ள அண்டை சூழ்நிலை ஆகியவை வறுமையுடன் தொடர்புடையது.
- நகர்ப்புற சேரிகள் வசதியற்று (மின்சாரம், குடிநீர்) உள்ளது.
- இப்பகுதி குழந்தைகள் தெருக்களில் பெரும்பாலான காலத்தை கழிக்கின்றனர்.
- குடும்பத்தில் சுமூக நிலை இல்லாமல், நடத்தை சரியான முறையில் இல்லாமலும் உள்ளது.
- சுயமரியாதை இழந்து, நம்பிக்கையற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாய் உள்ளது.
iii. வறுமையின் காரணமாக கலாச்சாரம் சீர்கெடுதல்:
- வறுமையான சூழ்நிலையில் வாழும் குழந்தைகள் தவறான செயல்களின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
- தாங்கள் செய்வது தவறு என்று தெரியாத நிலையில் உள்ளனர்.
- இத்தகைய துணைக்கலாச்சாரத்தை சட்டவிரோதமான நடத்தையாக கருதுவதில்லை.
- வன்முறை என்பது அர்களது வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகிறது.
- இந்த துணை கலாச்சாரம் ஒருபுறம் வறுமையின் ஒரு விளைவாகவும், மறுபுறம் வறுமைக்கான ஒரு காரணமாகவும் உள்ளது.
வறுமை ஒழிப்புத் திட்டம் மதிப்பீடு (ம) குறைபாடுகள்:
மதிப்பீடு – வறுமை 21.9%
- வறுமை ஒழிப்புத்திட்டங்கள் கிராமப்புற மக்கள் நலன் கருதியோ, கிராமப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதமாகவோ, அமையவில்லை.
- அதிகார வர்க்கத்தினரின் செயல்களுக்கு உதவும் விதமாகவே கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன.
- தேர்தல் வரும் நேரங்களில் மட்டுமே, ஒவ்வொரு திட்டங்களும் துவங்கப்பட்டுள்ளன.
- கிராம மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் விதமாகவோ கிராமத் தொழில்களை வளர்க்கும் விதமாகவோ திட்டங்கள் அமையவில்லை.
- கிராமப்புற முன்னேற்த்திற்காக உருவாக்கப்பட்ட வசதிகள் நீண்ட நாட்கள் நிலைத்திருப்பதாக இல்லை.
- வேளாண்துறையை சார்ந்தே பெரும்பாலான திட்டங்கள் இருந்ததே தவிர, தொழில்துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறைவு.
- மேலும் திட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சென்று அடையவில்லை.
- சமூக (ம) பொருளாதார வேற்றுமைகள் நீக்கப்படவில்லை.
- வருமானம் பெறுவதில் சமத்துவமின்மை காணப்படுவதும் குறையவில்லை.
- நீர்வளங்கள், கடனுதவி, மானிய உதவி மிகப்பெரும் சக்தியுள்ள விவசாயிகளால் அபகரிக்கப்பட்டன.
- சிறு விவசாயிகள் (ம) ஏழைகள் இத்தகைய உதவிகளை (ம) வசதிகளை அதிக விலைகொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உருவானது.
- பல்வேறு திட்டங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பும் இல்லை.
- திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முறையாக செலவிடப்படவில்லை.
- திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படவில்லை.
- கடன் உதவிகள் அளிப்பதில் குறைபாடுகள்
- ஏழைமக்களும் திட்டத்தின் மீது அக்கறை கொள்ளாமல் இருத்தல்
- கடன் பெறுவதற்கு லஞ்சம் தரவேண்டிய நிலை
- வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை அடையாளம் காண முயற்சிகள் இல்லை.
- திட்டங்கள் மேலிருந்து கீழ் அணுகுமுறையில் உள்ளன.