3.குழந்தைகளை தவறாக நடத்துதல் & குழந்தை தொழிலாளர் வறுமை

இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களுக்கான அரசமைப்பு:

சரத்துகள்:

சரத்து 21ன் படி

தனிமனித வாழ்க்கைக்கும், தனிமனித சுதந்திரத்திற்கும் போதியச் சட்டப்பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

சரத்து 21யுன் படி

இந்தியாவிலுள்ள 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும்.

சரத்து 23ன் படி

இந்திய மக்களுக்குச் சுரண்டலுக்கு எதிரான உரிமையை அளிக்கிறது. ‘மனித வியாபாரம்’ எனப்படும் ஆண்கள், குழந்தைகள், பெண்கள் இவர்களைப் பொருட்கள் போன்று வாங்கவோ விற்கவோ கூடாது.

சரத்து 24ன் படி

குழந்தைகளைப் பாதுகாப்பற்ற பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது.

சரத்து 39(ந) ன் படி – உடல் நலம் (ம) வலிமை

ஆண், பெண் (ம) குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான கொடுமையான தடை செய்வதுடன், அவர்களுக்கான உடல் நலம் (ம) வலிமையை உறுதி செய்கிறது.

சரத்து 38(க) ன் படி – ஆரோக்கிய சூழல் (ம) சுதந்திர வாழ்வு

ஆரோக்கியமான சூழ்நிலையில் வளர்வதற்கும், மரியாதையான சுதந்திர வாழ்விற்குமான வசதிகளையும், வாய்ப்புகளையும் அரசு உருவாக்கித் தருதல் வேண்டும்.

சரத்து 45ன் படி

6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கல்வி வழங்குதல் (ம) அவர்களைப் பராமரித்தல் – (86வது திருத்தம் 2002)

சரத்து 51யு (மு) ன் படி

6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளின் பெற்றோர்களோ, காப்பாளர்களோ, அக்குழந்தைக்கு கல்வி கற்கும் வாய்ப்பளிப்பது அடிப்படைக் கடமையாகும் – 86 வது திருத்தம் 2002

குழந்தை தொழிலாளர்:

இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி,

14 வயதிற்குட்பட்ட எந்த ஒரு குழந்தையாக இருந்தாலும், நாள் ஒன்றுக்கு அதிக மணி நேரம் வேலைசெய்யப்படுதல் குழந்தை தொழிலாளர் முறையாகும்.

குழந்தை தொழிலாளர்களின் வேலையின் நிலைகள்:

மனிதாபிமானமற்ற நிலை:

குழந்தை தொழிலாளர்கள் சுகாதாரமற்ற சூழ்நிலை (ம) சிறிய அறைகளில் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.

ஆபத்தான நிலைமை:

  1. மிக அபாயகரமான இராசயன உலைகளின் அருகே வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.
  2. 1400 சென்டிகிரேட் உயர்வெப்பநிலை உடைய அடுப்புகளின் அருகே கூட பணிசெய்கின்றனர்.

 

மாசுபாடு உள்ள தொழிற்சாலை:

பெரும்பாலான குழந்தைத் தொழிலாளர்கள் மாசுபட்டத் தொழிற்சாலைகளில் அருவெறுப்பான துர்நாற்றத்தில் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.

நீண்டகால வேலை:

ஒரு நாளைக்கு 10 முதல் 11 மணி நேரம் நீண்டநேர வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

குறைவான ஊதியம்:

குழந்தைத் தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது.

இழப்பீடு இல்லை:

குழந்தைத் தொழிலாளர்களுக்கு உடலில் பாதிப்பு ஏற்பட்டாலோ, (அ) ஊனம் அடைந்தாலோ இழப்பீடு இல்லை.

சத்துகுறைந்த உணவு:

பெரும்பாலான குழந்தைத் தொழிலாளர்கள் சத்து குறைவான உணவையே உட்கொள்கின்றனர்.

வலிமையற்ற உடல்நிலை:

  1. குழந்தைத் தொழிலாளர்களின் உடல் (ம) எலும்பு மெல்லிய உடையக்கூடிய நிலையில் உள்ளது. சீரான உடல் நிலையில் அவர்கள் இல்லை.
  2. ஆடைகள் முரட்டுத் துணியினால் சரியான அளவுக்கு தைக்கப்படாமல் இருக்கும்.

கடின உடல் உழைப்பு:

20 வயதுக்கு குறைவானவர்கள் செய்யக்கூடாத கடினமான உடல் உழைப்பு வேலையை செய்ய அவர்கள் உந்தப்படுகின்றனர்.

சுகாதார ஆபத்து:

கண்ணாடி தொழிற்சாலை, பீடி தொழிற்சாலைகளில் பணிபுர்ியும் குழந்தைகளுக்கு தோல்நோய், சுவாசநோய். காசநோய் ஏற்படும்.

பாலியல்கோடு:

பெண் குழந்தை தொழிலாளர்கள் கற்பழிக்கப்பட்டு, ஒழுக்கம் கெட்ட செயல்களான பாலியல் தொழிலுக்கு கடத்தப்படுகின்றனர்.

கொத்தடிமை தொழிலாளர்:

யாரோ ஒருவர், மற்றொரு நபரின் கட்டுப்பாட்டில் தன் சுதந்திரத்தை இழந்து செய்யப்படும் நிலை.

இந்தியா (ம) தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர்களின் நிலை:

  1. குழந்தைத் தொழிலாளர்களைப் பற்றிய, மிக துல்லியமான கணக்கெடுப்பு என்பது இயலாத ஒன்றாகும்.
  2. ஏனெனில் தன் சுயலாபத்திற்காக பல குழந்தைத் தொழிலாளர்கள் மறுக்கப்பட்டோ (அ) மறைக்கப்பட்டோ வைக்கப்பட்டுள்ளனர்.
  3. உலகில் 250 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர்.

இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள் நிலை (12 மில்லியன்):

  1. இந்தியாவில் 12 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர்.
  2. இந்நிலையில் இந்தியாவில் இளம் குற்றவாளிகள் உருவாகும் சூழல் ஏற்படுகிறது.
  3. யூனிசெஃப் ஆய்வறிக்கைப்படி, உலக நாடுகளிலேயே இந்தியாவில் மட்டும் 17மூ குழந்தைத் தொழிலாளர்களின் வயது 15 வயதிற்குள் உள்ளது.
  4. 12 வயது முதல் 15 வயது உட்பட்ட பெண் குழந்தைத் தொழிலாளர்கள் ஒரு குறிப்பிட்ட வருமானத்தில் வீட்டு வேலைச் செய்யவும் (ம) வீட்டு வேலைகளில் உதவிபுரியும் நிலையிலும் உள்னர்.
  5. 5 – 14 வயது

மக்கள் தொகை கணக்கெடுப்பு

2001

2011

12.5 மில்லியன்

4.35 மில்லியன

 

தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர்களின் நிலை (2.84 லட்சம்)

தமிழ்நாட்டில் 5 முதல் 14 இடையிலான வயதில் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர் என்று UNICEF குறிப்பிட்டுள்ளது.

ஆண்டு

குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை

1981

2011

9.75 லட்சம்

2.84 லட்சம்

 

குழந்தைத்தொழிலாளர் நிலைக்கான காரணங்கள்:

  1. வறுமை
  • இந்தியாவில் வறுமை 21.9%
  • வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு குழந்தைகளின் வருமானம் பெரும் பயனளிப்பதாக உள்ளது.
  1. பெரிய குடும்பங்களும் மக்கள்தொகை உயர்வும்
  • இந்தியாவில் கிராமப்புறங்களில் பெரிய குடும்பங்கள் காணப்படுகின்றன.
  • குடும்ப வருமானம் மிக குறுகிய அளவில் உள்ளதால் குழந்தைகள் வளரும் நிலையிலேயே குடும்ப வருமானத்திற்காக வேலைக்கு செல்கின்றன.
  1. எளிதில் கிடைக்கும் தொழிலாளர்கள்
  • இயந்திரமயமாதல் (ம) புதிய அறிவியல் தொழில் நுட்பங்கள் காரணமாக விரைவாக வேலையை முடிக்க எண்ணுகின்றனர்
  • குறைவான முதலீட்டில் அதிக லாபம் பெற குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகின்றனர்.
  1. குழந்தைத் தொழிலாளர் தன்மைகள்
  • குழந்தை தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம் போதும்
  • அதிக நேரம் வேலை வாங்க முடியும்
  • யூனியன் அமைக்கவோ வேலை நிறுத்தத்தில் ஈடுபடவோ மாட்டார்கள்
  • குழந்தைகள் எதிர்ப்பைக் காட்டுவில்லை
  1. சமூக அங்கிகாரம்
  • சமுதாயத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை தவறு என்ற எண்ணம் ஏற்படவில்லை.
  • முதலாளிகளும் பெற்றோர்களும் அது சரியானது என்றே கருதுகின்றனர்.

 

 

  1. எழுத்தறிவின்மை – 26%

படிப்பறிவில்லாத பெற்றோர்களுக்கு ஒரு குழந்தையின் சரியான உடல் வளர்ச்சி (ம) புலனுணர்வு உணர்ச்சியின் வளர்ச்சித் தேவை பற்றித் தெரியவில்லை.

  1. நகரமயமாக்கல் – 25% மக்கள்தொகை

வளரும் நாடுகளில் நகரமயமாக்கல் முறைமையின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களில் (ம) ஏற்றுமதி தொழில்களில் குறிப்பாக ஆடைத் தொழிற்துறையில் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகின்றனர்.

  1. மற்ற காரணிகள்
  • குறைந்த இலாபம் (ம) சிறிய அவிலான குடும்ப நிறுவன உற்பத்தி தொழிலில் வயது வந்தோர் தொழிலாளர்களுக்கு போதுமான ஊதியம் வழங்குவதில் பற்றாக்குறை ஏற்படுதல்.
  • பொருளாதார (ம) நிரந்தரமற்ற அரசியல்
  • பாகுபாடு (ம) இடம்பெயர்வு
  • பாரம்பரிய கலாச்சார நடைமுறை
  • நிலமற்ற நிலையில் இருக்கும் தொழிலாளர்கள் ஊதியம் (ம) ஒப்பந்த வேலையை சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
  • குறைவான சமூக பாதுகாப்பு
  • குழந்தைகளை ஆலைத் தொழிலுக்கு மாற்றி எளிதில் பயன்படுத்த முடியும்.
  • குந்தைகளின் விரல்கள் (ம) கைகள் நெகிழ்வாக உள்ளன. அவர்ள்

குழந்தைத் தொழிலாளர் நிலையின் விளைவுகள்:

  1. குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகுதல் வருங்காலத் தேசிய மனித வளங்களின் திருட்டு என அழைக்கப்படுகிறது.
  2. குழந்தைத் தொழிலாளர் முறையினால் மிக கொடூரமான, எதிர்கால பண இழப்புகள் அடிப்படையில் மிகப்பெரிய அனைத்து வகை ஊழலும்ட நடைபெறும்.
  3. HIV/AIDS, போதை மருந்து பழக்கம், மனநோய் போன்றவை குழந்தைத் தொழிலாளர்களுக்கு பொதுவானதாக இருக்கிறது.
  4. குழந்தைத் தொழிலாளராக இருந்த காரணத்தினால் நீண்டகால உடல் நலக் குறைபாடு ஏற்படும்.
  5. குழந்தைகளின் மனம், கல்வி, உடல் வளர்ச்சி போன்றவை பாதிப்படையும்.
  6. அபாயகரமான தொழிற்சாலையில் தொழிலாளர்களாக இருப்பதால், அவர்களின் வாழ்நாள் மிகவும் குறுகியதாக மாறுகிறது.
  7. அவர்களின் வருமானம் எந்த வீதத்திலும், நாட்டின் வருவாயில் காட்டப்படுவதில்லை, சுரண்டப்படுகிறது.

இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்களை குறைப்பதற்காகன சட்டங்கள் (ம) திட்டங்கள்:

அரசின் சட்டங்கள்:

  1. தொழிற்சாலை சட்டம் – 1948

14 வயதிற்குள் உள்ள குழந்தைகளை தொழிற்சாலையில் வேலைக்கு வைப்பதை தடை செய்கிறது.

 

 

  1. பயினுநர் சட்டம் – 1961

எந்த நபரும் 14 வயதிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கு தொழில் பயிற்சி தருவதை தடை செய்கிறது.

  1. பெருந்தோட்டத் தொழிலாளர் சட்டம் – 1951

இச்சட்டம் பெருந்தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்டது.

  1. சுரங்கத் தொழில் சட்டம் – 1952

18 வயதிற்குள் உள்ளவர்களை சுரங்கத்தொழிலில் ஈடுபடுத்தக்கூடாது என இச்சட்டத்தால் வரையறுக்கப்பட்டு உள்ளது.

  1. குழந்தைத் தொழிலாளர் ஒழுங்குமுறை (ம) தடைச்சட்டம் – 1986
  • இச்சட்டப்படி 14 வயதிற்கு உட்பட்டவர்கள் குழந்தை
  • இது 16 வகையான தொழில்கள் (ம) 65 செயல் முறைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவதை தடை செய்கிறது.
  1. போக்குவரத்து வாகன தொழிலாளர் சட்டம் 1961

14 வயதிற்குள் உள்ளவர்களை போக்குவரத்து வாகன தொழிலாளிகளாக செயல்படுவதை தடை செய்கிறது.

  1. பீடி (ம) சுருட்டு தொழிலாளர் சட்டம் – 1966

14 வயதிற்குள் உள்ளவர்களை பீடி (ம) சுருட்டு தொழிலாளர்கள் வேலைக்கு வைப்பதை தடை செய்கிறது.

  1. தமிழ்நாடு கடைகள் (ம) நிறுவனங்கள் சட்டம் – 1947

14 வயதிற்குள் உள்ளவர்களை இச்சட்டப்படி, பணியில் அமர்த்தக் கூடாது

  1. தமிழ்நாடு கேட்ரிங் நிறுவனங்கள் தொழிலாளர் சட்டம் – 1958

16 வயதிற்குள் உள்ளவர்களை பணிசெய்ய தடை செய்கிறது.

10.தமிழ்நாடு கைத்தறி நெசவுத்தொழிலாளர் சட்டம் – 1981

11.தமிழ்நாடு கைத்தொழிலாளர் சட்டம் – 1982

16 வயதிற்குள் உள்ளவர்களை பணியமர்;த்த தடை செய்கிறது. குழந்தைத் தொழிலாளர்களின் சமூக நோயை எதிர்த்துப் பேராடுவதில் இந்தியாவின் முயற்சிகள் விவாதிக்கவும்.

12.இளம் குழந்தைகளின் அரவணைப்பு (ம) பாதுகாப்பு நீதிச்சட்டம் – 2000

குழந்தைகளை தொழிலாளர்களாகவோ (அ) கொத்தடிமைகளாகவோ வேலைக்கு வைத்திருத்தால், அவர்கள் மீது குற்ற நடவடிக்கையின் அடிப்படையில் சிறைத்தண்டனை கிடைக்கும்.

  1. கல்வி உரிமை சட்டம் – 2009
  • இச்சட்டத்தின் படி 6 – 14 வயது குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி உரிமை வழங்கப்பட்டுள்ளது.
  • தனியார் பள்ளிகளில் 25மூ இட ஒதுக்கீடும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் கட்டாய ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது.

அரசின் திட்டங்கள்:

  1. குழந்தைகளுக்கான உதவி எண் – 1098
  • இது கட்டணமில்லாத தொலைபேசி எண்
  • குழந்தைகளின் நலவாழ்வினை உறுதிப்படுத்த விழிப்புணர்வு (ம) ஆலோசனையை வழங்கிவருகிறது.
  1. சிசு கிரே திட்டம் – 6 டயமளா ஃ 10 உாடைன மானியம்
  • இது குழந்தைத் தத்தெடுப்பை வலியுறுத்தும் திட்டம்
  • 10 குழந்தைகளுக்கான மானியமாக 6 லட்சம் ரூபாய் என அரசால் வழங்கப்பட்டது.
  1. குழந்தைகளுக்கான பட்ஜெட்

குழந்தைகளின் சில சிறப்புத் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு செலவினங்களுக்காக தனியாக நிதி ஒதுக்கப்படுகிறது.

  1. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் – 1975

0 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து (ம) சுகாதார நிலையை மேம்படுத்துதல்.

  1. தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் – 1988:
  • இத்திட்டம் நாட்டின் குழந்தைத் தொழிலாளர் கொள்கை 1987 ன் கீழ் செயல்பட்டு வருகிறது.
  • இத்திட்டத்தின் செயல்பாட்டை மேற்பார்வையிட, மாவட்ட ஆட்சியர் , மாவட்ட நீதிபதி ஆகிய தலைமைப் பதவியில் உள்ளவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • மேலும் NGO க்களும் பங்கு பெறுவர்

நோக்கம்:

  1. குந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களின் புனர்வாழ்வுக்கு உதவி செய்து, அவர்களின கல்விக்காக சிறப்பு பள்ளிகளில் 50 குழந்தைகள் சேர்ந்து கல்வி கற்றிட உதவி புரிகின்றன.
  2. ஒவ்வொரு குழந்தைக்குமான பராமரிப்பு செலவு.

ஊக்கத் தொகை – ரூ 100

வளர்ச்சித் தொகை – ரூ 100

மதிய உணவு – ரூ 5

குழந்தைகளுக்கான உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் – 2005:

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்ப திட்டத்தின் குறைபாடுகள்:

  1. அரசு குழந்தைத்தொழிலாளர் பிரச்சனையின் பூதாகர அளவினை சரிவர உணர்ந்து கொள்ளவில்லை.
  2. ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் குழந்தைகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்வது இயலாத காரியம்.
  3. விவசாயத்தில் நவீன முறைகளும், இயந்திரமயமாக்கலும் மேலும் மேலும் கிராமப்புறக் குழந்தைகளை வேலைத்தேடி நகரங்களுக்கு இடம்பெயர வைக்கிறது.
  4. தீங்கு விளைவிக்கும் தொழில்கள் எவையென்பது தெளிவாக்கப்படாமல் உள்ளது.
  5. குழந்தைத்தொழிலாளர்களை மலிவான கூலிக்கு வேலையில் அமர்த்தும் முதலாளிகளை தண்டிப்பதற்கான சட்டங்கள் ஏதும் உருவாகவில்லை.
  6. குழந்தைத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய அதிகாரிகள் நமது கடமைகளை சரிவர நிறைவேற்றவில்லை.
  7. அமைப்புச்சாராத் துறைகளைச் சேர்ந்த வீட்டுவேலை செய்வோர், கந்தல் பொறுக்குவோர், பத்திரிக்கை விற்போர், விவசாயக் கூலிகள் போன்ற தெழிலில் உள்ளவர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் கிடைக்கவில்லை.
  8. வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு தரப்பட்ட முன்னுரிமைகள் இங்கு தரப்படவில்லை.
  9. இத்திட்டங்களில் தீங்கிழைக்கம் தொழில்கள் எவை என்பது குறித்த சரியான வரையறை இல்லை.
  10. குறைந்த சம்பளத்தில் புகார்கள் ஏதும் கூறாத, ஏழைச்சிறார்களைப் பணியில் அமர்த்துவதையே முதலாளிகள் விரும்புகின்றனர்.
  11. அடையாளம் காண்பதில் உள்ள குறைபாடுகள்

வழிமுறைகள்:

  1. சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தல்
  2. வறுமை ஒழிப்பு
  3. ஏற்றத்தாழ்வுகள் ஒழிப்பு
  4. விவசாயத் துறையில் சீர்த்திருத்தங்கள்
  5. வேலைவாய்ப்புகள் அதிகரித்தல்
  6. புதிய தொழில் நுட்பங்ளை பரப்புதல்
  7. கூட்டுறவு இயக்கங்களை முடுக்கிவிடுதல்
  8. சமூக நலத்திட்டங்களை அமல்படுத்துதல்
  9. 1996 ல் உச்சநீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றுதல்
  10. NGO பயன்பாடு
  11. தொழில் கூடங்களை கண்காணிக்க அடிக்கடி உரிய சோதனை செய்தல்

குழந்தைத்தொழிலாளர் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு:

1996ல் இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ஆபத்து நிறைந்த தொழில்களிலிருந்து எவ்வாறு குழந்தை தொழிலாளர்கள் நீக்கப்பட வேண்டும் (ம) மறுவாழ்வு அமைப்பு பற்றியும் சில செயல்முறைகளை வழங்கியது.

வழிகாட்டு நெறிமுறைகள்:

  1. ஆபத்து நிறைந்த தொழில்களில் பணி செய்யும் குழந்தைகள் பற்றிய ஆய்வு 6 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்.
  2. இந்த சட்டத்திற்கு புறம்பாக குற்றம் இழைக்கும் பணிநியமன அமைப்பு / அமைப்பாளர், தீங்கிழைக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தை தொழிலாளிக்கும் ரூ 20,000 நக்ஷ்ட ஈடுத்தரவேண்டும்.
  3. ஆபத்து நிறைந்த பணிகளிலிருந்து நீக்கப்படும் ஒவ்வொரு குழந்தை தொழிலாளிக்குப் பதிலாக, அவர் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு பணி வழங்க வேண்டும் (அ)
  4. ரூ 5000 தொடர்புடைய அரசாங்கம் வழங்க வேண்டும்.
  5. தொழிலில் இருந்து நீக்கப்பட்ட குழந்தைக்கு தக்க கல்வி கூடத்தில் கல்வி வழங்க வேண்டும்.
  6. குழந்தைகள் மறுவாழ்வு நலநிதியம் உருவாக்க வேண்டும்.
  7. தொழிலாளர்துறை அமைச்சகத்தில் ஒரு தனிப்பிரிவை உருவாக்க வேண்டும்.
  8. தீங்கு இழைக்காத பிறதொழில்களில் பணிநேரம் 4 – 6 மணி நேரத்திற்கு மிகக்கூடாது.
  9. மேலும் குறைந்தபட்சம் 2 மணி நேரம் குழந்தைகளை பள்ளி செல்ல அனுமதிக்க வேண்டும்.
  10. இந்த நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்.

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்:

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்

தோற்றம் – உரிமைகள்

  1. குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் 2005ன் படி உருவாக்கம்
  2. 2007 சட் அந்தஸ்து

நோக்கங்கள்:

  1. 2 மில்லியன் குழந்தைகள் பயன்பெறுதல்
  2. நிதியுதவி : 850 கோடி
  3. குழந்தை தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளித்தல்
  4. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 15000 பள்ளிகளில் அவர்களுக்கு கல்வி அளித்தல்
  5. அபாயகரமான தொழில்களில் இருந்து விலகும் குழந்தையின் குடும்பத்திற்கு நக்ஷ்டஈடு அளித்தல்

அமைப்பு:

  1. பாராளுமன்ற சட்டத்தால் உருவாக்கம்
  2. தன்னாட்சி அமைப்பு
  3. தலைமையகம் டெல்லி

செயல்பாடுகள்

            குழந்தைகளின் உரிமைகள்

குழந்தைகள் நலனுக்கான தேசியக் கொள்கை:

தேசிய குழந்தைதொழிலாளர் கொள்கை – 1987

நோக்கங்கள்:

  1. குழந்தை தொழிலாளர்களின் வேலைநேரத்தை குறைத்தல்
  2. குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்தல்
  3. கல்வி (ம) நலவாழ்வு வசதிகளை ஏற்படுத்தி தருதல்

முக்கிய அம்சங்கள்:

  1. குழந்தை தொழிலாளர்களின் நிலையை மேம்படுத்த சட்டரீதியான நடவடிக்கை எடுத்தல்
  2. குழந்தை தொழிலாளர் (ம) அவரது குடும்பத்தினருக்கான பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்துதல்
  3. செயல்முறை திட்டங்களை வகுத்தல்

விளைவுகள்:

  1. தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்:

1987 கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு 1993, அக்டோபர் 2ல் ஆணையம் அமைக்கப்பட்டது.

  1. நலதிட்ட அமைப்புகள்:

இத்திட்டத்தின் படி 12 தேசிய குழந்தை தொழிலாளர் நல அமைப்புத் திட்டங்கள் 7வது ஐந்தாண்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டன.

  1. 1996 உச்சநீதிமன்ற தீர்ப்பு:

இத்தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு 64 வட்டார திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

  1. குழந்தை தொழிலாளர் திட்டம் – 1988:

தேசிய குழந்தை தொழிலாளர் கொள்கை – 2013

நோக்கங்கள்:

  1. 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களை இது குழந்தைகள் என வரையறுக்கிறது.
  2. குழந்தைப் பருவம் வாழ்வின் ஒருபகுதி, அதற்கு தனி மதிப்பு உள்ளது.
  3. குழந்தைகளை பல்வேறு பாதிக்கப்பட்ட சூழ்நிலைகளில் இருந்து மீட்டல்
  4. குழந்தைகளின் ஒட்டுமொத்த இசைவான வளர்ச்சி (ம) பாதுகாப்பிற்கு ஒருங்கிணைந்த அணுகுமுறையை அளித்தல்

முக்கிய அம்சங்கள்:

  1. ஒவ்வொருக் குழந்தையும் தனித்தன்மை வாய்;ந்த மேலான (ம) தேசத்தின் முக்கிய சொத்தாகும்.
  2. பாகுபாட்டிற்கு காரணமான நிலைகளை குறைக்க சிறப்பு நடவடிக்கைகள் அவசியம்
  3. குடும்பச் சூழ்நிலையில் குழந்தைகள் வளர்தல், மகிழ்ச்சியான சூழலில் வாழ்தல் என பல உரிமைகள் குழந்தைகளுக்கு உண்டு.
  4. குழந்தைகளை வளர்ப்பதில், பராமரித்தலில் குடும்பங்களுக்கு ஒரு வலிமையான சமூக பாதுகாப்பு வலையமைப்பு ஆதரவு அளிக்கிறது.
Scroll to Top