2.வேலைவாய்ப்பின்மை பிரச்சனைகள்
வேலையின்மை மற்றும் வகைகள்:
வேலையின்மை:
- வேலையின்மை என்பது ஒருவர் வேலை செய்ய விருப்பமும். தகுதியும் இருந்தும் வேலை கிடைக்காத நிலையாகும்.
- 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் வேலையின்மை (9.6%)
- வகைகள்:
- இவ்வகை வேலையின்மை தேவையான வேலைவாய்ப்பினை உருவாக்கத் தேவைப்படும் உற்பத்தித்திறன் இன்மையால் ஏற்படுகிறது.
- இது வேகமாக வளரும் மக்கள்தொகைக்கு ஏற்ப ஏற்படுகிறது.
- இவ்வகை வேலையின்மை நீண்டகாலம் நீடிப்பவை.
- இந்திய வேலையின்மை அடிப்படையில் இவ்வகையைச் சார்ந்துள்ளது.
- குறைவான வேலையின்மை:
- வேலையாட்கள் தங்களது திறமை (ம) தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பினை பெறாதது.
- அவர்கள் ஏதாவது ஒருபணி செய்து, உற்பத்தித்திறன் குறிப்பிட்ட அளவில் இருப்பது
- ஒரு நாடு தனது பணியாட்களை சரியாக பயன்படுத்த தவறினால், இவ்வகை வேலைவாய்ப்பின்மை தோன்றும்.
- வெளிப்படை வேலையின்மை
- வேலையாட்களுக்கு எவ்வித பணியுமின்றி இருப்பது, அத்துடன் பணிக்கான காலியிடம் இல்லாமல் இருப்பது, இவ்வகை வேலைவாய்ப்பின்மையால் ஏற்படுகிறது.
- படித்த வேலைவாய்ப்பற்றவர்கள் (ம) படிக்காத வேலையாட்கள் ஆகியோரும் இவ்வகையில் வருகிறார்கள்.
- வேலைதேடி கிராமப் புறங்களிலிருந்து நகரத்திற்கு வருவது இந்தியாவில் நடைபெறுகிறது. இது இவ்வகை வேலைவாய்ப்பின்மைக்கு உதாரணமாகும்.
- மறைவான வேலைவாய்ப்பின்மை
- ஒரு பணியாள் உற்பத்தியில் எவ்வகையிலும் பங்கு பெறாதது அல்லது
- அவரை பணியிலிருந்து நீக்கினாலும் உற்பத்தித்திறன் பாதிக்கப்படாத நிலை மறைமுக வேலைவாய்ப்பின்மையாகும்.
- அப்படிப்பட்ட வேலையில்லா நபரின் உற்பத்தித்திறன் பூஜ்ஜியம்
- விவசாயப் பிரிவு வளர்ந்து கொண்டிருக்கும் (ம) வளர்ந்த பொருளாதாரங்கள் இவ்வகை வேலைவாய்ப்பின்மையில்வரும்.
- உராய்வு வேலையின்மை
- தேவை (ம) அளிப்பில் மாறுபாடு ஏற்படுவதால் இவ்வகை வேலைவாய்ப்பின்மை ஏற்படும்.
- இந்தியாவின் முக்கியத்தொழில் விவசாயம்
- இதன் உற்பத்தித்திறன் காலநிலையைப் பொறுத்தது
- இதன் தேவையும் கிடைக்கும் வளங்களைப் பொறுத்தது
- தேவை (அ) வழங்கலில் மாற்றம் ஏற்பட்டால், இரண்டின் சமநிலையும் பாதிக்கப்படும்.
- பருவ வேலைவாய்ப்பின்மை
- மாறுபாடுகளைப் பொறுத்து தேவை குறையும் போது, இவ்வகை வேலைவாய்ப்பின்மை ஏற்படும்.
- பணியாளர்கள் வருடம் முழுவதும் வேலை பெறாதது
- விவசாயப்பணி நடைபெறும்போது மட்டும் வேலைவாய்ப்பு பெறுவது
- இந்திய விவசாயம் 7 – 8 மாத வேலைவாய்ப்பை வழங்குகிறது.
- மீதமுள்ள நாட்களில் வேலையில்லாமல் இருத்தல்
வேலையின்மைக்கான காரணங்கள்:
- மக்கள்தொகைப் பெருக்கம்
- இந்தியாவில் வேலையின்மை சிச்கலுக்கு முதன்மைக் காரணம் மக்கள்தொகைப் பெருக்கம்
- வேலைசெய்கின்றவர்களின் எண்ணிக்கை கூடுகின்ற அளவுக்கேற்ப வேலை வாய்ப்புகளை நமது ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலம் உருவாக்க இயலவில்லை.
- இதனால் கூடுகின்ற மனிதர்கள், நாட்டிற்கு வளமாக இல்லாமல் சுமையாக மாறிவருகின்றனர்.
- வளர்ச்சி பெறாத வேளாண்மை
- நமது வேளாண்மைத்துறை வளர்ந்து வரும் அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு விரைந்து முன்னேறவில்லை.
- உழைப்புச் செறிவுள்ள இத்துறையில் எதிர்பார்த்த புரட்சி நடைபெறவில்லை
- இதனால் மறைமுக வேலையின்மை இத்துறையில் தொடர்கிறது.
- வளர்ச்சி குறைந்த பொருளாதாரம்
- இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வீதம் குறைவாக இருக்கின்றது.
- நமது நாட்டிலுள்ள மூலவளங்களை இன்னும் முழுமையாகவும் சரியாகவும் பயன்படுத்தவில்லை.
- இதனால் போதுமான அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை.
- குறைவான தொழில்களின் வளர்ச்சி
- நமது நாட்டில் மூலதனப் பற்றாக்குறை (ம) சட்டநடைமுறைகளால் பெரிய தொழில்கள் வேகமாக வளரவில்லை.
- வேலைவாய்ப்புள்ள சிறிய தொழில்களைப் பரவலாக நாடெங்கும் வளர்க்கத் தவறிவிட்டோம்.
- வேலைவாய்ப்புக்கான திட்டமின்மை
- நமது ஐந்தாண்டுத் திட்டங்களில் வேலை வாய்ப்புகளைப் பெருக்க சரியாகத் திட்டமிடவில்லை.
- மனிதவளத் திட்டமிடல் இன்னும் கருத்தளவிலேயே உள்ளது.
- இருக்கின்ற மக்களின் தரத்தை ஒட்டி வேலை வாய்ப்பைப் பெருக்க திட்டம் இல்லாததால், சரியான முயற்சியும் இல்லை.
- ஆக்கத்திறனற்ற கல்விமுறை
- தற்போதைய கல்விமுறை கல்விகற்றவர்களையும் பட்டதாரிகளையும் மட்டுமே உருவாக்குகிறது.
- அவர்களிடம் தொழில்நடத்தும் ஆக்கத்திறனையே தன்னம்பிக்கையையோ வளர்க்கத் தவறிவிட்டது.
- இதனால் கற்றவர்கள் மற்றவர்களைச் சார்ந்து வாழும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
- இதனால் கற்றோர் வேலையின்மை உருவாகிறது.
- தொழில் முனைவோர் இன்மை
- நமது நாட்டில் போதுமான அளவில் தொழில்முனைவோர் இல்லை.
- சுயதொழில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பின், அவர்கள் தங்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கி, மற்றவர்களுக்கும் வேலையளிக்க முடியும்.
- எந்திரமயமாக்குதல்
சில துறைகளில் எந்திரமயமாக்கல் போக்கு வளர்ந்து வருகின்றது. இதனால் வேலைவாய்ப்புக்குறைகிறது.
வேலையின்மைக்கான காரணங்கள்:
- சமூக காரணங்கள்
- சமூக நிலை
- மக்கள்தொகைப் பெருக்கம்
- கல்விமுறையில் குறைபாடு
- பொருளாதார காரண்கள்
- குறைவான மூலதனம்
- தொழில்களின் அமைவிட மாற்றம்
- சந்தைப் போக்கினை முன்கூட்டியே கணிக்கும் திறன் இன்மை
- பொருளாதாரப் போட்டிகள்
- பொருளாதாரச் சரிவுகள்
- தொழிற்சாலை இயந்திரங்களின் பயன்பாடு அதிகரிப்பு
- அதிக உற்பத்தி
- தேவை ― அளித்தல் இடையிலான வேறுபாடு
- சேமிப்பு அதிகரித்தல்
- பணவீக்கம்
- விலைச்சரிவு
- வேலையின்மைக்கான தனிப்பட்ட காரணங்கள்:
- அனுபவமின்மை
- தொழில் திறமைகள் குறைவு
- நோய் வாய்ப்படுதல்
- பலவீனம்
- உயர்வான அந்தஸ்து எதிர்பார்த்தல்
- அரசு வேலைகளை மட்டும் நம்புதல்
- ஆராய்ச்சி படிப்பு குறைவான ஊக்கத்தொகை
- போட்டித் தேர்வுக்கு தயாராதல்
- வேலைவாய்ப்பின்றி சார்ந்து வாழ்தல்
- வேலைவாய்ப்பு பற்றிய சரியான தகவல் இன்மை
- வேலைக்கு பிற இடத்திற்கு செல்ல மறுத்தல்
- மொழி பிரச்சனை
- குடும்ப பொறுப்பின்மை
- தொழிற்கல்வி பயிற்சி இன்மை
இந்தியா (ம) தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பின்மை:
இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை:
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 ன் படி,
- 2001-வேலைவாய்ப்பின்மை 6.8% 2011-வேலைவாய்ப்பின்மை 9.6% ஆக உயர்வு
- 10 மில்லியன் இளநிலை, முதுநிலை, தொழில்நுட்ப பட்டதாரிகள் வேலைத்தேடிக் கொண்டிருக்கின்றனர்.
- மொத்த இந்தியர்களில் 15% படித்தவர்கள் வேலைவாய்ப்பு தேடிக்கொண்டு இருக்கின்றனர்.
- படித்தோர் -படிக்காதோர்
- ஆண் – பெண்
- கிராமம் – நகரம்
- முறைசார் – முறைசாராதுறை
- கல்விகற்றோர் வேலையின்மை
- துறை – 1, 2, 3
- ரளாவில் 30% மேற்பட்ட படித்த பட்டதாரிகள் வேலைவாய்ப்பு இன்றி இருக்கின்றனர்.
- வேலைவாய்ப்பு தேடும் மொத்த இந்தியர்கள் – 116 மில்லியன்
- இதில் படித்தவர்கள் – 84 மில்லியன்
- படிக்காதவர்கள் 32 மில்லியன்
- வேலைவாய்ப்பின்மை படிக்காதவர்களைவிட, படித்தவர்களிடையே வேகமாக வளருகிறது.
- நகரங்களைவிட கிராமங்களிலேயே அதிக வேலைவாய்ப்பின்மைக் காணப்படுகிறது.
- வேலைவாய்ப்பின்மை ஆண்களை விட பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது.
- வேலை வாய்ப்பின்மை அதிகம் காணப்படும் துறை : முதன்மைத்துறை 7 இரண்டாம் நிலைதுறை 7 சார்புத்துறை
- மற்றதுறைகளைவிட வேளாண்மைத்துறையில் அதிக வேலைவாய்ப்பின்மை காணப்படுகிறது.
- வேலைவாய்ப்பு வளர்ச்சி ஆண்டிற்கு 2% மட்டுமே இருக்கிறது.
- கல்வி கற்று வேலைவாய்ப்பில்லாமல் இருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
- ஒழுங்கற்ற அமைப்பு பிரிவுகளில் சமீபகாலமாக வேலைவாய்ப்பு வளர்ச்சிவீதம் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டின் வேலை வாய்ப்பின்மை:
- தமிழ்நாட்டில் விவசாயமே அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கிறது.
- விவசாயமல்லாத துறைகள், உழைப்பாளர்கள் குழு தொழில்களை மாற்றிக் கொள்வதற்குப் போதுமான வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை.
- தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பு வளர்ச்சியின் பெரும்பகுதி குறைந்த வருமானங்களை அளிக்கின்ற அமைப்பு ரீதியாக, ஒழுங்கமைக்கப்படாத முறைசாரா துறைகளின் பங்களிப்பாகும்.
- ஐந்தாண்டு திட்டங்களில் வேலைவாய்ப்புக் கொள்கை
- 7வது ஐந்தாண்டுத் திட்டம் 1985 – 1990
பொதுவான நிலை அடிப்படையில், வேலைவாய்ப்பு வளர்ச்சி வீதத்தை அதிகரித்தல்.
- 8வது ஐந்தாண்டுத்திட்டம் : 1992 ― 1997:
- 2000 ஆண்டிற்குள் ஆண்டுக்கு 2% வேலைவாய்ப்பை உருவாக்குதல்.
- இதன் பொருட்டு பல்வேறு வேலைவாய்ப்புத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன.
- 9வது ஐந்தாண்டுத்திட்டம் : 1997 2002;
- வேளாண்மையில் பொதுமுதலீடுகளை ஈர்த்தல்.
- இதன்மூலம் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்.
- 10வது ஐந்தாண்டுத் திட்டம்: 2002 – 2007:
- ஆண்டிற்கு 10 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்.
- 8% உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை அடைதல்.
- வேலைவாய்ப்பு திட்டங்கள் மூலம் மறைமுக உருவாக்குதல்.
- 11வது ஐந்தாண்டுத்திட்டம்: 2007 – 2012
- நகர்ப்பற (ம) கிராமப்புற வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்.
- வளர்ச்சி குறைவான பகுதிகள், துறைகளில் வேலைவாய்ப்பினை அதிகரித்தல்.
- நகர்ப்புற ஏழைகளுக்கு வேலை காப்பீட்டை விரிவுபடுத்துதல்.
- 12வது ஐந்தாண்டுத்திட்டம்; 2012 – 2017
- உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பினை அதிகரிப்படுத்துதல்.
- மேலும் 10 மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குதல்.
வேலையின்மையால் ஏற்படும் விளைவுகளை:
- வேலையின்மையால் குடும்பத்தில ஏற்படும் விளைவுகள்:
- குடும்பத்தின் ஒற்றுமை பாதிக்கப்படுகிறது.
- தனிப்பட்ட மனிதனின் குறிக்கோள் (ம) நோக்கம் பாதிக்கப்படுகிறது.
- கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்படுகிறது.
- குடும்பத்திற்குள் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது.
- கணவன் வேலைக்கு செல்லாமல், மனைவி மட்டும் வேலைக்கு செல்லும் குடும்பத்தில், கணவனின் மனதில் எரிச்சலை உண்டாக்குகிறது.
- வேலைக்கு செல்லாத மகன் (அ) மகளால் பெற்றோர் பிள்ளைகள் இடையே தகராறு ஏற்படுகிறது.
- வேலையின்மையால் சமூகத்தில் ஏற்படும் விளைவுகள்:
- வேலையின்மையால் சமூக உறவுகள் பாதிப்படையும்
- வேலையின்மையால் இளைஞர்கள் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவர்.
- சமூக விரோதச் செயல்கள் – கொள்ளை, வழிப்பறி, வங்கிக் கொள்ளை
- மனஉளைச்சல் (ம) தற்கொலை எண்ணத்தை தூண்டுகிறது.
- கடத்தல், போதைப்பொருள் விற்றலில் ஈடுபடுவர்
- வேலையின்மையால் குறைவான ஊதியம் பெறும் நிலைக்குத் தள்ளப்படுவர்
- வறுமை அதிகரிக்கும்.
- தனிநபர்கள் உழைப்பதற்கான விருப்பத்தையே இழந்துவிடுவர்
- தனிநபரின் திறன்கள் வீணடையும்
- கடன்கள் அதிகரிக்கும்
- பட்டினியால் பலர் இறப்பர்
- வேலையில்லாதவர்களின் பொருளாதார நிலை பாதிப்படையும்
- மது (ம) போதை பழக்கத்திற்கு ஆளாவர்.
பகவதி குழு 1970:
நோக்கம்:
இந்திய அரசு, வேலையின்மையின் அளவை மதிப்பிட்டு, அதனைத் தீர்க்க வழிமுறைகள் அமைக்க பகவதி குழு உருவாக்கப்பட்டது.
பரிந்துரைகள்:
- வேலைவாய்ப்பு, மனித வளத் திட்டமிடுதல் ஆகியவற்றிற்காக ஒரு தேசியக்குழுவை உருவாக்க வேண்டும்.
- நாட்டின் வளர்ச்சிக்குரிய வளங்களில் ஒரு பகுதியை ஒதுக்கியும், கூடுதல் வரிவிதித்தும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
- பெரிய அளவில் கிராம வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.
- உழைப்புச் செறிவுடைய தொழில்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
- குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் வேலை செய்வதை தடுக்க வேண்டும்.
- வாரம் 48 மணிநேரமாக இருக்கும் உழைப்பினளவை 41 மணி நேரமாகக் குறைக்க வேண்டும்.
- வேலைவாய்ப்புக் கல்வி முனையை உருவாக்க வேண்டும்
- வேலைவாய்ப்புக் காப்பீடு திட்டத்தை கொண்டுவர வேண்டும்.
- மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த சரியான திட்டம் அவசியம்.
- பின்தங்கிய வட்டாரங்களுக்கு முன்னுரிமை அளித்திட வேண்டும்.
எஸ்.பி. குப்தா குழு – 2001:
10 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வழிமுறைகளை ஆராய் அமைக்கப்பட்டது.
கிராமப்புற வேலையின்மை:
ஊரக வேலையின்மை:
- ஊரக வேலையின்மை – 7.8%
- நடைமுறையிலுள்ள ஊதிய விகிதத்தில், தனிநபரால் வேலை செய்ய விருப்பம் இருந்து கிடைக்கப்பெறாத நிலை
வகைகள்:
- வெளிப்படை வேலையின்மை
- மறைமுக வேலையின்மை
- பருவகால வேலையின்மை
காரணங்கள்:
- திறன் மேம்பாட்டு பயிற்சி (ம) வேலைவாய்ப்பு பயிற்சி உருவாக்கம் இன்மை அரசால் போதிய பயிற்சிகள் (ம) வேலைவாய்ப்பை உருவாக்க இயலவில்லை.
- வேளாண்மை பருவகாலம் சார்ந்தது
இயற்கை (ம) பருவமழை பொய்ப்பின் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும்
துணை தொழில்கள் இன்மை
- போதிய நிதி (ம) அங்காடி வசதிகள் இன்மை
- ஊரக மக்கள் கோழி வளர்ப்பு, கயிறு திரித்தல், பன்றி வளர்த்தல் என துணைத்தொழில்களில் ஈடுபட முடியவில்லை.
வேளாண்மையை இயந்திரமயமாக்குதல்:
உழுதல், நீர்ப்பாசனம், அறுவடை செய்தல், கதிரடித்தல் என இயந்திர பயன்பாடு வேலைவாய்ப்பை குறைக்கிறது.
மூலதன செறிவு தொழில் நுட்பம்:
நகர்ப்புறங்களில் மட்டுமே தனியார் தொழில்துறை முதலீடு செய்கிறது.
கல்வி முறையில் உள்ள குறைபாடுகள்:
- அதிக கல்வி நிறுவனங்கள் (ம) அதிக பட்டதாரிகள்
- ஆனால் தமது திறமைகளை வளர்த்துக் கொள்ள விரும்பவில்லை
தீர்வுகள்:
- துணை தொழில்கள்
- துணைத்தொழில் துவங்க ஊக்கம், கடன்வசதி அளித்தல்
- பண்டங்களை சந்தைப்படுத்துதல்
- ஊரக வேலைத்திட்டம்
- சாலைவசதி, வடிகால்கள், கால்வாய்களை தோண்டும் பணிகள் செய்தல்
- வேலையற்றவர்களுக்கு ஆக்கப்பூர்வ வேலைவாய்ப்புகளை வழங்குதல்
- நீர்ப்பாசன வசதிகள்
- பலவகை பயிர்கள் பயிரிடல்
- தீவிர பயிர்சாகுபடி முறை பின்பற்றல்
- ஊரக தொழில்மயமாக்கல்
புதிய தொழிற்சாலைகளை அமைக்க அரசு ஈடுபடல்.
- தொழில் நுட்பகல்வி:
சுயதொழில் துவங்க வழிவகை செய்தல்.
கல்வி கற்றோர் வேலையின்மை:
- கல்வி கற்றும் வேலையில்லாமல் இருப்பது
- படித்த படிப்பிற்கு ஏற்ற வேலையின்மை
- குறைவான ஊதியத்தில், குறை தகுதியில் வேலை செய்ய விருப்பம் இல்லாமல் இருத்தல்
காரணங்கள்:
- கல்விமுறை வாழ்க்கைக்குத் தொடர்பில்லாமல் இருக்கிறது.
- கல்வி முறையானது மக்கள் தொகையில், ஒரு சிறிய பிரிவினருக்கு மட்டுமே அளிக்கப்படக்கூடிய உயர்கல்விக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.
- அதிக கல்வி நிறுவனங்கள் (ம) அதிகம் படித்தேன்.
- நாட்டின் முன்னேற்றத்திற்கும் கல்வி முறைக்கும் இடையே அதிக இடைவெளி உள்ளது.
- ஆசிரியர்களுக்கும் தங்களது துறைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த போதிய அறிவு வேண்டும்.
- சில ஆசிரியர்கள் குழந்தைகளின் கல்வியில் அக்கறையற்றும், பகுதிநேர தொழில் புரிந்து வருவாய் ஈட்டியும் வருகின்றனர்.
- தொழில்நுட்ப அறிவின்மை
- அரசு வேலைகளை மட்டும் நம்புவது
- தொழில்கல்விக்கு முக்கியத்துவம் தராமை
வேலைவாய்ப்புத் திட்டம் – மதிப்பீடு (அ) குறைபாடுகள் திட்ட தோல்விக்கான காரணங்கள்:
- திட்டத்திற்கு போதுமான அளவு நிதி அளிக்கப்படவில்லை.
- மொத்த நிதியில் ஒரு குறிப்பிடத்தக்க அளவானது பிறதிட்டங்களுக்கு திருப்பி விடப்பட்டது.
- கார்கள், குளிர்ச்சாதனபெட்டி, வீடியோ புகைப்படக்கருவி என பொருட்கள் வாங்கவும், காலவைப்புகள் (ம) தேசிய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யவம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- RLEGP திட்டத்தின் கீழ் வினியோகிக்கப்பட வேண்டிய உணவு தானியங்கள் பொது விநியோக நிறுவனம், பிற அமைப்புகளுக்கு சென்றுள்ளது.
- வேலைநாட்கள் கணக்கிடப்பட்டதில் தவறான முறை பின்பற்றப்பட்டுள்ளதாக CAG அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- பல மாநிலங்கள் ஊதியத்திற்கான செலவினத்தை குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதிய விகிதத்தால் வகுப்பதன் மூலம் கிடைக்கும். ஒரு அனுமான அடிப்படையில் வேலைநாட்களை கணக்கிட்டுள்ளன.
- இந்தியாவில் வறுமை 21.9மூ ஆக உள்ளது.
- உணவு தானிய உற்பத்திக்கே முக்கியத்துவம் தரப்பட்டு உள்ளது. இதனால் பயிரிடப்படும் நிலத்தின் அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
- உணவு தானியங்கள் மறைமுகமாக விற்கப்படுதல் (ம) கடத்தப்படுதல்
- கிராமப்புற மக்களுக்கான மாற்று வேலைவாய்ப்பு ஆதாரங்களை உருவாக்க வில்லை.
- கிராமப்புறங்களில் தொழில்துறை கட்டமைப்புகளை உருவாக்கவில்லை.
- கற்றோர் வேலையின்மை அதிகம்
- வேலையற்றோர்க்கு வங்கிகள் மூலம் கடனுதவி அளித்து அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கத் தவறிவிட்டன.
- மத்திய அரசால் வழங்கப்படும் மானியத்தின் அளவு குறைந்து வருகிறது.
- திட்டத்தை சரியான முறையில் மேற்பார்வை (ம) நிர்வாகிக்கவில்லை.
வேலையின்மையை நீக்குவதற்கான வழிமுறைகளை:
வழிமுறைகள்:
- மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்புத் திட்டங்கள்
- அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள்
- NGO வின் பங்கு
- சுயவேலைவாய்ப்பை ஊக்குவித்தல்
- தொழில்கல்வி பயிற்சித்திட்டங்களை ஒழுங்குபடுத்துதல்
- நவீன முறையில் பாடத்திட்டங்களை வகுத்தல்
- சிறுதொழில் நிறுவனங்களை கிராமங்களில் கொண்டு வருதல்.
- உயர்கல்வியில் ஒழுங்குமுறை
- வேலைவாய்ப்பு திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்குதல்
- தொழிலாளர் சட்டங்களில் திருத்தம்
- கடுமையான சட்டதிட்டங்கள் உருவாக்கம்
- தடையில்லா வாணிபக் கொள்கை
- இந்தியா தனது சொந்த வளம் (ம) ஆதாரங்களை பயன்படுத்துதல்
- வளர்ச்சித் திட்டங்களுக்கு குறைவான வட்டி விகிதத்தில் கடன் அளித்தல்
- அதிக முதலீடு
- நீண்ட நாட்கள் உழைக்கக்கூடிய சொத்துக்களை உருவாக்குதல்
- தேர்வு செய்யப்பட்டத்துறைகளில் சில கூட்டுத்திட்டங்களை துவங்குதல்
- தொழில் முனைவோரை உருவாக்குதல்
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்:
- தோற்றம் – 1978
- வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு உதவ (ம) அவர்கள் போலி முகவர்களிடம் ஏமாறாமல் தடுக்க இந்நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.
- இந்திய பணியாளர்களுக்கு வெளிநாடுகளில் வேலை கிடைப்பதை ஊக்குவிக்கிறது.
நோக்கங்கள்:
- இந்தியப் பணியாளர்களை வெளிநாட்டு வேலைக்கு தேர்வு செய்யும் ஆள்சேர்ப்பு முகவராகச் செயல்படுதல்
- தாமாகவோ (அ) அரசின் சார்பாகவோ வெளிநாடுகளில் கூட்டு தொழில்துறைச் சார்ந்த முயற்சிகளை முன்னெடுத்தல்
- இந்தியாவில் உள்ள திட்டங்களுக்கு வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களிடம் இருந்து தேவையான நிதிஆதாரங்களை திரட்டுதல்
- பாரம்பரியம் (ம) பாரம்பரியம் சாராத பொருட்களின் ஏற்றுமதியை தீவரப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்
- வான்வழிபயணம் (அ) போக்குவரத்து போன்ற சேவைகளை வழங்கும் அனைத்து வெளிநாட்டு நிறுவனங்களின் சார்பாக பயணச்சீட்டுகளை விற்பசைன் செய்தல்
- வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு விபத்து (ம) சுகாதார காப்பீடுகளை வழங்குதல்
- வெளிநாட்டு வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு வெளிநாட்டு நாணயங்களை வழங்குதல்
குறிக்கோள்கள்:
- தகுதியான, அனுபவமான, அர்ப்பணிப்புள்ள மனிதவளத்தினை கண்டறிதல்
- உள்நாட்டு வேலையளிப்போருக்கு தேவைப்படும் மனித வளத்தினை அளித்தல்
- வெளிநாட்டு வேலையளிப்போரை ஒரே புள்ளியில் இணைத்தல்
- சான்றிதழ்கள் மிக உரிய அதிகார அமைப்புகளிடம் இருந்து சான்றோப்பம் பெற்றுத் தருதல்
- பயிற்சிக்கான வசதிகளை செய்து தருதல்
- பயணச்சீட்டு வசதிகளை ஏற்படுத்தி தருதல்