1.மக்கள் தொகைப்பெருக்கம்
மக்கள் தொகையை தீர்மானிக்கம் காரணிகள்:
காரணிகள்:
பிறப்பு விகிதம்:
- ஒரு வருடத்தில் 1000 நபர்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை வீதம்
- மக்கள் தொகை பெருக்கத்திற்கு அதிக பிறப்பு வீதம் முக்கிய காரணியாகும்
- 2011 கணக்கெடுப்பின்படி, பிறப்பு வீதம் 21.8/1000
பிறப்பு வீதத்துடன் தொர்புடைய காரணிகள்:
- திருமண வயது (3/5) 21 வயதுக்குள் திருமணம்
- குழந்தை பிறப்பு அதிகரிப்பு
- சமூக பழக்கங்கள் (ம) நம்பிக்கைகள்
- படிப்பறிவின்மை
- பிறப்பு கட்டுப்பாடு முறைகள் பற்றி அறியாமை
இறப்பு விகிதம்:
- ஒரு வருடத்தில் 1000 நபர்களில் இறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை விதம்
- மக்கள் தொகை பெருக்கத்திற்கு குறைவான இறப்பு வீதம் முக்கிய காரணியாகும்
- 2011 கணகெடுப்பின்படி, இறப்பு வீதம் 7.11/1000
இடப்பெயர்ச்சி:
- வெளிகுடியேற்றம் மக்கள்தொகை பெருக்கத்தை குறைக்கிறது.
- உள்வெளிகுடியேற்றம் மக்கள்தொகை பெருக்கத்தை அதிகரிக்கிறது.
காரணிகள்:
- நிலத்தின் குறைந்த விலை
- வளர்ச்சி திட்ட பணிகளின் வளர்ச்சி
- மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வு
- நகரத்திட்டமிடுதலின் குறைபாடு
- மக்கள்தொகை பெருக்கம்
மக்கள்தொகை வெடிப்பு காரணங்கள், விளைவுகள்:
- மக்கள்தொகை வெடிப்பு
அச்சுறுத்தக் கூடிய, அதிவேகமான மக்கள் தொகையின் வளர்ச்சி வீதமே மக்கள்தொகை வெடிப்பாகும்.
- மக்கள்தொகை வெடிப்பிற்கான காரணங்கள்
அதிக பிறப்புவீதம்
ஆண்டு | பிறப்பு வீதம் |
2001 | 25.8 / 1000 |
2011 | 21.8 / 1000 |
அதிக பிறப்பு வீதத்தின் காரணமாக மக்கள்தொகை 121 கோடியாக உயர்ந்துள்ளது.
குறைவான இறப்புவீதம்
ஆண்டு | பிறப்பு வீதம் |
2001 | 8.5 / 1000 |
2011 | 7.11/ 1000 |
குறைவான இறப்பு வீதத்தால் மக்கள்தொகை உயர்ந்துள்ளது.
- இளவயது திருமணம்
- இந்தியாவில் ஆண்களின் திருமணவயது 21, பெண்களின் திருமண வயது 18
- இதனால் மகப்பேறு காலம் அதிகரித்து, பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
- சமுதாயக் காரணங்கள்
- திருமணம் ஒரு இன்றியமையாத சமூகக்கடமை
- குடும்பத்திற்கு ஓர் ஆண்குழந்தை என்ற எதிர்பார்ப்பினால் மக்கள் தொகை அதிகரிக்கிறது.
- வறுமை
- இந்தியாவின் வறுமைநிலை 2011 ன் படி 21.9%
- குழந்தைகள் வருமானம் ஈட்டக்கூடிய நிலையில் திகழ்கின்றனர்.
- பள்ளிக்குச் செல்லாமல் தொழில்களில் ஈடுபடுகின்றனர்
- எனவே வறுமையைச் சமாளிக்க, கூடுதலாக பிறக்கும் குழந்தைகளை வருமானம் ஈட்டித்தரும் சொத்தாக மக்கள் கருதுகின்றனர்.
- கல்வியறிவின்மை
- இந்திய மக்களில் 26% பேர் கல்வியறிவற்றோர்
- மேலும் பெரும்பாலானோர் குறைவான கல்வியறிவு உடையோர்
- கல்வியறிவின்மையால் சமூக பழக்க வழக்கம், வறுமை, வேலையின்மை, போன்ற காரணிகள் அதிகரித்து, மக்கள் தொகையை வளர்ச்சி அடைய செய்கிறது.
- பிற காரணங்கள்
- அமைதியான நிலைமை
- மருத்துவ அறிவு வளர்ச்சி
- போக்குவரத்து வளர்ச்சி
- வேளாண்மை, தொழில்முன்னேற்றம்
- தட்பவெப்பநிலை, பொழுதுபோக்கின்மை
- அனைவருக்கும் திருமணம் (ம) குழந்தைகள்
மக்கள்தொகை வெடிப்பின் விளைவுகள்:
- பொருளாதார வளர்ச்சி பாதிப்பு
பொருளாதார வளர்ச்சிக்கு உழைப்பின் அளிப்பு, அதிமாக தேவைப்பட்டாலும் நமது மக்கள் தொகை தொடர்ந்து வளர்வதால் பொருளாதார வளர்ச்சி பாதிப்புள்ளாகிறது.
- உணவுப் பற்றாக்குறை
இந்திய மக்கள்தொகை அதிகரிப்பதால், விவசாய உற்பத்தியில் சமவிகித வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதனால் கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது.
- உற்பத்தி செய்யாத நுகர்வோர்சுமை
- மக்கள்தொகை அதிகரிக்கும் போது, குழந்தைகள் மற்றும் முதியோரின் எண்ணிக்கையும் உயர்கிறது.
- குழந்தைகளும், முதியோர்களும் உற்பத்தியில் ஒரு பங்கினையும் வகிக்காமல் பொருள்களை மட்டுமே நுகர்கின்றார்கள்.
- தலா வருமானம் (ம) நாட்டு வருமானம் குறைதல்
- அதிவேகமாக வளரும் மக்கள்தொகை தலா வருமானம் (ம) நாட்டு வருமானத்தின் சராசரி வளர்ச்சி வீதத்தை தடை செய்கிறது.
- நாட்டு வருமானத்தில் ஏற்பட்ட அதிகரிப்பை நிலையாக வளர்ந்து வரும் மக்கள் தொகை நுகர்ந்து விடுகிறது.
- சேமிப்பும் முதலீடும் குறைதல்
- அதிவேக மக்கள்தொகை வளர்ச்சி சேமிப்பையும் (ம) முதலீட்டின் திரனையும் குறைக்கிறது.
- நாட்டு வருமானம், தலா வருமானம் குறைவாக உள்ளதால் சேமிப்பு பூஜ்ஜியம் ஆகிறது.
- இதனால் முதலீடு குறைவதுடன், உற்பத்தித்திறன் பாதிக்கப்படுகிறது.
- வேலையின்மை (ம) குறைவேலையுடைமை
- வளரும் மக்கள்தொகை வேலையில்லா திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கிறது.
- இதனால் நிறைய மக்கள் வேலையில் அமர்த்தப்பட்டாலும், குறைவான வேலையில் அமர்த்தப்பட்டும் இருக்கிறார்கள்
- மக்களின் உழைப்பு வீணாதல்
- அடிக்கடி குழந்தை பெறுவதால், உற்பத்தி நடவடிக்கைகளில் பெருமளவு மகளிரால் நீண்டகாலத்திற்கு வேலைசெய்ய இயலவில்லை
- இதனால் மனிதவளம் வீணாகிறது. பொருளாதார வளர்ச்சிக் குறைகிறது.
- உழைப்பின் உற்பத்தித்திறன் குறைவு
- மக்கள்தொகைப் பெருக்கம் நாட்டு வருமானம் (ம) தனிநபர் வருமானத்தைப் பாதிக்கிறது.
- மக்களின் வாழ்க்கைத்தரம் குறைவதால், உற்பத்தி திறன் குறைகிறது.
- சமூக நலத்திட்டத்தின் மீது அதிகச் செலவு
- மக்கள் தொகை அதிகரிப்பானது, குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன.
- இதனால் மருத்துவ பராமரிப்பு, பொது சுகாதாரம், குடும்பநலன், கல்வி, வீட்டுவசதி போன்ற சமூக செலவுகளின் தேவையானது அதிகரிக்கின்றன.
10.வேளாண்மையில் பின்தங்கிய நிலை
- மக்கள்தொகை வளர்ச்சியினால் நிலம் துண்டாப்படுகிறது.
- நிலங்கள் மிகச்சிறியதாக இருப்பதனால், இயந்திரமயமான உழவு முறையைக் கையாள முடியாது
- அரசு மீத நிதிச்சுமை
- அதிவேக மக்கள்தொகை அதிகரிப்பு நிதிச்சுமையாக அரசுக்கு அமைகின்றது.
- சமூக நலத்திட்டங்களுக்காகவும் வறுமையை அகற்றவும் அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது.
- மக்கள்தொகை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டால், அரசு நிதியை உற்பத்திக்காக செலவழிக்கக் கூடும்
12.பிறவிளைவுகள்
- வறுமை அதிகரிப்பு
- நிலத்தின் மீதான அதிக அழுத்தம்
- மந்தமான பொருளாதார வளர்ச்சி
- கல்வி பிரச்சனை
- வீட்டுவசதி பிரச்சனை
- சுற்றுச்சூழல் மாசுபாடு
மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்தும் வழிகள்:
- தம்பதிகளின் பாதுகாப்பு வீதம்
இவ்வீதத்தினை அதிகரிப்பதற்கு குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை கையாளும், தம்பதிகளின் விகிதம் அதிகரிக்க வேண்டும்.
- குழந்தைகளின் இறப்பு வீதம்
குழந்தைகள் குறைந்த எண்ணிக்கையில் இறக்கும் போது, பொதுமக்கள் சிறுகுடும்ப நெறியினை பின்பற்ற ஊக்கம் ஏற்படும். எனவே இவ்வீதம் குறைக்கப்பட வேண்டும்.
- நாடு தொழில் மயமாதல்
- நிலத்தை சார்ந்திருக்கும் மக்கள்தொகை அழுத்தத்தை குறைக்க வேண்டும்.
- கிராமப் புறங்களில் குடிசை (ம) சிறுதொழில்களை, அதிக பட்ச மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையில் வளரச் செய்தல் வேண்டும்.
- பெண்களின் எழுத்தறிவு வீதம் (ம) கல்வியை அதிகரித்தல்
- கல்வி கற்ற பெண்கள், தங்களுடைய குடும்ப அளவினைப் பற்றி அதிகப் பொறுப்பு வாய்ந்த கண்ணோட்டத்தைப் பெற்றுள்ளனர்.
- சிறுகுடும்பத்தின் நன்மைகள் குறித்தும், குடும்ப கட்டுப்பாட்டு முறைகள் பற்றியும் அறிந்து, செயல்படுத்தி குடும்ப அளவைக் குறைக்கின்றனர்.
- காலம் தாழ்த்தி திருமணம் செய்தல்
- காலம் தாழ்த்தி திருமணம் செய்வதற்கு, ஊக்கமளிக்க வேண்டும்.
- முன்கூட்டியே திருமணம் செய்வதை கட்டாயம் கட்டுப்படுத்த வேண்டும்.
- சட்டரீதியான நடவடிக்கை
இளவயது திருமணம் (ம) பலதார மணம் நடைபெறுவதை தடுப்பதற்கு கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்.
- அதிக வேலைவாய்ப்பு
- வேலைவாய்ப்பு வசதிகளை கிராம (ம) நகர்ப்புறங்களில் அதிகப்படுத்த வேண்டும்.
- பொதுவாக கிராமங்களில் மறைமுக வேலையின்மை உள்ளது. இதனால் கிராமப்புறங்களில் உள்ள வேலையில்லா மக்களை நகர்புறங்களில் இடம்பெயர செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
- வேளாண்மை (ம) தொழில்துறை வளர்ச்சி அடைதல்
- வேளாண்மையும் தொழில்துறையும் முறையாக வளர்ச்சி அடைந்தால், அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
- கிராம புறங்களில் அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் குடிமை (ம) சிறுதொழில் தொழிற்சாலைகள் வளர்ச்சி அடைய வேண்டும்.
- வாழ்க்கைத் தரம்
- உயர்வான வாழ்க்கைத்தரம் பெருங்குடும்பங்களுக்கு தடையாக அமைகிறது.
- மக்கள் தங்களின் வாழ்க்கை தரத்தை பராமரிப்பதற்கு சிறுகுடும்பங்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றனர்.
- நகரமயமாதல்
- கிராமப்புறங்களை காட்டிலும் நகர்ப்புறங்களில் பிறப்புவீதம் குறைவாக உள்ளது.
- ஆதலால் நகரமயமாதல் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
- சுயகட்டுப்பாடு
- இம்முறை தனித்துவம் (ம) சுகாதாரமான அணுகுமுறை
- பிறப்பு விகிதத்தை குறைக்க இம்முறை உதவுகிறது.
- குடும்ப கட்டுப்பாடு
- குடும்ப கட்டுப்பாடு என்பது குடும்ப நபர்களின் எண்ணிக்கையை குறைத்தல் ஆகும்.
- குடும்ப கட்டுப்பாடு பிரச்சாரத்தை தேசிய இயக்கமாக மாற்ற வேண்டும்.
- பொழுதுபோக்கு வசதிகள்
திரைப்படம், திரையரங்குகள், விளையாட்டு, நடனம் போன்ற பொழுதுபோக்கு வசதிகள் செய்து தரப்பட்டால், பிறப்புவிகிதம் குறைய வாய்ப்புள்ளது.
14.விளம்பரம்
தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள், போன்ற தகவல்தொடர்பு ஊடகங்களின் மூலம் திட்டமிட்ட குடும்பங்களால் பெரும் நன்மையை மக்களுக்கு தெரிவிக்கலாம்.
- ஊக்கத்தொகை
பிறப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கையை மக்கள் பின்பற்ற, அரசானது ஊக்கத்தொகை போன்ற வழிகளை பின்பற்றலாம்.
- பெண்களுக்கு வேலைவாய்ப்பு
- பெண்களுக்கு பலதுறைகளில் வேலைவாய்ப்பு (ம) ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
- போட்டித் தேர்வுகளில் பெண்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்த வேண்டும்.
நிலையான மக்கள்தொகையை அடைவதற்கான வழிமுறைகள்:
- குழந்தை சுகாதார சேவை (ம) சுகாதார கட்டமைப்பு ஆகியவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும்.
- 14 வயது வரை இலவசக் கல்வி
- குழந்தைகளின் இறப்புவிகிதத்தை 30 க்கு கீழே கொண்டு வர வேண்டும்.
- பிரசவத்தின் போது, தாயின் இறப்பை கட்டுப்படுத்த வேண்டும்.
- குழந்தைககளுக்கு நோய் வராமல் தடுப்பதற்கு தடுப்பூசி போட வேண்டும்.
- திருமண வயது 20 (ம) அதற்கு மேல் அதிகரிக்க வேண்டும்.
- பிறப்பு, இறப்பு, திருமணம் ஆகியவற்றை 100% பதிவு செய்ய வேண்டும்.
- எய்ட்ஸ் போன்ற தொற்றுநோயை தடுக்க வேண்டும்.
- சிறுகுடும்ப செயல்திட்டத்தினை ஊக்குவிக்க வேண்டும்
- சுயஉதவி குழுவை ஊக்குவிக்க வேண்டும்.
- தொடக்க கல்வியை கட்டாயம் (ம) இலவசமாக வழங்க வேண்டும்
- அரசு சாரா நிறுவனங்களை ஈடுபடுத்த வேண்டும்.
மக்கள்தொகை கோட்பாடுகள்:
மக்கள்தொகை வளர்ச்சிக் கட்டகோட்பாடு
- மால்தசின் மக்கள்தொகை கோட்பாடு
- உணவு உற்பத்தி அதிகரிக்கும் போது, மக்கள் தொகையும் அதிகரிக்கும்
- மக்கள்தொகை பெருக்க வீதத்திலும் உணவு உற்பத்தி கூட்டல் வீதத்திலும் அதிகரிக்கிறது.
- கிடைக்கும் உணவுப் பொருட்களின் அளவிற்கேற்ப, இயற்கைத் தடைகள் (ம) செயற்கைத்தடைகள் மூலம் மக்கள்தொகையை நிலைப்படுத்தலாம்
இயற்கைத் தடைகள்
- இவை இறப்பு வீதத்தை அதிகரித்து, மக்கள்தொகை வளர்ச்சியை பாதிக்கிறது.
- (எ.கா). வறுமை, வியாதிகள், போர்கள், பஞ்சங்கள்
செயற்கைத் தடைகள்
- மக்கள் தொகையை குறைக்க மனிதன் மேற்கொள்ளும் முயற்சிகள் செயற்கைத் தடைகள் எனப்படும்.
- (எ.கா): காலம் தாழ்த்திய திருமணம். வாழ்க்கையில் கட்டுப்பாட்டுடன் இருத்தல்
- உத்தம அளவுக் கோட்பாடு
- மக்கள்தொகையில் ஏற்படும் மாற்றங்களுக்கும், அதன் விளைவாக தலா வருமானத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கும் இடையே உள்ளத் தொடர்பு விளக்குகிறது.
- இயற்கை வளங்கள், மூலதனப பொருட்களின் இருப்பு (ம) தொழில்நுட்ப நிலை ஆகியவற்றிற்கு ஏற்ற சிறந்த மக்கள் தொகை, உத்தம அளவு மக்கள் தொகையாகும்.
- தலா உற்பத்தி உச்சத்தில் இருக்கும் நிலையில் உள்ள மக்கட்தொகையே, உத்தம அளவு மக்கட் தொகையாகும்.
- உத்தம அளவை விட மக்கள்தொகை குறைவாக இருப்பின், அது குறைந்த மக்கள்தொகை கொண்ட நாடு.
- உத்தம அளவை விட மக்கள்தொகை அதிகமாக இருப்பின், அது அதிக மக்கள்தொகை கொண்ட நாடு.
iii. மக்கள்தொகை வளர்ச்சிக்கட்ட கோட்பாடு
- இக்கோட்பாடு பிறப்பு வீதத்திற்கும், இறப்பு வீதத்திற்கு உள்ள உறவை விளக்குகிறது.
- பிறப்பு வீதம் ஒரு வருடத்தில் 1000 நபர்களுக்கு எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்ற வீதம்
- இறப்பு வீதம் – ஒரு வருடத்தில் 1000 நபர்களில் எத்தனைபேர் இறக்கின்றனர் என்ற வீதம்
- சராசரி வாழ்நாள் – மக்கள் மொத்தமாக தங்களது சராசரி இறப்பை எட்டும் காலம்
2011 கணக்கெடுப்பின்படி – 65.96 ஆண்டுகள்
மக்கள்தொகை வளர்ச்சியின் நிலைகள்:
- முதல் நிலை
- உயர்ந்த பிறப்பு வீதமும். உயர்ந்த இறப்பு வீதமும்
- நாடு முன்னேற்றம் குறைந்து, பின்தங்கிய நிலையில் இருக்கும்.
- மக்களின் முக்கியத் தொழில் – வேளாண்மை
- மக்களின் வாழ்க்கைத்தரம் குறைந்து காணப்படும்.
- இந்த கட்டத்தில் அதிக பிறப்புவீதம், அதிக இறப்பு வீதத்தை சரிகட்டுவதால், மக்கள்தொகை வளர்ச்சி அதிகமாக இல்லை. தேக்கமுற்று காணப்படுகிறது.
- இரண்டாம் நிலை
- உயர்ந்த பிறப்பு வீதமும், குறைந்த இறப்பு வீதமும்
- நாடு முன்னேறும் போது, தொழில் நடவடிக்கைகள் அதிகரித்து, அதிக வேலைவாய்ப்புகள் உருவாகின்றன.
- நாட்டு வருமானம், தலா வருமானம் அதிகரித்து மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்கிறது
- உயர்ந்த அறிவியல் தொழில்நுட்ப வசதிகள் காரணமாக, போதிய மருத்துவ வசதிகள் கிடைக்கப் பெறுகின்றன.
- இக்கட்டத்தில் உயர்ந்த பிறப்பு வீதம், குறைந்த இறப்பு வீதத்திற்கு இடையே வேறுபாடு ஏற்படும்.
- மக்கள்தொகை வளர்ச்சி வீதம் அதிகமாகிறது
iii. மூன்றாம் நிலை
- குறைந்த பிறப்பு வீதமும், குறைந்த இறப்பு வீதமும்
- பொருளாதார முன்னேற்றம் காரணமாக சமுதாய அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது.
- மக்களின் மனப்பான்மை மாறுகிறது
- கல்வியறிவின் காரணமாக, சிறுகுடும்பமுறைக்கு மாறுவதால், பிறப்பு வீதம் குறைகிறது
- நல்ல சுகாதார வசதிகள் கிடைப்பதால், இறப்பு வீதம் குறைகிறது.
- பிறப்பு (ம) இறப்பு வீதங்கள் குறைவாக இருப்பதால், மக்கள்தொகை வளர்ச்சி நிலையாக இருக்கும்.
- உலக நாடுகள் அனைத்தும் மூன்று நிலைகளையும் கடக்க வேண்டும்.
மனித மேம்பாடு குறியீடு:
- இது வாழ்க்கை மட்டத்தின் ஒரு முழு அளவாகும்
- 1977 மனித வளர்ச்சி அறிக்கையின் படி, (மனித தெரிவுகளை விரிவாக்குவதிலும், மனித நலன்களை உயர்த்துவதும் மனித வளர்ச்சியின் மைய பொருளாகும்)
- முதல் மனித மேம்பாட்டு அறிக்கை 1990 ல் UNDP ஆல் பாகிஸ்தானின் முகஹப்-உல்-அக் என்ற பொருளியல் அறிஞரின் வழிகட்டுதலின்படி, வெளியிடப்பட்டது.
மனித தெரிவுகள்:
- நீண்ட கால நலவாழ்வு
- அறிவுத் திறனைபெற்றுக்கொள்ளுதல்
- நல்ல வாழ்க்கைத்தரம்
HDI- மதிப்பீடு:
- சுகாதாரத்தின் அடிப்படையில் நீண்டகால நலவாழ்வு 2011 கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 65.96 ஆண்டுகள்.
- ஆரம்பக்கல்வியில் சேரும் குழந்தைகள் (ம) 25 வயது, அதற்கும் மேற்பட்ட இளைஞர்களின் கல்விநிலையைக் கொண்டு மதிப்பிடுதல்
2011 கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 74.04%.
HDI குறியீடு – 2019:
இந்தியவின் நிலை 129
மக்கள்தொகை கணக்கெடுப்பு:
ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு நாட்டிலுள்ள (அ) வரையறுக்கப்பட்ட ஒரு பகுதியிலுள்ள அனைத்து மக்களின் பொருளாதார, சமூக, மரபியல் தொடர்பான புள்ளி விவரங்களைத் திரட்டுதல்.
இந்தியாவில் மக்கள் தொகைக்கணக்கெடுப்பு:
- 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களிடமிருந்து பதிவு செய்யப்படுகிறது.
- இந்தியாவில் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு 1871ல் எடுக்கப்பட்டது.
- 15வது கண்கெடுப்பு 2011ல் எடுக்கப்பட்டது.
- இதனை இந்தியாவின் பதிவுத்தலைவர் (ம) மக்கள் தொகை கணக்கு ஆணையர் மேற்கொள்வார்.
- இது மக்கள்தொகை கணக்குச்சட்டம் 1951ன் படி கணக்கிடப்படுகிறது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு
குறிக்கோள்: நமது மக்கள்தொகை கணக்கெடுப்பு நமது எதிர்காலம்
- மக்கள்தொகை – 121 கோடி
- மக்களடர்த்தி – 382 / 1 ச.கி.மீ
- பாலின விகிதம் – 940 / 1000
- குழந்தைகள் வளர்ச்சி விகிதம் – 17.64%
- பத்தாண்டுக்கான வளர்ச்சி விகிதம் -1.66%
- கல்வியறிவு 74.04%
- 1 மில்லியனுக்கும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் – 50
பயன்கள்:
- மொத்த மக்கள் தொகை
- ஆண் பெண் வீதம்
- ஊரக – நகர்ப்புற மக்கள்தொகை
- வயது பாகுபாடு
- மக்கள்தொகை அடர்த்தி
- கல்வியறிவு நிலை
- நகரமயமாதல்
- தொழில்சார் வகைகள் போன்றவற்றை அறியமுடியும்
இந்திய மக்கள்தொகை வளர்ச்சிநிலைகள்:
மக்கள்தொகை வளர்ச்சி மாற்றம்
- ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு நாட்டின் மக்கள்தொகை எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றம்
- இந்தியாவில் 1901ல் 238 மில்லியனாக இருந்த மக்கள்தொகை 2011ல் 1210 மில்லியனாக அதிகரித்துள்ளது.
பலவேறு நிலைகள்:
- தேக்கநிலை காலம் 1901 – 1921
- 20 ஆண்டுகளில் மக்கள் தொகை 15 மில்லியன்கள் அதிகரித்துள்ளது.
- 1921ல் மக்கள்தொகை எதிர் விகிதம் பதிவு – 0.31%
- 1921 பெரும்பிரிவினை ஆண்டு எனப்படுகிறது.
- நிலையான வளர்ச்சிகாலம் 1921 – 1951
- 30 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகை 110 மில்லியன்கள் அதிகரித்துள்ளது.
- 1951 சிறு பிளவு ஆண்டு எனப்படுகிறது.
iii. நிலையான வளர்ச்சிக்காலம் : 1951 – 1981
- 30 ஆண்டுகளில் 361 மில்லியனிலிருந்து 683 மில்லியனாக வளர்ச்சி அடைந்துள்ளது.
- மக்கள்தொகை இரட்டிப்பாகியுள்ளது.
- இது அதிவேக வளர்ச்சி மக்கள்தொகை எனப்படுகிறது.
- அதிக வளர்ச்சியிலிருந்து வளர்ச்சிகுன்றல் தென்பட ஆரம்பித்த காலம் 1981 – 2011
- 2011ல் 1210 மில்லியனாக அதிகரித்தது.
- மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் ஒரு கணக்கெடுப்புக் காலத்திலிருந்து, மற்றொரு கணக்கெடுப்புக் காலத்திற்கு குறைந்துள்ளது.
- 2011ல் குழந்தைகள் வளர்ச்சி விகிதம் 17.64% ஆக உள்ளது.
தேசிய மக்கள்தொகை கொள்கை பற்றி எழுதுக:
தேசிய மக்கள்தொகைகொள்கை – 2000
- குறுகிய கால நோக்கம்
- தேவையான கருத்தடை சாதனங்கள் வழங்குதல்
- சுகாதார கட்டமைப்பு வசதிகள், சுகாதார பணியாளர்கள் (ம) ஒருங்கிணைக்கப்பட்ட பணிகள் மூலம் குழந்தை பராமரிப்பை மேம்படுத்துதல்
- நீண்டகால நோக்கம்
- 2045 ஆம் ஆண்டிற்குள் மக்கள்தொகையை நிலைப்படுத்துதல்
- மொத்த செழுமை காலத்தை 2010க்குள் மாற்றி அமைத்தல்
iii. மக்கள்தொகையை நிலைப்படுத்துவதற்கான முறைகள்
- குழந்தைகள் இறப்புவீதத்தை 1000 குழந்தைகளுக்கு 30 க்கு கீழ் குறைத்தல் IMR = 30/1000
- மகப்பேறு காலத்தில் இறக்கும் தாய்மார்கள் விதத்தை 1 லட்சம் குழந்தைகளுக்கு 100 க்கு கீழ் குறைத்தல் MMR = 100/100000
- 80% மகப்பேறானது, முறையான மருந்தகம் (ம) மருத்துவ நிறுவனங்கள், முறையான பயிற்சிஉடைய பணியாளர்கள் மூலம் நடைபெறச் செய்தல்
- உலக அளவில் நோய்தடுப்பு முறை
- காலந்தாழ்த்தி திருமணத்தை ஊக்குவித்தல்
- சிறப்பாகச் செயல்படும் ஊராட்சிகளுக்குப் பரிசளித்தல்
- கருத்தடை செய்து கொள்ளும் கணவன் (ம) மனைவிக்கு ரொக்கத்தொகை வழங்கி ஊக்குவித்தல்
தேசிய மக்கள்தொகை கொள்கை — 2002:
- மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்
- அவர்களுடைய பொருள்சார் நலனை உயர்த்துதல்
- சமுதாயத்தில் மக்களை ஆக்கபூர்வமான சொத்துகளாகத் திகழச் செய்தல்
தேசிய மக்கள்தொகைகுழு:
- இது இந்திய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டது.
- தலைமை – பிரதமர்
- உறுப்பினர்கள் – அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள்
- இக்குழுவிற்கு கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு அதிகாரம் உள்ளது.
- இக்கொள்கையைச் செயல்படுத்துவதில் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு முக்கியமாகும்.
மக்கள்தொகை கொள்கை:
மக்கள்தொகை கொள்கை என்பது மக்கள் தொகையின் அளவு, கட்டமைப்பு, இயல்புகளை முறைப்படுத்துவதற்கான முயற்சி ஆகும்.
சுவாமிநாதன்குழு:
- மக்கள்தொகை கொள்கையை வகுக்க அமைக்கப்பட்டது.
- 1994ல் இது தனது பரிந்துரைகளை அளித்தது
குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை செயல்படுத்துவதிலுள்ள சிரமங்கள்:
வறுமை:
- அதிகபட்ச இந்திய மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.
- இதனால் குடும்ப கட்டுப்பாடு செய்வதற்கான செலவினங்களை அவர்களால் கொடுக்க இயலவில்லை.
- வருமானத்திற்காக இவர்கள் அதிக குழந்தைகளை பெற்றெடுக்கின்றனர்.
- 2011 ன் படி இந்தியாவின் வறுமைநிலை 21.9%
எழுத்தறிவின்மை:
- இந்தியாவில் 26% பேர் கல்வியறிவற்றநிலையில் உள்ளனர்.
- கல்வியறிவின்மையால் குடும்பகட்டுப்பாடு திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர முடியவில்லை.
- சமய நம்பிக்கை
இறைவனின் வரம் என்று நினைத்து அதிக குழந்தைகளை பெற்று எழுக்கின்றனர்.
மதஎதிர்ப்பு:
குடும்ப கட்டுப்பாடு செய்வது மதத்திற்கு எதிரானது என்று அதனை செய்ய மறுக்கின்றனர்.
பணப்பற்றாக்குறை:
குடும்ப கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வை கொடுப்பதற்கு போதுமான பணவசதி இல்லை.
மலிவான (ம) பயனுள்ள வழிமுறைகள் இன்மை:
எளிய (ம) பயனுள்ள குடும்ப கட்டுப்பாடு செய்வதற்கு போதிய வழிமுறைகளை கண்டறிய ஆராய்ச்சி மையங்கள் இல்லை.
பயிற்சி பெற்ற ஊழியர்கள் பற்றாக்குறை:
- ஒவ்வொரு 10,000 மக்களுக்கு 2 மருத்துவர்களே உள்ளனர்.
- இதனால்தான் குடும்ப கட்டுப்பாட்டின் செயல்திறன் குறைந்துள்ளது.
குடும்ப கட்டுப்பாடு வழிமுறைகளை பின்பற்றாமல் இருப்பதற்கான காரணங்களாக பெண்கள் கூறுபவை:
- கர்பத்தடை வழிமுறைகளை பின்பற்ற தங்களது கணவர்கள் அனுமதி அளிப்பதில்லை.
- இரண்டு (அ) அதற்கும் மேற்பட்ட குழந்தைகள் வேண்டும் என விரும்புவது
- கர்ப்பத்தடையை (அ) கருத்தரித்தலை தடுக்கும் கருவிகளோ (அ) மாத்திரைகளோ தங்களது கிராமத்தில் பொதுமான அளவில் கிடைப்பதில்லை.
- கர்ப்பத்தடை வழிமுறைகளை பின்பற்றுவது குறித்து போதுமான தகவல்கள் தங்களுக்கு தெரியாமல் இருப்பது.
- ஆண்குழந்தைகள் வேண்டும் என்பதற்காக கருத்தரிப்பது (ஏற்கனவே பெண் குழந்தைகள் இருப்பினும்)
- கர்ப்பத்தடை கருவிகளையோ (அ) வேறு ஏதேனும் குடும்பக்கட்டுப்பாடு வழிமுறைகளையோ பின்பற்றி அவற்றை பயன்படுத்திய பிறகு வெளியே போடுவதற்கு வழி இல்லாமை.
- இதனை பின்பற்றும் எண்ணம் இல்லாமல் சிலர் இருக்கின்றனர்.
- பெண்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை (ம) குடும்ப பொருளாதாரத்திற்கு எதிரானவை.
குடும்பக்கட்டுப்பாடு குறித்த மனோபாவம்:
- படித்த பெண்கள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை.
- நமது கையில் எதுவுமில்லை என்ற எண்ணம் கொண்டிருந்த பழைய தலைமுறையினர்கூட, தற்போது மாறியுள்ளனர்.
- குழந்தை வளர்ப்பது சிரமம் என எண்ணுகின்றனர்.
- குடியிருப்பு (ம) உணவுப் பொருட்களின் பற்றாக்குறை குழந்தைபிறப்பின் எண்ணிக்கையை குறைத்துள்ளது.
- சமூக அந்தஸ்து கீழாக உள்ள மக்கள் அதிக குழந்தைகளை பெற்றுள்ளனர்.
- கிராமப்புற பெண்களுக்கு விழிப்புணர்வு இல்லை.
- நகர்ப்புற பெண்கள் குடும்ப கட்டுப்பாடு முறையை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
குடும்ப கட்டுப்பாட்டுத்திட்டம்:
- 1950 ல் குடும்பகட்டுப்பாட்டு திட்டத்தை உருவாக்கிய முதல் நாடு – இந்தியா
- 1952 ல் செயல்படுத்தப்பட்டது
- 1977ல் குடும்பகட்டுப்பாடு என்பது நல்வாழ்வு எனமாற்றம்
- 1975 — 1977 இடையில் விதிக்கப்பட்ட குடும்பகட்டுப்பாட்டிற்கு பலத்த எதிர்ப்பு இருந்தது.
கட்டுப்பாட்டு முறைகள்:
- ஆணுறை பயன்பாடு
- கருத்தடை மாத்திரைகள்
- கருத்தடை அறுவை சிகிச்சை
- நிதி உதவி
- விழிப்புணர்வு
சுவாமி நாதன் குழு பரிந்துரைகள்:
நோக்கம்:
- தேசிய மக்கள்தொகை கொள்கையில் முழுமையான சுகாதார அணுகுமுறைகள் (ம) சில அடிப்படை மாற்றங்களை செயல்படுத்த ஆலோசனைகள்
- மக்கள்தொகை கொள்கையை வகுக்க 1994ல் அமைக்கப்பட்டது
பரிந்துரைகள்:
- 2010க்குள் மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்துதல்
- மிகவும் துரிதமான (ம) சிறந்த முறையில் குறைந்தபட்ச தேவைத்திட்டத்தை அமல்படுத்துதல்
- குடும்ப நலவாழ்வுதிட்டம் வெற்றிபெறுவதற்கு மாற்று அணுகுமுறைகளை பயன்படுத்துதல்
- மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளில் அனைத்து நிறுவனங்களும் பங்குபெறுதல்
- இனப்பெருக்க விகிதத்தை குறைத்தல்
- கருத்தடை வழிமுறையை பின்பற்றுபவருக்கு வழங்கப்படும் சலுகைத் தொகைக்கு மாற்றாக, மக்கள்தொகை (ம) சமூக முன்னேற்ற நிதியை வழங்குதல்
- மாநில மக்கள்தொகை குழு (ம) சமூக முன்னேற்ற ஆணையத்தை உருவாக்குதல்
- குழுவில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த பிரமுகர், வல்லுநர், அரசுசாரா பிரதிநிதிகள் இடம்ட பெறுதல்
- மாநில, மாவட்ட, பஞ்சாயத்து, அளவில் மக்கள் தொகை (ம) சமூக முன்னேற்ற ஆணையத்தை அமைத்தல்.
- குடும்பத்தை திட்டமிடலில் பெண்கள் பங்குபெறுதல்
அடைய வேண்டிய இலக்குகள்:
- 18 வயதிற்குகீழ் திருமணம் நடைபெறுவதை தடுத்தல்
- பிரசவம் 100% பயிற்சி பெற்றவர்களை கொண்டு நடைபெறுதல்
- தாய் – செய் இறப்பு விகிதம் குறைத்தல்
- போலியோ, டிப்தீரியா, கக்குவான் இருமல், அம்மை போன்றவற்றிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல்
- அனைவருக்கும் சுகாதார வசதிகள் கிடைக்கப் பெறுதல்
- எளிய முறையில் பெறக்கூடிய கருத்தடை சாதனங்களை கிடைக்கச் செய்தல்
- ஆரம்பக்கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல்
விமர்சனங்கள்:
- அரசியல் சார்ந்த மக்கள்தொகைகுழு சிறப்பாக செயலாற்ற முடியாது.
- குறைந்தபட்ச தேவை திட்டத்திற்கும், மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை
- குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்ட வழிமுறைகளை மீறுபவர்களுக்கு ஊக்கத் தொகை அளித்தல் கூடாது என குறிப்பிடவில்லை.
- இதனை மீறுபவர்களுக்கு தண்டனைகள் குறிப்பிடப்படவில்லை.
- இத்திட்ட தோல்விக்கு அரசியல் பிரச்சனையே முக்கிய காரணம் என குறிப்பிடவில்லை.
மக்கள் தொகை கட்டுப்பாடும் ஐந்தாண்டுத் திட்டமும்:
முதல் (ம) இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம்:
- மக்கள்தொகை பற்றிய இந்திய அணுகுமுறை இயற்கையில் பிறப்புக்கு எதிராக இருந்தது
- அதாவது பிறப்பு விகிதத்தை குறைக்க முயன்றது
- அடிப்படை – மருத்துவமனை அணுகுமுறை திட்டம்
மூன்றாவது திட்டகாலம்:
சமுதாய விரிவாக்க அணுகுமுறையாக மாற்றப்பட்டது.
நான்காம் திட்டகாலம்:
- இம்முறையில் சிற்றுண்டிச்சாலை அணுகுமுறையிலிருந்து முகாம் அணுகுமுறைக்கு மாற்றப்பட்டது.
- கருத்தடை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் முடிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
- இது நாடு முழுவதும் அமைக்கப்பட்ட ‘வாசெக்டமி’ முகாம்களில் நடைபெற்றது.
ஐந்தாம் திட்ட காலம்:
- 1976 ல் ஒரு தேசிய மக்கள்தொகை கொள்கை வகுப்பட்டது.
- கட்டாய கருத்தடை சட்டம் இயற்றுதல்
- மக்கள் ஆண்டு வளர்ச்சி வீதம் 1.4% ஆக மாற்றுதல்
- கருத்தடை செய்வோருக்கு ஊக்கமளித்தல்
- பெண்களின் திருமண வயது 18 ஆகவும். ஆண்களுக்கு 21 ஆகவும் உயர்த்துதல்
- முகாம் அணுகுமுறையில் இருந்து இலக்கு முறைக்கு மாற்றம் செய்தல்
- 1978ல் கட்டாய அணுகுமுறையை மாற்றி தாமே விரும்பி ஏற்கும் அணுகுமுறை பின்பற்றப்பட்டது.
ஆறாம் திட்ட காலம்:
- ஒருங்கிணைந்த குடும்ப நிலத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
- இதில் தாய் – சேய் நலப்பணிகளும் அடக்கம்