18.மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் மத்திய அரசின் நலத்திட்டங்கள்
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY):
பிரதம மந்திரியின் மக்கள் நிதித் திட்டம், வங்கி சேமிப்புகள் வைப்பு கணக்குகள், பணம் அனுப்புதல், கடன் காப்பீடு, ஓய்வூதியம், முதலான நிதிசேவைகளை எளிய முறையில் உறுதி செய்யக்கூடிய நிதி உள்ளடக்கத்திற்கான தேசிய திட்டம் ஆகும்.
திட்டத்தின் பயன்கள்:
- வங்கி கணக்கு இல்லாத நபர்களுக்கு வங்கி சேமிப்பு கணக்கு உருவாக்கிக் கொடுக்கப்படும்.
- PMJDY கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புதொகை வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.
- PMJDY கணக்குகளின் வைப்புகளில் இருந்து வட்டி கிடைக்கப் பெறும்.
- PMJDY கணக்குகள் வைத்திருப்போருக்கு ரூபே பற்று அட்டை (Rupay Debit Card) வழங்கப்படும்.
- PMJDY கணக்கு தாரர்களுக்கு வழங்கப்படும் ரூபே அட்டைகளுடன் ரூ.1லட்சம் வரையிலான விபத்து காப்பீடு வழங்கப்படும். 28.8.2018 க்கு பின் தொடங்கப்பட்ட கணக்குகளுக்கு இந்த காப்பீடு 2 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- ரூ.10,000 வரையிலான மிகைப்பற்று (Overdraft) வசதி அளிக்கப்படுகிறது.
- இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட கணக்குகள் பிரதம மந்திரியின் ஜீவன் ஜோதி பீமா திட்டம் (PMJJBY), பிரதான் மந்திரி சுரக்ஷாபீமா திட்டம் (PMSBY), அடல் ஓய்வூதிய திட்டம் (APY), முத்ரா திட்டம் முதலானவற்றிற்கு தகுதியானவை ஆகும்.
PMJDY திட்டத்தின் சாதனைகள்:
- ரூ.81,200 கோடிக்கும் அதிகமான வைப்பு நிதிகளுடன் கிட்டதட்ட 32.41 கோடி ஜன் தன் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
- ஜன் தன் கணக்குகள் கொண்ட மொத்த நபர்களில் 59 சதவீதமும் குறிப்பாக பெண்களுக்கு 53சதவீதமும், கிராமப்புறங்களை சார்ந்தவர்கள ஜன்தன் கணக்குகளில் செயல்பாட்டில் உள்ள 83% கணக்குகள் ஆதரோடு இணைக்கப்பட்ட ஏறத்தாழ 24.4 கோடி ரூபே அட்டைதாரா;களுக்கு காப்பீடுகளை உறுதி செய்யப்பட்டுள்ளது.
- அரசின் பல்வேறு திட்டகளின்கீழ் சுமார் 7.5கோடி பிரதமரின் ஜன்தன் திட்டக் கணக்குதாரர்கள் நேரடி பலன் பரிவர்த்தனையைப் பெறுகிறார்கள்.
- 26 லட்ச கிராமப்புறங்களில் வங்கி சேவையை உறுதிசெய்ய வங்கி நிர்வாகிகள் பணிக்கப்பட்டனர் இதன்மூலம் ஆதார் இயக்கப்பட்ட கட்டணமுறை வாயிலாக ஜீலை-2018 மட்டும், கிட்டத்தட்ட 13.16 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.
பிரதம மந்திரியின் மக்கள் நிதி திட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள்:
- அரசு இந்த PMJDY திட்டத்தை சில திருத்தங்களோடு தொடர முடிவு செய்துள்ளது. அவை
- இந்த திட்டத்தை (PMJDY) 8.2018 க்கு பிறக்கும் தொடர வேண்டும்.
- மிகைப்பற்று (OD) வரம்பானது ரூ.5000 ல் இருந்து ரூ.10,000 ஆக அதிகரிக்கப்படும்.
- ரூ.2000 வரையிலான மிகைப்பற்றுகளுக்கு நிபந்தனைகள் ஏதும் தேவையில்லை.
- மிகைப்பற்று வசதியை உறுதி செய்வதற்கான வயது வரம்பு 18-60 லிருந்து 18-65 ஆக அதிகரிக்கப்படும்.
- 08.18க்கு பிறகு தொடங்கப்பட்ட PMJDY கணக்குகளுக்கு விபத்து காப்பீடு ரூ 1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக அதிகரிக்கப்படும்.
அடல் புத்தாக்க திட்டம் (AIM)
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புத்தாக்கம் மற்றும் தொழில்முயற்சியை மேம்படுத்துவதற்காக நிதி அயோகில் அமைந்துள்ள (அடல் கண்டுபிடிப்பு இயக்கம்) (AIM) இந்திய அரசின் முதன்மை முயற்சியாகும் இது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
நோக்கம்:
- பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளின் புதுமைகளை வளார்ப்பதற்கான புதிய திட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்குதல்
- வெவ்வேறு பங்குதாரர்களுக்கு ஒத்துழைப்பு மற்றும வாய்ப்புகளை வழங்குதல்.
- விழிப்புணர்வை உருவாக்குதல் மற்றும் நாட்டின் புதுமையான சற்றுச்சூழலை மேற்பார்வையிட ஒரு அமைப்பை உருவாக்குதல்.
AIM ன் முக்கிய முயற்சிகள்:
அடல் டிங்கரிங் லேப்ஸ்:
பள்ளிகளில் ஆக்கப்பூர்வமான புதுமையான மனநிலையை ஊக்குவிக்க இது ஏற்படுத்தப்பட்டது. 6ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளவும் இத்தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி அவர்களின் சிந்தனை திறனையும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் வழிசெய்கிறது.
அடல் இன்குபேஷன் சென்டர்கள்:
உலகத்தரம் வாய்;ந்த ஸ்டார்ட் அப்களை ஊக்குவித்தல் மற்றும் இன்குபேட்டர் மாதிரிக்கு புதிய பரிமாணத்தைச் சேர்த்தல்.
வெர்னாகுலர் இன்னோவேன் திட்டம்:
NITI Aayog ன் அடல் புத்தாக்க இயக்கம் 22 தாய்மொழிகளில் புதுமையான சூழலை அணுகுவதற்கு தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் வட்டாரமொழி புத்தாக்க திட்டத்தை அதிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் அட்டவணைப்படுத்தபட்ட மொழிகள் ஒவ்வொன்றிலும் ஒரு வட்டார மொழி பணிக்குழுவிற்கு பயிற்சியளிக்கும்.
மெண்டர் இந்தியா திட்டம்:
இது கல்வித் துறையில் உலக அளவில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது தலைமைப் பண்புள்ள வல்லுனர்களைக் கொண்டு மாணவர்களை வழிநடத்தி இந்த லேப் செயல்படும் புத்தாக்க திறனை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல் புதிய எண்ணங்களை உருவாக்கவும் செய்கிறது.
அடல் புதிய இந்தியா சவால் திட்டம்:
இத்திட்டத்தின் முதன்மை நோக்கம் இந்திய நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்க கல்வி சுகாதாரம், சுத்தம், நீர், விவசாயம், உணவு வீட்டுவசதி, ஆற்றல் மேலும் பல துறைகளில் புதுமை செய்திட முனைவது ஆகும்.
சிறு நிறுவனங்களுக்கான அடல் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு (ARISE):
MSME துறையில் புதுமை மற்றும் ஆராய்ச்சியைத் தூண்டுவதற்கு ஏற்படுத்தப்பட்டது.
AIM ஆல் அடையப்படும் இலக்குகள்:
- 10000 அடல் டிங்கரிங் லேப்களை நிறுவுதல்.
- 101 அடல் இன்னோவேன் சென்டர்களை (AIC) நிறுவுதல்.
- 50 அடல் சமூக கண்டுபிடிப்பு மையங்களை (ACICS) நிறுவுதல்.
- அடல் நியூ இந்தியா சவால்கள் மூலம் 200 ஸ்டார்ட் அப்களை ஆதரிக்கிறது.
பிரதமரின் ஸ்வநிதி யோஜனா:
ஆத்ம நிர்பார் நிதி தொகுப்பின் கீழ் நாடு முழுவதும் சிறு குறு தெருவோர வியாபாரம் செய்துவரும் வியாபரிகளுக்கு பிரதமரின் ஸ்வநிதி திட்டம் ஊரடங்கு காலத்தில் கொண்டுவரப்பட்டது.
அவர்களின் வாழ்வாதரங்களை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்தது.
நோக்கம்:
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற துறை அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது.
- 10,000 ரூபாய் வரையிலான கடனுதவியை ஏற்படுத்துதல்.
- வங்கி மூலம் பெற்ற கடனை சுலபமான முறையில் திருப்பி செலுத்துதல்.
- டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவித்தல்.
கடன் பிண்ணப்பிப்போருக்கும் களப்பணியாளர்களுக்கும் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் இடையில் டிஜிட்டல் மூலம் மிக சுலபமான முறையில் வியாபாரிகள் பயன்படுத்தக்கூடிய வகையில் டிஜிட்டல் மூலம் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்து.
மானியம்:
மத்திய அரசு வழங்கும் கடன் தொகையை குறிப்பிடப்பட்ட காலத்திலோ அல்லது அதற்கு முன்பாகவோ செலுத்திவிட்டால் வருடத்திற்கு 7% என்ற அடிப்படையில் மானியம் கொடுக்கப்படுகிறது.
தகுதி:
இந்த திட்டமானது சிறு குறு தெருவோர வியாபாரம் செய்து வரும் அனைவருக்குமானது மேலும் 24 மார்ச் 2020 அன்றோ அல்லது அதற்கு முன்போ வியாபாரத்தை பதவி செய்திருத்தல் வேண்டும்.
நிதி:
- இது ஒரு மத்திய துறை திட்டமாகும், அதாவது, பின்வரும் நோக்கங்களுடன் வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகார அமைச்சகத்தால் முலுமையாக நிதி அளி;க்கப்படுகிறது.
- செயல் பாட்டு மூலதன கடனை எளிதாக்குதல்
- வழக்கமான திருப்பிச் செலுத்துவதை ஊக்குவித்தல்.
- டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வெகுமதி அளித்தல்.
திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் நிறுவனங்கள்:
- அட்டவணைப்படுத்தபட்ட வணி வங்கிகள்.
- பிராந்திய கிராமப்புற வங்கிகள்.
- கூட்டுறவு வங்கிகள்.
- வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள்.
- மைக்ரோ-நிதி நிறுவனங்கள்.
- சுய உதவு குழுக்கள் (SDG).
தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு:
- இத்திட்டத்தினை செயல்படுத்த செயலியுடன் கூடிய தரவுதளத்தை அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது.
- இதன் மூலம் நிர்வாக ரீதியாக எமும் பிரச்சனைகள் அனைத்திற்கும் ஒரே தீர்வு காண இயலும்.
- இந்த தளமானது SIDBI இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியால் கையாளப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தகங்கள் பைசா (PAISA) தரவுதளம் உதயமி மித்ரா போன்றவற்றின்.
தகவல்களை மாநிலங்கள் யூனியன் பிரதேசங்கள் தொடுதிகள் பணம் வழங்கும் குழுக்களிலிருந்து ஒரே தரவுதளத்தின் ஒன்றினைக்கிறது.
பிரதமரின் ஸ்வநிதி திட்டமானது 2022 ஆம் ஆண்டுக்கு பின் கீழ்க்கண்ட மாற்றங்களுடன் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அவை
- டிசம்பர் 2024 வரை கடன் வழங்கப்படும்.
- முன்றாவது முறை கடன் பெறுவோர் 50,000 வரையும் முதல் மற்றும் இரண்டாம் கடன் பெறுபவர்கள் 10,000 மற்றும் 20,000ரூபாய் வரை பெற்றுக்கொள்ள முடியும்.
- இந்த திட்டத்தை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்தி அதை நடைமுறைபடுத்துதல்.
நவம்பர் 30,2022 வரையிலான தகவலின்படி 31.73லட்சம் நபர்கள் முதல் தொகையையும் அவர்களில் 5.81லட்சம் நபர்கள் இரண்டாம் தொகையையும் 6929 நபர்கள் மூன்றாம் தொகையையும் பெற்றுள்ளனர்.
மேலும் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் 42 லட்சம் தெருவோர வியாபாரிகள் பயன்படும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டம்:
அறிமுகம்:
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டம் 23 டிசம்பர் 1993 அன்றைய பிரதமரால் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டதாகும்.
- நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டம், முழுமையாக மத்திய அரசின் நிதியில் மாநிலங்கள் பயன்படும்வீதம் செயல்படும் திட்டமாகும்.
- 1993-94 ஆண்டுகளில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டிற்கு ரூபாய் 5 லட்சம் ஒதுக்கப்பட்டது.
- 1994-95 ஆண்டுகளில் அது ரூபாய் ஒரு கோடியாகவும் பின்னர் 1998-99 ஆண்டுகளில் 2 கோடி ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டது.
- 2011-12 ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியானது ஆண்டுக்கு ரூபாய் 5 கோடியாக ஒதுக்கப்பட்டு வருகிறது.
நோக்கம்:
நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளுர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டம் என்பது வளர்ச்சியை நாடெங்கும் பரவலாக்கும் தன்மை கொண்ட ஒரு திட்டம் ஆகும். குடிநீர். ஆரம்பக் கல்வி, பொது சுகாதாரம் மற்றும் சாலைகள் உள்ளிட்டவற்றில் தங்கள் தொகுதிகளில் நீடித்து நிலைக்கும் சமுதாய சொத்துக்களை உருவாக்குவதையும் மூலை முடுக்குகளிலும் வளர்ச்சிப் பணிகள் சென்றடையும் வகையில் வலியுறுத்தும் வகையிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வளர்ச்சிப் பணிகளை பரிந்துரைக்க உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
பிரதிநிதிகளின் பணிகள்:
நாடாளுமன்ற உறுப்பினர்கள்:
பொறுப்புகள் சார்ந்த பரிந்துரைகளை தர வேண்டும்.
புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்குத்துறை அமைச்சகம்:
- நிதி ஒதுக்கீடு செய்தல்.
- புதிய வழிகாட்டுதல்களை பதிவு செய்தல் மற்றும் செயல்படுத்துதல் செலவுகளை கண்காணித்தல்.
மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள்:
- அமைச்சகத்தோடு ஒருங்கிணைத்தல்.
- திட்டத்தை மாவட்ட நிர்வாகங்களுடன் கண்காணித்தல். மாவட்ட நிர்வாகங்களை ஆண்டுக்கு ஒரு முறையாவது ஆய்வு செய்தல்.
திட்டத்தை செயல்படுத்தக் கூடிய வழிமுறைகள்:
- மக்களவை உறுப்பினர்கள் தங்களுடைய தொகுதியில் மட்டும் செலவிட வேண்டும்.
- மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்கள் மாநிலத்தின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் பரிந்துரை செய்யலாம்.
- மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் நாட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் பரிந்துரை செய்யலாம்.
தொகுதிக்கு உட்படாத பகுதிகளில் பரிந்துரைகள் சார்ந்த வழிகாட்டுதல்கள்:
- தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் பொருட்டு தொகுதி அல்லது தேர்தலில் பங்கு பெற்ற மாநிலங்களுக்கு வெளியே ஆண்டிற்கு ரூபாய் 25 லட்சம் வரை நிதி ஒதுக்க முடியும்.
- இயற்கை பேரிடர் காலங்களில் நாட்டின் எந்த பகுதிகளில் வேண்டுமானாலும் ரூபாய் ஒரு கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்ய முடியும்.
- தங்களுடைய மாநிலங்களில் இயற்கை பேரிடர் காலங்களில் ரூபாய் 25 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு செய்ய முடியும்.
நடைமுறைப்படுத்தப்படும் முறை:
- நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை செய்யப்பட்ட பணிகளை செயல்படுத்த தங்களுடைய தொகுதியினுள் ஒரு ஒருங்கிணைப்பு மையத்தை தேர்வு செய்வர்.
- இந்த ஒருங்கிணைப்பு பகுதியில் அதிகாரி அந்த நாடாளுமன்ற உறுப்பினரின் வங்கி கணக்கினை நிர்வகிப்பார்.
- மாவட்ட அதிகாரிகள் மாநில் அரசு நிர்வாகம் மற்றும் நிதி மற்றும் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்க தத்தம் பொறுப்புகளைப் பெறுவர்.
- மாவட்ட நிர்வாகிகள் மாநில் அரசின் வழிமுறைகளுக்கு ஏற்ப திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
- திட்டங்கள் செயல்படுத்தி முடிக்கப்பட வேண்டிய கால அளவை மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும்.
தமிழ்நாடு அரசு நலத்திட்டங்கள்
இல்லம் தேடி கல்வி:
- விழுப்புரம் மாவட்டம் முதலியார் குப்பத்தில் 27-10-2021 அன்று துவங்கப்பட்டது.
- வாரத்தில் ஆறுநாள் ஆறமணி நேரத்திற்கு கற்றல்சார் செயல்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்கு இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
- இத்திட்டத்திற்கான சிறப்பு மென்பொருள் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- இதற்காக பள்ளி மேம்பாட்டுக் குழுவின் மூலம் தன்னார்வலர்கள் பயிற்றுநர்களாகத் தேர்வு செய்யப்படுவர்.
1 முதல் 8 வகுப்புகள் வரை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி, கற்றல் இழப்புகளை ஈடுசெய்வது மற்றும் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்ப்பது என்ற உயரிய நோக்கங்களுடன். 8 இலட்சம் தன்னார்வலர்களால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தை சீரிய முறையில் வழிநடத்துவதற்காக மாநிலம்இ மாவட்டம் மற்றும் பள்ளி ஆகிய மூன்று அடுக்கு நிலைகளில் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இல்லம் தேடிக் கல்வி மையங்கள் தன்னார்வலர்களுக்கு தோழமையுடன் சமூகக் கடமையாற்றும் வாய்ப்பு அளிக்கக் கூடிய இடமாகத் திகழ்கின்றன.
ஜவுளித்துறை:
- தமிழ்நாடு கைத்தறி, கைவினைப் பொருட்கள் மற்றும் ஜவுளிகளுக்கான துறையிலிருந்து தனியாகப் பிரித்து ஜவுளித்துறை உருவாக்கப்படட்;து.
- கள்ளக்குறிச்சி, அடும்பாவூர் மரச்சிற்பம் கருப்பர் கலம்காரி ஓவியங்கள் தஞ்சாவூர் நைட்டி ஆகியவற்றுக்கான புவிசார் குறியீட்டை வழங்கியுள்ளன.
- புவிசார் குறியீடு ஒரு குறிப்பீட்ட பொருளின் தரம், பாரம்பரியம், கலாசாரம் மற்றும் பழைமையை பாதுகாக்க உதவுகிறது.
- தீபாவளிப் பண்டிகைக்காக தமிழ்த்தறி என்று பெயரிடப்பட்ட ஜவுளி வகைகளை முதல்வர் அறிமுகம் செய்தார்.
- கற்பகம் பணைவெல்லம், பனைவிவசாயிகளின் வாழ்வாதாரத்iதை மேம்படுத்துவதற்காக கற்பகம் என்ற பெயரில் நியாய விலைக் கடைகளிலும், கரும்பனை என்ற பெயரில் பல்பொருள் அங்காடிகளிலும் பனைவெல்ல விற்பனை செய்வதைத் துவக்கி வைத்தார்.
- தமிழ்நாட்டின் காதி நிறுவனத் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்காக “tnkhadi”என்ற ஆண்ட்ராய்டு செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
200 முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள்:
- தமிழ்நாடு முதலமைச்சர் 22-10-2021 அன்று தகவல் தொழில்நுட்பத் துறையின் சார்பில் இ-முன்னேற்றம், மற்றும் இ-தகவல் தொழில்நுட்ப நண்பன் ஆகிய இரு வலை தளங்களை துவங்கி வைத்தார்.
- இத்திட்டங்களின் வளர்ச்சி மீளாய்வை கண்காணிக்க இ-முன்னேற்றம் இணையதளத்தை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உருவாக்கியுள்ளது.
- தமிழ்நாடு மின் முகமை ஆளுமையால் உருவாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப நண்பன் தகவல் தொழில்நுட்ப தொழில்கள் குறித்த கருத்துக் கேட்புத் தளமாக விளங்குவதுடன் இதில் இணைந்து கொள்கைகள் உருவாக்குவதில் அவர்களின் பங்களிப்யை அளிக்க உதவும்.
- மேலும் தமிழ் இணையக் கல்விக் கழகத்தால் உருவாக்கப்பட்ட கீழடி விசைப்பலகை, மற்றும் தமிழி- இணைய ஒழுங்குறிமாற்றியையும் வெளியிட்டார்.
தமிழ்நாட்டின் முதல் பல்முனை சரக்குப் போக்குவரத்து பூங்கா:
- இது திருவள்ளூரில் 1200 கோடி செலவில் 158 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது.
- திருபெரும்புதூர், ஒரகடம் மற்றும் பிள்ளைப்பாக்கம் ஆகிய முக்கிய தொழிலகப் பகுதி அருகே அமையவுள்ளது.
- இப்பூங்கா சரக்குப் போக்குவரத்திற்கான செலவை கணிசமான அளவில் குறைக்க உதவும்.
- தமிழ்நாடு சரக்குப் போக்குவரத்து திட்டம் ஒன்றை மாநிலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உருவாக்கவுள்ளது.
- இத்திட்டத்தைத் தயாரிப்பதற்காக தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனம் ஆலோசகர் ஒருவரை நியமித்துள்ளது.
- தற்போது அமையவிருக்கும் சரக்குப் போக்குவரத்து பூங்காவை கட்டமைப்பதில் மத்திய அரசுடன் இணைந்து சென்னைத் துறைமுகக் கழகம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆகியவை இணைந்து பணியாற்ற உள்ளன.
- இதே போன்ற பூங்காக்களை கோவை மற்றும் தூத்துக்குடியில் அமைக்கும்படி தமிழக அரசு ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணையம் 2.0:
- முதலீட்டாளர்களின் திட்டங்களுக்கு விரைவில் அனுமதி வழங்கவும், எளிதாகவும் துரிதமாகவும் செயல்படுத்தவும் உதவும் வகையில் ஒற்றைச் சாளர வசதியின் மேம்பட்ட முகப்பை வெளியிட்டார்.
- இது ஒரு திறன்வாய்ந்த உலகளவில் பெரியளவிலான முதலீடுகளை ஈர்ப்பதற்காக உலகளாவிய திறன்கொண்ட உள்கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாடு ஏற்படுத்தியுள்ளது.
- மேலும் தெற்காசியாவிலேயே தொழில் துவங்குவதற்கான சிறந்த இடமாக தமிழ்நாட்டை மாற்றுவதே எனது நோக்கம் என முதல்வர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் சங்கம் மறுசீரமைப்பு செய்யப்படுதல்:
- தமிழ்நாடு பணியாளர்களின் நலனை காப்பதில் நாட்டிலேயே முன்னோடியாக விளங்குகிறது.
- கைத்தொழிலாளர் (வேலை வாய்ப்பு மற்றும் பணியிட நிலையை முறைப்படுத்துதல்) சட்டம் 1982 ம் ஆண்டு அமைப்பு சாரா பணியாளர்களின், சமூக பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொண்டுவரப்பட்டது.
- கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் 1994 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
- இந்த நலவாரியத்தில் பதிவு செய்வதற்கான பதிவுத் தொகை 01.09.2006 அன்று கருணாநிதி அவர்களால் நீக்கப்பட்டது.
- 11.2008 அன்று அமைப்பு சாரா தொழிலாளர்கள் இத்திட்டங்களின் மூலம் பயன்பெறுவதற்கு ஏதுவாக அனைத்து மாவட்டங்களிலும் சமூகம் பாதுகாப்புத் திட்டங்களுக்கான துணை ஆணையர் அலுவலகம் உருவாக்கப்பட்டது.
- கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தின் தற்போதைய தலைவர் திரு பொன்குமார்.
- இவ்வாரியம் தமிழ்நட்டில் 13,41,494 பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
கல்வி தொலைக்காட்சி:
- கொரோனா காலத்தில் பள்ளி வந்து கற்க இயலாத 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் விட்டிலிருந்தபடியே பாடம் கற்க ஏதுவாக 292 கோடி ரூபாய் செலவில் 19.06.2021 முதல் முதலமைச்சரால் கல்வி தொலைக்காட்சி துவங்கப்பட்டது.
- இத்திட்டம் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 69 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.
- பெருந்தொற்றினால் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருந்த நிலையில் பள்ளிகளின் பணியை கல்வித்தொலைக்காட்சி தனது ஒளிபரப்பு மூலம் மேற்கொண்டது. பாடவாரியாக வகுப்புவாரியாக ஒளிபரப்பப்படும் காணொலிகள் அரசு கேபிள் தொலைக்காட்சி வாயிலாகவும் தனியார் தொலைக்காட்சிச் சேனல்கள் வாயிலாகவும் நேரடி வீட்டு இணைப்புகள் னுவுர் வாயிலாகவும் பல்வேறு கேபிள் சேவை இணைப்பாளர்கள் வாயிலாகவும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.