17.அரசின் சுகாதாரக் கொள்கை

தேசிய சுகாதாரக் கொள்கை – 1983:

  1. சுகாதாரம் (ம) குடும்ப நல அமைச்சகத்தால், 1983 ல் இக்கொள்கை வெளியிடப்பட்டது.
  2. 2000 ஆம் ஆண்டிற்குள் எல்லோருக்கும் நல்வாழ்வு என்ற இலக்கை அடைவது இதன் குறிக்கோளாகும்.
  3. இதற்கான உத்திகள்: சுகாதார கட்டமைப்பு, சுகாதார மனித மேம்பாட்டு ஆராய்ச்சி, சுகாதார முன்னேற்றம்
  4. குடும்பக் கட்டுப்பாடு

தேசிய சுகாதாரக் கொள்கை – 2002:

  1. அனைவரையும் சுகாதார திட்டத்தின் கீழ் கொண்டு வருதல்
  2. பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் உடல்நலத்திற்கும் இடையே ஒரு இணைப்பை உருவாக்குவது

நோக்கங்கள்:

  1. அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிலான சுகாதாரத்தை ஏற்படுத்துவது
  2. பரவலாக்கப்பட்ட சுகாதார அமைப்புகளை தொடர்பு கொள்ளும் வழிமுறைகளை அதிகப்படுத்துவது
  3. சுகாதார கட்டமைப்புகள் குறைவாக உள்ள இடத்தில் புதிதாக ஏற்படுத்துவது
  4. ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள இடங்களில் மேம்படுத்துவது பொது சுகாதார நிர்வாக திறனை வலுப்படுத்துவது
  5. அலோபதி மருத்துவ முறையில் மருந்துகளின் பயன்பாட்டை முறைப்படுத்துவது
  6. பொது சுகாதாரத்தில் தனியார் நிறுவனங்களை அதிகப்படுத்துவது (ம) முறைப்படுத்துவது
  7. பாரம்பரிய மருத்துவமுறைகளை அணுகுவதற்கான வழிமுறைகளை அதிகப்படுத்துவது

இலக்குகள்:

2005-க்குள்:

  1. போலியோ (ம) தொழுநோயை ஒழிப்பது
  2. ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு கண்காணிப்பு அமைப்பு, தேசிய சுகாதார கணக்கு (ம) புள்ளியியல் அமைப்பை ஏற்படுத்துவது
  3. மாநிலங்களால் சுகாதாரத்திற்கு செலவிடப்படும் நிதியை 5.5% லிருந்து 7% அளவிற்கு உயர்த்துவது
  4. சுகாதார வரவு – செலவு திட்ட நிதியில் 1% மருத்துவ ஆராய்ச்சிக்கு ஒதுக்குவது

2007 க்குள்:

HIV / எய்ட்ஸ் நோய் தொற்றை ஒழிப்பது

2010 க்குள்:

  1. கருங்காய்ச்சலை ஒழிப்பது
  2. TB, மலேரியா போன்ற நோய் பரப்பினை அழிப்பதன் மூலம், உயிரிழப்புகளை 50% குறைப்பது.
  3. பார்வை இழப்பு குறைபாட்டை 0.5% குறைத்தல்
  4. IMR = 30/1000, MMR = 100 / 100000 என குறைத்தல்
  5. பொது சுகாதார அமைப்புகளின் பயன்பாட்டை 20% லிருந்து 75% ஆக உயர்த்துவது
  6. மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பொது சுகாதாரத்திற்கு செலவிடப்படும் நிதியை 0.9% லிருந்து 2% ஆக உயர்த்துவது
  7. சுகாதாரத்திற்கு செலவிடப்படும் வரவு செலவு திட்ட நிதியில் 2% மருத்துவ ஆராய்ச்சிக்கு ஒதுக்குவது
  8. மொத்த சுகாதார செலவினத்தில் மத்திய அரசின் மானியத்தை 25% ஆக உயர்த்துவது
  9. மாநிலங்களால் சுகாதாரத்திற்கு செலவிடப்படும் நிதியை 8% ஆக உயர்த்துவது

2015 க்குள்:

யானைக்கால் நோயை ஒழிப்பது

தேசிய சுகாதாரக் கொள்கை – 2017:

நோக்கம்:

  1. 2002 க்கு பின்னர் ஏற்பட்ட சமூக, பொருளாதார, நோய் பரவியல் மாற்றங்கள் (ம) நவீன மருத்துவ சவால்களை எதிர்கொள்ளல்.
  2. சுகாதாரம், அமைப்புகள். சுகாதார கவனிப்பு சேவைகளில் முதலீடு.
  3. மனிதவள ஆதாரங்களை வளர்த்தல்.
  4. சிறந்த உடல் நலனுக்குத் தேவையான அறிவுத் தளத்தை உருவாக்குதல்

சிறப்பம்சங்கள்:

  1. நோய்க்கு நிவாரணம் என்பதற்குப் பதிலாக “முழுமையான ஆரோக்கியம்” என்பதை அடைதல்
  2. மொத்த GDP யில் 2.5% சுகாதாரத்திற்கு செலவிடல்
  3. இலவச மருந்துகள், அவசரகால சிகிக்சைகள் என அனைத்தையும் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கச் செய்தல்
  4. பங்குநிதி ஆரம்ப சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படும்.
  5. மருத்துவ படிப்புகளில் காலத்துக்கேற்ற சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும்.
  6. நோய்களின் தீவிரத்தை கண்காணித்தல்
  7. பல்வேறு சுகாதார சேவைகளுக்கான ஒருங்கிணைந்த கொள்கையாகும்.
  8. ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு, நீரிழிவு, ரத்த அழுத்தம் என பல சிகிச்சைகள் தரப்படும்.
  9. இரண்டாம்நிலை சுகாதார சேவை மாவட்ட அளவில் அளிக்கப்படும்.
  10. ஆரம்ப சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

இலக்குகள்:

  1. 1000 பேருக்கு 2 படுக்கை அறை என மருத்துவ வசதி ஏற்படுத்துதல்
  2. 2025 க்குள் சராசரி வாழ்நாளை 67.5 லிருந்து 70 ஆக மாற்றுதல்
  3. 5 வயதிற்குட்பட்ட குழந்தை இறப்பு IMR = 23/1000 (2025 க்குள்)
  4. MMR = 100 / 1 லட்சம் (2025 க்குள்) என குறைத்தல்
  5. மொத்த கருவுறுதல் விகிதம், TFR = 2.1 / 1000 (2025 க்குள்)
  6. HIV பாதிக்கப்பட்ட 90% பேருக்கு 2020 க்குள் சிகிச்சை தருதல்
  7. 2025 க்குள் 30 சுகாதாரக் குறியீடுகளை அடைதல்
  8. 2020 க்குள் பொது நோய்க்கான பதிவேடுகளை உருவாக்குதல்
  9. இருதய, புற்றுநோய், நீரிழிவு, நுரையீரல் நோயினால் ஏற்படும் அகால மரணம் – 25% குறைத்தல்.

 

 

Scroll to Top