16.சமூக நலத்திட்டங்களில் அரசு சாரா நிறுவனங்களின் பங்கு

அரசு சாரா அமைப்புகளின் பங்கு, வரம்புகள், கடமைகள்:

அரசு சாரா அமைப்புகள்:

  1. இவை அரசின் ஒரு பகுதியாகவோ (அ) இலாப நோக்கத்தோடு செயல்படும் நிறுவனம்.
  2. இந்த அமைப்பானது பொதுவாக நாட்டின் சாதாரண குடிமகன்களால் ஏற்படுத்தப்படுகிறது.
  3. இதற்கு அரசு, வணிக, தனியார் நிறுவனங்கள் சில நேரங்களில் நிதி அளிக்கிறது.

அம்சங்கள்:

  1. இது ஒரு தன்னார்வ அமைப்பு
  2. தற்சார்பு உடையது
  3. சமூக நலனில் அக்கறை கொண்டது
  4. இவை இலாப நோக்கில் செயல்படுவதில்லை
  5. நிதியானது தேசிய (அ) சர்வதேச அளவில் பெறப்படுகிறது

கடமைகள் (ம) பங்கு:

  1. கிராமப்புற மக்களை ஊக்குவிப்பது
  2. மாதிரிகள் (ம) பரிசோதனைகளை உருவாக்குவது
  3. அரசின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பது
  4. வறுமையில் இருக்கும் கிராமப்புற மக்களை ஒன்றிணைப்பது
  5. கிராமப்புற மக்களுக்கு கல்வி அளித்தல்
  6. பயிற்சி அளித்தல்
  7. செய்திகளை பரப்புதல்
  8. வளங்களை ஒன்று திரட்டுதல்
  9. கிராமப்புற தலைவர்களை உருவாக்குதல்
  10. கிராமப்புற மக்களின் பிரதிநியாக செயல்படுவது
  11. புதுமையாளர்களாக செயல்படுவது
  12. மக்களின் பங்களிப்பை உறுதிபடுத்துவது
  13. தேவையான தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது
  14. கிராமப்புறங்களில் சேவைகள் வழங்குவதை உறுதி செய்வது
  15. பிராணிகள் பாதுகாப்பு
  16. மாற்று திறனாளிகளுக்கு உதவி அளித்தல்
  17. சுற்றுச்சூழல் பாதுகாப்பு
  18. விழிப்புணர்வு
  19. பேரிடர் மேலாண்மை

வரம்புகள்:

  1. நிதி தட்டுப்பாடு
  2. பயிற்சி பெற்ற பணியாளர்கள் இல்லாதது
  3. தவறான நிதி மேலாண்மை
  4. குறைவான எல்லைக்குட்பட்ட செயல்பாடு
  5. தொழில் போட்டிகள்
  6. அரசின் கட்டுப்பாடு குறைவு
  7. அரசு சாரா அமைப்புகளின் நிர்வாகத்தில் ஏற்படும் குறைபாடு

வறுமை – உதவும் கராங்கள்

வேலைவாய்ப்பு பாரத் நிறுவனம்

குழந்தை பச்பன் பச்சாவ் அந்தோலன்

உடல்நலம் – அஸ்வினி

சுற்றுச்சூழல் – 4 NGO’S (கிரீன்பீஸ்)

கொள்கை செயல்படுத்துதலில் NGO – வின் பங்கு:

  1. அரசின் திட்டங்களில் ஈடுபடுத்திக் கொள்ளுதல்
  2. கிராம மக்களின் நலனுக்காக சேவை புரிதல்
  3. திட்டங்களில் எளிமை, புதுமை, நெகிழ்ச்சித்தன்மை, சிக்கனம் போன்றவற்றை புகுத்துதல்
  4. உள்ளூர் மக்களை ஈடுபட வைத்தல்
  5. ஏழை எளியோருக்கு ஏற்ற வினியோக முறையினை மேற்கொள்ளுதல்
  6. அரசு அறிவித்த நலத்திட்டம், வளர்ச்சித்திட்டம் பற்றிய தகவல்களை மக்களுக்கு விளக்குதல்
  7. உள்ளூர் மக்களிடையே சுயசார்பு எண்ணத்தை கொண்டு வருதல்
  8. உள்ளூர் வளம் (ம) மனித வளத்தை உபயோகிக்கும்படி செய்தல்
  9. ஊரக வறியோர்க்கு கிடைக்கும் எளிய தொழில் நுட்பங்களை பயன்படுத்த பயிற்றுவித்தல்
  10. உள்ளூர் வளர்ச்சியில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு (ம) பொறுப்பு பற்றி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

ஊரக பகுதிகளில் NGO வின் பங்கு:

  1. ஊரக வேலைவாய்ப்புத் திட்டங்களில் பங்கு பெறுகிறது.
  2. நில உச்சவரம்பு திட்டத்தை செயல்படுத்துதல்
  3. விவசாய தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உறுதிப்படுத்துதல்
  4. கொத்தடிமை தொழிலாளர்களை அடையாளம் கண்டு மறுவாழ்வு அளித்தல்
  5. பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம்
  6. காடு வளர்ப்பு, சமூக காடுகள் வளர்ப்பு ஊக்குவித்தல்
  7. மாற்று ஆற்றல் மூலங்களை வளர்ச்சி அடையச்செய்தல், குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை ஊக்குவித்தல்
  8. ஆரம்ப சுகாதார நிலையம் மேம்பாடு
  9. தடுப்பு மருந்து திட்டங்கள்
  10. கிராம மகளிர் (ம) குழந்தைகள் நலத்திட்டங்கள்
  11. கல்வி முறைகளில் கவனம் செலுத்துதல்
  12. நுகர்வோர் பாதுகாப்பு (ம) கூட்டுறவுத்துறையை ஊக்குவித்தல்
  13. கைத்தொழில் (ம) கிராம குடிசைத் தொழில்களை ஊக்குவித்தல்
  14. ஊரக குடியிருப்பு சேரிகளை மேம்படுத்துதல்
  15. சுற்றுச்சூழல் மேம்பாடு
  16. ஊடகங்களின் வழியே தகவல் பரப்புதல்
  17. அறிவியல் தொழில்நுட்பத்தை பரப்புதல்

சுற்றுச்சூழல் இயக்கங்கள்:

  1. பீஸ்நவ் இயக்கங்கள்
  2. இராஜஸ்தான் மாநிலத்தில் உண்டான இயக்கம்
  3. தார்பாலைவனத்தில் குரு ஜம்பேஸ்வர் என்ற ஜானி பீஸ்நவ் என்ற மதக்குழுவை உருவாக்கினார்.
  4. பீஸ்நவ் என்ற இந்தி மொழி சொல்லிற்கு 29 என்று பொருள்
  5. இயற்கையுடன் ஒன்றி வாழத் தேவையான 29 கோட்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
  6. 18ம் நூற்றாண்டில் ஜோத்பூர் மகாராஜா ஒரு புதிய அரண்மனையை கட்டினார்.
  7. இதற்காக கேஜர்லி கிராமத்தில் இருந்து மரங்களை வெட்டி வருமாறு இராணுவத்தை அனுப்பினார்
  8. அம்ரிதா தேவி என்பவர் மரத்தை வெட்டுவதற்கு பதிலாக தம் தலையை வெட்டுமாறு கூறினார்.
  9. மொத்தம் 363 கிராம உறுப்பினர்கள் உயிர்த்தியாகம் செய்தனர்.
  10. இதனால் இராணுவம் உடனடியாக திரும்ப பெறப்பட்டு, அப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனமானது.
  11. சிப்கோ இயக்கம்
  12. 1973 ல் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற அமைதியான சுற்றுச்சூழல் இயக்கம்
  13. சிப்கோ என்ற இந்திமொழி சொல்லிற்கு கட்டிப்பிடி என்று பொருள்.
  14. விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் கம்பெனி, அலக்நந்தா பள்ளத்தாக்கில் மரங்களை வெட்ட, அரசு அனுமதி பெற்றது.
  15. மரங்களை வெட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
  16. தஸோலி கிராம ஸ்வராஜ்ய மண்டலம் என்ற அரசுசாரா அமைப்பு போராடியது.
  17. சுந்தர்லால் பகுகுணா, தூம்சிங் நெகி, பச்னி தேவி போன்ற பெண் தலைவர்களும் போராடினர்.
  18. 1980 ல் இமயமலை பகுதியில் மரங்களை வெட்ட, மத்திய அரசு தடைவிதித்தது.
  19. இந்த இயக்கத்தில் பெண்ணியம், காந்தியம் சுற்றுச்சூழலியம் காணப்பட்டது.
  20. அப்பிக்கோ இயக்கம்
  21. கர்நாடகாவின் உத்திரகன்னடமாவட்டத்தில் நடைபெற்ற இயக்கம்
  22. அப்பிக்கோ என்றால் கன்னட மொழியில் ‘கட்டிக்கோ’ என்று பொருள்
  23. இம்மாவட்டத்தில் தொழிற்சாலைகளின் பெருக்கத்தால் 1950 ல் 81% இருந்த வனப்பரப்பு 1980 ல் 24% ஆக குறைந்தது.
  24. மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  25. எஞ்சிய காடுகளைக் காப்பாற்றுதல், அழிக்கப்பட்ட காடுகளை உருவாக்குதல், நல்ல முறையில் வளங்களைப் பயன்படுத்த விழிப்புணர்வும் உருவாக்கப்பட்டது.
  26. அமைதி பள்ளத்தாக்கு பாதுகாப்பு இயக்கம்
  27. அமைதி பள்ளத்தாக்கு என்பது கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தின், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது.
  28. இங்கு பசுமை மாறாக் காடுகள் உள்ளன.
  29. வனத்தில் சத்தத்தை உருவாக்கும் சிகடஸ் பூச்சிகள் இல்லை
  30. பல்லுயிர் தன்மை உடைய இப்பகுதியில், சிங்கவால் குரங்குகள் அதிகம்
  31. 1970 மின்சார தயாரிக்க, வனத்தில் ள்ள குந்திப்புழா என்ற நதியில் அரசு அணைகட்டத் தொடங்கியது.
  32. கேரள சாஸ்திர சாகித்ய பரிசத் அமைப்பு போராட்டத்தை துவங்கியது.
  33. 1985 ல் அரசு இப்பகுதியை தேசிய பூங்காவாக அறிவித்தது
  34. இப்பகுதி நீலகிரி உயிர்கோள காப்பாகமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் NGO வின் பங்கு:

அரசுசாரா நிறுவனங்களின் பங்கு:

பின்வருவனவற்றை வலியுறுத்துவதில் அரசுசாரா நிறுவனங்கள் பங்குபெறுகின்றன.

  1. குடும்பத்தினரின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை அகற்றுவது
  2. பெண்களின் திருமண வயதை அதிகரித்தல்
  3. தாமதமாக திருமணம் செய்வதன் அவசியத்தை உணர்த்துதல்
  4. பிறந்த குழந்தைகளை கவனமாக பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தல்
  5. ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடையிலான இடைவெளி தேவையை வலியுறுத்தல்

குடும்ப நல்வாழ்வுத்துறை:

குடும்ப நல்வாழ்வுத் திட்டங்களில் அரசுசாரா நிறுவனங்களின் பங்கை உறுதிப்படுத்த, குடும்ப நல்வாழ்வுத்துறை பல்வேறு திட்டங்களை அறிவித்தது.

  1. சிறுகுடும்ப திட்டம் (ம) குடும்ப நல்வாழ்வு திட்டங்களுக்கென செலவிடப்படும் தொகையில் 90% வரை அரசுசாரா நிறுவனங்களுக்கு உதவுவது
  2. இத்தகைய திட்டங்களை செயல்படுத்துவதற்கு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டும் என்று அரசு வலியுறுத்த வேண்டுதல்
  3. அரசுசாரா நிறுவனங்களின் பங்கை அதிகரிக்கும் பொருட்டு, மண்டல அளவில் கூட்டங்கள் நடைபெறுதல் வேண்டும்.
  4. குடும்ப நல்வாழ்வு செயலாளரின் தலைமையில், மாநில நிரந்தர குழுக்களை அமைப்பதோடு, ஒவ்வொரு திட்டத்திற்கு, ரூ 10 லட்சம் வரை வழங்குவதற்கான அதிகாரத்தை அளித்தல்.
  5. சுகாதார பணியாளர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சியளிக்க உதவுதல்
  6. மாநிலங்களின் நிலைமையை அறிவதற்கும், சமுதாய பங்கெடுப்பை ஊக்குவிப்பதற்கும் அரசு சாரா நிறுவனங்கள் உதவ வேண்டும்.
  7. இவ்வாறு வெவ்வேறு ஊர்களுக்கும் அவர்கள் சென்று வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பில் NGO வின் பங்கு:

  1. விழிப்புணர்வு
  2. கண்காணிப்பு
  3. குழந்தைகள் நல காப்பகம்
  4. விளம்பரம்
  5. நிதி
  6. திட்ட செயலாக்கம்
  7. பார்வையிடல்
  8. அரசுடன் இணைந்து செயல்படல்
  9. அறிக்கை
  10. மக்கள் பங்கேற்பு
  11. முன் முயற்சிகள்
  12. முன்களப் பணியாளர்கள்
  13. திட்டம், சட்டம் உருவாக்குதலில் பங்கு

 

 

Scroll to Top