15.சுயவேலைவாய்ப்பு (ம) தொழில் முனைவோர் மேம்பாடு

சுய உதவிக் குழுக்கள்:

  1. சமூக பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட, ஏழை மக்களை உறுப்பினர்களாக கொண்ட ஒரு சிறிய தன்னார்வ அமைப்பு.
  2. உறுப்பினர்கள் தங்களுக்குள் “பரஸ்பர சுய உதவி மற்றும் ஒத்துழைப்பு” மூலம் தங்களின் பொதுவான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் களமாகச் செயல்படுகிறது.

பண்புகள்:

  1. ஒரு கிராமத்தில் உள்ள 10 – 20 பெண்களைக் கொண்ட, ஒரு நிதிசார் அமைப்பு
  2. உலகில் பெரும்பான்மையான சுயஉதவிக் குழுக்கள் இந்தியாவில் தான் செயல்படுகின்றன.
  3. பெண்கள் தாங்கள் கடனாகப் பெறத்தக்க அளவிற்கு போதிய முதலீடுகள் அடையும் வரை, சில மாதங்கள் தொடர்ச்சியாக சிறு தொகையினைச் சேமிப்பாக செலுத்துவர்.
  4. போதிய முதலீடுகள் அடைந்த பின்பு உறுப்பினர்களுக்குத் தேவையான தொகை கடனாக அளிக்கப்படும்.
  5. இந்தியாவில் சுயஉதவிக்குழுக்கள் வங்கிகளிடமிருந்து குறுங்கடன்களை எளிதாக பெறும் வண்ணம் சிறப்பான முறையில் இணைக்கப்பட்டுள்ளன.
  6. இது தொழில்முனைவோர்களின் கூடாரமாக உள்ளது.
  7. அரசு சாரா தொண்டு நிறுவனங்களால் துவங்கப்படும் சுயஉதவிக் குழுக்கள், வறுமை ஒழித்த அம்சங்களைக் கொண்டுள்ளன.
  8. இவை பெண்களுக்கு அதிகாரமளித்தல், தலைமைப் பண்பினை வளர்த்துக் கொள்ளுதல் ஆரம்ப கல்வி சேர்க்கை, ஊட்டச்சத்து மேம்பாடு போன்ற நோக்கங்களை அடிப்படையாக கொண்டு செயலாற்றுகின்றன.

நோக்கங்கள்:

  1. இது பெண்களுக்கிடையே சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கிறது.
  2. தொழில்நுட்ப வசதி, பணவலிமை உடையவர்களிடமிருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றனர்.
  3. பெண்கள் தங்களது உற்பத்தித்திறனை மேம்படுத்த தேவையான கடன்களை எளிதில் பெறுகின்றனர்.
  4. பெண்களின் தன்னம்பிக்கை, திறமை, ஆளுமை மேம்படுகிறது.
  5. பெண்களின் பங்கெடுத்தல் (ம) முடிவெடுக்கும் திறனை வளர்க்கிறது.
  6. பெண்கள் ஒரு குழுவாக அறிவுசார்ந்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.
  7. பெண்களால் போதிய பொருளாதார வளமையை பெறமுடிகிறது.
  8. பெண்கள் சமூக பொறுப்புணர்வு உடையவர்களாக மாறுகிறார்கள்.
  9. பெண்களால் குழு செயல்பாடு (ம) கூட்டு நடவடிக்கையின் பூரணத்துவத்தை உணர்கின்றனர்.
  10. பெண்கள் தங்களது நிகழ்கால சேமிப்பினை முதலீடாக கொண்டு, வருங்காலத் தேவைகளைத் திட்டமிட வழிகாட்டுகிறது.

தமிழகத்தில் சுய உதவிக்குழுக்களின் நிலை:

மகளிர் திட்டம்:

  1. இது தமிழக மகளிர் மேம்பாடு கழகத்தால் செயல்படுத்தப்படுகிறது.
  2. இது மகளிரின் சமூக பொருளாதார அதிகாரம் அளித்தலுக்கான திட்டமாகும்.
  3. இது அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பங்கேற்புடன் செயல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் மகளிர் குழுக்கள்:

  1. 1989 ல் தர்மபுரியில் துவங்கப்பட்டது.
  2. சர்வதேச வேளாண் முன்னேற்ற நிதியகத்தின் உதவியுடன் துவக்கம்
  3. 1991 – 92ல் சேலம். தென்னாற்காடு மாவட்டங்களுக்கு விரிவானது.
  4. 1992 – 93ல் மதுரை (ம) இராமநாதபுரம் மாவட்டங்களுக்கும் விரிவானது
  5. 1997 – 98 ல் மகளிர்திட்டம் மாநில அரசின் நிதி உதவியுடன் துவங்கப்பட்டது.
  6. தற்போது தமிழகத்தில் சுய உதவிக்குழுக்கள் 59,00,000 பெண் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

செயல்பாடுகள்:

  1. தொண்டு நிறுவனங்கள் சுயஉதவிக் குழக்களை உருவாக்குவதிலும். பயிற்சி அளிக்கவும் மகளிர் திட்டத்துடன் இணைந்து சீரிய முறையில் செயல்படுகிறது.
  2. NGO க்கள் இதற்காக நிதியையும் அளிக்கின்றன.
  3. மகளிர் திட்டத்தின் தரம் சுயஉதவிக் குழுக்களின் நிர்வாகிகள் (ம) உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தொழிற் சார்ந்த பயிற்சிகள் மூலம் புலப்படுகிறது.
  4. இத்திறன் பெண்களை குழுவினுள் ஈடுபாடு (ம) ஒத்துழைப்புடன் பணியாற்றும் மனப்பான்மை உடையவர்களாக மாற்றுகிறது.
  5. சுயஉதவிக்குழுக்களின் நடைமுறை (ம) கருத்துக்களை அறிந்து கொள்ள 4 தொகுதிகளாக 4 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
  6. இப்பய்றிசி உறுப்பினர்களின் தலைமைப்பண்பு, கணக்கு பராமரிப்பு போன்ற திறன்களை வளர்க்கிறது.
  7. சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் “தொழில் முனைவோர்களாக” உருவெடுக்க 5 நாட்கள் தொகுப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.

தொழில் முனைவை மேம்படுத்துதல் (ம) இந்தியாவின் முயற்சிகள்

  1. ஸ்டாட்டப் இந்தியா – 2016
  2. தொடக்க நிலையில் உள்ள தொழில்கட்கு ஆலோசனை வழங்குவது, வளர்ப்பது, ஆதரவு அளிப்பது
  3. நிதிகளின் நிதி என்ற நிதியின் மூலம் தொடக்க நிலை தொழில் வினைகளுக்கு நிதிவசதி செய்து தரப்பட்டு வருகிறது.
  4. ஸ்டாண்ட் அப் இந்தியா 2016
  5. பழங்குடியின (ம) தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மகளிருக்கு நிலுமக்கடன் வழங்கி, அவர்களும் வளர்த்துவரும் இந்தியப் பொருளாதாரத்தின் பலனை பெற வழிசெய்கிறது.
  6. இத்திட்டத்தின் கீழ் துவங்கப்படும் உற்பத்தி, சேவை, வியாபார வினைகட்கு ரூ 10 லட்சம் முதல் ரூ 1 கோடி வரை, ஒவ்வொரு மகளிர் தொழில் முனைவோருக்கு தரப்படுகிறது.
  7. இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் – 2014
  8. இந்தியாவை பன்னாட்டு உற்பத்தி மையமாக மாற்றுதல்
  9. இதற்காக இந்திய குடிமகன்கள், வியாபார தலைவர்கள், உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
  10. அடல் புதுமை புகுத்தல் திட்டம்
  11. பன்னாட்டு தரத்திற்கு இணக்கமான முறையில், புதுமையான பொருட்களை வடிவமைத்தல்
  12. தொழில் முனைவை முழுவீச்சில் ஊக்குவித்து, அதை வளர்ப்பது
  13. பெண்களுக்கு பயிற்சி (ம) வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஆதரவு
  14. ஊரகப் பகுதியில் உள்ள மகளிருக்கு முறைசார் பயிற்சியை அளித்தல்
  15. மகளிர் (ம) குழந்தைகள் அமைச்சகம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
  16. இதனை தொழில்முறை (ம) ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் (ம) திட்டக்குழு இணைந்து 30 ஆண்டுகால வழிகாட்டு நெறிமுறையை மாற்றியது.
  17. ஜன்தன் ஆதார் மொபைல் (மானியம்)

இத்திட்டத்தின் மூலம் பல அரசுத் திட்டங்களில் பயன்பெற்று வரும். பயனாளிகளுக்கு சேரவேண்டிய மானியத்தை நேரடியாக, (சம்பந்தப்பட்டதுறை) பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தியது.

  1. இலக்கு முறை இந்தியா (சேவை) — டிஜிட்டல் இந்தியா
  2. அரசின் அனைத்து சேவைகளும், பயனாளிகளுக்கு முன்னணு முறையில் வழங்கப்பட்டு வருகிறது.
  3. இதனால் இந்தியப் பொருளாதாரம்ட மின்னணு பொருளாதாரமாக மாறி வருகிறது.
  4. வணிகம் சார்ந்த தொழில்முறை உதவி (ம) வளர்ச்சித் திட்டம்
  5. அரசு சாரா அமைப்புகளில் பதிவு செய்து கொண்ட நலிவுற்ற மகளிருக்கு கடன் தரும் திட்டம்
  6. இதனால் பொருளாதார ரீதியாக நலிவுற்றற மகளிர் கடன் உதவி (ம) பயிற்சி ஆலோசனைகளை பெற முடியும்.
  7. பிரதான்மந்திரி குஷால் விகாஸ் திட்டம்

தேசிய திறன் வளர்ச்சி (ம) தொழில் துறை அமைச்சகம் தொழில் சார்ந்த திறமை, ஆற்றல் மேம்படுத்த பயிற்சி அளிக்கின்றது.

  1. தேசிய திறன் அபிவிருத்தி குறிக்கோள் -2015

இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு தொழில் சார்ந்த ஆற்றல்களில் பயிற்சி தரப்படுவதுடன், உனடியாக (ம) தரமான முடிவுகளை எடுக்க பயிற்சி தரப்படுகிறது.

11.விஞ்ஞான அடிப்படையில் அதிகாரமளித்தல் (ம) அபிவிருத்தி

களப்பணியாளர்கள் (ம) அறிவியல் ஆராய்ச்சியாளர்களால் கிராமப்புறங்களில் ஆரம்பிக்கப்பட்ட சமூக – பொருளாதார நோக்கம் கொண்ட செயல்திட்டமாகும்.

  1. பிறதொழில் முனைவுத்திட்டங்கள்
  2. திருத்தப்பட்ட சிறப்பு ஊக்கத்தொகுப்பு திட்டம்
  3. புதிய தலைமுறை புதுமை புகுத்தல் (ம) தொழில்முனைவோர் மேம்பாடு திட்டம்
  4. பால்பண்ணை தொழில்முனைவு மேம்பாட்டுத்திட்டம்
  5. ஒற்றை புள்ளி பதிவு திட்டம்
  6. அடல் இன்புவேஷன் மையம்

தமிழக அரசின் தொழில்முனைவோருக்கான திட்டங்கள்:

  1. வேலையில்லாதோர்க்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்

துறைகள்:

தமிழ்நாடு குறுசிறு நடுத்து நிறுவனங்களுக்கான துறை

நோக்கங்கள்:

வேலையின்மையை அகற்றுதல், உள்ளூரிலேயே சுயதொழிலில் ஈடுபட தூண்டுதல், நகர்ப்புறங்களுக்கு இடமட் பெயர்வதை தடுத்தல்

உதவியின் அளவு

1 -10 லட்சம் வரை பல்வேறு சொற்பகிர்வுகளுடன் வழங்கப்படும் நிதிஉதவி

  1. தொழில்முனைவோர் மேம்பாட்டுத்திட்டம்
  2. துறை: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம்
  3. நோக்கங்கள்: பொருளாதாரம் (ம) சமூக நிலையில் பின்தங்கிய நபர்களை சுயதொழில் துவங்கி, வருமானம் ஈட்டி கண்ணியமாக வாழ ஆர்வமூட்டுதல்
  4. உதவியின் அளவு : 50,000 – 5,00,000 வரை பல்வேறு சொற்பகிர்வுகளுடன் வழங்கப்படும் நிதிஉதவி
  5. புதிய தொழில்முனைவோர் (ம) தொழில்துணிவு வளர்ச்சிதிட்டம்
  6. துறை: தமிழ்நாடு அரசு தொழில் (ம) வணிக இயக்ககம்
  7. நோக்கங்கள்: இளைஞர்கள் (ம) படித்த தொழில்முனைவோருக்கு மானியம், நிதிவசதி அளித்து புதிய தொழிலை துவக்க வாய்ப்பளித்தல்
  8. உதவியின் அளவு: செயல்திட்ட மதிப்பில் 25% மிகாமல் (அ) ரூ 25 லட்சம் வரை
  9. தமிழக பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம்
  10. துறை: பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையர் நலத்துறை
  11. நோக்கங்கள்: பொருளாதார (ம) நிதி ரீதியாக உதவி அளித்தல்
  12. உதவியின் அளவு: 15000 – 3,00,000 வரை பல்வேறு சொற்பகிர்வுகளுடன் வழங்கப்படும் நிதிஉதவி
  13. தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி நிறுவனம்
  14. துறை : நிதி இடைநிலையர்கள்
  15. நோக்கங்கள்: தொழில் வினை துவங்க பின்தங்கிய (ம) இதர வகுப்பினர்களுக்கு வங்கியுடன் இணைந்து நிதி உதவி அளித்தல்
  16. உதவியின் அளவு : பல்வேறு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார முன்னேற்ற நெறிப்படி நிதி வழங்குதல்
  17. ஆதிதிராவிடர் நல இயக்ககம்
  18. துறை : வேளாண்துறை
  19. நோக்கங்கள்: பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுதிறனாளிகள், திருநங்கை போன்ற தொழில்முனைவோருக்கு கூடுதல் மானியம் வழங்குதல்
  20. உதவியின் அளவு: பல்வேறு தொழில் வினைகளுக்கு நெறிப்படி நிதி வழங்குதல்

மகளிர்தொழில் முனைவோர்கள்:

ஹீம் பீட்டர் கருத்து:

  1. புதினம் பேணும் (அ) ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட பொருளை முன்மாதிரியாக கொண்டு, அதே பொருளை உற்பத்தி செய்துவரும் மகளிர்
  2. தற்போதைய நிலை:
  3. பெண் தொழில் முனைவோர் தங்களுக்கான வேலைவாய்ப்பினைத் தாங்களே ஏற்படுத்தித் தருவதுடன், பிறருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கி தருவது பெருமைக்குரியதாகும்.
  4. அமெரிக்காவில் நடந்து வரும் தொழிலில் நான்கில் ஒரு பங்கு மகளிரால் நடைபெற்றுவருகிறது.
  5. பெண்கள் வளர்ந்த நாடுகளில் சில்லறை வணிகம், சிற்றுண்டி சாலைகள், கல்வி நிறுவனங்கள், காப்பீடு (ம) உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
  6. இந்தியாவில் பெண்களால் உரிமை ஏற்று நடத்தப்படுவதும் (ம) பெண்களை அதிகம் கொண்டிருக்கும் நிறுமங்கள் 5.2% 2011 ன் படி
  7. பெரும்பாலும் வேளைண்மை துறை, வேளாண் சார்புத் தொழில்கள், கைவினைப் பொருள் உற்பத்தி, கைத்தறி ஆடைகள், குடிமைத்தொழில்களில் ஈடுபடுகின்றனர்.
  8. தற்போது மூன்றில் ஒரு பங்கு பொருளாதார தொழில்கள் மகளிர் வசம் உள்ளதாக, ஆய்வுகள் தெரிவிக்ககின்றன.

மகளிர் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகள்:

  1. தொழில அடிப்படையில் ஏழும் வாய்ப்புகள்
  2. உற்பத்தி பிரிவு
  3. சேவை தொழில் பிரிவு
  4. வணிகப் பிரிவு
  5. பெரிய தொழில்
  6. நிதி திரட்டும் வாய்ப்புகள் – கடன்

இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளும் கச்சா பொருள் (ம) இயந்திரம் வாங்குவதற்கு நுண்சிறு கடன்களை வழங்குகிறது.

  1. நிதிசாரா ஆதரவு
  2. மகளிர் தொழில்களுக்கு ஏற்ற கொள்கைகள்
  3. நிதிசார் ஆலோசனை வழங்குதல்
  4. வியாபார தொடர்புகளை ஏற்படுத்துதல்
  5. தொழில்சார் ஆலோசனை வழங்குதல்
  6. சட்டதடைகளை களைதல்
  7. இலாபம் ஈட்டும் திறனை கூட்ட ஆலோசனை வழங்குதல்
  8. சங்கங்கள் ஏற்படுத்திதரும் வாய்ப்புகள்
  9. சுய உதவிக் குழுக்கள்
  10. இந்திய மகளிர் தொழில்முனைவோர் சங்கம்
  11. சிறுதொழில் வளர்ச்சி அமைப்பு
  12. இந்திய வேளாண் (ம) ஊரக வளர்ச்சி வங்கி
  13. தமிழ்நாடு மகளிர் வளர்ச்சிக் கழகம்
  14. அரசு ஏற்படுத்திதரும் வாய்ப்புகள்
  15. ஸ்டாண்டப் இந்தியா திட்டம்
  16. தொழில் முனைவு உதவி (ம) வளர்ச்சித் திட்டம்
  17. மகிள கயறு திட்டம்
  18. மகளிர் உதவித்திட்டம்
  19. பிரதம மந்திரி ஊரகத் திட்டம்
  20. ஊரகத்திலுள்ள மகளிர் (ம) சிறார்கள் வளர்ச்சித் திட்டம்
  21. மகளிருக்கான முத்ரா யோஜனா திட்டம்
  22. யுத்யோகினி திட்டம்
  23. ஊரக இளைஞர்களின் சுயதொழில் பயிற்சி திட்டம்
  24. பயிற்சியின் மூலமாக ஏற்படுத்தப்படும் வாய்ப்புகள்
  25. மகளிருக்கான பயிற்சி (ம) சுயதொழில் ஆதரவு திட்டம்
  26. ஊரகத்தில உள்ள மகளிர் (ம) சிறார்களுக்கான வளர்ச்சி திட்டம்
  27. சிறுதொழில் சேவை நிறுவனம்
  28. மாநில நிதிகழகம்
  29. தேசிய சிறுதொழில் கழகம்
  30. மாவட்ட தொழில் மையம்
  31. மகளிர் தொழில்முனைவோர் கூட்டமைப்பு – 1996
  32. மகளிரால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ஊன்றுகோலாக விளங்குகிறது.
  33. மகளிரின் பொருளாதார ரீதியான சக்தியை பெற்றிட உதவுகிறது.
  34. இயற்கை வளவசதியை பெற்றிட மகளிர் நிறுவனங்களுக்கு உதவுகிறது.
  35. மகளிரால் நடத்தப்படும் நிறுமங்கள் தயாரிக்கும் பொருட்களின் வடிவமைப்பு (ம) புதுப்பொருட்களை உருவாக்கும் முயற்சிக்கு ஆலோசனை தருவது
  36. மகளிர் நிறுமங்களுக்கு சந்தையிடுகை தரக்கட்டுப்பாடு, தொழில்நுட்ப ஆதரவு தருகிறது.
  37. மகளிர் தொழில்முனைவு தொடர்பான அரசுத்திட்டங்கள் குறித்து, மகளிருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
  38. மகளிர் நிறுமங்கட்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் நல்கும் ஒரு சிறந்த அமைப்பாகச் செயல்படுகிறது.

மகளிர் தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் சவால்கள்:

எதிர்கொள்ளும் சவால்கள்:

  1. நிதிப்பிரச்சனை
  2. தங்களது தொழில்வினையில் ஏற்படும் நிதிப்பற்றாக்குறையை சமாளிப்பது மிகப்பெரிய சவாலாக விளங்குகிறது.
  3. தங்களின் பெயரில் சொத்துக்கள் இல்லாத மகளிர் உரிமையாளர்கள் பிணைக்கடன் பெறுவதில் பெரும் இன்னல்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
  4. நிதி நிறுவனங்களும் மகளிர் தொழில் முனைவோரின் தொழில் முனைவு திறமையில் போதிய நம்பிக்கை இல்லாமல் உள்ளனர்.
  5. இதனால் இவர்கள் தங்களின் சொந்த சேமிப்பையோ (அ) தெரிந்த சுற்றுவட்டாரங்களிலிருந்து நிதித்தேவையை பூர்த்திசெய்ய வேண்டியுள்ளது.
  6. இயக்கத்தடை
  7. மகளிர் தொழில்முனைவோர், நமது நாட்டு கலாச்சாரப்படி, அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய சூழலில் வீட்டு பொறுப்புகளையும் சுமக்க வேண்டி உள்ளது.
  8. தொழிலை துவங்கிய பின், பல்வேறு காரணங்களுக்காக மகளிர் வெளியில் செல்ல முடிவதில்லை.

(எ.கா): பொருளை கொள்முதல் செய்ய, வங்கியில் கடன்பெற, ஊழியர்களை மேற்பார்வை செய்ய

  1. ஆண் தொழில் முனைவோர்க்கு நிகராக, மகளிர்தொழில் முனைவோர்கள் பயணத்தில் போட்டியிட விரும்புவதில்லை.
  2. கல்வியறிவின்மை
  3. படிப்பறிவற்ற (அ) குறைவாக படித்துள்ள மகளிர் தொழில் முனைவோர்கள் வியாபாரம் (அ) தொழில் தொடர்பான கருத்துக்களை முழுவதாக புரிந்துகொள்ள முடியாதவராக உள்ளனர்.

(எ.கா): கணக்கை பராமரித்தல், பணம் கொடுக்கல் வாங்கலை கணக்கு வைத்துக் கொள்ளுதல், தொழில்நுட்ப கருத்துக்களை உள்வாங்குதலில் கல்வியறிவின்மை தடையாக உள்ளது.

  1. ஆதரவு இன்மை
  2. மகளிர் தொழில் முனைவோர்க்கு கணவன், பிள்ளைகள், பெற்றோர்கள் நண்பர்கள் என பலரின் ஒத்துழைப்பு அவசியம்
  3. தொழிலில் பிரச்சனைகள் ஏற்படும்போது மேற்கூறியவர்கள் தோள் கொடுக்க முன்வர வேண்டும்.
  4. அந்த நேரங்களில் மகளிரை கேலி செய்யும் பேச்சு, சாபம். ஏளனம் ஆகியவை அவர்களின் நம்பிக்கையை தகர்க்கிறது.
  5. ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட நபர்களின் நடத்தை மகளிர்தொழில் முனைவோரை பாதிக்கிறது.
  6. கடும்போட்டி
  7. தாராளமயமான போட்டி உலகில் மகளிர் தொழில் முனைவோர்கள் பெரிய நடுத்தர தொழில்களிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்கின்றனர்.
  8. போட்டியை எதிர்கொள்ள விளம்பரம் (ம) விற்பனை பெருக்க யுக்திகளை கையாள முடியாமல் திணறுகின்றனர்.
  9. இதற்கு காரணம் போதிய நிதி ஆதாரமின்மையாகும்

 

  1. உணர்ச்சிவயப்படல்
  2. மகளிராக இருப்பவர்கள் இயற்கையாகவே உணர்ச்சி வயப்படக் கூடியவர்கள்
  3. உணர்ச்சி பொங்கி வரும்போது கோபப்படக் கூடியவர்கள்
  4. இப்படிப்பட்ட மனநிலை தொழிலில் சிக்கல் (அ) சவால்கள் எழும்போது, அமைதியாக நிதானமாக பொறுமையாக முடிவெடுக்க அவர்களை விடுவதில்லை.
  5. தொழிலில் ஏற்படும் மனக்கசப்புகள், சிறுதோல்விகள் கூட மகளிர் தொழில் முனைவோரை ஆர்வம் இழக்கச் செய்கின்றன.
  6. போதிய விவரமின்மை
  7. மகளிர் தொழில் முனைவோர்கள் தங்களின் குறைந்த படிப்புத் தகுதி (அ) அலட்சியம் (அ) வீட்டு வேலையின் காரணமாக சகமகளிர் தொழில் முனைவோர் எப்படி சவாலை சமாளிக்கின்றனர் என்ற விவரத்தினை அறிவதில்லை.
  8. இது அவர்கள் நடத்தும் தொழிலின் திறனை வெகுவும் பாதிக்கிறது.
  9. சார்ந்து வாழும் கலாச்சாரம்
  10. பல சமயங்களில் மகளிர் தன் வாழ்நாள் நம் நாட்டில் பிறரை சார்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

(எ.கா): திருமணத்திற்கு முன்பு பெற்றோர்

  1. திருமணத்திற்கு பின்பு கணவர், வயதான காலத்தில் பிள்ளைகள்
  2. இதனால் தன்னிச்சையாக அவர்களால் எந்த முடிவும் எடுக்க முடிவதில்லை.
  3. இப்படிப்பட்ட கலாச்சார தடை மகளிர் தொழில் முனைவோர்களை தன்னுடைய வருப்பப்படி தொழிலை துவங்கி, அதனை நிர்வகிக்க அனுமதிப்பதில்லை.

 

Scroll to Top