14.வேலைவாய்ப்பு உறுதி திட்டம்
MGNREG திட்டம் – 2005:
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டமானது, “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டமாக” பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
நோக்கம்:
- ஒவ்வொரு நிதியாண்டிலும், ஊரகப் பகுதிகளில் உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள, வயது வந்தோர் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஆண்டில் 100 நாட்களுக்கு வேலையளித்தல்
- வறுமையை ஒழித்து, நிலையான மேம்பாட்டை அடைதல்
பணிகள் தேர்வு செய்யும் முறை:
- ஒவ்வொரு ஊராட்சியிலும் இத்திட்ட விதிமுறைகளின் படி, மேற்கொள்ளப்பட உள்ள பணிகளின் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
- கிராம சபையில் தீர்மானம் பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும்.
தகுதிகள்:
- வேலைசெய்ய இயலுகின்ற உடல்திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.
- அந்த ஊராட்சியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
- வயது 18 நிரம்பிருக்க வேண்டும்.
- பணிகளில் குறைந்தபட்சம் 33% பெண்களுக்கு ஒதுக்க வேண்டும்.
- வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மட்டும் அல்லாமல், வேலைகோரும், மற்றவர்களும் வேலைபெற தகுதியானவர்கள்
நடைமுறை:
இத்திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு குறைந்த பட்சம் 8 மணி நேரம் வேலை செய்தால், நிர்ணயிக்கப்பட்ட அளவு ஊதியம் வழங்கப்படும்.
சிறப்பம்சங்கள்:
- குறைந்த பட்ச ஊதியச் சட்டம் 1948 ன் படி, விவசாயத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
- ஆண், பெண்களுக்குச் சமஊதியம் வழங்கப்படும்.
- வேலையின் போது விபத்து ஏற்பட்டு ஊனமுற்றால் (அ) உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ 25,000 வழங்கப்பட வேண்டும்.
- 15 நாட்களுக்குள் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
- வேலை நடைபெறும் இடங்களில், குடிநீர், நிழற்கூடங்கள் போன்ற வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
- கிராமசபை ஒப்புதல் பெற்று, திட்டத் தொகுப்பில், வேலைகள் கிராம ஊராட்சியின் மூலம் செயல்படுத்த ஒதுக்கப்பட வேண்டும்.
முக்கியத்துவம்:
- நிதியளவு மத்திய : மாநில அரசு பங்கு 90 : 10
- தணிக்கை கிராமசபை மூலம் செய்யப்படுகிறது.
- குறைதீர்க்கும் இலவச தொலைபேசிஎண் : 1299
- ஊதியம் வங்குக் கணக்கில் செலுத்தப்படும்
- தமிழ்நாட்டில் 02.08.2006 ல் அரசாணை வெளியிடப்பட்டது.
- சமூக பங்களிப்பு பிரிவில் தமிழ்நாடு விருதைப் பெற்றுள்ளது
- COVID – 19 -Rs 182 + 202
நன்மைகள்:
- உலகின் மிகப்பெரிய ஊரக மேம்பாட்டுத்திட்டம்
- சட்டத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட வேலைவாய்ப்பு
- பெண்களுக்கு அதிகாரமளித்தல்
- வறுமை (ம) வேலையின்மையைக் குறைத்தல்
- வேலையின்மைக்கான படித்தொகை
- ஊரக மேம்பாட்டுத்திட்டங்களுடன் இணைந்துக் செயல்படுதல்
- 15 நாட்களுக்குள் ஊதியம் பெறுதல்
- சமூக தணிக்கை
- கிராம சபைகளுக்கு அதிகாரமளித்தல்
- இடப்பெயர்வினை தடுக்கிறது
- பருவகாலங்கள் இல்லாத காலத்தில் வருமானத்திற்கு உத்தரவாதம்
- போக்குவரத்து (ம) ஆற்றல் பயன்பாட்டைக் குறைத்துள்ளது.
தீமைகள்:
- ஊரகப் பகுதிகளில் பணவீக்கம்
- பாதுகாப்பற்ற சொத்துக்கள்
- செயல்படுத்துதலில் உள்ள இடைவெளிகள்
- விளிம்புநிலை பிரிவினர் மீது கவனம் செலுத்தாதது
- ஊதியம் வழங்குவதில் தாமதம்
- நிதி உள்ளடக்கத்தில் காணப்படும் குறைபாடுகள்
- வேளாண்துறையில் மனித ஆற்றல் குறைபாடுகள்
வேலைவாய்ப்புத் திட்டங்கள்:
- கிராமப்புற இளைஞர்களுக்கான பயிற்சி (ம) சுயவேலைவாய்ப்புத் திட்டம் – 1979
- கிராமப்புறத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள இளைஞர்களுக்கு தொழில் (ம) வியாபாரப் பயிற்சி அளித்தல்
- சுயவேலைத் தொடங்குவதற்கு பயிற்சி அளித்தல்
- வயது 18 – 35
- ஒருங்கிணைக்கப்பட்ட ஊரக வளர்ச்சித் திட்டம் – 1980
- வறுமைக்கோட்டிற்கு கீழ்உள்ள மக்களுக்கு சுய வேலைவாய்ப்பு அளித்தல்
- இதன் துணைத்திட்டங்கள் – TRYSEM, கங்கா கல்யாண் யோஜனா, சித்ரா, மில்லியன் கிணறுத்திட்டம்
- ஜவஹர் ரோக்கர் ஜோஜனா 1989
- தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் (ம) கிராமப்புற நிலமற்றோருக்கான வேலைவாய்ப்பு உறுதியளிப்புத்திட்டம் ஆகிய இரண்டும் இணைந்து உருவாக்கப்பட்டது.
- இது கிராமப்புற மக்களுக்கான வேலைவாய்ப்பை அளிக்கிறது.
- நேரு ரோஜ்கர் யோஜனா 1989
இது நகர்ப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.
- வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் – 1993
கிராமத்தில் 18 – 60 வயதிற்குட்பட்டு உழைக்கும் தகுதியுள்ளவர்களுக்கு, வேளாண்மைத் தொழில் இல்லாத நாட்களில், 100 நாட்களுக்குக் குறைவில்லாமல் வேலைவாய்ப்பு தருதல்.
- பிரதமமந்திரி ரோக்ஜர் யோஜனா 1993
இளைஞர்களுக்கு சுயமாக தொழில் துவங்க ரூ 1 – 2 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது.
- வறட்சிக்கு இலக்காகும் பகுதித்திட்டம் – 1973
வறட்சிக்கு இலக்கான பகுதிகளில் வளர்ச்சியை ஏற்படுத்தி நிலம் நீர் (ம) இயற்கை வளங்களை சமநிலையில் கொண்டு வருவதாகும்.
- பொன்விழா ஆண்டு தன்வேலைவாய்ப்புத்திட்டம் – 1997
- இது சுதந்திரமடைந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் ஏற்படுத்தப்பட்டது.
- நகர்ப்புற வேலையற்ற மக்களுக்கு சுயவேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.
- ஜவஹர் கிராம சம்ரிதி யோஜனா – 1999
கிராமப்புற கட்டமைப்புகளின் முன்னேற்றம் (ம) வேலையற்ற ஏழைகளுக்கு கூலி வேலைகள் பெற்றுத்தருதல்.
10.அந்தியோதயா அன்ன யோஜனா – 2000
- ஏழைகளுக்கு பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ், 1 கிலோ அரிசி ரூ 2, 1 கிலோ கோதுமை ரூ 3 க்கு வழங்கப்படுகிறது.
- வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்திற்கு மாதம் 35 கிலோ உணவு தானியம் வழங்கப்படுகிறது.
11.சம்பூர்ண கிராமின் ரோஜ்கர் யோஜனா – 2001
வேலைவாய்ப்பு உறுதி அளிப்புத்திட்டம், ஜவஹர் கிராம் சம்ரிதி யோஜனா, ஜவஹர் ரோஜ்கர் யோஜனா ஆகிய மூன்றும் இணைந்த திட்டம்
- வேலைக்கு உணவுத்திட்டம் – 2001
- வறட்சியால் பாதிக்கப்பட்ட 8 மாநிலங்களில் உள்ள கிராமப்பகுதிகளில் வேலை வாய்ப்புகளை அளித்து, பசியை போக்குவதற்கான திட்டம்
- வேலைக்கான கூலி பாதி உணவு, மீதி பணமாக வழங்கப்படும்.
- ஸ்வர்ண ஜெயந்தி கிராம் ஸ்வரோஜ்கர் யோஜனா – 1999
IRDP, TRYSEM, சித்ரா, கங்கா கல்யாண் யோஜனா, மில்லியன் கிணறுகள் திட்டம் இணைந்த உருவாக்கப்பட்டது.
- ஜெயப்பிரகாஷ் நாராயண் ரோஜ்கர் உத்திரவாதிட்டம்: 2002-02
- MGNREG திட்டம் – 2005