13.சமுதாய மேம்பாட்டு திட்டம்
சமூக மேம்பாட்டுத் திட்டம்:
- 1952, அக்டோபர் 2 – சமூக மேம்பாட்டுத் திட்டம்
- 1953, அக்டோபர் 2 – தேசிய வரிவாக்கத் திட்டம் துவங்கப்பட்டது.
நோக்கம்: கிராம மக்களின் வறுமை (ம) வேலைவாய்ப்பின்மையை ஒழித்தல்
இத்திட்டமானது எட்டவா கோரக்பூர் சோதனையின் அடிப்படையிலும் ஆல்பர்ட் மேயோ என்பவரின் விளக்கத்தினாலும் உருவானது.
குறிக்கோள்:
- கிராம மக்களிடையே வலுவான பொருளாதார நிலைகளை உருவாக்குதல்
- விவசாய உற்பத்தி, நீர்பாசன வசதிகளை உருவாக்குதல்
- பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம், கிராம மக்களுக்கு நீர்மூலம் பரவும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வு.
- போக்குவரத்து, தகவல் தொடர்பு வசதிகளை உருவாக்குதல்
- குடிசை (ம) குறுந்தொழில்களை கிராமங்களில் உருவாக்குதல்
- கிராமப்புற மக்களுக்கு முன்னேற்ற எண்ணத்தை உருவாக்கி, தன்னிறைவை ஏற்படுத்துதல்
- சமுதாய உணர்வு, ஒற்றுமையை வலியுறுத்தல்
- கல்வி முன்னேற்றம், பொது சுகாதாரம், சமுதாய கூடங்கள், விளையாட்டு (ம) கலாச்சார விழாக்களை ஏற்பாடு செய்தல்
- கிராமப்புற வேலையின்மை பிரச்சனையை தீர்த்தல்
- கிராமப்புற வீடுகள் மேம்பாடு
- மேம்பாட்டுத் திட்டங்களில் மக்களின் பங்கினை உணர்த்துதல்
- திட்டத்தை நடைமுறைப்படுத்தி, ஊரக வாழ்வில் பன்முனை வளர்ச்சியை எட்டுதல்
திட்ட செயலாக்கம்:
- 1952 ல் தேர்வு செய்யப்பட்ட ஒன்றியங்கள் – 55
- 1972 ல் ஒன்றியங்கள் – 5123
- 47 கோடி மக்கள் தொகையைக் கொண்ட 5 லட்சம் கிராமங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
- ஒன்றியத்தின் பரப்பளவு : 400 – 500 ச.கீ.மீ
- மக்கள் தொகையளவு : 1 லட்சம்
திட்ட செயல்பாட்டு அலுவலர்கள்:
- திட்ட அலுவலர்கள்
- ஒன்றிய (வட்டார) வளர்ச்சி அலுவலர்கள்
- தொழில்நுட்ப வல்லுநர்கள்
- கிராம நிர்வாக அலுவலர்கள்
திட்டத்தின் பண்புகள்:
- கிராமப்புற மக்களிடையே தன்னம்பிக்கையை வளர்ப்பது
- கிராமப்புற மக்களின் உளவியல் கண்ணோட்டத்தினை மாற்றுவது
- புதிய நிர்வாக அமைப்பினை உருவாக்குவது
- மக்கள் நலன்சார்ந்த திட்டம் உருவாக்குவது
- பஞ்சாயத்து அமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள் ஒன்றிணைந்து சமுதாய அக்கறைக்காக செயல்படும் என்ற எண்ணத்தை உருவாக்குவது
சமுதாய மேம்பாட்டுத் திட்டம் மதிப்பீடு / தோல்விக்கான காரணங்கள்:
தோல்விக்கான காரணங்கள்:
- ஊரக வளர்ச்சித்திட்டம் நன்கு திட்டமிடப்படவில்லை.
- மக்களின் தேவைகளை அடையாளம் காணத் தவறிவிட்டது.
- அரசு களப்பணியாளர்களுக்கு சிறந்த பயிற்சி ஏற்படுத்திதரவில்லை.
- இத்திட்டத்தில் முன்னுரிமைகள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
- இத்திட்டம் அதிகாரமயமாக்கப்பட்டதால் மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
- திட்டத்தை செயல்படுத்தும் அரசுகளப்பணியாளர்களிடையே போதியளவு பொறுப்பின்மை
- ஊரக வளர்ச்சி திட்டப்பணியாளர்களின் மதிப்பை பெறத்தவறிவிட்டது.
- நிர்வாக குறைபாடு, ஊழல் இதனால் திட்டம் தோல்வி அடைந்தது.
- இத்திட்டத்தின் பயன் பணக்கார பெரிய விவசாயிகளை சென்றடைந்தது.
- வளர்ச்சித்துறைகளிடையே காணப்பட்ட மோசமான ஒருங்கிணைப்பு
- எதிர்பார்த்த அளவில் விவசாய வளர்ச்சியும், உணவு உற்பத்தியும் ஏற்படவில்லை. (பல்வந்த்ராய் குழு அமைப்பு)
சமூக மேம்பாட்டுத்திட்டம் மதிப்பீடு:
- இத்திட்டம் ஆரம்பத்தில் சில வெற்றிகளைத் தந்தது
- ஆனால் படிப்படியாக தன் முக்கியத்துவத்தை இழந்தது
- இத்திட்டம் மக்களின் பங்களிப்பை பெறத் தவறிவிட்டது.
- இது பின்னலில் 1978 – 79ல் ஒருங்கிணைந்த ஊரக மேம்பாட்டுத் திட்டமாக மாற்றி அமைக்கப்பட்டது.
- இதன் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.