12.கல்விக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையேயான தொடர்பு

கல்வியினால் சமூகம் அடையும் பயன்கள்:

  1. சமூகத்துடன் இணைந்து வாழச் செய்தல்
  2. கல்வியின் மூலம் இணைய தலைமுறையினர் தாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.
  3. பிறரிடம் எப்படி பழக வேண்டும்.
  4. எந்தக் காரியங்களைச் செய்யலாம், எந்தக் காரியங்களைச் செய்யக் கூடாது.
  5. எப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும், என்றெல்லாம் கற்றுக் கொள்கிறார்கள்.
  6. இப்படிக் கற்றுக் கொண்டு சமூகத்தில் அதன்படி வாழ்கிறார்கள்.
  7. இவ்வாறு கல்வி இளைய தலைமுறையினரைச் சமூகத்தோடு இயைந்து ஒட்டி ஒழுகி வாழச் செய்கிறது.
  8. திறனாயும் திறமையை வளர்த்தல்
  9. கல்வி மனிதர்களுக்கு திறனாயும் திறமையைக் கொடுக்கிறது.
  10. எவற்றையும் அலசி ஆராய்ந்து, எந்த அம்சங்கள் ஏற்கத் தக்கவை, எந்த அம்சங்கள் ஏற்கத் தகாதவை என்று கண்டு பிடிக்கக் கூடிய திறமையைக் கொடுக்கிறது.
  11. இத்திறமையால் மனிதர்கள் தாங்கள் கற்றுக் கொள்கிற பண்பாடு அம்சங்களில் எவை பொருத்தமானவை நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவை, காலத்துக்கு ஒவ்வாதவை என இனம் காண்கிறார்கள்.
  12. இத்திறமையால் தங்களுக்கும் கற்பிக்கப்படுவதை எல்லாம் அவர்கள் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை.
  13. பண்பாடு மாற்றத்திற்கு வழிவகுத்தல்
  14. கல்வியறிவு பெற்ற மக்களால் காலத்திற்கு ஒவ்வாத, ஏற்றுக்கொள்ளத்தகாத பண்பாட்டு அம்சங்கள் காலப்போக்கில் வழக்கிலிருந்து மறைந்து விடுகின்றன.
  15. கல்வியினால் ஏற்படும் அறிவு வளர்ச்சியின் மூலம், புதிய பண்பாட்டு அம்சங்களை ஏற்கின்றனர்.
  16. பழையன கழிந்து, புதியன புகுவதால் பண்பாடு தேக்கம் அடையாமல், மாற்றமடைந்து வளர்ச்சி அடைகிறது.
  17. சமூக முன்னேற்றம் ஏற்படுத்துதல்
  18. கல்வியினால் அறிவு வளர்ச்சி ஏற்படுகிறது.
  19. அறிவு வளர்ச்சியினால் புதிய தொழில்நுட்பங்களை தோன்றுகின்றன.
  20. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் ஏற்படுகின்றன
  21. இதன் பலனாகச் சமூகத்தில் முன்னேற்றம் ஏற்படுகிறது.

கல்வி:

எதிர்காலத்தை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்காக போதிய திறமைகள், அறிவு, அணுகுமுறை, சிக்கலான சிந்தனை ஆகியவற்றைக் கற்றுக் கொடுப்பதே கல்வி ஆகும்.

கல்வி (ம) பொருளாதார வளர்ச்சி இடையிலான பிணைப்பு:

  1. உற்பத்திக் காரணிகள்
  2. தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ளுதல்
  3. புதிய ஆளுமைகள்
  4. மனிதவள மேம்பாடு
  5. கலாச்சார ஆதரவு
  6. பொருளாதார வளர்ச்சி

 

 

Scroll to Top